Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 16

மீண்டும் மலரும் உறவுகள் 16

தியா யாருடா அது யாரை பார்த்து பயந்து ஓடுகிறார்கள் இவர்கள் என்று திரும்பிப் பார்க்க செய்தாள்.

அங்கு நந்தா தனது கையில் பாடம் எடுப்பதற்கான புத்தகம் ஒரு பக்கம் கையிலும், மற்றொரு கையை தன் தலையை கோதி கொண்டும் சுற்றியுள்ள மாணவர்களை நோட்டமிட்டு கொண்டே நடந்து வந்தான் .

தியாவுடன் இன்னும் இரண்டு மூன்று பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு ஏன் மா இங்கையே நின்று கொண்டிருக்கிறீர்கள் உள்ளே செல்லவில்லையா என்று கேட்டான்.

அனைவரும் யார் என்று புரியாமல் திரு திருவென முழித்துக் கொண்டு அமைதியாக இருந்த உடன் சிரித்த முகமாக என்ன மா ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்டான்.

இல்லை அது நீங்கள் என்று ஒரு சில பெண்கள் திக்கி திக்கி பேச செய்தார்கள் .

பயப்பட வேண்டாம் .நான் இந்த கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியர் தான்.

யாராவது  உங்களை ராகிங் செய்தால் என்னிடம் சொல்லலாம். இல்லை மற்ற ஆசிரியர்களிடமும் சொல்லலாம்.

நோட்டீஸ் போர்டு அங்கு உள்ளது. எந்தெந்த பிரிவு எங்கு எங்கு உள்ளது என்று எழுதி இருக்கிறது.

11 மணி அளவில் உங்களுக்கு வெல்கம் பார்ட்டி வைப்பார்கள் என்று விட்டு சரி பார்த்து செல்லுங்கள் என்று விட்டு நகர்ந்தான்.

அப்போது தியா  சார் ஒரு நிமிஷம் என்றவுடன் திரும்பி நின்று பார்த்தான்.

நான் ஒரு கேட்டல் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே என்றவுடன் நந்தா தன்  ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவளை கேள்வியாக பார்க்க செய்தான்.

தியா அவன் திரும்பி நின்று பார்த்த விதத்தில் அவனையே ரசனையாக பார்க்கச் செய்தாள்.

அவள் தன்னை கூப்பிட்டு விட்டு எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்துவிட்டு அவள் கண் முன்பு கையால் சொடக்கு போட்டான்

என்ன கேட்க வேண்டும் என்று கேட்டவுடன் உங்கள் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

என்னுடைய பெயர் நந்தன் நான் இயற்பியல் டிபார்ட்மெண்ட் பேராசிரியர் என்று விட்டு போதுமா ?இல்லை இன்னும் ஏதாவது கேட்க வேண்டுமா ?என்றான் .
சிரித்த முகமாக.

இல்லை சாரி என்றாள் .எதற்கு சாரி ஒன்றும் பிரச்சனை இல்லை. உங்களது வகுப்பறை நோக்கி செல்லுங்கள் என்று விட்டு தன் துறை இருக்கும் பக்கம் நடையை கட்டினான் நந்தா .

அங்கு நின்று கொண்டிருக்கும் ஐந்து மாணவிகளும் போகும் நந்தாவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் .

அப்பொழுது அவர்கள் அருகில் வந்து சீனியர்ஸ் ஹலோ ஹலோ என்றார்கள் .

இப்பதான் யாரையோ பார்த்து பயந்து ஓடியது போல் இருந்தது என்று தெளிவாகவே கேட்க செய்தாள் தியா.

என்ன துளிர் விட்டு போச்சா என்றார்கள். எங்களுக்கு இல்லை உங்களுக்கு என்று நினைக்கிறேன் இப்பொழுது கூட எங்களால் நந்தா சாரை கூப்பிட முடியும் என்றாள்.

சுற்றியுள்ள சீனியர்ஸ் இவளுக்கு அதற்குள் நந்தா சாரை பற்றி தெரிந்து இருக்கிறதே என்று எண்ணி விட்டு  அசடு வழிய வேண்டாம் என்றார்கள் .

என்ன மா எங்க சாரை சைட் அடிக்கிற மாதிரி இருக்கு என்றார்கள்.

தியா  சிரித்து விட்டு பார்க்க நல்ல இருந்தாரு அதான்.

பார்க்க  அழகா இருந்தா தான் சைட் அடிப்பீர்களோ எங்களைப்போல் இருந்தால் எல்லாம் அடிக்க மாட்டீர்களோ என்றான் ஒருவன்.

அய்யோ சீனியர்ஸ் பார்க்க அழகா இருந்தா தான் சைட் அடிக்கணும்னு அவசியம் இல்ல.

அவங்கள பார்க்கும்போது நமக்கு அழகாக இருக்கிறார்கள் என்று தோன்றினாலே அதுக்கு பேர் சைட் அடிக்கறதுன்னு அர்த்தம் தான்.

ஒரு பொண்ணு ஒரு பையனை இரண்டு முறை திரும்பி பார்த்தாலே அங்க அவங்க சைட் அடிச்சதா தான் அர்த்தம்.

அதே மாதிரி தான் ஒரு பையன் ஒரு பொண்ணை ரெண்டு மூணு டைம் பார்த்தாலே அந்த பொண்ணை சைட் அடிக்கிறானு அர்த்தம் .

இங்க அவ்வளவுதான் விஷயம். அழகா இருக்கணும் அப்படின்னு கிடையாது. நம்ப மனசுக்கு புடிச்சிருக்கு அவ்வளவுதான் .

இந்த பொண்ண பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு .அந்த மாதிரி நினைக்கிறது மட்டும்தான் சைட் அடிக்கிற பீல் .

லவ் பண்றியா இவ்ளோ தத்துவம் என்றார்கள்.  இப்பதான் பாஸ் காலேஜ்குள்ளேயே காலடி எடுத்து வைக்கிறேன். அதுக்குள்ள லவ்வா என்று சிரித்தாள் .

ஏன் படிக்கும்போது லவ் பண்ண கூடாதா? என்றார்கள் .

படிக்கும்போது லவ் பண்ண கூடாதுன்னு சொல்லல படிச்சிட்டு இருக்கும் போது  லவ்  பண்ணா படிப்பு சிதறும்னு சொல்லல .

நான் இப்பதான் ஸ்கூல் லைஃப்ல இருந்து காலேஜ் லைஃப்க்கு வந்து இருக்கேன். லைஃப்ல என்ஜாய் பண்ண வேண்டியது நிறைய இருக்கு .

பாஸ் அதுக்காக உடனே லவ் பண்ணா லைப்ல என்ஜாய் பண்ண முடியாதான்னு கேட்காதீங்க .

நமக்கான லைஃபை ஃபர்ஸ்ட் நம்ப வாழனும் சரியா ? என்றாள்.

சுற்றியுள்ள அனைவரும் திருத்திருவென முழித்தார்கள்.
சீனியிலிருந்து சுற்றியுள்ள மாணவர்கள் முதற்கொண்டு அப்பொழுது ஒருவன் தான் அம்மா தாயே நீ கெளம்பு .

உன் பேச்சும் சரியில்ல ஆளும் சரி இல்லை என்றார்கள். உங்களை விடவா ?என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தாள்.

சுற்றியுள்ள மாணவர்களும் அவளை பார்த்து முறைத்துக் கொண்டு நின்ற உடன் வாங்க என்று விட்டு சிரித்த முகமாக அவளது வகுப்பறையை தேடி சென்று விட்டாள் .

நோட்டிஸ் போர்ட் இருக்கும் இடம் சென்று அவர்களது வகுப்பறை எந்த பக்கம் எந்த ஃபுளோரில் இருக்கிறது என்று அனைத்தையும் பார்த்துக் கொண்டு ரூம் நம்பரையும் பார்த்துவிட்டு அவரது வகுப்பறை நோக்கி சென்று விட்டாள் தியா.

தியா வகுப்புக்கு போகும் போது நந்தா அவளது வகுப்பறையில் நின்று கொண்டிருந்தான் மே ஐ கமின் சார் என்று கேட்டு விட்டு நந்தாவை பார்த்துக் கொண்டிருந்தாள்  .

நந்தா கதவின் புறம் திரும்பியவன் அங்கு ஒரு பெண்  தன்னையே குறுகுறுவென பார்த்து பார்த்துக்கொண்டு இருந்தவுடன் அவளை பார்த்துவிட்டு எஸ் மா வா என்றான்.

தியாவும் உள்ளே வந்து உட்கார்ந்தாள். அவளுக்கு முன்பாகவே அங்கு ஒரு 12 ,13 மாணவ மாணவிகள் இருந்தார்கள்.

அது கோயெட் காலேஜ். 11 மணிக்கு வெல்கம் பார்ட்டி வைக்கிறாங்க அதுவரை நம்ம கொஞ்சம் நம்மள பத்தி தெரிஞ்சுக்கலாமா  என்றான்.

அவங்க அவங்க பேர் உங்களுக்கு என்ன பிடிக்கும் அப்படி என்ற மாதிரி சொல்லலாம்.

ஒரு சில துடுக்கான மாணவ மாணவிகள் என்ன பிடிக்கும்னா ,சாக்லேட் ,ஹீரோ ஹீரோயின் இந்த மாதிரியா சார் என்ற உடன் நந்தா லேசாக முறைப்பது போல் பார்த்துவிட்டு.

அதை பத்தி பேச சொல்லலமா சப்ஜெக்ட்ல எந்த சப்ஜெக்ட் பிடிக்கும் ,எந்த டாபிக்  பிடிக்கும் என்ற மாதிரி ஃபர்ஸ்ட் நாள் இல்லையா ?

கிளாஸ் எடுக்க வேண்டாம் என்பதால் என்றவுடன் சாரி சார் என்று உட்கார்ந்தார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் கிட்டத்தட்ட 25 மாணவர்கள் இருந்தார்கள் .

ஒரு வகுப்புக்கு 25 மாணவர்கள் என்பது போல் தான் அந்த கல்லூரியில் வைத்திருந்தார்கள்.

25 மாணவர்களும் வந்த பிறகு ஓகே கைஸ் இப்போ உங்க நேம் ஊர்  லட்சியம் அனைத்தையும்  சொல்லுங்க என்றவுடன் தங்களைப் பற்றிய டீடெய்ல்ஸ் தங்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்று அனைத்தையும் சொல்லிவிட்டு உட்கார்ந்தார்கள் .

சரி ஓகே நேரம் ஆகிவிட்டது. அனைவரும் ஆடிட்டோரியத்தில் அசமளாகி விடுங்கள் என்று விட்டு எழுந்தவன் சொல்ல மறந்துட்டேன் .

நான் தான் உங்க கிளாஸ் இன் சார்ஜ் என்றவுடன் ஒரு சில மாணவர்கள் விசில் அடித்தவுடன் போதும் போதும் என்று விட்டு சரி கைஸ் லெட்ஸ் கோ என்ஜாய் தி ஃபர்ஸ்ட் டே என்று விட்டு  வகுப்பறையை  விட்டு வெளியே சென்றான் .

அவனை ஒரு சில பெண்களும், ஆண்களும் சைட் அடித்துக்கொண்டு இருந்தார்கள் .அதில் தியாவும் அடக்கம் .

எப்பா சாமி என்ன ஆளுடா என்று யோசித்தாள் .

அப்பொழுது அருகில் உள்ள மற்றவர்கள் தங்களது பெயர் ஊர் பெயரை சொல்லி பிரண்ட்ஸாக அறிமுகமாகி கொண்டார்கள்.

அனைத்து மாணவ ,மாணவிகளும் ஆடிட்டோரியத்தில் கூடி இருந்தார்கள்.

ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்ஸ் அனைவரையும் தனியாக உட்கார வைக்கப்பட்டு, செகண்ட் இயர் ,தேர்ட் இயர் , பீஜி ஸ்டுடென்ட், பியட் ஸ்டுடென்ட்ஸ் ,எம் ஃபில் அனைவரையும் தனித்தனியாக ஒரு இடத்தில் உட்கார வைக்கப்பட்டார்கள்.

  ஃபர்ஸ்ட் இயர் மாணவர் ,மாணவிகளுக்கு வெல்கம் பார்ட்டி வைக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்ஸ் பாட தெரிந்தவர்களை பாடவும்.

ஆட தெரிந்தவர்களை ஆடவும், மிமிக்கிரி செய்ய தெரிந்தவர்கள் , காமெடி பண்ண தெரிந்தவர்கள் காமெடியும் பண்ண சொல்லி அன்றைய நாளை சந்தோஷமாக கோலகலமாக கொண்டாடினார்கள் .

இறுதியில் பழைய மாணவ ,மாணவிகள் அனைவரும் நந்தா சார் ஒரு பாட்டு என்று கத்தவும் .நந்தா வெளியே உட்கார்ந்து  தன்னுடைய துறை பற்றிய டீடெய்ல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தவன்.

மைக்கில் தன்னுடைய பெயரை கேட்டவுடன் ஒரு சில நொடி நின்று விட்டு இந்த பசங்களை வெச்சிட்டு என்று சிரித்து விட்டு ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தான்.

அனைத்து மாணவ மாணவிகளும் நந்தாவையே  பார்த்துக் கொண்டிருந்தார்கள் .

சும்மா விடமாட்டாங்க என்று சிரித்தார்கள் ஒரு சில ஆசிரியர்கள். சார் என்ன பங்க்ஷன் என்றாலும் என்டிங்ல உங்களோட பாட்டு இல்லாம முடியாது தான என்றவுடன் ஓகே சார் என்று மைக்கின் முன்பு வந்து நின்றான்.

நந்தா நன்றாக படுவானா ?அவனது பாட்டைக் கேட்டு இங்கு எத்தனை ஆண் பெண்கள் அவனை சைட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *