அத்தியாயம்-15
“மோனிகா… லவ் யூ மோனிகா.. பேபிம்மா…” என்று அலறாத குறையாக செவியில் பாடல் தாக்கவும், ஹரிணி எரிச்சலுடன் கண்ணை திறந்து பார்த்தாள்.
அவளுக்கு எதிராக 32 இஞ்ச் டிவியில் பாடல் அலறியது. எதிரேயிருந்த சோபாவில் விக்ரம் அதே பாடலை கத்திக்கொண்டு கையில் ஒரு பௌலில் நூடுல்ஸ் சூடாக சாப்பிட்டு உறிந்துக் கொண்டிருந்தான்.
ஹரிணி எழுந்ததை அவன் கவனித்தது போல தெரியவில்லை. தனது போனில் வேறு ரீல்ஸையும் பார்த்து சிரித்தான்.
‘டிவி அலறுது, இதுல போன்ல ரீல்ஸ் வேற. ஏதாவது ஒன்னை பார்க்க எதுக்கு இரண்டையும் போட்டு விடணும். சே.’ என்று முனங்கியவள், போனில் நேரத்தை காண அதில் எட்டு முப்பதென காட்டியது.
இவன் ஹாலில் வந்ததால் அவள் அறைக்கு சென்று லைட்டை போடவும், மெத்தையில் போர்வை சுருட்டி வீசிவிட்டு மெத்தையில் ஒரு தலையணையும் கீழே ஒரு தலையணையும் பாதி போர்வை தரையில் என்று அப்படியே எழுந்து வந்ததாக பறைச்சாற்றியது.
லேசாக கதவை தாழிட்டு கொண்டு வந்த பெட்டியை அறைக்குள் எடுத்து வந்தாள்.
அங்கிருந்த கப்போர்டில் பாதி காலியாக தான் இருந்தது. ஏதோ பெயருக்கு சில பொருளை வைத்து பூட்டியிருப்பதை கண்டதும், தனது உடைமையை அங்கே வைக்க ஆயத்தமானாள்.
பத்து பதினைந்து நிமிடத்தில் துணியை அடுக்கி முடித்தாள். ஏற்கனவே பெட்டியில் அழகாக அடுக்கி எடுத்து வந்ததே.
ஏனோ அவன் மெத்தையை அசிங்கமாக காட்சியளிக்க அதை அப்படியே விடுத்து செல்ல மனமின்றி ஒழுங்குப்படுத்தினாள்.
கொஞ்ச நேரம் சில பொருட்களை மட்டும் இடம் மாற்றினாள்.
கிச்சனில் துடைப்பம் இருப்பதை கவனித்ததால், அதை எடுக்க சென்றாள்.
பேமிலி பேக் நூடுல்ஸில் நாலு இருக்கும். அவனுக்கு இரண்டு போட்டு விழுங்கியிருக்க, மற்ற இரண்டு கவர் பிரித்தபடி அங்கே இருந்தது. தனக்கு மட்டும் சமைத்து சாப்பிடும் செல்ஃபிஷ் என்று துடைப்பம் எடுத்துக்கொண்டு அறையும் ஹாலையும் கிச்சனும் பெருக்கினாள். அதுவரை விக்ரம் நூடுல்ஸை சாப்பிட்டபடி தற்போது இன்ஸ்டாகிராம் பார்த்தான்.
முதல்ல youtube இப்ப இன்ஸ்ட்ராகிராம்.’ என்று லேசாக வீட்டை துடைத்துவிட்டாள்.
நான்கு நாட்களுக்கு மேலாக வீட்டில் ஆட்கள் இல்லை என்றாலும் தூசி படிந்ததாக அவளுக்கு தோன்றியது.
வீட்டை தூய்மை செய்தப்பின் மணி ஒன்பது இருபது காட்டவும் குளித்து முடித்து வந்தாள்.
ஊரிலிருந்தே தனக்கானதை சிலது கொண்டு வந்தாள்.
அதில் சோப்பும் பேஸ்ட் பிரஷ் தினசரி இத்யாதிகள் அடக்கம்.
வயிறு பசிக்க அங்கிருந்த நூடுல்ஸை எடுத்து அவன் சமைத்த பாத்திரத்திலேயே நீரை ஊற்றி வேகவைத்தாள். கூடுதலாக மாலதி போகும் போது பச்சை பட்டானி உறித்து வைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு தந்திருந்தனர்.
போனதும் பருப்பு ரசம் வச்சி பட்டாணி பொரியல் வச்சி சாப்பிட்டுப்ப’ என்று கூறியிருக்க, தற்போது அதில் கொஞ்சம் பட்டாணி எடுத்து நூடுல்ஸிலேயே வேகவைத்தாள்.
வரும் போது பிரெட் ஜாம் சீஸ் என்று எடுத்து வந்திருக்க, தனது நூடுல்ஸ் வெந்ததும், அதில் சீஸை மேல அலங்காரம் செய்து, அங்கிருந்த பௌலில் போட்டு முள் ஸ்பூனை எடுத்து வந்தாள்.
விக்ரம் அவளை காணாதது போல திரும்பியவனுக்கு இவ நூடுல்ஸில் என்ன பச்சையா?’ என அவள் காணவில்லை என்று எட்டி பார்த்தான்.
விக்ரமுக்கோ ‘பட்டாணி… சீஸ்… பெப்பர், கொஞ்சம் வெயிட் பண்ணிருந்தா அதுவும் கிடைச்சிருக்குமோ. வர்றப்பவே பிளானோட தான் வந்திருக்கா. இவ கேடி தான்’ என்று அறைக்குள் செல்ல, அவன் அவ்விடம் விட்டு வந்த பொழுது இருந்ததை விட தூய்மையாகவும், மனதிற்கு இதமாகவும் இருந்தது.
‘நாட் பேட். குறுகிய நேரத்துல வீட்டை நீட்டாக்கற வித்தை எல்லாம் கத்து வச்சியிருக்கா’ என்று மெத்தையில் விழுந்தான்.
இன்று அலுவலகம் செல்வதை தவிர்த்துவிட்டான். ஹரிணியாக ஏதாவது பேசினால் கடைக்கு அழைத்து செல்ல தந்தை கூறியிருக்க, அதனால் வீட்டிலேயே பூனை போல சுத்திட முனைந்தான்.
ஹரிணியோ தாய் தந்தைக்கு அழைத்து வீட்டிற்கு வந்துவிட்டதாக கூறினாள்.
“வீடெல்லாம் பிடிச்சிருக்கா?” என்று மாலதி ஆர்வமாய் கேட்க, “அம்மா… என்னை விட்டு தள்ளு. வினோதினி ஸ்கூலுக்கு போயிட்டாளா? அப்பா என்ன பண்ணறார்” என்று நூடுல்ஸை திண்றபடி கேட்டாள்.
“ஆச்சுடி.. ஸ்கூலுக்கு அனுப்பிட்டேன். ரசம் பட்டாணி பொரியல் வச்சி கட்டி கொடுத்துட்டேன். ஏய்.. நீ சமைச்சியா மாப்பிள்ளைக்கு என்ன சமைச்ச?” என்றதும் ரூமை எட்டி பார்த்தாள்.
அவன் படுத்திருக்க, ‘திண்ணுட்டு திண்ணுட்டு தூங்கறான். இதுல இவனுக்கு சமைக்கணும். ஆல்ரெடி அவனே நூடுல்ஸ் சமைச்சி திண்ணுட்டதா சொன்னா அம்மா டின்னு கட்டுவாங்க. இங்க வந்து வீடு கூட்டி, பெருக்கி, துடைச்சு, ரூமை சுத்தம் செய்து, கிச்சன்ல வந்து நானே நூடுல்ஸ் சாப்பிட செய்திருக்கேன். இதை சொன்னா அம்மா என்னை பெருமையாவா பேசும்.’ “நூடுல்ஸ்ல பட்டாணி போட்டு சாப்பிட்டாச்சு.” என்றாள் மொட்டையாக.
“அவ்ளோ பட்டாணியுமா போட்ட” என்று மாலதி கேட்க, “அய்யோ அம்மா… பட்டாணி விலை குறைவுனு இஷ்டத்துக்கு வாங்கி எனக்கும் தள்ளிட்டிங்க. அதுல நூடுல்ஸுக்கு கொஞ்சம், மதியம் சமைக்க கொஞ்சம்னு பிரிச்சிருக்கு. போதுமா.” என்றாள் ஹரிணி.
“இனி தான் சமைக்க போறியா?” என்று மாலதி கேட்க, “அய்யோ… பின்ன காலையில வந்ததே ஐந்து.. ஐந்து முப்பது இருக்கும் தூங்கி எழுந்து சாப்பிட்டுட்டு இருக்கேன். அதுக்குள்ள மதிய சாப்பாடா?” என்றாள்.
”சரிடி.. கோச்சிக்காத வீட்டை கவனி. அப்படியே உன் மாமியார் வீட்டுக்கும் போன் பண்ணி சொல்லிடு.” என்றதும் சரியென்று அணைத்து விட்டாள்.
ராதிகாவுக்கு போன் போடவும், “அத்தை.. வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டோம்” என்றாள்.
“ஆஹ்.. என் பையன் அப்பவே போன்ல சொல்லிட்டான். நீ அப்ப தூங்கிட்டு இருந்தியாமே. அவனா நூடுல்ஸ் போட்டு சாப்பிட்டதா சொன்னான்.” என்றதும், ஹரிணிக்கு லேசாக குற்றவுணர்வு. ஏதாவது தவறாக எண்ணிக் கொள்வார்களோ என்று.
ராதிகா அப்படி தான் பேசியதாகவும் அந்த குரலில் தென்பட்டது. ஹரிணி மறுக்கவோ விளக்கமோ கொடுக்க முடியாமல், அமைதியானாள்.
அதற்குள் ஆபத்பாண்டவன் போல ரவிபிரகாஷ் வந்தவரோ, “ஏன்டி… உன் பையன் பஸ்லயும் நல்லா தூங்கி எழுந்திருச்சு இருப்பான். அங்க போனதும் தேமேனு எந்திரிச்சிருப்பான். அந்தப்புள்ள சரியா தூங்கியிருக்குமா. புது இடம், உன் புள்ள மாதிரி ஒருத்தனை வேற கல்யாணம் பண்ணிட்டு, பயந்துட்டு இருப்பா. லேட்டா எந்திரிச்சா என்னவாம்.” என்றதும், “நான் ஒன்னும் சொல்லலையே.” என்று ராதிகா கூற, “அம்மாடி… அது உன் வீடு. எப்பனாலும் எந்திரி.” என்று கூற லேசான புன்னகை ஹரிணி உதட்டில்.
”ஆமா இப்படியே கொஞ்சுங்க. பையனை மருந்துக்கும் மதிக்க மாட்டா.” என்று ராதிகா புலம்பி நகர்வதும், ரவிபிரகாஷ் அணைத்திட, ஹரிணி தட்டை சிங்கில் போட்டுவிட்டு, கழுவினாள்.
ராதிகா வரும் போது சமைக்கலாமென சில பாத்திரங்கள் வைத்திருக்க, அதில் பருப்பு வேக போட்டு அரிசி கழுவி வைத்து பட்டாணி, இரண்டு தக்காளி எல்லாம் சேர்த்து கலவையாக போட்டு விட்டாள். இரண்டு மூன்று விசில் சத்தம் கேட்டதும், நெய்யில் தாளித்து ஊற்றிட, கமகமவென வாசம் வீசியது.
விக்ரம் அறை வரை வாசம் வரவும் கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான். மணி பன்னிரெண்டு என்று காட்டவும், இப்பவே சாப்பிட உந்தியது.
அன்னை கையால் சாப்பிட்டு பழகியவன், இதுவரை ஹோட்டலில் சாப்பிட்டான். இன்று ஒரு பெண்ணின் கையில் சாப்பிட ஆர்வமாக தான் இருந்தான். அதுவும், மனைவியாக வந்தவள் சமைத்தது.
ஆசையை விட, ஆர்வம் இருந்தது. இந்த லூசு எப்படி சமைத்திருக்கும் என்ற ஆர்வம். ஒரு மனசாட்சியோ, அவளை ‘ஃபக்யூ’னு அசிங்கமா திட்டியிருக்க. அப்படியிருந்தும் கல்யாணம் செய்து, சாப்பாடு போடுறா. ஒருவேளை திட்டின திட்டுக்கு கல்யாணம் செய்து கொல்வாளா?
இப்பலாம் டிரெண்ட் அதான். டைம் பாஸுக்கே புருஷனை கொல்லறாளுங்க’ என்றவனுக்கு திகிலாக இருந்தது.
இப்ப இவ சமைச்சதை சாப்பிடலாமா வேண்டாமா? இந்த யோசனை மண்டைக்குள் உதிக்க, எழுந்தான்.
அவளும் எதிரே வருவதை அறியாமல் மோதும் அளவிற்கு வந்ததும் ஹரிணி சுதாரித்து பின்னகர்ந்து விட்டாள்.
“ச…. சமைச்சிருக்கேன். ஏதோ எனக்கு தெரிந்தது. காலையில் தூங்கிட்டேன்” என்று மட்டும் கூற, “நான் ஒன்றரைக்கு சாப்பிடுவேன்” என்று வேறொன்றும் பேசாமல் தண்ணீர் குடிக்க போனான்.
அவள் சமைத்தது குக்கரில் மட்டும் இருக்க, ‘என்னத்த சமைச்சா தெரியலையே. வாசம் மட்டும் நல்லாயிருக்கு. குக்கர் திறந்ததும் அவ சாப்பிடுவா. அப்ப சாப்பிட வேண்டியது தான். தனியா சாப்பிட்டா ஏதாவது கலந்து வச்சிடுவா. எதுக்கு வம்பு’ என்று அறைக்கே அடைந்துக் கொண்டான் விக்ரம்.
ஹரிணிக்கு ஹாலிலேயே எவ்வளவு நேரம் இருப்பதென்று போரடித்தது.
இருவர் தங்க போதுமான வீடு. ஆனால் வீட்டில் உள்ளவன் பேசாமல் செல்வதால் அங்கே இருக்க ஈகோ தடுத்தது. ஆனால் வேறு வழியில்லை. இந்த போன் மட்டுமே தனக்கு உறுதுணையாக அதிலே உழன்றாள்.
அவளாக சாப்பிட கூப்பிடவில்லை என்றதும் விக்ரம் நேரத்தை பார்த்தான். பசியும் வயிற்றை கிள்ளியது. காலையில் போல தனியாக தட்டை எடுத்து போட்டு சாப்பிடவும் மனம் உறுத்தியது. ஏனென்றால் இந்த உணவு இவளது கையால் சமைத்தது. அப்படியிருக்க, அவளை அழைக்காமல் போட்டு சாப்பிடவும் மனம் பிராண்டியது கூடுதல் காரணம் அவனுக்கு தாலி கட்டிய மனைவி மீது லேசாக பயமும் இருந்தது.
ஹரிணியை பார்த்தால் அவளாக சாப்பிட அழைப்பது போல தோன்றவில்லை என்றதும், சிறிது நேரம் யோசித்தவன், அவளிடம் பேச வேண்டுமென அழைத்து அப்படியே முதலில் சாப்பிட கூறலாம் என திட்டம் வகித்தான்.
அதனை செயல்படுத்தும் விதமாக, “உன்கிட்ட பேசணும்… சாப்பிட்டு பேசலாம் வர்றியா” என்று அழைத்தான்.
ஹரிணிக்கும் விக்ரமோடு பேச வேண்டும் என்பதால் அமைதியாக பதில் அளிக்காமல் சாப்பிட வந்தாள்.
சோபாவிற்கு முன் சிறிதாக இருந்த டீப்பாயில் ஆறியிருந்த குக்கரை கொண்டு வந்து வைத்து, கூடவே தண்ணீரும் தட்டும் வைத்தாள்.
ஒரளவு சூடுதாங்கும் விதமான டீப்பாய் என்பதால், அதில் வைத்ததும் அவளுக்கான தட்டில் உணவை விக்ரம் கண் எதிரில் போட்டு அவனை ஏறிட்டாள்.
அவள் பார்க்கவும், அவனாக வந்து அவனுக்கான தட்டில் போட்டு சாப்பிட அமர்ந்தான்.
இருவருவே எதிரெதிரே அமர்ந்திருக்க, தட்டில் சாதமும் போட்டு உணவு தட்டில் கோலமிட்டபடி சாப்பிட்டார்கள்.
“என்னோட லைப்ல அன்எக்ஸ்பெக்ட்டா நடந்ததுன்னா அது என் கல்யாணம் தான். பட் இட்ஸ் ஓகே. நான் விரும்பின நதியாவுக்கு கல்யாணமாகிடுச்சு. சோ… அதையே நினைச்சிட்டு சாகப்போய் திரும்பி வந்துட்டேன். இன்ஃபெக்ட் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க சம்மதமா தான் தலையாட்டினேன். பாஸ்டை நினைச்சிட்டு பிரசெண்டை வேஸ்ட் பண்ண நான் தயாரா இல்லை. பட்.. நீ பொண்ணா வருவன்னு நினைக்கலை.” என்றான்.
“சேம் டூ சேம். நானும்… என் வாழ்க்கையில திடீர்னு நடந்த இந்த கல்யாணத்தை சுத்தமா எதிர்பார்க்கலை. அதுவும் உன்னை… சத்தியமா எதிர்பார்க்கலை. எங்கப்பாவுக்காக அவர் ஆசைக்காக கல்யாணம் பண்ண தலையாட்டினவ நான். மத்தபடி எனக்கு தனிப்பட்டு உன்னை மாதிரி லவ் எதுவும் இல்லை ஆனா என்னை அசிங்கமா பேசின உன்னிடம் மாட்டிட்டு முழிக்கறேன்.” என்று அவன் சொன்னதையே அவளது பாணியில் உரைத்தாள். கொஞ்சம் வார்த்தையில் ஊசி வைத்து குத்தவும் முயன்றாள்.
விக்ரம் தன் கடுப்பை மறைத்துக் கொண்டான். இவ்வளவு மணமாக, குழைவாக, பாய் வீட்டு நோம்பு கஞ்சி போல சுவையாக சமைத்துவிட்டாள். இதை விழுங்கியபடி கோபத்தை கட்டுப்படுத்தினான்.
“இப்ப இரண்டு பேரும் இங்க தனியா வந்தாச்சு. எனக்கு இங்க யாரிடமும் மன்னிப்பு கேட்டு வாழவும் வராது.” என்றவன் உணவை சாப்பிட்டு முடித்தான்.
ஹரிணிக்கு மன்னிப்பு என்ற ஒன்றை வீசினால் அவனோடு வாழ்வதை யோசிப்பாள். ஆனால் இப்படி பேசவும், “அப்படின்னா… மன்னிப்பு கேட்காதிங்க. அதே சமயம் நானா வந்து உங்களோட வாழ்வேன்னு எதிர்பார்க்காதிங்க. இந்த வீட்ல தனிதனி அறையில்லாம போகலாம். ஆனா நான் தனியா வாழ்ந்துப்பேன்.
என்னிடம் அசிங்கமா பேசினவரோட, எனக்கு இந்த வாழ்க்கையும் வேண்டாம்.” என்று தட்டிலேயே கையை அலம்பி கிச்சன் சென்றாள்.
விக்ரமிற்கு அவளாக தனியாக வாழ்ந்துக் கொள்வேன் என்று கூறியப்பின், பேசுவதற்கு வேறுயில்லாதது போல சாப்பிட்டை தட்டை மட்டும் எடுத்துக் கொண்டு கிச்சனில் வைத்தான்.
‘இப்படி பேசறதுக்கு கல்யாணம் ஒன்னு தான் கேடு’ என்று அவனும் முனங்கிவிட்டு அறைக்குள் புகுந்துக் கொண்டான்.
ஹரிணியோ அவன் சென்றப்பின், அறைக்கு செல்ல மனமின்றி, போனில் அருகேயுள்ள கடைகளை மேப்பில் கவனித்தாள்.
இரவு சமைக்கவும், நாளை சமைக்கவும் தேவையானதை வாங்கிட, பக்கத்தில் என்னயென்ன கடைகள் உண்டு என்று பார்வையிட்டு நேரில் சுற்றபுறப்பட்டாள்.
ஹரிணி இதுவரை திருப்பூர் கூட தாண்டாதவள். இன்று சென்னை வந்ததும் வராததும் விக்ரம் பேசிய பேச்சுக்கு வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறியிருந்தாள்.
-தொடரும்.

Omg both of them dont want to be in a marriage life. Then y married? Let’s wait and watch. Very intresting sis.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 evanuku ava samayal mattum venumam aana mannipu ketka maataraam enna character evan🙄🤔 sapatula poison vechiduvaa nu bayam erukula adhu erukattum 😂 paavam harini chennai ku pudhusu eppdi veliya poitu varaporalo🧐😕
Vikram thappa pesitu athuku sorry keka matenu vera solra la sorry ketuta konjam manasa mathi valzha yosikura harini athu purila unaku ippadiye eranginvarama iruntha eppadi sapadu mattum senjitanathum sapdura