அத்தியாயம்-18
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அவசரம் காட்டாமல், ‘ஜீவனுக்கு அழைத்து, “இங்க பாரு.. நீ சொன்ன மாதிரி காதலிக்கலைன்னு சொல்லிட்டேன். அவர் வேதனையோட போயிட்டார். அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத.
அதைமீறி ஏதாவது செய்த… தற்கொலை செய்துட்டு என் தற்கொலைக்கு நீ தான் காரணம்னு எழுதி வைப்பேன்.” என்று மிரட்டினாள்.
ஜீவனோ, “ஓகோ ஓகே ஓகே. செத்துகித்து போயிடாத. இன்னிக்கு இது போதும். அவனை சாகடிக்கறதா இருந்தா நான் க்யூர் ஆனதும் கண்ணை மூடிட்டு சூட் பண்ணிட்டு போயிட்டே இருந்திருப்பேன். எனக்கு தேவை அவன் உயிர் இல்லை. அவனுக்கு வலிக்கணும், நீ கிடைக்காம துடிக்கணும். அவன் வேலை பறிப்போகணும்.” என்று அடுக்கியபடி முடித்து கொண்டான்.
ஆக.. உயிரை விட அடுத்து வேலை பறிக்க தான் முனைவான். அதற்குள் அர்னவிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு அர்னவையோ சந்தோஷையோ தொடர்புக்கொள்ள இயலாத நிலையில், அர்னவ் தந்த கார்ட் நினைவு வந்தது.
அர்னவ் தந்தையிடம், வேலை வேண்டுமாயின் சேர்ந்திட கூறி தந்தது.
அர்னவ் தந்த கார்டை தேடினாள். அவளை அதிகம் அவதிக்குள் ஆளாக்காமல் கிடைத்தது. இனி எப்படி உரைக்க,? எப்படி தடுக்க?’ என்ற சிந்தனையுடன் அன்றைய நாள் கழிந்தது.
காவேரி தான் அர்னவ் சந்தோஷா வந்துவிட்டு சென்றதில் புளகாங்கிதம் அடைந்தார். அவர்களை பற்றியே பேசி புலம்ப, பாவனாவுக்கு அதுவே உற்சாகம் தந்தது.
இங்கே நாயகன் அர்னவ் சந்தோஷ் இருவரும் மதுபானத்தை கையில் வைத்திருந்தனர்.
“அவ ஏதோ என்னிடம் மறைக்கறா சந்தோஷ். உனக்கு அது தெரியுதா?” என்று கேட்டான்.
“அந்தப்பொண்ணு உன்னை விரும்புதுடா. அது நல்லா தெரியுது. ஆனா ஏன் மறைக்குதுனு சத்தியமா தெரியலை. நீ சொன்ன மாதிரி அவ ஸ்டேடஸ் உன் ஸ்டேடஸ் பார்த்து அவ மிரண்டிருக்கலாம். அதனால தயங்கி உன்னை வேண்டாம்னு சொல்லறாளோ?” என்று கேட்டான்.
“அவ என் அப்பாவை சந்திக்கவேயில்லை. இது வேற காரணமா தெரியுது.” என்றவன் மூளை ஜீவனையே சுத்திவந்தது.
“ஏன் அர்னவ் இந்த ஜீவன் என்ன ஆனான்? போலீஸ்கிட்ட ஒப்படைச்சோமே இப்ப அவன் நிலை?” என்று அதேநேரம் கேட்க, அர்னவோ “அவன் எங்க கம்பி எண்ணினான். உடல்நிலை காரணமாக பதினைந்து நாள் ஹாஸ்பிடல்ல இருந்தான். போனா போகுதுன்னு இரண்டு நாள் போலீஸ் கஸ்டடில இருந்தான். அதுகூட இல்லீகல் வெஃப்பன் வச்சதால்… ஆனா எப்படியோ நைஸா பணப்பலத்தால் வெளிவந்துட்டான்.
இது போதாதுனு அவனோட அவப்பெயரை சரிசெய்ய, அவன் அப்பா ஏதோ தெழிலதிபரோட பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க எங்கேஜ்மெண்ட் ஆச்சு. கண்டமேனிக்கா எவளோடவும் சுத்தாம மனைவின்னு வந்தா ஒழுங்கா இருப்பான் என்று நம்பியிருக்கலாம்.
எங்கேஜ்மெண்ட் கூட ஃப்யூ டேஸ் முன்ன நடந்தது. அதை கேள்விப்பட்ட பிறகு தான் அவன் பாவனா பின்னாடி இனி வரமாட்டான்னு கன்பார்ம் ஆச்சு.
ஒருவேளை… பாவனாவோட கிறுக்குத்தனமான பேச்சுக்கு ஜீவன் கிறுக்கன் காரணமா இருப்பானோ?” என்று சந்தோஷை பார்த்து கேட்க, சந்தோஷோ, “அவளை காயப்படுத்தி அவனுக்கு என்ன லாபம்?” என்று கூறி மதுவை பருகினான்.
அர்னவோ, ‘இல்லை… ஜீவன் ஒரு பொண்ணுக்கூட உல்லாசமா இருக்க பல லட்சத்துல செலவு செய்தவன். அப்படியிருக்க, அவனோட ஆசைக்கே அவ்ளோ செலவுன்னா… அவன் என்னிடமும் அடிவாங்கியிருக்கான்.
பாவனா அவனை ஏற்றுக்கலை. அங்க அவன் ஆண்மை அழகு அடிப்பட்டிருக்கும். சோ… என்னையும் பாவனாவையும் பழிவாங்க அவன் நினைக்கலாம்.
பட் பாவனாவை.. அப்படி பேச வைச்சா, அவ ஏன் பேசப்போறா? ஏதாவது காரணம் இருக்குமா?
இல்லை… நிஜமாவே பாவனாவுக்கு என்னை பிடிக்காம போனதால் அப்படி பேசியிருக்க, நான் தான் ஓவரா திங்க் பண்ணறேனா?’ என்று யோசித்தான்.
எது என்னவோ இன்றைய நேரம் வேதனையும் சோகமுமாக மதுவில் கழிந்தது.
பாவனாவிடம் மீண்டும் பேச வேண்டும். ஆனால்… நேரில் பேசியே அவள் இவ்வாறு கூறியிருக்க, என் செய்வது? இதே அழுத்தம் அவனை உறங்கவிடவில்லை.
சந்தோஷ் மட்டும் வீட்டுக்கு செல்வதாக புறப்பட்டிருந்தான்.
அடுத்த நாள் காலை தலைவலி விண்ணென்று வலிக்க, எதிரேயிருந்த மதுபானத்தை கண்ணாடி டம்ளரை எல்லாம் அப்புறப்படுத்தும் வேலையில் இருந்தான்.
பணிக்கு செல்ல வேண்டும் என்று பரபரப்பாய் கிளம்பினான்.
இங்கு பாவனா தன்னை யாரோ பின் தொடர்வது போல உணர்ந்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.
தனக்கு தான் மனபிராந்தையா? அல்லது நிஜமாகவே தன்னை ஜீவன் பின் தொடர்கின்றானா? என்று அஞ்சி வந்து சேர்ந்தாள்.
அவளது கைப்பையில் அர்னவின் தந்தை விலாசம் முகவரி இருக்க மெதுவாக கைப்பையை இறுக்கமாக பிடித்தாள்.
அங்கு மருத்துவமனைக்கு வந்தவர்களை எல்லாம் தன்னை காண்பது போல சந்தேகமாய் கண்டாள்.
உண்மையில் ஜீவனின் ஆளும் இருந்திருந்தான்.
ரிசப்ஷன் பெண் என்பதால் யாருக்காவது பேசி அழைப்பது போல செயல்படலாம். ஆனால் அர்னவ் உயிர் விஷயத்தில் அவளாக விளையாட தயாராக இல்லை.
அதனால் மிக பவ்வியமாக, வேலையை கவனித்தாள்.
மெயில் ஏதேனும் அனுப்பலாமென்றாலும் அர்னவின் மெயில் எல்லாம் கேட்டறியவில்லை. அர்னவின் எண்ணை தவிர அவளுக்கு மற்ற எந்த எண்ணும் தெரியாது. ஏன் சந்தோஷ் எண் உட்பட.
மருத்துவமனைக்கு வந்தவர்களின் பெயரை எல்லாம், எழுதி அவளது வேலையில் கவனம் செலுத்துவது போல இருந்தாள்.
ஒரு பத்தரை மணி தாண்டவும் ஒரு போன் கால் வந்தது. டாக்டர் வந்துவிட்டாரா? என்ன ஏதென்று கேட்கும் அழைப்பு தான் பதில் தந்துவிட்டாள். அப்படியே எதிர்புறம் அணைத்து விட்டனர்.
பாவனாவோ, கைகள் தாளமிட்டபடி, லேண்ட் லைனில் அர்னவின் தந்தைக்கு அழைத்தாள்.
அர்னவ் தந்தை காசிநாத்தின் தனிப்பட்ட எண், போன் வரவும் “எஸ் காசிநாத் இயர்” என்று அர்னவின் கம்பீர குரலை போல கேட்டார்.
“சார்… போனை உடனே வச்சிடாதிங்க. நான் பாவனா பேசறேன். அர்னவ் சாரோட..” என்று அறிமுகப்படுத்தும் முன்னரே, “சொல்லும்மா.. நீ வேலை விஷயமா போன் போடுவன்னு அர்னவ் ரொம்ப நாளைக்கு முன்ன சொன்னான். ஆனா இப்ப போன் போட்டிருக்க. காலதாமதமா வேலை வேண்டுமா? என்ன படிச்சிருக்கிங்க” என்று கேட்டார்.
“நோ சார்.. நான் வேலை விஷயமா பேசலை. அர்னவ் உயிருக்கு ஆபத்து. நான் சொல்லறதை மட்டும் கேட்டுக்கோங்க. என்னால சத்தமாவும் பேசமுடியாது.” என்றவள், “அர்னவ் சார் என்னை பிரப்போஸ் பண்ண கோவிலுக்கு வந்தார். கோவில்ல கன் பாயிண்ட்ல அர்னவை குறிவச்சிட்டு ஜீவன் இருந்தான். நான் அவரோட காதலை மறுத்து பேசலைன்னா ஷூட் பண்ணிடுவதா மிரட்டினான்.
அதோட அர்னவோட பிளைட்ல டிரக்ஸ் வச்சி அவரை போலீஸ்ல மாட்டி விடவும் ஜீவன் முயற்சி பண்ணறார். அர்னவோட போனை அந்த ஜீவன் வாட்ச் பண்ணறான். சோ… எப்படியாவது ஜீவனிடம் தனியா கூட்டிட்டு போய் இந்த விஷயத்தை சொல்லிடுங்க. அவரை மாட்டிவிட எல்லா பிளானும் அந்த ஜீவன் போட்டு வச்சியிருக்கான்” என்று மடமடவென உரைத்தாள்.
அதை கேட்ட காசிநாத்தோ, “ஓகே ஓகே. அர்னவை நேர்ல பார்த்து பேசறேன். சரிம்மா… அர்னவை நீ விரும்பறியா” என்று கேட்க, “சார்.” என்று பாவனா போனை கண்டு முழிக்க, “என் பையன் அர்னவ் பிரப்போஸ் பண்ணிருக்கான். நீ பதில் சொல்லலையேம்மா. உன் பதில் என்ன?” என்று கேட்க, “நீங்க கேட்ட பீரியாடிக் டாக்டர் பதினொன்று மணிக்கு வருவாங்கம்மா தொல்லை பண்ணாதிங்க. தேங்க்யூ” என்று கத்தரித்தாள்.
அவளருகே இரண்டு பேர் வருவதை கண்டு சட்டென துண்டித்துவிட்டாள்.
“ஜூலி.. பீரியாடிக் டாக்டர் லெவனுக்கு வருவாங்க தானே? பேஷண்ட் எத்தனை கேள்வி கேட்கறாங்க.” என்று சலித்தபடி, அவளுக்கு தெரிந்த பெண்ணிடம் பேசவும், இருவரில் ஒருவர் இருக்கையில் அமர்ந்தான்.
பாவனா அவனை மேலும் கீழும் வேலை செய்தபடி சிசிடிவியில் ஆராய்ந்தாள்.
இவளையே பார்வையிட்டு இருக்க, ஜீவன் ஆள் என்று புரிந்தது.
அதனால் உதறலோடு வேலையை கவனித்தாள்.
இங்கு அர்னவை தேடி காசிநாத் வருவதாக தெரிவிக்க, “அவரு ஏன் இங்க வரணும்? சந்தோஷ் உன் வேலையா?” என்று கோபமாக, “மச்சான்.. சத்தியமா இல்லைடா.” என்று மறுத்தான்.
ஒரு மணிக்கு விமானத்தை எடுக்க வேண்டும். “அவர் குயிக்கா வந்தா பேச டைம் தருவேன். இல்லைன்னா நான் பாட்டுக்கு என் வேலை தான் பெருசுன்னு போயிடுவேன்” என்று நண்பனை மிரட்டினான்.
சந்தோஷோ ”காதலி மேல இருக்கற கோபமெல்லாம் நண்பனிடம் காட்டுங்கடா. விளங்கிடும்” என்றா முனுமுனுத்தான்.
காசிநாத் பனிரெண்டுக்கு மகன் முன் வந்தார்.
“எந்த காரணமும் இல்லாம என்னை பார்க்க வரமாட்டிங்களே. என்ன புதுசா?” என்றான்.
காசிநாத்தோ, பாவனா பேசியது பதிவாகியிருக்க, அதை போட்டு காட்டினார்.
அதை கேட்டவன், “பச்.. ஜீவன்.” என்று பல்லை கடித்தான்.
“அப்பவே நினைச்சேன்.” என்றவன், “தேங்க்ஸ் இனி நான் பார்த்துக்கறேன்” என்று எழுந்தான்.
“நில்லுடா… நானும் கரோலினும் சேர்ந்து வாழுற வாழ்க்கையில் நீ சந்தோஷமா தானே சம்மதிச்ச. கல்யாணமாகாம வாழுறதை தெரிந்தப்பிறகு திடீர்னு உன்னிடம் சேஞ்சஸ். லேகா பிறந்தப்பிறகு இப்ப போய் ஊரறிய கல்யாணம் செய்ய முடியுமா?” என்று கேட்டு அர்னவை நிற்க வைத்தார்.
அர்னவ் கோபம் கொண்டவனாய், “அம்மா போல பொண்ணுனு பழமொழி கேள்விப்பட்டு இருப்பிங்க? அதே போல விதை ஒன்னு போட்டா சுரை ஒன்று முளைக்குமா? இது கேள்விப்பட்டிருக்கிங்களா?” என்றான்.
காசிநாத் புரியாமல் பார்வையிட, “நீங்க பொண்டாட்டி இறந்ததும் கரோலினை மணந்ததால நானும் என் பெட்டர் ஆஃப் அட்டாச் இல்லாம இருப்பேனாம்.
தாலி கட்டாம உங்களால் கரோலினோட வாழற மாதிரி, நாமளும் தாலி கட்டாம வாழலாம்னு
உங்க கேரக்டரை வச்சி என்னை ஒருத்தி ஜட்ஜ் பண்ணி கேட்கறா” என்றான் அர்னவ்.
“பாவனா?” என்று காசிநாத் கேட்க, “நோ… இது ஏர்ஹோஸ்டர் ஸ்வேதானு ஒருத்தி. பாஸ்ட்ல முன்ன பிரப்போஸ் பண்ணினவள். மேரேஜ் வரை போச்சு. பட்… டிராப் ஆகிடுச்சு. அதுலயிருந்து மேரேஜ் ஆகாம நீங்க வாழுற வாழ்க்கையால நான் டிஸ்அப்பாயின்ட் ஆனேன்.” என்றான் கோபமாக.
காசிநாத்தோ, “ஓ… அதுக்காக தான் என்னை, என் சொத்துக்களை அவாய்ட் பண்ணிட்டு தனியா ஹோட்டல்ல வாடகைக்கு இருக்கியா? இடியட்… நீ கேட்டதும் நானும் கரோலினும், இறைவன் சந்நிதியில் மோதிரம் மாத்திக்கிட்டோம். இந்த வயசுல கல்யாணம் அனவுன்ஸ் பண்ணி பிரபலப்படுத்த முடியுமா? உனக்காக மேரேஜ் பண்ணியாச்சு. இதுக்கு மேல என்ன செய்யணும்? மனசுல ஏதாவது இருந்தா நேர்ல கேளுடா.” என்றார்.
சந்தோஷ் நட்பு கிடைக்கும் முன் ஸ்வேதா என்ற பெண்ணிடம் சுமூகமாக நட்பு செல்ல, கல்யாணம் என்று ஆரம்பிக்கும் பொழுது தந்தையாரை பற்றி தெரிவித்தான். லிவ் இன் ரிலெஷன்ஷிப்பில் இருப்போம் என்று ஸ்வேதா கூற, “என் மனசு உடம்பு முறையா தான் பகிரப்படும்’ என்று அர்னவ் உரைக்க, அங்கே ஸ்வேதா ‘உங்கப்பா எல்லாம் கரோலினை மேரேஜ் பண்ணாமலே வாழறார். பெரிய இவனாட்டும் பிலாசபி பேசாத அர்னவ்’ என்றாள் கேலியாக.
ஏனோ அந்த நிமிடம் அர்னவிற்கு தந்தையை தந்தையின் வாழ்வு, ஸ்வேதா எல்லாமே பிடிக்கவில்லை. மொத்தமாய் தனிமையானான். அவன் ஒரு பெண் தன்னை இவ்வாறு எண்ணியது, இளக்காரமாக நினைத்தான்.
இன்று தந்தை விளக்கம் தரவும், அர்னவோ ‘நிஜமா?’ என்பது போல பார்வையிட்டான்.
காசிநாத் இமை மூடி ஆமென்றார். அர்னவோ “தேங்க்ஸ்” என்றான் கோபம் அடியோடு சென்றவனாக. இத்தனை காலம் தந்தை அவரது விருப்பத்தில் வாழ்ந்தாரென்றாலும் முறையாக மணக்கவில்லையே, அதையும் ஒருத்தி கேலியாக பேசிவிட்டாளே என்ற வலி. அதையே வைத்து தன்னிடம் பேசியது கூடுதல் வேதனை.
“ஓகே மை சன். பாவனா சொன்ன விஷயத்திற்கு என்ன செய்ய போற? நான் ஏதாவது உதவணுமா?” என்றார்.
“நோ தேங்காஸ்… என் விஷயத்தை நான் பார்த்துப்பேன். ஜீவன் எல்லாம் பெரிய விஷயமேயில்லை.” என்றான்.
காசிநாத்தோ தோளை குலுக்கி, ”பிராப்ளம் சால்வ் பண்ணிட்டு வா.” என்று தட்டிக் கொடுத்து சென்றார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 eppdiyo bavana msg a convey pannita super 😘
Super interesting story
Bhavana eppadiyo message ah convey pannita ah athuvum andha jeevan oda aalu ku doubt varatha padi
Wow super bavana. Aranav do it something for Jeevan.he deserved that. Intresting sis.
ராஜாளியின் ராட்சசி…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 18)
பரவாயில்லை… அப்படி இப்படி சின்னப்பிள்ளைத்தனமா நடந்தாலும், இந்த விஷயத்துல புத்திச்சாலித்தனமா அர்னவோட அப்பாவுக்கே போன் பண்ணி விஷயத்தை தெரியப்படுத்திட்டா. அர்னவ்வும் அவ சொல்றதுக்கு முன்னாடியே
ஜீவனோட மேலத்தான் அவனோட சந்தேகம் தோணியிருக்கு. இனி எல்லாத்தையும் அர்னவ் பார்த்துப்பான்னு தோணுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Hmm oru vazhiya vishayatha sollitta
அருமையான பதிவு