அத்தியாயம்-19
ஹரிணி மதியம் போல சாப்பிட்டு அறைக்குள் இருந்த மெத்தைமில் படுத்துக் கொண்டாள். நேற்று சாமிக்கு பூ கட்டி வழிப்பட வாங்கிய பூவில், இன்று கடவுளுக்கும் வைக்க முடியாததால், தலையில் வைத்திருக்க மெத்தையில் சில உதிர்ந்தது.
அங்கும் இங்கும் போனை நோண்டி பொழுதை கழித்து, டிவி பார்த்தவள், மாலை வினோதினி போன் போட்டாள்.
முதலில் நலன் விசாரிப்பிற்கு பிறகு, ‘நீ நல்லாயிருக்கியா? அந்த… அவரு.. உன்னை நல்லா பார்த்துக்கறாரா? நியூ பிளேஸ் எப்படியிருக்கு? நேத்து காலையில உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல நினைச்சேன். ஆனா அம்மா ஸ்கூலுக்கு துரத்திட்டாங்க.’ என்று பீடிகை போட, ”இப்ப வெட்டியா தானே இருக்க? சொல்லு’. என்றாள் ஹரிணி.
காபி கலந்தபடி சர்க்கரையை தேடினாள்.
”அக்கா… உன் மேரேஜ் முடிந்து மூனாவது நாளா இருக்கும். நான் டிரஸ் மாத்தும் போது…. மாமா..” என்று ஆரம்பித்தவள் முழுதிய் பேசி முடிக்க, ஹரிணிக்கு பகீரென்றது.
“அம்மா… இல்லைல. இதெல்லாம் அவங்களிடம் சொல்லிட்டு இருக்காத வினோ. என்னதான் விக்ரம் வெளியேறிட்டான்னாலும் இந்த விஷயமெல்லாம் கேட்டா அவங்க பயப்படுவாங்க.
நான் வைக்கறேன். நீ படிப்பை பாரு.” என்று வைத்தவள் தலையை தாங்கி அமர்ந்தாள்.
சற்றுமுன் கலக்கிய காபி வேகமாய் மொத்தமாய் குடித்துவிட்டாள்.
ஆறரை ஆகவும், சாப்பாத்தி உருட்டினாள்.
விக்ரம் வீட்டிற்குள் நுழையவும், ‘ஸ்ஸ்ஸ்’ என்று குக்கர் சப்தம் எழுப்ப, உருளைக்கிழக்கு தயாராகியதை தெரிவித்தது.
ஹரிணி கிச்சன் பக்கம் செல்ல, விக்ரம் அறைக்குள் நுழைய என்று இருவரும் கடக்கும் போது, அதே சிகரெட் வாடை வேறு குமட்டியது.
சமையல்கட்டில் அடுப்பை அணைத்தவள், ‘ஒரு பழக்கத்தை விடறதில்லை. இதுல தினசரி பழக்கம் வேற.” என தலையிலடித்து சப்பாத்தியை உருட்டினாள்.
அறைக்கு வந்தவன், கதவை தாழிட தாழ்பாளை தேடி, இல்லையென்றதும் வெறுமென சாற்றிவிட்டு உடைமாற்றினான்.
ஷார்ட்ஸ் நெக்-பனியன் என்று மாற்றிவிட்டு கிச்சனில் நீரருந்த வந்தான்.
மசாலா வாசனை அவனை இழுக்க, மாவை கவனித்தான்.
‘இந்த நேரம் உடல்நலம் எப்படியோ? இரவு உணவை ஆர்டர் தர நினைத்து தான் வந்தான் விக்ரம். எதற்கும் வீட்டிற்கு சென்று கேட்டுக் கொண்டு செய்வோமென நினைக்க, ஹரிணி மாவை உருட்டியதை கண்டு, உடல்நிலை பரவாயில்லை என்று எடுத்துக் கொண்டான்.
இருவரும் சேர்ந்து சாப்பிடும் பொழுது, விக்ரம் பேசலாமென வாயெடுக்கும் நேரம், ஹரிணி போன் சிணுங்கியது.
ரவிபிரகாஷ் அழைக்கவும், “மாமா” என்று எடுத்தாள்.
“எப்படிம்மா இருக்க? எதுவும் பிரச்சனை வரலையே… அமைதியா போறானா?” என்று கேட்டார். ஹாலில் அமைதியாக இருக்க, சப்தம் வெளியேவும் கேட்டது.
“நல்லாயிருக்கேன் மாமா. பிரச்சனை… அமைதியா தான் இருக்கு மாமா’ என்று விக்ரமை கண்டு கூறினாள்.
‘கொழுப்பெடுத்தவளே… இருடி ஒரு நாள் இருக்கு’ என்று செவியை மட்டும் கூர்த்தீட்டி சாப்பிடுவதில் கவனம் செலுத்தினான்.
“பொழுதெல்லாம் போகுதா?” என்று கேட்க, “இல்லை மாமா… ரொம்ப போரடிக்கு. நேத்து கடைக்கு போயிருந்தேன். இன்னிக்கு… இன்னிக்கு வினோதினி போன் பண்ணினா… பேசினேன்.” என்றதும் விக்ரம் பூரியை பிய்த்த கைகள் தாமாக நின்றது.
அடுத்துவாயில் அதக்கியதை விழுங்கி, நீரை குடித்தான்.
”என்ன சொல்லறா உன் தங்கை. உன்னை ரொம்ப மிஸ் பண்ணிருப்பா” என்றார்.
“ஆமா மாமா… கல்யாணம் ஆனதும் மூனாவது நாள் நடந்த விஷயமெல்லாம் ஷேர் பண்ணினா.. இப்ப தான் பகிர டைம் இருந்ததாம். என்னை ரொம்ப மிஸ் பண்ணிருக்கா” என்று விக்ரமை முறைத்தாள்.
‘குட்டச்சி… டிரஸ் மாத்தும் போதே வெளியே வந்துட்டேன். அது இதுக்கிட்ட என்ன சொல்லி வச்சதோ. இதுக்கு என்ன புரிஞ்சு தொலைச்சதோ. ஆக மொத்தம், ஒரு கெட்ட வார்த்தையால உன்னை மொத்தமா கெட்டவனா காட்ட, ஜோலி முடிஞ்சது. இதுக்கு கல்யாணம் என்ற பெயர் வேற. கூடிய சீக்கிரம் விவாகரத்து கேட்டு கோர்ட் படியில நிற்க போறேன். அது கன்பார்ம்’ என்று மனதோடு சொல்லிக் கொண்டவன் சாப்பிட்டது போதுமென எழுந்துவிட்டான்.
“கமலகண்ணனிடம் கேட்டேன். பரீட்சை முடிஞ்சு தான் இத்தோட மக வீட்டுக்கு போகணும்னு சொன்னான். அதுக்குள்ள நல்லபடியா பேசி பழகிடுவாங்கனு சொல்லியிருக்கேன்.” என்றதும் ஹரிணிக்கு லேசான வருத்தம். அதற்குள் எல்லாம் சுமூகமாக மாறுமா?
”மாமா. அப்பாவை மட்டும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க. அவர் ரிப்போர்ட் அனுப்ப சொல்லி இரண்டு மூன்று தடவை கேட்டாச்சு. எதுவும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன். அது பழைய ரிப்போர்ட்னு திரும்ப திரும்ப சொல்லறார். ஆனா அப்பாவை பார்க்க அப்படி தோணலை. ஏதோ மறைக்கறார்” என்று வருத்தம் தெரிவித்தாள்.
“தினமும் கொஞ்சம் பேசுவேன். நேர்ல போய் ஒரு தடவை விசாரிக்கறேன்மா.” என்றார்.
“சரிம்மா வைக்கறேன்” என்று அணைத்தார்.
போனை வைத்துவிட்டு, விக்ரமை காணவும், அவனோ திருட்டு முழியோடு, பால்கனி சென்றான். சிறிது நேரம் செலவழித்து வேடிக்கை பார்த்தவனுக்கு டிவி பார்க்கவோ, போன் பார்க்கவோ பிடிக்காமல் உறங்க செல்ல நினைத்தான். விழித்திருந்து வினோதினியை பற்றி ஏதேனும் சண்டை ஆரம்பிக்குமோ என்ற அச்சம்.
உறங்க செல்வதற்கு முன், வாட்டர் பாட்டிலை எடுக்க, சற்று முன் தான் ஹரிணி தண்ணீர் பாட்டிலின் மூடியை சரியாக மூடாமல் இருந்திருப்பாள் போல விக்ரம் தூக்கவும், கை நழுவி சோபாவில் நீர் கொட்டியது.
சண்டை வேண்டாம்னு ஓடப்பார்த்தும் சண்டையை நுழைக்கறாரே. இந்த கடவுளுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை.’ என்று முழித்தவன் “எ…. எனக்கு தண்ணீயே வேணாம்” என்று ஓடினான்.
ஹரிணிக்கு போன் வரவும் அவள் தான் மூடியை, சரியாக மூடாமல் விட்ட தவறு புரிய, விக்ரம் ஓடவும், அவனிடம் சண்டை ஆரம்பிக்கவில்லை.
விக்ரமோ ‘அப்பாடி’ என்று மெத்தையில் விழுந்தான். அவ்விடம் முழுக்கவே லேசான மல்லிப்பூ வாசம், விக்ரமை இழுக்க அது ஹரிணியின் வாசம் என்று உணர நேரமெடுக்கவில்லை.
‘ஓ காட்.’ என்று முனுமுனுத்தவனுக்கு பெண் வாசம் அதுவும் கிறக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத ரசவாதம் அவனுக்குள் தோன்றியது
இருபது நிமிடம் கழித்து ஹரிணி உள்ளே வருவதை லேசான கொலுசு சத்தத்தினாலும் அதிர்வாலும் உணர்ந்தான்.
ஹரிணி முனங்கிக்கொண்டே அவனது அறையில் வந்து படுத்தாள்.
இந்த சோபா நாளைக்குள்ள காய்ந்து போகணும். சே’ என்று சலிப்படைவதையும் கேட்டாலும் இமை திறக்காமல் இருந்தான்.
இதற்கு முன் ஹரிணி வீட்டிலும், தன் வீட்டிலும், ஒரு அறையில் ஒரே மெத்தையில் தான் வேறுவழியின்றி உறங்கிய தருணத்தோடு இந்த பொழுதை ஒப்பிட்டுக்கொண்டு, பெரிதாக மிகைப்படுத்தவில்லை.
ஹரிணிக்கும் மாலையில் தங்கை சொன்னதே நினைவில் வந்து சென்றது.
‘அன்னிக்கு உங்களுக்கு கல்யாணமான மூனாவது நாள் அப்பா இல்லை. அம்மா பக்கத்துல காய்கறி வாங்க போனாங்க. நீயும் மாடில இருந்த. மாமா கீழ ரூம்ல இருந்தார்.
நான் அதை கவனிக்காம டிரஸ் மாத்த போய் டாப்பை ரிமூவ் பண்ணிட்டேன். மாமா உடனே ‘ஏய் என்ன பண்ணற. நான் இருக்கேன்னு கத்தினார். அதோட தலை குனிந்து வந்து, யார் உள்ள இருக்கா இல்லைனு பார்க்க மாட்டியா. முன்ன யாரும் இல்லை. இப்ப உன் அக்கா புருஷன்னு நான் இங்க சுத்தறேன். கொஞ்சமாவது கவனமா இரு.’னு திட்டிட்டு வெளியே போனார்.
அக்கா… மாமா அந்த இடத்துல என்ன திட்டினப்ப, அவர் மேல முன்னயிருந்த கோபம் எல்லாம் போயிடுச்சு. மாமா நினைச்சிருந்தா அங்கிருந்த பாத்ரூம்ல மறைஞ்சிட்டு ரெஸ்ட் ரூம் வந்தேன்னு சொல்லி பொய்யா நடிச்சிருக்கலாம். ஆனா மாமா அடுத்த செகண்ட் கத்தி வெளியே போனார். அதுவும் தலையை திருப்பிட்டு… எனக்கென்னவோ மாமா ரொம்ப நல்லவரா தெரியறார்.
முன்ன அவர் உன் கழுத்தை பிடிச்சப்ப பயமாயிருந்தது. இதுல லவ் பெயிலியர் என்றதும், ஏன் தான் அப்பா இவரை அக்காவுக்கு செலக்ட் பண்ணினார்னு நினைச்சேன். ஆனா மாமா நல்லவரா தெரியறார் அக்கா.
மாமா அப்படியென்ன திட்டினார்.” என்று ரகசியம் கேட்டிட, ஹரிணி எங்கணம் விளக்குவாள்.
“ஏய்… அம்மாவிடம் இதை சொல்லிட்டு திரியாத. பயந்துட போறாங்க. அப்பறம் அவன் நல்லவனா கெட்டவனா என்ற ஆராய்ச்சியை நான் பண்ணலை.
நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சது நம்ம அப்பாவுக்காக மட்டும் தான்.’ என்றாள்.
அதென்னவோ தன் வீட்டிலும், மாமியார் வீட்டிலும், தன் தங்கையிடமும் கண்ணியம் காத்தவனான விக்ரமை, தவறாக தோன்றவுமில்லை. அதே நேரத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் நல்லதாகவும் இல்லாததால் அவனை சரியென்று கூறமுடியாது நின்றாள். ஏதோ… அவனோடு ஒரே அறையில் தங்கும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டது. அந்தளவு போதும்.
அதுவுமில்லாமல் கதவின் தாழ்பாள் இரண்டு பக்கமும் எடுத்துவிட்டாயிற்று. இனி தாழிடவும் இயலாது. அதற்கு ஈரமான சோபாவில் உருளுவதற்கு, மெத்தையே பரவாயில்லை என்று எண்ணினாள்.
விக்ரமிற்கு தூக்கம் மருந்துக்கும் மல்லிப்பூ வாசத்தால் வரவில்லை. அதைமீறி உருளவும் முடியாது, இருவரும் முதுகுக்காட்டி படுத்திருந்தனர்.
அதையும் மீறி விக்ரம் எழுந்த போது, தண்ணீர் குடிக்க செல்வதாக நடந்தான். அடுத்து ரெஸ்ட் ரூம் சென்றான். அப்பொழுதும் உறக்கம் வர மறுக்க, பால்கனி சென்று சிகரெட்டை ஊதி தள்ளினான்.
‘எனக்கு கல்யாணமாகிடுச்சு… ஒரு பொண்ணு என் கூட தனியா இருக்கா. அதுவும் என் ரூம்ல. ஆனா என்ன என் மேல செம காண்டுல இருக்கா. ஒன்றா இரண்டா வம்பு வளர்த்து வச்சியிருக்கேன்.
ஹரிணியை சந்திச்சதுலயிருந்து வம்பு தான்.
எனக்கு தெரியுது.. நான் பேசியது தப்புன்னு. ஆனா சாரி கேட்க முடியலை.
அப்பானா உயிரா இருக்கா. அவருக்காக அவளை அசிங்கமா பேசின என்னை அக்சப்ட் பண்ணிருக்கா. தன்மானம் இருக்கற எந்தவொரு பொண்ணும் நான் பேசின பேச்சுக்கு என்னை திரும்பி கூட பார்க்க மாட்டா. ஆனா இவ எனக்கு வந்ததிலருந்து சோறாக்கி வயிற்றை நிரப்பறா.
இதெல்லாம் காமன் தானே. ஆனா கல்யாணம் செய்தவங்களுக்குள் இருக்கற அன்பும் பண்பும் எங்க இரண்டு பேருக்கும் இல்லையே. இந்த கல்யாணம் நிலைக்குமா? தினமும் இந்த கேள்வி என்னை இம்சை பண்ணுது.
நான் விரும்பின நதியா… என்னை விரும்பிய நதியா. எங்கப்பா பேசின பேச்சுக்கு என்னையும் என் குடும்பமும் வேண்டாம்னு, அவ அப்பா பார்த்தவனுக்கே கழுத்தை நீட்டிட்டா. அப்படியிருக்க… என்னை ஜஸ்ட் ஹரிணி அவ அப்பாவுக்காக என்னை பிடிக்காம மேரேஜ் பண்ணிருக்க, எப்ப வேண்டுமென்றாலும் என்னை விட்டுட்டு போயிடுவா தானே?!
இந்த பொண்ணுங்களுக்கு நேசத்தை தர்ற காதலை விட காமத்தை தர்ற காதலை தான் தேடுவாங்க. லைக் நதியா மாதிரி. இவளோட எட்டி நின்று பழகி நான் ஒழுக்கசீலன்னு சர்டிபிகேட் வாங்கி என்ன பண்ணப் போறேன். அட்லீஸ்ட் அவளுக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ அவளோட இணைஞ்சிட்டா அட்லீஸ்ட் எனக்கு பெனிஃபிட்டாவாது இருக்கும். ட்ரை பண்ணினா என்ன செய்வா? ஊர்லயிருக்கற அவ அப்பா அம்மாவுக்கு போன் போட்டு சொல்லி அவங்களை கூப்பிடுவாளா? இல்லை எங்கப்பாவிடம் தான் முதலை கண்ணீர் வடிப்பாளா? இரண்டு பேரோட அப்பா வர்றதுக்குள் நான் எத்தனாவது ரவுண்ட்ல இருப்பேனோ. அப்படியே வந்தாலும், அவளுக்கு தான் அட்வைஸ் கிடைக்கும்.
நான் அஸ் எ கணவனா என் கடமையை ஆற்றுவேன்.’ என்று சிரிக்க, நெருப்பு கையை சுட்டது.
சிகரெட்டை தட்டியவன், இன்னொன்றை பற்றவைத்தான்.
அதீத புகை காரணமாக ஹரிணி இரும்ப ஆரம்பிக்க, ‘இருமல் அலாரத்தை போட்டுட்டா.’ என்றவன் அணைத்தான்.
‘நல்லவேளை இவளிடம் நடிக்கற வேலை மிச்சம். இதே புதுசா ஒருத்தின்னா, நான் ஸ்மோக் பண்ணறதை மறைச்சிருக்கணும், பிஸிக்கல் ரிலேஷின்ஷிப்ல வலுக்கட்டாயமா இந்நேரம் அவளோட இணைந்திருக்கணும். எனக்கான ஸ்பேஸ் இப்ப நிறையவே இருக்கு. அவளுக்குமே என்னை அவளா மன்னிக்க டைம் இருக்கு.’ என்று அறைக்குள் வந்தான்.
இவ்வளவு நேரம் இரும்பி தொலைத்த ஹரிணி, ‘அடுத்தவங்களுக்கு தொந்தரவு தந்துட்டு தூங்கினா தான் சிலருக்கு எல்லாம் நிம்மதியே வரும். என்ன பிறவிகளோ?’ என்று முனுமுனுத்தவள், ஆங்காங்கே ரூம் ஸ்பிரே அடித்துவிட்டு, போர்வையை முகம் முழுக்க மூடினாள்.
ரூம்ஸ் பிரேவிலிருந்து, ரோஜா நறுமணம் வீசத்துவங்க, ‘பூ பூவா வாசத்தை ரூம் முழுக்க வீசிட்டு, இவ நிம்மதியா தூங்குவா என்னால தூங்க முடியுமா? இதுல நான் அடுத்தவங்களை தொந்தரவு பண்ற ஜென்மம். இந்தம்மா ஈ எறும்பை கூட எதுவும் செய்யாதவங்க. ஒருத்தனோட உணர்வை ஏத்திவிட்டுட்டு தூங்கறா.’ என்று மனதோடு புலம்பினான். சத்தமாய் ஹரிணி போல புலம்ப
விக்ரமிற்கு என்ன பைத்தியமா? ஆனால் விக்ரம் ஏதோவொரு கிறுக்குத்தனத்தில் சிக்கி சுழல்வது அவனே அறியாதது.
-தொடரும்.

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌 adei vikram first oru sorry ya kelu da adhu unnala mudiyala pannadhu thappu nu theriyidhu aana sorry ketka maataram edhulavera serndhuta ava vititu poga maatalam ellamey thappave nenaikuradhu🙄😕🧐