அத்தியாயம்-17
“என்னை பத்தி என்னவென்னா பேசு. ஆனா என் அப்பாவை பத்தி ஏதாவது தப்பா பேசின. பல்லை தட்டி கையில கொடுத்துடுவேன்.
ஆம்பளன்னா அவ்ளோ திமிராடா? சோத்து விஷவச்சி கொன்னுடுவேன்.
என் வாழ்க்கை எப்படியெல்லாம் வாழணும்னு கனவு கண்டேன் தெரியுமா?
ஆனா என் புருஷன் ஒருத்தியை காதலிச்சிருக்கான். அந்த பொண்ணுக்காக தற்கொலை வரை போயிருக்கான். இதுல என்னை வேண்டா வெறுப்பா கல்யாணம் செய்து, ஏதோ தெரியாதவன் கூட ரூம்ல தங்கற மாதிரி பீலாகுது. பஸ்ல எவனோ ஒருத்தன் மாதிரி இருக்க. இங்க… காலையில இருந்து இப்பவரை ஏதாவது வாயை திறந்தியா? இதுல உன்கிட்ட நான் சொல்லிட்டு போகணுமா?
உன்னை மாதிரி பொறுக்கித்தனமா, பார்க்கற பொண்ணுக்கிட்ட, சின்னதா மழையில சேறை வாறி இறைச்சதுக்கு கூட ‘ஃபக்யூ’னு கெட்ட வார்த்தை பேசறவனை, கல்யாணம் பண்ணிட்டு சூழ்நிலை கைதியா நிற்கறேன்.
அன்னிக்கு மழையில நீ பேசினப்பவே உன்னை இதே அடி அறைஞ்ச்சிருக்கணும். அப்ப தப்பிச்சிட்ட.
என்னை பொண்ணு பார்க்க எங்க வீட்டுக்கே வந்து, என் முன்ன முன்ன வந்து, சொல்லு சொல்லுனு எகத்தாளம் கேட்டப்ப உங்க அப்பா அம்மா முன்ன சொல்லிருக்கணும். அப்ப தெரிந்திருக்கும். உங்கம்மா வளர்ப்பு எவ்ளோ மோசம்னு. ஒரே பிள்ளைனு ஊர்மேய விட்டாங்க. அதான் பார்க்கற எவளிடமும் மட்டுமரியாதை இல்லாம பேசற. உனக்கும் உங்க நல்ல பழக்கவழக்கமே சொல்லி தரலையா? ஏதோ கடமைக்கு பெத்து தறுதலையா வளர்த்துயிருக்காங்க.” என்றதும் இம்முறை விக்ரம் ஹரிணியை அறைந்தான்.
“என்னை பத்தி பேசு. எங்கம்மாவை பத்தியோ, அவங்களோட வளர்ப்பை பத்தியோ பேசாத. அப்படி பேசின.. கழுத்தை நெறிச்சி கொன்னுட்டு போயிடுவேன்.
நீ எங்கன்னா போ. எதுக்குன்னாலும் போ. உன்னை இங்க யாரும் எதுவும் கேட்கறதுக்கு இல்லை. ஏதோ உங்கப்பா தான் கிளம்பறப்ப, என் பொண்ணு இந்த மண்ணை தாண்டி எங்கயும் போனதில்லை. அவளை பத்திரமா பார்த்துக்கோங்கனு சொன்னார். அந்த ரெஸ்பான்ஸிபிளிட்டிக்காக மட்டும் தான் உன்னை தேடியது. இனி நீ தொலைஞ்சே போனாலும் நான் உன்னை தேடமாட்டேன்.” என்றான்.
“அதே தான் உனக்கும். என்னை பத்தி பேசு. என் அப்பா அம்மாவை பத்தி பேசின. நானும் சோத்துல விஷத்தை வச்சி கொன்னுடுவேன். பெருசா ரெஸ்பான்சிபிளிட்டி பத்தி பேசற. முதல்ல ஒரு பொண்ணுக்கு பேஸிக் மதிப்பு மரியாதை தந்து பேசணும் என்ற அடிப்படை அறிவு உனக்கிருக்கா? உனக்கு ஒரு அக்கா தங்கச்சி இருந்து எந்த ஆம்பளையாவது இப்படி பேசியிருப்பது உனக்கு தெரிந்தா நீ சும்மாயிருப்பியா? நான் யாரோ ஒருத்தி, என்னவேன்னா பேசலாம்னு இருக்க. இப்ப வரை நீ பேசற விதம் உனக்கு தெரியுதா. ஆம்பளை திமிருல ஆடற” என்று மூச்சு வாங்க பேசினாள்.
