தொடர்ந்து ஒரு வாரமாக நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த கலைச்செல்வி அன்று அனைத்திற்கும் தயாராக இருந்தாள் உடன் இருந்த பெண்களிடம் கண்ணை காட்டினாள் எப்போதும் இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர வேறு எங்கும் செல்லாதவர்கள் இன்று அனைவரும் சேர்ந்து இவர்களை வைத்து ஆராய்ச்சி நடாத்தும் இடத்திற்கு வந்து நிற்க அங்கிருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டு பார்க்கும் முன்பே கலைச்செல்வி அங்கிருந்த நீண்ட கம்பி போல் இருந்த ஒன்றை எடுத்து அங்கிருந்த ஒருவனை அடிக்க அடுத்தடுத்து அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை பிடித்து மடக்கி கீழே தள்ளி அவர்களை அவர்களே உருவாக்கும் கெமிக்கல் கலவைகளில் இருந்து பாதுக்காத்து கொள்வதற்காக அணிந்த உடைகளை கலட்டி விட்டு அந்த கெமிக்கல்களை அவர்கள் மீது தெளிக்க தொடங்கினர் பரிசோதனையின் முடிவில் வெற்றி தோல்வி என இரண்டாக பிரித்து வைக்கப்பட்டு இருந்த கலவைகளில் எது நல்லது எது கெட்டது என ஆராயவில்லை மாறாக அவர்கள் தங்களுக்கு செய்த கொடுமையை அவர்களுக்கே திருப்பி செய்தனர்.
இவர்கள் இப்படி நடந்துக் கொள்வது முதல் முறை என்பதால் அதிர்ச்சியில் இருந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியாக இருந்தது அவர்கள் தங்களை ஒரு சேர தாக்கியது தான் அதனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கூட மறந்து நின்றதும் கலைச்செல்வியின் கூட்டணிக்கு சாதகமாகிப் போனது.
அவர்கள் போட்ட சத்தத்தில் பொழுது விடிந்த பின் உறங்கிய சியாங்கோ அடித்து பிடித்து எழுந்தமர்ந்தவன் தன் உடையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வர அங்கு நடந்து கொண்டு இருப்பதை புருவம் உயர்த்தி பார்த்தவன் தன் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து கூரையை பார்த்து சுட அந்த சத்ததில் அனைவரும் இவன் பக்கம் திரும்பினர்.
சிவந்த விழிகளோடு அத்தனை பேரையும் பார்த்தவன் “எவ்வளவு தைரியம் இருந்தா என் இடத்தையே இப்படி நாசம் பண்ணுவீங்க எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது…” என உருமியவனை கண்டு சிலர் அஞ்சினர் பெண்ணவளோ கையில் இருந்த இரும்பு கம்பியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவனை அழுத்தமாக நேர் பார்வை பார்த்தபடி“தைரியம் எங்கிருந்து வந்ததுன்னு தெரிஞ்சு நீ என்ன பண்ண போற…” என்றபடி அவனை நெருங்கினாள் சீறும் பெண் சிங்கமாக அவனோ அவளின் பார்வைக்கு எதிர்ப்பார்வை பார்த்தவன் “அப்போ இதுக்கு காரணம் நீதானா? அப்போ உன்னை மொதல்ல போட்டு தள்ளிடுறேன்…” என அவள் நெற்றியில் துப்பாக்கியை அழுத்தி பிடிக்க பிறர் ஏதாவது கூறிடும் ஒரு வார்த்தைக்கு கூட பயந்து நடுங்குபவள் இன்று உயிரை எடுக்க துணியும் ஆயுதத்தின் முன்பு சிறிதும் அச்சமின்றி நின்றிருந்தாள் அவனை பார்த்தவாறே தன் கையில் இருந்த கம்பியால் ஓங்கி அவன் காலில் அடித்தாள் எதிர்பாராத தாக்குதலில் வலியுடன் கீழே விழுந்தவனை விடாமல் அடிக்க தொடங்கியவளை ஏய்… என அடிக்க பாய்ந்தவனின் முன்பு அவன் துப்பாக்கியை அவனுக்கு எதிராகவே திருப்பினாள்.
அவள் துப்பாக்கியை தன்னை நோக்கி திருப்பியதில் பின்வாங்கியவன் அங்கு எவ்வித பாஸ்வேர்டும் கேட்காத கதவு பக்கத்தை திறுந்து கொண்டு சிலர் செல்வதை கண்டவன் தன்னையே நொந்தான் அனைத்தையும் திட்டமிட்டு ஏற்பாடு செய்து இதை மட்டும் அப்படியே விட்டு வைத்ததில் “டேய் எந்திரிங்கடா எழுந்து அவங்கள பிடிங்கடா முப்பது கோடி ப்ராஜெக்ட் அவங்கள வெச்சு தான் பண்ணனும் பிடிங்கடா…” என அவன் தொண்டை கிழிய கத்த அவனது ஆட்களோ அதை கேட்டாலும் எழுந்து கொள்ள முடியாமல் வலியில் அங்கும் இங்கும் புரண்டு கொண்டு இருந்தனர்.
“கத்தாதே…” என அடிக்குரலில் சீறியவள் “விஜி அக்கா சத்தம் கேக்குது நீங்க உங்களோட இருக்கிற அந்த அண்ணாவையும் கூட்டிட்டு உடனே போங்க…” என அனுப்பி வைத்தவள் மீதம் இருந்த ஆட்களின் உதவியுடன் அனைவரையும் கட்டி வைத்து எங்கும் செல்ல விடாமல் பார்த்துக் கொண்டனர் சியாங்கோ தன் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் தன் கண் முன்பே தவிடு பொடியாகுவதை கண்டு பொறுக்க முடியாமல் ஒரு பக்கம் துப்பாக்கி முனையில் தாம் நிற்பதில் உயிருக்கு பயந்து வேறு வழியின்றி கலைச்செல்வியிடம் கத்த தொடங்கி இருந்தான் “ச்சூ வாயை மூடுடா ரத்தக்காட்டேரி மீறி ஒரு சத்தம் வந்தது உன்னை எங்கே சுடுவேன்னு எனக்கே தெரியாது பொத்திக்கிட்டு இரு இல்லை அவ்வளவு தான்….” என்றவள் கண்களை சுழற்றி பார்வையால் அனைத்தையும் ஆராய்ந்தவளுக்கு அங்கிருந்த ஃபோன் கண்ணில் பட அதை ஒரு பெண்ணிடம் எடுக்க சொன்னவள் இவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை சேர்க்க கூறினாள் அதன்படி ஐந்து பேர் உடனே அந்த வேலையில் இறங்கினர் பல ரகசிய இடங்களில் அவனது கைரேகை தேவைப்பட்டது துப்பாக்கி முனையிலே அவனை அழைத்துக்கொண்டு அனைத்தையும் திறக்க வைத்து ஆதாரங்களை எடுக்க தொடங்கினாள் அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியே வந்தது.
அந்நேரம் பார்த்து சரியாக யாதவ் அவ்விடம் வந்து சேர்ந்தான் அவனின் கைரேகையை வைத்து ஈசியாக முன்னால் இருந்த கதவை திறந்து கொண்டு வந்தவன் அங்கு நடக்கும் நிகழ்வுகளை கண்டு வெகுவாக ஆச்சரியப்பட்டான் கூடவே அவனை பின்தொடர்ந்து வந்த போலீஸ் துறையினரும் இங்குள்ளவற்றை வியப்பாக தான் பார்த்தனர் யார் இவர்கள்? என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை யாதவ்யை சந்திக்க வரும் போது அதற்கு தடைவிதித்தது அவர் சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருந்தது அதனால் இன்ஸ்பெக்டரின் கவனம் முழுவதும் இவன் பக்கம் திரும்பி இருந்தது அதன் முதல் படியாக அவனை கண்காணிக்க தனியாக ஒரு ஆளை ஏற்பாடு செய்து இருந்தார் அவன் கொடுத்த தகவலில் தான் ஹாஸ்பிடலில் இருந்து சென்ற யாதவ்யை ரகசியமாக பின்தொடர்ந்தது அதே நேரம் செந்திலையும் அரெஸ்ட் பண்ணி காவல்துறையின் பாதுகாப்பின் கீழ் வைத்திருந்தனர்.
சூப்பர்ப்…. அப்பாடா ஒரு வழியா எல்லாரும் தப்பிச்சதோட, ஒட்டுமொத்த கும்பலையும் வெளியுலகத்திற்கும் காட்டிக் கொடுத்துட்டாங்களே… சூப்பர்.
Superb kalai intha thairiyam inthana naala kamikama vachita ethukum oru santharpam varanum apo therium. Sikram thapichidunga police um vanthutanga ellarum matatum ithula
Sema sema interesting epi
Nice epi
Super