சிறிது நேரம் அவனுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு நேரமாவதை உணர்ந்து வீட்டுக்கு கிளம்பினர் இருவரும் ஸ்ரீக்கு கலைச்செல்வியின் முகத்தை பார்த்த பின்பு சற்று நிம்மதியாக இருந்தது “இப்போ தான்டி உன் முகத்தை பாக்குற மாதிரி இருக்கு எதையோ பறிகொடுத்த மாதிரி சோகத்தை மூஞ்சுல பூசினா போல இருந்த அந்த முகத்தை பார்க்கவே சகிக்கல…” என்றவளை அணைத்துக் கொண்டாள்.
“ஸ்ரீ ஆனா இது எல்லாம் உன்னாலே தான் அதோட இன்னைக்கு இவரை என்னாலே பார்க்க முடிஞ்சதும் கூட தாங்க்யூ…” என்றவள் முதுகில் ஒன்று பட்டென வைத்தவள் “ப்ரெண்டுக்குள்ள என்னடி தாங்க்ஸு போ போய் ஆட்டோல ஏறு…” என்றதும் இருவரும் தங்களது வீட்டுக்கு கிளம்பினர் ஹாஸ்பிடல் விட்டு வீடு வர சற்று இருட்டி விட அப்போது தான் ஹோட்டலில் வேலையை முடித்து விட்டு வந்த சுந்தர் மகளை காணாது பதட்டத்தோடு மகளுடைய போனுக்கு அழைத்தப்படியே அவளை தேடி வெளியே செல்ல நினைத்து வீட்டை விட்டு வந்த நேரம் அவளும் வாசலில் வந்து இறங்கினாள்.
“காலேஜ் விட்டு வீட்டுக்கு வராம எங்கே போன அதுவும் இவளோ லேட்டாகி வர ஃபோன் போட்டா ஸ்விட்ச் ஆஃப்னு வருது…”
“அது… அது வந்துப்பா காலேஜ் சீனியருக்கு உடம்பு சரியில்லை அவரை போய் பார்த்திட்டு வரலாம்னு நானும் ஸ்ரீயும் போனோம்பா அதான் லேட்டாகிடுச்சு போன்ல சார்ஜ் இல்லை…”
“அப்படியா அதுக்கு ஏன் இவ்வளவு தயங்குற நீ பண்ணது நல்ல விஷயம் தானே சரி இப்போ உங்க சீனியர் எப்படி இருக்காங்க…”
“ம்ம் நல்லா இருக்காங்கப்பா காயம் சரியாக தான் ரெண்டு நாள் ஆகும்னு சொல்றாங்க…”
“ம்ம் சரிமா நீ போய் மொத குளிச்சிட்டு வா ஏதாவது சாப்பிடு…” என்றவர் தன்னறைக்குள் நுழைய இவளும் தனக்கான அறைக்குள் நுழைந்தாள் ஃபோனை சார்ஜில் போட்டு விட்டு குளித்து முடித்து வந்து சாப்பிட்டு சிறிது நேரம் படித்து விட்டு படுக்க செல்லும் போது தன் போனை எடுத்து ஆன் பண்ண மிஸ்ட் கால் ஆக யாதவிடம் இருந்து வந்த அழைப்புகளை பார்த்து திகைத்தாள் உடனே அவனுக்கு திரும்ப அழைக்க எண்ணிய போது அவனிடம் இருந்து மீண்டும் அழைப்பு வர எடுத்துப் பேசினாள்.
“ஹலோ யாதவ்…”
“என்ன ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது வீட்டுக்கு போயிட்டியா என்ன ஏதென்று தெரியாமல் இங்கே நான் பயந்துக்கிட்டு இருக்கேன் எங்கே இருக்க நீ என்னாச்சு உன் ஃபோனுக்கு?..” என்றவனின் பதட்டமும் அக்கறையும் அவளை ஒருபக்கம் நெகிழ வைத்தாலும் மறுபுறம் தன் மடத்தனத்தை எண்ணி “சாரி யாதவ் வீட்டுக்கு கரெக்டான டைமுக்கு வந்திட்டோம் ஃபோன்ல சார்ஜ் இல்லை அதான் ஆஃப் ஆகிடுச்சு இப்போ தான் சார்ஜ் பண்ணி எடுத்தேன் அதுக்குள்ள உங்க கால் வந்திடுச்சு….”
“ம்ம் இப்போ தான் நிம்மதியா இருக்கு சரி சாப்டியா செல்விமா?…”
“ஹா சாப்பிட்டேன் நீங்க?..”
“இல்ல இனிமே தான் ஏன் செல்வி எனக்கு எப்போ பதில் சொல்ல போற?…” என சிறு தயக்கத்துடன் கேட்க அவளிடம் பெரும் அமைதி “சரி சாரி கேக்கலே விடு உனக்கு எப்போ…” என முடிக்கும் முன்பே “ஐ லவ்யூ…” என்றவளின் பதிலில் முதலில் திகைத்தவன் “ஹேய் செல்வி ரியலி ஐயம் சோ ஹேப்பி மை டியர் மை லவ் சக்ஸஸ்…” என சந்தோச கூச்சலிட்டவனின் சத்தம் கேட்டு வாய் விட்டு புன்னகைத்தாள்.
“யாதவ்… கத்தாதீங்க டாக்டர் எல்லாம் உங்களை தேடி ஓடி வரப் போறாங்க…” என்றதும் தான் அமைதியாகினான் அவளோடு தேவையானது தேவையற்றது என என்ன ஏது பேசிகிறோம் என்று அறியாமல் நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருக்க விடியற்காலை நான்கு மணிக்கு சேவல் கூவும் சத்ததில் தான் அழைப்பு துண்டிக்கப்பட்டது ஒரு வித திகைப்பும் சந்தோஷ மனநிலையிலும் இருவரும் நிம்மதியாக உறங்கினர் சொன்னது போல் இரண்டு நாட்களில் காலேஜ் வந்தான் காயங்கள் ஆங்காங்கே ஆறாத வடுவாக அப்படியே இருந்தது அதற்கு மருந்திட்டு இருந்தான் வழமையாக அவள் வருகைக்காக காத்திருப்பது போல் நின்று கொண்டு இருந்தவனை கண்டு மகிழ்ந்தவள் அவனின் அருகில் ஓடினாள்.
“எதுக்கு இங்கயே நிக்கிறீங்க க்ளாஸ்ல இருக்க வேண்டியது தானே…”
“உன்னை பார்க்க தான் நின்னுக்கிட்டு இருந்தேன் வா சேர்ந்தே போலாம்…” என்றவன் அவள் கைப்பற்றி நடந்து வர ஆங்காங்கே நின்றவர்கள் இவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்து விட்டு தங்களுக்குள் பேசிக்கொண்டனர் அது எல்லாம் பெண்ணவள் கண்ணில் படாமல் இல்லை மெதுவாக தன் கையை அவனிடம் இருந்து பிரித்துக் கொண்டவள் “நீங்க போங்க அப்பறம் பேசலாம்..” என தன் வகுப்பறைக்குள் சென்று விட அங்கு ஸ்ரீ இவளுக்காக காத்திருந்தாள் அவளிடம் அன்று இரவு நடந்ததை மறக்காமல் சொல்லி விட “காதல் கடலிலே மூழ்கி போனதுல தான் நீ அடுத்த நாள் காலேஜ் வரலையா?…” என கேட்டதற்கு புதிதாக வெட்கம் எல்லாம் பட அதையும் பார்த்து கிண்டல் அடிக்க சும்மா இருடி… என அவள் தோளில் அடித்து விட்டு பாடத்தை கவனிக்க தொடங்கினாள்.
அன்று காலேஜ் முழுவதும்அவள் எங்கு சென்றாலும் “இவளுக்கு வந்த வாழ்வை பாரே, இவகிட்ட இந்த கருத்த தோலும், பருத்த உடலையும் தவிர வேற எதுவும் இல்லை அப்பறம் எப்படி இந்த யாதவ் இவளை லவ் பண்ணுறாரு, இவளை லவ் பண்ணுறதும் தண்ணி இல்லா கிணற்றில் விழுந்து சாகுறதும் ஒன்னு, வர வர இந்த யாதவுக்கு கண்ணே இல்லாம போயிடுச்சுபா, ச்சே என்ன மட்டமான டேஸ்ட்டோ என்ற ஆண், பெண்களின் பேச்சுகள் காதில் கேட்டப்படியே இருந்ததில் சோர்ந்து போனாள் அது அவர்களின் பொறாமை கலந்த பேச்சுகள் என்றாலும் அவர்கள் தன்னை குறிப்பிட்டு பேசுவதில் மீண்டும் அந்த தாழ்வு மனப்பான்மை இவளிடம் வந்து குடிபுகுந்து விட அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றிக்கொண்டு இருந்தவள் திடீரென இரண்டு நாட்கள் அவனை பார்க்காமல் அழைப்பையும் எடுக்காது தவிர்த்துக்கொண்டு வர யாதவிற்கு கடுப்பானது.
“ஸ்ரீ… கொஞ்சம் நில்லு எங்க அவள்? போய் அவளை நான் வர சொன்னதா உடனே லைப்ரரிக்கு அனுப்பி விடு அவள் வரலேன்னு பிகு பண்ணா சொல்லு இன்னைக்கு நான் அவளோட வீட்டுக்கு வந்திடுவேன்னு…” என கோபமாக தன்னிடம் கத்தியவனை புரியாமல் பார்த்தவள் “என்னாச்சு இதுங்களுக்கு அவள் ஒரு பக்கம் மூஞ்சை தூக்கிட்டு திரியிறா? இவரு என்னடான்னா சுடுதண்ணியே ஊத்தினாப்புல கொதிக்கிறாரு ஒருவேளை ரெண்டுக்கும் சண்டையோ….” என நினைத்தப்படி “இதோ சொல்றேன்…” என்றபடி அவசரமாக க்ளாஸ்க்கு ஓட அங்கு தலையை மேசையில் வைத்து படுத்து இருந்தாள் கலைச்செல்வி.
“கலை என்னடி சோர்வா இருக்க உடம்பேதும் சரியில்லையாடி…”
“அதெல்லாம் ஒன்னுமில்லை ஆமா நீ ஏன் பதட்டமா இருக்க இந்தா தண்ணியை குடி மூச்சு வாங்குது பாரு…”
“அதை நான் குடிச்சிடுறேன் நீ போய் மொதல்ல உன் ஆள போய் பாரு உன்னையே வர சொன்னாரு…” என்றவளிடம் மறுப்பாக தலையசைத்து மீண்டும் தலையை மேசையில் கவிழ்த்து கொள்ள இவள் வராமல் விட்டாள் அவன் என்ன செய்வான் என்பதை சொல்ல அடித்துப் பிடித்து லைப்ரரி நோக்கி சென்றாள் அவள் ஓடுவதை பார்த்து விட்டு “அடிப்பாவி இதை ரன்னிங் ரேஸ்ல செஞ்சு இருந்தா ப்ர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கி இருப்பியே என்ன ஓட்டம் ஓடுறா…” என அவள் போன வழியை பார்த்துக்கொண்டு இருந்தாள் ஸ்ரீ.
மூச்சு வாங்க லைப்ரரிக்குள் ஓடி வந்தவள் கண்களால் அவனை தேடி அங்கும் இங்கும் சுற்ற அவளை தான் வித்தியாசமாக பார்த்தனர் அங்கிருந்த ஓரிருவர் அதை உணர்ந்து தன்னை இயல்பாக காட்டிக்கொண்டு அவன் எங்கே என தேடி செல்ல திடிரென அவளின் கரம் பற்றி ஒரு கரம் இழுக்க அவன் நெஞ்சில் மோதி நின்றவளை முறைத்துக்கொண்டு நின்றான் யாதவ்.
“இப்போ எதுக்குடி மூஞ்சை தூக்கிட்டு திரியிற பதில் சொல்லு எதுக்கு என் கூட பேசாம அவாய்ட் பண்ணுற…”
“சீனியர் அது… நமக்குள்ள இந்த லவ் வேணாமே என் தகுதி என்னன்னு தெரியாம நான் லவ் பண்ணிட்டேன் ஆனா…”
“என்ன ஆனான்னு இழுக்கிற இங்கப்பாரு என்னை காண்டாக்காத என்னாலே உன்கூட சண்டைப்பிடிக்க முடியாது உன் மனசுல என்ன தான் ஓடுது சொல்லு..”
“சொல்லு சொல்லுன்னா ஏன் உங்களுக்கு தெரியாதா? இங்கே வாங்க…” என அவன் கரம் பற்றி இழுத்து தன்னருகில் நிற்க வைத்தவள் ஃபோன் கேமராவை ஆன் பண்ணி “நல்லா பாருங்க இரண்டு பேரையும் பாருங்க நம்ம ரெண்டு பேரும் எப்படி இருக்கோம்னு இதெல்லாம் ஒரு விஷயமான்னு சொல்றது உங்களோட பெருந்தன்மை ஆனால் என்னாலே முடியலே என் காதுபட பேசுறதை எல்லாம் என்னாலே காது குடுத்து கேக்க முடியலே ப்ளீஸ் யாதவ் என்னை விட்டிடுங்க இந்த லவ் நமக்கு வேணாம் நீங்க வேற யாரை ஆச்சு பார்த்து லவ் பண்ணுங்க நான் உங்களுக்கு வேணாம்…” என விலகி போனவளின் கரம் பற்றி தடுத்தவன்.
“உனக்கு இப்போ என்ன இந்த கலரும் இந்த உடம்பும் தானே பிரச்சினை அதுக்கு நான் நாளைக்கு ஒரு பதிலோட வரேன் ஆனா இந்த வேற ஒருத்தியை லவ் பண்ண சொல்லுற வேலை எல்லாம் என்கிட்ட வெச்சுக்காதே நீதான் இனி எனக்கு எல்லாமேன்னு முடிவு பண்ணதுக்கு அப்பறம் தான் நான் உன்னை லவ் பண்ணுறதா சொன்னேன் அதுல எனக்கு எந்த மாற்றமும் இல்லை எனக்கு நீ இப்படி இருக்கிறது தான் பிடிச்சிருக்கு இப்போ கூட நீ அடுத்தவங்க பேசுறதை பெரிசா எடுத்துக்கிட்டு என்னை விட்டு போயிடுவேங்கிற ஒரு காரணத்துக்காக தான் இந்த முடிவை நான் எடுக்கிறேன் நாளைக்கு சொல்றேன் இப்போ போ…” என முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நின்றவனை குழப்பத்துடன் தான் என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில் பார்த்தப்படி அவ்விடம் இருந்து சென்றாள் கலைச்செல்வி.
சூப்பர்.. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Super yadhav un support venum kalai ku ena mudivu pana pora avalukaga waiting
Superb epi
Nice epi
Nice going