காலேஜ் வந்த காரிகையவளின் முகத்தை பார்த்து சிலர் சற்று பயத்தோடு பார்த்தார்கள் எனில் சிலர் பார்த்து ஒருவித கேலியோடு நகைக்க தொடங்கினார்கள் “என்னம்மா கலைச்செல்வி ஏதோ நானும் வெள்ளையாகி காட்டுறேன்னு சீன் போட்டுக்கிட்டு போன இப்ப ஏதோ நோய் வந்த கோழி மாதிரி இந்த இருப்பு இருக்கிற இதுக்கு தான் சொல்வாங்களா அளவுக்கு மிஞ்சினால் அது நஞ்சுன்னு முன்னாடி இருந்ததை விட இப்ப உன்னை பார்க்கிறப்போ நிஜமாலுமே வாந்தி வர மாதிரி இருக்கு…” என்ற பெண்ணை திரும்பி பார்த்தாள்.
“என்ன தான் ஊர்குருவி வானத்தில் பறந்தாலும் அது பருந்தாகிட முடியாதுலடி அது அம்மணிக்கு தெரியலே போல நீங்க ரெண்டு பேரும் என்ன தான் லவ் பண்ணாலும் யாதவ் கால்தூசிக்கு கூட நீ வர முடியாது நல்ல வெள்ளை காக்காக்கு பெயின் அடிச்ச மாதிரி போ போய் ஓரமா இருந்து அந்த பெயிண்ட்டை சுரண்டி எடு பார்க்க உவாக்… முடியலே வந்திடும் போல இருக்கு…” முகத்தை சுளித்தாள் இன்னொருவள் அவள் கடைசியாக சொன்னதை கேட்டு கூடியிருந்தவர்கள் ஒன்று கூடி சிரிக்க தொடங்கினர்.
கலைச்செல்வி அனைத்தையும் கேட்டு அமைதியாக இருந்தாளும் ஒருவரின் முகத்தை பார்த்து எப்படி இப்படி கீழ்த்தரமாக பேச மனம் வருகிறதோ என நினைக்க தோன்றாமல் இல்லை அப்படியே அருவெறுப்பாக இருந்தாலும் ஒதுங்கி போவது தானே நாகரீகம் அதை விட்டு முகத்திற்கு முன்பு இப்படி பேசி காயப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம் என்று தான் தெரியவில்லை ஆனால் அவள் வாழ்வில் ஒன்றை மட்டும் தெளிவாக கற்றுக் கொண்டாள் சுயநலம் என்று ஒன்று வரும் போது மனித மனம் எப்படி வேண்டும் என்றாலும் மாறும் என்று மறு வார்த்தை ஏதும் பேசாது தன் வகுப்பறைக்குள் வந்தவள் நடாத்திய பாடங்களில் கவனத்தை வைத்திருந்தவளுக்கு அளவுக்கு அதிகமான சோர்வு ஒரு வித மயக்கத்தை கொடுத்தது அப்படியே தலையை சாய்த்து கொண்டவளை மெதுவாக வீட்டுக்கு அழைத்து செல்ல நினைத்தாள் ஸ்ரீ.
இருவரும் போகும் வழியில் யாதவ் செந்தில் இருவரும் ஒன்றாக நடந்து வந்து கொண்டு இருந்தனர் யாதவ்யை கண்டதும் அவனருகில் சென்றவள் “யாதவ் உங்களுக்கு என்னாச்சு ஏன் முன்னாடி மாதிரி பேசவே மாட்டீங்க…” என்றவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கு சிறு அதிர்ச்சி “எக்ஸாம் டென்ஷன் அதான் ஆனா உன் முகத்துக்கு என்னாச்சு…” என கேட்டவனிடம் நடந்ததை சொன்னாள்.
“அந்த க்ரீம் அப்பறம் வெயிட் லாஸ் பண்ண குடிச்ச ட்ரின்க் எல்லாம் ஒத்துக்கலே யாதவ் நாளைக்கு டாக்டரை சந்திக்கலாம்னு இருக்கேன்…”
“சரி ஓகே நீ டாக்டர்கிட்ட காட்டிட்டு எனக்கு போன் பண்ணு என்னை எக்ஸாம் எழுதி முடிஞ்சதும் உடனே அப்பா வர சொல்றாரு நான் கிளம்பனும் போயிட்டு வரேன் அப்பறம் பேசலாம்…” என செந்திலுடன் செல்ல போகும் அவனை பார்த்திருந்தவளுக்கு அவனிடம் பல மாற்றங்கள் தெரிந்தது.
அடுத்த நாள் டாக்டரை பார்க்க கிளம்பினர் இருவரும் மறக்காமல் அவள் பாவிக்க கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு அவளுக்கு துணையாக சென்றாள் ஸ்ரீ டாக்டர் கேட்ட கேள்விகள் தனக்கு எப்படி இப்படி ஆனது என நடந்ததை சொன்னாள் “முன்னாடி இது மாதிரி எதுவும் இருந்தது இல்லை இதை பாவிச்சதுக்கு அப்பறமா தான் இப்படி ஆகுதுன்னு உங்களுக்கு கன்போர்ம் ஆஹ் தெரியுமா?…”
“ஆமா டாக்டர் என் வீட்டுல நான் கற்றாழை ஜெல், மஞ்சள் இதை தவிர வேற எதுவும் நான் பாவிச்சது இல்லை இதை பூசினா வெள்ளையாகிருவேன்னு தான் பூசினேன் ஆனா இப்படி ஆகிடுச்சு…”என்றவளின் முகத்தை பார்த்து விட்டு அவள் கொடுத்த ப்ராடக்ட்யின் பெயரை கூகுளில் அடித்து பார்த்தார் கூகுளில் கூட இல்லாத பெயர் அத்துடன் இந்த க்ரீம் பற்றி எவ்வித தகவலும் அங்கு இருக்கவில்லை “இதை உனக்கு யார் கொடுத்தாங்க இது மார்க்கட்லே இல்லாத ப்ராடக்ட் அதோட நம்ம ஸ்கினை பொறுத்தவரைக்கும் எது யூஸ் பண்ணனும் எது யூஸ் பண்ண கூடாதுன்னு இருக்கு அதனாலே க்ரீம்ல சேர்க்கிற இன்ங்ரீடியன்ஸ் என்னன்னு பார்க்காம வாங்கி யூஸ் பண்ணா இப்படி தான் சைட் எஃபெக்ட் வரும் இதுக்கு பணம் கொடுத்து அபாயின்மென்ட் வாங்கி டாக்டரை சந்திச்சு அறிவுரை கேட்கனும்னு அவசியம் இல்லை இப்போ தான் நிறைய டாக்டர்ஸ் பல யூடியூப் சேனல்ல விரிவா இதுக்கு விளக்கம் எல்லாம் கொடுக்குறாங்கலே அதை பார்த்தலே நமக்கு பல விஷயங்களை கத்துக்கலாம்…” என்றவர் அவள் கொண்டு வந்த ப்ராடக்ட்யை திருப்பி திருப்பி பார்த்தப்படி இருந்தார்.
“ஒரு க்ரீம் பாக்ஸ் வருதுன்னா அதுல பேர், பார்கோட், இன்ங்ரீடியன்ஸ்ன்னு எல்லாமே இருக்கும் ஆனா இதுல பேரை தவிர வேற எதுவுமே இல்லை இதை எதையும் பார்க்காமல் தான் யூஸ் பண்ணியா?….” என்றதும் தலைகுனிந்தாள் கலைச்செல்வி.
“நமக்குத் தெரிஞ்ச ஒரு நல்ல ப்ராடக்ட் இருக்கு அதை யூஸ் பண்ணி நல்ல ரிசல்ட் காட்டுதுன்னு திரும்பி அதை வாங்க போறீங்க ஆனா அங்கே நீங்க என்ன நிறைய பேர் விடுற தவறு அதுலே இருக்கிற பார்கோட்யை ஸ்கேன் பண்ணி பார்க்காம வாங்குறது…”
“பார்கோட் ஆஹ் என்ன டாக்டர் சொல்றீங்க எனக்கு எதுவும் புரியலே…” என்ற கலைச்செல்விக்கு புரியும் விதமாக கூற ஆரம்பித்தார் டாக்டர்.
“இப்போ நிறைய க்ரீம் சேல்ஸ் பண்ணுற கம்பனி இருக்கு அது எல்லாம் மார்க்கெட்டுக்கு வரப்போ எல்லாம் ஒரிஜினலா வரது இல்லை ஒரே மாதிரி பேர் ஒரே மாதிரி இன்ங்ரீடியன்ஸ் ஆனா ஒன்னு ஒர்ஜினலா இருக்கும் இன்னொன்னு போலியா இருக்கும் இப்போ பாரின்ல இருந்து வர நிறைய பியூட்டி ப்ராடக்ட் எல்லாம் ஓரிடத்திலே ஸ்டாக் பண்ணி அதோட ஸ்கின்னுக்கு ஒத்துக்காத பொருட்களையும் சேர்த்து நீண்ட நாள் பாவிக்கிற மாதிரி கூடிய சீக்கிரம் வெள்ளையாகுற மாதிரி அளவுக்கு அதிகமா தேவையானதை கலந்து கலப்படம் பண்ணி கடையிலே விக்கிறாங்க இதனாலே சைட் எஃபெக்ட் தான் அதிகமா வருது ஏன் ஒரு வாரத்துக்கு முன்னாடி கூட ஒரு இடத்தை போலீஸ் கண்டுப்பிடிச்சாங்களே ஒரிஜினல் ப்ராடக்ட் பார்கோடு ஸ்கேன் பண்ணுறப்போ அதோட கம்பனி டீடைல் எல்லாம் காட்டும் ஆனா போலியானதுக்கு வராது வேற ஏதாவது கம்பனி டீடைல் தான் வரும் வேணும்னா செக் பண்ணி பாருங்க அப்போ புரியும் அதனாலே கவனமா இருக்கனும் நம்ம ஸ்கின்னை நாம தான் காப்பாத்தனும் நீ இதை எதையும் பாவிக்காம நிறுத்திட்டு உன்னோட காயங்களுக்கு இந்த மருந்தை பூசு சரியாகிடும்…” என டாக்டர் மருந்துகளை எழுதி கொடுக்க அவளோ தயக்கத்துடன்,
“டாக்டர் க்ரீம் பூசாம விட்டா பரு அள்ளி போடுது முகம் கூட என்னாலே கழுவ முடியலே அப்படி இருக்கு வலி தாங்க முடியலே ரெத்தம் கூட வருது….”
“அப்படி தான் இருக்கும் யோசிக்காம என்னன்னு தெரியாததை பூசினா இப்படி தான் இருக்கும் உண்மையை சொல்லனும்னா இயற்கையாவே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள உடம்பு உன்னோடது இல்லன்னா இதோட சைட் எஃபெக்ட்யினாலே உன் முகம் இன்னும் கொடூரமா மாறி இருக்கும் இனியாவது கவனமா இரு முதல்ல உன்னோட ஸ்கின் எப்படிப்பட்ட ஸ்கின் எதை பூசலாம் எதை பூசக்கூடாதுன்னு தெரிஞ்சு யூஸ் பண்ணு இதை எல்லாம் சாதாரணமா யூடியூப்ல நிறைய டாக்டர்ஸ் வீடியவா போட்டு இருக்காங்க பார்த்து தெரிஞ்சு வெச்சுக்கோ அப்போ தான் இதே மாதிரி திரும்ப தவறு செய்ய மாட்டாய்…” என்றவரிடம் சரி என்று தலையசைத்து விட்டு இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்.
வீட்டுக்கு வந்தவர்களுக்கு டாக்டர் கூறியது தான் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது தன் ஃபோனை எடுத்துக் கொண்டு அமர்ந்தவள் தன்னுடைய ஸ்கின் எந்த வகை எப்படி அதை பராமரிப்பது என தேட ஒரு டாக்டரின் அறிவுரை வர அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக பார்த்து அதில் இருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டாள்.
என்ன நடந்தாலும் படிப்பை விடக்கூடாது என்று தொடர்ந்து காலேஜ் சென்றவளுக்கு அவன் நினைவுகள் வந்து ஒட்டிக்கொள்ள மறக்கவில்லை அன்று பார்த்ததோடு சரி பேசவும் இல்லை பார்க்கவும் இல்லை சோகமாக வலம் வந்தவளை அதுக்கென்று சுத்து கூட்டம் இன்னும் அவள் வேதனையை அதிகப்படுத்தும் விதமாக பேசி காயப்படுத்த உடைந்து போனாள் தன்னறையில் இருந்த அவளது பழைய ஃபோட்டோ இப்போது இருக்கும் அவள் நிலையை பார்த்து சிரிப்பது போல் தோன்றியது அதே நேரம் அவள் பொதுஅறிவிற்காக படிக்கும் புத்தகத்தில் இவள் கரங்களால் அடையாளப்படுத்தி வைத்திருந்த “பிறர் விருப்பின் படி நீ வாழ நினைத்தால் ஒருநாள் நீ உன்னையே இழந்திட கூடும்…” என்ற அந்த வரிகள் இதயத்தை தொட்டு சென்றது யாரோ ஒரு முகமறியாத மனிதர் எழுதிவிட்டு சென்றது ஆனால் இன்று தனக்கு அது பொருத்தமாக இருப்பதை கண்டு ஆச்சிரியம் என்றாலும் அதுதான் உண்மையும் கூட காலம் சென்று யோசித்து என்ன பயன்.
இதைப்பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தவளின் கவனத்தை திசை திருப்பியது நீண்ட நாட்களின் பின்னர் வந்த அவன் அழைப்பு.
சூப்பர்.. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Ethukaga yadhav apdi panan ellam pathu check panni kodukanum nallathu panravan ippadi koduthu iruntha face keduthu vachitan
Sema sema interesting epi
Nice epi👍
Interesting