Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 58

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 58

அத்தியாயம் – 58

சிவந்த முகத்தைமறைக்க அவள் நிமிரவே இல்ல திட்டி திட்டி அவளை சாப்பிடவைப்பதிலேயே குறியாக இருந்தவன் கடைசி நாலு வாய் இருக்கும் போது தான் தான் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்றே உணர்ந்தான்.

‘நானா இது அதும் வேறு ஒரு பெண்ணுடன் உணவை பகிர்ந்து அதும் ஒரு சாப்ஸ்டிக்கில்’ என்று அதிர்ந்தவன் அதை முகத்தில் காட்டாமல் கடைசி நாலு வாய் உணவை அவளுக்கே ஊட்டி விட்டு வராத தொலைபேசி அழைப்பை ஏற்று காதில் வைத்தபடி பேசிக்கொண்டே மாத்திரையை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு நீரையும் கொடுத்துவிட்டு அவளை உறங்குமாறு சொல்லிவிட்டு கதவை சாத்திவிட்டு ஓடிவிட்டான்.
மணியை பார்த்தவள் இரண்டை நெருங்கி கொண்டு இருக்க அவனது செய்கையில் வெட்கம் வேறு இருந்ததால் அவனது அதிர்ச்சியை கவனியாமல் விட்டுவிட்டாள்.
மாத்திரையை போட்டு படுத்துவிட்டாள்.

வெளியே வந்தவனுக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது. ‘அவளை நானே நடிக்கிறா அது இதுனு சொல்லிட்டு இந்த ஒரே ஒரு சம்பவத்தால அவள்மேல் ஈர்ப்பு இருப்பது போல நடந்துக்கிறோமே சீக்கிரமே இங்கே வேலை முடிச்சுட்டு கிளம்பிடனும் இல்லனா இவளோட காதல் வலையில நானே போய் விழுந்திடுவேன் போல’ என்று எண்ணி தலையை சிலுப்பியவன் அங்கிருந்த ஊஞ்சலில் படுத்துக்கொண்டான் ஆனால் அந்தோ பரிதாபம் தூக்கம்தான் வரவில்லை.

ஷூட்டிங் கேன்சல் ஆன நாள் முதல் அவளை தானே ஏந்தியபடி ஹாஸ்பிடல் அழைத்து சென்றது, அதன்பின் அவளையே ஹீரோயினாக நடிக்க வைத்தது, ஷூட்டில் வேண்டுமென்றே அவளுடன் நெருக்கமாக இருந்தது, அதிலும் தமிழ் முறை திருமணத்தில் அவளது இடுப்பு ஓரத்து மச்சமும் அவளை இழுத்து அணைத்ததும் அதில் அவளது முதுகில் கைவைத்து அழுத்தியதும் இடுப்பிலும் கைவைத்து அழுத்தியதும் அப்போது அவள் கூச்சத்தில் நெளிவதை ரசித்து பார்த்ததும் இன்றைய தினம் நிதின் ஃபோன் செய்தததும் அவளுக்கு என்னவோ ஏதோ என்று பதறி ஓடியதும் தன் உடையின் அழுக்கை கூட பொருட்படுத்தாமல் அவளை தன் மடியில் அள்ளி அணைத்துக்கொண்டதும் என வரிசையாக நிகழ்வுகள் வலம் வந்து அவளது அழகிய மான்விழிகளை நினைவு படுத்த அந்த விழிகளில் விழுந்து விட கூடாது என்று நினைத்து தன்னை தானே நொந்தபடி திரும்பி திரும்பி புரண்டுகொண்டு இருந்தான்.

அந்த விழிகள் பல வருடங்களாகவே அவனை சிறைபிடித்து அவனை ஆயுள் கைதியாய் வைத்துள்ளது என்பதை எப்போது அறிவானோ?

இனிமேல் இவளிடம் நாம் நெருக்கம் காட்டிவிடக்கூடாது நான் தேடுபவளுக்கு நான் உண்மையாக இருக்கவேண்டும் என்று எண்ணி அவள்மேல் கோபத்தை மீண்டும் ஏற்படுத்திக்கொண்டு அதற்கு ஒரு உருப்படாத காரணத்தையும் உண்டுபண்ணிக்கொண்டு அதன்பின்தான் உறங்கினான்.

மறுநாள் காலையிலேயே நிதின் வந்திறங்கினான். அங்கிருந்து நேரே சாஹித்யன் அனுப்நிய ஹோட்டல் அட்ரஸ்ஸுக்குத்தான் வந்தான்.
ஏழு மணி அளவில் எழுந்த அருந்ததி தலைவலி அதிகமாக இருக்க நேராக மேதா வந்துவிட்டாளா என்றுதான் பார்க்க போனாள்.
அப்போது தான் அவளது அறையில் மேதா இல்லை என்பதை உணர்ந்து ‘இவ இவ்ளோ காலையில எங்க போனா? இன்னைக்கு ஷூட் கூட இல்லையே?’ என்று யோசித்தபடியே ஹோட்டலின் ஃபோனை பார்க்க அதன் அருகில் அவளது சானிட்டரி பேட் இருப்பதை பார்த்தவள்
“இதை இங்க எதுக்கு வெச்சு இருக்கா?” என்று தனக்குதானே பேசியபடி
ரிசப்ஷனுக்கு ஃபோன் செய்து காஃபி ஆர்டர் செய்துவிட்டு நேற்று அவளது தோழி வந்தாளா? என்று விசாரிக்க எதிர்முனையில் அவர் வரவில்லை ஆனால் ஒரு பெரியவர் வந்து உங்களுக்கு ஃபோன் செய்ய சொன்னார் என்று கூற யாராக இருக்கும் இவ எங்கே போனா? என்று யோசித்தபடியே வாஷ்ரூம் சென்று ரிப்ஃபிரஷ் ஆகி வர அதற்குள் காஃபி வர அதை வாங்கியபடி மேதாவிற்கு ஃபோன் செய்யலாம் அவளது மொபைலை எடுத்து லாக்கை ஆன் செய்ய
அதில் இருந்த ஃபோன் கால்களும் மேதாவிடமிருந்து எமர்ஜென்சி காலும் லொகேஷனும் வந்து இருக்க கையிலிருந்த காஃபி கப்பை கீழே தவற விட்டவளுக்கு பயம் பிடித்து கொண்டது
உடனே அவளுக்கு ஃபோன் செய்ய சுவிட்ச் ஆஃப் என்று வர மேலும் பயந்து போனாள் உடனே உள்ளே ஓடியவள் உடையை கூட மாற்றாமல் என்ன ஆனதோ ஏதானதோ என்று பதறியபடி மொபைலில் வந்த லொகேஷனை கூகுள் மேப்பில் பார்த்தபடி காரை நோக்கி ஓட கண்ணீரே வந்துவிட்டது அவளுக்கு அதற்குள் அவளது அருகில் வேறு ஒரு கார் வந்து நின்றது. அவளால் கதவை திறக்க முடியாததால் நிமிர்ந்து பார்க்க
அதிலிருந்து நிதின் இறங்கினான். அவனை பார்த்ததும் அவனிடம் ஓடியவள்
“அ..அண்ணா மே..மேதா ஏதோ எமர்ஜென்சி னு நேத்தே மெஸேஜ் பண்ணி இருக்கா என் தப்பு நான் பார்க்காம விட்டுட்டேன்னா அவ அவ மொபைலும் சுவிட்ச் ஆஃப் வாங்கண்ணா உடனே போலீஸ் ஸ்டேஷன் போவோம் என் தப்புதான் தூங்கணும்னு மொபைலை சைலண்ட்ல போட்டுட்டேன் ஒருமுறையாவது நா நான் எழுந்து பார்த்து இருக்கனும் ஐயோ மேதா தப்பு பண்ணிட்டேனே” என்றபடி அழுதபடியே கூற அவள் இப்போது தான் எழுந்துள்ளாள் உடனே பதறி ஓடி வருகிறாள் குற்ற உணர்ச்சியில் புலம்புகிறாள் என்று உணர்ந்தவன் அவளதுகையை பற்றியவன்

“இருடா இருடா மேதாக்கு ஒன்னும் ஆகலை அவ நல்லா இருக்கா அவளை பார்க்கத்தான் நானும் வந்தேன்” என்று அவளை சமாதானம் செய்ய பார்க்க

“அண்ணா அண்ணா என் தப்புதான் நீங்க என்னை நம்பிதானே அவளுக்கு கார்ட்ஸ் இல்லாம விட்டீங்க என் தப்புதான் நானும் அவகூடவே போய் இருக்கனும் தப்பு பண்ணிட்டேன் நான்தான் அவளை கவனமா பார்த்துக்காம விட்டுட்டேன் சீக்கிரம் வாங்கண்ணா அவள தேடலாம்” என்று அவள் அதிலேயே இருக்க அவளுக்கு இன்னும் அவன் சொன்னது புரியவில்லை என்று புரிந்து அவளை தன் புறம் திருப்பியவன் அவளது கன்னத்தை ஏந்தி
“செல்லம் என்னை பாரு அண்ணாவ பாரு மேதா நல்லா இருக்கா” என்று அழுத்தி கூற அவனது பேச்சில் சுயம் வந்தவள்
“ந..நல்லா இருக்காளா? சே..சேஃப்பா இருக்காளா? எ.. எங்கே?” என்று கேட்க அவனும் அவளது கேள்விகளுக்கு ம்ம் ம்ம் என்று தலையை ஆட்ட
“ஆராஷியோட ரூம்ல…
நீ வா முதல்ல டிரஸ் மாத்திட்டு வா அவள பார்க்க போகலாம்” என்று அவன் திரும்ப அவனது கையை பற்றியவள்
“அண்ணா அவளுக்கு ஒ.. ஒன்னும் ஆகலல?” என்று கேட்டாள்.
அவள் மிகவும் பயந்து இருக்கிறாள் என்பதை புரிந்தவன் ஆதூரமாய் அவளது தலையை வருடி தோள்மேல் கை போட்டவன்
“ஒன்னும் ஆகலடா நல்லா இருக்கா நீ டிரஸ் மாத்திக்கிட்டா அவளை பார்க்க போலாம்” என்று கூற
“ஒரு நிமிஷம்னா” என்றபடி ஓடியவள் பின்னாடியே அவனும் சென்றான் ரூமின் கதவை சாத்தாமல் கூட அவள் ஓடி வந்து இருப்பது அப்போது தான் அவனுக்கு தெரிந்தது அங்கே விழுந்து உடைந்து கிடந்த காஃபி கப்பை பார்த்தவன் அவள் அதன்மீதே காலை வைக்க போகிறாள் என்று நினைத்து

“அரூ பி கேர்ஃபுல்” என்றபடி அவளை இழுத்து காஃபி கப்பை காட்டியவன் வேறு வழியில் செல்லும்படி அவளை சொன்னான் எதையும் யோசிக்கும் மனநிலையில் அவள் இல்லை என்பதை உணர்ந்தவன் “அவளை பார்த்தா தான் இவ சமாதானம் ஆவா” என்று பேசியபடி அவள் உடைமாற்றி வருவதற்குள் அந்த காஃபி கப்பை க்ளீன் செய்தான் ‘அவ இருக்குற மனநிலையில மறுபடியும் அப்படியே தான் ஓடிவருவா’ என்று எண்ணியபடி.

ஓயாத ஷூட்டிங் அதற்கான வேலைகள் தொடர்ந்து நாலு நாள் வேலை அலைச்சல் அதிலும் இரண்டு மூன்று நாட்கள் எடிட்டிங் செய்கிறேன் என்று தொடர்ச்சியாக இரண்டு நாள் தூங்காமல் வேலை செய்தவளுக்கு எழ முடியாதபடி அலுப்பும் உறக்கமும் வருவது சகஜம் தானே அவளும் என்ன செய்வாள் இவளும் அவளுக்கு ஆயிரம் பத்திரங்களை சொல்லிதானே அனுப்பி இருக்கிறாள் ரூமின் ஃபோன் நம்பரும் கொடுத்து இருக்கிறாளே அவள் தொலைத்துவிட்டாள் அதற்கு இவள் என்ன செய்வாள். வேலைக்கு எப்படி சமாதானம் ஆகமாட்டாளோ அதே தான் மேதாமேல் அவளது பாசமும்.
மேதா கண் கலங்கினாலே துடித்துபோவாளே மற்ற விஷயங்களில் வால்தனம் செய்யும் அருந்ததி வேலை என்று வந்துவிட்டால் அயராது உழைப்பவள் ஆயிற்றே.
யார்மேல் குறை சொல்வது? என்று எண்ணியபடி இருந்தவன் அவசர அவசரமாக
வெளியே ஓடிவந்தாள் அருந்ததி.

“பார்த்து மெதுவா வாடா” என்றபடி அவளது கையை பிடித்தவன்
“இங்க பாரு அரூமா டென்ஷன் ஆகாதே மேதாக்கு ஒன்னும் ஆகல உன்மேல எந்த தப்பும் இல்ல ஓகே.
அவ மெஸேஜ் அனுப்பினதும் நான் அவளை சேஃப் பண்ணிட்டேன் சரியா? நீ முதல்ல நிதானமா இரு” என்றபடி அவளது கலைந்த கூந்தலை சரிசெய்து அவளை சிறிது ஆசுவாசப்படுத்தியவன் அவளை பார்க்க
“நானும் அவகூட போய் இருக்கனும் தப்பு பண்ணிட்டேன்னா. தெரியாத ஊர்ல என்ன கஷ்டப்பட்டாளோ?” என்று புலம்ப
“அதெல்லாம் ஒன்னும் இல்ல சரியா அண்ணா சொல்றேன்ல நம்ப மாட்டியா?” என்று அவளது கன்னம் தாங்கி அவனை பார்க்கும்படி செய்து கேட்க
“அப்படி இல்லண்ணா நாம் போய் அவள பார்ப்போமே ப்ளீஸ்” என்று அவள் கலங்கிய கண்களோடு கேட்க
“ம்ம் போலாம் இப்படி அழுகாச்சி அரூவா இல்ல மை வாலு பொண்ணு அரூவா” என்று கூற
கண்களை துடைத்துக்கொண்டு மூச்சை இழுத்து விட்டவள் தன்னை நிலைபடுத்தி அவனை பார்த்து லேசாக புன்னகைத்தாள்.
“ம்ம் தட்ஸ் மை பேபி இப்போ போலாம்” என்றுவிட்டு ஆராஷி தங்கி இருக்கும் காட்டேஜ் ரூமிற்கு செல்ல புறப்பட்டனர் அதிகாலை ஐந்து மணி அளவில் உறங்கியவன் ஏழு மணிக்கெல்லாம் எழுந்து விட்டான் க்ரீன் டீ குடிக்க வேண்டும் போல இருக்க ரிஷப்ஷனுக்கு ஃபோன் செய்து அவனுக்கு க்ரீன் டீயும் அவளுக்கு டீயும் சிறிது ப்ரட்டும் ஆர்டர் செய்துவிட்டு அவளுக்கு எப்படி இருக்கிறது என்று செக் செய்யப்போக மெத்தையில் சுருண்டு துவண்டு போய் வயிற்றை பிடித்தபடி படுத்திருந்தாள் மேதா.
அவளை கண்டதும் அவளிடம் ஓடியவன்
“மேதா மேதா வாட் ஹாப்பன்ட்?” என்று கேட்டபடி அவளை திருப்பி சரியாக படுக்க வைக்க முயல
அவளோ வலியில் முனகினாள்
“அரூ கிவ் மீ மை டேப்லட்ஸ்” என்றபடி புலம்ப அவளுக்கு சாப்பிட எதுவும் கொடுக்காமல் எப்படி மாத்திரை கொடுப்பது என்று எண்ணியபடி அவளை படுக்க வைத்தவன் காலிங்பெல் சத்தம் கேட்டு வெளியே வர ரூம் சர்வீஸ் அவன் கேட்டதை கொண்டு வந்திருந்தனர்.
அதே சமயம் டிரைவரும் வந்து இருந்தார் அவருக்கு டீ சொன்னவன் அவரை உள்ளே வந்து அமர சொல்லிவிட்டு வந்து பேசுவதாக சொல்லி டீயையும் ப்ரெட்டையும் எடுத்து சென்றவன் படுத்து இருந்தவளை எழுப்பி அவன்மேல் சாய்த்துக்கொண்டு அவளுக்கு ப்ரட்டை டீயில் தொட்டு ஊட்டிக்கொண்டு இருக்க அந்த நேரம் உள்ளே வந்தனர் நிதினும் அருந்ததியும் டிரைவர் அவனை பார்த்ததும் எழுந்து வணக்கம் வைத்தவர் அவர்கள் கேட்காமலே ரூமை கைகாட்ட இருவரும் அங்கே செல்ல அவளுக்கு ப்ரெட்டை ஊட்டியவன் டீ வாயோரம் ஒழுக அதை தன் முழுக்கை உடையாலேயே துடைத்தவனை தான் பார்த்தனர் இருவரும்.
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் அருந்ததியும் நிதினும்.
அவளை நோக்கி ஓடப்போன அருந்ததியை கையை பிடித்து நிறுத்தியவன் வேண்டாம் என்பது போல தலையாட்ட அவளும் நின்றுவிட்டாள்.
இவர்களை கவனிக்காத ஆராஷி அந்த டீயை பருகவைத்து அவளுக்கு கூடவே மாத்திரையையும் கொடுத்து அவனுக்கு அடுத்த பக்கம் டிஸ்யூ இருந்ததால் அவளை சாயவிடாமலே ஒரு கையை நீட்டி அதை எடுத்தபடி அவளுக்கு துடைத்துவிட்டவன் சிறு குழந்தைகளுக்கு பால் கொடுத்ததும் முதுகில் தட்டிவிடும் தாய்மார் போல அவளது முதுகில் லேசாக தட்டிவிட அவளுக்கு இருமல் வர அதன்பின் தடவி கொடுத்தவன் அவளை படுக்க வைத்துவிட்டு உடையை சரிசெய்து பெட்ஷீட்டை போர்த்திவிட அவனது கையை பிடித்தவள் கண்களை திறக்காமலே “அப்பா டோண்ட் லீவ் மீ அலோன் ஐ ஃபெல்ட் சோ லோன்லி” என்று கூற அவளது தந்தையின் ஞாபகத்திலேயே அவள் இருப்பதை உணர்ந்தவன்
அவளது தலையை வருடிவிட அவள் அவனது கையை விட்டாள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த நிதினுக்கும் கண்கள் கலங்கிவிட்டது அவள் தங்களுக்காக சிரித்துக்கொண்டே இருப்பது போல காட்டிக்கொண்டு தந்தைக்காக எப்படி ஏங்கி போய் இருக்கிறாள் என்று எண்ணுகையிலேயே இருவருக்கும் புரிந்தது அவளது குழந்தைதனமும்.
அவளை உறங்க வைத்துவிட்டு திரும்பியவன் நிதினையும் அருந்ததியையும் காண ஆச்சரியம் தான்.
இருவரின் கலங்கிய கண்களை பார்த்தவன்
“என்ன” என்பது போல சைகையில் கேட்க இருவரும் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டிவிட்டு அவளது அருகில் வந்தனர்.
துவண்ட கொடி போல இருந்தவளை கண்டதும் அருந்ததிக்கு அழுகை அதிகம் ஆகிவிட கேவல் வந்தது அவளுக்கு.
“ஷ்ஷ்ஷ்” என்று அவளுக்கு கையை காட்டியவன் அமைதியாக இருக்கும்படி சொன்னான் அவளை பார்த்து நிதின் கண்ணை காட்ட வாயை மூடியபடி அழுதுகொண்டே வெளியே சென்றுவிட்டாள் அரூ.

அவளது அருகில் கட்டிலில் அமர்ந்த நிதின் கலங்கிய கண்களோடு அவளது தலையை ஆதூரமாய் தடவ தூக்கத்திலேயே அவன் ஸ்பரிசம் உணர்ந்தவள்
“அண்ணா” என்றபடி நிதின் பக்கம் இருந்து ஆராஷி புறம் திரும்பி படுத்தவள்
“ப்பா” என்றாள். அதை பார்த்து மேலும் கலங்கியவன் அவளது கன்னத்தையும் வருடி தட்டி கொடுத்து தூங்க வைத்தான்.
ஒரு பெருமூச்சு விட்ட நிதினின் தோளில் தட்டிகொடுத்தான் ஆறுதலாய் அவனது கையை பற்றிய நிதின்
“தேங்க்யூ சோ மச் ஃபார் யுவர் ஹெல்ப்” என்று கூற ஷ்ஷ் என்றவன் வெளியே போய் பேசலாம் என்றபடி சகை செய்துவிட்டு எழப்போக அவனது டீஷர்ட்டின் நுனியை பிடித்தபடி உறங்கி கொண்டிருந்தாள் மேதா.
அதை பார்த்தவன் அவளது கையில் இருந்து டீஷர்ட்டை உருவ பார்க்க
“அப்பா ப்ளீஸ் டோண்ட் லீவ் மீ அலோன்” என்றபடி உறங்கி கொண்டிருந்தாள். ஆராஷிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை அவன் புரியாமல் நிதினை பார்க்க
நிதினுக்கு மேதா தந்தையை ரொம்பவும் தேடுகிறாள் என்று உணர்ந்தவன். அவளது கையிலிருந்து அவனது உடையை பிரிக்க முயல அவள் விரலில் சுற்றியபடி பிடித்து இருந்ததால் அவனாலும் பிரிக்க முடியவில்லை.
அவளது உடம்பு முடியாத நேரங்களில் அப்பாவை இப்படித்தான் பிடித்தபடி உறங்குவாள் அப்பாவோ அவளது நெற்றியில் முத்தமிட்டு தலையை கோதியபடி இருப்பார் அவனது அனுசரனை அவளுக்கு தந்தையை நியாபகம் செய்துள்ளது என்பதை புரிந்த நிதின்
“மேதாமா அப்பா எங்கேயும் போகல இங்கதான் இருக்காரு” என்றபடி அவளது தலையை வருடிகொடுக்க அப்போதும் அவள் விட்டபாடாய் இல்லை.
அவள் அருகில் அமர்ந்த ஆரா நிதினை போலவே அவளது தலையை வருடிகொடுக்க ஏதோ சிலிர்ப்பது போல உணர்ந்தவள் போல அவனது உடையை விட்டு கன்னத்தை தேய்த்தாள்.
அதில் உடனே எழுந்து தூர வந்தவன் நிதினையும் வர சொல்லி சென்றான் வெளியே வந்த நிதினுக்கே அழுகை வந்தது என்னதான் நாம் தந்தையை போல அவளை பார்த்துக்கொண்டாலும் அவள் தந்தையை எவ்வளவு தேடி இருக்கிறாள் அதை இவ்வளவு நாள் நம்மிடம் மறைத்து நமக்காக சிரித்தபடி உளாவி இருக்கிறாள் என்று எண்ணியவனுக்கு கண்கள் கலங்கி போனது.
வெளியே வந்து கதவை சத்தம் வராமல் சாற்றியபடி நிதினிடம் வந்த ஆரா அவனது கலங்கிய கண்களை கண்டு அவனது தோளில் தட்டி அருந்ததியை கண்காட்டினான். அங்கு அவளோ எல்லாம் தன்னால்தான் என்று வாயைமூடிஅழுது கொண்டு இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *