Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 13

மீண்டும் மலரும் உறவுகள் 13

“அடி பட்டிருக்கும் நபரை அழைத்துக் கொண்டு தேவி ஆம்புலன்ஸில் ஏறினார்”.

” ஆம்புலன்சில் ஏரியாவுடன் தன் போனில் இருந்து யாருக்கோ அழைப்பு விடுத்தார் “.

“அந்த பக்கம் போன் எடுத்தவுடன் டேய் நந்தா எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்றார் “

“ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறாய் ?எங்கே இருக்கிறாய்? என்று கேட்டான்,”.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. இப்போது மருத்துவமனை அழைத்து செல்கிறேன்.

பணம் தேவை என்றார். அக்கா உதவிக்கு நான் வரட்டா .நீ எப்படி சமாளிப்பாய் என்றதற்கு இல்லை. அவர்கள் வீட்டில் இருந்து வந்து விடுவார்கள்.

பணம் மட்டும் தேவை கொஞ்சம் என்னுடைய அக்கவுண்டுக்கு அனுப்பி விடு என்றார் .சரி சரி நான் அனுப்பி விடுகிறேன் நீ பதட்டம் ஆகாதே.

ஒன்றும் பெரிய அளவிற்கு அடி இல்லையே. இல்லை நான் வரட்டா சொல்லு என்றான்.

அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை என்று பிறகு ஒரு இடத்தில் நின்று தன் அக்காவிற்கு பணத்தை அனுப்பிவிட்டு நான் பணம் அனுப்பி விட்டேன் என்று போன் செய்தும் சொன்னான் .

ஒன்றுக்கு இரண்டு  முறை தான் வரட்டா தனியாக சமாளிப்பாயா ?என்று கேட்டதற்கு ஒன்றும் பிரச்சனை இல்லடா .

அவர்கள் வீட்டில் இருந்து வந்து விடுவார்கள் என்று கூற செய்தார். சரி என்று விட்டு நந்தாவும் விட்டு விட்டான்.

தேவி இப்பொழுது எப்படி இவருடைய வீட்டிற்கு சொல்வது என்று ஒரு சில நொடி யோசித்து விட்டு அடி பட்டு இருக்கும் நபரின் சட்டை பாக்கெட்டில் தூளாவ  செய்தார்.

சட்டையில் இல்லை என்றவுடன் பேண்ட் பாக்கெட்டில் கை வைக்க சென்றார்.
நாம் அதிக உரிமை எடுத்துக் கொள்கிறோமோ ?என்று யோசித்தார்.

ஆபத்திற்கு பாவம் இல்லை. நான் யாரிடமும் உறவு கொண்டாட யோசிக்கவில்லையே என்று எண்ணி விட்டு அந்த நபருடைய பேண்ட் பக்கெட்டில் கையை விட்ட தூளவினார்.

போன் கிடைத்தவுடன் இறுதியாக யாருக்கு போன் செய்யத்திருக்கிறார் என்று யோசித்தார்.

அது ஏதோ வேறு பெயரில் இருந்தவுடன் மலர் என்று போட்டுப் பார்த்தார் .

அந்த பெயரில் இல்லை என்றவுடன் ஒரு சில நிமிடம்  வேறு பெயரில் இருக்குமோ என்று தெரியாமல் யோசித்து விட்டு கால் ஹிஸ்டரியை திரும்பவும் ஒரு முறை பார்த்தார்.

அதில் மலரு புள்ள என்று இருக்கும் பெயரை பார்த்துவிட்டு லேசாக கசந்த முன் முறுவல்  அவரது முகத்தில் வந்து மறைந்தது

உடனடியாக அந்த நம்பருக்கு அழைத்தார். அதுக்குள்ள போன் போடுற மாமா இப்ப தானே போன என்று அந்த பக்கம் மலரின் குரல் கேட்டவுடன் ஒரு சில நொடி தேவி நிதானித்து விட்டு மலர் என்றார்.

நீங்க யாரு என்னுடைய கணவருக்கு போனிலிருந்து பேசுகிறீர்கள் என்று கேட்டார் மலர்.

தேவிக்கு தான் யார் என்று விளக்கம் தரும் அளவிற்கு நேரமில்லாததால் உங்கள் கணவருக்கு அடிபட்டுவிட்டது.

இப்பொழுது ஆம்புலன்ஸில் அருகில் உள்ள மருத்துவமனை அழைத்து செல்கிறோம். அந்த மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் என்று விட்டு வைக்க போனார்.

அவருக்கு பெரிய அடியா என்று கேட்டதற்கு ஒன்றும் பெரிதாக இல்லை வந்து பாருங்கள் என்று விட்டு வைத்தவுடன் இங்கு மலர் அடித்து பிடித்து வீட்டை பூட்டி கொண்டு அவசரத்திற்கு கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று யோசனை கூட இல்லாதவளாக வேகமாக தெருவில் நடந்தாள்.

அப்பொழுது எங்க மலர் இவ்வளவு அவசரமாக போற என்று அருகில் உள்ள ஒருவர் கேட்டவுடன் இந்த மாதிரி விஷயத்தை சொன்னவுடன் அவரே தன்னுடைய வண்டியில் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தார்.

அண்ணா கொஞ்சம் கூட வரீங்களா தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு கையும் ஒடலா காலும் ஒடலா என்றவுடன் அவசரமா தான் போயிட்டு இருந்தேன் இந்த மாதிரி கண்ணனுக்கு அடி பட்டுச்சுன்னு சொன்னதும் தான் கொண்டு வந்து விட்டேன் தப்பா எடுத்துக்காத மா என்றார்.

சரி அண்ணா நீங்க பாருங்க என்று விட்டு வேகமாக உள்ளே ஓடினார் மலர்.

தனது முந்தியே எடுத்து தனது வேர்வை துளிகளை துடைத்துக் கொண்டே ரிசப்ஷனில் சென்று இப்பொழுது கண்ணன் என்றவர் அருகில் அடி பட்டிருந்தார் என்று மருத்துமனை அழைத்து கொண்டு வந்தார்களே என்ற உடன் அவர் ஐஸ் யூ வில்  இருக்கிறார் .

ஐஸ் யூ இருக்கும் இடத்தையும் கூறிய பிறகு வேகமாக தனது முந்தியை எடுத்து தனது முகத்தை துடைத்துக் கொண்டு ஓடினார் மலர் .

அங்கு சென்றவுடன் தேவி கையை பிசைந்து கொண்டு ஐஸ் யூ வையும் வாசலையும் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வேகமாகச் சென்று அக்கா நீங்க என்று இங்க என்றார்.

ஒன்றும் இல்லை மலர். நான் தான் மருத்துவமனை அழைத்துக் கொண்டு வந்தேன். நீங்கதான் போன் செஞ்சீங்களா என்றுடன் ஆமா என்ற உடன் வேறு எதுவும் பேசாமல் மாமாவுக்கு என்றார் மலர்.

” தேவி உள்ளே ஐஸ் யூ வில் கண்ணாடி கிளாஸ் வழியாக காண்பித்தவுடன் வேகமாக மலர் எட்டி எட்டிப் பார்த்தார்”.

ஓரளவிற்கு அதிகமான அடி தான். ஆனால் என்ன என்று மருத்துவர் வந்து சொன்னால்தான் தெரியும் மலர்.

பயப்படாதே, ஒன்றும் ஆகாது என்றவுடன் எப்படி என்ன ஆச்சு என்று கொண்டு கேட்டார் மலர்.

என்ன ஆச்சு என்று எனக்கும் தெரியல. வண்டில வந்துட்டு இருக்கும்போது ஆப்போசிட்ல வந்த கார் காரங்க மோதிட்டாங்க என்ற மாதிரி அங்க இருக்க இளநீர் கடையில இருக்கவர் சொன்னாரு.

அதனாலதான், இங்க கூட்டிட்டு வந்தேன் என்றவுடன் ரொம்ப தேங்க்ஸ் அக்கா என்று கை எடுத்து கும்பிட்டால் மலர்.

இதை நான் ஒரு மனிதாபிமானத்தில் செஞ்சது தான் என்று விட்டு நகர்ந்து நின்று விட்டார்.

எங்கு தேவி தான் வந்தவுடன் சென்று விடுவாரோ என்று மலருக்கு சிறிதாக அச்சம் இருந்தது .

தனக்கு இந்த நேரத்தில் ஒரு துணை தேவை என்று கூட யோசித்தார். வேகமாக தேவியின் கையை பிடித்துக் கொண்டு அக்கா நான் கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

எனக்கு சிறிது படபடப்பாக ,பயமாக இருக்கிறது என்னுடன் இருக்கிறீர்களா ?என்றவுடன் தன் கண்ணில் வரும் கண்ணீரை துடைத்து விட்டு சரி என்பது போல் தலையை மட்டும் ஆட்டினார்.

அதுவே தனக்கு பெரிய உதவி என்று எண்ணிய மலர் அமைதியாக அங்கும் இங்கும் நடந்து கொண்டு தனது கணவனை எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தால்.

தனது மகளுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட மலருக்கு தோன்றவில்லை .

அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவர் வெளியில் வந்தவர் .

அவருக்கு ஓரளவிற்கு அதிகமாகவே அடிப்பட்டு இருக்கிறது .கொஞ்ச நாட்களுக்கு பார்த்து இருக்க வேண்டும்.

கை கால்களில் அங்காங்கு சிறைய்வு இருக்கிறது எப்படியும் ஒரு மாதத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று விட்டு மாத்திரை மருந்து எழுதி கொடுத்துவிட்டு இப்பொழுது ரத்தம் மட்டும் ஏற்ற வேண்டும் .

ரத்தம் நிறைய சென்று இருக்கிறது. ஆனால் பயப்படும் படியாக எதுவும் இல்லை என்றவுடன் மலர் மருத்துவரையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

தேவி தான் சார் ஏதாச்சு ஆபரேஷன் பண்ற மாதிரி இருக்கா என்றவுடன் மலர் ஓ என்று கத்தினர்.

அந்த அளவிற்கு பயப்படும் படியாக எல்லாம் இல்லைமா நீங்கள் தான் சரியான நேரத்திற்கு கொண்டு வந்து சேர்த்து விட்டீர்களே .

நாங்கள் போலீஸ் கேஸ் ஆகிவிடும் என்று சொன்னதற்கு கூட அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னீர்களே .

அந்த அளவிற்கு அடி பலமாக எல்லாம் இல்லை. உள் காயம் என்று தேவி கேட்டதற்கு உள் காயம் இருக்க தான் செய்கிறது.

அது உடனடியாக சரி ஆகாது ஒரு மாதம் எப்படியும் ரெஸ்ட் எடுக்க வேண்டும். தேவையான மருந்து மாத்திரை எழுதி இருக்கிறேன்.

பயப்படும்படியாக எதுவும் இல்லை என்று விட்டு மருந்து சீட்டை கொடுத்துவிட்டு இப்பொழுது பிளட் ஏத்த வேண்டும்.

பிளட்டிற்கு கொஞ்சம் ரெடி பண்ணுங்கள் என்று விட்டு இந்த மருந்து மாத்திரையை உடனடியாக வாங்கிக் கொண்டு வாருங்கள்.

முன்கூட்டியே கொஞ்சம் பணமும் கட்டிவிடுங்கள் என்று உடன் தேவி சரி என்றார்.

அப்பொழுதுதான் கையை பிசைந்து கொண்டு நின்றால் மலர்  தான் வரும் போது பணம் கூட எடுத்துக் கொண்டு வரவில்லையே என்றவுடன் தேவி மலரை பார்த்துவிட்டு ஒன்றுமில்லை மலர் .

நீ இங்கே இரு அக்கா என்றார் .நான் பணம் வைத்திருக்கிறேன் என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் மலரின் கையில் தட்டி கொடுத்துவிட்டு மருந்தகம் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார் தேவி .

தேவி தான் தனக்கு உதவினார் என்று கண்ணன் கண் முழித்த பிறகு தெரிய வந்தால் கண்ணன் என்ன செய்வார் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அன்புடன்

தனிமையின் காதலி

1 thought on “மீண்டும் மலரும் உறவுகள் 13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *