Skip to content
Home » 07.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

07.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

போகும் அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தவளை செல்வி… என அழைத்தான் யாதவ் ஹா என திரும்பி பார்த்தவளிடம் சுற்றி கண் காட்ட திரும்பி பார்த்தாள் அங்கு இருந்த மொத்த பேரும் இங்கு நிகழ்ந்ததை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

“யாரு முன்னாடி நீ அசிங்கப்படனும்னு நினைச்சி இதை செஞ்சாங்களோ இப்போ அவங்க முன்னாடி மன்னிப்பு கேட்க வெச்சிட்டேன் இப்போ நீ ஹேப்பி‌ தானே? இவங்களுக்கு முன்னாடி இன்னும் நீ பயந்து தான் வாழப்போறீயா?…” என கேட்க மறுப்பாக தலையசைத்தவளின் கரம் பிடித்தப்படி “தாங்க்யூ சீனியர்‌ நீங்க இப்படி ஒரு விஷயத்தை இவளுக்காக பண்ணுவீங்கன்னு நான் நினைச்சு பார்க்கலே ரொம்ப ரொம்ப நன்றி…” என்ற ஸ்ரீ “வா டைம் ஆகுது க்ளாஸ்க்கு போலாம்…” என கலைச்செல்வியை உடன் அழைத்துக்கொண்டு சென்றாள் கலைச்செல்வி ஏதோ தோன்ற திரும்பி பார்த்தாள் அவளை பார்த்தப்படி இருந்த யாதவ் இவள் திரும்பியதும் அவன் இதழ் அருகே விரல் வைத்து ஸ்மைல் என்பது போல் சைகை செய்ய அதில் தானாக மெல்லிய புன்னகையை கொடுத்தாள் கலைச்செல்வி.

அதை கடைக்கண்ணால் பார்த்த ஸ்ரீ “ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்…” என கிண்டல் அடித்தப்படி அழைத்துச் சென்றாள் அன்றைய நாள் நிம்மதியாக தான் கழிந்தது பெண்ணவளுக்கு யாதவ் தனக்காக செய்தது தான் மீண்டும் மீண்டும் ஞாபகத்தில் வந்து வந்து போனது இவள் இப்படி இருக்க யாதவ் பின்னால் சுற்றும் கூட்டம் எண்ணெய்யில் போட்ட கடுகாக தாறுமாறாக வெடித்துக் கொண்டு இருந்தனர் எனில் இன்னொரு பக்கம் அந்த நால்வரும் இவளை தங்கள் பங்கிற்கு வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தனர்.

அதே‌ நேரம் லைப்ரரிக்கு செல்ல வேண்டும் என கலைச்செல்வி நினைவுப்படுத்த இருவரும் சேர்ந்து அங்கு சென்ற போது‌ இவர்கள் இருவரும் நடனம் ஆட சேர்க்கப்பட்ட குழுவின் தலைவி எதிர்ப்பட்டால் அவள் முன்பு கையெடுத்து கும்பிட்டு “மன்னிச்சிடுங்க அக்கா என்னாலே தான் அன்னைக்கு அத்தனை பேரோட ஹார்ட்வொர்க்யும் வேஸ்டா போச்சு‌..”என மனதார மன்னிப்புக் கேட்டவளின் கையை இறக்கி விட்ட அந்த பெண்.

