போகும் அவளை பார்த்து நின்ற யாதவ், செந்தில் கையில் ஒரு பணப்பெட்டியை கொடுத்தான் சியாங்கோ.
“நான் கண்டுபிடிச்ச இந்த ஸ்கின் கேர் ப்ராடக்ட் சக்ஸஸ் ஃபுல் ஆஹ் அவளுக்கு வேலை செய்து ரிசல்ட் காட்டினா இதை விட பெரிய அமெளன்ட் உங்க கைக்கு வந்து சேரும் ஓகே காய்ஸ் அடுத்த ப்ராஜெக்ட் வரும் போது கால் பண்ணுறேன் சீ யூ பாய்…” என்று விடைபெற்று சென்றவனின் ஆய்வுகள் அனைத்தும் பியூட்டி சம்பந்தமானவைகள் தான் ஒவ்வொரு ஸ்கின் டைப் ஆண், பெண்கள் என இனம் கண்டு அவர்களை தன்னிடத்துக்கு அழைத்து வர வைக்க யாதவ் செந்தில் போல் பல ஏஜன்ட்களை வைத்திருக்கிறான்.
இதோ கருப்பாக இருந்த கலைச்செல்வியை வெள்ளையாக மாற்றி சைட் எஃபெக்ட்டால் அதிகமாக பாதிக்க வைத்து கடைசியில் அதற்கு தான் கண்டுப்பிடித்த ஸ்கின் ப்ராடக்ட் மூலம் அதை இல்லாமல் செய்ய முடியுமா? என கண்டறியதான் இத்தனை வேலைகளும் நடந்தது இது போல பல ஆராய்ச்சிகள் அதில் சக்ஸஸ் கொடுக்கும் ப்ராடெக்ட்களை சந்தைப்படுத்திக்கொண்டு வருகிறான் சக்ஸஸ் ஒரு பக்கம் என்றால் அதில் பல விடயங்கள் தோல்வி தான் ஆனால் அதில் அதிகமாக பாதிக்கப்படுவது இவனிடம் மாட்டிக்கொண்டவர்களே எலியை வைத்து சோதனை செய்ய கூடிய அனைத்திற்கும் தற்போது மனிதனை மறைமுகமாகவும் நேரடியாகவும் பயன்படுத்தி வருகின்றனர் இனி கலைச்செல்வியை இவர்கள் நினைத்தால் கூட மீட்க முடியாது.
இவர்கள் அங்கிருந்து செல்லும் போது “யாதவ்… என்னை காப்பாத்து ஆஆஆஆ அம்மாஆஆ…” என அலறியவளின் குரல் கேட்டு அவன் அப்படியே நின்றான் அவனை மீறி அவளிடம் ஓட துடித்தது கால்கள் கண்கள் கலங்கி தவித்து நின்றவனை வா யாதவ் என அழைத்துக்கொண்டு சென்றான் செந்தில்.
செந்தில் காரோட்ட அவனருகில் அமர்ந்து இருந்தான் யாதவ் இந்த சியாங்கோ அவன் தந்தையின் மூலமே அறிமுகமானான் தன் தந்தை ஒரு அரசியல் வாதியாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்கிறாரோ இல்லையோ அவருக்கு தேவையான சொத்துக்களை மட்டும் நன்றாக சேர்ந்து வைக்க கூடியவர் இந்திய நாட்டில் காலடி எடுத்து வைத்தவனுக்கு இங்கு இருக்கும் மக்களின் நிறமும், தோற்றமும் அவனுக்குள் இருந்த ஆராய்ச்சி செய்து பார்க்கும் குணத்தை அதிமாக தூண்டி விட்டது அதற்கு இங்கு அவனுக்கு உறுதுணையாக நிற்க பல பெரிய தலைகளின் உதவி தேவைப்பட பணத்தை கொட்டி தன் தேவையை பூர்த்தி செய்ய தொடங்கினான் அப்படி இதற்கு உடந்தையாக இருப்பவரில் ஒருவர் யாதவின் தந்தை அவர் ஆள் வைத்து முதலில் உதவினார் பின்பு தன் மகனையே இதை பார்க்க கட்டாயப்படுத்த அதில் விழுந்தவன் தான் துணைக்கு தன் நண்பனை சேர்த்துக்கொண்டு வேலை செய்தான்.
அவன் எந்த ஆளை காட்டுகிறானோ அவர்களின் ஒரு சில தேவைகளை வைத்து தம் பக்கம் இழுத்து சியாங்கோவின் ஆராய்ச்சிக்கு அனுப்பி வைப்பார்கள் ஆனால் சியாங்கோவின் அடுத்த டார்கட் தனது ப்ராடக்ட் சேல் பண்ண இளம் வயது பெண்கள் பக்கம் திரும்பியது அதனாலே யாதவ் படிக்கும் காலேஜில் இருந்தே ஆட்களை செலக்ட் பண்ண செய்தான் யாதவ் என்ன செய்தாலும் சிஎம் மகன் என்பதால் காலேஜில் எவ்வித கேள்விகளும் கேட்கப்படுவதில்லை என்ற ஒரு காரணத்தை பிடித்துக்கொண்டு இந்த வருடம் காலேஜ் சேர கூடிய அனைத்து மாணவர்களின் தகவல்களை கொண்டு வர சொல்லி பார்த்தவனின் கண்களில் சிக்கியது தான் கலைச்செல்வி.
அவளின் முகம் பார்த்த பின்பு இந்த வேலையை செய்ய தான் வேண்டுமா? என்ற யோசனை வந்தது சியாங்கோ மற்றும் தந்தையின் வற்புறுத்தலில் இதை செய்ய துணிந்து விட்டாலும் அவன் மனதுக்குள் அவளின் அமைதியான முகம் இம்சை செய்து கொண்டே இருந்தது எத்தனையோ பேரை சந்தித்தாலும் இவளிடம் மட்டுமே காதலை வைத்து ப்ளேனை தொடங்கினான் அது வொர்க் அவுட் ஆகும் போது அளவிற்கு அதிகமாக சந்தோஷம் கொண்டான் அந்த சந்தோஷத்திற்கு காரணத்தை தெளிவாக அறிந்திருந்தால் இன்று அவளை அங்கு கொண்டு சென்று விட்டு வந்திருக்க மாட்டான் அவளோடு வலம் வந்த நாட்கள் இனிமையாக தான் இருந்தாலும் கூடவே குற்றவுணர்வும் நெஞ்சை அடைக்க தான் செய்தது அதையும் மீறி கொடுத்த நேரம் முடிந்து விட்டது நீ அவளை கொண்டு ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டளையில் வேறு வழியின்றி இன்றி இன்று அவளை கொண்டு போய் ஒப்படைத்தவனுக்கு ஏமாற்றத்தை தாங்கி நிற்கும் அவள் விழிகள் இப்போது கூட அவனை ஏன் இப்படி செய்தாய் என கேள்வி கேட்பது போலவே இருக்க ஆஆஆஆஆ….. என தலையை பிடித்துக்கொண்டு கத்த அவன் செயலில் காரை நிறுத்த ப்ரேக் சரியாக பிடிக்க முடியாமல் கார் போய் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரியில் மோதி சட்டென தீப்பற்றி எரிந்தது.
இப்படி நடக்கும் என்று எதிர்பாராத செந்தில் நண்பனோடு அவசரமாக காரை திறந்து கொண்டு வெளியே குதிக்க கார் வெடித்து சிதறவும் சரியாக இருந்தது அதில் இருந்து பாதுகாப்பாக தப்பி இருந்தாலும் கார் வெடித்த போது பறந்து வந்த காரின் பாகம் ஒன்று இவர்களின் முதுகில் பலத்த காயத்தை ஏற்ப்படுத்திருந்தது.
நம்பர் 30 என்ற இலக்கம் அவள் உடையின் நெஞ்சு பகுதியில் அச்சு பதிக்கப்பட்டு இருந்தது அந்த அறைக்குள் நுழைந்ததும் அடுத்த நிமிடமே அம்மாஆஆ என்று பயத்தில் அலறி அடித்து வெளியே ஓட போனவளை போக விடாமல் தடுத்திருந்தது மூடிய கதவு அது ஒரு மிகப்பெரிய அறை அங்கு இவளையும் சேர்த்து 30 பேர் இருந்தனர் அதில் இருந்த நிறைய பேரின் முகம் பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருந்ததை கண்டாள்.
வெள்ளை புள்ளி போல் சருமத்தில் தோன்றும் ஒரு வித நோய் அது போல இங்கு இருந்த நிறைய பேரின் முகம், உடல் என வெள்ளை படர்ந்து காட்டியது இன்னும் சில பேரின் முகங்களில் அதிகளவில் முடி படர்ந்து பார்க்க இளமையாக இருந்தாலும் முகம் நல்ல முதிர்ச்சியை காட்டுவது போல் தோல் சுருங்கி பார்க்கவே கோரமாக இருந்ததுஒவ்வொருவரின் தோற்றமும் சாதாரண மனித தோற்றத்தில் இருந்து சற்று வித்தியாசமாகவே இருக்க அதை கண்டு தான் அலறினாள்.
அவளை போல இருந்த ஒருவள் கலைச்செல்வியை நெருங்கினாள் “இவங்களை பார்த்து பயப்புடாதே இவங்க இங்கு வரும் போது இருந்த அழகை நீ பார்த்து இருந்தால் வியந்து போய் இருப்ப ஆனா இன்னைக்கு அவங்க முகத்தையே கண்ணாடியிலே பார்க்க முடியாத படி பண்ணிட்டானுங்க…” என்றவளின் பேச்சில் புரியாமல் பார்க்க அனைவரும் இவளை நெருங்கி வந்தனர் அதில் பெண்ணவள் நடுங்க “பயப்புடாதே நீ யாரு இவனுங்கிட்ட எப்படி மாட்டிக்கிட்ட…” என கேட்க நடந்ததை சொன்னாள்.
“அச்சோ இனி நம்மளை மாதிரி எத்தனை பேர் தான் இவனோட ஆராய்ச்சிக்கு பலி ஆகுவோம்னு தான் தெரியலே…” என வருத்தப்பட்டவளிடம்,
“அப்படி என்ன தான் பண்ணுவாங்க அக்கா எனக்கு இங்கே நடக்குற எதுவுமே தெளிவா புரியல கொஞ்சம் குழப்பமாவே இருக்கு…”
“அது ஒன்னுமில்ல கலைச்செல்வி எலிக்கு பதிலா நம்மளை வெச்சு சோதிப்பானுங்க வெள்ளை பன்னி மாதிரி இருப்பானே ஒருத்தன் அவன் கண்டுப்பிடிக்கிறதை எடுத்து நம்ம உடம்புல ஒரு வாரம், ஒரு மாசம், ஏன் ஒரு வருஷமா கூட பூசி அது மூலமா எத்தனை நாளிலே ரிசல்ட் காட்டுது இது சரியான ரிசல்ட் காட்டுமான்னு டெஸ்ட் பண்ணுவானுங்க நான் இங்கே ஒரு வருஷமா இருக்கேன் கடைசியா என் முகத்தை பார்த்தியா எப்படி பண்ணி வெச்சு இருக்கானுங்கன்னு…” என்றவளின் முகம் பார்த்தாள் கன்னத்தோடு சேர்ந்து கழுத்து வரை ஒரு பெரிய கட்டி போல் இருந்தது தோல் சுருங்கி ஆங்காங்க முகத்தில் வரும் ஓபன் போஸ் போல் குழி குழியாக உடம்பிலிந்தது.
அவரவர்களின் கதைகளை சொன்னார்கள் நிறைய பேர் விலேஜ் பெண்களாக இருந்தார்கள் வேறு வேறு மாவட்டத்தில் இருந்து கடத்தி வந்தவர்கள் அவர்கள் தேவையை வைத்து பயன்படுத்தப்பட்டவர்களே கெமிக்கல் கலந்த எவ்வித ப்ராடக்ட்டையும் யூஸ் பண்ணாத பெண்களை தான் இவன் தேர்வு செய்கிறான் “அது மட்டுமில்லை கலைச்செல்வி இவனோட ஆராய்ச்சி ஏதாவது ஒன்னு சக்ஸஸ் ஆகிடுச்சுன்னா பிபோர் என்ட் ஆப்டேர் போட்டு அவங்களை வெச்சு விளம்பரம் பண்ணி மார்கெட்லே அவன் பொருளை விற்ப்பான் அது ஒவ்வொரு நாட்டை பொறுத்தவரைக்கும் விலையே கூட்டி விற்க அதுவும் நல்லா மூவ் ஆகும் அவன் சம்பாதிக்கிறான் அவனுக்கு நாங்க பழியாகுறோம்…” என்றவள் அங்கு ஓடிக்கொண்டிருந்த ஒரு டீவியில் அந்த விளம்பரங்களை காட்டினாள்.
அதைப் பார்த்தவள் ஒரு “அழகு” என்ற வார்த்தையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு எப்படி எல்லாம் சமூகத்தில் கெட்ட எண்ணங்களை விதைக்கிறார்கள் என யோசித்தவளுக்கு அத்தனை கோபம் அதே நேரம் ஒரு பெண் அறையின் முன்பு வந்து விழுந்து ஸ்வேதா இறந்திட்டா என்று சொல்ல அனைவரும் அந்த அறையின் நீண்ட ஜன்னல் வழியாக பார்க்க அங்கு ஒரு சிறு கட்டிலில் படுக்க வைத்திருந்த ஒரு பெண்ணின் உடம்பில் பொருத்தப்பட்டு இருந்த வயர்களை கலட்டி அப்புறப்படுத்தி விட்டு அந்த உடலை தூக்கி ஒரு வெள்ளை கவரில் போட்டு தூக்கி கொண்டு சென்றனர் இருவர் அந்த பெண்ணின் கருத்த முகமே அவளின் பயத்தையும், எந்தளவிற்கு சோதிக்கப்பட்டுள்ளால் என்பதையும் காட்டிக்கொடுத்தது அத்தனையும் பார்த்து நின்ற கலைச்செல்வியின் கண்கள் கலங்கியது உன் கனவு, லட்சியம் எல்லாத்தையும் இந்த நாலு சுவத்துக்குள்ள போட்டு புதைக்க போறீயா நீ தோத்து போக போறீயா? என் கலை தோத்து போறது எனக்கு பிடிக்கலே அவள் ஜெயிக்கனும்னு நான் ஆசைப்படுறேன் உன்னை இழிவா நினைச்சவங்க உன்னை நிமிர்ந்து பார்க்கிற மாதிரி செய் அடிக்க அடிக்க ஓடிட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா நல்லா யோசி கலை உன் மேல உள்ள அக்கறையிலே தான் சொல்றேன் இழந்ததை நினைச்சு பிறகு ஒருநாள் கவலைப்படுறதுல எந்த பயனும் இல்லை…”என்ற ஸ்ரீயின் வார்த்தைகள் காதில் ரீங்காரமிட்டது தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்தால் தம்மை போல் இனி எந்த உயிரும் பாதிக்கப்பட கூடாது என நினைத்தால் சாதிக்க முடியாதவை இவ்வுலகில் தான் உண்டா கலைச்செல்வியினால் இப் பெண்களுக்கும் மாற்றம் நிகழ்ந்திடுமா பார்க்கலாம்…
Epadilam ponungala emathuranga love pani ippadi unoda research ku use panriye yadhav avlo kevalama poiducha unaku
உண்மையிலேயே… அந்த சிகாங்கோவையும், செந்தில், யாதவ் போன்றவர்களையும் ஏதாவது செய்யணும்.
Ada pavingala 😡😡😡
Good epi
செம