Skip to content
Home » 19.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

19.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இன்ஸ்பெக்டரிடம் அங்கு இருந்த அனைத்தையும் வீடியோ எடுத்த ஃபோன் மற்றும் சிசிடிவி புடேஜ்யில் தங்களை என்ன எல்லாம் செய்தான் என்பதற்கான ஆதாரம் அவனின் கம்பனி ப்ராடக்ட் எல்லாம் எப்படி உற்பத்தி ஆகிறது அதன் பின் இருக்கும் சூத்திரம் என்ன என்பதற்கான அத்தனை ஆதாரங்களையும் அவர் கையில் ஒப்படைத்தவள் தன் வாக்கு மூலத்தையும் கொடுத்தாள்.

“ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்ததும் உடனே ஆக்ஷ்சன் எடுத்த நீங்க கண்டிப்பா பணத்துக்கு விலை போக மாட்டீங்க என்ற நம்பிக்கையிலே தான் இதை எல்லாம் உங்கிட்ட கொடுக்கிறேன் இனி இவனுங்களை என்ன பண்ணனுமோ பண்ணுங்க சார் எங்களை ஆராய்ச்சி பண்ணி அவன் சேல்ஸ் பண்ணுற ப்ராடக்ட்யை வாங்குறவங்களுக்கும் அது பாதிப்பை கொடுக்க போகுது எல்லாத்தையும் சீக்கிரம் தடை பண்ண பாருங்க நீங்க அவனுங்களுக்கு எதிரா எங்கே சாட்சி சொல்ல கூப்பிட்டாலும் நான் வருவேன்…” என்றவள் அந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே செல்ல போக‌ அவளை இடை மறைத்து நின்றான் யாதவ்.

“செல்வி… செல்விமா என்கிட்ட பேசு ப்ளீஸ்‌… நான் பண்ணது தப்பு தான் என்னை இந்த ஒரு தடவை மன்னிக்க கூடாதா?…” என கெஞ்சிய படி தன் பின்னால் வந்தவனை திரும்பி பார்த்தவள் அவன் கன்னத்தில் பளீர் பளீர் என அறைந்தாள் கன்னம் சிவந்து போனது அவள் கொடுத்த அடியில் “மன்னிக்க கூடிய தப்பா பண்ணி இருக்க எத்தனை பேரோட வாழ்க்கையே வெறும் பணத்துக்காக இல்லாம பண்ணி இருக்க இப்படிப்பட்ட நீ‌ நாளைக்கு உன்னை நம்பி வந்தவளை எவனாவது ஒருத்தனுக்கு விற்க மாட்டேன்னு‌ விற்க மாட்ட என்ன அதான் உன்னை நம்பி காதலிச்ச என்னையே நல்லா நாடகமாடி அவனுக்கு வித்துட்டு தானே வந்த உன்னை நம்பினேன்டா என் கலரையும் தோற்றத்தையும் வெச்சு பேசினவங்களை மாதிரி நீ இல்ல எனக்காக என்ன வேணா பண்ணுவன்னு நம்பினேன் ஆனா கடைசியிலே கடைசியிலே அவங்களே விட கேவலமானவங்களா நீ எனக்கு தெரியிற ஏன் இப்படி கேடு கெட்ட புத்தி உனக்கு ச்சீ உன்னை பார்க்கவே சுத்தமா எனக்கு பிடிக்கலே தயவுசெய்து இன்னொரு தடவை என் முன்னாடி மட்டும் வந்திடா…”

“செல்வி ப்ளீஸ் செய்ததை குத்தி காட்டி பேசாத பண்ணது தப்பு தான் அதை உன் வாயாலே கேட்கிறப்போ நெஞ்சு வலிக்குதுடி ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுடி என்னை வெறுத்திடாதே ப்ளீஸ் என்னை வெறுத்திடாதேடி…” என அவள் காலில் விழ அய்யோ… என பதறி எல்லாம் அவனை தூக்கி விடவில்லை அவள் அந்த கலைச்செல்வி ஆழ்மனதோடு புதைந்து போனாள் இங்கு அவன் முன்பு நிற்பது ஏமாற்றம் துரோகத்தால் பாதிக்கப்பட்ட கலைச்செல்வி தன் காலை பிடித்து இருந்த அவன் கையை காலால் உதறி தள்ளிவிட்டு வெளியே வர அவளின் தாய் தந்தை மற்றும் ஸ்ரீ என மூவரும் காத்திருந்தனர்‌.

ஓடிச்சென்று மூவரையும் கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள் அப்போதைக்கு எதையும் அவளிடம் கேட்காமல் வீட்டுக்கு அழைத்து சென்றனர்‌ அவளை கல்யாணி சுந்தர் இருவரும் நன்றாக பார்த்துக் கொண்டனர் முகத்தில் தீக்காயம் போல் இருந்த காயத்திற்கு டாக்டரை சந்தித்து மருந்தை வாங்கி வந்து அவற்றை குணப்படுத்தினாலும் தழும்புகள் அப்படியே இருந்தது வீட்டில் இத்தனை நாள் பயன்படுத்திய அழகுசாதனப் பொருட்களை எல்லாம் கொண்டு போய் எரித்து சாம்பலாக்கினாள்.

டாக்டர் கொடுத்த மருந்தை மட்டும் பூசி தன்னை குணப்படுத்திக் கொண்டவள் ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட்டு உடல் பயிற்சிகளில் ஈடுப்பட்டு தன்னை பழையபடி மாற்றிக்கொண்டு காலத்தையும் நேரத்தையும் கடத்தியவள் முற்றிலும் பழைய கருப்பழகி கலைச்செல்வியாக மாறி இருந்தாள் சமூகத்தின் பல பேச்சுக்களுக்கும், நிறத்தை வைத்து ஆளை எடைப்போடும் பார்வையிலும் ஓடி ஒழிந்து அழுது கண்ணீர் வடித்த காலம் போய் ஆமாம் நான் இப்படி தான் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள் என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டு தைரியமாக இச் சமூதாயத்தின் முன்பு வலம் வந்து கொண்டு இருக்கிறாள்.

சியாங்கோவின் சட்டவிரோதமான செயல்கள் குறித்து இன்ஸ்பெக்டர் கேஸ் போட்டு கோர்ட்டில் நிறுத்தி இருக்க வழக்கு தொடர்ந்தது உரிய ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலம் என அனைத்து சாட்சியங்களோடு சியாங்கோவை கோர்ட்டில் நிறுத்தினார் இன்ஸ்பெக்டர் அதன் படி பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நீதி வென்றது.

சியாங்கோ செய்த குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது அத்தோடு அவனின் தொழில்சார் அனைத்து நிறுவனங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட வேண்டும் அந்த கம்பனி சார்ந்த பொருட்களை எல்லாம் எரிக்க சொல்லி கடைக்காரர்களுக்கும் உத்தரவு விதிக்கப்பட்டது அவனின் சொத்துகள் அனைத்தையும் பிரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது உடன் இருந்து வேலை பார்த்த யாதவ் செந்தில் இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் சிஎம்யின் பதவி பறிபோனதோடு அபராதமாக குறிப்பிட்ட தொகையையும் செலுத்த வைத்து நீதிமன்றம் களைந்தது.

கடைசி தீர்ப்பு அன்று அவன் ஆராய்ச்சி கூடத்தில் இருந்த அத்தனை பேரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர் ஒரு சேர ஜீப்பில் ஏற்றி சிறைச்சாலைக்கு கொண்டு செல்பவர்களை ஒருவித திருப்தியுடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

கொலை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல், மனித உடல் பாகங்கள் கடத்தல் என ஊர்‌ உலகத்திற்கு தெரிந்து நடக்கும் பல விடயங்களுக்கு மத்தியில் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அதை பரிசோதித்து பார்க்க மனிதர்களையே சோதனை எலியாக பயன்ப்படுத்துகிறார்கள் என்ற சம்பவம் கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது பல பேரை இப்படியும் நடக்குமா? என ஆச்சியத்திற்கு ஆழ்த்தியும் இருந்தது அதற்கான விடையாக இதோ இன்று அந்த பணப் பேய்களின் தொழில் யுக்திக்காக தங்கள் மேனியின் இயற்கை அழகை இழந்து நிற்கின்றார்களே இவர்களை பார்த்த பின்பும் நம்பாமல் இருக்க முடியவில்லை…

மீடியா காரர்கள் இவர்களை சூழ்ந்துகொண்டனர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆயிரம் கேள்விகளை எழுப்பினார்கள் அவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்தவளிடன் காதில் “பாதிக்கப்பட்ட நீங்க ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?..” என்ற ஒரு ரிப்போர்ட்டர் பெண்ணின் கேள்விக்கு சிறுதலையசைப்பை கொடுத்தவள்.

“ஒருத்தரோட நிறங்களை வைத்து அவர்களை குத்திக் காயப்படுத்தாமல் எல்லாரையும் சமமாக நடத்தினாலே இங்கு பாதி பிரச்சினை முடிந்திடும் வெள்ளையா, ஒல்லியா கொஞ்சம் சிவந்த தேகத்தோட இருக்குறது தான் அழகுன்னு இந்த சமூகம் நினைச்சிட்டு இருக்கு இந்த நினைப்பு எல்லாரோட மனசுலேயும் வேரூன்றி நிக்கிறதாலே தான் அதை இந்த சியோங்கோ மாதிரி ஆளுங்க பயன்படுத்திக்கிறாங்க அவனுங்க எல்லாம் முளைச்சு வர யாரு காரணம் இந்த சமூகம் தான் அது என்ன கருப்புன்னா அசிங்கம் வெள்ளைன்னா அழகுன்னு சொல்றது கருப்பா இருக்கிறவங்களை புதுசா பல பேரு வெச்சு கூப்பிட்டு அவங்களை மட்டம் தட்டி தட்டியே அவளுக்குள்ள வெள்ளையா இருந்தா தான் அழகுன்னு ஒரு எண்ணத்தை இந்த சமூகம் திணிக்கும் போது அவங்க மனநிலை அப்படியே மாறிடும் அதுலே அனுப்பப்பட்டவளா நானும் ஒருத்தியா இருக்கேன் கருப்பா இருக்கிற தேகம் பிடிக்காது ஆனா ப்ளேக் இஸ் மை ஃபேவரிட் கலர், கருப்பா இருந்தா என்ன அதுவும் அழகு தானே, கருப்பு ஒருவித தனியழகு, யார் என்ன சொன்னா என்ன நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு வகை வகையா விமர்சனம் சொல்லுற பல பேர் இங்கே சத்தியமாக கருப்பு தேகம் கொண்டவர்களாக இருக்க மாட்டாங்க கருப்பாக இருப்பவர்களிடம் போய் கேட்டு பாருங்கள் அங்கே தன்னோட கலர் தனக்கு பிடிக்கலே தனக்கு தன்னையே பிடிக்கலேன்னு, நான் கொஞ்சம் வெள்ளையா பிறந்திருக்கலாம்னு தான் சொல்லுவாங்க அதை சொல்லுறப்போ இருக்கிற வலி அனுப்பப்பட்டவங்களுக்கு மட்டும் தான் புரியும் மட்டம் தட்டி கேலி கிண்டல் இன்றி அத்தனை பேரையும் சமமா நடத்துற குணம் எல்லாருக்கும் வந்ததுன்னா இங்கே கலர், அழகுங்கிற வார்த்தை பல பேரோட வாழ்க்கையிலே பல இக்கட்டான சூழ்நிலையிலே இருந்து காப்பாத்திடும் நான் சொல்றதை பல பேர் பார்க்கலாம் கொஞ்சநாள் போனதும் அதை‌ மறந்து திரும்பவும் பழையபடி மாறலாம் அவங்களுக்கு எல்லாம் வலிக்கும் வரைக்கும் மற்றவங்களோட வலி எல்லாம் ஒரு தகவல் தான் அவர்களாக உணர்ந்து திருந்தினால் தான் மாற்றம் உண்டு இல்லையேல் இன்று நாங்கள் பாதிக்கப்பட்டது போல் நாளை உங்களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது எங்களை போல் பாதிக்கப்படகூடும்…” என்றவள்.

“எங்களை போன்று பாதிக்கப்பட்ட பலர் எங்காவது ஒரு மூலையில் இருந்து நான் பேசுவதை கேட்டு கொண்டு இருக்கலாம் அவர்களுக்காக சொல்கிறேன் கருப்பு என்பது ஒரு நிறம் அதை நீ ரசிக்கும் போது பிறர் சொல்வது உனக்கு குறையாக தெரியாது நீ நீயாக மகிழ்ச்சியாக இரு குறை சொல்லி கேலி கிண்டல் செய்யும் சமூகம் உனக்கு என்று ஒன்று வரும் போது உன்னை எப்போதும் தாங்கி பிடித்திடாது ஊர் வாயை மூட முடியாது அது ஏதோ ஒரு வகையில் பேசிக்கொண்டு தான் இருக்கும் அதை எல்லாம் புறக்கணித்து விட்டு உனக்கான வாழ்க்கையை உனக்காக வாழ்ந்திடு போதும்‌ இது போல பொருட்களை வாங்கும் போதும் பயன்படுத்தும் போதும் கவனமாக இருந்து கொள்ளுங்கள் முக்கியமாக பெண்கள்…” என நின்று நிதானமாக தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு அங்கிருந்து செல்ல அவளை தொடர்ந்து அந்தபாதிக்கப்பட்டவர்களும் பின் தொடர்ந்து சென்றார்கள்.

