அத்தியாயம் – 93
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஆராஷி கத்தியதில் எல்லோரும் அதிர்ந்து பார்த்தனர் ஹர்ஷத்தும்தான்.
“சொல்லுங்க ஹர்ஷத் ஏன் இப்படி நீங்க கேட்கலை? என்னால ஒரு பிள்ளைக்கு அப்பா ஆகமுடியாதுனு தெரிஞ்சா அவ என்னை விட்டு போய்டுவாளா? எனக்கு நடந்த பிரச்சினை எல்லாம் தெரிஞ்சவளுக்கு அப்போலாம் என்னை விட்டு விலகி போக தெரியல ஏதோ ஒரு டாக்டர் சொன்னதுக்காக அவளையும் வருத்திக்கிட்டு என்னையும் விட்டு பிரிஞ்சு போவாளா? முதல்ல என்னை விட்டு பிரியுற உரிமையை அவளுக்கு யார் கொடுத்தது?” என்று அவன் கத்த டிரான்ஸ்லேட்டர் மூலம் இதையெல்லாம் கேட்டவர்களுக்கு ஆராஷியின் கோவம் புரிந்தது ஹர்ஷத்துக்கும் புரிந்தது
‘நம்ம தோழியை பத்தியே யோசிச்சோமே இப்படி ஒரு பக்கம் நாம யோசிக்கவே இல்லையே? இவர் சொல்றமாதிரி இவருக்கு பிரச்சனை இருந்தா அவ என்ன விட்டுட்டா போவா? அவனை இன்னேரம் கல்யாணம் செஞ்சு இருக்க மாட்டாளா?’ என்று தனக்குள்ளேயே பேசியவனைதான் பார்த்தான் ஆராஷி.
அவனது பார்வை உள்ளுக்குள் நடுக்கத்தை கொடுக்க
“நா..நான் இந்த ஆங்கிள்ள யோசிக்கலையே சர்” என்றான் தன்மையாக.
“யோசிச்சு இருக்க மாட்டீங்க ஏன்னா உங்க ப்ரண்ட் உங்கள யோசிக்க விட்டு இருக்கமாட்டா அவளோட பக்கத்தில இருந்து தான் உங்கள யோசிக்க வெச்சு இருப்பாளே தவிர என்மேல எந்த கோவமும் யாருக்கும் வந்துடகூடாது அதுதான் அவளோட எண்ணம் அதன்படி தான் உங்களையும் யோசிக்க வெச்சு இருப்பா இதுல உங்கள குற்றம் சொல்லி என்ன யூஸ்?
அவளோட மாஸ்டர் ப்ளான் அப்படி? அவ வெறுத்தமாதிரி போய்ட்டா நான் அவளை அப்படியே விட்டுடுவேன் அவளை தேடி திரும்ப வரமாட்டேன் அதேபோல அவளை நான் தப்பா பேசினதால அவ ஃபேமிலியும் என்மேல கோவமா இருப்பாங்க சோ அவளை விட்டு என்னை ஒரேடியா இவங்க நீங்க எல்லாரும் சேர்ந்து பிரிச்சுடுவீங்க. நானும் வேற ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுட்டு சந்தோஷமா இருப்பேன் அதானே மேடமோட ப்ளான் ஆனா மேடமே எதிர்பார்க்காத டிவிஸ்ட் நான் அவளை அவதான் மீரானு கண்டுபிடிச்சு திரும்ப வந்ததும் அதைவிட பெரிய டிவிஸ்ட் என் அண்ணன் ரியோட்டோ தான் அவளோட அக்காவோட ஹஸ்பண்ட்னும் தான் அதனாலதான் அங்க இருந்து உங்கள கூடவே இருந்து என்னை வேற யாரையாவது கல்யாணம் செய்துக்க வற்புறுத்தனும்னு அடிச்சு கெஞ்சி இங்க அதும் எனக்கு டிரான்ஸ்லேட்டராவும் பி ஏ வாவும் அனுப்பினா ஏன்னா நானும் அவளை மறந்து வேற எதையும் யோசிக்காம நல்ல லைஃப்ப அமைச்சுக்கனும் அதுக்கு அவளுக்கு மட்டுமே இரகசியம் சொல்ற ஆள்தான் வேணும் அதுக்குத்தான் உங்கள அனுப்பினா கரெக்டா?” என்றான் அவளை நன்றாக உணர்ந்தவனாய்.
‘இருக்குமோ? இவர் சொல்றதுல பாதி அவளும்தானே சொன்னா இவரை விட்டு பிரிய இதுதான் நல்ல வழினு சொன்னாலே தவிர என்னை வேற எதையுமே யோசிக்க விடலையே? இதுக்குதானே அவ என்கிட்ட சண்டை போட்டு என்னை இவரை உளவு பார்க்க அனுப்பினா? இவர் அவளோட ப்ளான சொதப்பிட கூடாதுனு தானே என்கிட்ட சொல்லி அனுப்பினா’ என்று யோசித்தவனுக்கு தன் தோழியின் ராஜதந்திரம் அனைத்தும் விளங்க அதை கரெக்டாக கண்டுபிடித்த ஆராஷியை பார்த்தவனுக்கு தோன்றியது ஒன்றுதான்
அவளுக்கு ஏத்த ஆள் இவர்தான் என்று.
ஆராஷியின் பதிலில் அனைவருக்கும் அவளது ப்ளான் புரிந்து போனது அவர்களுக்கும் கூட இது அதிர்ச்சிதான் எப்படி யோசிச்சு செஞ்சு இருக்கா இதெல்லாம் நமக்கே தெரியாம? என்று தான் எண்ணினர்.
“அவளோட நீங்க நெருக்கமா கூட இல்ல அவமேல கோவமாதான் இருந்தீங்க ஆனா அவ இப்படித்தான் யோசிப்பானு எப்படி கண்டு பிடிச்சீங்க?” என்று ஹர்ஷத் அவனை பார்த்து கேட்க இது அனைவருக்குமே உண்டான சந்தேகம் தான்.
அதை கேட்டு சிரித்தவன்
“நானும் அஷ்ஷூவும் ஒருத்தரையொருத்தர் நேர்ல பார்த்துக்காம இருந்து இருக்கலாம் எல்லா லவ்வர்ஸ்போல கைகோர்த்து ஊர் சுத்தாம இருக்கலாம் ஆனா எங்களோட லவ் எங்களுக்குள்ள நல்ல புரிதலை கொடுத்து இருக்கு.
என்னை அவ என்னைவிட நல்லாவே புரிஞ்சு வெச்சு இருக்கும் போது நான் அவளை பத்தி ஓரளவுக்காவது புரிஞ்சுக்காம இருப்பேனா?
சினிமாவுல தான் ஹீரோ எவ்ளோ கொடுமை பண்ணாலும் ஹீரோயின் ஹீரோ மேல உயிரா இருந்து அவருக்கு ஒன்னுனா துடிச்சு போய் அவர்கூடவே இருந்து எவ்ளோ அசிங்கப்பட்டாலும் அவரை திருத்தி கிளைமாக்ஸ்ல சந்தோஷமா வாழ்வாங்க
ஆனா இதெல்லாம் எனக்கு நிஜத்துல நடந்து இருக்கே.
நான் எவ்ளோ தப்பா பேசிட்டேன் அவள எவ்ளோ கீழ்தரமா நடந்துகிட்டேன் அவ கிட்ட ஆனா பாருங்க அப்போகூட என்மேல கோவம் இல்லாம எனக்கு என்ன தேவை என்னோட பாதுகாப்புனு எனக்கானதை தூரத்தில இருந்தே பார்த்து பார்த்து செஞ்சுட்டு இருக்கா இன்னும்
என்னை கொஞ்சம் கூட வெறுக்கல இதுலேயே தெரியுதே அவ எனக்காக எப்படி யோசிப்பானு
அவளை பிரிஞ்சு இந்த கேப்ல நான் அவளை நிறைய புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டேன் அவ எனக்காக செஞ்ச எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு அவ என் விஷயத்துல இப்படி இப்படித்தான் யோசிப்பானு புரிஞ்சுக்கிட்டேன்.
ஆனா அவ என்னை புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதான்.
அவளால குழந்தை பெத்துக்க முடியாதுனு என்னை விட்டுட்டு போறாளா?
இவ்ளோ பெரிய பிஸினஸ் வுமன் ஆனா என் விஷயத்துல சாதாரண பொண்ணு மாதிரி யோசிச்சு இருக்கா பாருங்க அதுதான் எனக்கு வேடிக்கையா இருக்கு அவள யாருனே தெரியாம நான் அவளை மட்டுமே நினைச்சுட்டு அவ ஒருத்திக்காக அவளையே வேற ஒருத்தினு வெறுத்தவன்
இப்போ அவ யாருனு தெரிஞ்ச அப்புறம் அவளுக்கு இருக்குற இந்த சின்ன பிரச்சனையாலதானா நான் அவள விட்டு விலகிட போறேன்?
நான் அவளோட ராஷி வாழ்ந்தா அவகூட மட்டும் தான்
இல்லைனா அவளோட நினைவோட மட்டும் தான்.
இந்த பிறவியில சாகுறவரை வேற எந்த பொண்ணும் என் வாழ்க்கையில இல்ல.
நான் எவ்ளோ கேவலமானவன்ல அவளோட தூய்மையான பாசத்தை புரிஞ்சுக்காம இழந்துட்டு இப்போ தேடி அலைஞ்சுட்டு நிக்கிறேன்
அன்னைக்கு என் அம்மாவ இழந்தப்போ அழுத அழுகை அதுக்கு அப்புறம் நான் அழுதது என் மேதாவை நானே தப்பா பேசிட்டேனேனு தான்.
நான் ரொம்ப கொடுமைக்காரன் அதான் இந்த கொடூரமானவன் வேணாம்னு போய்ட்டா போல?
என்னால அவளுக்கு சந்தோஷமே இல்ல கஷ்டம் மட்டும்தான்னு நினைச்சு என்னை பிரிஞ்சு போய்ட்டாளோ?” என்று முதலில் சாதாரணமாக ஆரம்பித்து கடைசியில் கவலையோடு கேள்வியாய் விளக்கினான்.
அவனை அணைத்துக்கொண்ட ஹர்ஷத்
“உங்க ரெண்டு பேரோட லவ்வ பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு.
ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்காம பழகிக்காம இவ்ளோ லவ் இருக்கும்னு என்னால இன்னும் நம்பவே முடியல உங்களோடது உணர்வுகளால உருவான காதல் அது என்னைக்கும் தோற்காது உங்க உணர்வுகளுக்கு நீங்க கொடுக்குற மதிப்புதான் உங்க காதலை ரொம்ப ஸ்ட்ராங் ஆ மாத்துது.
நீங்க கவலைபடாதீங்க அவள நிச்சயமா நீங்க கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழுவீங்க” என்று ஆறுதல் கூறினான்.
அவனது பேச்சில் சற்று ஆறுதல் அடைந்தவனது தோளில் ஆறுதலாய தட்டிய நிதின்
“நான் சொல்றது உங்களுக்கு புரியுமா இல்லையானு கூட எனக்கு தெரியல எனக்கு உங்க மேல கோவம் ஆத்திரம் இருந்தது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை நீங்க நல்லா இருக்கனும்னு நினைக்கறது.
எங்க மேதாவை கண்டுபிடிச்சு அவளுக்கு சரியான ட்ரீட்மெண்ட் பார்த்து அவளை சரிசெஞ்சு உங்க ரெண்டு பேருக்கும் நான் கல்யாணம் செஞ்சு வைப்பேன் என்ட மோளே குறையோட இருக்கவிடமாட்டேன்” என்றான் நிதின்.
அவன் கூறியது சிறிதுதான் புரிந்தது ஆராஷிக்கு அதனால் அவன் ஹர்ஷத்தை பார்க்க அவன் மொழிப்பெயர்ப்பு செய்தான்.
அதைகேட்டவன்
பெரியதாக புன்னகைத்து
“நீங்க சொன்னது புரியுது ஆனா அது நடக்க வாய்ப்பே இல்ல என் அஷ்ஷூ மனசு வைக்குற வரை” என்றவன் தொடர்ந்தான்
“ஐயம் சாரி நானு சீக்கிரமே தமில் கத்துக்கிறே பட் கிவ் மீ சம் டைம்” என்றபடி ஜாப்பனீஸில் பேச ஆரம்பித்தான்.
“நீங்க சொன்னது நடக்காது ஏன் சொல்றேன்னா இவ்ளோநாள் உங்க பேச்சை கேட்டுட்டு நடந்தது உங்க மோளே மேதா ஆனா இப்போ முடிவுகளை எடுக்குறது ஶ்ரீ குரூப்ஸ்ஸோட ஃபவுண்டர் அண்ட் டிஸிஷன் மேக்கிங் போஸ்ட்ல இருக்குற மேதஷ்வினி.
மேதஷ்வினிக்கு எடுத்த முடிவை எப்பாடு பட்டாவது செயல்படுத்தியே ஆகணும் அதுதான் ஒரே கோல்.
ஆனா என் அஷ்ஷூக்கு என் விஷயத்துல என்னை தவிர வேற உலகமே தெரியாது அவளோட கண்ணு என்னைத்தான் தேடும் என்னைத்தான் பார்க்கும் அவளோட மனசும் மூளையும் என்னையும் எனக்காக மட்டும்தான் யோசிக்கும் யோசிச்சு தப்பு தப்பா அதுவே முடிவு பண்ணிகிட்டு காணாம போய்டும்.
நீங்க அவளோட என்னை சேர்த்து வைக்க யோசிக்கறீங்கனு சின்னதா டவுட் வந்தாலே போதும் மேடம் எல்லார் கண்ணுலையும் மண்ணை தூவிட்டு அண்டார்டிகா ஓடினா கூட ஆச்சர்யம் படுறதுக்கு இல்ல.
அண்ட் லாஸ்ட்டா சொன்னீங்களே குறையோட இருக்கவிடமாட்டேன்னு எதுங்க குறை?
அவளாள குழந்தைக்கு தாயாக முடியாதுனு டாக்டர் சொன்னதா? இல்லீங்க அது குறையே இல்ல.
மத்தவங்க சொல்றத அவ நம்பினா பாருங்க அதுதான் குறை.
இவர் சொன்னப்போ கூட எனக்கு அது குறையா தெரியல அதுவும் என்னால தானே அவளுக்கு அப்படி ஆகி இருக்கு.
ஆனா அதை ஒரு குறையா நினைச்சு அவ என்னை விட்டு தனியா போய் எங்கேயோ இருக்கா பாருங்க அதுதான் பெருசான குறையா இருக்கு
அதை ஒரு பிரச்சனைனு அவ என்னைவிட்டு போய் இருக்கா பாருங்க அதைதான் என்னால தாங்க முடியல நிதின் சர்
உண்மையான லவ்னா என்ன சர்?
ஒருத்தரோட நிறை குறையோட அவங்கள ஏத்துக்கறதுதான் என்னை என்னோட குறையோட அவ ஏத்துக்கிட்டா ஆனா அவளோட குறையோட என்னோட இருக்கமாட்டேன்னு போய் இருக்கா இது என்ன நியாயம்?” என்று அவன் புலம்ப
“உங்களுக்கு என்ன குறை?” என்று நிதின் கேட்க
ஆராஷி அதை எப்படி சொல்வது என திணற ஹர்ஷத்
“அது அவருக்கும் மேதாக்கும் சம்பந்தம்பட்டது அதை அவங்களே தீர்த்துக்கட்டுமே நாம ஏன் கேட்டு அவரை கஷ்டப்படுத்திட்டு அவரை கஷ்டப்படுத்தினா மேதாக்கு பிடிக்காதே” என்று அவன் கூற
அவன் சொல்வதும் சரிதானே என யோசிக்க ஆரம்பித்தனர் அதனால அனைவரும் அமைதியாக இருக்க
“என்னைப்பத்தி முழுசா அவங்களும் தெரிஞ்சுக்கனும்ல ஹர்ஷத் அப்போதானே அவங்களுக்கு என்மேல நம்பிக்கை வரும்? அதை சொல்றதுதான் நியாயம்” என்று ஆராஷி பேச
“சும்மா இருங்க சர் உங்கள பத்தி மேதாவுக்கு தெரிஞ்சா போதும் இதை வேற யாரும் எதுவும் தெரிஞ்சுக்கறத அவ விரும்பல தெரிஞ்சுக்கனும்னு நினைச்சு இருந்தா இத்தனை வருஷம் அதை ஏன் அவ மறைச்சு வைக்கணும்.
அதனால யாருக்கும் எதையும் சொல்லவேண்டிய அவசியம் இல்ல அமைதியா இருக்கீங்களா” என்றபடி
நிதினிடம் திரும்பியவன்
“அண்ணா இவரோட விஷயம் யாருக்கும் தெரியக்கூடாதுனு மேதா சொன்னா அதனால ப்ளீஸ்” என்று அவன் நிதினிடம் கேட்க.
“ம்ம் சொல்ற விஷயமா இருந்தா மேதாவே சொல்லி இருப்பா அவளே இத்தனை வருஷம் இதை மறைக்குறானா அதுக்கு ஸ்ட்ராங் ரீசன் இருக்கனும் அதனால நீங்க எதுவும் சொல்லவேணாம் ஆரா” என்று நிதின் கூற
“அவ வேணா உங்களுக்கு தெரியகூடாதுனு நினைக்கலாம் ஆனா நான் நீங்கலாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கனும்னு நினைக்கிறேன் நாளைக்கு வேற யார் மூலமாவது தெரிய வந்தா அது இன்னும் வேதனையை தரும்” என்று அவன் பேச அவனை தடுத்த
நிதின்
“வேண்டாம் அது எப்போ மேதா எங்களுக்கு தெரியணும்னு நினைக்குறாளோ அப்போவே நாங்க தெரிஞ்சுக்கறோம் நீங்க சொல்லவேண்டாம்” என்று அவன் கண்டிப்பாக கூறிவிட அமைதியாக நின்றான் ஆராஷி.
அவனை பார்த்த நிதின்
“எங்களோட நம்பிக்கை மேதாதான் ஆரா அவளே ஒரு விஷயம் எங்களுக்கு தெரியக்கூடாதுனு இருக்கானா அது ரொம்ப சென்சிடிவ்வான உங்கள ரொம்ப பாதிக்குற விஷயமா தான் இருக்கும் அதனால அது நாங்க தெரிஞ்சுக்க விரும்பல.
அதும் இல்லாம காரணம் இல்லாம மேதா சொல்ல மாட்டா அவள நாங்க அவ்ளோ நம்புறோம் அதனாலதான் சொல்றோம்” என்று அவன் கூற அதை ஹர்ஷத் மொழிப்பெயர்க்க
ஆராஷிக்கு இவர்களை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது.
Interesting