அத்தியாயம்-13
இன்றைய விடியலில் என்னவெல்லாம் ரோதனை தரலாமென திட்டம் தீட்டியே எழுந்தான் விக்ரம்.
அவன் எழுந்த போது அவ்வறையில் ஹரிணி இல்லை.
‘ஒருவிதத்தில் மாமனார் வீடு சொகுசுனு ஏன் சொல்லறாங்கன்னு இப்ப தான் தெரியுது. எந்திரிடானு சொல்லி டார்ச்சர் பண்ணறதில்லை. சீக்கிரம் குளி சாப்பிடு பாத்திரம் விளக்கணும்னு பிரஷர் இல்லை. இதுல மீனா கறியானு நம்ம வீட்ல ஒன்னு வாங்குவாங்க. இங்க எல்லாமே தட்டுல இருக்கு. நிம்மதியா சாப்பிடலாம்.
முக்கியமா நாம இப்படி தான் இருக்கணும்னு ரூல்ஸ் போடறதில்லை. ஜாலியா தான் இருக்கு.’ என்று மெத்தையில் உருண்டான்.இவனை போனில் கூட விடாமல் தொல்லை செய்து எழுப்பி விடுவேனென்று ரவிபிரகாஷ் நினைத்திருப்பாரோ என்னவோ, ”ஏன்டா… இன்னுமா எழுந்துக்காம இருக்க. மாப்பிள்ளைன்னு மரியாதை வேண்டும்னா நேரத்துக்கு போய் கடமையை முடிக்கணும். அதைவிட்டுட்டு தூங்கிட்டு நேரம் கழிச்சு எந்த காரியம் செய்தாலும், வரவர மாமி கழுதை போல தேய, மரியாதை மொத்தமா போயிடும். பெத்தவன் என்ற முறைக்கு சொல்லறேன்” என்று பேசிவிட்டு அணைத்தார்.
“எங்க போனாலும் நான் நிம்மதியா இருக்க கூடாதுனு போன் பண்ணி வார்ன் பண்ணறார். முதல்ல இவர் நம்பரை பிளாக் பண்ணணும்.” என்று போர்வையை தூக்கி எறிந்து பல் விலக்க சென்றான். குளித்து முடித்து வரவும், மணி ஒன்பதானது.
விக்ரம் கீழே வரும் போது, நளபாகத்தை தயார் நிலையில் வைத்து, மாலதி வரவேற்றார். மகளை அழைத்து சேர்ந்து உணவருந்த கூற, காபி சாப்பிட்டு முடித்து குடிப்பதாக தெரிவித்தான்.
அதனால் ஹரிணி விக்ரம் கமலகண்ணன் மூவரும் உணவை சாப்பிட, ஹரிணி முனங்கிக்கொண்டே விழுங்கினாள்.
காலையிலயிருந்து பசிக்குதுனு புலம்பறேன். இவன் வந்ததும் சாப்பாடு. எல்லாம் என் நேரம்.’ என்றவள் தந்தையிடம், “அப்பா… உங்க மெடிக்கல் பைலை நான் பார்க்கணும்.” என்று கேட்டாள்.
கமலகண்ணணனோ சாதாரண வயிற்று வலிம்மா. அந்த டாக்டர் கடன்காரன் இஷ்டத்துக்கு மாத்திரையை அள்ளி தந்துட்டான். மத்தபடி ஒன்னுமில்லைம்மா. அப்பா வேற மாத்திரை சரியா போடாம அப்படியே வச்சிட்டேன். அதான் நீ பார்க்க நிறைய தெரிந்தது.” என்று சமாளிக்க பார்த்தார்.
ஹரிணிக்கு தந்தை பேச்சில் நம்ப முடியாது, அன்னையிடம் ஏதாவது சொன்னால் பயப்படுவாரென ‘இல்லைப்பா.. ஒருமுறை நான் பார்த்தா தான் திருப்தி” என்று முடித்தாள். கமலகண்ணனோ “சரிடா.. சாப்பிட்டு வா. பைலை காட்டறேன்” என்றார். அதற்குபிறகு ஹரிணி ஓரளவு நிம்மதியடைந்தாள்.
சாப்பிட்டு ஹரிணியும் அவள் தந்தை கமலகண்ணனோ அவரது அறைக்கு சென்று மருத்துவ பைலை பார்வையிட்டார்கள்.
ஏற்கனவே கமலகண்ணன் முன்பு சாதாரணமாக பார்த்த மருத்துவ அறிக்கையை மட்டும் மகள் கண்ணிற்கு காட்டினார். தற்போது எடுத்த எல்லா மருத்துவ அறிக்கையும் மறைத்து வைத்திருந்தார்.
ஹரிணி பழைய பைலை பார்வையிட்டு ‘அப்பாடா அப்பாவுக்கு மருந்துலயே தீரும்’ என்றாலும் தந்தை தற்போது எடுத்தவையை காட்டவில்லையே என்று கேட்க, அவரோ தொலைச்சிட்டேன் மா. கிடைச்சதும் வாட்சப்ல அனுப்பறேன்’ என்றார்.
அவளுக்கு லேசான சந்தேகம் துளிர்த்தாலும், தன்னால் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கவனமாய் இருந்திட நினைத்தாள்.
அதனால் விக்ரம் என்ன அட்டூழியம் செய்தாலும் இங்கே அமைதிக்காத்திட முடிவெடுத்தாள்.
எப்படியும் புகுந்தவீட்டில் மாமனாரின் ஆதரவு ஹரிணிக்கு தானே.
அதனால் அங்கு சென்று விக்ரமை ஒரு கை பார்க்க முடிவெடுத்தாள். ஓரளவு அன்றைய தினம் சுமூகமாக தான் சென்றது. நடுவில் வீட்டிலேயே அடைப்பட்டு இருக்க போரடிப்பதாக கூறி, அஜயை பார்த்துவிட்டு வருவதாக ஊர்சுற்ற பைக்கில் பறந்தான் விக்ரம்.மற்றவர்களும் பெரிதாக தடுக்கவில்லை. விக்ரமின் நேரமோ என்னவோ, அஜய் அவனது திருமண விஷயமாக வெளியே சென்றியிருக்க, போன வேகத்திலேயே மாமனார் வீட்டிற்கு வந்தான்.
இவன் திரும்பி வந்த சமயம், ஹரிணி மாடியில் சென்னைக்கு செல்வதற்காக உடைய அடுக்கி வைத்தாள். மாலதியும் பக்கத்து கடைக்கு சில பொருட்களை வாங்க சென்றியிருக்க, “வீட்டை திறந்து போட்டுட்டு எல்லாம் எங்க போனாங்க. திருட வந்தா திருடனுக்கு வசதியா பீரோ சாவி கூட தொங்குது.” என்று பீரோவை பூட்டுவதற்காக கீழேயிருந்த அறைக்கு வந்து சாற்றினான்.
இதே அறையில் ஹரிணி கழுத்தை நெறித்து ‘எதுக்காக என்னை கல்யாணம் செய்ய சம்மதிச்ச?’ என்று ஆங்காரமாய் கேட்டான். அன்றைக்கு கல்யாணத்திற்கு சம்மதிக்க ஹரிணி கூறிய காரணம் அவனுக்கு திருப்திக்கரமாக இருந்தது.இதையே அசைப்போட, அறையில் இவன் இருப்பதை அறியாமல் வினோதினி வந்தாள்.
இவன் அசட்டையாக திரும்பும் நேரம் அவளோ கதவை தாழிட்டு சுடிதாரின் மேல் டாப்பை கழட்டியிருந்தாள்.
விக்ரமிற்கு பகீரென்ற உணர்வு. “ஏய் வினோதினி…. நான் இங்க இருக்கேன்.” கத்தியவன் பார்வையை இறுக மூடி தலை குனிந்திருந்தான்.
விக்ரம் குரலென்றதும், சட்டென உடையை எடுத்து மேலே மறைத்தாள்.
“நீ.நீங்க எங்க இங்க?” என்று அங்கிருந்த அன்னையின் சேலையை தன் மீது சுற்றினாள்.
மெதுவாக அவள் எதையோ அணிந்து உடலை மறைத்து விட்டாளேன்றதும், “அறிவிருக்கா இல்லையா. முன்ன இந்த வீட்டுக்கு யாரும் ஆம்பள பசங்க வரமுடியாது. உங்கக்கா நீயும் பொண்ணுங்க. இப்ப நான் உங்க அக்கா புருஷன்னு வீட்ல நடமாடுவேன்ல. கதவை தாழ்பாள் போடும் போது கொஞ்சம் உள்ள யார் இருக்கா என்னனு பார்க்க மாட்ட.? நான் வெளியே போனதும் கதவை லாக் பண்ணிக்கோ.” என்று கத்தினான்.
அங்கே வினோதினிக்கு பேச்சு வரவில்லை.
அக்கா கணவரான விக்ரம் முசுடு. ஏதோ காரணத்தால் அக்காவோடு எதார்த்தமான முதல் சந்திப்பில் ஏதோ அசிங்கமான வார்த்தையால் திட்டி இருக்க, அவர் பெண் பார்க்க வந்தப் பொழுதும், அக்கா மறுத்திருக்கின்றாள்.பின்னர் அக்காவே மீண்டும் மணக்க சம்மதித்துவிட்டாள்.
திருமணத்திற்கு சம்மதம் என்று சொன்னதற்கு, வீடு தேடி வந்து ருத்ரதாண்டவம் ஆடினானே. அந்த காட்சியில் பயந்தே போனாள் வினோதினி.இதில் அக்கா கணவரான விக்ரமிற்கு ஏதோ லவ் பெயிலியராக இருக்குமென்ற வரை அறிந்துக் கொண்டாள்.
அக்காவின் கழுத்தை நெறித்த காரணத்தால் விக்ரமை கண்டால் வினோதினிக்கு பிடிக்காது. ஆரத்தி கரைத்து பரிசு வாங்கிய தருணமெல்லம் கூட ‘இவனுக்கு ஆரத்தி ஒன்னு தான் குறைச்சல்’ என்று திட்டியபடி எடுத்தாள்.இன்று அறையில் உடை மாற்றும் சமயம் உள்ளே இருப்பானென்று அறியாது கதவை தாழிட்டதும், டாப் கழற்றியதும் பதறி கத்திவிட்டானே. இதே அறையில் குளியலறை பக்கமாக ஒளிந்து கூட தன் கோலத்தை ரசித்துவிட்டு, எதர்ச்சயமாக காண்பது போல நழுவியிருந்தால் கூட வினோதினிக்கு தெரியாது. ஆனால் விக்ரம் கத்தி வெளியேறியதில் நடுக்கத்துடன் நின்றியிருந்தாள்.
வேகவேகமாய் உடைமாற்றி, முகத்தில் நீரடித்து தன்னை சமன் செய்து கதவை நடுக்கத்துடன் திறந்தாள்.
ஹாலில் விக்ரம் தலையை தாங்கி பிடித்தவன், இவள் கதவை திறக்கவும், மீண்டும், “அட்டாச் குளியலறை பாத்ரூம் இப்படி இருக்கும் போது, நீ பாட்டுக்கு கதவை தாழிட்டு ரூம்ல யாராவது இருக்காங்களா இல்லையானு பார்க்காம டிரஸ் மாத்தாத. ஒரு நிமிஷம் நெருப்புல நின்றது போல ஆகிடுச்சு. இன்னொரு முறை கவனமில்லாம இப்படி நடக்காம பார்த்துக்கோ.” என்றான்.வினோதினியோ எதுவும் பேசாமல் தலையாட்டினாள்.
“அப்பறம் என்னை பார்த்தா பேயை பார்த்த மாதிரி பார்க்காத. ஹரிணியை விட சின்ன பொண்ணு தான நீ. அவளுக்கு எப்படி தங்கையோ, எனக்கும் நீ தங்கை மாதிரி தான். புரிதா.” என்று கேட்க அதற்கும் தலையாட்டினாள்.
“அவ எங்க?” என்று கேட்க, “நா..நாளை மறுநாள் நீங்க போறதால, மாடியை நீட் பண்ணிட்டு இருக்கா.” என்று கையை மேலே சுட்டிக்காட்டி பேசினாள்.
‘சரியோ தப்போ, சண்டையோ வாதமோ ஹரிணி இருக்குமிடம் செல்வது சரியென்று அவளை தேடி மாடிக்கு சென்றான். அவள் தானே மனைவி என்று.
வினோதினி நகம் கடித்தபடி, அங்கே அன்னையை தேடி சுழன்றாள்.
ஹரிணியோ, “ஒரு வாரம் இருக்க டிரஸ் எடுத்து வைக்க சொன்னா ஒரு மாசத்துக்கு எடுத்துட்டு வந்திருக்கான். இதுல ஒரு டிரஸ்ஸாவது அடுக்கி வச்சியிருக்கானா? எல்லாம் திணித்து வெஜ்ரோல் மாதிரி சுருட்டியிருக்கான்.” என்று முனங்கி சட்டையை மடித்து ஐயர்ன் செய்து நீட்டாக அடுக்கினாள்.
“பார்டா… இதெல்லாம் பண்ண தெரியுமா உனக்கு. பரவாயில்லை.. ஆபிஸுக்கு போறப்ப துணியை வெளியே ஐயர்ன் பண்ண கொடுக்க தேவையில்லை.” என்று வந்தான்.
ஹரிணியோ எதுவும் பேசாமல் ஐயர்ன் செய்வதில் மும்முரமானாள். அதென்னவோ இவன் இல்லாத நேரம் இவனுக்கென்று சட்டையை ஐயர்ன் செய்த கைகள், இவனை நேரில் கண்டதும், இவனுக்கு நான் செய்வதாக காட்டிக்க வேண்டுமா என்ற ரீதியில் அந்த துணியை ஒதுக்கிவிட்டு அவளது சுடிதாரை ஐயர்ன் செய்தாள்.
பாதிக்கு சேலை அடுக்கியிருந்தவள், சுடிதாரை ஐயர்ன் செய்யவும், அதில் பார்வையிட்டான். பெரும்பாலும் அடர் நிறமில்லாமல் லைட் கலரிலேயே உடைகள் இருந்தது. சும்மாயில்லாமல் விக்ரமோ “அன்னிக்கு மழையில நனைஞ்சப்ப ஒரு வெள்ளை சுடிதார் போட்டிருந்தியே.. அதுல சேறு செகதி கறை போயிடுச்சா இல்லையா?” என்றான்.
ஹரிணியோ இருக்கின்ற கடுப்பில், “வாழ்க்கையே பெரிய கறையில சிக்கிட்டேன். இப்ப டிரஸ் ஒன்னு தான் முக்கியமா?” என்று, அன்று அவன் பேசிய வார்த்தையில் முகம் கடுகடுக்க நின்றாள்.
அவளால் அவன் இவளை பார்த்து பேசிய வார்த்தை மறக்க முடியுமா?
“அய்யோ.. பெரிய கறை தான். வாஷிங் பவுடர் நிர்மா… வாஷிங் பவுடர் நிர்மா.. அந்த பவுடர் வாங்கி உன்னை நீயே தேய்ச்சு ஓடுற ஆத்துல முங்கி எந்திரி” என்றான்.
“இங்கபாரு நான் உன் பேச்சுக்கு வரலை. நான் பாட்டுக்கு உங்க வீட்டுக்கு போக டிரஸ் எடுத்து வைக்கறேன்” என்று கோபமாக செய்யும் வேலையில் தொந்தரவு செய்யாதே என்றாள்.
விக்ரமோ, “அதெப்படி என்னை வேண்டாம்னு சொல்லாம கல்யாணத்துக்கு சம்மதிச்சு கட்டிக்கிட்ட. நான் இந்த தொந்தரவு செய்யலைன்னா எப்படி. உன்னால தான் இப்ப என் மனசு அப்படியே நெருப்பு குழம்புல போட்டு வாட்டி வதக்குது. ” என்றான்.
‘ஆமா.. இவர் பெரிய லாவா மன்னவா. நெருப்பு குழம்புல வாட்டறாங்க. எங்கம்மா சமைக்கற குழம்பை நல்லா திண்ணுட்டு திண்ணுட்டு அப்பா எதிர்ல காலாட்டி டிவி பார்க்கான். பெரியவர்னு மட்டு மரியாதை இல்லை.’ என்று மனதோடு பொறுமினாள்.
விக்ரமோ ஹரிணியாக அடுத்து சண்டைக்கு சிலிர்த்திடவில்லை என்றதும் போனை எடுத்து சமூக வலைத்தள பக்கத்திற்கு சென்று பொழுதை கழித்திட முனைந்தான்.
நடுநடுவே வினோதினி நினைப்பு வந்தது. தான் உள்ளே இருப்பதை அறியாமல் கதவை சாற்றிவிட்டு, பதறி நின்றவளது கோலம், லேசாய் பயத்தை தந்தது.
தவறோ சரியோ இங்கே யாரும் ஆராய்ச்சி செய்வதற்கு முன், நான் ஏன் அந்த ரூம்ல இருந்தேன் என்ற சந்தேகம் தான் முளைக்கும். அதுவும் தனக்கும் ஹரிணிக்கும் இங்கே மாடியறை தந்திருக்க, கீழேயிருந்த அறையில் நின்றது, அதுவும் உடைமாற்றும் சமயம் தற்செயலால் இருந்தாலும் வினோதினி அதை எப்படி எடுத்திருப்பளோ? பள்ளியில் படிக்கும் சிறு பெண் வேறு.தனக்கு இங்கே மாமானார் மாமியார் தவிர வேறு யாரிடமும் நல்ல பெயரும் இல்லாத பட்சத்தில், வினோதினி தன்னை முகத்தில் உமிழாத குறையாக நடந்திருக்க, இனி வாழ்வு எப்படி மலருமென பெரிய சந்தேகத்துடன் வானத்தை கவனித்தான்.
அவளுக்குமே ‘அரை மனதாய் தானே விக்ரம் அறிமுகம் கிடைத்துள்ளது.
ஹரிணியுடனான வாழ்க்கை ஏன் பிணைக்கப்பட்டுள்ளது என்று சோர்வாய் தளர்ந்தான்.
-தொடரும்.

Super sis nice epi 👌😍❤️ vinodhini ku eppo vikram mela konjam mariyadhai vandhirukum nu nenaikuran 🤔 eppdiye sanda pottutu erundha eppdi renduperum utkarndhu pesanum nu thonudhu parpom 🧐🤔
Wow super super Vikram. Vino now should realised the charecter of Vikram. Vikram loves harini that’s y he play with her. Very intresting sis.