அத்தியாயம்-2
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
பாவனா தனி விமானத்திலிருந்து கீழே பரந்து விரிந்த உலகை பார்வையிட்டாள்.
பாவனாவின் வாழ்வில் இது போன்ற காட்சியில் உலகை கண்டதில்லை. அவளது கனவில் கூட இது போன்ற நிகழ்வு நடக்குமென எண்ணியதில்லை. ஆனால் நிஜத்தில் நடந்தேறியது.
தோழி சந்திரா நல்ல வேலைக்கு தன்னை பரிந்துரைத்ததாக எண்ணி, களிப்படைந்தாள்.
அசுரதாலாட்டு, ராட்டினத்தில் செல்லவே அஞ்சியவளுக்கு தனிவிமானத்தில் பயமின்றி நிதானமாக கண்ணாடி ஜன்னல் வழியாக பார்வையிட, தற்போது மண்ணிலிருந்து விண்ணிற்கு பறந்துவிட்டாய் என்று மேகம் கூறியது.
“பக்கத்துல மேகம்… அய்யோ… வெள்ளையா…. சிலது ஆஷ் கலர்ல, அப்படியே மிதக்கற மாதிரி இருக்கு சார். சார் உங்களுக்கு பயமாயில்லையா?” என்று ஜீவனிடம் கேட்க, அவனோ தைரியசாலியாக “அதெல்லாம் அடிக்கடி வர்றதில் பயமில்லை.” எனக்கு சாதாரணம் என்பது போல பேசினான்.
“சார்… பறவை ரொம்ப கிட்ட போகுது” என்று சுட்டிகாட்டினாள். பாவனா இதயம் வேகமெடுத்து துடித்தது.
“ம்ம்.” என்றவன் அவள் துள்ளி குதிக்க, முட்டி வரை ஏறிய கவுனால் தொடை பளிச்சிட, அதை கவனித்தான்.
எப்படியும் மாலத்தீவில் பிஸினஸ் முடித்த கையோடு மற்றொரு தீவில் பாவனாவோடு தான் இரவை கழிக்க வேண்டும் என்பதால் கிணற்று தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாதென்று நிதானித்தான்.
ஆனாலும் பாவனாவின் சிரிப்பில் குதுகலத்தில் இயற்கையை விட, அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. மெதுவாக தன்னிருக்கையிலிருந்து எழுந்த ஜீவன், பாவனா அருகே வந்து, அவளது தோளை பற்றியபடி, “உனக்கு எதுவும் கஷ்டமாயில்வையே? ஆர் யூ ஓகே?” என்று கரிசணையாக கேட்டான்.
புதிதான பயணத்தில் பயமிருக்குமென்ற நல்ல எண்ணத்தில் கேட்பதாக நினைத்து, “இப்ப ஓகே சார். முதல்ல பயந்தேன். இதயம் எல்லாம் தாருமாற அடிச்சது. ஆனா இந்த இயற்கை அழகை இப்ப அனுபவிக்கும் போது இப்படியே மிதக்க கூடாதானு இருக்கு” என்றாள்.
ஜீவன் ஆனந்தமாய் அவளது தோளை விடாமல் வெளியே பார்வையிடுவதை போல அவளது தோளில் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கொடுத்தான். அவனது தீண்டல் உள்ளிருக்கும் ஆடையின் அங்க வடிவில் மேலோட்டமாய் ஸ்டாப் தீண்டவும், ‘உய்ய்’ என்ற சப்தத்துடன், உலுக்கியது.
“என்னாச்சு?” என்று பாவனா பதற, “சாரி மேம் மேகத்துக்குள்ள பிளைட் போகறப்ப சம்டைம் இப்படி உலுக்கற மாதிரி இருக்கும்” என்று சந்தோஷ் தான் பதில் தந்தான்.
பாவனாவோ பயந்து ஓரிடம் அமரவும், ஜீவனும் தன்னிருப்பிடம் வந்தான்.
சந்தோஷோ “அர்னவ்… ஏன் இப்படி தாறுமாற ஓட்டற. அந்த ஆளு பார்த்தான் திட்டறதுக்கா?” என்று கடிய, “பின்ன என்னடா… ஜொள்ளு விடறான்.. பிளைட் மூழ்கிடாதா? அந்த பொண்ணு லூசு மாதிரி பேசுது. இதுங்க தனியா தீவுல சரசம் பண்ண தனி பிளைட்ல போறாங்க. போய் சேருற இடம் வரை கையையும் காலையும் வச்சிட்டு சும்மாயிருக்க மாட்டாங்க. நீ என்னடான்னா பிட்டு படத்தை பார்க்கற மாதிரி அங்கிருக்க சிசிடிவி வச்சி இங்க வேடிக்கை பார்க்கற. ஆப் பண்ணி தொலைடா.” என்று கடிந்தான்.