இடைப்பட்ட காலங்களில் என்ன என்னவோ நடந்து விட்டது அதில் படிப்பில் கவனம் சிதறி போனது தான் மிச்சம் நடந்தவை எல்லாம் புறந்தள்ளி விட்டு தனது படிப்பை தொடர்ந்தாள் அன்றைய டீவி உரையாடலுக்கு பிறகு வகுப்பில் இருந்த நிறைய பேர் மன்னிப்புக் கேட்டு அவளோடு சகஜமாக பேசி பழகினர் ஏன் பேராசிரியர்களின் மத்தியில் கூட மாற்றம் இருந்தது அந்த மாற்றம் எல்லாம் அவளுக்கு பெரிய ஆறுதலாகவே இருந்தது அதே நேரம் ஓரிருவர் அவளை வந்து சந்தித்து பேசினர்.

அவர்களை பார்க்கும் போதே ஏதோ புரிந்தது போல் விசாரிக்க கேலி கிண்டலின் தாக்கத்திற்கு உட்பட்டு அழகுசாதனப் பொருட்களை நாடி இருந்த அழகையும் இழந்த கதை தான் பாதிக்கப்பட்டு நான்கு சுவற்றுக்குள் முடங்கியவர்கள் மனதை தேற்றி புதிய ஒரு தெம்பு கிடைத்தவராக வெளி உலகிற்கு தலைக்காட்டி இருக்கிறார்கள் அவர்களோடு சகஜமாக பேசி சந்தோஷமாக வழியனுப்பி வைத்தவளுக்கு தாங்கள் செய்த ஒரு விடயம் பலரின் வாழ்க்கையில் இவ்வளவு மாற்றத்தை ஏற்ப்படுத்தி இருக்கிறதா? என நினைத்து நெகிழ்ந்து போனாள் மக்களுக்கு தான் அடிக்கடி மறக்கும் வியாதி இருக்கிறதே அதனால் இதை இப்படியே விடக்கூடாது என பல இடங்களில் இது தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறாள் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக நின்று அவர்களின் தனி திறமைக்கு ஊக்கம் கொடுத்து வருகிறாள் ஏனோ இவ்வாறான பணிகளை செய்யும் போது மனம் அளவிற்கதிகமான ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறது.

சியாங்கோ போன்று வேறு யாராவது இது போல இருக்கிறார்களா? போலியான அதிகளவில் பாதிப்பை தரக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்துகிறார்களா என்பதையும் கண்டுபிடித்து அதை இல்லாமல் ஒழித்த கதை எல்லாம் வேறு.

இரவு எனும் போர்வையை விரித்து மின்மினிப் பூச்சிகளை போல் ஆங்காங்கே ஓட்டிக்கொண்டு இருந்த நட்சத்திரங்களை ஜன்னல் வழியாக பார்த்தபடி இருந்தவளின் கைகளில் தவழ்ந்தது “அழகிற்கு ஏதடி வர்ணங்கள்…” என்ற தலைப்பில் தன்னுடைய வாழ்க்கை கதையை எழுதிய புத்தகம் வர்ணங்களில் ஏதும் அழகில்லை என்பதை உணர்த்தும் விதமாக எழுதிய இந்த புத்தகமும் அவள் வாழ்கை பாடங்களும் நல்ல படிப்பினைகளை கொடுத்திருந்தது அதேநேரம் அவனின் நினைவுகளும் தென்றல் காற்றை போல இடையிடையே கொஞ்சம் சீண்டி பார்த்து விட்டு சென்றவளுக்கு அவளை மீறி துளிர்க்கும் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை..

5 thoughts on “19.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்”

  1. CRVS2797

    ஆமா..! உண்மை காதல் அப்பப்ப வந்து கொஞ்சம் வலிக்க தானே செய்யும்.

  2. அருமை. . கலையின் வார்த்தைகள் உண்மையான கருத்து. .. உண்மையான காதல் சில வலிகளை தருவது தானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *