Skip to content
Home » லாவா மன்னவா-7

லாவா மன்னவா-7

51 / 100 SEO Score

அத்தியாயம்-7

   அஜய் உருளைகிழங்கு பஜ்ஜியை வாயில் வைத்தவன், “டேய் டேய்.. விக்ரம்” என்று கூப்பிட விக்ரம் அவன் குரல் எட்டாத தொலைவுக்கு சென்றிருந்தான்.

“இவன் எங்க போறான். என்ன அவசரம்?” என்று ரவிபிரகாஷிற்கு அழைத்தான்.

அதற்குள் இங்கு விக்ரமோ ஹரிணி வீட்டிற்கு வந்து சேர, அங்கே ஹாலில் வினோதினி ஹரிணி இருவரும் பாட்டு கேட்டிருந்தனர். அதிரடியாய் உள்ளே நுழைந்த விக்ரமோ, “ஏன்டி… நான் பேசிய பேச்சுக்கு என்னை வேண்டாம்னு சொன்னல்ல.. உன்னை நல்லவனு நினைச்சி இந்த கல்யாணத்துக்கே பெரிய கும்பிடு போட்டு கிளம்பிட்டேன்ல.

இப்ப என்ன மயிருக்கு கல்யாணத்துக்கு ஓகே சொன்ன… நான் அந்த வார்த்தை சொல்லியும், வெட்கமேயில்லாம என்னையே  கல்யாணம் செய்ய சம்மதிச்சிருக்க? என்ன பிளான்ல இருக்கடி?” என்று கழுத்தை பிடித்து நெறித்தான்.

  வினோதினி அச்சத்தில் மிரண்டவளாக, “அக்கா.. அக்காவை விடுங்க. அய்யோ அப்பா அம்மா வீட்ல இல்லை. எங்க அக்காவை விடுங்க” என்று விக்ரம் கையை அடித்தாள். அவனுக்கு அதெல்லாம் எறும்பு கடியாக இருக்க வேண்டும்.

   வினோதினியை தள்ளிவிட, அவள் சோபாவில் விழுந்தாள்.
தங்கை விழவும், விக்ரம் முகத்தில் ஹரிணி தள்ளிட, அவன் கண்ணை குத்த வருவதாக நினைத்து கையை தளர்த்தவும், அவன் நகம் பட்டு கழ்த்தில் கீறியது.

ஹரிணி வினோதினியை நெருங்க, விக்ரம் மீண்டும் ஹரிணியின் கழுத்தை பிடித்து முன்னோக்கி வர அவள் அங்கிருந்த அறைக்குள் நகர்ந்து சென்றாள்.

  ஹரிணி கழுத்தை பிடித்தபடி அந்த கதவின் தாழ்ப்பாளை சாமர்த்தியமாக போட்டான்.‌

“அதெப்படி டி.. உன்னை ‘ஃபக் யூ’னு அசிங்கமா திட்டியிருக்கேன். என்னை கண்டாலே உனக்கு கோபம் வரணும். எஸ்… அன்னிக்கு பொண்ணு பார்க்க வந்தப்ப அந்த கோபத்துல என்னை அவன் இவன்னு இஷ்டத்துக்கு பேசின, கல்யாணம் வேண்டாம்னு அந்த போடு போட்ட. ஆனா இன்னிக்கு போன்ல எங்கப்பாவிடம் நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சதா சொல்லிருக்கார்.

ஏன் ஒரு நாள்ல என்ன மாற்றம்? எவனையாவது காதலிச்சு எவன் கூடவாது படுத்து வயிற்றை நிரப்பிட்டியா? அந்த குழந்தைக்கு என்னை அப்பனா மாத்த, இந்த கல்யாணத்துக்கு பொசுக்குன்னு தலையாட்டியிருக்கியா? சொல்லுடி” என்று ஹரிணியை அசிங்கமா பேசி கர்ஜிக்க செய்தான். அவனுக்கு அவளது சம்மதம் அந்தளவு மனதை உறுத்தியது.

  கல்யாணம் நடக்காது என்று நிம்மதியாக இருக்க இப்படி அன்னையிடமிருந்து இவள் சம்மதம் என்ற பதில் கோபத்தை தந்துவிட்டது. சொல்லப்போனால் எரிமலை வெடித்தது போன்ற நிலை. லாவா மன்னவனாக நின்றான் விக்ரம்.

  ஹரிணியோ இவன் பேச்சில் முகம் சுழித்தவள், அவன் கையை நகத்தால் கீறிவிட்டு, அவன் கையை எடுக்க வைத்தவள் அவசரமாக தன் போனில் உள்ள வீடியோவை எடுத்து அவன் முன் ஒளிப்பரப்பினாள்.

  ஹரிணியின் நகக்கீறலால் அவ்விடம் ரத்தப்பசையாகி லேசான ரத்தம் வெளியேற, அவள் காட்டிய காணொளியை கண்டான்.
அதில் ஒரு ஆண் வந்தான். “ஏ ஹலோ பிரெண்ட்ஸ் இன்னிக்கு ‘நம்ம வெட்டிபாய்ஸோட வீடியோ பாருங்க’ மௌமெண்ட்ல நாம எடுக்கப்போற கன்டென்ட் என்ன தெரியுமா? அதோ அங்க ஒரு பிச்சைக்காரி மாதிரி ஒரு பொண்ணு டிரஸ் கிழிந்து வர்றாள்ல. ஐ திங்க் டிரஸ் எல்லாம் கொஞ்சம் மோசமா கிழிந்து இருக்கு. பச் பாவம்.‌.. பட் இந்த பொண்ணுக்கு யாராவது உதவறாங்களானு பார்க்கப்போறோம். யார் உதவி செய்யறாங்களோ, அவங்களை மட்டும் நம்ம சேனல்ல காட்டுவோம். அதுவரை நாம அந்த பொண்ணை தான் ஜூம் பண்ணி வீடியோ எடுக்க போறோம்.” என்று ஒருவன் கூறினான்.

   சற்று நேரத்தில் மீண்டும் கேமிரா முன் வந்து, “என்னங்க இது யார் யாரோ வர்றாங்க போறாங்க. ஏன் அந்த பொண்ணை குறுகுறுன்னு பார்க்கறாங்க. ஆனா யாருமே உதவ மாட்டேங்கறாங்க. நம்ம சென்னையில மனிதர்கள் இப்படியா இருக்காங்க. ஓ காட்… இதை நான் எதிர்பார்க்கலை.
ஓகே காயிஸ் இன்னும் ஒன் ஹவர் வெயிட் பண்ணுவோம். யாராவது தர்ம பிரபு சினிமா பாணியில் அவங்க ஷர்ட்டை கழட்டி கொடுத்து டச்சிங்கான சீனை கிரியேட் பண்ணறாங்களானு பார்ப்போம்” என்று கண்சிமிட்டி மறைந்து நின்றான்.‌

போவோர் வருவோர் எல்லாம் அந்த பெண்ணை கண்டு ஒதுங்கி சென்றனர்.
அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவளாக ரோட்டில் நடந்தாள். போவோர் வருவோரிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தாள்.
இந்த பெண்ணை இந்த ஏரியாவில் அடிக்கடி இப்படி உறவுக்காரர்களே பிச்சை எடுக்க காலையிலேயே விட்டு சென்று மாலை அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததால் அந்தபகுதியில் உள்ள சென்னை மக்கள் இதை பெரிதாக கவனத்தில் கொண்டதில்லை.
சில ஆண்கள் அந்த பெண்ணின் கிழிந்த உடையை கண்டு கண்களில் மேய்ந்தபடி நடந்தனர்.

  அந்த வெட்டிபாய்ஸ் வீடியோ கேங்க் வேறு அதையும், வீடியோவில் சொன்னது.
“பாருங்க.. ஒரு பொண்ணு போட்டிருக்கற டிரஸ்ல எசகுபிசகா பாகம் தெரிந்தா அதை வேற உத்து உத்து பார்க்கறாங்க. இதாங்க நம்ம பீப்பிள்.” என்று உச்சு கொட்டினான்.‌ அவனும் அதே கீழ்தர செய்கையை தான் செய்வதை அறியாமல்…

   அந்த நேரம் அங்கே விக்ரம் வந்தான். அந்த பெண் காசு கேட்டு கையை நீட்ட, அங்கிருந்து நகர்ந்தான்.

   மீண்டும் சற்று நேரத்தில் ஒரு கவரை கொண்டு வந்து, அதிலிருந்த நைட்டியை எடுத்து அந்த பெண்ணிற்கு அணிவித்தான்.

    அந்த பெண்ணோ நைட்டியை அணிவித்த பொழுது தடையின்றி ஒரு குழந்தை போல நின்றாள்.
பிறகு வயிற்றை தொட்டு தொட்டு நிற்க, அவன் வாங்கிய பிரெட் பாக்கெட்டை தந்தான்.

  அடுத்த நிமிடம், அந்த வெட்டி பாய்ஸ் வீடியோ பாருங்க’ என்றவனோ “கைதட்டி போன் ரெகார்ட் ஆன கையோடு வந்து “வாவ் சார்..‌ ஒன் ஹவரா அங்கிருந்து இந்த பொண்ணுக்கு யாராவது ஹெல்ப் பண்ணறாங்களானு வீடியோ வச்சி வாட்ச் பண்ணினோம். நீங்க தான் உதவியது. உங்க பெயர் என்ன? எந்தவூர் சென்னையா வெளியூரா?” என்று பேட்டி எடுக்கும் விதமாக இருந்ததை கண்டு விக்ரம் முகம் மாறியது.

“யார் நீ? இந்த பொண்ணுக்கு தெரிந்தவனா? பிராங்கா?” என்று அந்த பொண்ணை திரும்பி பார்த்தான். ஆனால் அந்த பெண்ணோ பிரட்டை, தரையில் அமர்ந்து சாப்பிட துவங்கினாள். இந்த புதியவனையோ வீடியோவையோ அவள் கவனத்தில் இல்லை. உண்மையான பசியென்று விக்ரமால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

‘நோ சார். இந்த பொண்ணு இங்க அடிக்கடி பிச்சை எடுக்கும்னு கேள்விப்பட்டோம். தினமும் யாராவது காசு தருவாங்க. இன்னிக்கு டிரஸ் கிழிஞ்சு இருக்க யாராவது உங்களை போல உதவுவாங்கன்னு கேமிராவோட வெயிட் பண்ணினோம்” என்று கூறவும் விக்ரமோ “வீடியோ ரெக்கார்ட் பண்ணினியா?” என்று கேட்க ஆமா இந்த போன்ல” என்று கூற, விக்ரம் ஆக்ரோஷமாக அந்த போனை பிடுங்கி அந்த சிம்மை எடுத்து, அவ்வழியே ஓடிய கூவத்தில் தூக்கியெறிந்தான். அங்கிருந்த செங்கல் கொண்டு போனை உடைத்து அந்த வீடியோ எடுத்தவனிடம் தூக்கியெறிந்தான்.

“இன்ஸ்டா, பிராங்க ரீல்ஸ்னு போனை தூக்கிட்டு பப்ளிக் பிளேஸ்ல மத்தவங்க பர்மிஷன் இல்லாம போட்டோ  எடுத்த, இதான் நடக்கும். என்ன மயிருக்கு இதை வீடியோ எடுக்கற? வீடியோ எடுக்கற நேரத்துக்கு நீயே ஒரு டிரஸ் எடுத்து அந்த பொண்ணுக்கு போர்த்தி விட்டிருக்கலாம்ல. மவனோ… உங்க போதைக்கு மத்தவங்க ஊறுகாயா? மறுபடியும் கண்லபட்ட, தூக்கி போட்டு சாகடிச்சிடுவேன்.” என்று கர்ஜித்து சென்றது காணொளியாக ஓடியது.

  ‘போனை உடைச்சி போட்டும் வீடியோவா எப்படி வந்தது?’ என்று விக்ரம் குழம்ப, இது மற்றொரு ஆங்கிள் வேறொருவன் எடுத்த வீடியோ என்று புரிந்தது. தன்னை அன்று வேறொருவனும் வீடியோ எடுத்து போட்டிருப்பதை யூகித்துவிட்டான்.

    விக்ரம் முழு வீடியோ பார்த்தப்பின், ஹரிணியை காண, “நீ என்னிடம் அன்னிக்கு பேசிய வார்த்தையால பத்து நாளைக்கு மேல என்னால இயல்பா இருக்க முடியலை. கொஞ்சம் கொஞ்சமா தான் நீ பேசியதை மறக்க முயன்றேன். ஆனா என்னால முழுசா மறக்க முடியலை.
இதுல அப்பா உன்னை மாப்பிள்ளையா நிறுத்தி காபி கொடுக்க சொன்னப்ப, என்னால சத்தியமா முடியலை. நீ பேசியதுக்கு உன்னை கல்யாணம் கட்டிக்க முடியுமா? அதான் மறுத்து வேண்டாம்னு சொன்னது. உங்கப்பா கெஞ்சி இரண்டு நாள் யோசித்து சொல்ல சொல்லிட்டு போயிட்டார். என்னோட அப்பா அம்மாவிடம் அப்பவே உன்னை எல்லாம் கல்யாணம் பண்ண மாட்டேன்னு முடிவா சொல்லிட்டேன்.
நேத்து ராத்திரி ரீல்ஸ் பார்க்கறப்ப இந்த வீடியோவை எதர்ச்சையமா பார்த்தேன்.
முழு வீடியோவா இந்த சேனல்ல இருந்தது. அதை நானும் என் தங்கையும் பார்த்தப்பிறகு, உன்னை பத்தி யோசித்தேன்.

  ஒரு மனநலம் குன்றிய பொண்ணுக்கு நல்லதா டிரஸ் போட்டு, அவளுக்கு சாப்பாடு வாங்கி தந்து, பிராங்காவோ இல்லை ஏதோவொரு ஆதாயத்துக்கோ வீடியோ எடுத்தவனை அடிச்சி, போனை உடைச்சி தூக்கி போட்டப்ப, உன்னோட அந்த குணம் கெட்டவனா உன்னை பார்க்க வைக்கலை.

  நீ பேசியதை கூட மறந்து உன்னோட இந்த குணத்தை வச்சி யோசித்தேன்னு நினைச்சியா. இல்வை… இதுல இங்க பாரு…” என்று சில பல மாத்திரை பெட்டியை காட்டினாள். மருத்துவ பெயர் கொண்ட ரசீதை காட்டினாள். “எங்கப்பாவுக்கு ஏதோ உடம்பு சரியில்லை‌. அதுக்கு மாத்திரை சாப்பிடறார். அப்பாவா தான் நான் உயிரோட இருக்கறப்பவே ஹரிணிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். என் பிரெண்ட் பையனா இருந்தா நல்லதுன்னு நான் சந்தோஷப்பட்டேன்னு புலம்பினார்.
அதனால் தான் எங்க அப்பாவுக்காக தான். உன்னை கல்யாணம் பண்ணிக்கறதா காலையில் அப்பா அம்மாவிடம் சொன்னேன்.
மத்தப்படி நான் யாரையும் காதலிக்கலை. நான் எவனோடயும் படுக்கலை, என் வயிற்றுல புள்ளயும் இல்லை. வாய் இருக்குன்னு உன் இஷ்டத்துக்கு பேசாத.” என்று கத்தினாள்.

  விக்ரமோ அவ்விடத்தில் பேச்சிழந்தவனாக, ஹரிணியை கண்டான்.

  ஹரிணி கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, “நீ இவ்ளோ பேசியும் எங்கப்பாவிடம் நான் கல்யாணத்தை தடுக்க மாட்டேன். அவர் மனசை வருத்தப்பட விடமாட்டேன்.
உனக்கு தான் வாய் இருக்கே. நீ தான் என்ன வேண்டுமின்னாலும் பேசறியே. அப்படியே இந்த கல்யாணத்தை என்ன சொல்லி நிறுத்த தோனுதோ அப்படியே நிறுத்திக்கோ. என் தரப்புல என் பதில் இது தான். பிடிக்குதோ பிடிக்கலையோ… என்னோட அப்பா வார்த்தையை நான் கேட்டுப்பேன். ஒரு ஆணுக்கு மிகப்பெரிய தண்டனை கல்யாணம்னு விளையாட்டுக்கு சொல்வாங்க. அப்படி பார்த்தா நான் உனக்கு அந்த தண்டனையை தான் தரப்போறேன். முடிஞ்சா நீ தப்பிச்சிக்கோ.” என்று மொழிந்தாள்.

   விக்ரம் அவ்விடத்தில் இருக்க பிடிக்காமல் கதவை திறக்க அங்கே “அக்கா… அக்கா..” என்று வினோதினி அழுவதை கண்டான்.
கதவை திறக்க வினோதினி அக்காவை கட்டிக்கொள்ள ஓடினாள்.
அதற்குள் அஜய் வாசலில் நிற்க, “என்னடா பண்ணின? என்னாச்சு. அந்த பொண்ணு ஏன் அலறுது?” என்று உலுக்க, நண்பனை தள்ளிவிட்டு வண்டியை எடுக்க சென்றான்.

  “டேய் இரு வர்றேன்.” என்று பின்னாலே வந்தவன், அந்த பொண்ணோட அப்பா அம்மா வெளியே போயிருக்காங்க. இந்த நேரத்துல என்ன அதகளம் செய்துட்டு வந்த? மச்சான்… உன்னை பார்த்தா பயமா இருக்குடா.” என்று கேட்க வண்டியை ரோட்டை பார்த்து ஓட்டு” என்று விக்ரம் வீட்டுக்கு வந்தான்.‌

அஜய் பின்னாடியே வந்தவன், அங்கே ரவிபிரகாஷ் இருக்க “அஜய் விஷயம் தெரியுமா? என் பிரெண்டோட பொண்ணு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டா.” என்று கூற, “அய்யோ அங்கிள்… அவன் அங்க தான் அந்த பொண்ணை பார்த்துட்டு வர்றான். அந்த பொண்ணு பேயறைந்தது மாதிரி இருக்கு. கண்ணுல இருந்து தண்ணி ஊத்துது. வேர்த்து வடிஞ்சி, ஒரு மாதிரி கிடக்கு. இவன் அங்க போய் என்ன ரணகளம் பண்ணினானோ. அந்த பொண்ணோட தங்கச்சி அக்கா அக்கானு கதவை தட்டி அலறுச்சு. நான் போனப்ப கதவை திறக்கவும் கூட்டிட்டு வந்துட்டேன். இல்லை இல்லை‌.. இவனா வந்துட்டான். என்ன வேலை பார்த்துட்டு வந்தான்னு தெரியலை.” என்று கூற ரவிபிரகாஷ் மகனையும் ராதிகாவையும் கண்டு உக்கிரமானார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “லாவா மன்னவா-7”

  1. Harini appakaga samathichi iruka ethum theriyama varthaiya vituta vikram konjam kuda porumaiye illa unaku yen intha mari nadakura ava sonna unnala mudinja thapichiko

  2. Super sis nice epi 👌😍❤️ evanuku en evlo kovam varudhu🙄 enna varthai vena pesidalama mathavangala pathi yosikkave matenguraney🤔😕 evana kalyanam pannikitu andha ponnu enna kashtam pada pogudho😐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!