விக்ரமோ அசராத பார்வை பார்த்து, பதில் தர பிடிக்காமல், அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
ஹரிணிக்கு பேசியதும் திருப்தியாக, கன்னத்தை தாங்கி சோபாவில் படுத்துக்கொண்டாள். தாரை தாரையாக கண்ணீர் வழிய, கன்னம் கூடுதலாக எரிந்தது.
அவளும் தான் விக்ரமை அறைந்தாள். ஆனால் இந்தளவு வலி கொடுத்திருக்குமா என்பது ஐயம்.
திருமணமாகி தனியாக வந்த முதல் நாளோ ஆளுக்கு ஒரு இடமாக கண்ணீரோடு இவ்வீட்டில் கரைவதில், இந்த திருமணம் தேவைதானா? என்ற பெரிய வினாவை எழுப்பியது.
திருப்பூருக்கே சென்றிடலாமா என்று கூட தோன்றியது. அங்கிருந்தாலாவது வேலைக்கு சென்று நிம்மதியாக கழிப்போம். இங்கே எந்த உரிமையில் இருப்பது? ஆனால் இதற்கா எல்லாம் செய்தது? தந்தைக்காக பொறுத்திரு ஹரிணி என்றது மனம். தனக்கு பிடிக்காமல் ஆடை விஷயத்தில் கூட கட்டளையிடாதவர். ஆனால் திருமணத்திற்கு தான் விக்ரமை மணக்க மறுத்தும், கல்யாணம் நிறுத்தாமல், இதே விக்ரமிற்கு கட்டி வைத்ததிலிருந்தே ஏதோ உறுத்தியது.
மாலை நேரம் வீட்டில் லைட் கூட போடாமல் படுத்திருப்பது, ஹரிணிக்கு உறுத்தியது.
என்னயிருந்தாலும் மாலதி சில பழக்கத்தை இவளது மூளையில் பதியவைத்திருக்க, எழுந்து லைட்டை போட்டுவிட்டு விளக்கேற்றினாள்.
அதன்பிறகே வாங்கி வந்த பால் காய்ச்சாமல் இருப்பது நினைவு வர, அவசரமாய் பாலை காய்ச்சினாள்.
கேஸ் லைட்டர் பற்ற வைக்காமல் சதி செய்ய, அதனோடு போராடி ‘டிக் டிக்’ என்று அழுத்தியபடி இருக்க, உள்ளேயிருந்த விக்ரமிற்கு, அவள் கேஸை பற்ற வைத்து இறக்க போகின்றாளா என்று விபரீதமாக எண்ணம் தோன்றி கதவை வேகமாய் திறந்தான்.
அதற்குள் கேஸ் லைட்டர் கையிலிருந்து நழுவி, தரையில் விழ, கிச்சனில் கேஸ் வாசம் வீசியது.
ஹரிணி எழுந்து, மீண்டும் முயற்சிக்கும் போது, விக்ரம் வேகமாக வந்து, அடுப்பை அணைத்து, “சாகறதா இருந்தா உங்க வீட்டுக்கு போய் செத்துப்போ. இங்க எதுக்கு?” என்றவன் ஹரிணி பாலை காய்ச்சும் பாத்திரத்தை எடுத்து அவன் முகத்திற்கு நேராக நீட்டவும் அமைதியானான்.
ஹரிணி பாலை காய்ச்சிட பத்த வைத்ததும், சற்று நேரத்தில் பால் பொங்கியது. தலைவலிக்கு ஏற்றவாறு சூடான ஏலக்காய் இஞ்சி தட்டி போட்ட டீயை குடித்தாள்.
விக்ரமோ அவள் டீ குடிக்க பத்த வைத்ததை எண்ணி அசடு வழிய சோபாவில் டிவியை போட்டான். ஹரிணி பால்கனிக்கு சென்று அங்கே நின்றுக் கொண்டாள்.
கிச்சனில் இன்னொரு டீ கப் இருக்கவும் ஆர்வமாக அங்கே செல்ல கப் மட்டும் இருந்தது.
பிறகு டீ தனியாக ஒரு கிண்ணத்தில் இருக்க அதை எடுத்து வடிகட்டி ஊற்றி பருகினான்.
நேரம் கரையவும், இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றிவிட்டு வெங்காய சட்னி அரைக்க, இரவு அவள் ஒரு புறம் தட்டில் போட்டு சாப்பிட, அவன் ஒருபுறம் சாப்பிட்டான்.
இரவும் ஹரிணி சோபாவிலேயே படுத்துக் கொண்டாள். கொண்டு வந்த போர்வையை போர்த்திக் கொண்டாள். ரத்த சிவப்பாக கன்னம் காட்சியளித்தது.
விக்ரமிற்கு தான் செய்தது தவறா சரியா என்று கூட ஆராயும் அளவிற்கு எண்ணம் செல்லவில்லை.
அவளை அடித்ததை கூட, ‘அவளும் தான் அடிச்சா. அதையும் வாங்கிட்டு பொம்பள மாதிரி இருக்கேன்.’ என்று பல்லை கடித்தான்.
ஒரு பொம்பள பொண்ணு கைநீட்டி என்னை அடிச்சிருக்கா.’ என்ற வேதனை வேறு அவனை வாட்டியது. இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்தவன் தண்ணீரை குடிக்க, கதவை திறக்க முயன்றான். கதவு வெளிப்பக்கம் தாழிட்டதாக தெரிய, ‘இவளை என்ன செய்யறது. என்னமோ நான் ஆசையா உருகி உருகி லவ் பண்ணி, மேட்டர் பண்ண தூக்கிட்டு போறதா நினைப்பு.” என்று எண்ணியவனுக்கு கதவுக்கு கீழே ஏதோ இருக்க, கண்ணை சுருக்கி காணவும் வாட்டர் பாட்டிலில் இருக்க, தண்ணீரை எடுத்து குடித்தபடி படுத்துக் கொண்டான்.
மெத்தையில் படுத்தவனுக்கு உறக்கம் லேசாய் போனது போலிருந்தது. கன்னத்தை கன்னத்தை தடவியவனுக்கு வலித்தது போல எவ்விதமான உணர்வும் இல்லை. ஆனால் அவளை அடித்தவனுக்கு தெரியும். அவளது கன்னம் எப்படியும் வீக்கமாகியிருக்குமென.
இந்த கல்யாணம் தேவையா? எங்களுக்குள் ஏன் தான் இந்த விதி திருமணம் என்ற முடிச்சு போட்டு விளையாடுதோ.’ என்று மணமான இந்த ஒரு வாரத்தில் ஒராயிரம் முறை மனதில் நினைத்துவிட்டான்.
அவன் மட்டுமா? அவளும் தானே!
‘நாளைக்கு ஆபிஸ் ஓடிடணும். இங்கயே இவளையே பார்த்துட்டு இருந்தேன். என் மண்டை சூடாகிடும் என கண்ணயர்ந்தான்.
அதிகாலை தக்காளி சாதம் செய்து கருணை கிழங்கை மீன் துண்டு போல வெட்டி வறுத்திருந்தாள். ஹாட்பாக்ஸில் நேற்று இரவு செய்த இட்லி போல செய்துவிட்டு இட்லி பொடியை எண்ணெயில் குழைத்து வைத்திருந்தாள்.
நான் ஆபிஸ் கிளம்புவேன்னு முன்னவே யூகித்திருப்பா போலயே. மடமடனு சமைச்சி வச்சிருக்கா. அம்மாவை போல வயிற்றுக்கு மட்டும் என்னைக்கும் வஞ்சனை பண்ணலை. அதுல இவளை பாராட்டலாம்.’ என்றவன் மனதில் அவளை காண, அவழ் திரும்பவும், மிடுக்காக அமர்ந்து அவசரமாக சாப்பிட்டுபுறப்பட தயாரானான் விக்ரம்.
ஹரிணி அப்பொழுது தான் தங்கையிடம் பேச போனை போட்டாள். பாத்திரம் விளக்க வேண்டுமென, ஸ்பீக்கரில் போட்டுவிட்டு தேய்க்க ஆரம்பித்தாள்.
”ஏய் அக்கா… அங்க போயிட்டதா அம்மா சொன்னாங்க. நேத்தே கால் பண்ண நினைச்சேன். அம்மா தான் அவங்களே இப்ப தான் தனியா இருப்பாங்க. அவங்களுக்குள் பேசட்டும். நீ வேற இடைஞ்சலா போன் போடாதானு சொல்லிட்டாங்க. ஏன்க்கா… சென்னையில உனக்கு பிடிச்சிருக்கா.
முன்ன லீவுக்கு எங்கயும் போகமுடியாது. ஆனா அக்கா வீடுனு நான் லீவுக்கு வருவேனே.” என்று பேசவும் ஹாலில் இருந்த விக்ரமுக்கு உதடு விரிந்தது.
“பச்.. முதல்ல படிக்கற வேலையை பாரு. அதுக்குள்ள லீவுக்கு வர கோட்டை கட்டுவ.” என்றாள் ஹரிணி. ‘இங்க நானே கெஸ்ட் மாதிரி நடமாடறேன். இதுல இவ வேற’ என்று ஹரிணி முனங்க, ‘முதல்ல வானு வாயில வருதா பாரு’ என்று விக்ரம் முனங்கினான்
“அக்கா.. நான் ஒன்னும் சொல்லணும்… அன்னிக்கு இங்க டிரஸ் மாத்தும் போது…” என்று ஆரம்பிக்க, “ஏன்டி… ஸ்கூலுக்கு போகணும்னு சொல்லிட்டு தலைவாற உட்காராம அக்காவோட பேசி கொஞ்சிட்டு இருக்க. அங்க உங்க மாமா ஆபிஸ் போக வேண்டாம். ஈவினிங் வந்து பேசு.” என்றார் மாலதி.
“அக்கா.. நான் அப்பறமா பேசறேன். இட்ஸ் பெர்சனல்.” என்று கிசுகிசுப்பாய் கூறிய வினோதினி, “நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன். டேக்கேர் அக்கா” என்று துண்டித்தாள்.
‘இவங்களும் பேச மாட்டாங்க. பேசற இவளையும் தடுத்தாச்சு. தனியா விட்டத்தை பார்த்துட்டு சாகணும்.’ என்று பொறுமினாள்.
விக்ரமோ, ‘ஆஹா.. அன்னிக்கு டிரஸ் மாத்தறப்ப ரூம்ல இருந்தேன். அதை வேற இவளிடம் சொல்லப்போறாளா?
கொழுந்தியா டிரஸ் மாத்தறச்ச எட்டி பார்த்தேன்னு தப்பா நினைச்சு அதுக்கு தனியா என்னை வறுக்க போறா. ஆல்ரெடி, என்னை பிடிக்காததுக்கு பெரிய பிளாக் லிஸ்ட் வச்சியிருக்கா. என்ன நடக்க போகுதோ’ என்று விக்ரம் நேரமாகவும் வேகமாக கிளம்பினான்.
ஷூ போடும் சமயம் ஹரிணியிடம் சொல்லிவிட்டு செல்லலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நிகழ்த்தினான்.
ஆனால் பால்கனியில் டீயை எடுத்துக் கொண்டு தனிமையாக சென்ற ஹரிணியிடம் இனியும் நிற்க வைத்து அலுவலகம் செல்வதாக விளக்க முடியாது பையை எடுத்து புறப்பட்டான்.
அவள் செய்து வைத்த உணவும் கொண்டு சென்றான்.
பால்கனியிலிருந்து, விக்ரம் செல்வதை அறிந்தாலும், அவனிடம் ஒரு வார்த்தை பேச திரணியில்லாமல் கதவை தாழிட்டு அறைக்கு வந்து படுத்தாள்.
சோபாவில் படுத்திருக்கவும் உடல் மேல் வலியை தந்துவிட்டது.
அதனால் சுகமான உறக்கமாக மெத்தையில் விழ்ந்தாள். பதினொன்று போல எழுந்தவள் காலை உணவை சாப்பிட்டாள்.
ஒரு மணிக்கு குளித்து முடித்து, அன்னையிடம் தந்தையை பற்றி விசாரித்தாள்.
“அப்பாவை மெடிக்கல் செக்கப் பண்ண கூட்டிட்டு போனிங்களா?” என்று கேட்க, ”ஏன்டி அவருக்கு ஏதாவது வியாதி இருந்தா கூட்டிட்டு போகலாம். அவருக்கென்ன? நல்லா தான் இருக்கார்.” என்றார் மாலதி.
மாலதியிடம் கமலகண்ணன் ‘உன் மகளிடம் எனக்கு உடம்பு சரியில்லைனு சொல்லி தான் கல்யாணத்தை நடத்தியிருக்கேன். அதனால பயத்துட்டு கேட்கறா. அதெல்லாம் கூட்டிட்டு போயிட்டேன். ஒன்னுமில்லைனு சொல்லிட்டதா சொல்லிடு” என்று கூறியிருந்தார்.
“ஏம்மா… சில மருந்தை பார்த்தேன். எதுக்கு சாப்பிட்டார்னு தெரிய வேணாம்.” என்று தயங்கியபடி கூறினாள். அன்னைக்கு ஏதாவது ஆகிடக்கூடாது. தந்தை நலனை வைத்து அவர்களும் கவலை கொள்ளக்கூடாதே.
“அதெல்லாம் பக்கத்துல அழைச்சிட்டு போனேன். ஒன்னுமில்லைனு சொன்னாங்க” என்று தான் கூறினார் மாலதி.
ஹரிணிக்கு மட்டும் ஏதோ தந்தை தன்னிடம் மறைப்பதை அறிந்தாள். அன்று தன்னிடம் சிக்கிய பைல்களை போட்டோ எடுத்திருந்தால் கூட எதற்கு இந்த மருந்து மாத்திரை என்று தெரிந்திருப்பாள்.
தந்தைக்கு தன்னால் மட்டும் எந்த உடல்நிலை கோளாறும் வந்திடக் கூடாதென வேண்டுதல் வைத்தாள்.
நேரம் போவது மிக கடினமாக இருந்தது. ஆனால் உறக்கம் வந்ததால் நன்றாக பொழுது போனது.
மணி ஆறை தொடவும் வீட்டை கூட்டி பெருக்கி விளக்கேற்றினாள்.
ஏழு முப்பதுக்கு வீட்டுக்கு வந்திடுவான் என்று மாமியார் ராதிகா தான் தெரிவித்திருந்தார். அதனால் விக்ரம் வரகாத்திருக்க, சப்பாத்தியும் தக்காளி சட்னியுமே வைத்தாள்.
எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்தான். அவன் அவளை கடந்து செல்லும் பொழுது சிகரெட் வாடை. போதாதற்கு லேசாக மதுவின் நெடியும் இருந்தது.
இவனுக்காகவா காத்திருந்தோம் என்ற கடுப்பில் சப்பாத்தி செய்துவிட்டு சட்டென சோபாவில் படுத்துக் கொண்டாள் ஹரிணி.
விக்ரமோ சாப்பாத்தியை சாப்பிட்டவன் கதவை தாழிட்டு அறைக்குள் படுத்தான்.
நள்ளிரவு ஹரிணி விழிக்க, அவளுக்கு பாத்ரூம் செல்ல அவசரமானது. கதவை மெதுவாக திறக்க முயல, விக்ரம் உள்பக்கம் தாழிட்டிருப்பதை எண்ணி தலையிலடித்தாள்.
இந்த வீட்டில் ஒரு பாத்ரூம் மட்டுமே இருக்க, கதவை தட்டவும் சங்கடமாக மாறி சோபாவில் வந்து சாய்ந்தாள்.
புரண்டு புரண்டு படுத்து இயற்கை உபாதையை அடக்கினாள்.
கண்ணில் கண்ணீர்… பல்லை கடித்து முடித்தாள். ஏற்கனவே சிறுநீர் கழிக்கும் உணர்வு. இதில் அடிவயிறு வேறு சுளீரென வாட்டி எடுக்க தேதியை கவனித்தாள்.
அவளுக்கு மாதவிடாய் சுழற்சிக்கான நாள் என்று புரிய, கதவை தட்டினாள். அவனோ உறக்கத்தில் இருந்தான்.
நாப்கினும் அறைக்குள்ளே இருப்பதில் ஒரு பெண்ணாய் இக்கட்டில் துடித்தாள்.
நேற்று தான் கதவை தாழிட்டதற்கு இன்று அவன் கதவை தாழிட்டு கொண்டதும் பேசிய பேச்சிலும், இந்த இடத்தில் இருக்க பிடிக்காமல், அவனையும் பிடிக்காமல் போனது.
யாரோ ஒரு பொண்ணுக்கு நைட்டி எல்லாம் மாற்றி மனிதாபிமானமுள்ள மனிதனாக கண்டவளுக்கு, மனைவி என்று வந்துவிட்டால் எவனும் மனிதாபிமானம் கூட வற்றிவிடுமென தாமதமாக புரிந்தது.
-தொடரும்.

Acho paavam sis harini 🙄🥺 evan enna oorla erukura ellarkitaiyum nalla nadandhukuran wife a mattum koduma paduthuran😕 eppdi oru situation la andha ponna thallitaney🙄 evan adikiradhum ava adichadhum onnu ah🧐 romba over ah pandran😠