Skip to content
Home » 20.அழகிற்கு ஏதடி வர்ணங்கள் (இறுதி)

20.அழகிற்கு ஏதடி வர்ணங்கள் (இறுதி)

ஐந்து வருடங்களுக்கு பிறகு,

காலங்கள் உருண்டோட அதன் வழி பயணித்தவர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஸ்ரீ கலைச்செல்வியின் நட்பு காலேஜ் தொடங்கி இன்று ஒரே இடத்தில் வேலை செய்யும் நிலைக்கு வந்திருந்தது அன்று காலை வழமை போல வேலைக்கு வந்த ஸ்ரீயின் பார்வை தனக்கு முன்னால் வந்து வேலைப்பார்த்துக் கொண்டு இருந்தவளையே வட்டமடித்தது.

“இப்போ எதுக்கு என்னையே பார்த்திட்டு இருக்க வேலை செய்ற ஐடியா இல்லையா?..”

“இன்னைக்கு சீனியர் ரிலீஸ் ஆகுறாரு…” என்றவளின் பேச்சில் கீபோர்ட்டை தட்டிக்கொண்டு இருந்த விரல்கள் ஒரு நிமிடம் நின்று மீண்டும் தன் வேலையை பார்த்தது “உன் மனசுல இன்னும் அவரு இருக்காருன்னு தெரியும் அதே நேரம் சீனியர் மனசுலேயும் நீ இருந்தா என்ன பண்ணுறதா இருக்க கலை…”

“தேவையில்லாத பேச்சை விட்டு வேலையே பாரு ஸ்ரீ அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போனது திரும்ப அந்த உறவை புதுப்பிக்க எனக்கு விருப்பமில்லை இதைப் பத்தி இனிமே என்கிட்ட பேசாதே…”

“சரி மன்னிச்சிடுங்க கலைச்செல்வி உங்க விஷயத்துல இனி மூக்கை நுழைக்க மாட்டேன் ரியலி சாரி…”என்று விட்டு கோபமாக திரும்பிக்கொண்டவளை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் கலைச்செல்வி.

“கோபபடாதே பேபி அது உடம்புக்கு நல்லதில்லை…” என்றபடி அவள் மூக்கை கிள்ளி கன்னம் பற்றி கொஞ்சி முத்தமிட செல்ல “ச்சீ போடி அங்கிட்டு பப்ளிக் ப்ளேஸ்ல என்ன காரியம் பண்ண பாக்குற நீ ஆல்ரெடி கம்பெனிக்குள்ள என்னை உன்னையும் ஒரு மார்க்கமா பார்க்காங்க நீ எதையாவது செஞ்சு கன்போர்ம் பண்ணி தொலைச்சிறாதே கொன்னிடுவேன் ஓடிப்போயிடு…” என மிரட்டி அவளை தள்ளி விட்டு வேலையை பார்க்க கலைச்செல்வியும் சிரித்தப்படியே தன் வேலையை பார்த்தாலும் எண்ணங்கள் அவனை சுற்றியே வலம் வந்தது அதை வெளிக்காட்டாமல் இருக்க மிகவும் கடினப்பட்டாள்.

யாதவ் மற்றும் செந்தில் இருவரும் சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசித்தனர் இவர்களின் தலைவன் சியாங்கோ இன்னும் தண்டனை அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறான்‌ அழைத்து செல்ல வந்த தந்தையோடு வீட்டுக்கு சென்றான் பரம்பரை சொத்தான இருக்கும் வீட்டை தவிர வேறெதுவும் மிஞ்சவில்லை குளித்து முடித்து தாயின் கையால் உணவறிந்து விட்டு வெளியே வந்தவன் அடுத்து செய்த முதல் வேலை கலைச்செல்வி வேலை செய்யும் ஐடி கம்பெனிக்கு சென்றது தான்.

தந்தைக்கு விசுவாசமாக இருந்த இருவர் அவனை சிறைச்சாலையில் வைத்து பார்க்க வரும்போது எல்லாம் அவளை பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பான் அதுபடி தான் அவளின் சேவைகளும் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பது வரை அவனுக்கு அத்துப்படி வேலை நேரம் முடிந்து நண்பிகள் இருவரும் பேசியபடி வெளியே வர தன்னவளை கண்டு அவனின் முகம் பெளர்ணமி நிலவு போல் பிரகாசித்தது.

அவளை பார்த்த மகிழ்ச்சியில் நேரம் தாழ்த்தாமல் அவள் முன்பு போய் நிற்க இது யார்? போகும் வழியில் குறுக்கிடுவது என்ற சிந்தனையில் நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் திகைத்து விரிந்தன “செல்வி எப்படி இருக்க…” என கேட்டவனை கண்டு அதிர்ச்சி விலகவில்லை எப்போதும் முடியை திருத்தி க்ளீன் சேவ் எடுத்து பார்க்கவே ஹிந்தி ஹீரோ கணக்காக இருப்பவன் இன்று அடர்ந்த தாடியும் மீசையுமும் களைந்த முடியுமாக பார்க்கவே கொடூரமானவனாக இருந்தவனை கண்ட ஸ்ரீக்கு கூட அதிர்ச்சி தான் “ஆமா இவன் செஞ்ச காரியத்துக்கு இவனுக்கு க்ளீன் சேவ் ஒன்று தான் குறைச்சல் ஏதோ அவார்ட் வாங்கிட்டு வந்தவன் மாதிரி கெத்தா நிக்கிறதை பாரு…” என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் அவனை தள்ளிவிட்டு விட்டு விலகி நடக்க அவள் கையை பிடித்து தடுத்தான் யாதவ் நொடியில் அதை தட்டி விட்டவள் “சீன் க்ரியேட் பண்ணாதே…” என முறைத்து விட்டு நடந்து செல்ல அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன்‌.

“செஞ்ச தப்புக்கு தண்டனையும் அனுபவிச்சிட்டு வந்திட்டேன் இப்போவும் மன்னிக்காம இருந்தா என்ன அர்த்தம் செல்விமா…” என மெளனமாக கதறினான் அவனை திரும்பி பார்த்த ஸ்ரீக்கு பாவமாக இருந்தது ஆனால் அவள் திரும்பி பார்ப்பதை கண்டுகொண்டவள் “அங்கே என்ன பார்வை வா…” என அழைத்துக்கொண்டு சென்றாள்‌.

அவள் சென்றதும் யாதவ் வீட்டுக்கு சென்றான் சிறைச்சாலை சென்றவனுக்கு அவன் படிப்பை தொடர முடியாமல் போனது இருந்தும் தன்னம்பிக்கையை விடவில்லை கை கால் நன்றாக தானே இருக்கிறது சுயமாக உழைத்து சாப்பிடலாம் என்ற முடிவில் அவன் இருக்க அவன் தந்தையோ புது பிஸ்னஸ் தொடங்கலாம் வா என அழைக்க கையெடுத்து கும்பிட்டவன்.

“ஆளை விட்டிடுங்க நீங்க இழுத்து விட்ட பிரச்சினையிலே மாட்டிக்கிட்டு எனக்கு முக்கியமான எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறேன் நீங்க செஞ்ச வரைக்கும் போது சாமி விட்டிடுங்க எதுவா இருந்தாலும் இனி நான் பார்த்துக்கிறேன்…”

“அது இல்லடா இது…”

“ப்ளீஸ் என்னை தொந்தரவு பண்ணாதீங்க என் இஷ்டத்துக்கு விட்டிடுங்க இல்லையா நான் இங்கே இருந்து கிளம்பிடுறேன்…” என்றதோடு வாயை மூடிக்கொண்டார் அந்த முன்னாள் சீஎம்.

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அவள் எங்கெல்லாம் செல்வாளோ அங்கு எல்லாம் பின்தொடர்ந்து வந்து நின்றவன்‌ ஆயிரம் தடவை மன்னிப்பாவது கேட்டு இருப்பான் பெண்ணவளோ இறங்கி வருவேனா என முறுக்கிக்கொண்டு திரிந்தாள் ஒரு மாதம் தன் பின்னே சுற்றிக்கொண்டு இருந்தவனை இரண்டு நாட்களாக காணவில்லை அவளையும் மீறி காதல் கொண்ட மனம் விழி வழியே சுற்றும் முற்றும் தேட செய்தது அதை கண்டுக்கொண்டே ஸ்ரீ விசாரிக்க மழுப்பலான பதிலை கொடுக்க அவளறியாமல் சிரித்துக் கொண்டாள் ஸ்ரீ.

இதுவே ஒரு மாதத்திற்கு தொடர அவன் மேல் கோபம் கோபமாக வந்தது அன்று அதே போல் வேலை முடித்து வெளியே வரும்போது தேடிய விழிகளில் விழுந்தான் செந்தில் அவனை கேள்வியாக பார்க்க “உன்னோட கொஞ்சம் பேசணும் மா…” என தயங்கி நின்றவனை பார்த்து விட்டு வாங்க… என்று எதிரே இருந்த பார்க்கில் நுழைய அவளோடு வந்து அமர்ந்தவனிடம் “இப்போ என்ன பொய் சொல்ல போறீங்க…” என்ற கேள்விக்கு அமைதியாக “நான் பொய் சொல்ல வரலே உண்மையை சொல்ல தான் வந்தேன் சியாங்கோ கொடுத்த வேலைப்படி உன்னை ஏமாத்தினது உண்மை தான் ஆனா அதுலே முழு மனசோட எந்த வேலையும் யாதவ் பண்ணலே அவன் உங்களை உண்மையா காதலிக்கிறான் உங்களை உடனே கூட்டிட்டு வர சொல்லி சியாங்கோவோட தொல்லை நாளுக்கு நாள் அதிகமாச்சு ஆனா யாதவ் அதை தள்ளிப்போட்டுக்கிட்டே இருந்தான் அவனை ஏமாத்துறதா நினைச்சிட்டு தான் அன்னைக்கு பைக்ல போறப்போ ஆளை ஆக்ஷ்சிடன் பண்ணினான் ஏன் நீயும் தானே ஹாஸ்பிடல் வந்து பார்த்தியே அவன் நிலமையே…” என்றவன் அன்று அவளை விட்டு வந்த நேரம் நடந்ததையும் யாதவ் ஹாஸ்பிடலில் இருக்கும் போது தன்னிடம் பேசியதை கூறினான்.

“அவன் ஒரு விஷயத்துக்கு ஆசைப்பட்டதுன்னா அது நீதான் இந்த தொழில் கூட அவனா விரும்பி ஏத்துக்கிட்டதில்லை அவங்க அப்பா பண்ண டார்ச்சர்ல தான் ஒத்துக்கிட்டான் ஜெயிலுக்குள்ள கூட எந்நேரமும் உன் நினைவா தான் இருப்பான் எங்களை பார்க்க வரப்போ எல்லாம் இந்த அஞ்சு வருஷத்துல அவனை புரிஞ்சுக்கிட்டு ஒருநாள் நீ வந்து பார்க்க மாட்டீயான்னு ஏங்குவான் ஆனா கடைசி வரைக்கும் நீ வரலே ஆளுங்க மூலமா விசாரிப்பான் அவங்க உன்னை ஃபாலோவ் பண்ணி எடுத்து வர போட்டோவை பார்த்து சந்தோஷப்பட்டுக்குவான் இதை எல்லாம் உன்கிட்ட சொல்ல காரணமே இதுக்கு மேலேயும் உனக்காக ஏங்கி அவன் கஷ்டப்படுறதை என்னாலே பார்த்திட்டு இருக்க முடியலேங்கிற ஒரு காரணத்துக்காக தான் முடிஞ்சு மன்னிச்சு அவனை ஏத்துக்கோ கடைசி வரைக்கும் கண்கலங்க விடாம பார்த்துக்குவான்…” என அவன் பேசும் வரை அமைதியாக இருந்தவள்.

“அஞ்சு வருஷம் காத்திட்டு இருந்தவரு இந்த ஒரு மாசம் எங்கே போனாரு?..” என்றவளுக்கு அவன் வராத கோபம் தான் கடுப்பை கிளப்பியது.

“அதை நீயா தெரிஞ்சுக்கோ நானே சொன்னா இன்னும் உனக்கு அவன் மேல நம்பிக்கை வராது ஏதோ சிம்பதி க்ரியேட் பண்ணுற மாதிரி இருக்கும் வரேன்…” என்றவன் விடைப்பெற்று செல்ல சிறிது நேரம் அங்கிருந்தவள் பின்னர் வீடு நோக்கி சென்றாள்.

மாத சம்பளத்தின் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு ஏதாவது ஆசிரமம் அரசு பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லம் என செல்லும் பழக்கமுடையவள் அதே போல் அன்று ஒரு இடத்திற்கு சென்றாள் அவள் வந்து நின்றது ஊனமுற்றோர்களுக்காக அமைக்கப்பட்ட ஆசிரமம் அது.

அவளுக்கு நன்கு பழக்கமுடைய அந்த ஆசிரமத்தின் நிர்வாகியோடு பேசிவிட்டு குழந்தைகளை சந்திக்க வந்தாள் ஆனால் அவர்கள் யாரையும் காணவில்லை அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் விசாரிக்கும் போது பின்னால் அமைக்கப்பட்டிருக்கும் தோட்டத்தில் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்ல சரியென்று தோட்டத்தை நோக்கி நடந்தவளின் காதுகளில் பிள்ளைகளின் சிரிப்பு சத்தமும், கைதட்டல் சத்தமும் தேனாக பாய்ந்தது குழந்தைகளை நெருங்கி போய் பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை யாதவ் அந்த குழந்தைகளின் மத்தியில் அமர்ந்து கொண்டு அவர்களுக்கு விளையாட்டு காட்டியபடி அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு இருந்தான்.

அதே நேரம் நிர்வாகியும் அங்கு வந்தவர் கலைச்செல்வி நிற்பதை கண்டு புன்னகையுடன் “புதுசா வேலைக்கு வந்திருக்குற தம்பி குழந்தைகளை பார்த்துக்க ஆள் வேணும்னு பேப்பர்ல நிவ்ஸ் குடுத்து இருந்தேன்மா அதை பார்த்திட்டு‌ வந்தாரு அவரை பத்தின உண்மை எல்லாம் சொன்னதுக்கு அப்பறம் கொஞ்சம் தயக்கமா இருந்தது ஆனாலும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்னு‌ தோனிச்சு பழகி பார்த்ததுல தெரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தங்கமான பையன் அவங்களை பார்த்துக்கிறது மட்டுமில்ல அவங்களுக்கு‌ புரியிற மாதிரி படிச்சும் கொடுக்குறாரு தெரியுமா வாம்மா நான் உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்…”

“இருக்கட்டும் ஐயா அவரு எனக்கு தெரிஞ்சவரு தான்‌…” என்றவள் திரும்ப அக்கா என குழந்தைகள் ஆர்ப்பரிக்க திரும்பி‌ அழகாக புன்னகைத்தவளை கண்டு மெய்மறந்து நின்றான் யாதவ் தான் வாங்கி வந்த உணவு பண்டங்களை அவர்களுக்கு கொடுத்து உண்டவளின் கண்கள் ஓரக்கண்ணால் அவனை பார்க்க தவறவில்லை குழந்தைகளுக்கு சாப்பாடு பரிமாறுவதில் இருந்து அனைத்தையும் செய்து அவர்களை வழி நடாத்திக்கொண்டிருந்தவனின் செயல்களில் உண்மை தன்மை இருப்பது நன்றாகவே தெரிந்தது குழந்தைகளுக்கான ஓய்வு நேரம் வர அனைவரும் சென்று விட தோட்டத்தில் நின்று கொண்டு இருந்தவளை நெருங்கி வந்தான் யாதவ் செல்விமா‌… என்றவனை பாராமலே அவன் மார்பில் தஞ்சமடைந்தாள்‌.

“எப்பவும் இப்படியே இருப்பீங்களா திரும்பவும் ஏமாத்திட மாட்டீங்களே ஏன்னா இன்னொரு தடவை ஏமாற்றத்தை தாங்குற அளவுக்கு சக்தி இல்லை என்னாலே சத்தியமா தாங்கிக்க முடியாது….” என்றவளை இறுக அணைத்துக் கொண்டவன் உச்சந்தலையில் அழுத்தமாக முத்தமிட்டான் கேள்விக்கான பதிலை வாய் விட்டு சொல்லாமல் ஒற்றை முத்தத்தில் சொல்லி விட்டான் யாதவ் ஐ லவ் யூ… என்றவளை கண்களில் நீர் கோர்க்க பார்த்தவன் “பண்ணது தப்பு தான் திருந்திட்டேன் அதை யாரு நம்புறாங்களோ அதை பத்தி எனக்கு கவலையில்லை என்னை பொறுத்தவரைக்கும் நீ என்னை நம்பினா போதும் லவ் யூ டூ என்னை மன்னிச்சிடுமா…” என்றவனின் விரல்கள் அவளின் முகத்தில் இருந்த காயத்தை வருடியது குற்ற உணர்வோடு அதே நேரம் மகிழ்ச்சியாக தன்னவளின் காதல் மீண்டும் அப்படியே கிடைத்ததில்…

தவறு என அறிந்து செய்யும் பல விடயங்கள் தன் வாழ்க்கையே தலைகீழாக மாற்றக்கூடும் அதற்காக ஒரிடத்திலே முடங்கி போய் அமர்வதை விட அம் மாற்றத்தை நல்ல விதமாக எடுத்து செல்ல பல வழிகள் இங்கு இருக்கிறது அம் மாற்றத்தின் பயன் நாம் எதிர்பாராததை விட அதிகம் கிடைக்க கூடும் வர்ணங்கள் பல விதம் அது போல் தான் அழகும் நேரத்திற்கு தகுந்தது போல் மாறும் சமூகத்திற்காக தன் இயல்பை மாற்ற நினைத்தால் விளைவுகள் என்னவோ நமக்கு தான் புறத்தை விட அகத்தின் அழகு என்றும் ஒரு தனியழகு என்பார்கள் கலைச்செல்வியின் நிறத்தை புறக்கணித்தவர்களின் மத்தியில் அவளின் அகத்தின் அழகு இன்று அன்பான காதலையும், உண்மையான நட்பையும் கொடுத்திருந்தது புறக்கணித்தவர்கள் மத்தியில் தான் தனித்தவள் என்பதை சொல்லாமல் வாழ்ந்து காட்டுகிறாள் அவளை போல் பாதிக்கப்பட்டவர்களையும் வாழ வைக்கிறாள் அவளின் பணிகளும் மகிழ்ச்சியும் என்றும் தொடரட்டும் என வாழ்த்தி நாமும் விடைப்பெறுவோம்…

முற்றும்.

ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றிகள் பல தொடர்ந்து உங்களது விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன் படித்துவிட்டு உங்கள் கமெண்ட்யை தந்து விட்டு செல்லுங்கள் ரீடர்ஸ் 🥰

5 thoughts on “20.அழகிற்கு ஏதடி வர்ணங்கள் (இறுதி)”

  1. CRVS2797

    பரவாயில்லை.. கலைச்செல்வி மன்னிப்போம், மறப்போம்
    வழியை அழகா ஃபாலோ பண்றவ போலயிருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *