அத்தியாயம்-23
மாமனார் முன் வந்து, தேம்பியபடி, “அவர் தான் அப்பாவுக்கு கிட்னி கொடுக்க போறார்னு சத்தியமா தெரியாது மாமா. நான் அவரை ரொம்ப திட்டியிருக்கேன். அது புரியுது. ஆனா ஏன் திட்டினேன்னு என் இடத்துலயிருந்து நீங்க யோசித்தா உங்களுக்கு என் பேச்சு புரியும். அதுக்காக இப்ப நான் பேசியது சரின்னு சொல்லலை. அவர் செய்யற இந்த உதவி சின்னதுனும் சொல்ல மாட்டேன்.
தன் உடம்புல சின்னதுலயிருந்து இருந்த ஒரு பார்ட்ஸ் வேறொருத்தருக்கு தருவதுக்கு மனசு வேணும். எனக்கு இந்த உதவி ரொம்ப பெருசு மாமா. ரொம்ப பெருசு.
அவர் என்னிடம் முதல் முறை பேசியது ஏதோ கோபத்துலயா.. இல்லை எரிச்சலிலா… சம்திங்.. அது வேற.. ஆனா அதுக்கு பிறகு அவரோட கேரக்டர்ல எந்த தப்பும் தெரியலை. உங்க பையன் நல்லவர் தான்.” என்று அழுது பேசவும் அவளது தலையில் பரிவாய் கைவைத்து, “அவன் உதவி செய்யலைம்மா. அவனுக்கான கடமை இது.
பொம்பள பிள்ளை இல்லாத எனக்கு மருமக தான் மக. அப்படி தான் ஆம்பள பிள்ளை இல்லாத கமலகண்ணனுக்கு மருமகன் தான் மகன். அப்படி பார்த்தா ஒரு மகனுக்குரிய கடமையில இதுவும் ஒன்னும்மா.
நீ சொன்ன மாதிரி அவன் கொஞ்சம் ஓவரா வாய் பேசுவான். சட்டுனு வார்த்தை வந்துடும். ஏன்னா என் சுபாவம் கூட அப்படி தான். டி.என்.ஏ பாரு. ஆனா தப்புன்னா மாத்திப்பான். மன்னிப்பும் கேட்பான். நான் அவனிடம் மன்னிப்பு கேட்டேன். மன்னிக்கலை…
அவன் உன்னிடம் மன்னிப்பு கேட்க ரொம்ப நாளாகாது. அதுயேனோ உங்களுக்குள் இன்னமும் பனிப்போர். ஒருவேளை இரண்டு பேர்ல யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்தா கூட பனி விலகிடும்.
அதுக்காக நீ விட்டு கொடுனு நான் பேச மாட்டேன். என் மகன் விக்ரமுக்கு ஒருத்தி கழுத்துல தாலி கட்டும் போது இன்னோருத்தி போட்ட மோதிரம் கையில இருக்கக் கூடாதுனு தெரிந்தளவு விவரம் இருக்கு. அப்படி பார்த்தா… பொண்டாட்டிக்கிட்ட ஈகோ பார்க்க கூடாதுன்னும் தெரியவரும். அப்ப தெரிய வர்றப்ப மன்னிப்பு கேட்கலாம்.
அந்த நாளும் வந்துடும். இல்லைன்னா… ‘இவ அழுதுட்டே இருக்கா. என்னால சகிக்க முடியலை. ஒரு மாதிரி இருக்கு. அவங்க அம்மாவுக்கு சொல்லிடலாமா? இல்லை நீங்களாவது உடனே வாங்க. ரொம்ப நேரம் அவ முன்ன நிற்க முடியலை. விட்டா… அழுதழுது அதுல ஸ்விமிங் அடிப்பா போல’னு ஒரே புலம்பல் புலம்பியிருக்க மாட்டான்.” என்று அவர் பேச பேச, ஹரிணிக்கு அவன் தன்னோடு இல்லாமல் வெளியே சிகரேட் புகைத்திட வெளியேறிய காரணம் புரிய கொஞ்சம் கொஞ்சமாய் தெளிந்தாள்.
தனக்காக… தன்பக்கம் சார்ந்து இதுவரை விக்ரம் யோசிக்கவில்லை. தானாக அவனுக்காக சமைத்து கொண்டு வேலைக்காரியாக திரிகின்றோமென தப்பாய் எண்ணியவளுக்கு, அவனும் அவள் பக்கம் யோசித்து பார்க்கின்றானென நன்றாகவே புரிந்தது.
“சரிம்மா… டீ குடிப்போம் வர்றியா. கமலகண்ணன் ஆப்ரேஷன் முடிய எப்படியும் மூனு நாலு மணி நேரம் ஆகும். இவனுக்கும் மயக்கம் தெளிய அரை மணி நேரத்துக்கு மேல ஆகலாம். பசிக்குது.” என்று அழைக்க சம்மதமாய் தலையாட்டி டீ குடிக்க கேண்டீன் சென்றனர். அங்கிருந்த நர்ஸிடம் தகவல் கூறிவிட்டு தான் சென்றனர்.
டீயும் வாங்கிவிட்டு சேரில் அமர்ந்ததும், “அம்மாவுக்கு சொல்லிடலாமா மாமா.” என்று கேட்க, “நாளைக்கு நேர பொண்ணு வீட்டுக்கு போகலாம்னு சொல்லி இங்க அழைச்சிட்டு வர உங்க அத்தையிடம் சொல்லிட்டேன்மா. முடிஞ்சளவு அவங்களுக்கு இங்க வந்தப்பிறகு ஆப்ரேஷன் முடிந்தது தெரிந்தா கூட நல்லது. இல்லைன்னு வை.. வர்றப்பவே கண்ணீரும் கதறலுமா வருவாங்க.” என்று சொல்வதும் நியாயமாக தோன்றியது.
‘அம்மாவுக்கு தெரிந்தா ரொம்ப பயந்து அழுதுடுவாங்க.’ என்று அவளுக்கும் தெரிந்தது.
“ஏதாவது சாப்பிடறியாம்மா.” என்று கேட்க மறுப்பாய் தலையாட்டினாள்.
இருவரும் கீழே லிப்டில் இறங்கி, விக்ரம் இருக்கும் அறைக்கு வந்தனர்.
அரை மயக்கத்தில் நர்ஸிடம் “இன்னமும் அவருக்கு ஆப்ரேஷன் முடியலையா?” என்று விசாரித்தான்.
“ஆப்ரேஷன் நடந்துட்டு இருக்கு சார். உங்க கிட்னியை அவருக்கு பொறுத்த மூனு மணி நேரம் ஆகும்.” என்று கூறிய ட்ரிப்ஸ் ஏற்றிவிட்டு சென்றார்.
ரவிபிரகாஷும், ஹரிணியும் வந்திட, “பெயின் இருக்காடா?” என்று கேட்டார்.
“இப்பத்திக்கு எதுவும் தெரியலை. லைட்டா இங்க வலிக்கு” என்று ஆப்ரேஷன் செய்து எடுத்த இடத்தை சுட்டிக்காட்டினான்.
“சுறுக்கு சுறுக்குனு இருக்கும். நாலு நாள்ல சரியாகிடும்னு இப்ப போன நர்ஸ் தான் சொல்லுச்சு.” என்றார் அவர்.
“ஐந்து நாள்” என்று திருத்தினான்.
“சரிப்பா… ஐந்து நாள்.” என்று பேசியவர், மகனையும் மருமகளையும் பார்த்து, “நான் கமலகண்ணனுக்கு ஆப்ரேஷன் செய்யற இடத்துக்கு போறேன். நீ உன் புருஷனோட பேசிட்டு வாம்மா.” என்று நாகரிகமாய் நகர்ந்தார்.
அந்த அறையில் நிசப்தம். விக்ரம் ஹரிணி இருவருமே மௌனமாக இருந்தனர்.
அதிலும் ஹரிணி கண்ணீர் விட்டு அழுது களைத்து நிற்பது, அவள் முகத்தை காணும் போதே தெரிந்துவிட்டது.
ஹரிணி மெதுவாக அவனை நிமிர்ந்து காணும் நேரம், பார்வையை சுவற்று பக்கம் நாலாப்புறம் திருப்பினான்.
ஆப்ரேஷன் செய்த உடல் களைத்து சோர்ந்திருப்பதை அவளும் அறிந்தாள்.
நன்றியை தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல்வதற்கு துடித்திருக்க, அவனோ “நீயும் உங்கப்பாவை பார்க்க போ. எனக்கு தூக்கம் வருது.” என்று விரட்ட முயன்றான்.
முதல் முறை அவனது எரிமலையை கக்கும் லாவா பேச்சிற்கு மற்றொரு கோணத்தை கவனித்தாள்.
தந்தையின் அருகே செல் என்று மறைமுகமாக கூற தான் எனக்கு தூக்கம் வருது என்று விரட்டுவதை யூகித்தாள்.
இப்படி எத்தனை வார்த்தைக்கு எத்தனை மறைப்பொருள் வார்த்தையை பூசி மொழுகி தன்னிடம் பேசினானோ? தனக்கு அதற்கெல்லாம் அர்த்தம் புரிந்திட இந்த ஜென்மம் சென்றிடுமோ என்ற அச்சம்.
இவனோடு வாழாமல், இவன் பேச்சுக்கு அர்த்தம் தெரிந்து வைத்து என்ன செய்ய போகின்றாய் என்று குழம்பினாள்.
“ஏய் உன்னதான் இங்கயிருந்து போறியா. நீ போனா தான் அந்த நர்ஸ் வந்து அடிக்கடி எட்டி பார்ப்பாங்க.” என்று அழுச்சாட்டியம் செய்தவனை கடித்து வைக்க தோன்றியது.
இந்த நிலையிலும் நர்ஸை சைட் அடிக்கின்றான் என்று சிறு குறுநகை முற்றுகையிட்டது.
“உங்களுக்கு தனியா போரடிக்குமே” என்று கேட்க, “தூங்கிடுவேன்.. நீ இருந்தா தூங்க முடியாது. டிஸ்டர்ப்பா இருக்கும்” என்று விரட்ட, ஹரிணி இம்முறை கோபம் கொள்ளாமல் எழுந்தாள்.
“உங்களுக்கு தூக்கம் வருதுன்னா நான் அப்பாவை பார்க்க போறேன்” என்று எழுந்தாள்.
அவள் செல்லும் வரை எட்டியெட்டி பார்த்து பிறகு நிஜமாகவே உறங்க ஆரம்பித்தான்.
கமலகண்ணனுக்கும் ஆப்ரேஷன் நல்லபடியாக முடிவடைந்து தனியறை வந்து சேர்ந்தார். அவருக்கும் ஊசி உபகரணத்திலேயே மாத்திரை செலுத்தப்பட்டது. இன்று முழுக்க இப்படி தான் செல்லும் என்று புரிய மாமனாரும் மருமகளும் கேண்டீனில் உணவை முடித்தனர்.
“இன்னிக்கு ட்ரிப்ஸ் ஏறிடும். நாளையிலருந்து விக்ரமுக்கு கஞ்சி இட்லி இப்படி தரலாம். உங்கப்பாவுக்கு நாளை மறுநாள் முதல் கஞ்சி தர சொல்லிட்டாங்க. இன்னும் மூனு நாளைக்கு இப்படியே ஓடிடும்.” என்றதும் ‘நாளைக்கு அம்மா வந்துடுவாங்க மாமா.’ என்றாள்.
கமலகண்ணனோ “மாப்பிள்ளை எங்கடா?” என்று ரவிபிரகாஷிடம் முதல் வார்த்தை கேட்டார்.
“மருமகளுக்கு வீடியோ கால் போடறேன் நீயே உன் மாப்பிள்ளையை பார்த்துக்கோ” என்று வீடியோ கால் போட, ஹரிணி போனில் விக்ரம் வீடியோ காலில் இருந்தான்.
மெத்தையில் இவரை போலவே நோயாளி உடையை போட்டு படுத்திருக்க, ‘எ…என்னாச்சு?’ என்று பார்வையினால் கேட்க, “உனக்கு கிட்னி பொறுத்த ஹரிணியையும் விக்ரமையும் டெஸ்ட் பண்ணியதில் விக்ரம் கிட்னி பொருத்தமா இருந்ததா டாக்டர் சொன்னாங்க. அவனும் நேரம் கடத்தாம ஆப்ரேஷன் பண்ணிட சொல்லிட்டான்.” என்று கூற, கண்கள் அருவியாக பொழிய, “டேய்.. ஆப்ரேஷன் செய்த உடம்பு. குலுங்கி அழாத. அப்பறம் கிட்னி கொடுத்ததுக்கு புரோஜனபில்லாம வேஸ்டா போயிடும்.” என்றதும் மாப்பிள்ளையின் கிட்னி கொடுத்து காப்பாற்றியிருக்க, அழுகையை அடக்கினார்.
“தூக்கம் வந்தா ரெஸ்ட் எடுங்க. எதையும் யோசிக்காதிங்க மாமா” என்றான்.
“வீடியோ காலை கட் பண்ணு” என்று ஹரிணியிடம் வேறு முகத்தை காட்டினான்.
“அப்பா.. அவருக்கு தூக்கம் வருதாம். நீங்களும் ரெஸ்ட் எடுங்க” என்று துண்டித்தாள்.
விக்ரம் பேசாவிட்டாலும் அவனுடன் அதே அறையில் அமர்ந்து போனை நோண்டினாள். அவனோ அங்கிருந்த டிவியில் சன்மியூஸிக்கில் பாடலை கேட்டு இமை மூடினான்.
அன்றைய நாட்கள் அப்படியே சென்றது.
இரவு உறங்கும் முன் இயற்கை உபாதை கழிக்க விக்ரம் நினைக்க, அங்கே இருந்தது என்னவோ ஹரிணி தான். இன்று மட்டும் நடக்க வேண்டாமென கூறியிருக்க, என்ன தான் பெட்பேன் இருந்தாலும் ஹரிணியிடம் கூற தயங்கி, “எங்கப்பா எங்க? அவரை கூப்பிடு” என்றான்.
”மாமா அப்பாவை பார்த்துக்க அங்க இருப்பதா சொல்லிட்டார். உங்களுக்கு ஏதாவது தேவைன்னா.. என்னிடம் கேளுங்க. தண்ணி வேணுமா?” என்று வாட்டர் பாட்டிலை எடுக்க, “பச்.. அவரை கூப்பிடு.” என்றான்.
“மணி பதினொன்னு ஆகுது. மாமா தூங்கியிருப்பார்.” என்று கூற, “பரவாயில்லை… எழுப்பி நான் வரச்சொன்னதா சொல்லு” என்றான்.
“நான் உங்க ஒய்ஃப் தானே. என்னிடம் சொல்லுங்க. மாமாவை எல்லாம் எழுப்ப முடியாது.” என்றாள்.
அவள் வாயால் முதல் முறை நான் உங்க ஒய்ஃப் என்று கேட்டதும் விக்ரமோ, “நாம ஒன்னும் கணவன் மனைவியா இதுவரை வாழலை. தயவு செய்து அப்பாவை கூப்பிடு” என்றான்.
“என்னனு என்கிட்ட சொல்லுங்க.” என்று பிடிவாதம் பிடிக்க, “எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும். இன்னிக்கு எழுந்து நடக்க வேண்டாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க. பெட்பேன் வைக்கணும்” என்று கோபமாய் உரைத்திட, ஹரிணி பேச்சற்று நின்றாள்.
நிச்சயம் அவளால் செய்ய முடியாத காரியம்.
ஆனால் மாமாவை எழுப்பவும் மனமின்றி, அங்கிருந்த பேட்பேனை அவன் மெத்தையருகே வைத்துவிட்டு கதவை திறந்து வெளியேறினாள்.
சற்று நேரம் கழித்து, “உள்ள வரலாம்” என்று அழைத்தான்.
அவன் கண்களை சந்திக்க இயலாது, அவளொரு செவிலியாக பெட்பேனை கொண்டு சென்றாள்.
அதன்பின் அவன் உறங்க, ஹரிணியும் தனக்கான இடத்தில் வந்து படுத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் பத்து மணி அளவில் மாலதி, வினோதினியை ராதிகா அழைத்து வந்தார்.
ரவிபிரகாஷ் கூறியது போல மகள் வீட்டுக்கு நேரா போகலாமென தான் அழைத்து வந்தது. மருத்துவமனை பெயரை கூறி வழிகூற, மாலதி ஹாஸ்பிடல்லா? என்று கேட்டதற்கு, ‘லேண்ட்மார்க் அண்ணி’ என்று சமாளித்து அழைத்து வந்தார்.
பின்னர் ரவிபிரகாஷ் கேண்டினில் அழைத்து சென்று நிலவரத்தை கலவரம் குறைத்து, தெளிவாக்கி கமலகண்ணனை காண கூட்டிக் கொண்டு வந்தார்.
“இதுக்கு தான் அவ அப்பாவை மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ண கூட்டிட்டு போங்கனு படிச்சி படிச்சி சொன்னாளா? அய்யோ இது தெரியாம போனேனே.” என்று மாலதி அழுது புலம்பினார்.
ராதிகாவோ ‘எம்பையன் கிட்னி கொடுத்தானா?’ என்று அவனை காண ஓடினார்.
அங்கே விக்ரமிற்கு டவல்பாத் செய்தாள் ஹரிணி. விக்ரமின் முறுக்கேறிய நெஞ்சமதில் டவலால் நீரை தொட்டு தடவ, அவனோ ஜிம்பாய் போல உடலை இறுக வைத்து ஹரிணியை வெறித்தான்.
ஹரிணிக்கு நேற்றும் இன்றும் விக்ரமின் செய்கை தன் நலனுக்கு என்று புரிந்ததிலிருந்து, அவன் மீதான அனல் பார்வை தாபப்பார்வையாக வழிந்தது.
அதிலும் தன்னையே வைத்த கண் வாங்காமல் அவன் காண, இவளோ அவன் உடலை தொட்டு தடுமாறினாள்.
ராதிகா வரவும், அவசரமாய் அவன் மீது வைத்திருந்த பூந்தூவாலையை நழுவ விட்டு, எழுந்தாள்.
அந்த நேர
ம் அவள் கையை விக்ரம் கைகள் பிடித்து ‘ஏன் ஓடற’ என்ற விதத்தில் அழுத்தமாய் பிடித்தது.
-தொடரும்.

Ipo tha harini ku avan pesurathu puriuthu irunthalum vikram atha konjam porumaiya pesi puriya vaichi irukalam it’s ok ivlo thuram kidney kapatha vanthu irukan operation panitan eni rendu perum nalla pesi paaguvangala pakanum
Super super. Vikram good one da. Treat harini as ur wife. She will also understand u da really a good twist for the story. Very intresting sis.
Superb👍👌👌💯👌👍👍👌💯 lovely moments😊❤😊😊❤❤❤❤ vikram super