அத்தியாயம் – 68
கோவமாக ஆராஷியிடம் கூறியவன் அவனது பி.ஏ வை அழைத்து ஆராஷி அவனது அறைக்கு செல்ல ஏற்பாடு செய்யும்படியும் அவன் நாளையே கிளம்பி இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டவன் விருந்தாளிகளை உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு வெளியே ஓடினான் மேதாவை பார்க்க.
‘என்ன கூறிவிட்டான் தனது தங்கையை ஆஃப்ட்ரால் வேலைக்காரி தானே என்று எப்படி அவன் என் மேதாவை பார்த்து இப்படி பேசலாம்’ என்ற கோவம் கொதிகலனாய் வந்தது நிதினுக்கு

ஆனால் வந்தவனோ பார்த்தது அதிர்ந்து நின்ற அருந்ததியை தான்.
அவளிடம் வந்தவன்
“மேதா எங்கடா அரூமா?” என்று கேட்க.
அவளோ அதிர்ச்சியோடே நிற்க அவளை உலுக்கியவன்
மேதாவை கேட்க.
“ஷ..ஷர்மா அவளை கூட்டிட்டு போய்ட்டாரு” என்று கூற அவனுக்கோ குழப்பம்
அவன் எப்படி இங்கே என்றுதான்.
“சரி வா” என்று அவளையும் இழுத்துக்கொண்டே மேதாவின் அறையை நோக்கி சென்றான் நிதின்.
ஆனால் அவர்களை வரவேற்றதோ மேதா இல்லாத வெற்று அறை தான் அவளது பொருட்களையும் காணவில்லை.
வாட்ச்மேனிடம் விசாரிக்க யாரோ ஒருவன் மாஸ்க் கேப் அணிந்தபடி வந்த ஒருவரோடு பெட்டியை எடுத்துக்கொண்டு அழுதபடியே போய் விட்டதாக கூறினார்.
அதிர்ந்த நிதின் மேதாவிற்கு ஃபோன் செய்ய அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
ஷர்மாவிற்கு முயல அதுவும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அன்றைய நாள் தான் அனைவரும் அவளை பார்த்தது.
அதற்குள் விஷயம் நிலவினி மூலமாக கேள்விப்பட்ட சாஹித்யனும் தேஜூவும் சனாவும் அங்கு நிதினை பார்க்க ஓடிவந்தனர்.
என்ன முயன்றும் ஷர்மாவையும் மேதாவையும தொடர்பு கொள்ள முடியாததால் நிதின் இந்தியாவில் இருந்த நிதினின் வீட்டுக்கு சென்றான். அவர்களுக்கும் ஷர்மா இங்கு வந்ததும்
சென்றதும் தெரியாது என கூற அனைவருக்கும் இது அதிர்ச்சியே.
அனைவரும் மேதா தங்கி இருந்த அறைக்கு சென்றனர். அவளை எங்கு தேடியும் கிடைக்காததால் கவலையோடு அமர்ந்திருந்தான் நிதின்.
அப்போது சாஹித்யன் கண்ணில் ஏதோ பேப்பர் மற்றும் ட்ரா சாவியோடு பட எடுத்தான் அது மேதாவால் எழுதப்பட்ட கடிதம்.
“அண்ணா மேதா” என்றவனை சந்தோஷமாய் திரும்பி பார்த்த நிதின் அவனது கையில் இருந்த பேப்பரை பார்க்க ஏமாற்றமாய் பார்த்தான்.
“அவதான் லெட்டர் எழுதி இருக்கா” என்றுவிட்டு அதை படித்தான்.
(முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.
உங்க யாருகிட்டயும் எதுவும் சொல்லாமல் போறேன்.
தப்பு என்மேல தான் நான்தான் எதையும் சரியா விசாரிக்காம அவருக்கு பிரச்சினையை இழுத்து விட்டுட்டேன்.
இந்த தப்பை நானே சரி செய்யுறேன்.
எனக்காக யாரும் அவர்கிட்ட கோச்சுக்க கூடாது.
இது என்மேல ப்ராமிஸ்.
நம்மள நம்பி வந்தவர் நம்ம ஆளு மூலமா ஒரு துரோகம்னா யாரா இருந்தாலும் கோவம்தான் வரும் உண்மை தெரிய வந்தா அந்த கோவம் சரியாகிடும்.
ஆனா தப்பு பண்ணது நான் அதனால் இந்த தப்புக்கு நான்தான் பொறுப்பு என்னால இனி அவர் முகத்தில மட்டும் இல்ல யார் முகத்திலும் முழிக்க முடியாது.
ஒரு ஃபவுண்டரா நான் இருக்க தகுதி இல்லாதவளா இருக்கேன்.
எனக்கே என்மேல வெறுப்பா இருக்கு.
எப்படி இவ்ளோ கேர்லெஸ்ஸா இருந்து இருக்கேன்னு?
என்னால யாரையும் ஃபேஸ் பண்ண முடியல அதான் என் மனசு ஆறுதலுக்காக நான் யூ எஸ் போறேன் ஷர்மா கூட.
பட் ஒன்னு நான் எங்கே இருக்கேன்னு யாரும் ட்ரேஸ் பண்ண நினைக்காதீங்க.
என் மனசு மாறும்போது நானா வருவேன்.
அதுக்குள்ள என்னை தேடி வர பார்த்தீங்கனா நான் சொல்லாம வேற இடத்துக்கு போய்டுவேன். அப்புறம் என்னை எங்கே தேடினாலும் உங்களுக்கு கிடைக்க மாட்டேன்.
அண்ணா அப்பாவை விட என்மேல பாசம் வெச்சு எனக்காக எல்லாத்தையும் மாத்தினீங்க அதே பாசத்தோட கேட்கிறேன் எனக்காக யாரும் அவர்மேல கோவப்படாம பார்த்துக்கோங்க.
எங்கே தப்பு நடந்ததுனு விசாரிச்சுட்டு இருக்கேன் அதை அவருக்கு புரிய வெச்சு அனுப்பனும் அவரோட மரியாதைக்கு எந்த பங்கமும் நடந்துட கூடாது.
நம்ம விருந்தாளி அவர் பெரிய வி.ஐ.பி அதுக்கு தகுந்த மரியாதை அவருக்கு கொடுத்தே ஆகணும் அது நம்ம கம்பெனியோட பழக்கமும் கூட அண்ட் அவருக்கு கடைசிவரை நான் யாருனு சொல்லவேண்டாம் குற்ற உணர்வோடு அவர் போறது எனக்கு பிடிக்கல ஆஸ் ஏ ஃபவுண்டரா இது என்னோட ஆர்டரா கூட எடுத்துக்கோங்க. ப்ளீஸ்
சாஹித்யன் அண்ணா எனக்காக அவர் கூட இருந்து அவரை ஊருக்கு பத்திரமா அனுப்பி வைக்க வேண்டியது உங்க பொறுப்பு.
அவரோட உயிருக்கு ஆபத்து இருக்கு பத்திரம்.
இந்த லெட்டர்கூடவே சாவி வெச்சு இருக்கேன் அந்த லாக்கர்ல அவரோட பொருள் எல்லாம் இருக்கு அவர்கிட்ட ஒப்படைச்சுடுங்க.
நான் எங்கே இருந்தாலும் என்னோட வேலையை என் கடமையை சரியா செய்வேன்.
கண்டிப்பா சீக்கிரமே உங்களை கான்டாக்ட் பன்றேன்.
இப்போ எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.
நான் கிளம்பறேன்.
இப்படிக்கு,
மேதஷ்வினி ஶ்ரீ)
என்று இருந்த கடித்தத்தை படித்த அனைவருக்கும் மனம் கனத்துபோனது.
எல்லாத்தையும் அவளே ஏத்துக்கிட்டு கஷ்டப்படுறாளே? என்று அனைவரும் வருந்த அருந்ததி கோவமாய் பேச ஆரம்பித்தாள்.
“எல்லாம் அவரால வந்தது இதோ போய்ட்டா நாம யாரும் வேணாம்னு தூக்கி போட்டு போய்ட்டா..
நம்மளவிட அந்த நடிகன்தான் முக்கியமா போய்ட்டான் அவளுக்கு. இப்போ கூட அவனுக்காக யோசிச்சு இவ்ளோ எழுதிவெச்சுட்டு போய் இருக்காளே தவிர நம்ம யாரையும் யோசிக்கல இவன் வந்த நேரம் நம்மோட நிம்மதியே போச்சு” என்று அவள் பாட்டுக்கு கத்த அவளை முறைத்தவாறு எழுந்த நிதின் சாஹித்யனிடமிருந்து கடிதத்தை வாங்கி மீண்டும் ஒருமுறை படித்தவன் அவளை பற்றி தாங்கள் கவலை கொள்ளக்கூடாது என்று அப்போதும் யோசித்து வைத்து அவன்மேல் கோவப்படக்கூடாது என்று சொல்லிவிட்டு வேறு சென்றுவிட்டாளே.
அவள்மீதே சத்தியம் வைத்து சென்றுவிட்டாளே என்று வருந்தியவன் முகம் சுருங்க
தன் முகத்தை அழுந்த துடைத்தவன்.
திரும்பி
“அவருக்கு இத்தனை நாள் எதுவுமே தெரியாம தானே இருந்தது அதேபோல தெரியாமலே போகட்டும் அவர்மேல கோவப்படக்கூடாதுனு ப்ராமிஸ் வெச்சு இருக்கா அதனால உங்களால இல்ல நம்மாள அவர் மனசு கஷ்டப்படுற மாதிரி பார்வையோ பேச்சோ இருக்க கூடாது.
சாஹி இந்த பொருள் எல்லாம் அவர்கிட்ட கொடுத்துட்டு அவரை பத்திரமா நம்ம ப்ளைட்ல வழியனுப்பி வைக்க வேண்டியது உன் பொறுப்பு. அங்கே போய் இறங்குற வரைகூட அவருக்கு கார்ட்ஸ் இருக்கனும் ஓகே. அவரை அங்க இருக்க கார்ட்ஸ்கிட்ட ஒப்படைச்சுட்டு நம்ம ப்ளைட்லேயே நம்ம கார்ட்ஸ்ஸ திரும்ப வர சொல்லு.
ப்ளைட் டேக் ஆஃப் லேண்டிங் சம்பந்தப்பட்ட வேலையெல்லாம் உடனே பார்த்து பெர்மிஷன் வாங்கிடு.
வேற யாரும் எதுவும் பேசக்கூடாது முக்கியமா அரூ உனக்குத்தான் சொல்றேன்.
உன்னோட வேலை நீ எடுத்த ஆட் அ அழகா எடிட் பண்ணி எப்போ ரிலீஸ்னு சொல்றது தான்.
ஃபவுண்டர் இல்லைனாலும் வேலை நடக்கனும். இது அவங்க ஆர்டர்.
ஃபாலோ இட் ஆல்” என்று அவன் பேசி முடிக்க எல்லோரும் எதுவும் பேச முடியாமல் உள்ளுக்குள் எரிமலையால் குமுறி கொண்டு இருந்தனர்.
அப்போது சாஹித்யனுக்கு ஃபோன் வந்தது எடுத்து பார்க்க ஆராஷியின் ஜப்பானிய மேனேஜர் தான் என்றுவிட்டு அழைப்பை ஏற்றான்.
அவரிடம் ஆங்கிலத்தில் பேசியவன் வைத்ததும் நிதினிடம் “அவரு ஆல்ரெடி கிளம்பி வந்துட்டாராம். ஏர்போர்ட் ல இருக்காராம். இது முழுக்க முழுக்க அந்த புது ஆளோட வேலையாம் அவரோட சித்தி காசு கொடுத்து ஏற்பாடு பண்ணதாம். அண்ட் தேங்க்ஸ் சொன்னாரு ஆராஷியோட திருடப்பட்ட டீடெயில்ஸும் மீட்கப்பட்டதுனு சொன்னாரு ரூமர்ஸ்லாம் உடனே ஸ்டாப் பண்ண வெச்சதுக்கு தேங்க்ஸ்” சொன்னாரு என்று கூற
நிதினோ
“அவ்ளோ மனவேதனையில கூட அவனுக்காக இவ்ளோ செஞ்சுட்டு போய் இருக்கா பாரு.
அவளை என்ன சொல்றதுனே எனக்கு தெரியல.
ஓகே நீ போய் அவர ரிசீவ் பண்ணு அண்ட் சொன்னதெல்லாம் செஞ்சுடு.
இனிமேல் மேதா வர்றதுக்காக காத்திட்டு இருப்போம் எனக்கு நம்பிக்கை இருக்கு என் மோளால நம்மலவிட்டு இருக்கமுடியாது சீக்கிரமே வந்துடுவா. அப்போ அவளுக்காக நாம நிறைய செய்யனும் இப்போதைக்கு அவ ஜப்பான்லேய வேலை செய்யுறதா நினைச்சுட்டு மனசை தேத்திக்க வேண்டியதுதான்” என்றுவிட்டு கிளம்பி விட்டான்.
அனைவரும் புயல் அடித்து ஓய்ந்ததுபோல துவண்டு போய் இருந்தனர்.
சாஹித்யன் நிதின் சொன்ன வேலைகளை பார்க்க சென்றான்.
கூடவே மேதாவை ட்ராக் செய்யும் வேலையும் நடந்தது.
அவளுக்கு தெரியாமல் தேடுவதாக எண்ணிக்கொண்டு செய்தது அவளுக்கு தெரிந்தது. ஆனால் அதை அப்போது அவள் கண்டுகொள்ள வில்லை. கோவம் வருத்தம் என ஆயிரம் உணர்வுகளை அடக்கியவள் தன் சோகம் மற்றவரை பாதிக்கும் என்றே கிளம்பி சென்றாள் என்று சொல்வதைவிட அவளது தோழன் ஷர்மாவால் இழுத்து செல்லப்பட்டாள் என்பதே உண்மை.
கார்ட்ஸ் பாதுகாப்போடு ரூமிற்கு வந்தவனுக்கு நீண்ட நேரம் கோவமும் யோசனையாகவும் கழிந்தது.
‘ஏன் இவள் இப்படி சோரம் போனாள் பணம் வேண்டும் என்றால் நான் கொடுத்து இருக்க மாட்டேனா? எனது உழைப்பை திருடும் பணியையா செய்வது அதும் அந்தம்மாவிற்காக? அவளுக்காக செய்து இருந்தால் கூட மன்னித்து இருப்பேன் ஆனால் அவளோ அவர்களுக்காக செய்துள்ளாள் எவ்வளவு அவமானம் எவ்வளவு அசிங்கம் இப்போது இத்தோடு தன் கேரியரையே ஊற்றூ மூட வேண்டும் எல்லாத்துக்கும் அவதான் காரணம்’ என கோவமாய் பேசியபடி நடந்தவனுக்கு அவனது
ஜப்பான் மேனேஜர் ஃபோன் செய்து விவரத்தைகூறி இதில் அந்த பெண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூற அதிர்ந்து போனான் ஆரா.
தப்பு செய்யாதவளையா தான் குற்றவாளி என சாடி அவளை அனைவரின் முன்பும் அடித்து வெளியே துரத்தினேன். அவளது அழுத கண்கள் ஒருநொடி என்னை பார்த்ததே அப்படியானால் அந்த பார்வை தான் தவறு செய்யவில்லை நீதான் என்மேல் வீண் பழி போடுகிறாய் என்று காட்டியதாக பார்த்த பார்வையா? ஆனால் ஆனால் அவள் நடிப்பதாக அவளே பேசினாளே அதை கேட்டோமே அதும் எனது சித்திக்காகதான் அவள்
நடிக்கிறாள் என்று அவள் பேசினாளே?அதுவும் பொய்யா? இருக்காது அது நடிப்பு தான். இப்போது நடந்தது மட்டுமே தனது முட்டாள்தனம் என உணர்ந்தவன்
இப்போது நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என தனது மொபைலை எடுத்து அவளுக்கு ட்ரை செய்ய அது தொடர்பில் இல்லை என வந்தது.
அப்போது தான் அவள்மேல் கோவமாய் ஃபோன் செய்யும்போது கார்ட் சொன்னது நினைவு வந்தது அவளது மொபைல் உடைந்தது என.
உடனே அந்த கார்ட்க்கே ஃபோன் செய்தவன் ஆங்கிலத்தில் மேதா எங்கே உடனே கூட்டிட்டு வாங்க என்று சொல்ல அந்த நேரம் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தார் அவனது ஜப்பான் மேனேஜர் உடன் வந்தான் சாஹித்யன்.
ஆச்சர்யமாக பார்த்த ஆராஷி உடன் வந்தவனையும் பார்த்தான்
அவனது முகமே காட்டிக்கொடுத்தது அவன் ஆராஷிமேல் கோபமாக இருப்பதை. ஆனாலும் அதை காட்டாமல் நின்றான் சாஹி.
“நீங்க எப்போ வந்தீங்க?” என்று கேட்க
அவனுக்கு அவர் ஃபோன் செய்ததே சென்னை ஏர்போர்ட்டில் இருந்து தான் அங்கிருந்து இங்கு வரதான் தாமதம் ஆகிவிட்டது என்று கூற அவரை பார்த்து குற்ற உணர்வோடு தலையை குனிந்து கொண்டவன் சாஹித்யன் கிளம்புவதாக கூறி செல்ல திரும்ப அவனது அழைப்பில் நின்றான்.