அத்தியாயம்-22
ஹரிணி தந்தைக்கு அருகே இருந்த சிறு விசிட்டர் தங்கும் மெத்தையில் படுத்துக் கொண்டாள். தாலி கட்டியவனின் அலுவலக முதுகு பை மட்டும் அவ்விடத்தில் இருக்க, அவன் எங்கே உறங்கினான் என்று கூட யோசிக்கவில்லை. நள்ளிரவு தாண்டி முழிப்பு தட்ட, வெளியே வந்து எட்டி பார்த்தாள். விக்ரம் இருக்கும் சுவடு அங்கில்லை.
அவனுக்கு போனில் அழைத்து கேட்கவும் ஈகோ தடுத்தது.
அதனால் கொஞ்சம் அங்குமிங்கும் தேடி பார்த்தால், மருத்துவமனைக்கு எதிராக இருக்கும் டீக்கடையின் மரபெஞ்சில் டீயிருக்க, கையில் சிகரெட் புகை சுருள் சுருளாக புகையாக வளைந்தது.
தந்தை உறங்குவதை கண்டு வேகமாக கீழேயிறங்கி வந்தவள் விக்ரம் முன் நின்றாள்.
“எங்க இருக்கோம். எதுக்கு இருக்கோம். என்ன கவலை? இதெல்லாம் உனக்கு கவலை தராது. எப்பவும் போல பழைய லவ்வரை நினைச்சிட்டு நடுராத்திரில தூக்கம் கெட்டு, சிகரெட் பிடிக்க வந்துட்ட… அதெப்படிடா.. இப்படி ஒரு கேவலமான ஜென்மமா இருக்க.” என்று பேசியவளை, உணர்வுகளை துடைத்து போட்டவனாக “ஆமாடி… என் லவ்வரை நினைச்சி துடிச்சிட்டு இருக்கேன். உனக்கென்ன உங்கப்பனை போய் பாரு. வந்துட்டா… நிம்மதியா டீயை கூட குடிக்க விடாம?” என்று முனங்கி மேலும் புகையை இழுத்து விட்டு தன்னை சமன்படுத்த முயன்றான்.
அவனை புழுவை போல நோக்கிவிட்டு ஹரிணி தந்தையை தனியாக விட்டுவிட்டு வந்ததில் அங்கே ஒடினாள்.
அதிகாலை ரவிபிரகாஷ் வந்து சேர்ந்தார். நண்பனை கண்டதில் லேசான கண்ணீர் துளி.
“சின்ன பொண்ணு பப்ளிக் எக்ஸாம். அது முடிய கூட கல்யாணத்தை நடத்தலாம். வெறும் நிச்சயம் நடந்தா கூட போதும்னு சொன்னேன். இதுக்கு தான் கல்யாணத்தை கூட தள்ளி வைக்காம பெரியவளை என் பையனுக்கு கட்டி கொடுத்துட்டு உலகத்தை விட்டு ஓட பார்க்கறியாடா” என்று புலம்பினார்.
ஹரிணியோ ‘மாமாவும் அப்பாவும் பேசட்டும் என்று டீ குடிக்க வெளியே வந்தாள்.
விக்ரம் இன்னமும் காணவில்லை. ஒருவேளை நேற்று பேசியதற்கு, இன்று வீட்டிற்கு சென்றுவிட்டானா? அவன் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லைன்னா வீட்டுக்கு போவானா. எல்லாம் இளக்காரம்’ என்று ஹரிணிக்கு எரிச்சல் மண்டியது.
மாமனார் ரவிபிரகாஷ் வந்ததும் ஓரளவு தைரியம் வந்தவளாக நினைத்தாள். இந்த தைரியம் விக்ரம் இருக்கும் பொழுது வந்திருந்தால் கூட தனக்கு நிம்மதியளித்திருக்குமோ என்னவோ. அவனது அலட்சியம் உதாசினம் இரண்டும் ஏனோ அவன் முகத்தை கூட காண பிடிக்கவில்லை.
அதனாலோ என்னவோ விக்ரம் வந்தால் ஒதுக்கமாய் நின்றாள். கமலகண்ணன் கேட்டால், ஹாஸ்பிடலில் ரூம்ல ஒரு ஆளு இருக்கணும்னு சொல்லறாங்கப்பா. கூட்டம் வேண்டாம்னு வெளியே இருக்கேன் என்று அவனை தவிர்ப்பாள்.
ரவிபிரகாஷிடம் நடிக்க வேண்டிய அவசியமில்லை. அவருக்கு தான் வெட்ட வெளிச்சமாக மகனை பற்றி தெரியுமே.
அன்றைய பொழுது விக்ரம் லீவு கூட எடுக்காமல் அலுவலகம் செல்லவும் ஹரிணிக்கு எரிச்சலானது.
விக்ரம் செய்கையில்…. இதே அவன் அப்பா மருத்துவமனையில் இருந்தால் இப்படி செல்வானா? இதே தான் அவளுக்கு தோன்றியது.
அன்றைய இரவு, அவனை பகிரங்கமாகவே முகம் திருப்ப, அவனுமே அவளது கண்ணில் சிக்காமல் விலகினான்.
டாக்டரோ ‘உங்களோட கிட்னி உங்கப்பாவுக்கு பொருந்தலை.
டோனரின் இரத்தமும் ரெசிபியண்டின் இரத்தமும் ஒன்றாக சேர்த்து ரியாக்ஷன் வருகிறதானு முதல்ல பார்க்கணும். அதுல செட்டானா கிட்னி டோனரோட வச்சிடலாம்” என்று கூறியதும் உடைந்து விட்டாள். டாக்டரோ ‘வேறொருத்தரோட கிட்னி பொருந்துதுமா. ஆப்ரேஷனுக்கு கூட ஏற்பாடு செய்தாயிற்று’ என்று நள்ளிரவு வேளையில் கூறினார்கள். ஆப்ரேஷன் காலையில் பத்து மணி அளவு நடைப்பெறும் என்று தெரிவித்தார்கள்.
ரவிபிரகாஷ் உறக்கத்தில் இருக்க, அவரிடம் தெரிவிக்க அவசரம் காட்டவில்லை. அது போலவே தாலி கட்டியவனிடமும் தெரிவிக்க விருப்பமின்றி, ‘எங்கப்பா நல்லபடியா வரட்டும். எனக்கு அது போதும். இவனுக்கு நானா சேவகம் பார்த்து பார்த்து செய்யறேன்ல அதான் திமிரெடுத்து இருக்கான். அப்பா சரியாகட்டும் அவரோடவே ஊருக்கு போயிடணும். இவனா வந்து சாரி கேட்டா மட்டும் தான் இனி இவனோட பேச்சு வார்த்தை கூட நடத்தணும்.’ என்று முடிவுக் கட்டியவளாக தீர்மானம் செய்தாள்.
அடுத்த நாள் ரவிபிரகாஷ் அங்கும் இங்கும் நடந்து பரபரப்பாய் மாறினார்.
ஹரிணி அமைதியிலும் அமைதியாக இருந்தாள். ஆப்ரேஷன் என்பதால் பயத்தில் அமைதியாக இருப்பதாக அவர் எண்ணினார். ஓரளவு உண்மையும் அதுதான். ஹரிணி அதோடு சேர்த்து, இவரிடமும் இனி தானாக எந்த விஷயமும் பகிரக்கூடாதென்ற முடிவில் சுற்றினாள்.
ஆப்ரேஷனுக்கு ஒருபுறம் தயாராகிக்கொண்டிருக்க, கமலகண்ணனோ, “ஹரிணிம்மா.. மாப்பிள்ளையை பார்க்கணும் அவரிடம் இரண்டு வார்த்தை பேசிட்டு ஆப்ரேஷன் பண்ணிக்கறேன். அவரை கூப்பிடு” என்றார்.
ஆப்ரேஷன் என்றால் எல்லோருக்கும் இருக்கும் பயத்தில், மாப்பிள்ளையிடம் எனக்கு பிறகு என் மகளை, வீட்டை நீங்க தான் பார்த்துக்கணும். ஹரிணி ஏதாவது பேசினா சின்ன பொண்ணுனு மன்னிச்சிடுங்கன்னு சொல்லணும்’ என்ற கோரிக்கை அதிலிருந்தது.
ஹரிணிக்கோ ஆப்ரேஷன் நேரம் நெருங்க தந்தை இப்படி அவனை தேடவும், எரிச்சலானாள்.
