Skip to content
Home » 17) மோதலில் ஒரு காதல்

17) மோதலில் ஒரு காதல்

எலியும் பூனையும் போல இருந்தாலும் இப்படியே அடித்து பிடித்து விளையாடி கொண்டே குதூகலத்துடன் வாழ்க்கையை வாழ வேண்டுமென நினைத்து கொண்டு பூ போல ஒவ்வொரு நடையாக எடுத்து வைத்தாள் மதுப்பிரியா.    

ஐந்து வருட காதலனை தன் கணவனாக மாறும் தருணத்தை பார்த்து காத்து கொண்டிருந்த பிரியா, அதே பச்ச வண்ண சேரியில் நடமாடும் பூந்தோட்டமாக வெளி வந்தவள்,    தன் தோழியின் ரூம் திறக்காமல் இருப்பதால் அந்த கதவிடம் வந்து தட்ட …….  

     ஒரு ஐந்து நிமிடம் கதவை தட்டியும் எந்தவித பதிலுமில்லாததால், அனைவரின் முகத்திலும் ஈஈஈஈஈ ஆடவில்லை.        கதவிடம் கூட்டம் கூட, அவர்களும் கதவை தட்டியும் எந்தவித பதிலுமில்லாததால் மேலும் பதட்டம் நிலவியது.

ஆதலால் மணமகனான வம்சி அங்கு ஓடிவந்து கதவை தட்டி மகி,  “ப்ளீஸ் ஓப்பன் தி டோர், வாட் ஆர் யூ டூயிங் மகி “…. என கத்தியும் பதிலில்லை.       பின் சிறிது யோசித்த வம்சி, பிறகு பேக் வைஷ்சாக கால்களை எடுத்து வைத்து ஒரு பத்து அடி தூரம் நகர்ந்தான்.

அனைவரும் அவனை ஒரு வேடிக்கையாக பார்க்க,    அதையெதையும் கவனிக்காத வம்சி,மூச்சை இழுத்து விட்டு ஓடிச்சென்று கதவை  இடித்து உடைத்து விடலாம் என திட்டம் வேகவேகமாக ஓடி கதவை உடைக்க முயலும் போது, டமார் என கதவை திறந்தாள் மகிழ். 

   மகிழின் இந்த திடீர் செயலை அறிந்திராத வம்சி,பிரேக் போன கார் போல சர்ரென வேகமாக  ஓடி சென்றவன் மகிழை இடித்து அவள் மீதே விழுந்தான். அவள் தலை அடிப்பட்டுவிடாத விதத்தில் அவனது கையால் மகிழின் தலையை தாங்கி  பிடித்து இருந்தான்.   

சில நிமிடங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க, டிரிம் செய்த தாடியுடன் பார்க்க வம்சி மிகவும் அழகாகவும் ,  மகிழின் கண்களில் கண் மையால் தீட்டிய வர்ணம்   அவனை கட்டி இழுத்தது.நாளீ ஆறது பொண்ணும்  மாப்பிள்ளையும் வாங்க என ஐயர் அழைக்க நிகழ்காலத்தில் தரை இறங்கியவர்கள் ,     தங்களை கண்டு மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்பதை அறிந்து தலை குணிந்த மகிழிடம் ஏய் டுபுக்கு எதுக்கு டி கதவை திறந்தே?…. என வம்சி ஒரு முக சுளிப்புடன் கேட்க, 

     ம்ம்ம், நீங்க  எல்லாம் தான கதவை திறங்க திறங்கனு சத்தம் போட்டிங்க, சோ நான் ஓப்பன் பண்ண , நீ வந்து இப்புடி மலமாடு மாதிரி இடிப்பனு நானென்ன கனவா கண்டேன் என கூறி  ஒரு நமட்டு சிரிப்புடன் வாயை உம்மென்று வைத்து கொண்டாள்.  

என்னடா வம்சி பையா அதான் லவ் இல்லையே அப்புறம் ஏன் இவ்ளோ பதற்றம். நாம விரும்பாதவங்கள  காப்பத்தனும்னு யாராவது யோசிப்பாங்களா?… நீ ஏன் யோசிக்கிற,  

  “நீ  எந்தளவு என்ன லவ் பண்றனு நான் உன் வாயிலயே சொல்ல வைக்கிறேன்டா வம்சி”…. என சிந்தனையில் இருந்த மகிழை முறைத்து கொண்டிருந்தான் வம்சி.     பின் “இப்படியா வம்சி அசிங்க படுவ இந்த குள்ளச்சி முன்னாடி”… என தன் ஆள்காட்டி விரலை தன் முகத்திற்கு காட்டி பேசிக்கொண்டே மணமேடையை நோக்கி நடந்தான்.

அவன் பின்னே அடி மீது அடி வைத்து பெண்ணிறக்கே உரித்தான கூச்ச சுபத்துடன் நடந்து சென்று வம்சியின் அருகில் அமர்ந்தாள்.    சிலமணி துளிகளில், மந்திரங்கள் அனைத்தையும் இனிதென கூறி முடித்து அனைவரின் ஆசியை பெற்று வந்த மாங்கல்யத்தை மணமகள்களின் கழுத்தில்  கட்டுமாறு  மணமகன்களுக்கு ஆணையிட்டார் ஐயர்.   

தன் துணையையே கண் எடுக்காமல் இரசித்த யாஷினிக்கு கண்ணடித்து விட, அவனது திடீர் செய்கையில் மனம் மகிழ்ந்த யாஷினி தலை குணிந்து வெட்கப்பட அவன் கையில்  ஏந்திய மாங்கல்யத்தை கட்டி யாஷினியை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டு குங்கும திலகத்தை இட்டான் ஆனந்த்.  

மாங்கல்யத்தை வாங்கிய லோகேஷ், “ஆர் யூ ரெடி ரோஸ்பக்கெட்” என்று  கேட்டிட, ருத்ர தாண்டவம் ஆடிடாத சிவனாக காட்சியழித்த மதுப்பிரியாவிற்கு கிஷ் செய்வது போல ஆக்டிங் செய்ய, கூச்சம் தாங்காமல் தலைகுனிந்தவளுக்கு மங்கள கயிரை கட்டி குங்குமம் இட்டான். 

  மாங்கல்யத்தை கையிலெடுத்த கௌரி‌,அவர்களின் எதிர்ப்புறம் அமர்ந்திருந்த மகிழின் முகம் இடியே தெரிய, அவனை பார்த்த மகி, ” யூ டோண்ட் வொரி ” எல்லாம் நான் பார்த்துக்குறேன் என கண்ணசைத்து புண்ணகைக்க,    கல்யாண மாப்பிள்ளைக்கு உரித்தான பொழிவை பெற்று , பிரியாவை பார்க்க குனிந்த தலையாக இருந்தவளின் இடையில் கபடி விளையாட , பெண்ணவள் தன் உணர்வுகளை கட்டு படுத்தி கொண்டு அமைதியாக இருக்க, மூன்று முடிச்சிட்டு குங்குமத்தை நெற்றியில் இட்டான்.  

         பொன்தாலியை கையில் ஏந்திய வம்சியை கண்டு பார்த்து பார்த்து சிரித்த மகிழை , ஒரு மாற்றமாக பார்த்து “இந்த பைத்தியம் எதுக்கு இப்படி சிரிக்கிறது”…,… என சிந்தனையுடன் மூன்று முடிச்சிட்டு குங்குமத்தை இட ஒருவர் விழிகளில் ஒருவர் முகம் தெரிய,    “வெல்கம் டூ தி ஸ்பார்ட் “… அண்ட் இந்த நரகத்தில் நீ அனுபவிக்கும் தண்டனைகள் கொடுமையாக இருக்கும் என வார்னிங் செய்ய, சிறிதும் மனம் தளராமல் “ஜ ம் ஈகர்லி வெய்டிங்”… என அவரிருவர் மட்டும் அறியும்படி சொல்லி புன்னகைத்தவளை பார்த்து நெட்டி முறித்தார் கிருஷ்ணன்.  

பின் அக்னியை வளம் வருதல், பெரியவர்களின் ஆசிர்வாதம், மெட்டி மாட்டுதல், தலையில் அப்பளம் உடைத்தல், என பலபல சடங்குகளை எப்படா இதுலாம் முடியும் என்ற எதிர்பார்ப்புடனே மாப்பிள்ளைகள் மேற்கொள்ள, சின்னஞ்சிறு குருவிகள் அடித்து கொள்வது போல் உற்ச்சாகத்துடன் மேற்கொண்டனர் மகி,மது,பிரியா மற்றும் யாஷினி. 

     ரிசப்சனில் கிஃப்ட் கடைகள் குவிய, போட்டோக்கள் பலமாக எடுத்து தள்ளப்பட, கேமரா மேன் மயங்காத குறையாக இருந்தார். கிழிந்து போன சட்டைகள் போல ஆனார்கள் மாப்பிள்ளைகள். மாப்பிள்ளைகளை தேடி வந்த ஆதித்யா நான்கு BMW காரின் கீயையும், பெரியவர்கள் அவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட புதுமனை சாவியை கொடுக்க, அனைவருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை.    மூன்று மணி நேரத்திற்கு பிறகு, காரில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருக்க

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ 

முதலாக கிளம்பிய காரில் யாஷினி: இதுலாம் கனவா? இல்ல நினைவான்னு தெரியுல, இங்க நடக்குற எதையுமே என்னால நம்ப முடியிலடா?… என ஆனந்திடம் சொல்ல,

ஆனந்த்: இது எல்லாமே உண்மை தான்டி என சொல்லி காரை வளைக்க,

யாஷினி: ஆச்சர்யத்தில் கண்கள் விரித்து அப்படியாடா என கேட்க,

ஆனந்த்: ஆனாலும் உனக்கு ரொம்ப எகத்தாளம் அதிகாமாதான்டி இருக்கு என கண்கள் சுருங்க பேசினான்.

யாஷினி: என்னடா ஆச்சு?.. ஏன் மூஞ்ச சுளிக்கிற என அப்பாவியாக கேட்க,

ஆனந்த்: தாலி கட்டுன புருஷனுக்கூட பார்க்காம, வாடா, போடா ,டால்டானு கூப்புறயே இதுலாம் அநியாயமா தெரியவில்லையாடி?..  என தன் குற்றச்சாட்டை கூற,

யாஷினி: அவன் தலையில் ஒரு இடி இடித்து அட மட சாம்பிராணி , புருசனை மாமானு கூப்புறத விட வாடா போடானு கூப்ட தான் லேடிஷ்க்குலாம் ரொம்ப  பிடிக்கும், ஏன்னா! அது உரிமையா பேசுறது போல இருக்கும் என மின்மினி பூச்சு போல கண்மூடி கண்மூடி பதிலுறைக்க,

ஆனந்த்:  அதுசரி கூப்பிடனும்னு ஆசப்பட்டுட்ட , அதுக்கு இப்படி ஒரு ரீல் சுத்துறையா?… என கேட்கயாஷினி: அவனை குமுற , அதை சமாளிக்க அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டு , ஒருபுறம் காரை பேலன்ஸ் செய்து கொண்டும், தன் மனைவியை இரசித்து கொண்டும் அப்பயணம் இனிதே தொடங்கியது.

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞    

அவர்கள் பின்னே வந்த காரில்💗மது: வெளியே வேடிக்கை பார்த்தவாறு வர,

லோகி: மேடம், அங்கு என்ன தெரிகிறது?… அப்படி வாய பிளந்து பார்த்துட்டு வர என வினவ,

மது: அது ஒன்னுமில்லை, அங்க இருக்கிற நாலு பார்க்க உன்னமாதிரியே இருக்கு என கூறி அவனை மேலும் கிழுமாக ஒரு பார்வை பாரத்தவளிடம்

லோகி: அதுக்கு ஏன்டிமா என்ன இப்படி பாக்குற?…., என அப்பாவியாக கேட்க,மது: நெற்றி சுருக்கி ஒரு பார்வையுடன், ஒருவேளை குரங்குக்கூட எதாவது கனெக்க்ஷன் வச்சிருக்கையோனு சந்தேகமா இருக்குடா என வசனம் பேச,

லோகி: அச்சோ! இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா? என் ரோஸ்பக்கெட்டும் காமெடின்ற பேருல என்னென்னவோ டிரை பண்ணுது , பட் என்ன பண்றது அத மனுசபயலான என்னால  தான் ஏத்துக்க முடியாது என கேளிப் பேச,

மது: டேய் உன் வாய் ரொம்ப நீளுது என குமட்டிலே ஒரு குத்து விட்டு, வீட்டுக்கு போன அப்புறம் சோறு வேணுமா?.. வேணாமா?.. என விரலை நீட்டி  கேட்க,

லோகி: டெல்லி வரை பிதிங்கி போன வாயுடன், ஏய் உலறு வாயு அதென்னடி வோய் என கேட்டவனை ஃபுட்பாலாடினாள் மது. பின் மூக்கில் ஒரு குத்து விட்டாள் மது, அவளை சமாளிக்க அவளது இதழை சிறை பிடித்தான் லோகேஷ் ‌.( பின்ன யாருக்கிட்ட   நம்ம லோகேஷா?… , ‌கொக்கா?…)

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

மூன்றாவது காரில் பிரியா: அதென்ன கௌரி, எப்ப பார்த்தாலும் பசங்க தான் கார் ஓட்டனுமுனு சட்டம் எதாவது இருக்கா? என்ன? என உள் நோக்குத்துடன் கேட்க,

கௌரி: வெகுளித்தனமானவன், அப்படிலாம் இல்லையே என சொல்ல

பிரியா: அப்புறம் என்ன, புருசன் கார் ஓட்டனா , பொண்ணுங்க பாத்திட்டு வரனுமா ?… என்ன என பொசுபொசுவென பொறிய,

கௌரி: ஹே… இப்ப எதுக்கு இப்படி கடுகு தாளிக்கிற, என குழப்பத்துடன் கேட்டவனிடம்,

பிரியா: அதுவா நான் இப்ப கார் ஓட்டனும் அதுக்கு தான் என விழி நிறைய ஒரு ஏக்கத்துடன் கேட்க,

கௌரி: அடியே ஆத்தா நீ கார் ஓட்டுவையா? என கேள்வி கேட்க,

பிரியா : ஏதோ கொஞ்சம் தெரியும், என சொல்ல,

கௌரி: கொஞ்சம் தான் உயிர் மிஞ்சுமா?… என பதிலுறைத்து அழுவது போல நடித்தார்.

பிரியா: டே ரொம்ப ஓவரா தான் நீ என்னைய டீஸ் பண்ற என குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

கௌரி: தன் நெஞ்சோடு சாய்த்து கொண்டு , காதில் ஏதோ கிசுகிசுக்க பெண்ணவள் வெட்கித்தான் போனால்.

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்

,மகி: வம்சியின் முகத்தை உற்று உற்று பார்த்து சிரித்தாள்.

வசி: ஏய் என்ன பார்த்தா எப்படி தெரியுது ஜோக்கரு மாதிரியா இருக்கது., சும்மா சும்மா பார்த்து சிரிச்சிட்டே இருக்க, இதுக்கு மேல சிரிச்ச அவ்ளோதான் டி என விரலை நீட்டி திட்ட,

மகி: அவனுக்கு எதிராக அமரந்திருந்தவள் அவனிடம் நெருங்கி அவன் முகத்திற்கு நேராக அவள் முகத்தை வைத்து , அப்படிதான் டா  சிரிப்பே, என்னடா பண்ணுவே, என் வாய் நான் சிரிக்கிற உனக்கென்னடா?… என கத்த,

வசி: நீ சிரிக்கிறது எனக்கு பிரச்சனை இல்லடி, அதையேன் என்ன பார்த்து சிரிக்கிற என கூறி வாயை பிதிக்கினான்

.மகி: அதெப்படி என்னால சொல்ல முடியும் என மனதில் நினைத்து, ஆமா இவரு அப்புடியே பெரிய சீமராஜா இவர பார்த்து வேற சிரிக்கிறாங்களாமா?….. என அவளும் வாயை பிதிக்கி கொண்டு காரின் வெளிப்புறம் பார்வையை செலுத்தினாள்.

வசி: அப்புடியே இவ  பெரிய அழகுராணி, இவ மூஞ்ச திருப்பிக்கிட்டா வந்து கெஞ்சுவாங்கனு  நினைப்பு,… இவளை வீட்டில போய் கவனிச்சிக்கலாம் என பல்லை நறநறவென கடித்து கொண்டு காரை பாதையில் வேகமாக செலுத்தினான்‌‌

மகி: அப்பிடியே ஃப்ளைட் ஒட்ரனு நினைப்பு என முணுமுணுத்து சீட் பெல்ட் போட்டு வேடிக்கை பார்த்தபடி வர சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள்

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 

     இரண்டு மணி நேர பயணத்திற்கு பின் அவரக்ளின் புது வீட்டை அடைந்தனர்‌.     நெடுநெடுவென வளர்ந்திருந்த மரங்கள், மரத்தில் கொத்து கொத்தாக பூத்து குலுங்கிய பூக்கள் , பூக்களை ருசிப்பார்த்த தேனிக்கூட்டங்கள், பூவற்ற மரக்கிளைகளில் ஜோடியாக அமர்ந்திருந்த குருவிகள், ஒருவரை ஒருவர் இரசித்து வண்ணம் அமர்ந்திருக்க நான்கு ஜோடிகளும் அதனருகில் அமர்ந்திருந்த காட்சி  அம்மரத்தை காதல் மரமாக காட்டியது.    

வரிசையாக அமைக்கப்பட்ட மரங்களின் இடையில் ஒரு சிறிய குடில் , அதில் குதித்து குதித்து ஓடும் முயல் குட்டிப்போட்ட கலைப்பில் சோர்ந்து படுத்திருக்க, குட்டி முயல்களை வட்டமடித்து கொண்டிருந்தது ஆண் முயல்.      சில நாட்களுக்கு முன்‌ மொட்டு வைத்திருந்த ரோஜோ மொட்டுகள், தற்போது மொத்தமாக விரிந்து இவ்வளவு அழகான உலகை கண்டு இரசித்து கொண்டிருந்தது.       

இதற்கிடையே பக் பக் என்ற சத்தத்துடன் வாத்துக்கள் தன் குஞ்சு வாத்துகளுடன்  நீச்சல் குளத்தில் நீந்தி கொண்டிருக்க,     மீன் தொட்டிகளில் பல வண்ண மீன்கள் அங்கும் இங்கும் அசைப்பாடி கொண்டிருந்தது.சில குட்டி மீன்கள் தன் செவில்களை அசைத்து அசைய முயர்ச்சித்து கொண்டிருந்தது.

இந்த நீர் குளங்களுக்கு அடுத்த நான்கு ஊஞ்சல்கள் ஆடிக்கொண்டிருக்க,  பக்கத்தில் சர்க்கஸ்விட்டு விளையாட சிறிய அமைப்புகள் இருந்தது.   

ரோஸ், ரெட், ஓய்ட், மற்றும் ஆரஞ்ச் என பலபல வித வண்ணங்களில் வாசற்படியில் பூத்த டேபில்ரோஷின் வருகையில் மனம் முழக்க  ஆனந்தத்துடன் வாசற்படியில் நின்ற ஜோடிகளை ஆரத்தி எடுத்து உள் அனுப்பினார்கள் தேவசேனாவும், சித்ராவும்,சரண்யாவும். 

   உள்நுழைந்தவர்கள் வீட்டின் வடிவமைப்பை கண்டு மிரண்டு நின்றனர்.நான்கு மாடிப்படி கட்டுகள் வேறுவேறு திசைகளில் இருந்து ஒன்றாக டைனிங் டேபிள் அருகில்  வந்து முடிந்தது. 

    படிகட்டுகளின் வடிவமைப்பு நெழிவுசுழியாக வளைந்து வளைந்து இருக்க, அதற்கேற்பால் போல நேவி புளூ அண்ட் பிங்க் என  இருவகை கலரால் ஜொலித்தது.   

சமையலறை ஓடிச்சென்று பார்த்த பெண்கள், வாயை பிளந்து விட்டனர்.ஒரு குட்டி ஹால் போல அழகாக அடுக்கப்பட்ட சாமான்களுடன் சமையல் குறிப்பு புத்தகம் என்ற பெயரில் ஒரு நூலகத்துடன்  அது அமைக்கப்பட்டிருந்தது.   

பின் பெற்றோர்களின் ஆர்டர்படி ரூமில் நுழைந்தவர்கள் தங்கள் அறையை கண்டு சிலிர்த்து நின்றனர்.       ரூம் முழுக்க தங்களுது முகங்களே பதிந்திருக்க, அதனை இரசித்து விட்டு பால்கனியில் நுழைய, பல வண்ணத்து பூச்சிகள் அடைக்கப்பட்டு, பறக்க முயற்ச்சிக்கும் அவை வண்ணங்களால் அழகாக காட்சி அளித்து கொண்டிருந்தது ஒருபுறம்‌.

பலவகை வித்தியாசமான பூ மொட்டுக்கலுடன் சில சிறு  மொட்டுக்கள் இருக்க அதை ஆவலுடன் இரசித்தனர்.    நேற்று இரவிலிருந்து உறக்கம் காணாதவர்கள் சிறிது நேரத்தில் உறங்கிவிட, கண்ணிமைக்கும் நொடி பொழுதில் இரவானது.   

பின் இந்த இரவிற்காக பெண்களை ரெடி செய்து அனுப்பிவிட்டனர் பெரியவர்கள்.       தேவசேனா ,  மகிழுக்கு சில அறிவுரைகளை கூறி வழியனுப்பி வைத்தாள். பின் நான்கு ஜோடிகளை தவிர மீதமிருந்தோர் அனைவரும் அவர்களின் வீட்டிற்கு புறப்பட்டனர்.  

   நான்கு திசைகளிலும் படியேறிவர்களில் முதலாக ரூமிற்குள் நுழைந்த மகிழ் வம்சியை பார்த்த அடுத்த நொடி முகமெல்லாம் வேர்த்து கொட்டி கை,கால்கள் படபடவென தாளமாட, மயங்காத குறையாக நின்றாள்.   

   சண்டை மீளும் _____________________________________________     

1 thought on “17) மோதலில் ஒரு காதல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *