Skip to content
Home » ருத்ரமாதேவி – 1

ருத்ரமாதேவி – 1

     எல்லா திசைகளிலும் ஆயுதங்கள் மோதல் சத்தம்.  போர் வீரர்கள் தங்கள் வீரத்தை எதிரியை அழிப்பதில் காட்டிக் கொண்டு இருந்தனர். எங்கு நோக்கிலும் ரத்த வெள்ளம்.

     இதுவரை எத்தனை உயிர் பலியானது, எத்தனை பேர் அங்கம் இழந்தனர் என்று கணக்கில்லாமல்  தன் கையில் உள்ள வாளை மின்னலென  சுழற்றியபடி முன்னேறிச் சென்று கொண்டிருந்த ருத்ராவை, ருத்ராஆஆ, தேவீஈஈ, இளவரசிஈஈ என்ற குரல்கள் நாலாபுறமும் ஒலிக்க, தன்னை தாக்க பின்னால் ஒருவன் வருகிறான் என்று உணர்ந்த நொடி பொழுதில் திரும்பி அவன் கழுத்தில்  வாளை இறக்க, இத்துனை நேரம் நடந்த சண்டையில் பல உடல்களை தாக்கியதால் அவள் வாளின் கூர் மழுங்கி அவனின் கழுத்து முழுவதும் விழாமல் தொங்க, முட்டிபோட்டு மடங்கி கீழே விழுந்து, தலையில்லா அவளை பார்த்தவாறே   வெற்றிச் சிரிப்புடன் உயிர் துறந்தான்.

     அவனின் விஷம் தடவிய வாளால் அவளின் தலை துண்டிக்கப் பட, அம்மாஆஆஆ என்று தன் கழுத்தை பிடித்தவாறு அலறி அடித்து எழுத்தாள் ருத்ரா‌.

     அவளின் அலறல் சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து கையில் கரண்டியுடன் ஓடி வந்தார் அவளின் தாய் மகாதேவி. 

“என்னடி ஆச்சு? ஏன் அந்த அலறல் அலறுன?” என்ற தன் தாயின் குரல் காதில் எங்கே விழுந்தது.

தன் கழுத்தை பிடித்துக் கொண்டு, வியர்வை வியர்த்து கொட்ட, அதிர்ச்சியில் உறைந்து இருந்த ருத்ராவை உலுக்கிய மகாதேவி, “ஏய் ருத்ரா. அம்மாவ பாரு”, என்று தன் பக்கம் அவளை திருப்ப, 

அவள் அதிர்ச்சியுடனேயே, ” அம்மா, அம்மா, என் தலை, என் தலை என்று உலற, அவள் ஏதோ கனவு கண்டு பயந்துள்ளாள் என்று உணர்ந்து,

“ஒன்னும் இல்லை டா, ஒன்னும் இல்லை. இங்க பாரு. அம்மாவ பாரு” என்றவாறே தன் புடவை முந்தானையால் அவள் முகம் துடைத்து, முதுகை தடவி ஆசுவாசப் படுத்தினார்.

சற்று நேரத்தில் நிகழ் காலத்திற்கு வந்த ருத்ரா, தன் தாயின் இடுப்பை கட்டிக்கொண்டு, “அம்மா பயங்கர கனவுமா. ஏதோ அரண்மனை  மாதிரி இருந்துச்சு. நான் வீராவேசமா சண்டை போட்டுக் கொண்டு இருக்கேன். பின்னாடி இருந்து ஒருத்தன் என் தலையை வெட்டிட்டான்மா” என்று தேம்பி அழுதாள்.

“ஏய் ருத்ரா. இங்க பாரேன். அதான் கனவுன்னு சொல்றல, கனவுக்கா இப்படி அழுவாங்க. என் செல்லம் இல்ல. அழக்கூடாது” என்று தலை வருடி விட்டார். 

“விடியல் காலை கனவு பலிக்கும். அப்படினா என் தலையை யாராவது வெட்டிருவாங்களா?” 

“ச்சே என்ன பேச்சு இது. பிறந்தநாளும் அதுவுமா? விடியல் காலை கனவு தான் பலிக்கும். பகல் கனவு பலிக்காது. மணி பாரு. எட்டு ஆகுது. இன்னைக்கு பிறந்த நாள் ஆச்சே கொஞ்ச நேரம் தூங்கட்டும்னு பார்த்தா, கண்ட கண்ட கனவு கண்டு பயந்து, என்னையும் பயமுறுத்தி. ஆள பாரு, எழுத்துரு டி. எழுந்து குளிச்சிட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு போய்டு வந்து அப்புறமா காலேஜ் போ.” 

அவள் எழுந்து குளியலறை நோக்கி செல்ல, அவளை அணைத்து, “பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லம்” என்று உச்சி முகர்ந்து, “இதுல புது ட்ரெஸ் இருக்கு. போட்டுக்கோ. சீக்கிரம்” என்று அவசர படுத்தி அவளை குளியலறையினுள் தள்ளி விட்டு தான் விட்டுவிட்டு வந்த சமையலை தொடர சமையல் அறை சென்றார்.

காலையில் ஜாகிங் சென்று விட்டு, தன் நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார் சதாசிவம். 

“மகா காஃபி!”  என்று குரல் கொடுத்துக் கொண்டே சமையல் அறைக்குள் வந்தவர், தன் காதல் மனைவியின் கவலை முகம் கண்டு, “என்ன ஆச்சு மா, ஏன் முகம் கவலையா இருக்கு. குட்டிமா இன்னும் எழுந்திரிக்கலையா?” என்றார் மனைவியின் முகம் தாங்கி.

“இப்ப தான் எழுந்து குளிக்க போனாங்க. ஏதோ கெட்ட கனவு கண்டு பயந்து அலறி எழுந்தா. அதான் கவலையா இருக்கு” என்று கூறியவாறே காஃபி கலந்து அவரிடம் கொடுக்க.

தன் கை வளைவில் வைத்துக் கொண்டே காஃபியை பருகினார். பருகிய படியே, “கனவு தானே, அதுக்கு ஏன் இப்படி கவலை படுற, ஒன்னும் ஆகாது” என்று தன் மனைவியை சமாதானப் படுத்தினார்.

குளித்து கிளம்பி வந்த ருத்ரா தன் தாய் தந்தை இருக்கும் நிலை கண்டு, “க்கூம்” என்று தன் தொண்டையை செருமி தன் இருப்பை உணர்த்த, 

மகாதேவி வெட்கப் பட்டுக்கொண்டு அவரிடம் இருந்து சற்று விலக முயற்சித்தார். முயல மட்டுமே முடிந்தது. விலக முடியவில்லை. 

மனைவியை அணைத்தவாறே திரும்பி தன் மகளை பார்த்து, “வா குட்டிமா”, என்று அழைத்து, அவளையும் அணைத்து, “ஹேப்பி பர்த்டே மை டியர் ஏஞ்சல்” என்று உச்சி முகர்ந்தார்.

இருவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, “நான் கோயிலுக்கு போய்ட்டு பத்து நிமிடத்தில் வந்துடுறேன். வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம் சதா” என்று கூறி கிளம்ப, 

“ஏய் வாலு, எத்தனை தடவை செல்லுறேன். அப்பாவ பேர் சொல்லி கூப்பிட கூடாதுன்னு” என்று அவள் காதை வலிக்காமல் திருக, 

“அச்சோ அம்மா காது வலிக்குது” என்று நடித்து அவரிடம் இருந்து விலகி, “சரி மகா இனி பேர் சொல்லி கூப்பிட மாட்டேன்” என்று அந்த இடத்தில் இருந்து ஓடினாள்.

“ஏய் இதோ வாறேன்” என்று அடிக்க ஓடிய மனைவியை இழுத்து, “நீ எங்கடி போற என் காலை கோட்டாவ கொடுத்துட்டு போ” என்று அவள் இதழ் காண,

“அவ பேர் சொல்லி கூப்பிட்டுட்டு  ஓடுறா, அவளை திட்டாம என்னை புடிச்சி வைச்சிகிட்டு” விடுங்க என்று வெட்கத்தில் சினுங்க,

மனைவியின் சினுங்களில் மேலும்  மயங்கி தான் கேட்டதை வாங்கிய பிறகே குளிக்க சென்றார். 

அவர் குளித்து தன் அலுவலகத்திற்கு தயாராகி வரவும், ருத்ரா கோயிலில் இருந்து வரவும் சரியாக இருந்தது.

மூவரும் அமர்ந்து காலை உணவை பேசிக்கொண்டே முடித்தனர். மகாதேவி அவளுக்கும் அவளின்  நண்பர்களுக்கும் மதிய உணவை கட்டித்தர, “அம்மா எல்லாரும் ட்ரீட் கேட்டாங்க. நீங்க என்னன்னா டிபன் பாக்ஸ் கொடுத்து அனுப்புறீங்க. காசு கொடுங்கமா. நா வெளியே வாங்கி கொடுத்து விடுகிறேன்” என்றாள். 

வெளியே சாப்பிடுவேன் என்றதும் அவளை முறைத்த மகாதேவி, “அதெல்லாம் வெளியே எதுவும் வாங்கி சாப்பிட வேண்டாம். இதுல வெஜிடபிள் பிரியாணி இருக்கு. இதுல சப்பாத்தி பன்னீர் பட்டர் மசாலா இருக்கு. அப்புறம் எல்லாருக்கும் புடிச்ச ஸ்வீட் ரசகுல்லாவும் செஞ்சு வெச்சிருக்கேன்”. “இது பத்தாதுன்னா சொல்லு வேற எதுவும் செய்து தருகிறேன்” என்றார். 

“இவ்வளவையும் நான் எடுத்துட்டு போகணுமா. போ மா. நான் காலேஜ்க்கு போறேன்னா, இல்ல ஹோட்டல் நடத்த போறேனா” என்று சலித்துக் கொண்ட ருத்ராவை பார்த்து, 

“என்னவோ நீ தூக்கிட்டு போற மாதிரி அலுத்துகுற.  இன்னைக்கு அப்பா தானே உன்னை கார்ல கொண்டு வந்து விட போறாரு. அங்க போனதும் உன் ஃபிரண்ட்ஸ் வந்து எடுத்துக்க போறாங்க. நீ ஒன்னும் கவலைப்படாதே என்றார்.

“என்னமோ போங்க” என்று தன் கல்லூரிப் பையை எடுத்துக்கொண்டு கிளம்ப, 

இரண்டு பேரும் அம்மா பொண்ணு மாதிரியா பேசுறீங்க. அக்கா தங்கை போல் சண்டை போட்டுகுறீங்க என்று இருவரிடம் சொல்லிவிட்டு, “சரி நாங்க கிளம்புறோம் நீ ஜாக்கிரதையாக இரு” என்று விட்டு இருவரும் காரில் கிளம்பினர். 

ருத்ரா ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம். தன் தாய் மகாதேவியின் முகச்சாயல். வட்ட முகம். நல்ல நிறம். கருமையான இடை வரை நீண்ட வளைவு முடி. வில்லை போல் புருவம். சிரித்தால் சின்னதாய் குழி விழும் குண்டு குண்டு கன்னம். வண்ணச் சாயம் எதுவும் பூசாமலேயே நிறத்திலும் மென்மையிலும் பன்னீர் ரோஜா போல் மதுரமான அதரம். முத்துக்களை அடுக்கி வைத்தார் போல் வரிசையான பற்கள். சங்கு கழுத்து. இன்னும் கீழே சென்றால், 

பெண்ணே உந்தன் மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி.

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி 

வைரமுத்துவின் பாடல் வரிகள் ருத்ராவிற்கும் கனகச்சிதமாக பொருந்தும். 

தோழியர் அவளுக்கு வைத்த  செல்லப் பெயர்கள் தக்காளி, பன்னு, ரசகுல்லா என்று தோன்றும் பெயர் எல்லாம் வைத்து கூப்பிட, தோழர்கள் தாஜ்மகால் என்பர். ( ஐம்பது கிலோ வாம் )

சதாசிவம் – மகாதேவி இவர்களின் ஒரே செல்ல மகள். 

பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு. 

இரண்டாம் செமஸ்டர் இன்று தான் ஆரம்பம் ஆகிறது. தன் பிறந்த நாளில் கல்லூரி திறப்பதில் பாதிக்கு பாதி தான் மகிழ்ச்சி. 

ஏன் என்றால்…..

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

2 thoughts on “ருத்ரமாதேவி – 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *