அத்தியாயம்-16
போனை பார்த்து பார்த்து கடைக்கு வந்துவிட்டாள். வீட்டிற்கும் தனக்கும் தேவையான சிலதை தந்தை கொடுத்த பணத்தில் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்ல முனையும் பொழுது தான், வீட்டின் அட்ரஸ் கூட தெரியாமல் வந்து தொலைத்த மடத்தனத்தை அறிந்தாள் ஹரிணி.
எப்படியும் அடையாளம் கண்டு வந்துவிடுவோமென எண்ணி தான் சென்றது. ஆனால் இங்கே புதுயிடத்தில் அதுவும் சென்னையில் அடையாளம் காண்பது தவிப்பாக போனது. கையில் வாங்கிக்கொண்ட பைகளும் இருக்க, கை வலிக்க ஆரம்பித்தது.
முதலிலேயோ லொகேஷன் ஷேர் செய்துக்கொண்டு வந்திருந்தால் கூட எப்படியாவது சென்றுயிருப்பாள். அந்த கவனமும் இல்லை. சொல்லப்போனால் விக்ரம் பேசிய பேச்சிற்கு அங்கேயிருக்க பிடிக்காமல், வீட்டிலிருந்து உடனே தனிமை தேடி வந்துவிட்டாள்.
‘இங்க வந்ததும் சோதிக்கறியே கடவுளே. இது நியாயமா? இப்ப அவன் நம்பர் வேற இல்லை. போன் பண்ணி வெட்கங்கெட்டு அட்ரஸ் கூட கேட்க முடியாது. இந்தகடவுள் அவ்ளோ பேசிய விக்ரமை விட்டுடுவார். என்னை நடுரோட்ல நகற்க வைக்கிறார்.
சே.. நல்லவங்களுக்கு காலம் இல்லைனு சொல்லறது சரிதான்.’ என்று கடவுளையும் திட்டினாள்
‘அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி அவன் நம்பர் அட்ரஸ் கேட்டாலும் ஏன் என்னாச்சுனு பதறுவாங்க.
நம்ம மாமாவிடம் கேட்டா? அச்சோ… அப்பறம் அவங்க பையனை பிடிச்சு திட்டுவார். இந்த விக்ரம் லாவா எரிமலை மாதிரி வெடிப்பான்.
அவசரப்படாம வழி தெரியுதானு பார்ப்போம்.
ஏதோ… அப்பார்ட்மெண்ட் பெயர் வேற சொன்னானே. அச்சோ… ரைட்டா லெப்டா? பாதை எல்லாம் ஒன்னு போல தெரியுது.’ என்று கால் போன திசைக்கு நடந்து வீட்டை தேடினாள்.
இங்கு விக்ரமோ ‘சத்தமே காணோம்’ என்று தண்ணி குடிப்பது போல ஹாலுக்கு வந்தவன், ஹரிணி இல்லாததும், வீட்டில் தேடினான்.
கிச்சன் பால்கனியிலும் இல்லை என்றதில், செப்பல் ஸ்டாண்டில் கவனிக்க அவளது செருப்பு இல்லை.
விக்ரமோ ‘இவ எங்க போனா… நாம பேசின பேச்சுக்கு இன்னிக்கே திருப்பூர் போயிட்டாளா? அப்படியொன்னும் தப்பா பேசலையே. முதல் நாள் சந்திப்பை விட குறைச்சி தானே பேசியிருப்போம்.’ என்று தலையை சொரிந்தான்.
‘அப்பாவுக்கு போன் போட்டு கேட்டா, அவர் வேற மலையேறுவாரே. அவங்க அப்பா அம்மாவிடம் கேட்கலாம். அப்பறம் பொண்ணை காணோம்னு அப்பாவிடம் தான் நிற்பார். எதுனாலும் அப்பாவிடம் போகாம இந்த மேட்டர் டீலாகாதா?
எங்க போயிருப்பா’ என்றவன் அவளை தேடும் பணியில் இறங்கினான்.
ஒரு வேளை பக்கத்துல எங்கயாவது போனாளா? அவளுக்கு முதல்ல அட்ரஸ் தெரியாதே. வெறுமெனே கதவை சாற்றிவிட்டு அவளை தேடினான்.
‘போன் நம்பராவது வாங்கி வச்சியிருக்கணும்.’ என்று முனங்கியபடி, தெரு தெருவாக நடந்தான்.