“அப்பா… முதல்ல ஆப்ரேஷன் பண்ணிட்டு வாங்க. அவர் இங்க தான் இருப்பார்.” என்று மழுப்ப, “மாப்பிள்ளை இப்ப இங்க இல்லையா?” என்று வருத்தம் கூடியது. தனக்கு பின் தன் குடும்பத்திற்கு யாரோ என்ற கவலை அது.
தந்தை கவலைப்படவும், இருங்க அவருக்கு கூப்பிடறேன்’ என்று வேண்டாவெறுப்பாய் விக்ரமிற்கு அழைத்தாள்.
அவனோ போன் எடுக்காமல் இருக்க, வராண்டாவில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவளை தேடி, ரவிபிரகாஷ் வந்தார்.
“என்னம்மா இங்கயிருக்க?” என்றவரிடம், “உங்க பையனை கல்யாணம் செய்து நடுத்தெருவுல நிற்கலை அதான் குறை. எங்க அப்பாவுக்கு கிட்னி ஆப்ரேஷன் செய்ய போறாங்க. ஆனா இவன் நேத்துலயிருந்து ஆளையே காணோம். ஏன் மாமா… அவரிடம் பணம் கேட்டு பிடுங்கிட்டேனா? இல்லை… அவர் லவ் பெயிலியர் என்று தெரிந்தும் அவரோட முன்னாள் காதலியை வச்சி பேசி காயப்படுத்தறேன்னா? எதுவும் செய்யலையே. பிறகு ஏன் என் அப்பாவுக்கு ஆப்ரேஷன் என்றதும் ஓடிட்டார். நேத்து ஆபிஸ் கிளம்பிட்டார். ஏதோ முதல் நாள் நீங்க சொன்னதால அவர் பில் பே பண்ணிட்டார்.
அப்ப கூட எப்படியும் கணக்கு வச்சி வாங்கிடுவார்.
என்னை அசிங்கமா பேசி திட்டினார். அப்படி பேசியும், இப்படியொருத்தன் கூட என் லைப்பை நான் பிணைச்சிக்கிட்டது என்னோட அப்பாவுக்காக. அப்படியிருக்க…. என் அப்பாவை கூட உதாசினம் செய்துட்டு போறப்ப, வலிக்குது மாமா.
உங்க பையனை கட்டிக்கிட்டு என்ன புரோஜனம். எங்கப்பா மாப்பிள்ளையோட பேசிட்டு தான் ஆப்ரேஷனுக்கு போவேன்னு அடம் பிடிக்கறார்.” என்று மூச்சு வாங்க பேசினாள் கண்ணீரும் ஒரு பக்கம் வழிந்தது.
ரவிபிரகாஷோ “பேசி முடிச்சிட்டியாம்மா… நல்லதும்மா.. என் பையன் ஒரு பொண்ணை விரும்பினானே அந்த பொண்ணு விட்டு போனதுக்கு காரணம் நான் தான். அது எதனால் என்றால்…’ என்று ஆரம்பித்தவர் இந்த சூழ்நிலை வோண்டாமென்று தோன்ற, “இல்லைம்மா.. இந்த நேரம் விளக்கிட்டு இருக்க முடியாது. என் பையனை நான் புகழ்வதா நீ நினைச்சிப்ப.
ஆனா இதே வாயால நீ என் பையனை நல்லவனா பேசுவ. அன்னிக்கு பேசினியே.. ஒரு ரீல்ஸ் பார்த்து நல்லவனா தான் தெரியறார். கல்யாணத்துக்கு சம்மதிக்கறேன்னு. அதே போல சொல்லுவ. நாளைக்கே.. சொல்லுவ. இல்லை இல்லை… இன்னிக்கே சொல்லுவ. முதல்ல போய் ஆப்ரேஷனுக்கு உங்க அப்பாவை தயார்படுத்தி கவனி. நான் அவனிடம் பேசறேன்.” என்று கமலகண்ணன் இருக்கும் இடம் நோக்கி நடந்தார்.
ஹரிணியோ என்னவோ பேசி ஆப்ரேஷனுக்கு சம்மதிக்க வைத்திடுவார் என்றதால் விக்ரமிற்கு அழைக்காமல் பின்னால் சென்றாள்.
“நீ ஆப்ரேஷன் பண்ணிட்டு வந்துடு. என் பையன் வருவான்.” என்றுரைக்க, ‘மாப்பிள்ளை வேலைக்கு சென்று விட்டார். மகள் அதனால் கொதிநிலையில் இருக்கின்றாள். நண்பன் அவனது மகனுக்காக சமாளிக்கின்றான்’ என்று நினைத்து ஆப்ரேஷன் செல்வதற்கு தயாரானார்.
ஆப்ரேஷன் தியேட்டரில் தந்தையை அழைத்து சென்றதும், ரவிபிரகாஷ் நர்ஸிடம் “சார் கிட்னி கொடுத்தவர் ரூம் நம்பர் 323ல இருக்கார். மயக்கம் தெளிய அரை மணி நேரம் ஆகலாம்.” என்று செல்லவும், “நான் எங்கப்பாவுக்கு கிட்னி கொடுத்தவரை பார்க்கணும். நன்றி சொல்லணும்” என்று நர்ஸிடம் யார் என்னவென விவரம் அறிய துடித்தாள்.
நர்ஸோ ரவிபிரகாஷை கண்டு, “அவர் கூட்டிட்டு போவார்” என்று பீடிகை போட்டு சென்றாள்.
தந்தைக்கு ஆப்ரேஷன் நடக்கவும், ரவிபிரகாஷை கண்டவள் “எங்கப்பாவுக்கு கிட்னி கொடுத்து உதவியவரை பார்க்கணும். என்னை கூட்டிட்டு போங்க” என்று மாமா என்ற வார்த்தையை கத்தரித்து மொட்டையாக பேசினாள். அதை ரவிபிரகாஷும் கவனித்தார். இந்த நேரம் உறவு முறை சொல்லி பேச வைக்க இயலுமா?
“வாம்மா.” என்று அழைத்து சென்றார்.
323 அறையில் செருப்பை கழட்டிவிட்டு, அறையை சுட்டிக்காட்டி, போக கூறினார்.
ஹரிணியும் கதவை திறந்து உள்ளே எட்டி பார்த்தாள். ஆணோ பெண்ணோ, எந்த வயதுக்குரியவரோ, தன் தந்தை நலம்பெற கடவுள் நேரத்திற்கு அனுப்பிய தூதனாக உள்ள வந்தவளுக்கு அதிர்ச்சி.
அங்கே மயக்கமாய் படுத்துக் கிடந்தது விக்ரம்.
அலட்டலும் தெனவாட்டும், பேச்சில் நெருஞ்சிமுள்ளும், அருகே சென்றால் புகை நாற்றமும், மது வாடையும் இவளை குடைச்சல் தந்து கடுப்பை ஏற்றும் விக்ரம் எவ்வித அலட்டலுமின்றி மயக்கத்தில் இருந்தான்.
ஹரிணியோ “மா..மாமா” என்று ரவிபிரகாஷை நம்பாமல் பார்வையிட, “உன் புருஷன் தான்மா… உங்கப்பாவை நீ இங்க சேர்த்ததும், பில் பே பண்ண சொன்னது நான் இல்லைம்மா. அவனா தான் தந்தான். அடுத்து வாட்சப்ல உங்கப்பாவோட மெடிக்கல் சம்மரி ஸ்டேடஸ் அனுப்ப சொல்லி டாக்டரிடம் ஆப்ரேஷனுக்கு கிட்னி டோனர் தேடினப்ப, அவனுக்கும் அதே பிளட் குரூப் என்று முதல்லயே சொல்லிட்டான். உன்னுடையது செட்டாகலை என்று தெரிந்து அடுத்து அவனோடதிலும் Blood Group Test, Crossmatch Test, Genetic Matching, Donor Medical Evaluation (Scan, ECG, Kidney Function Tests, etc. எல்லாமே அவனும் பார்த்துட்டான்.
அவனோடது உங்கப்பாவுக்கு பொருத்தலாம்னு முடிவானதும் தான், அடுத்தடுத்து நாலைந்து நாளாவது ரெஸ்ட் எடுக்கணும்னு தான் அன்னிக்கு ஆபிஸ்ல போய் லீவு அப்ளை பண்ணிட்டு வந்தான்.
நேத்து நைட் கூட உன்னிடம் சொல்லிடலாம்னு சொன்னேன். ‘இவன் கிட்னி ஒன்னும் எங்கப்பாவுக்கு வேண்டாம்னு சொல்வா. இல்லை… கமலகண்ணனே மாப்பிள்ளை கிட்னி எல்லாம் வேண்டாம்னு மறுப்பார்’னு ஒரு பயம் இருந்தது.
அதனால தான் நேத்தும் இன்னிக்கு ஆப்ரேஷன் போயிட்டு வர்ற வரையும் எதுவும் சொல்லலை.
இப்ப கிட்னி எடுத்துட்டு இவனை இங்க விட்டாச்சு. அங்க உங்க அப்பாவுக்கு ஆப்ரேஷன் நடக்கு. என் பையனை உனக்கு கல்யாணம் செய்து, உன்னை குழில தள்ளறதுக்கு இல்லைம்மா.
அவன் லவ்வை நான் தான் கெடுத்துட்டேன். நான் தான் பொதுயிடத்துல அந்த பொண்ணை ஏசிட்டேன். தப்பு தான்… அவன் தற்கொலை பண்ணிக்க போனதும், உடம்பெல்லாம் உதறிடுச்சு. அவன் காதலை கத்தரிச்சிட்டு பெரிய தப்பு பண்ணிட்டேனேனு. எனக்குன்னு ஒரு பொண்ணுயிருந்து அது இப்படி பொதுயிடத்துல நான் பேசுவேனானு என் பையன் கேட்டப்ப, உடைஞ்சிட்டேன்.
அதுக்கு தான் அவன் என்ன பேசினாலும் தாங்கிட்டு இருந்தேன். அங்க கண்ணெதிர்ல தற்கொலை பண்ணிக்கிட நினைச்சான். இங்க சென்னையில தனியா விட மனசில்லாம தான் பொண்ணு பார்த்தேன். நண்பனோட மகளே மருமகளா வர்றப்ப சொல்லி புரிய வச்சிடலாம்னு தான் இருந்தேன். ஆனா அவன் என்ன பேசி, உனக்கும் அவனுக்கும் ஒத்து வராம போச்சோ. இப்ப வரை அவன் உன் மனசுல இடம் பிடிக்கலை.
அவனுக்கு ஒரு காதல் தோல்வியில முடிஞ்சதில், உன்னை ஏற்க வழி தெரியாம இருக்கானா? ஒன்னும் புரியலை. ஆனா ஒன்னும்மா…
என் பையனை கல்யாணம் பண்ணி நீ கஷ்டத்தை அனுபவிப்பதா பேசற.
உங்கப்பா உயிரை என் பையன் காப்பாத்தியிருக்கான். அதுக்காகவாது இந்த கல்யாணம் சரியானதா போச்சு.
ஏதோ.. கிட்னி தந்தவருக்கு தேங்க் பண்ணணும்னு சொன்னியே… போய் உன் புருஷனுக்கு நன்றியை சொல்லு.
ஆனா மயக்கம் தெளிய இன்னும் அரைமணி நேரம் ஆகும். இப்ப நீ பேசினா அவனுக்கு சேராது. திட்டணும்னா கூட திட்டிக்கோ” என்று சத்தமில்லாமல் வெளியேறினார்.
ஹரிணிக்கு விக்ரம் அருகே செல்ல கால்
கள் நடுங்கியது. இந்த மூன்று நாளில் அவனை எந்தளவு மகா மட்டமாக எண்ணிவிட்டாள்.
-தொடரும்

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 naan appove nenachen sis vikram dhan kadaisila donate panna poran nu adhe mathiri nadandhuduchu🤔 eni renduperum per life eppdi erukum parpom 🧐🤔
Wow Vikram unbelievable. Then y u hurt harini often? Really a unexpected twist sis. Very very intresting sis. Harini what will do now?
Aana sisy romba periya twist vachitinga vikram intha alavu panuvanu yosikala panitan yar kitta kekanum la illama mudivu panni koduthutan aana yen harini kitta mattum thimirave pesuran therila konjam ego thadukuthu pola , but thappu thana antha varthai sonnathu. Athuku mannipu ketu iruntha inneram harini un kuda nalla wife ah irunthu irupale