“ஏ… டைம் பாஸ் ஆகும்னு பார்த்தேன். நீயேன் டா கத்தற? அவன் காதுல விழப்போகுது” என்றான்.
இருவருமே நண்பர்கள் என்றதால் பைலட் என்ற கடமையை தாண்டி நட்புரீதியாக பேசிக்கொள்வார்கள்.
சந்தோஷோ சில நேரம் சிசிடிவி மூலமாக பார்வையிட்டு பொழுதை போக்குவான். அர்னவ் அதெல்லாம் பெரிதாக கண்டுக்க மாட்டான். இன்று தான் ஏதோ எரிச்சலில் சந்தோஷை திட்டுவது.
ஜீவனுக்கு தங்களை கண்கானிப்பது தெரிந்தால் அதற்கு வேறு கோபப்படலாம். ஆனால் இது ஒரு வணிக ரீதியாக ஒப்பந்தப்படுத்தப்பட்ட தனிவிமானம். அப்படியிருக்க இடம் பொருள் என்பதை கவனத்தில் கொள்வது அர்னவின் எண்ணம்.
அவனை பொறுத்தவரை விமானத்தை ஒட்டுவதற்கு பணம் தந்திட போகின்றான்.
எரிப்பொருள் செலவு, மற்றும் தனிவிமானம் எவ்வளவு நேரம் எத்தனை நாட்கள், என்று வாடகை பேசி கூடுதலானால் அதற்கும் பணத்தை தரப்போகின்றனர்.
விமானமும் கேப் புக்கிங் போலவே. ஆனால் வாடகை பணம் லட்சத்தில் வாறியிறைக்க வேண்டியதாக அமையும்.
பெரும்பாலும் தனிவிமானத்தில் செல்பவர்களுக்கு லட்சங்கள் எல்லாம் பெரிய பணமேயில்லையே.
அண்மையில் ஒரு சினிமா நடிகர் மற்றும் அரசியலில் கால் பதித்தவர், தனிவிமானத்தில் வந்திறங்கியதற்கு 77லட்சம் செலவு ஆனது செய்தியில் பரபரப்பாய் போட்டிருந்தனரே.
சந்தோஷ் ஜீவனை திரும்பி பார்த்து, “ஏன் அர்னவ், இவன் எல்லாம் பிசினஸ் டீல் முடிந்து, செக்ரட்டரி கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும் என்ற காரணத்திற்காகவே அழகான பொண்ணை கூடவே கூட்டிட்டு வருவாங்களாடா.” என்று காரணத்தை கேட்டான்.
அர்னவோ “இந்த உலகத்தில் திகட்ட திகட்ட அலுக்காத போதை தர்ற விஷயம் இரண்டு.
ஒன்னு பொண்ணு, இரண்டு பணம். இது இரண்டும் ஒரு ஆணோட பக்கத்தில் இருந்தா அவன் சும்மாவா இருப்பான். அங்க பாரு திரும்ப ஆரம்பிச்சிட்டான். பார்வையால அந்த பொண்ணை துகில் உறிச்சிட்டு இருக்கான்.” என்று பல்லை கடித்து சுட்டிக்காட்ட, ஜீவன் பாவனாவின் அடிமுதல் முடி வரை அளவெடுத்து ரசிப்பதை கண்டான் சந்தோஷ்.
“ஆமா.. மாலத்தீவுல ஏதோ பிசினஸ் மீட்டிங். அது முடிந்து நைட் டின்னர். அடுத்த நாள் கிளம்பி, மற்றொரு தீவுல இவங்களை டிராப் பண்ணணும்.
அங்க தான் ஒரு வாரம் இருந்துட்டு புறப்படணும். பிசினஸுக்கே ஒரு நாள். ஆனா பொண்ணு கூட தங்க ஆறு நாள்.
பிசினஸுக்கு செலவு பண்ணறதை விட பொண்ணுக்கு செலவு பண்ணறான் பார்றேன். இவனுக்கு எங்கயோ மச்சமிருக்குடா” என்று பாவனாவை பார்த்து பெருமூச்சை விட்டான் சந்தோஷ்.
“டேய்… ஏற்கனவே அவன் விடற உஷ்ண மூச்சுக்கே என்னால விமானத்தை ஓட்ட தடுமாறறேன். இதுல நீ வேற. நம்ம வேலையை பாரு. உனக்கு தான் ஆல்ரெடி கல்யாணமாகிடுச்சுல்ல” என்று நண்பனை தட்டினான்.
சந்தோஷோ “உனக்கென்னடா நாள் முழுக்க ராஜாளி மாதிரி பறந்துட்டே இருக்கணும்னு கனவு. அதுக்கு ஏற்றது போல பைலட். பிடிச்ச வேலையும் கனவும் ஒன்னு. ஜாலியா இருக்க. எனக்கு அப்படியா? இந்த பிரைவேட் விமானத்தை ஓட்டறதை விட பேஸன்ஞர் பைலட் ஓட்டணும். மாச சம்பளமா மொத்தமா வாங்கணும்” என்றதும் அர்னவ் மென்னகைத்தான்.
ஒவ்வொருத்தருக்கு ஒரு கனவு உண்டு. அதில் அவர்கள் இலக்கு சிறியதோ பெரியதோ ஆனால் ஆத்ம திருப்தி என்ற ஒன்றில் தான் அளவற்ற மகிழ்ச்சி உள்ளது. அந்த வகையில் அர்னவ் இந்த வேலையில் பூரண சந்தோஷத்தில் வாழ்பவன்.
பாவனா தனது போனில் போட்டோவை எடுத்து தள்ள, ஜீவன் அங்கிருந்த சொகுசு இருக்கையில் அமர்ந்தான்.
பாவனாவோ கால் முளைத்த ரோஜாவாக உலகை ரசித்தவள், ஜீவன் தன்னையே பார்வையிடுவதை தாமதமாக உணர்ந்து ஒரிடமாக அமர வந்தாள்.
“ஆர்வமா இருக்கு சார். ரியலி இந்த மாதிரி வர்ற அனுபவம் என் வாழ்நாளில் மறக்கவே மறக்காது. ஆபிஸ் போனதும் சந்திராவுக்கு நன்றி சொல்லணும். அவளால் தான் இந்த ஜாப்.” என்று நன்றியாய் பேசினாள்.
ஜீவனோ யார் அந்த சந்திரா? என்று குழம்பினாலும் தெளிவாக கேட்கவில்லை. அவன் பார்த்து தொட்டு தீண்டிய பெண்களில் அவள் எத்தனாவது எண்ணிக்கையோ? ஆனால் இவளை இனி மறக்க முடியுமா என்பது ஆச்சரியம் தான். பாவனா அந்தளவு ஜீவனை மயக்கியிருந்தாள். இத்தனைக்கும் மற்ற பெண்ணை போல குழைந்து பேசவில்லை, தன் மீது ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் இந்த கள்ளமில்லாத குதூகலம் ஈர்த்தது.
முதல் முறையாக ஜீவனுக்கும் திருமணம் செய்துக்கொள்ள ஆசைக்கூட உதித்தது.
“பாவனா… நீ தீவுக்கு வந்திருக்கியா?” என்று கேட்டான்.
“சார்… விமானத்திலேயே இப்ப தான் முதல்ல வந்திருக்கேன். நீங்க வேற. தீவுக்குன்னு.. இல்லை சார்… தமிழ்நாட்டை தாண்டி எங்கயும் போனதில்லை. இதான் பஸ்ட் டைம். இப்படி விமானத்துல பயணம் செய்யறது, தீவுக்கு போறது, அதோட தனியா ஒரு ஜென்ஸ் கூட போறது. எல்லாமே பஸ்ட் டைம்” என்று குதூகலித்தாள்.
“எல்லாமே பஸ்ட் டைம் என்றது எனக்கு சௌகரியமா தான் இருக்கு” என்றவன் பேச்சில், சந்தோஷ் அர்த்தம் பொதிந்து சிரிக்க, அர்னவ் தாடை இறுகியது.
“சந்தோஷ் அந்த ஆடியோவையாவது கட் பண்ணி தொலை.” என்றான்.
“டேய்… ஜாலியா பேசறதை ஒட்டு கேட்டுட்டு, அவங்களை பார்த்து டைம் பாஸ் பண்ணலாம் அர்னவ்.” என்றான்.
அர்னவோ “யூ இடியட்… அவன் கண்டுபிடிச்சா, எங்க பிரைவேஸியை பைலட் ஸ்பாயில் பண்ணறாங்கன்னு கேஸ் போடலாம். எப்படி ஒரு துணி கடையில் உடை மாத்தற இடத்துல சிசிடிவி வச்சி பிரைவேஸியை பார்க்கறது தப்போ. அதே போல இங்க நீயா இப்படி கண்காணிச்சு பண்ணறது தவறு. அட்லீஸ்ட் ஆடியோவாது கட் பண்ணி தொலை. எனக்கு இரிட்டேட் ஆகுது மேன்” என்று எரிந்து விழுந்தான்.
சந்தோஷோ சோகமாய் வீடியோ மட்டும் விட்டு வைத்து ஆடியோவை மியூட்டில் போட ஒலியை முற்றிலும் குறைத்தான்.
அர்னவ் ஏதோ நிம்மதியானவன், தன் விமானம் ஓட்டும் லயிப்பில் மூழ்கியிருந்தான்.
தானாகவே ஜீவன்-பாவனா இருக்கும் வீடியோவை, பார்ப்பதை தவிர்த்தான்.
சந்தோஷ் மட்டும் அடிக்கடி ஜீவன் பார்வையும் வழிசலையும் கண்டு சிரித்தான்.
சற்று நேரம் சென்றதுமே அர்னவ் விமானம் ஓட்டுவதில் முற்றிலும் மூழ்கியிருக்க, சந்தோஷோ வீடியோவை பார்த்து பின்னால் திரும்பி பார்த்து தலையை சொரிந்தான்.
“மச்சி… ஏதோ சரியில்லை.” என்றான்.
அர்னவோ “என்ன சரியில்லை” என்றான்.
“எனக்கென்னவோ அந்த பொண்ணு இவனோட ஜாலியா இருக்க வந்த மாதிரி தெரியலை.” என்றான் சந்தோஷ்.
அர்னவ் திரும்பாமலேயே, “உன்கிட்ட வந்து அந்த பொண்ணு சொன்னாலா? முதல்ல வீடியோவை ஆப் பண்ணு” என்று அணைத்து விட்டான்.
சந்தோஷ் சலித்தபடி, “ஏன்டா” என்று சலித்துக்கொள்ள, முதல்ல வேலையை பாரு.” என்று எதிரே சுட்டிக்காட்டினான்.
“போடா வானம் மேகம் பறவை இதெல்லாம் தினம் தினம் பார்த்து போரடிக்கு. இந்த கதை எழுதறவன் கவிதை எழுதறவனுக்கு சலிக்காம இருக்கலாம். எனக்கு இந்த வெள்ளை ஸ்கிரின் சலிப்பாகுது. நான் ஒன்னும் உன்னை மாதிரி இல்லை” என்று குறைப்பட்டான்.
அர்னவோ “செய்யற வேலையை ரசிச்சு பண்ணுமேன். எப்பவும் சலிக்காது. அங்க பாரு மேகத்துக்கு நடுவுல மூழ்கி நம்ம விமானம் போகுது. எந்த சாமி படத்துலையும் இந்த மாதிரி மேகத்துக்குள்ள வானத்துல தான் இறைவன் இருப்பதா காட்டறாங்க. அப்படி பார்த்தா கடவுளுக்கு மிக அருகில் நாம தினம் தினம் வந்துப்போறோம் சந்தோஷ்” என்றான்.
“போடா… எனக்கு விமானத்துல ஏறினா கண்ணுக்கு தெரியற ஒரே கடவுள் எமதர்மர் தான். பக்குபக்குனு இருக்கு. எப்ப பிளைட் லேண்டிங் ஆகும்னு தான் தோன்றும்.” என்றதும் அர்னவ் சிரித்தான்.
அச்சத்தம் பாவனா செவியை தீண்ட, பைலட் இருக்குமிடம் எட்டி பார்த்தாள்.
வெள்ளை வெளிறென உடையில் அர்னவ் சிரிப்பது சைட் வியூ மட்டும் தெரிய, அவன் புன்னகை கண்டு அவளது புன்னகையும் காரணமின்றி விரிந்தது.
– தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Bhavana jeevan oda plan theriyama mattikita nu eppo theriya pogutho
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍
Epdi vellanthiya erukkale
Super innocent girl bavana. Intresting