Skip to content
Home » வெண்மேகமாய் கலைந்ததே-18

வெண்மேகமாய் கலைந்ததே-18

அத்தியாயம்-18

மானஸ்வியை சாப்பிட்டு முடிக்க “ஹலோ நீங்க கிளம்புங்க. கொஞ்சம் வேலையிருக்கு” என்று விஹான் கூறவும் ஏதேனும் கேஸ் விஷயமாக இருக்குமென்று தலையாட்டினாள்.

  “பிருந்தா நீயும் இந்த பொண்ணுக்கு துணைக்கு வா” என்று அண்ணியை கூப்பிட, “அவ பிள்ளைத்தாச்சி எங்கேயும் போகக்கூடாது. அதோட அண்ணன் பொண்டாட்டியை அண்ணினு சொல்ல சொல்லு அந்த வளர்ந்த எருமைமாட்டுக்கு” என்று சுதாகர் தன் மகன் விஹானை திட்டினார்.

  “ம்மா… மிஸ்டர் சுதாகரை வாயை மூடி இருக்க செல்லுங்க. என்ன நினைச்சிட்டு இருக்கார். நான் ஏதோவொரு பொண்ணுக் கூட லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருந்ததா சர்வாகிட்ட சொல்லிருக்கார்.‌ இனி பெயர் சொல்லி தான் கூப்பிடுவேன். அவர் வாயை வச்சிட்டு சும்மாயிருந்தா வாடா போடா என்ற வார்த்தை இல்லாம இருக்கும். மைண்ட் இட்” என்று கர்ஜித்தான்.  

     சுதாகரோ மருமகள் முன் இந்த பேச்சு பேசுகின்றானே என்று வாயை பிளக்க, ‘பிருந்தா கிளம்பி ரெடியான்னா சர்வாவை கமுக்கா காட்டுவேன். இல்லை உன் மாமனார் பேச்சை கேட்டு இங்கேயே இருக்க போறியா?’ என்றதும் மறுவார்த்தை பேசாது புறப்பட்டாள்.

   யோகலட்சுமியிடம் “விஹான் கூப்பிட்டா காரணமில்லாம இருக்காது அத்தை. நான் போயிட்டாரு வந்துடறேன்.‌ அம்மா அப்பா கோவிலுக்கு போயிருக்காங்க. வீட்டுக்கு வந்ததும் சொல்லிடுங்க.” என்று கூறிவிட்டு செல்வதற்கு பர்மிஷன் கேட்டு நின்றாள்.

   “அந்த பொண்ணை கூட்டிட்டு தானே போற.” என்றதும் பிருந்தா ஆமோதிப்பாய் தலையாட்டிட, “ஜாக்கிரதை.. நீ ஒரு உசுரு இல்லை. இரண்டு உசுரு” என்று சொல்லவும் சமத்து மருமகளாய் கேட்டுக் கொண்டாள்.

  மானஸ்வி அருகே வந்து, “சின்ன பையன் பொறுப்பானவன். ஆனாலும் பொண்ணுங்க உடல்நிலை சில நேரம் ஆண்கள் உணர மாட்டாங்க‌. என்‌ மருமகளை கவனிச்சிக்கோ. உன்னையும் நம்பி அனுப்பறேன்.” என்றார்.

  கேப் புக் செய்ய போனில் தட்டச்சு செய்தவனை எட்டி பார்த்து, “யோகலட்சுமி நம்ம வீட்டு கார் சும்மா தானே இருக்கு மருமகளை அதுல அழைச்சிட்டு போக சொல்லு உன் அருமை புள்ளையிடம்.” என்று சாவியை சோஃபாவில் வைத்தார்.

   “எனக்குன்னா நான் சத்தியமா உங்க காரை எடுக்க மாட்டேன் ஆனா உங்க மருமகளுக்காக இந்த வண்டியை உபயோகப்படுத்துறேன் தேங்க்யூ சுதாகர்” என்று தன் தந்தையிடம் நக்கலாகவே பதில் தந்து சாவியை கையில் எடுத்தான்.

மானஸ்வியோ விஹானை பார்த்து ‘எப்படி அப்பாவையே பேர் சொல்லிக் கூப்பிடறாரு’ என்று அனலை குட்டி பார்த்தால் விஹான் முன்னிருக்க பெண்கள் இருவரும் பின்னிருக்கையில அமர்ந்தனர்.

“சுதாகர் பெட்ரோல் எல்லாம் இருக்கா?” என்று கத்தியபடி சென்றான்.

பிருந்தாவோ, “ஏன் விஹான் மாமாவை ஓட்டுற, அவர் வயசுக்கு மரியாதை கொடு.” என்று மருமகளாக வக்காளத்து வாங்கினாள்.

“என் கேரக்டரை தப்பு தப்பா சொல்லியிருக்கார். கண்ல பார்க்கிறது எல்லாம் தப்பா எடுத்துக்கணுமா? என்னை பத்தி சொல்லறதுக்கு முன்ன யோசிக்கணும்‌. நான் தான் வள்ளுன்னு குலைப்பேன்னு தெரியும்ல.” என்று வண்டியை ஓட்டினான்.

பிருந்தாவோ இவரிடம் பேசறதுக்கு முட்டிக்கலாம். “அவருக்கு எப்படி இருக்கு? அவரை பார்க்க தானே போறோம். கண் திறந்து பார்த்தாரா? இன்னும் எத்தனை நாள் இந்த கஷ்டம்?” என்று பேசியவள் திடுக்கென அழத்துவங்கினாள்.

“லூசு. அழுது அவனிடம் அடிவாங்க வைக்காத. சர்வா கண் திறந்துட்டான்.” என்றதும் மானஸ்வி முகம் வெளிறியது. நொடியில் முகம் மாற்றி, சம்மந்தப்பட்ட ஆட்களை பிடிச்சிட்டிங்களா?” என்று நுழைந்தாள்.

விஹான் கடுகடுப்போடு, “இல்லை… வில் இருக்க அம்பு வச்சி என்ன செய்யறது. ஆனாலும் விசாரணையில் அரஸ்ட் பண்ணிருக்காங்க.” என்றவன் முகம் இறுகியது. வினோத் பற்றி ஆர்வமாய் எதகர்பார்க்கின்றாளோ என்ற எண்ணம். கெட்டவனுக்காக துடிக்குதோ அவளிதயம்.

அதன் பின் பிருந்தா ஆசையாக கேட்டதற்கு பதில் தந்தான்.

“உங்கண்ணா என்னை கேட்டாரா? கன்சீவ் ஆனதை சொல்லிட்டியா? நான் துடிச்சதை? அச்சோ முதல் முதல்ல அவரிடம் நான் சொல்லணும்னு விரும்பினேன்‌. எல்லாம் போச்சு” என்று ஆனந்த் கண்ணீரோடு ஓயாது பேசினாள்‌ பிருந்தா.

தாய்மை செய்தி தன்னவனிடம் அதை கூற இத்தனை பரபரப்பு பெண்ணுக்கு இயல்பு தான். அதுவுமில்லாமல் உயிர் துறந்ததாக இருந்து மீண்டு வந்தவனாயிற்றே.

காதல் கணவன் சர்வாவை பார்த்து நிறைய பேச மனதோடு ஒத்திகை நடத்தினாள்.

எல்லாம் அவனை காணும் நேரம் உடைந்தவளாக அழுதாள்.

சர்வா தான் “ஏய் பயந்துட்டியா பிந்து” என்று ஆரதழுவினான்.

அவன் விழிகளிலும் விழி நீர் எட்டி பார்த்து கன்னத்தை நிறைத்தது.

“உன்னையும் நம்ம குழந்தையும் விட்டுட்டு போக மாட்டேன் பிந்து. ஐ லவ் யூ டி” என்று அரவணைத்தபடி வயிற்றில் முத்தமிட்டான்.

அரை மணி நேரம் உள்ளே அனுப்பிவிட்டு வெளியே விஹான் மற்றும் மானஸ்வி இருந்தனர்.

நேரங்கள் கூடுவதால் தொண்டையை செருமி, “வினோத் உயிரோட இருக்கான்.” என்றான்‌.

“தெரியும்” என்று இறுக்கமாய் பதில் தந்தாள்.

“தெரியுமா? எப்படி? நேர்ல இப்ப ரீசண்டா சந்திச்சியா” என்று வெடுக்கென எழுந்தான்.

அவன் எழவும் அவ்விருக்கை சத்தமிட்டது.

“இல்லை… கடல்ல இருந்து தப்பிச்சு வந்தப்பிறகு அவனை சந்திக்கலை. ஆனா தெரியும். அவன் உயிரோட தான் இருப்பான்.” என்று உணர்ச்சிகள் துடைத்த குரலில் ஒப்பித்தாள்.

“அவன் ஒன்னும் நல்லவன் இல்லை.” என்று கோபமாக கத்த, “அதுவும் தெரியும். முதல்ல அவன் தான் போட்ல இருந்து கப்பல்ல ஏறினான்.

நான் ஏறுவதற்குள்ள என்ன நடந்ததோ மயங்கி விழுந்துட்டான். நான் கூட ஏதோ கூட்டத்துல இருந்தவங்க மயக்கப்படுத்தி அடிச்சிட்டாங்கன்னு பயந்து வினோத்தை மடில போட்டு அழுதேன்.

ஆனா சர்வா சாரிடம் பேசினப்ப, ‘ஏம்மா காதலிக்க ஒரு நல்லவன் கிடைக்கலை. இவன் இந்த கூட்டத்துல ஒருத்தன். இங்க அவன் வந்ததே உன்னை இங்கயிருக்கறவனுக்கு காட்டி சீன் போட, இப்ப பாரு இவனை அடிச்சிட்டு உன்னை நாசப்படுத்த முயற்சி செய்வாங்க. தயவு செய்து தப்பிச்சிடுன்னு’ சொன்னார். எனக்கு அந்த நேரம் புரியலை‌. ஆனா தண்ணில குதிக்கறப்ப, மச்சான் அந்த வினோத் பையலை எழுப்பு டா’ அப்படின்னு குரல் கேட்டுச்சு. வினோத் கெட்டவன்னு அப்பவே தெரியும்‌. இத்தனை நாள் அழுதது, காதலிச்சவனை நல்லவனா தேர்ந்தெடுக்க தெரியலையேன்னு வருத்தம் தான்.

வினோத் உயிரோட பார்த்தா அவனை நாலரை அறைந்து கேட்க நினைச்சேன். ஏன்டா என்னை ஏமாத்த நினைச்சேன்னு. ஆனா அவன் தப்பிச்சிட்டான். இனி என்னை பார்க்க வரமாட்டான்.” என்று
உடைந்தாள்.

விஹான் பெருமூச்சு விடுத்து, இடத்தை விட்டு அகன்றான்.‌ சற்று நேரத்தில் தண்ணீரை கொடுத்தான்‌.

அதை வாங்கி பருகியவள், நீங்க என்ன நினைச்சிங்க‌. அவனுக்காக ஆசையா தேடுறேன்னா?” என்றதும் ஆம் என்றும் இல்லை என்றும் தலையாட்டினான்.

அதற்குள் பிருந்தா கூப்பிட, விஹான் மானஸ்வி வார்ட் அறைக்குள் சென்றனர்.

“சார்… சர்வா.. சார்” என்று மானஸ்வி கூப்பிட, “நல்லாயிருக்கியா ம்மா. அந்த பையன் நிரஞ்சன் அவன் வீட்டுக்கு திரும்பியதா விஹான் சொன்னான். ரொம்ப தேங்க்ஸ் மா” என்று உரைத்திட, “சார் நீங்க தான் எங்களை காப்பாற்றியது. அப்ப மட்டும் நீங்க போபோன்னு விரட்டலைன்னா, நான் இங்க உயிரோட நின்றிருக்க மாட்டேன். எத்தனை பேரிடம் மானத்தை இழந்து கடல்ல பிணமா மிதந்திருப்பேன்.” என்று கூறினாள்.

கண்ணீரை துடைத்து ”வினோத் மாட்டலையா சார்? ஒரு பொண்ணை எத்தனை பேரிடம் விற்க பார்த்தான்‌. அவன் எல்லாம் உயிரோட விடக்கூடாது சார் ” என்றாள்‌.

“மேலதிகாரியே ஒரு தேர்ந்தெடுத்த டீம் கூட கேஸ் டீல் பண்ணறாங்கம்மா. வினோத் அவங்க கஸ்டடில இருக்கான்‌. உன்னை பார்க்கணும்னு சொன்னான். அவங்க விடலை. மேபீ உன்னை சந்திக்க வைக்கலாம்‌” என்றதும் ‘என்ன ஈரவெங்காயத்துக்கு சந்திக்கணும்.’ என்று தான் விஹானிற்கு தோன்றியது.

“சார்.. நிரஞ்சன் அவங்க அப்பாவிடம் சேர்த்தாச்சு. ஆனா அவங்க அம்மா அவன் பிரிவு தாங்க முடியாம இறந்துட்டாங்க. நீங்க உயிரோட இருப்பதை அவனுக்கு இன்னும் தெரிவிக்கலை. நீங்க உயிரோட வந்ததை சொல்லறப்ப நிரஞ்சனிடமும் சொல்லலாம்னு இவர் சொல்லிட்டார்.” என்று விஹானை சுட்டி காட்டினாள்.

சற்று மூச்சுவிட கஷ்டப்படவும், பிருந்தா அருகே அமர, நத்திங் மா. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம்னு சொல்லிருந்தாங்க” என்றதும் விஹான் ‘வீட்டுக்கு போகலாம்’ என்று துரத்த ஆரம்பித்தான்.‌

பிருந்தாவோ நான் கூடவேயிருக்கேனே’ என்று கெஞ்சினாள்.

‘இதுக்கு தான் அவன் கண் முழிச்சதும் கூப்பிடலை. வீட்டுக்கு போ பிருந்தா. ஒரு வாரத்துல வந்துடுவான்” என்று சமாதானம் செய்தான் விஹான்.

“தம்பி அவ அண்ணி‌. அத்தை பொண்ணுன்றதை மறந்துட்டு அண்ணின்னு சொல்லு.” என்று ஏற்றிவிட்டான் சர்வா.

“மிஸ்டர் சுதாகரே சுதாகர் தான்‌. இதுல அண்ணியா? சிவனேனு என் வேலை விஷயமா இமயமலைக்கு போகயிருந்தவனை நடுவுல நிறுத்தி இங்க வரவச்சிட்டிங்க. சோ யாரும் எதுவும் ரூல்ஸ் போடாதிங்க” என்று கர்ஜித்து காரை எடுப்பதாக கீழேயிறங்கினான்.

பிருந்தா கூடுதலாக பேசி விட்டு வர, மானஸ்வி ரிசப்ஷனில் காத்திருந்தாள்.

பிருந்தா வரவும் அவளை அழைத்து விஹான் காரை நெருங்கினாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

7 thoughts on “வெண்மேகமாய் கலைந்ததே-18”

  1. Kalidevi

    MANASVI vinoth ah aasaiya thedura nu tha ninachen butella unmaium therinji tha avana adichi keka he pathutu irunthu iuka ipo vihan ku theliva aeiduchi next ivanga virumbuvangala . enada sarva va sagadichitinga ninachen but thirumba vanthu ipo ella unmaium kandu pidikirathu nalla poitu iruku next move papom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *