அத்தியாயம்-26
“இப்ப இந்த இடம் காலியா தானே இருக்கு. என்னை அதுல லாக் பண்ணிடு” என்று விக்ரம் நெஞ்சை தொட்டு பேச, “என் ஹார்ட் இந்த இடத்துல இருக்குன்னா… என் நெஞ்சுல எம்டி பிளேஸ். அதுல நீ தாராளமா இருக்கலாம். என்னை எப்படி வேண்டுமென்றாலும் ஆட்சி செய்யலாம்” என்று அவளை போலவே அவளது நெஞ்சில் கைவைத்து பேச, ஹரிணி மெதுவாக பின்னகர்ந்தாள். அதன்பிறகே அவளது மார்பில் தன் விரலால் தொட்டு பேசியதை அறிந்து, “இதுக்கும் சேர்த்து சாரி. அன்னிக்கு பேசியதுக்கு ரொம்ப ரொம்ப சாரி. உன்னை அந்த வார்த்தை அப்ப காயப்படுத்தியிருக்கும். ஐ நோ. ரியலி சாரி ஹரிணி” என்று மெய்யாய் வருந்தினான்.
ஒரு வழியாக மன்னிப்பு கேட்டதும், குக்கர் விசில் கொடுக்க, “நான் பூரி உருட்ட போறேன். நீங்க உருட்ட வர்றிங்களா?” என்று துணைக்கு கூப்பிட, “இனி என்ன.. லவ் டயலாக்கா உருட்ட வேண்டியது தான்” என்று கண்சிமிட்டி சிரிக்க, அவனை போலியாக முறைத்து சமையலறைக்கு சென்றாள்.
இதயம் மிகவும் இலவம் பஞ்சாக மாற, அவளை தேடி வந்தான்.
“உங்களுக்கு இட்லி அவிச்சு வச்சியிருக்கேன். சப்பாத்தி ஜீரணத்துக்கு கஷ்டமாயிருக்கலாம். தையல் ஆறுற வரை இட்லி பொங்கல், இப்படியே இருக்கட்டும்.” என்று தனக்கு மட்டும் பூரியை உருட்டி கொண்டவளிடம் சரியென்றான்.
ரயிலில் எல்லோரும் ஏறிவிட்டாரா என்று கேட்டு நன்றாக பேசி அணைத்தனர். பொண்ணு வாய்ஸ்ல சந்தோஷம் தெரியுதுடா’ என்று கமலகண்ணன் ஆனந்தப்பட, “அதெல்லாம் என் பையன் சந்தோஷமா பார்த்துப்பான்டா.” என்று இருவரும் பேசிக்கொள்ள, மாலதி ராதிகாவிடம், “சம்பந்தி… நான் கூட மாப்பிள்ளையை முன்ன தப்பா நினைச்சோம். ஆனா இப்ப மாப்பிள்ளை இல்லைன்னா என் தாலி பாக்கியம் நிலைச்சிருக்காது.” என்று கலங்கி கூறவும், ராதிகாவுமே, ”ஏன் அண்ணி… அண்ணாவுக்கு அதெல்லாம் ஒன்னும் ஆகாது. இனிமே பாருங்க. நல்லதே நடக்கும்” என்று ஆறுதலுரைத்தார்.
வினோதினியும் நிம்மதியாக உணர்ந்தாள். அவளுக்கு தன் மாமா அக்காவின் கழுத்தை நெறித்து தூக்கியது தான் நினைவில் இருந்தது. ஆனால் அதன்பின் அவளிடம் ரூம்ல டிரஸ் மாத்தறதா இருந்தா யாராவது இருக்காங்களா என்று ஒழுங்கா செக் பண்ணிட்டு மாத்து.’ என்று கண்ணை மூடி பேசி சென்றதும் நல்லபிப்ராயம் வந்து சேர, இங்கே வந்ததும் அக்கா வாழும் வீடும், அவளது பொறாமையும் கண்டு சிரிப்பு வந்துவிட்டது. கூடுதலாக விக்ரம் மாமா தன்னிடம் நன்றாக பேசவும் அவளுக்கு பிடித்திருந்தது.
ஊருக்கு கிளம்பும் போது கூட, ‘உங்கக்கா போபோனு விரட்டவும் மாமா தானேனு ஒதுங்கி எல்லாம் போகாத. எனக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி யாருமில்லை. சிங்கிள் சைல்ட். உன்னை பிரெண்டா தங்கச்சியா மச்சினிச்சியா பார்ப்பேன்.
சோ எதுனாலும் தயங்காம பேசு.’ என்று கூறியிருக்க, தந்தைக்கு வேறு கிட்னி தந்ததில் கூடுதலாக விக்ரமை தந்தைக்கு நிகராகவே காண துவங்கிவிட்டாள்.
இங்கு சாப்பிட ஆரம்பித்த உறங்க தயாராகினார்கள் விக்ரம் ஹரிணி.
விக்ரம் காலாட்டியபடி படுத்திருக்க, அவனை அணைத்து கொண்டு ஹரிணி நெருங்கினாள்.
விக்ரம் கூடுதலாக நெருக்க, “உங்களுக்கு ஆப்ரேஷன் செய்த தையல் ஆறலை. ரொம்ப க்ளேஸா இருக்க வேண்டாமே” என்றாள்.
“என் நெருக்கத்தை தவிர்க்க இதுவொரு காரணமா?” என்றவனிடம், “இப்படி பேசதிங்க. கஷ்டமாயிருக்கு. தையல் ஆறட்டும்.” என்றவள் அவன் கை வளைவில் தலை வைத்து படுத்துக் கொண்டு, அவன் நெஞ்சில் கையால் தாளமிட்டாள்.
“நானும் இது போல தாளமிடவா?” என்றவன் அவள் மிரள, கள்வனாய் சிரித்து, அவளிடையை பற்றினான்.
லேசான உதறல், மேனி சிலிர்ப்பு, உள்ளத்தில் மகிழ்ச்சி, உடலில் கிளர்ச்சி என்று பலவித ரசவாதம் நிகழ, விக்ரமின் உடல்நிலை காரணமாக முத்தம் கூட சைவமாக மாற்றி கொண்டார்கள்.
எந்தவிதமான முத்தமும் இல்லாமல் ஏக்கம் கொண்ட லாவா மன்னவனுக்கு, கன்னத்து முத்தம் கிடைத்த நிறைவு, அவளது கழுத்தில் முகம் புதைத்து, முத்தத்தை விதைத்து, தன் லாவா கோபங்களை செயலிழந்து போக செய்தான்.
After Few Days…
விக்ரம் கையை விரித்து சோம்பல் முறிக்க, பக்கத்தில் ஹரிணி உறங்குவதை கண்டான்.
“ஏய் ஹரிணி… என்னடி தூங்கிட்டு இருக்க. இன்னிக்கு ஆபிஸ் போகணும்னு சொன்னேனே” என்று உலுக்க, “வோர்க் ஃப்ரம் ஹோம் இல்லையா?” என்று கேட்டு சோர்வாய் எழுந்தாள்.
“நேத்தே ஆபிஸ் போகணும்னு சொன்னேன். சரி சரினு கதை கேட்டுட்டு தூங்கற. டிபனாவது பண்ணு” என்றான்.
தையல் போட்ட சுவடு ஓரளவு நன்றாக ஆறியிருக்க, இன்று அலுவலகம் செல்ல திட்டமிட்டான். இத்தனை நாள் வீட்டில் இருந்து வேலை பார்க்க, ஹரிணியும் கூடவே அமர்ந்து விக்ரமோடு கதை அளந்து, அவனை பற்றி அவளும், அவளை பற்றி அவனும் பேசிக் கொண்டார்கள்.
அதில் விக்ரம் பிறந்து வளர்ந்தது, அன்னை தந்தையிடம் செய்த சேட்டை, இன்பம் துன்பம், பள்ளி கல்லூரி நாட்கள், கல்யாண ஆல்பத்தில் சொந்தப்பந்ததில் பிடித்தவர் பிடிக்காதவர், நண்பர்கள், நதியா மீது ஏற்பட்ட காதல், அவளோடு எந்தளவு பழகிய வரைமுறை, தற்கொலை செய்த போது அஜய் தன்னுடன் இருந்து பார்த்துக்கொண்ட விதம், நதியாவினை சந்தித்தப்பின் அவள் பேசிய வார்த்தைகளை கடந்து வந்தப்பின், தந்தை தனக்கு நல்லது செய்ததாகவே நினைத்தான். எக்காலத்திலும் கேரக்டர் மாறாத பெண்ணாக இல்லாமல் மாறியதால், நதியாவுடன் பிரிவு ஏற்படாமல் போனால் என்றாவது அவள் தனக்கான சரியான துணை இல்லை என்று எண்ணியிருக்க வாய்ப்புண்டு என்று பலவிதமாக தன் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பேசினான்.
ஹரிணியும் தந்தை அவருக்கு வாரிசாக பையனை எதிர்பார்த்து இரண்டும் பெண் குழந்தைகளாக போனதும், முதலில் வாரிசு இல்லையே என்று வருத்தமாக இருந்தவர், பிறகு தான் பெண் குழந்தையும் தன் வாரிசு என்று புரிந்து படிக்க வைத்து ஆளாக்கிய கதையை கூறினாள். தங்கையோடு நடக்கும் சண்டைகள், சமரசம் என்று பல சுவாரசியமான சம்பத்தை ஒற்றை பிள்ளையாக வளர்ந்தவனிடம் கதையளந்தாள்.
தனக்கும் நிறைய காதல் கடிதம் வந்தது. ஆனால் தந்தைக்கு பயந்தே எந்த காதலையும் ஏற்கவில்லை. ஒருவேளை ஏற்றியிருந்தால், உங்ககிட்ட இருந்து தப்பித்திருப்பேன்.’ என்று நகைச்சுவையாக கேலியும் செய்தாள்.
விக்ரமும் ஹரிணியும் அதற்குபிறகு விருப்பு வெறுப்பை பேசி முடித்து, தங்களுக்குள், சிறு சிறு தீண்டல், தொடுதல், தோளில் தலையை சாய்த்து கொள்ளுதல், மடியில் படுத்துக் கொள்ளுதல் என்று உடலாலும் நெருங்க முயன்றார்கள்.
ஆனால் கன்னத்து முத்தம் நெற்றி முத்தம் தாண்டி ஹரிணியால் முன்னேற முடியவில்லை. விக்ரம் தான் இதழ் முத்தம் கேட்டு தொந்தரவு செய்ய, இரண்டு மூன்று நாளாக மறுத்து கொண்டு திரிகின்றாள். விக்ரமோ இதழ் முத்தம் என்று உதட்டில் இடம் கொடுத்தால் முழு மெத்தையிலும் வித்தைக்கு தயாராக இருந்தான்.
டீ ரஸ்க் எடுத்து தந்தவள், பிரட் ஆம்லேட் போட்டு தந்தாள்.
மதியம் வெளியே சாப்பிடுவிங்களா?” என்று விக்ரமிடம் கேட்க, “இல்லை… மூனு மணிக்கு வந்துடுவேன். வீட்டுக்கு வந்து சாப்பிடறேன்.” என்று மடமடவென சூடான பிரட் ஆம்லேட்டை விழுங்கினான். ஆவிபறக்க, ”சுடப்போகுது விக்ரம். பொறுமையா சாப்பிடு” என்று தண்ணீரை தர, “லேட்டாகிடுச்சுடி மெட்ரோ பிடிச்சு போகணும்.” என்று தண்ணீரை பருகினான்.
“குட் பை பொண்டாட்டி” என்று கன்னத்தில் முத்தம் வைத்து பறந்தான்.
ஹரிணியோ பீரியட்ஸ் முடிந்து எட்டு நாளை கடந்திருக்க, கண்ணாடியில் அவளது பிம்பத்திடம் அவர் ரொம்ப ஆசையா நெருங்கறார். லிப்ல கிஸ் கேட்கறார். எப்படி நோ சொல்லறது. எஸ் சொல்லவும் தயக்கமா இருக்கு. ஆனா இன்னொரு முறை கேட்டா மறுக்க கூடாது. பாவம் தள்ளி போட்டு அவரை காக்க வைக்கறேன்” என்று வெட்கத்துடன் வீட்டு வேலையில் தன்னை புகுத்தி கொண்டாள்.
மூன்று மணி அளவில் விக்ரம் வருவதால், மதிய உணவை சமைத்தாள். அவனும் சொன்ன நேரத்தில் வந்து நின்றவன், குளிச்சிட்டு சாப்பிட்டு “ஐனாக்ஸில் ஈவினிங் ஷோ டிக்கெட் எடுத்திருக்கேன். அப்படியே அங்க படம் முடிந்து, ஈவினிங் ஷாப்பிங், நெக்ஸ்ட் டின்னர் முடிச்சிட்டு வரலாம்” என்றான்.
ஹரிணி அதற்கேற்றது போல சிவப்பு டீஷர்ட் ஜீன் அணிந்து நின்றாள்.
தந்தை ஊரில் எல்லாம் போடுவதற்கு அனுமதியில்லை. இங்கே விக்ரம் அவனுக்கு பிடித்ததாக வாங்கி தந்திருந்தான்.
அவனோடு செல்வதால் வேகமாய் சாப்பிட்டாள்.
ஆட்டோவில் புக் செய்து பயணம் செய்ய, “திருப்பூர்னா பைக்ல சும்மா சல்லுனு கிளம்பியிருக்கலாம். பேசாம ஊருக்கு போறப்ப பைக்கை இங்க அனுப்ப சொல்லிடவா?” என்று கேட்டான்.
ஹரிணி சம்மதமாய் தலையாட்டினாள்.
காந்தாரா படம் பார்க்க வந்தவர்களோ அந்த படத்தின் காட்சியமைப்பில் தங்களை மறந்தார்கள்.
சின்ன சின்ன சில்மிஷம் செய்ய நினைத்தவன் கூட, அந்த நேரம் அதெல்லாம் வேண்டாமென எண்ணிவிட்டான்.
படம் முடியவும், “ஹீரோயின் என்ற பெயர்ல வில்வி. பார்றேன்… அழகா அம்சமா இருந்துட்டு, ஹீரோவோட முதுகுல குத்துறா. இதுக்கு காதலிக்காம இருந்தா, அந்த பொண்ணுக்கிட்ட சாமியை கொடுக்காம இருந்திருக்கலாம்” என்று பேசியவனுக்கு கிட்டதட்ட நதியாவுமே வில்லி ரோல் போல வந்து சென்றதை எண்ணினான்.
“நீ படத்தை பத்தி ஒன்னும் சொல்லலை. “ஒரு மாதிரி இருந்தது. காட்சியமைப்பு எல்லாம் சூப்பரா இருந்தது. செய்வினையெல்லாம் பார்த்தா பக்குனு இருந்தது. ரொம்ப வருஷம் கழிச்சு தியேட்டருக்கு வந்திருக்கேன். அதுவும் உங்களோட. இது நம்ம பஸ்ட் மூவி. அந்த மெம்மரெபிள் இருக்கு. என்ன ஒரு குறை.. லவ் படத்துக்கு பேமிலி படத்துக்கு முதல் முறை போயிருக்கலாம்.” என்று தன் கருத்தை கூறினாள்.
“ஆமால… அதை யோசிக்கவேயில்லை.” என்று விக்ரம் எக்ஸ்லேட்டரில் சென்றார்கள்.
அங்கேயே துணிகடைகள் இருக்க, விக்ரம் “என்ன டிரஸ் வேணுமோ வாங்கு.” என்றான்.
“ஹலோ… இங்க எல்லாமே மாடர்ன் டிரஸ்ஸா இல்ல இருக்கும். சேலை இருக்காது” என்றாள்.
“பரவாயில்லை… இங்க எந்த டிரஸ் பிடிச்சிருக்கோ அதை வாங்கு.” என்றான்.
“எங்கப்பா கமலகண்ணன் போட விடமாட்டார்.” என்றாள்.
“அதை நான் பார்த்துக்கறேன். எடு… ஏய் என் மச்சினிச்சிக்கும் சேர்த்து எடு.” என்றதும் ஹரிணி முறைத்தாலும் உடையை தேர்ந்தெடுக்க ஆயத்தமானாள்.
பாதிக்கு மேல் க்ராப் ஷர்ட், பட்டன்ஷர்ட், ஜீன், என்று நாகரீகமாக இருக்க, கவுனை தான் தேடி எடுத்தாள். முட்டிக்கு கீழே முழங்கால் வரை உள்ள இரண்டு கவுனை எடுத்து காட்ட, சூப்பர் என்று விக்ரம் உரைக்க, அதனை எடுத்து நடந்தார்கள்.
ஒருயிடத்தில் கால்கள் வேருன்றி நின்று, “விக்ரம்… இங்க பாரு” என்று சுட்டிக்காட்டினாள்.
அங்கே கருப்பு வண்ண டீஷர்டில், ‘Fuck’ என்று ஆங்கிலத்தில் எழுதி தொலைத்திருக்க, அதற்கு கீழே சிறு சிறு வாசகமாக, தனி தனியாக அம்புகுறியிட்டு off, you, me, us, it, everthing, this என்று எழுதியிருக்க, ஒவ்வொன்றும் ஒரு அர்த்தம் தர, விக்ரமோ “ஹரிணி… நான் உன்னை திட்டியதை மறக்கணும்னு நினைக்கறேன். நீ அதையே நினைவுப்படுத்தற” என்று மெதுவாக கூறி அவளை அவ்விடத்திலிருந்து இழுக்க, “எனக்கு இந்த டீஷர்ட் வேணும்.” என்றாள். “அது பசங்க போடறது டி” என்று தவிர்க்க பார்த்தான்.
“அப்ப உங்களுக்கு வாங்குங்க. வீட்லயிருக்கறப்ப யூஸ் பண்ணுங்க. முதல்ல தப்பா தெரிந்தது. இப்ப அந்த வார்த்தை பார்த்தா கேட்டா, உங்க நினைவு தான் வருது.” என்று கூற, முதலில் மறுத்திட, ஹரிணியே அந்த டீஷர்டை எடுத்து ஃபில் போட சென்றாள்.
இரண்டு கவுன் ஒரு டீஷர்ட் ஷாக்ஸ் என்று ஃபில் போடவும், விக்ரமோ, “வரவர மார்க்கமா இருக்க. அப்கிரேட் ஆகிட்டியா” என்று கேலிக்கு இழுக்க, “உஸ்… அது நிறைய ஷ்ர்ட்ல எழுதியிருக்கும் ஆனா அப்ப எந்த விதமும் மைண்ட்ல தோனாது. உன்னால தான் இந்த வார்த்தை பிடிக்காம வெறுப்பை தந்தது. இப்ப… இந்த வோர்ட் விக்ரம் சொன்னது மட்டும் தான்.” என்று கையை பிடித்துக் கொள்ள, சாப்பிட அழைத்து சென்றான்.
அங்கே பன்னீர்ஸ்டப்டுநான், வித் மஷ்ரூம் கிரேவி, சிக்கன் ப்ரைடு ரைஸ் ஆர்டர் தந்துவிட்டு சாப்பிட அமர்ந்தனர்.
“என்ன பிளான்ல இருக்க?” என்றான் விக்ரம் உணவை ஒருபக்கம் மென்றபடி, பன்னீர்ஸ்டப்டுநானை பிய்த்து மஷ்ரூமில் தொட்டு விழுங்கியவளோ, “முன்ன நான் இங்க வீட்டோட மெயிடா இருந்தேன்னு சொன்னல்ல.. நான் இப்ப பிரெண்ட்லியா பழகியாச்சு. பிரெண்ட்லியா இருந்ததும் போதும்.. நான் உன் மனைவியா மாறணும். உன் குழந்தைக்கு தாயா மாறணும். லைப்ல பெருசா எதுவும் இல்லாம, இதே போல அன்பா வாழ்ந்துடணும். இதான் என்னோட பிளான்.” என்றாள்.
“ரொம்ப சின்ன சின்ன ஆசைனு நினைப்போம். ஆனா இது பேராசை தெரியுமா? இதே போல அன்பா ஜாலியா இருக்கறது. மேபீ.. ஏதாவது தடைக்கல் வரலாம். ஆனாலும் இப்படியே இருக்கணும்.” என்றவன் அந்த நேரம் பொது இடமென்பதால் அவளுக்கு கையால் ஊட்டி விட்டான்.
அவளுமே விக்ரமிற்கு ஊட்டிவிட்டு, மகிழ்ந்தாள். அடுத்து சாப்பிட்டு வீட்டுக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்கள்.
ஆட்டோவில் வீட்டுக்கு வரும் வரை, விக்ரம் ஹரிணியை பார்க்க, அவள் பார்த்ததும் அவன் திரும்ப, ஹரிணி விக்ரமை காண, அவன் காணும் நேரம் அவளும் பார்வையை திருப்பி கெண்டனர்.
இதயத்தில் பலவிதமான பட்டாம்பூச்சி வண்ணநிறத்தில் பறந்து திரிய, தங்களுக்கு காதல் லாவாவை மொட்டுவிட்டு வெடிக்க ஆயத்தமாக ஆசையாக, பார்வை பரிமாற்றத்தில் ரசவாதம் நிகழ்த்தினார்கள்.
வீட்டுக்கு வந்ததும், பால்கனி வந்து சேர்ந்தான்.
”ஸ்மோக் பண்ண போறியா?” என்று தன்மையாக கேட்டாள்.
“நோ… நோ.. அந்த பழக்கத்தை சுத்தமா விட்டுட்டேன். உங்கப்பாவுக்கு கிட்னி கொடுத்து ஆப்ரேஷன் பண்ணிட்டு வீட்டுக்கு வந்தப்பிறகு, இருக்கற ஒரு கிட்னியையாவது பத்திரமா பார்த்துக்கணும்னு டிரிங்க்ஸை விட்டுட்டேன். அதோட இலவச இணைப்பா ஸ்மோக் பண்ணறதையும் நிறுத்திட்டேன்.
நீ தானே எத்தனை ஸ்மோக் பண்ணறேன்னு தினமும் டீ கப் பக்கத்துல நம்பர்ஸ்ல அலங்காரம் பண்ணி வச்ச. இத்தனை சிகரேட் ஸ்மோக் பண்ணுவதை சுட்டிக்காட்ட தானே. அப்பவே தெரியும்.
உனக்கு எதுக்கு கஷ்டம். இனி அதை விட்டாச்சு.” என்றதும் இம்முறையும் அவளுக்காக கெட்ட பழக்கத்தை விட்டொழிந்தவனை கட்டிக்கொண்டாள். எவ்வளவு பெரிய விஷயம் அது. ஒரு பெண்ணிற்காக அவனது பழக்க வழக்கத்தை மாற்ற முயலும் ஆண்மகன் சிலரே. அதிலும் இவள் கேட்காமலே இவளது தந்தைக்கு கிட்னியை தந்து உயிரை காப்பாற்றியிருக்கின்றான். இப்பொழுது மது சிகரெட் என்றதையும் நிறுத்திவிட்டதாக கூறிவிட்டான்.
ஹரிணியின் அணைப்பில் திக்குமுக்காடிய விக்ரம், அவளது பேராசையை தீர்க்கும் விதமாக அவளை அள்ளிக்கொண்டு, மெத்தையில் காதல் விளையாட்டை துவங்கினான்.
ஹரிணியும் தன் மனதை ஆளும் மன்னவனுக்கு தன்னை அர்ப்பணித்தாள்.
இனியெல்லாம் சுபமே.
-பிரவீணா தங்கராஜ்

அருமையான கதை …. எதார்த்தமான கதை … பேசும் போது வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். .. கணவன் மனைவி இருவருக்குள்ள சண்டை என்றால் இருவரும் அமர்ந்து பேசினாலே புரிதல் வரும்… சூப்பர் முடிவு
Wow feel good story. Vikram super hero.da. many faces u have shown. Lovable couple. But suddenly conclude the story. Some episodes may given for Ajay. Good friend. Father in law and son in law relationship is very surprising one. On the whole good family entertainment story sis.
Amazing story… Loved the way it travelled
Wow amazing ending sis super semma😍❤️👌👍 azhaga renduperum purinjikitu life a start pandranga arumai edhula vara ella characters um super sis 😍😊 mamanar ku kidney kudukura marumagan ellam romba aboorvam adhu romba nalla erundhuchu sis and a good inlaws super 😘 next story ku eagerly waiting