காலையில் சாப்பிட்ட நூடுல்ஸ், மதியம் சாப்பிட காய்கறி நோம்பு கஞ்சி இரண்டும் ஜீரணமாகி மீண்டும் பசியேற்பட்டும் விதமாக வெயிலில் அலைந்தான்.
கூடுதலாக, அஜயுக்கு அழைத்து, “அந்த பொண்ணை காணோம் அஜய்.’ என்று நடந்தவையை விவரித்தான்.
“ஏன்டா… ஏதோ கல்யாணம் நடந்துடுச்சு. நமக்குள்ள சண்டை வேற. அதெல்லாம் மறந்துட்டு வாழலாம் சாரினு சொல்லி லேப்பை ஆரம்பிக்காம, போனா போகுது கல்யாணம் பண்ணிட்டேன். வாழவும் முடியாதென்ற ரேஞ்சுக்கு நீ பேசியிருக்க.
அந்த பொண்ணு அதுவாச்சும் நிதானமா பேசுச்சா? தாலி கட்டின பிறகும், நீ என்னத்த திட்டினியோ அதை வச்சி வாழ மாட்டேன்னும் தனியா கூட இருந்துக்கறேன்னு இரண்டு பேரும் வாதத்தில் சொல்வதும் நல்லாவாடா இருக்கு? இது மட்டும் அங்கிளுக்கு தெரிந்தது உன்னை தான் தொலைஞ்சிடுவார்” என்றான் அஜய்.
“இப்ப என்ன பண்றது?” என்று விக்ரம் கேட்க, ”என்ன கேளு… எனக்கு கல்யாணமாகி ஆறேழு பிள்ளை பெத்து அனுபவம் கண்டவன் பாரு?
பைக் இருந்தாலாவது பைக்ல தேடுவ. இனி என்ன ஆட்டோ புக் பண்ணியா தேட முடியும். ரோடு ரோடா நடந்து பாரு. அதுக்குள்ள அங்கிள் சந்தேகப்படாத மாதிரி, அந்த பொண்ணு நம்பர் வாங்க முடியுமானு பார்க்கறேன்” என்றவன் ‘டேய்.. இப்பவாது கேட்கறேன் சொல்லு. அந்த பொண்ணிடம் என்ன அசிங்கமா பேசின?” என்று அஜய் கேட்க விக்ரமோ போனை துண்டித்தான்.
அஜயோ, ‘கட் பண்ணிட்டான்… இவன் சொல்லறதை நான் கேட்பேனாம். ஆனா இவன் நான் கேட்டா நைஸா கட் பண்ணிடுவான். இந்த ஜென்மத்துல எனக்குன்னு நண்பனா வந்திருக்கான்.’ என்று சலித்துக்கொண்டு புலம்பியது விக்ரமும் நன்கறிவான்.
‘ரைட்டா… லெப்டா? இல்லை நேர் ரோடா?’ என்று ஹரிணி இங்கி, பிங்கி, பாங்கி போடாத குறையாக வீட்டை தேடினாள். சட்டென்று மின்னலாய் வர்றப்ப ஒரு குட்டியா பிள்ளையார் கோவில் இருந்தது’ என்று ஒரமாய் நின்று போனில் ஏதாவது கோவில் உள்ளதா என காட்டியது.
அந்த சின்ன கோவில் குகூளில் பதிவாகாதது. சுற்றி சுற்றி அழுகை கூட வந்துவிட்டது. முதல் நாளே வெளியே வந்தது தவறு என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.
அப்பொழுது அங்கே சில கல்லூரி பெண்கள் நடந்து செல்ல, அவர்களை நிறுத்தி பிள்ளையார் கோவிலை பற்றி கேட்டாள்.
“சாரி சிஸ்டர்… கோவில்.. இந்த சைட்ல பார்த்ததா நினைவில்லை. வேற ஏதாவது லேண்ட் மார்க் கடை பெயரு சொல்லுங்க.” என்று கேட்க, விழித்தாள். அந்த கல்லூரி பெண்களும் அவ்விடம் விட்டு சென்றிட, ‘திருப்பூரை தாண்டினா நான் எல்லாம் தத்தி.’ என்று கண்ணீர் உடைப்பெடுத்துவிட்டது.
மாமனாருக்கு அழைக்க கைகள் சென்றது. அங்கிருந்த பெண்மணி “எதுக்கும்மா அழற?” என்று கேட்டிட, தன்னிலையை விவரித்தாள்.
‘நான் நியூ மேரிட் ஆன்ட்டி. அவர் தூங்கறப்ப வீட்டுக்கு தேவையானதை வாங்க அவசரமா கடைக்கு வந்துட்டேன். இப்ப வீட்டுக்கு போக வழி தெரியலை. அடையாளமும் எதுவும் நோட் பண்ணி வைக்கலை. ஒரே ஒரு பிள்ளையார் கோவில். அதுக்கூட குட்டியா.. இருந்தது.” என்று விவரிக்க, “குட்டியா..பிள்ளையார் கோவில் பக்கத்துலனா… நம்ம டிவெல்த் அவின்யூல ஒன்னு இருக்கு. செவன்த் அவின்யூல இருக்கு. பக்கமானு செவன்த் அவின்யூ இங்கிருந்து இரண்டாவது லெப்ட் இரண்டாவது ரைட் வரும். அங்க போனா வழி தெரியுமா?” என்று கேட்க, “ஓரளவு போ..போயிடுவேன் ஆன்ட்டி” என்றாள்.
ஏதோ அந்த அம்மனே வந்து வழி சொல்லி சென்றதாக கடவுளுக்கு நன்றியுரைத்துவிட்டு நடந்தாள்.
பிள்ளையார் கோவிலை கண்டதும், இங்கிருந்து வலது பக்கம் போய் இடது பக்கம் போனா வரும்” என்று அவசரமாக நடந்தாள்.
அதே நேரம் எப்படியோ அஜய் ஹரிணி எண்ணை வாங்கிவிட்டு, ”ஹலோ சிஸ்டர்.. நான் அஜய் பேசறேன். உங்களை காணோம்னு அங்க விக்ரம் பதறிட்டு இருக்கான். நீங்க எங்கயிருக்கிங்க?” என்று கேட்க, “ஆஹ்.. அண்ணா.. நான் இங்க பக்கத்துல கடைக்கு போயிட்டு வந்தேன். இதோ.. இப்ப வீட்டுக்கு போயிடுவேன்.” என்றவளிடம், “சிஸ்டர் வேற பிரச்சனையில்லையே.” என்று கேட்க ஹரிணி மௌனமானாள்.
“சாரிம்மா… நான் இப்படி கேட்க கூடாது தான். சரியான கிறுக்கனோட தனியா நீங்க கஷ்டப்படறது தெரியுது.
அவன் வேண்டாவெறுப்பா லவ் பெயிலியர் என்ற சோகத்தோட, கல்யாணத்துக்கு உங்களை பொண்ணு பார்க்க வரலை. அவன் காதலிச்சவளை மறந்து, பொண்ணு பார்க்க சந்தோஷமா தான் வந்தான். உங்களுக்குள் என்ன சண்டையோ அவன் எதுவும் சொல்ல மாட்டேங்கறான். சரியான ஈகோவை பிடிச்சு தொங்கறவன். பட் நல்லவன் தான் சிஸ்டர். அவனை போக போக நீங்களே புரிஞ்சிப்பிங்க.” என்று கூற, “சாரிண்ணா… ஒரு வார்த்தை நான் பேசியதுக்கு மன்னிச்சிடுனு சொல்லறதுல என்ன ஈகோ. நான் தப்பா பேசலையே. உங்க பிரெண்ட் தான் அசிங்கமா பேசியது. சரி விடுங்க அண்ணா. உங்களிடம் என் நிலையை புலம்பி என்னவாகப் போகுது. நான் வீட்டுக்கு வந்துட்டேன். கதவை கூட பூட்டாம உங்க பிரெண்ட் வெளியே என்னை தேடறார். அவ்ளோ தான் அவரோட அறிவு. அவரிடம் நான் வந்துட்டதா சொல்லிடுங்க” என்றதும், “சரிங்க சிஸ்டர் என்று அஜய் வைத்துவிட்டான்.
உடனடியாக விக்ரமிற்கு அழைத்திட அவனோ, “சொல்லு மச்சி” என்றான்.
“எங்க இருக்க?” என்றான் அஜய்.
“ரோட்ல தான். அந்த லூசை காணோம். ஒரு தம்மை போட்டுட்டு தேடணும்” என்றான் விக்ரம்.
‘”டேய் எருமை.. தம்மாம் தம்மு. இப்ப ரொம்ப முக்கியம். அப்படி என்னடா அந்த பொண்ணை திட்டின. மன்னிப்பு கேட்டுட்டு வாழலாம்ல.” என்று கத்தினான்.
“ஏய்.. என்ன மயிறு மாதிரி கேள்வி கேட்காத. அந்த பொண்ணோட நம்பரை வாங்கி பேசினியா? இல்லையா? தேவையில்லாம நான் அவளை என்ன திட்டினேன்னே ஆளாளுக்கு கேட்கறிங்க.” என்றான் விக்ரம்.
“அந்த பொண்ணிடம் தான் பேசினேன். வீட்டுக்கு வந்துட்டாளாம். ஏதோ கடைக்கு” என்றதும் போன் துண்டித்த சப்தம்.
‘எருமை மாடு எருமை மாடு. பேசும் போதே கட் பண்ணறான். அவளை காணோம்னு பேசினப்ப, நான் கட் பண்ணிருக்கணும். என் நேரம்’ என்று அஜய் முனங்கிட, விக்ரமோ “வீட்டுக்கு வந்துட்டான்னா.. கோபம் சொந்த ஊருக்கு போற அளவு இல்லை.
ஆனா நான் என்ன திட்டினேன்னு ஒவ்வொரு தடவையும் நினைக்க வைக்கிறா. இவளை எல்லாம்.” என்று புகைத்திருந்த சிகரெட்டை ஊதி தள்ளியபடி வந்தான்.
வீட்டுக்கு வந்ததும், “ஏய் எங்க போயிருந்த? வெளியே எங்கயாவது ஊர் சுத்த போறதா இருந்தா சொல்லிட்டு போக தெரியாது.” என்று கத்தினான்.
“இங்க பாரு.. உன்கிட்ட நான் பேச விரும்பலை. செய்த தப்புக்கு மன்னிப்பு கூட கேட்காம, தேமேனு இருக்கற உன்னோட இதே வீட்ல வாழறதையே நான் அசிங்கமா பீல் பண்ணறேன். இதுல உன்னோட பேசணுமா? உன்கிட்ட சொல்லிட்டு போகணுமா? உன்கிட்ட அனுமதி வாங்கிட்டு எங்கயும் போகணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.” என்று வாங்கி வந்த பொருட்களை எடுத்து வைத்தாள்.
அவள் சென்று வந்த இடத்தை அவளது கவரே காட்டி கொடுத்தது. அதில் நிதானமானவன், சற்று நக்கலாக, “நீ பேசறது எல்லாம் உங்கப்பன் கமலகண்ணன் கேட்டார்னா எப்படியிருக்கும். பச் எங்கப்பா மாதிரி உங்கப்பா இல்லை. சோ ஸ்வீட். என்னை மருமகனா ரொம்பவே மதிக்கறார். உங்க வீட்ல இருந்தப்ப, மாப்பிள்ளை இது வேணுமா அது வேணுமா? ஏதும் குறையில்லையேனு பார்த்து பார்த்து செய்தார். சும்மா கெத்தா இருந்தது. நீ இப்படியே பேசிட்டியிரு. நான் அவரிடம் போன் போட்டு, “மாமா உங்க பொண்ணு என்னை மதிக்க மாட்டேங்கறா.. எங்கயாவது போனா சொல்லிட்டு போறதில்லை. ஏன் எனக்கு காலையில சாப்பாடு கூட நானா தான் செய்துக்கிட்டேன்னு புலம்ப வேண்டாம். ஜஸ்ட் சொன்னா கூட உங்கப்பா நெஞ்சை பிடிச்சிப்பார்.
இதுல.. உங்க பொண்ணு… நான் தொட்டா தட்டி விடறா.. நான் படுக்க கூப்பிட்டா வரமாட்டேங்கறானு உண்மையெல்லாம் சொன்னேன்.” என்றவன் அவளை கையை தொட, ஹரிணியும் தட்டி விட்டு முகம் சுழிக்க, “உங்கப்பா மர்க்கையா.. டேரக்டா எமனிடம் டிக்கெட் புக் பண்ணி, சொர்கத்துக்கு போவார்” என்றவன் கன்னத்தில் ஹரிணி இழுத்து பிடித்த பொறுமை பறந்து அறைந்திருந்தாள்.
-தொடரும்.
லாவா மன்னவா-16

Semma harini ennum naalu arai serthu podu👏👏👏😍 evanukellam nalla Venum eppdi pesuran cha oru sorry kooda ketka matenguran enna jenmam evan🙄😐
Vai irukunu romba overa pesura vikram nee avalum porumaiya iruka ena da veliya ponale vali therinjitha sollitu polamnla nu kekama kathitu iruka ithula avanga nilamaiya vachi overa pesura apo intha adi theva than
Super harini. Vikram u need this slap. Harini dont stop. Very intresting sis.