“உன் தவறுன்னு அங்கு எதுவும் இல்லை ஆனா ஏதாவது உனக்கு அன்னைக்கு நடக்கும்னு எனக்கு தெரியும் க்ரெஸ் லவ்ன்னு நிறைய பேர் சுத்திக்கிட்டு இருக்கிற ஆள் தான் அந்த யாதவ் அவனே தானா உன்கிட்ட வந்து பேசினா அதை பாத்திட்டு அமைதியா போற ஆளுங்க இவளுங்க இல்லை ஏதாவது பண்ணுங்கன்னு தெரியும் அதே சமயம் உன்னை எவ்வளவு தாழ்த்தி பேச முடியுமோ அந்தளவுக்கு அவங்க பேசறதை எல்லாம் பார்த்து தான் உன் டேலன்டை வெளியே கொண்டு வரனும்னு நினைச்சு கடைசியா பர்பாமென்ஸ் பண்ண வைக்க நினைத்தனே தவிர டீம் ஜெயிக்கிறது தோக்கிறதை பத்தி நான் யோசிக்கவே இல்லை உன்னை கேலி பண்ணி பேசுற கூட்டம் உன் திறமையை பார்த்து அதை பத்தி பேசும்னு நினைச்சேன் அவ்வளவு தான் ஆனா எதிர்பாரா விதமா என்ன என்னமோ நடந்துறிச்சு நீ இதையே நினைச்சிட்டு இருக்காதே எல்லாத்தையும் கடந்து வந்திரு கலைச்செல்வி இல்லைன்னா நீ வாழ்ந்த வாழ்க்கையை ஒருநாள் திரும்பி பார்க்கிறப்போ நிறைய விஷயங்களை இழந்திருப்ப அதனாலே தான் சொல்றேன் உனக்கு நீ உண்மையாவும் தைரியமாவும் இருக்கும் வரைக்கும் உன்னை எவனாலேயும் எதுவும் பண்ண முடியாது…” என்றவள் சொல்லி சென்றதில் அத்தனை ஆழமான கருத்துக்களையும் உண்மையும் புதைந்து இருந்ததை இருவரும் உணர்ந்து கொண்டனர்.

காலேஜ் முடிந்து கிளம்பு போது தன் கார் அருகில் நின்று கொண்டு இருந்தவன் இவளை பார்த்து கையசைத்து புன்னகைத்து வழியனுப்ப அவளும் பதிலுக்கு கையசைத்து புறப்பட்டவள் ஸ்ரீயிடம் இருந்து விடைப்பெற்றாள் அன்று முழுவதும் ஏன் வீட்டிலும் கூட புதுவித உற்சாகத்துடன் தான் சுற்றிக்கொண்டு இருந்தாள் அவளின் மாற்றம் கண்ட பிறகு தான் பெற்றோர் இருவருக்கும் நிம்மதியாக இருந்தது.

இப்படியே நாட்கள் ஓடியது யாதவிற்காக சிலர் ஒதுங்கி இருந்தாலும் இன்னும் சிலர் அவளை உருவக்கேலி பண்ணாமல் இருப்பதை நிறுத்தவில்லை அவர்கள் ஏதோ சொல்கிறார்கள் நாம்‌ பாட்டிற்கு இருப்போம் என்று எவ்வளவு முயன்றும் அதை அவளால் கடந்து செல்ல முடியவில்லை சற்று சிரமமாகவே இருந்தது ஆனால் அதை மனதோடு வைத்து கஷ்டப்பட்டவள் வெளியே காட்டிக்கொள்ளவில்லை எப்போதும் சாதரணமாக இருப்பது போல் நடிக்க பழகி இருந்தாள் அதே நேரம் யாதவ் கலைச்செல்வி இருவரும் காணும் போது பேசிக்கொள்வது எல்லாம் ஒருப்பக்கம் நடந்துக்கொண்டு தான் இருந்தது அன்றொரு நாள் இவளை தேடி வந்தவனை க்ளாஸ் ரூமில் இருந்த அனைவரும் திரும்பி பார்த்தனர்.

“ஹாய் செல்வி…” என்ற குரலில் ஸ்ரீயுடன் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தவள் இவனை திரும்பி பார்த்தாள் நீங்க என்ன இங்கே? என்பது போல் விழிமொழியால் கேட்க “உன்கிட்ட ஒன்னு சொல்லனுமே…” என்றவனிடம் “சொல்லுங்க சீனியர்…” என்றவள் ஸ்ரீயின் கையை இறுக பற்றிக்கொண்டாள்.

அ…து அது வந்து‌..‌” என தடுமாற்றத்துடன் முகம் சிவந்து லேசாக வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தவனை ஸ்ரீயே புதிதாக பார்த்தாள் “நீங்க பேசுங்க நான் வேணா வெளியே இருக்கிறேன்…” என எழுந்து கொண்டாள் ஸ்ரீ ஒருவேளை தான் இருப்பதால் தான் இந்த தயக்கமோ என்று அவள் கையை மேலும் இறுகப் பற்றிக் கொண்டவள் “என்னோட நிழல் ஸ்ரீ நீ உனக்கு தெரியாம என் சம்பந்தப்பட்ட எதுவும் நடக்காது நீயும் என்கூட இரு…” என்றவள் சொல்லுங்க என்பது போல் யாதவ்யை பார்த்தாள்.

யாதவுடன் வந்த செந்தில் “டேய் சீக்கிரம் சொல்லி தொலடா நீ நெளிஞ்சுக்கிட்டு இருக்கிறதை பார்த்தா வேறெதும்னு நினைச்சிறப்போறாங்க…”

“என்னடா வேறெதும்னு நினைப்பாங்க…” என சந்தேகம் கேட்டவனை என்ன செய்தால் தகும் என முறைத்தான் செந்தில் “ம்ம் உனக்கு ஒன்னுக்கு ரெண்டுக்கு வருதுன்னு நினைப்பாங்க போதுமா? டவுட்டு க்ளியராஆ இப்போ மூடிக்கிட்டு வந்த விஷயத்தை சொல்லுடா போகலாம் இங்கே இருக்கிற எல்லாம் குறு குறுன்னு நம்மள தான் பார்க்காளுங்க…”

“ம்ம் அச்சோ எனக்கு வெட்கம் வெட்கமா வருதுடா…” என்றவனை எதை கொண்டு அடித்தால் சரி என முறைத்துப்பார்த்த செந்தில் “கண்ணை மூடிட்டு சொல்லிரு…” என்றதும் தலையசைத்தவன் “செல்வி… அது நான் ஐ லவ் யூ உன்னை நான் காதலிக்கிறேன் என்னையும் என் லவ்வையும் ஏத்துக்குவியா?..” என பின்னால் இருந்த பேன்ட் பாக்கெட்டில் சொருகி வைத்திருந்த ஒற்றை ரோஜாவை எடுத்து அவள் முன்பு நீட்டி தன் காதலை வெளிப்படுத்தியவனை சிறு நடுக்கத்துடன் கலைச்செல்வி பார்த்தாள் எனில் இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்த மற்றவர்கள் அனைவரும் ஏது லவ்வா?‌ கடவுளே… என சத்தமாக குரல் எழுப்பி இருந்தனர் அவர்களை திரும்பிபார்த்த செந்தில்.

“அந்த புள்ளயே சும்மா இருக்கு நீங்க ஏன் இப்போ துள்ளுறீங்க…” என கத்தியவனை முறைத்து விட்டு உடனே அந்த பெண் கூட்டத்திற்கு செய்தி அனுப்பி விட்டனர் ஃபோன் வழியாக “இப்போவே சொல்லனும்னு அவசியம் இல்லை பொறுமையா யோசிச்சு சொல்லு ஆனா என் லவ்வை மட்டும் ரிஜக்ட் பண்ணிறாதேமா…” என்றவனை பார்த்து “ஏதோ சொல்ல வாயெடுக்க அந்த நேரத்தில் ப்ரொபஸர் வரவும் பாய்‌… என்றவன் தன்னிடம் இருந்து வாங்காத பூவை எடுத்து அவள் முன்பு வைத்து விட்டு புன்னகையுடன் வெளியேறினான்.

அவன் போன பின்பும் இன்னும் அதிர்ச்சி விலகாதே பார்வையுடன் பார்த்து நின்றாள் கலைச்செல்வி“ஏய் சார் பாக்குறாருடி லவ் பண்ணுறாங்கன்னு தானே சொன்னாங்க அதுக்கு ஏன் இப்படி ப்ரீஸ் ஆகி நின்னுட்ட க்ளாஸை கவனி…”

“ஸ்ரீ மனசெல்லாம் பட படன்னு வருதுடி அவங்க என்கிட்ட தான் லவ் சொன்னாங்களா? என்னாலே நம்பவே முடியலே உடம்பு எல்லாம் நடுங்குதுடி…” என்றவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள் உண்மையிலே மிகவும் பயந்து போயிருந்தாள் அதன் வெளிப்பாடாக வியர்த்து ஊற்றியது பெண்ணவளுக்கு அவளின் இந்த அதீத பயம் தான் பல இடங்களில் கோழையாக மாற்றி விடுகின்றது அவளை பார்க்கவே இவளுக்கு கவலையாக இருந்தது பாடம் நடத்திக் கொண்டிருந்த ப்ரொபஸரிடம் அனுமதி கேட்டு வெளியே அழைத்து வந்தவள் அவள் முகத்தை கழுவி குடிக்க தண்ணீர் கொடுத்து சற்று ஆசுவாசப்படுத்தினாள் ஸ்ரீ.

“இது ப்ர்ஸ்ட் டைம்ல அதான் இப்படி ஆகுது…” என்ற கலைச்செல்வி முழுபாட்டில் தண்ணீரையும் குடித்தாள் அவளை பார்த்து லேசாக சிரித்தவள் “இந்த சின்ன விஷயத்துக்கு கூட இவ்வளவு பயப்புடுற சரியான பயந்தாங்கொள்ளிடி….”

“இல்ல ஸ்ரீ காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு தெரியாமலே போயிடும்னு நினைச்சேன் எந்த பொண்ணுக்கு தான் நமக்குன்னு ஒரு வாழ்கை கிடைக்காதா? நம்ம மேல முழுசா அன்பை கொடுக்குற உறவு கிடைக்காதான்னு ஏக்கம் இல்லாம‌ இருக்கும் இன்னொரு விஷயம் தெரியுமா நிறைய பொண்ணுங்க நம்ம வீட்டை விட்டு ஒரு நாள் போக வேண்டி வருமேன்னு கவலைப்படுறதை நேர்ல பார்த்து இருக்கேன் ஆனா நான் என்னைக்குமே கவலைப்பட்டது இல்லை ஏன்னா எனக்கே தெரியும் அப்படி ஒரு நிலை எனக்கு என்னைக்கும் வராதுன்னு இங்கே மனசை விட அதிகமா நேசிக்கிறது இந்த வெளித்தோற்றத்தை தானே அப்படி பார்க்கிறப்போ என்னைக்குமே நான் செலக்டட் லிஸ்ட்ல வரமாட்டேன் ஸ்ரீ என்னை பார்த்து ஒதுங்கி போற எத்தனையோ பேரை கடந்து வந்தவ நான் அதுலே நீ, அந்த அக்கா அப்பறம் சீனியர் நீங்க மூணு பேரும் தான் என்னையும் ஒரு பெண்ணா பாக்குறீங்க அது எனக்கு எவ்வளவு ஆறுதலையும் சந்தோஷத்தையும் கொடுக்குது தெரியுமா?…” என்றவள் கூறியது எல்லாம் அவளின் மனதில் புதைந்து கிடந்த கவலைகள்‌ என்பதை புரிந்து கொண்ட ஸ்ரீ அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.

“கலை நம்ம நினைக்கிறது எல்லாம் எப்போவும் நடக்காது‌ உனக்கு என்னடி குறை நீ எதுக்கு உன்னை நீயே இப்படி நினைச்சுக்கிற உனக்கானது உன்னை வந்து சேராம வேற எங்க போக போகுது அதான் உனக்கானவரை அந்த கடவுளே உன்கிட்ட கூட்டி வந்து சேர்த்து இருக்காரு போல இப்போ என்ன பண்ணலாம்னு இருக்கே வெளித்தோற்றத்தை பார்க்காமல் உன் மனசை காதலிக்கிற சீனியருக்கு என்ன பதில் சொல்லப் போற…”

“எனக்கு தெரியலே ஆனா என்னை விட அவருக்கு அழகான பொண்ணு கிடைத்தால் நல்லா இருக்கும்…” என்றவளை “நீ திருந்த மாட்டியாடி…” என பதிலுக்கு முறைத்தாள் ஸ்ரீ அவள் முறைப்பில் ஏனோ இவளுக்கு புன்னகை தோன்றியது தன் வரிசை பற்கள் தெரிய அழகாக சிரித்தவளை அதே நேரம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான் யாதவ்.

7 thoughts on “07.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்”

  1. என்ன இப்படி பொசுக்குன்னு லவ்வை சொல்லிட்டான்!!… ஸ்ரீயோட நட்பு சூப்பர்!!..

  2. Kalidevi

    Senior nijama ve love panringla na kuda just help panringa ninachen shock aeiten love sonnathum but avaluku oru love theve thane love namma kitta illathathu ellathaium kodukum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *