Skip to content
Home » 15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் சென்ற மகளை இரண்டு நாட்களாக காணவில்லை என பெற்றோர் இருவரும் பெண்ணவளை தேடிக்கொண்டு காலேஜ், ஸ்ரீயின் வீடு மற்றும் ஊரில் மகள் செல்ல கூடிய இடம் என்று இந்த இரண்டு நாட்களுக்குள் தேடாத இடமில்லை தேடி தேடி களைத்து விட்டனர் கடைசியாக போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன்ட் கொடுக்க முடிவெடுத்து கிளம்பும் போது அவர்களோடு ஸ்ரீயும் சென்றாள்.

போலீஸ் தீவிரமாக நடவடிக்கை எடுத்தது அவர்கள் காலேஜ் சென்று விசாரிக்கும் போது தான் அவள் சிஎம் மகனை காதலிப்பது கூட தெரிய வந்தது பெற்றோர்களுக்கு கடைசியாக அவள் அழுதுகொண்டு இருக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் இருந்ததை பார்த்தவர்கள் அவளோடு பேசும் அந்த நால்வர் யார்? என தேடி விசாரித்தவர்களுக்கு சுவற்றின் மறைவில் நின்று செந்திலோடு அவர்கள் பேசியது தெரியவில்லை இவள் நின்ற பக்கம் அவள் அவர்கள் வந்து பேசியது மட்டுமே நேரம் பார்த்து பதிவாகி இருந்தது.

இவர்கள் யார்? என ஸ்ரீயிடம் கேட்க“இவங்க தான் என் கலையே அடிக்கடி ஏதாவது சொல்லி காயப்படுத்திட்டே இருப்பாங்க…” என்றதும் அந்த நால்வரையும் கூப்பிட்டு வைத்து பேச முதலில் தயங்கியவர்கள் பின்பு தங்கள் படிப்பை கருத்தில் கொண்டு “முன்னாடி அந்த பொண்ணோட கலரை வெச்சு கிண்டல் பண்ணி அழ வைச்சதை எல்லாம் நாங்க பேசிட்டு இருந்ததை கேட்டு தான் இவ அழுதா அந்த பொண்ணை அங்கே பார்த்தும் நாங்க பண்ண தப்பை சொல்லி மன்னிப்பு கேட்டோம் அவ்வளவு தான் அவ கொஞ்சம் எமோஷனல் டைப் எதுன்னாலும் அழுதிடுவா அதான் சார் வேற ஏதும் இல்லை…” நால்வரும் ஒரு போல் சொல்ல அட்வைஸ் பண்ணி அவர்களை அனுப்பி விட்ட காவல் அதிகாரி.

ஸ்ரீயிடம் கலைச்செல்வி பற்றி கேட்டறிந்து வைத்ததில் அவள் மிகவும் பயந்த சுபாவம் என்பதை அறிந்தவர் மேலும் எந்த விசாரணை இன்றி அனுப்பி வைத்தவருக்கு இதில் வேற ஒன்று இருப்பதாகவே தோன்றியது கடைசியாக தெருக்கள் ஆங்காங்கே உள்ள கடையில் பொருத்தி வைத்திருந்த சிசிடிவி முதற்கொண்டு அனைத்தையும் செக் பண்ணி விட்டனர் அதில் பெண்ணவள் நடந்து போவது மட்டும் தான் தெரிந்தது இதை எல்லாம் கவனித்து தான் யாருமற்ற இடத்தில் நின்று யாதவ் பேசி அவளை கடத்தி சென்றது அதனால் அவன் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

சரி இருவரும் சேர்ந்து தானே காதலித்தார்கள் அதனால் சிஎம் மகனை விசாரிக்கலாம் என அவன் பக்கம் திரும்பி தேடிப்பார்க்க அவன் ஹாஸ்பிடலில் இருப்பது தெரிய வந்தது விசாரணை நடாத்த சிஎம் அனுமதி கொடுக்காததால் தேடும் பணியும் தாமதமாகியது.

விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தவனையே ஒருவித யோசனையுடன் பார்த்தான் அருகில் இருந்த செந்தில்.

“யாதவ்‌…‌ நீ உண்மையா கலைச்செல்வியே காதலிக்கிறியா?…”

“ம்ம் ஆமா அப்படி தான் நினைக்கிறேன் அவன் சொன்ன மாதிரி பையன் பொண்ணுன்னு எத்தனையோ பேரை கொண்டு போய் கொடுத்திட்டு வேலை முடிந்ததும் இயல்பா கடந்து போயிட்டுவேன் ஆனா இவளை விட்டு வந்ததுல இருந்து மனசே ஒரு மாதிரி இருக்குடா செந்தில்…”

“ஆச்சரியமா இருக்கு யாதவ் உன்னோட லெவலுக்கு இல்லாத ஒரு பொண்ணை நீ நினைத்து கவலைப்படுறதை பார்க்கிறப்போ சத்தியமா இது நீதானா?…”

“நான் தான் அதோட நான் செஞ்ச தவறை நானே சரி பண்ண போறேன்…” என தீர்க்கமாக சொன்னவனை புரியாமல் பார்த்தான் செந்தில்.

“செல்வியை அங்கிருந்து கூட்டிட்டு வரப்போறேன் அவளாலே அந்த வலிகள் எதுவுமே தாங்க முடியாது அவ ரொம்ப சென்சிடிவ் பாவம் ரொம்ப கஷ்டப்படுவா அவன்கிட்ட இருந்து அவளை கூட்டி வரலாம்னு இருக்கேன்…”

“பைத்தியமாகிட்டியா நீ அப்படி மட்டும் ஏதாவது நடந்தா அவன் நம்ம இரண்டு பேரையும் கொன்றுவான் அவனுக்கு கீழே நம்ம ரெண்டு பேரையும் போல எத்தனையோ பேர் வேலை செய்றாங்க அதனாலே போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பான் இல்லையா மொத்த தப்பையும் நம்ம பக்கம் திருப்பி காலத்துக்கும் வெளியே வராத மாதிரி பண்ணிடுவான் அந்த அரக்கன் அவனுக்கு கலைச்செல்வி வேணும்ன்னு எவ்வளவு பிடிவாதமா இருந்தான்னு நம்ம ரெண்டு பேருக்கும் தான் தெரியுமே அப்படி இருக்கிறப்போ எந்த நம்பிக்கையிலே நீ காப்பாத்த போகலாம்னு சொல்ற….”

“எனக்கும் நிலமை புரியிது செந்தில் ஆனா அவளை கொண்டு போய் விடும் வரைக்கும் எதுவும் தோனல விட்டிட்டு வரப்போப்போ தவிப்போட பார்த்த அந்த கண்ணு என்னை கொல்லாம கொல்லுதுடா முடியலே நெஞ்சு வெடிக்கப்போற மாதிரி இருக்கு…” என்றவனின் கன்னத்தில் வடிந்த கண்ணீர் துளிகள் செந்திலை மேலும் ஆச்சிரியப்பட வைத்தது.

“சரி கலைச்செல்வியை அவன்கிட்ட உனக்காக போய் ஒரு தடவை கேட்டு பார்க்கலாம் ஆனா அதுக்கு முன்னாடி இன்னொரு பிரச்சினை வந்திடுச்சு…” என்றவனை என்ன என்பது போல் பார்க்க போலீஸ் விசாரணை நடாத்துவதை சொன்னான்‌.

“உன்னை விசாரிக்கனும்னு இப்போ தொடர்ந்து வந்து பார்த்திட்டு போறாங்க ஆனா அப்பா யாரையும் சந்திக்க விடலே இன்னைக்கு மார்னிங்யும் வந்திட்டு போனதா காவலுக்கு நின்ன ஆளுங்க சொன்னானுங்க என்ன ஏதுன்னு விசாரிச்சதுல கலைச்செல்வி அப்பா அம்மா அவளை காணோம்னு கம்பிளைன்ட் கொடுத்து இருக்காங்க அதோட நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறதா காலேஜ்ல விசாரிக்கிறப்போ தெரிய வந்து அதனாலே உன்கிட்ட இதைப்பத்தி கேட்க தான் வந்து இருக்காங்க…”

“அதுக்கு முன்னாடி நாம தப்பிக்கனும் அவங்க விசாரணையிலே ஏதாவது உலறிட்டா தப்பா போயிடும் என்னாலே அடுத்தக்கட்ட வேலையே பார்க்க முடியாது சோ கலைச்செல்வியை காப்பாத்திட்டு இதை பார்த்துக்கலாம் மொதல்ல இங்கே இருந்து கிளம்பலாம்…” என்ற யாதவ் செந்திலை அவசரப்படுத்தினான்.

இரண்டு நாட்கள் அங்கு நடப்பவைகளை கவனித்துக் கொண்டு இருந்தாள் கலைச்செல்வி நேர நேரத்திற்கு சாப்பாடு, உறக்கம் மற்றும் தேவையான அத்தனை வசதிகளும் கிடைக்கிறது ஆனால் அதற்கு அதிகமாக தங்களிடம் இருந்து சத்தை உறிந்து எடுத்து விடுகின்றனர் நேற்று கூட ஒரு பெண்ணையும் ஆணையும் அழைத்து சென்ற இருவர் சூரிய வெளிச்சம் போன்று வந்த ஒரு வித கருவியின் கீழ் அந்த பெண்ணை படுக்க வைத்து முகம் உடல் முழுவதும் ஒருவித ஜெல் போன்று தடவி அந்த ஒளியை அந்த உடம்பில் காட்டினர் வெப்பநிலையை சிறிது சிறிதாக அதிகப்படுத்தி அதிகப்படுத்தி அவர்களின் உடலை ஆராய்ந்தனர் அந்த ஒளியின் வீரியம் தாங்க முடியாமல் அந்த பெண் இறந்து போனாள் ஆணோ உடலில் ஆங்காங்கே தோன்றிய கொப்புளங்களுடன் வாடி வதங்கி தரையில் விழுந்தவனால் எழுந்து கொள்ள கூட சக்தி இன்றி போனது இங்கு நடக்கும் கொடுமைகளை பார்க்கும் போது யாராக இருந்தாலும் கண்ணீர் வடிக்க வைத்திடும் ஆனால் இங்கிருப்பவர்கள் ரோபோ போல் நடந்துக் கொள்வது தான் வித்தியாசமாக இருந்தது.

அடுத்த நாள் காலையிலே நீல நிற உடை அணிந்த ஒருவன் வந்து நின்றான் நம்பர் 30 என்று அழைத்தப்படி கலைச்செல்வியை வர சொல்ல முடியாது என மறுத்தவளின் கரம் பற்றி இழுத்துக்கொண்டு சென்றவன் அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர வைத்தான்.

அதே நேரம் வைட் கோர்ட் அணிந்து அவளருகில் வந்து அமர்ந்தான் சியாங்கோ அவனை காணும் போது ஏனோ தானாக பயம் வந்தது அங்கிருந்து தப்பித்து ஓட போகும் போது அவள் கை கால்களை அந்த இருக்கையோடு சேர்த்து லாக் பண்ணி விட பெண்ணவளால் அசைய கூட முடியவில்லை.

அவள் முகத்தை தொட்டு பார்த்தான் அந்த க்ரீமின் பாதிப்பால் பருக்கள் குறையாமல் அப்படியே தான் இருந்தது அவள் சென்ற டாக்டர் கொடுத்த மருந்தை இரண்டு நாள் போடாமல் விட்டதால் அது மீண்டும் வந்திருந்தது அதையே அவன் பார்க்க பெண்ணவளோ அவன் கரத்தை தன் முகச்சுளிப்பை காட்டி எதிர்த்தாள் ஆனால் அவன் கண்டுகொள்ளவே இல்லை கண் மூக்கு வாயை மறைத்து க்ளாஸினால் ஆன ஒரு முகமூடியை போட்டு விட்டு ஒரு வித திரவத்தை எடுத்து அவள் முகத்தில் ஸ்ப்ரே பண்ணி விட்டு அது காய்ந்ததும் மீண்டும் கோல்ட் நிறத்தில் இருந்த திரவத்தை அவள் முகத்தில் அப்பினான் இப்படியாக திரவ நிலையில் இருந்த சிலதை எடுத்து அவள் முகத்தில் பூசி விட்டு க்ரீம் போல் ஏதை எதையோ பூசினான்.

“எதையும் போடாதே… என்னை விடு….” என அவள் தொண்டை கிழிய கத்திய சத்தம் எல்லாம் ஒரு பொருட்டாக கூட கருத்தில் கொள்ளவில்லை அவன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தவனை என்ன செய்தால் தகும் என்றிருந்தது பெண்ணவளுக்கு,

சிறிது நேரத்தில் நம்பர் 30 DAY 01 என அங்கிருந்த குறிப்பேட்டில் குறித்து விட்டு கை கால் எல்லாம் விடுவிக்க அதே நீல நிற உடைக்காரன் அவளை அழைத்துக்கொண்டு பழையபடி அறையில் விட்டான் சிறு நேரத்திலே பெண்ணவளின் முகம் எரிய தொடங்கியது மிளகாய் அரைத்து பூசியது போல் எரிச்சலை கிளப்பி விட அம்மாஆஆஆ… என தன் முகத்தை பற்றிக்கொண்டு கதறியவளிடம் உடன் இருந்த பெண்கள் ஓடி வந்தனர்.

“ஆஆஆ… அம்மா எரியுதே… ஆஆ…” என்றவளின் அலறலை கண்டு மங்கையர் கூட்டம் பட படத்தது துணியை நனைத்து திட்டு திட்டாக சிவந்து போன அவள் முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக துடைத்து விட எரிச்சல் மட்டுப்பட்டாலும் ஈரம் காய்ந்ததும் இன்னும் அதிகரிக்க “அக்கா வலிக்குது எரிச்சல் அடங்கவே மாட்டேங்குது…” என்றதும் வேறு வழியின்றி ஐஸ்கட்டிகளை நீருடன் கலந்து பக்கெட் ஒன்றை வைக்க அதில் தன் முகத்தை வைத்து கொண்டாள்.

“நாசமா போனவனுங்க இவனுங்களோட கண்டுபிடிப்புக்கு நம்மளை சாவடிக்கிறானுங்களே இவனுங்க நல்லாவே இருக்க மாட்டானுங்க….”

“இவனுங்களையும் குறை சொல்ல முடியாது விஜி நம்மளை மாதிரி நிறைய பேர் தன்னை அழகாக மாத்திக்கனும்னு இப்படி பட்ட கெமிக்கல் கலந்த ப்ராடக்ட் எல்லாம் வாங்குறதாலே தான் இவனுங்களும் அதை பயன்படுத்தி கண்டதையும் உருவாக்கி விக்கிறானுங்க…”

“எல்லாம் சரி தான் ஆனா அதுக்காக இவனுங்ககிட்ட எத்தனை நாளைக்கு இப்படியே மாட்டிக்கிட்டு முழிக்கிறது ஒவ்வொரு நாளும் என்னத்தை எடுத்து நம்ம மேல போட்டு டெஸ்ட் பண்ண போறானுங்களோன்னு நினைச்சு பார்க்கும் போதே ஈரக்குழை நடுங்குது…” என‌ பாதிக்கப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள அணைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்த கலைச்செல்வி தண்ணீர் பக்கெட்டில் இருந்து தன் முகத்தை ஈரம் சொட்ட சொட்ட நிமிர்த்தியவள்.

“பயந்து பயந்து இருந்தா நம்ம செத்தா தான் இந்த இடத்தை விட்டு போக முடியும் இல்லையா இங்கே தான் நம்ம வாழ்க்கை கழியும் இங்கயே சித்திரவதையே அனுபவிச்சு வாழ என்னாலே முடியாது நான் இங்கிருந்து போகலாம்னு முடிவெடுத்திட்டேன் என்னோட எல்லாரும் ஒன்னு சேர்ந்தா கண்டிப்பா எல்லாரும் சேர்ந்து தப்பிச்சிடலாம் அதுமட்டுமில்ல இனியும் இவனுங்ககிட்ட இருந்து நிறைய பேரை எந்த ஆபத்தும் நேராம காப்பாத்தவும் முடியும் என்ன சொல்றீங்க….” என தீர்க்கமாக அத்தனை பேரையும் பார்த்த பெண்ணவளின் சிவந்த விழிகள் அவள் உறுதியை எடுத்துக்கூற அது நம்மால் முடியுமா? என்ற கேள்வியோடு தயங்கி நின்றனர் அத்தனை பேரும்.

4 thoughts on “15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்”

  1. Kalidevi

    Panrathulam panitu avala kondu poi anga vitutu vanthu ipo tha moolai velai seitha yadhav unaku kapa ninaikira athu munnadiye yosikarathu illa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *