அத்தனை பேரும் இது நம்மால் முடியுமா? என்று கேட்க ஒரு தடவை தன் பார்வையால் அறையை சுற்றி பார்த்தவள் “இங்கே நம்ம பேசுறது என்ன பண்ணுறோம்ங்கிறதை எல்லாம் அவங்களாலே பார்க்க முடியுமா?..” அவள் கேள்விக்கு நீண்ட காலமாக இங்கிருக்கும் பெண்ணொருத்தி “அவங்களை மீறி இங்கே எதுவும் பண்ண முடியாதுங்கிறதாலே அப்படி எந்த ஒரு செக்யூரிட்டி சிஸ்டமும் இல்லாம தான் வெச்சிருக்காங்க பெரிதா யாரையும் கண்காணிக்க மாட்டாங்க கலைச்செல்வி…”
“அப்போ ரொம்ப நல்லதா போச்சு நாம நம்ம வேலையே பார்க்கலாம் என்ன சொல்றீங்க…”
“அதுதான் முடியாது நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண விஷயம் இல்லை நட்ட நடு காட்டுக்குள்ள யாரும் நெருங்க முடியாத அளவுக்கு கட்டி வெச்சிருக்கானுங்க இந்த இடத்தை சுத்தி மூனு நாலு கிலோமீட்டர் அவனுங்க கன்ட்ரோல் தான் சின்னதா ஏதாவது முயற்சி பண்ணா கூட கொன்னுடுவான் அந்த ரோபோட்…”என்றதும் அனைத்தையும் பொறுமையாக கேட்டவள்.
“விஜி அக்கா அவனுங்க சைட் எத்தனை பேரு? நம்ம சைட் எத்தனை பேரு இருக்கிறோம்…”
“அது ஒன்னு… நாலு… ஹா ஒரு பத்து பேர் இருப்பானுங்க நம்ம சைட் இப்போ வெறும் 25 பேர் இருக்கிறோம் ஆமா இதெல்லாம் ஏன் கேக்குற…”
“நம்ம எல்லாரும் ஒன்னு சேர்ந்தா அவனுங்களை ஏதாவது பண்ண முடியும்ல அக்கா 25 பேராலே அந்த பத்து பேரை ஒன்னுமே பண்ண முடியாதா என்ன? நம்ம நினைச்சா முடியும் அக்கா….” எனும் போதே ஒரு வண்டியின் ஹார்ன் சத்தம் கேட்க அது என்ன என்று கேட்டவளிடம்,
“இது வாரம் ஒரு தடவை வர்ற வண்டி தண்ணி, தேவையான சாப்பாடுனு எல்லாம் எடுத்திட்டு வரும் பாத்ரூம் பின் பக்கம் போனா அதை பார்க்கலாம்…” என்றதும் தாமதிக்காமல் எழுந்து நடந்தாள் கலைச்செல்வி அவளை தொடர்ந்து இரு பெண்களும் சென்றனர் வெள்ளை நிற வேன் போல் முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தது வேறொரு வழியாக அது அனைத்தையும் இறக்கி வைத்துவிட்டு செல்வதை கண்டவள் அது போகும் வழியை கவனித்தாள் எந்தவொரு சிசிடிவி கேமரா எதுவும் இல்லை அதை ஓட்டி வந்தது கூட ஒருவன் தான் அவனை பார்த்ததுமே தெரிந்தது இவனுக்கு இங்கு அனைத்தும் நன்கு பழக்கப்பட்டவை என்பது.
“அக்கா வாங்க…” என்றவள் உடனே அத்தனை பேரையும் அழைத்து சில விடயங்களை பேசினாள் அனைவரும் கடைசியாக இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற முடிவோடு சரியென்று விட்டு அவள் சொன்னபடி அத்தனையும் செய்ய தொடங்கினர்.
இங்கு தன்னவள் தப்பிக்க திட்டம் தீட்டி இருப்பது தெரியாமல் அடிப்பட்ட உடம்போடு காவலர்களுக்கு தெரியாமல் தப்பித்து அந்த இடத்துக்கு தனியாக வந்து கொண்டு இருந்தான் யாதவ்.
அடுத்தநாள் விடியலும் அழகாக புலர்ந்தது பெண்ணவளை சிறிது நேரத்தில் வந்து அழைத்துக்கொண்டு சென்றனர் இன்று நேற்று போல் கண்டதை எல்லாம் இஷ்டத்துக்கு பூசினார்கள் அது கொடுத்த எரிச்சலை தாங்க முடியாமல் பற்களால் தன்னிதழை கடித்து வலியை பொறுத்துக் கொள்ள முயன்றதில் உதடு காயமாகி கடைசியில் ரத்தம் வந்தது தான் மிச்சம்.
ஆனால் இன்று எரிச்சலுடன் நிற்காமல் தீக்காயம் போல் முகத்தில் ஆங்காங்கே உருவாக்கி விட்டிருந்தது அவன் தயாரித்த திரவம் போலிருந்த ஒன்று அவளின் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்த சியாங்கோ அருகில் இருந்தவனிடம் திரும்பி “இனி இதோட அளவை குறைச்சு மிக்ஸ் பண்ணுங்க…” என்ற படி பாட்டிலை நீட்டியவன் அவள் வலியில் அலறுவதை கண்டுகொள்ளாமல் அவன் பாட்டிற்கு எழுந்து செல்வதை கண்டு அவனை வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்ற அளவிற்கு அவளுக்குள் அத்தனை கோபம் அனைத்தையும் தன் மனதோடு தேக்கி வைத்துக்கொண்டவளை இருவர் அழைத்துக்கொண்டு செல்ல போகும் போது தான் ஒன்றை கவனித்தாள் அந்த இடத்தில் இருந்த ஒரு கதவு எவ்வித பாதுகாப்பும் இன்றி சாதரணமாக மூடி வைத்திருப்பதை அதை திறந்து கொண்டு ஒருவன் செல்ல வெளியில் மரங்கள் சூழ்ந்த காடு அழகாக காட்சி கொடுத்தது அந்த இடத்தில் உள்ள குறிப்பை மனதோடு குறித்து வைத்துக் கொண்டவள் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.
சோர்வாக இருந்தவளை அறையில் தூக்கி போட்டு விட்டு அவர்கள் பாட்டிற்கு செல்ல அவளை அங்கிருந்தவர்கள் தாங்கி பிடித்துக் கொண்டனர் “அக்கா தண்..ணி…” என்றவளுக்கு ஒரு பெண் தண்ணீரை எடுத்து குடிக்க வைத்து தேற்றினாள் முகத்தில் உண்டான காயங்கள் அதிகளவிலான வலியை கொடுத்தது ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாமல் ஐஸ்கட்டிகள் அனைத்தையும் எடுத்து வந்து முகத்தில் வைத்துக்கொண்டு அது கொடுத்த குளிர்ச்சியில் சற்று கண் மூடியவளின் காதுகளில் விழுந்தது அந்த சத்தம்.
அங்கு மாட்டி வைக்கப்பட்டு இருக்கும் டீவியில் இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் பற்றிய விடயங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கும் அதில் அவள் பாவித்த ஊர் பேர் இல்லாத க்ரீம் இன்று சியாங்கோ கம்பனி பெயர் அடித்து அழகாக பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு செல்வதை கண்டாள்.
இதில் “உங்கள் சருமம் கருமை நீங்கி வெண்ணிறத்தில் மின்ன வேண்டுமா? அதற்கு இதோ தீர்வு..” என்று அந்த பேஸ் க்ரீம் பெட்டியை வைத்துக்கொண்டு ஒரு பெண்ணின் விளம்பரம் வேறு அந்த பெட்டியை உற்று கவனிக்கும் போது தான் அதில் பிஃபோர், ஆஃப்டர் என கலைச்செல்வியின் பழைய ஃபோட்டோவையும் அவள் வெள்ளையாக மாறியதும் எடுத்த போட்டோவை சிறிதாக அந்த பெட்டியின் ஒரு பக்கத்தில் வரும்படி பெட்டியை வடிவமைத்து இருந்தார்கள் அதில் உள்ள கலைச்செல்வியை பற்றி நெருங்கியவர்களை தவிர வேறு எவருக்கும் அவளையோ அவளின் பின் உள்ள கசப்பான உண்மைகளும் தெரிந்திருக்காது அல்லவா? அவர்களை பொறுத்தவரை ஹா இப்படி இருந்த பெண் தான் இதை பூசி இப்படி மாறி இருக்கிறாளா? இவளே இப்படி கலராக மாறி இருக்கும் போது தங்களுக்கும் மாற்றம் வராதா என்ன? என ஆச்சரியத்தை உருவாக்கி அவர்களை அப் பொருளை வாங்கவும் வைக்கின்றது இந்த யுக்தியை கையாண்டு தானே சியாங்கோ போன்று பல பேர் வாடிக்கையாளர்களை தம் வசம் படுத்திக் கொள்கிறார்கள் அதில் சில கம்பெனிகள் நிலைத்து நிற்கும் சிலவை காணாமல் போய்விடும் காரணம் சியாங்கோ அனைத்தையும் ஆய்வு செய்து இறக்குமதி செய்கிறான் என்றால் சிலர் பில்டர் என சில விடயங்களை கொண்டு வந்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறார்கள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது உண்மை தன்மை கொண்ட பொருட்கள் பல காலம் தனக்கு என ஒரு அங்கிகாரத்தை பிடித்துக்கொண்டு நிலைத்து நிற்கிறது ஆனால் என்ன அதற்கு பின் இருக்கும் ஆபத்து வெளி உலகிற்கு தெரியாமல் மூடி மறைக்கப்படுகின்றது தான் கொடுமையிலும் கொடுமை.
திரும்ப திரும்ப டீவியில் வந்து கொண்டு இருந்த அந்த க்ரீம்யின் புகைப்படத்தை பார்க்கும்போது அன்று யாதவ் இவளை தனியாக அழைத்துச் சென்று பேசிக்கொண்டு இருக்கும் போது “நீ ரொம்ப அழகா இருக்க செல்வி..” என்று அவளை நேராக பார்க்க வைத்து எடுத்தது நினைவு வர அந்த நாட்களின் நினைவில் ஒரு கசப்பான புன்னகை வந்து போனது அவள் முகத்தில் எவ்வளவு முட்டாளாக இருந்து இருக்கிறோம் என தன்னையே நொந்து கொண்டாள் பெண்ணவள் காதல் என்ற விளையாட்டில் தன் உணர்வை வைத்து விளையாடியவனை எண்ணி முழுவதும் வெறுத்தாள் அதே நேரம் “என்னை மன்னிக்க மாட்டியா செல்வி…” என அவள் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுதான் யாதவ்…
ஆமா..! கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம்..?
Itha seirathuku munnadi yosichi irukanum ipo mannipu ketu ena aga pothu ava mugam sari aguma
Ipo azhuthu enna panna pora
Nice epi👍
இவனுக்கு காதல் ஓரு கேடு..