அத்தியாயம் – 37
ஜப்பானில் ஆராஷிக்கு பாடிகார்ட்டாக இருந்தவருக்கு ஃபோன் செய்தாள்.. இவளது நம்பர் புதிது என்பதால் முதன்முறை அவர் எடுக்கவில்லை..
இரண்டாவது முறையாக ஸ்கைப்பில் கால் செய்தாள்..
அதில் எடுத்தவர் இவளை பார்த்ததும் சந்தோஷமாக பேச ஆரம்பித்தார்..
“அஷ்வினிமா எப்படி இருக்கீங்க? அங்கே சுகம்தன்னே?” என்று தனது ஓட்டை தமிழில் அவளிடம் விசாரிக்க..
லேசான புன்னகையை உதிர்த்தவள்..
“நான் நல்லா இருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க? அங்கே எல்லாரும் சுகமா?” என்றாள்..
அதற்கு முகமெங்கும் புன்னகையாய் தலையாட்டியவருக்கு ஆனந்தம் அவளை பார்த்து..
“உங்களே பார்த்து எவ்ளோ நாள் ஆச்சி.. எங்களே மறந்தாச்சுலே?” என்றார் அவர்..
“இல்லண்ணா.. மறந்தா நான் ஃபோன் செய்வேனா? நல்லா தமிழ் பேசுறீங்களே?” என்றாள் மேதா..
அதற்கு வெட்கப்பட்டவர்..
“எல்லாம் உன்னால தான்மா..நீ சொல்லி கொடுத்தது தான்.. அப்புறம் சார் எப்பிடி இருக்காரு? நீங்க பார்த்தீங்களா?” என்று கேட்க..
“ஆமா அண்ணா பார்த்தேன்.. நல்லா இருக்காரு.. ஆனா அவருகிட்ட ஏதோ வித்தியாசம் தெரியுது.. அது என்னானு கேட்கதான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்..?” என்று மேதா கேள்வி பீடிகை போட புரியாமல் நின்றவர்..
“கேளுங்கோ..என்ன வி..வித்..வித்தியாசம்?” என்று கஷ்டப்பட்டு வாயில் நுழைய வைத்தார் அந்த வார்த்தையை..
“சார் ஏன் இப்படி பொண்ணுங்கனாலே எறிஞ்சு எறிஞ்சு விழுறாரு? அந்த அளவுக்கு என்ன ஆச்சு? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரிஞ்சாதானே நான் ஏதாவது செய்ய முடியும்?” என்று கேட்டாள்..
“அது..வந்து” என்று அவர் இழுக்க..
“யூஹான் அண்ணா நீங்க என்னை நம்பலாம் நீங்க இதை சொன்னதா கூட நான் காட்டிக்க மாட்டேன்.. அப்பவே அவரை மாத்த எவ்ளோ கஷ்டப்பட்டோம்னு உங்களுக்கே தெரியும் அதான் திரும்ப அப்படி ஏதாவது?” என்று அவள் இழுக்க..
“அய்யோ பாப்பா அதுலாம் பேசாதேமா.. பலச நினைச்சாலே உடம்பு பதறும்.. நா..நான் சொல்றேன் ஆனா இதை யாருக்கும் தெரியாம பார்த்துக்க பாப்பா..நீ நான்தான் சொன்னேனு தெரிஞ்சது என்னை கொன்னுடுவாரு ஆரா சாரு” என்றவர் பீடிகையோடு பேச..
“நிச்சயமா அண்ணா யாருக்கும் தெரியாது” என்று அவள் உறுதி கொடுக்க..
அவரும் சொல்ல ஆரம்பித்தார்..
(ப்ளாஷ்பேக்குள்ள ப்ளாஷ்பேக்)
“ஆரா தம்பி உங்கள தேடிட்டு இருந்தாருமா, உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல..அதே நேரம் அவரு யாரோ ஒரு பொண்ண லவ் பண்ணாரு போல..
(என்று அவர் சொன்னதும் உள்ளே ஒரு வலி சுருக்கென்றது அவளுக்கு)
அப்போ அவரோட அப்பாக்கு அந்த பொண்ணு புடிக்கலே போல, அவரோட மனச மாத்தனும்னும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னும் சொல்லி வேற தகவலும் கிடைக்காம இருந்துச்சுனு சொல்லிட்டாரு.
அந்த சமயத்தில
ஒருத்தரோட சம்பந்தம் ஆரா சாருக்கு தேடி வந்துது, அதை நல்ல சம்பந்தம்னு நினைச்சு ஆரா சார்க்கு ஒரு நல்லது நடக்கனும்னு அவரோட அப்பா அந்த பொண்ணைதான் அவர்மேல ரொம்ப லவ் இருக்குற மாதிரி சொல்லி நடிக்க வெச்சாரு..இது ரியோட்டோ சார்க்கு கொஞ்சம் கூட புடிக்கலே..ஆனா ஆரா சாரோட அப்பா அவருகிட்டே ப்ராமிஸ் வாங்கிகிட்டாரு.. அதுனால அவரும் அதுதான் உண்மைனு சொல்லிட்டாரு..
அந்த பொண்ணும் பார்க்க தமில் பொண்ணு மாதிரியே டிரஸ்லாம் போட்டு நல்லா தமில் பேசுச்சு மேடம், ஆனா சாருக்கு அந்த பொண்ண நம்பவே முடியலே..
முதல்லே நம்பாமே அப்புறோ அவரும் அந்த பொண்ணு அவரை ரொம்ப லவ் பண்ணுது போலனு நினைச்சு பேச ஆரம்பிச்சாரு…
ஆனா அந்த பொண்ணு எடுத்ததும் இவரோட சொத்து சுகம் இத பத்திலாம் விசாரிக்கவும் அவருக்கு சந்தேகமாகி ரகசியமா விசாரிக்க அப்புறம்தான் தெரிஞ்சுது அந்த பொண்ணு ஃபேமிலிய ஆரா சாரோட அம்மாதான் ரெடி பண்ணி அனுப்பி இருக்காங்கனு… அவங்களுக்கும் அவரு லவ் பண்ண பொண்ண பத்தி எதுவும் தெரியாது அவங்க இவரோட சொத்த அந்த பொண்ண வெச்சு அடைய ப்ளான் பண்ணி அனுப்பி இருக்காங்க…
அது கண்டுபிடிச்சதுலேயே ஆரா சார் நொந்துட்டாரு.. இதுலே ஆரா சாரோட அப்பாவும் அந்த குடும்பத்த நம்பி உங்கள லவ் பண்ணுறமாதிரி நடிக்க வெச்சு ஏமாத்தவும் நல்லது நினைச்சு செய்ய போன ஆரா சாரோட அப்பாக்கு ஏமாத்தம்னா அதை விட சொந்த அப்பாவே நம்பள நம்ப வெச்சு ஏமாத்திட்டாரேனு ஆரா சார்க்கு பெரிய மனசு கஷ்டம் ஆகிபோச்சு மேடம்..
அதுலேயே அவரு ரொம்ப உடேஞ்சு போய்ட்டாரு..
கோவம் ஒருபக்கம் இப்படி ஏமாந்தது ஒரு பக்கம் அந்த அம்மா பண்ணது ஒருபக்கம்னு அவரு ரொம்ப நொந்து போய்ட்டாரு மேடம்..
அந்த கோவத்தில ஆரா சாரோட அப்பாவை கத்திட்டாரு..
அவருக்கும் ஏமாத்தம்தானேமா..
ஆனா அவருக்கும் இது அந்தம்மா சதினு தெரியாதே..
அதனால ஆரா சார் அவரோட அப்பாகிட்ட ரொம்ப நாள் பேசவே இல்லமா..
இப்போ அவரு அங்க வந்தது கூட அவங்க அப்பாகிட்ட கோச்சுகிட்டு மனசு ஆறுதலுக்காக தான்.. அதனாலதான் அவருக்கு பொண்ணுங்கனாலே வெறுப்பு ஆகி போச்சுமா” என்று அவர் கூறி முடிக்க..
இதை கேட்டவளுக்கு ஏதோ மனதை அழுத்தும் பாரம்..
ஆனால் இதுதான் நிதர்சனம் என உணர்ந்தவள்.. அவரிடம் சாதாரணமாக பேச ஆரம்பித்தாள்..
“தேங்க்ஸ் யூஹான் அண்ணா..
என்கிட்ட நீங்க பேசினதா வெளியே காட்டிக்காதீங்க.. நானும் சொல்லமாட்டேன்..
அவரை மாத்த ட்ரை பண்றேன் நான்” என்று அவளும் ஆறுதல்போல பேச..
“சரிம்மா..அடிக்கடி பேசுங்கமா..உங்ககிட்ட பேசினாலே மனசுக்கு ரெம்ப ஹாப்பியா இருக்கு” என்றார்..
“கண்டிப்பா அண்ணா..இப்போ வைக்கட்டுமா?” என்று விட்டு கட் செய்தவளுக்கு விடும் மூச்சு கூட பாரமாகி போனது..
ஆராஷி யாரோ ஒரு பெண்ணை காதலித்து அவளை தேடி அவள் கிடைக்காதபோது வேறு ஒருவளை ஏற்க நினைத்து அதையெல்லாம் நாடகம் என உணர்ந்த போது தன்னை சுற்றி இருந்த பெண்கள் எல்லாம் தன்னை ஏமாற்றவே பார்த்தனர் என உணர்ந்து வெறுப்பு கொண்டதால் இப்போது எந்த பெண்ணை பார்த்தாலும் வெறுப்பு வருகிறது என்று யோசித்தவள்.. அவன் காதலித்த பெண் யாராக இருக்கும்? என்று தான் யோசித்தாள்.. ஆனால் அவனது சொந்த விருப்பத்தை அவனே சொன்னால் தான் தெரியும் வேறு யாரிடமும் கேட்டு அவளது மனதின் புதிதாய் உருவான ரணத்தை கிளறிக்கொள்ளவும் அவளுக்கு விருப்பம் இல்லை..
அதனால் இதை பற்றி யாரிடமும் அவள் மேலும் விசாரிக்க முனையவில்லை..
ஆனால் அவனது கோவத்தை மாற்ற வேண்டும் என்று மட்டும் எண்ணிக்கொண்டாள்..
மனம் வேதனையில் மூழ்கும் நேரமெல்லாம் தாய்மடி தேடும் கன்றை போல அவளது குடும்பத்தை தேடுவாள் ஆனால் இப்போது இருக்கும் வேதனையில் ஆறுதல் தேட போனால் போட்டு கொண்டு இருக்கும் வேஷம் கலைய நேரிடுமே மன ஆறுதல் தேடி வந்தவனை நாமே விரட்டியது போல் ஆகிவிடாதா? என்று அப்போதும் தன் வேதனையை உள்ளுக்குள் புதைத்து அவனுக்காக யோசித்தவள் அவன் இங்கே இருக்கும் வரை தன்னால் எந்தவிதமான மனக்கஷ்டமும் தொந்தரவும் வரவிடக்கூடாது என்று
முடிவு செய்தவள் தன் வேதனையை தனக்குள்ளே மறைத்துக்கொண்டாள்.. அன்றே விசாரித்து இருக்கலாம்..இப்போது இந்நிலை வந்து இருக்காது.
என்ன செய்து ஆராஷியை மாற்றுவது என்று அவளுக்கு புரியவில்லை..
அவனது கோபம் அப்படி இருந்தது..
அலுவலக வேலையை தவிர அவள் வேறு ஏதும் பேசவோ அவனுக்கு விக்கல் வந்தால் ஒரு தண்ணீர் கூட கொடுக்க அவளை அவன் அனுமதிக்கவில்லை..உன் வேலை எனக்கு வேலையில் உதவியாளே தவிர வாழ்க்கையில் இல்லை என்பது போலொரு பார்வை பார்த்து அவளை தள்ளி நிறுத்துவான்..
ஒருவொரு சமயம் பார்வையாலே அவளை எரித்துவிடுவான் ஒருவொரு சமயம் இதுதான் உன் எல்லை என்பது போல குத்தி காட்டி ஏதாவது பேசுவான்.. அவளுக்கும் குழப்பமே..
ஆனாலும் அவனது வேதனையை தனதாய் எண்ணி அதை குறைக்க வேண்டும் என்று எண்ணினாள் ஒரு தாய் போல.
அவன் எவ்வளவு வெறுப்பை உமிழ்ந்தாலும் அவளது பாசம் அவன்மேல் ஒரேபோல்தான் இருந்தது..
ஆனால் அதை உணர்ந்த ஆராஷிக்கோ மனம் நம்ப மறுத்துவிட்டது..
ஏற்கனவே பெண் என்னும் நபர்களால் பட்ட வேதனை அவனை எதையும் எளிதில் நம்பவிடவில்லை..