அத்தியாயம் – 94
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
“அவ சொல்லாம விட்டா நீங்களும் தெரிஞ்சுக்க ட்ரை பண்ண மாட்டீங்களா? என்னோட பாஸ்ட்ல நான் ரொம்ப கொடூரமானவனா இருந்தா கூட என்னை ஏத்துப்பீங்களா? என்னோட பேக்கிரவுண்ட் பத்தி விசாரிக்க கூட மாட்டீங்களா?” என்று அவன் கேட்க அதை கேட்ட அனைவருக்கும் சிரிப்புத்தான் வந்தது.
அவனது தோளில் தட்டிய நிதின்
“நீங்க எவ்ளோ கொடூரமானவரா இருந்தாலும் உங்கள நல்லவரா மாத்துற அளவுக்கு எங்க மேதாக்கு திறமையும் பாசமும் இருக்கு.
அவளோட பாசமான பார்வை ஒன்னு போதும் ஒருத்தன் நல்லவனா கெட்டவனானு புரிஞ்சுக்க
எங்க மேதா எந்த ஒரு பையனுக்காகவும் தன் வாழ்க்கையையே பணயம் வைக்குற அளவுக்கு இறங்கினது இல்ல அது உங்களுக்காக மட்டும்தான் செஞ்சு இருக்கா.
டோட்டல் எம்ப்ளாயீஸையே மாத்தினா அதும் உங்களுக்காக மட்டும் தான் எங்களை விட்டு பிரியாதவ பிரிஞ்சு தனியா இருக்கா அதும் உங்களுக்காக மட்டும் தான் இவ்வளவும் செய்ய அந்த பையன் அவளுக்கு எவ்ளோ ஸ்பெஷலா இருக்கனும்.
எங்க அப்பாவை தவிர வேற யாருக்கு அவ இவ்ளோ செஞ்சு இருக்கானா அது உங்களுக்கு மட்டும் தான் இதுலேயே எங்களுக்கு புரியாதா நீங்க எப்படிப்பட்டவர்னு நீங்களா சொல்லித்தான் உங்கள பத்தி நாங்க தெரிஞ்சுக்கனும்னு இல்ல.
உங்கள அவ குழந்தையை பாத்துக்குற மாதிரி பொத்தி பொத்தி ஹர்ட் ஆகவிடக்கூடாதுனு பார்த்து பார்த்து செய்யும்போதே புரியுது உங்க பாஸ்ட்ல ரொம்ப ஹர்ட் ஆகி இருக்கீங்கனு அதை கேட்டு திரும்ப நாங்க யாரும் உங்கள பாவமாவோ இல்ல கோவமாவோ பார்த்து பேசி ஹர்ட் பண்ணிடக்கூடாதுனு தான் அவ மறைக்கிறா அதனால அதை நீங்க எங்களுக்கு சொல்ல வேண்டாம்.
உங்கள கஷ்டப்படுத்துற எந்த விஷயமும் எங்களுக்கு தெரிய வேணாம்” என்று நிதின் கூற அதை ஹர்ஷத் ஆராஷிக்கு சொல்லவர அவனை கைநீட்டி தடுத்தவன்
“எனிக்கு புரிஞ்சது ஹர்ஷத்.
மேதா மேலே அவ்ளோ கான்பிடன்ஸ் இவங்களிக்கு” என்று அவன் பேச ஆமென தலையை ஆட்டினான் ஹர்ஷத்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த ஆராவை பார்த்த ரியோட்டோ அவன் அருகில் வந்து
“ஆரா உன் வாழ்க்கையில என்ன நடந்ததுனு எனக்கு தெரியாம வேணா இருக்கலாம் ஆனா ஒன்னு சொல்றேன் தெரிஞ்சுக்க மேதா மீராவ என்கிட்ட அறிமுகம் ஆன நாள்ள இருந்து அவ போற வரைக்கும் அவ என்கிட்ட பேசின பேச்செல்லாம் உன்னை பத்தி மட்டும் தான் இருக்கும் அவளுக்கு ஜிம்மி மேல எவ்ளோ லவ்னு எனக்கு தெரியும் அவளுக்கு ஒன்னுனா அவ்ளோ துடிச்சு போய்டுவா ஆனா அதை என்கிட்ட அவ ஒப்படைக்க நினைச்சா பாரு அதுக்கான காரணம் அப்போ புரியல ஆனா இப்போ புரியுது.
எப்படியும் தான் அவள கொண்டு வந்தா உன்னோட மனசு அவள பார்த்து மாறும் நீ உன்னோட டிப்ரஷனுக்குள்ள போகாம இருப்பனு தான் அவ உனக்கு அவ உயிரான ஜிம்மியை கொடுத்து இருக்கா.
அவளுக்கு உன்மேல எவ்ளோ லவ் இருந்தா உனக்காக தன் அடையாளத்தை மறைச்சு உன் ஒருத்தனுக்காக எல்லாத்தையும் மாத்திக்கிட்டு உன்னால பட்ட காயத்துக்கு கூட உன்மேல வெச்சு இருக்குற காதலையே மருந்தாக்கிட்டு போய் இருப்பா எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் அவளை நீ இழந்துட கூடாது ஆரா.
உன்னோட பாஸ்ட் தெரிஞ்சும் அவ உன்மேல உயிரா இருந்து இருக்கானா அவளோட மனசு எவ்ளோ பெரிசு அவளை விட்டுடாதேடா” என்றான்.
“நிச்சயமா அண்ணா.
என்னோட எல்லாமா இருந்தவ இனியும் இருக்கப்போறவ அவதான் அவளை இழந்தா நான் உயிர் வாழவே தகுதி இல்லாதவன் ஆகிடுவேன்” என்று அவனும் கூற
“உங்களுக்கு எந்த விதமான உதவி வேணும்னாலும் எங்களை கேளுங்க நாங்க செய்யுறோம்” என்று நிதின் சொல்ல அனைவரும் மண்டையை ஆட்டினர்.
“எனக்கு இந்த ப்ரண்ட்ஷிப்ல இந்த பாசமான குடும்பத்துல என் அஷ்ஷூவோட சந்தோஷமா வாழணும்னு அவ்ளோ ஆசையா இருக்கு.
அதை நிறைவேத்த நான் கொஞ்சம் தில்லுமுல்லு வேலை செஞ்சுதான் ஆகணும் அதுக்கு உங்க எல்லாரோட ஹெல்ப்பும் எனக்கு வேணும்.
முக்கியமா ஹர்ஷத் உங்க ஹெல்ப்” என்று கூற
“சொல்லுங்க சர் கண்டிப்பா செய்யுறேன்” என்று அவனும் கூற
“என்னோட அவார்ட் ஃபங்ஷன் நடக்க போறது உங்களுக்கு தெரியும்தானே? அதை கேன்சல் செய்ய சொல்லி உங்களுக்கு இன்னேரம் ஆர்டர் வந்து இருக்குமே?” என்றான் ஆரா.
“ஆமா உங்களுக்கு ஓபன் டெத் த்ரட் வந்து இருக்கே அந்த அவார்ட் ஃபங்ஷன்ல உங்களை கொல்ல போறதா? அதனால உங்கள எப்படியாவது அந்த ஃபங்ஷனுக்கு போகவிடாம செய்ய சொன்னா? உங்களுக்கு செக்யூரிட்டி ஜாஸ்தி செய்ய சொல்லிட்டா அண்ட் அப்படி மீறி நீங்க ஃபங்ஷன் வந்தா ஹை செக்யூரிட்டில தான் உங்கள வரவைப்பேன்னு ஆல்ரெடி ஆல் டைப் ஆஃப் டைட் செக்யூரிட்டிக்கு அப்ளை பண்ணிட்டா அதும் அப்ரூபவல் ஆகிடுச்சு ஆனாலும் மேடம் அந்த செக்யூரிட்டிய நம்பல” என ஹர்ஷத் கூற தன்னவளை மெச்சியவனது உணர்வுகள் அவனது முகத்திலும் தெரிந்தது.
“தெரியுமே எனக்கு பாத்ரூம் போககூட ஷேடோ போட்டு வெச்சு இருக்காளே” என்றபடி ஹர்ஷத்தை பார்க்க ஈஈஈ என்று சிரித்தான் அவன்.
“ம்ம் எப்படியும் என் ஹை செக்யூரிட்டிய என் மேதா பார்த்துப்பா அந்த ஃபங்ஷன்க்கு கண்டிப்பா தூரமா வந்தாச்சும் அவ பார்ப்பா.
அதே சமயம் என்னை கண்டிப்பா கொல்ல ப்ளானும் நடக்கும் என்னை காப்பாத்த என்ன வேணா செய்வா மேதா ஆனா அவளை நான் காப்பாத்தனும் ஏன்னா எனக்கு என்னமோ இது என்னோட லவ்வரையும் ஸ்பான்சரையும் கண்டுபிடிச்சு அவங்கள கொல்றதுதான் ப்ளான்னு நினைக்கிறேன்.
இல்லனா இவ்ளோ ஓபனா டெத் த்ரட் விடமாட்டாங்க அதனால நான் உங்களுக்கும் மேதாக்கும் பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்.
இந்த ப்ளான் யாருக்கும் தெரியாம பாத்துக்கனும் ஈவன் மேதாக்கும் தெரிஞ்சா மேடம் அவங்க ஸ்பான்சர்ஷிப்பை வெச்சு எனக்கு ரூல்ஸ் போட்டுடுவாங்க அதனால இதை கரெக்டா செயல்படுத்த எனக்கு உங்க எல்லாரோட ஹெல்ப்பும் வேணும்.
அந்த மேடையில நான் உங்கள அறிமுகப்படுத்துறதோட என் அஷ்ஷூக்கு நான் ப்ரப்போஸ் பண்ணலாம்னு இருக்கேன்.
சோ ப்ளீஸ் இந்த ஒருமுறை எனக்கு எல்லாரும் ஹெல்ப் பண்ணுங்க” என்று அவன் கேட்க சிறிது நேரம் யோசித்த அனைவரும்
“ரிஸ்க் எடுக்கறீங்கனு தெரியுது ஆனா மேதாவை சம்மதிக்க வைக்க நீங்க பப்ளிக்ல ப்ரப்போஸ் பண்ணாதான் உண்டு நல்லதே நடக்கும்னு நம்புவோம் சோ நாங்க ஹெல்ப் பண்றோம் சொல்லுங்க நாங்க என்ன செய்யனும்?” என்று நிதின் கேட்க அதையே ஹர்ஷத்தும் ஆமோதித்தான்.
அவர்களை பார்த்து சந்தோஷப்பட்ட ஆராஷி
“ரிஸ்க்னு தெரிஞ்சும் எனக்கு ஹெல்ப் பண்ண வந்ததுக்கு ரொம்ப தேங்கஸ்.
யாருக்கும் எதுவும் ஆகாம பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு.
ஹர்ஷத் அந்த ஃபங்ஷன் வரை நீங்க எனக்கு பி ஏ வா டிரான்ஸ்லேட்டரா மெயின்டெயின் பண்ணனும் இல்லனா அவளுக்கு டவுட் வந்துடும் முடியுமா ப்ளீஸ்?” என்று கேட்க
“கண்டிப்பா சர்” என்று கூற அவனை அணைத்து நன்றி கூறியவன்.
“அண்ட் நீங்க அவகிட்ட ரெகுலரா அப்டேட் பன்றது போலவே பண்ணனும் கூடவே இன்னொரு விஷயமும் சேர்த்து செய்யனும்” என நிறுத்த ம்ம் என்றபடி தலையை ஆட்டினான் ஹர்ஷத் ஷர்மா.
“நான் எவ்ளோ முயற்சி செஞ்சும் அவர் ஃபங்ஷனை கேன்சல் செய்யமாட்டேன்னு சொல்லிட்டார் நான் அவரோட ஹெல்த்த காரணம் காட்டி கூட ஸ்டாப் பண்ண பார்த்துட்டேன் ஆனா அவர் என் உயிரே போனாலும் நான் ஃபங்ஷனை நிறுத்த மாட்டேன் சொல்லிட்டார் அதுக்கு மேல என்னால தடுக்கமுடியலனு நீங்க சொல்லனும்” என்று கூற அவனது ப்ளான் புரிந்த ஹர்ஷத் சரியென மண்டையை ஆட்டினான்.
அடுத்து அடுத்து தனது ப்ளானை எல்லோருக்கும் புரியும்படி எடுத்துரைத்தவன் அனைவரின் பாதுகாப்புக்கும் அவர்களுக்கு உறுதி அளித்தான்.
இதையெல்லாம் கேட்டு அனைவரும் மண்டையை ஆட்டினாலும் நிதின் முகம் தெளியாமலே இருந்தது. அதை கவனித்த ஆராஷி
அவன் அருகில் வந்து
“என்ன காரணத்துக்காக என் சித்தியே என்னையும் என்னை சுத்தி இருக்குறவங்களையும் கொல்ல நினைக்குறாங்கனு தானே யோசிக்கறீங்க? இதனால மேதாவுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமானு யோசிக்கறீங்களா?” என்று அவன் கேட்க தனது சந்தேகத்தை அப்படியே கேட்ட ஆராஷியை வியந்து பார்த்தான் நிதின்.
“மேதா தெரியவேணாம்னு சொன்னதுக்காக வேணா நீங்க தெரிஞ்சுக்க வேணாம்னு விடலாம் ஆனா அப்படி என்ன ரீசனா இருக்கும்னு உங்க உள்மனசு ஆராய்ச்சி செஞ்சுட்டேதான் இருக்கும் ஐ க்நோ” என்றவன்
“அவ வேணா உங்களுக்கு தெரியகூடாதுனு நினைக்கலாம் ஆனா நான் உங்களுக்கு தெரியனும்னு நினைக்கிறேன் அதனால சொல்றேன்” என்று ஹர்ஷத் தடுத்தும் சொல்லத்துவங்கினான்.
Interesting😍😍