மோதலில் ஒரு காதல்
மூன்று வருடத்திற்கு பின்,
‘பாக்கு வெத்தலை மாத்தி முடிச்சு, பையன் வந்தாச்சு, பூவ கொடுத்து சேல மடிச்சு, பொண்ணு வந்தாச்சு…. கண்டத பேசி டைம் வேஸ்ட் பண்ணாத பையன் தங்கம் மிஸ்ஸே பண்ணாத’ என்ற பாடலில் அந்த கல்யாண மண்டபமே களைக்கட்டியது.
மகிழ், தன் வருங்கால காதல் கணவனின் செயல்களை எண்ணி எண்ணி வெட்க மழையில் தோகை விரித்து ஆடும் மயிலாக விரிந்திருந்தாள். ஆனந்த கடலில் முத்துக்களை எடுத்து கொண்டிருக்க, அவளது அறையின் உள்ளே நுழைந்த வம்சியின் மணமகனுக்குரிய மாப்பிளை கம்பீரத்தை கண்டு வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தவளை கிள்ளி அவளை சுவற்றோடு சுவராக ஒட்டி இரு கைகளை அணையாக கட்டி, அவள் மூச்சு விடக் கூட முடியாத அளவுக்கு நெருங்கிய வசி என்ற வம்சிகிருஷ்ணன், மேலும் அவளை நெருங்கி அவளது இதழ் நோக்கி பார்வை வீசியவனை காண முடியாமல் கண்ணை இறுக மூடி கொண்டாள்.
அவளிடம் “என்ன மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கிங்க போல”. என வம்சி கேட்க, கண்ணை திறந்து அவனை முறைத்து “ஆமா சார் அதுல உங்களுக்கு என்ன டவுட் ” என கேட்ட மகிழை சன்னமாய் சிரித்து கவிழ்த்து விட்டு, “அதுக்கான ரீசன் தெரிஞ்சிக்கலாமா?”னு கேட்டேன் என்ற வம்சியை “இந்த மாங்காமடையனுக்கு அறிவு இருக்குதா ? இல்லையா? கல்யாண நாளில் என் வாய வேற கிளறுறான் என நினைத்து, ” என்ன சார் நக்கலா?” என மகிழ் நக்கலாக கேட்டாள்.
“இல்ல கொஞ்சம் விக்கல்”.. தண்ணீர் கிடைக்குமா என மகிழின் இதழை பார்த்து கூறியவனை காண முடியாமல் கண்ணை இறுக மூடிக் கொண்டு,
“என் அன்பு காதலனுடன் இன்று எனக்கு திருமணம் .
அதாவது மகிழினிகிருஷ்ணன் மகிழினிவம்சிகிருஷ்ணனாகும் தருணம். அதான் இப்படி என கூறிய மகிழிடமிருந்து விலகி நின்ற வம்சி என்னது காதலனா? அதும் அன்பு காதலனா?” என ஒரு ஏளன பார்வையுடன் கூறி முடித்தவன் சத்தமாகவே சிரித்தான்.
என்ன வசி எப்ப பார்த்தாலும் விளையாட்டு தானா? என அவனை நெருங்கியவளை “ச்சீ , கிட்ட வராத” என கூறி அவளது கன்னத்தை பதம் பார்த்தான்.
அப்போது மாப்பிள்ளையை அழைத்து வருமாறு ஐயர் கூற, வம்சியை தேடி சென்று அங்கு இல்லாததால் தலையில் அடித்து கொண்டே மணப்பெண் அறைக்கு வந்த மற்றொரு மாப்பிள்ளையான கௌரி , “ஏன்டா இன்னும் ஒரு ஹாஃப் ஹவர் பொறுத்துக்க மாட்டாயா?” என்று கத்திய கௌரியையும் பளார் என அறைந்தான் வம்சி.
அப்பறம் தான் மகியான அவனது பால்டப்பாவை கண்டு நெஞ்சடைத்து நின்றான் கௌரி. “என்ன மச்சி சொன்ன உன் பால்டப்பா ச்சீச்சீ உன் தங்கச்சி” என்றவனை ‘இவனுக்கு எப்படி தெரிந்திருக்கும்? மகிழ் எனது தங்கை’ என யோசித்து முழித்தான்.
( 😵 இந்த முழிக்கு ரீசன் புரிஞ்சிடுச்சா ப்ரண்ட்ஸ் அதான்பா ஃப்ளாஷ் பேக்)
__________&_____________&__________&_______
மூன்று வருடங்களுக்கு முன்பு
“என்னடி ரொம்ப நடிக்கிற” என்று கருத்தரங்கு கலைந்த நிலையிலும் எழுந்து போகாமல் அழது கொண்டிருக்கும் மகிக்கிட்ட வந்து “என்ன நான் சொன்ன மாதிரியே செத்துட்டு இருக்க போல” என நக்கலாக கேட்டாள் சுமித்ரா.
எழுந்து நின்ற மகிழ் “ஷ்ஷ் சத்தமா பேசாத உன்ன கடத்திட்டு போய்டு வாங்க” என அவளது பழைய நிலையை உணர்த்தினாள். “ஏய் இன்னும் உன் திமிர் அடங்கவே இல்ல போல தெரியுது” என கேட்டு கொண்டே வந்தான் வம்சி .
“சார் இவள நம்பாதிங்க இவள் எவ்வளவு பெரிய பிராடு தெரியுமா சார்?” என கேட்ட மகிழை பளார் பளார் என அறைந்தான். “என்ன சார் சும்மா சும்மா சப்சப்புனு அடிச்சிட்டே இருக்கிங்க. நீங்க அடிக்க நான் என்ன உங்க பொண்டாட்டியா? இதுக்கு மேல கை வஞ்சிங்க திருப்பி நான் அடிச்சிடுவேன் பார்த்துக்கோங்க” என அழுத குரலில் திக்கி கொண்டே மிரட்டி சென்றாள்.
அவளையே ஆழந்து பார்த்தவனை பளாரென அறைந்த கௌரியை ஏன் அடித்தாய் என்ற ரீதியில் பார்த்தான். “என்னடா ஓவரா பண்ற. எதாவது சொல்ல வந்தா கேட்குறையா, உன் இஷ்டத்துக்கு பண்ற பெரிய வில்லனு நினைப்பா. அந்த பொண்ண ஏன் இப்டி டார்ச்சர் பண்ற, அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு நான் சொல்ல வரதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்” என கத்தினான்.
“பால்டப்பா மேல எந்த தப்பும் இல்லடா புரிஞ்சுக்காடா ப்ளீஸ்”- கௌரிசங்கர்.
என்னடா அண்ணா சொல்ற , ” வம்சியோட பாட்டி கோமாக்கு போக காரணமானவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க”, பாவம் வசிடா. நீ இவனுக்கு தான் சப்போர்ட் பண்ணனும் நீ என்னடான்னா அந்த மகிழுக்கு ஆதரவா பேசிட்டு இருக்க’ என கூறிய சுமித்ராவை “அடச்சீசீ இதுக்குலாம் நீதான் காரணமாக இருக்கும்னு நான் அப்பவே நினைச்சேன்” என்று எகிறினான் கௌரி. எ”ப்பவும் போல அவள பழி வாங்க இன்னும் நீ துடிக்கிறதான” என படாரென கேட்ட கௌரியை , “சுமி உனக்கு தங்கச்சியா மச்சி “என்று வம்சி கேட்டான்.
“ஆமா வம்சி இவன் எனக்கு தான் அண்ணா ஆனால் எப்பவும் எங்கிட்ட வந்து பேசவே மாட்டான். இதுக்கும் அந்த மகிழ் தான் காரணம் வசி” என கூறினாள்.
“அதான்ன் பார்த்தேன் அந்த மேடம் எப்பவும் அடங்க மாட்டாளே, அவளுக்கு நீ சப்போர்ட் வேற போடா நீயும் உன் நீலிக்கண்ணீர் பால்டப்பாவும், அந்த பால்டப்பா யாருடா உனக்கு?. இது வம்சி
“அது….அது அவ என் ப்ரண்ட் அவ்ளோதான். ஆனால் இவள் கெட்டவள் மச்சி” என்று சுமித்ரா வை காட்டி கூறியவன் “அது நல்லா எனக்கு தெரியும். நீயும் கடைசியா ஃபீல் தான் பண்ணப்போற அவள நம்பாத வம்சி அவள் சரியான ஃப்ராடு” என மகிழ் கூறியதைப் போல கௌரியும் சுமித்ராவை பற்றி தவறாக கூறியதால் “செம்ம பிளானோட இரண்டு பேரும் களம் இறங்கி இருக்கீங்க போல” என வம்சி மனதுடைந்த குரலில் கூறினான்.
“என்னடா சொன்ன என்னச் சொன்ன அட்லீஸ்ட் ஐந்து நாள் பழகுனவளுக்காக என்ன இப்டி பேசுறயேடா” என அழுத குரலில் மனம் வெம்பி கூறிய கௌரியை அணைத்து , “சரி என் பாட்டியோட நிலைமைக்கான காரணத்தை சொல்லு” என உலுக்கினான் வம்சி.
“எனக்காகவே வாழ்ந்த என் பாட்டி இப்ப என் கூட பேசவே மாற்றாங்க கௌரி. பாட்டி திரும்ப வருவாங்க மச்சி நீ கவலைப்படாத” என கூற, “ம்ம்” என்ற ஒற்றை வார்த்தையை பதிலாக கொடுத்தான்.
“வம்சி அன்னைக்கு கல்யாண மண்டபத்துல நீ நான் அப்புறம் என் ப்ரண்ட் மகிழ் , அவ ப்ரண்ட்ஸ் ப்ரியா ரேணுகா எல்லாம் விளையாடிட்டு இருந்தமே நியாபகம் இருக்கா,, ( சின்ன ஃப்ளாஷ்பேக் ப்ரண்ஸ்)
“ம் இருக்கு அதை எப்படி மறப்பேன், அந்த பங்சன் தான் நான் கடைசியாக கலந்து கிட்ட பங்சன்டா. அப்புறம் காலேஜ் அப்புடி இப்படின்னு போய்டு இருக்கு. ஆமா அதே தான்டா உன் பாட்டியோட வந்தயே , அந்த சீர் பங்சன் முடிஞ்ச உடனே நீ உங்க அப்பா அம்மாவோட ஊருக்கு போய்ட்ட அன்னைக்கு தான் பாட்டிக்கு இப்படி நடந்தது.
சீர் பொண்ணான ப்ரியாவை கடத்த அங்கு ஒரு பத்து பேர் வந்தாங்க, எல்லாரும் தடிமாடு மாதிரி இருப்பாங்க , அந்த பொண்ண தூக்கிட்டு தப்பிக்க பாத்தவங்களை நம்ம பாட்டி தான் தடுத்தாங்கள். நாங்களும் முடிஞ்ச ஹெல்ப் செய்தோம்.”
இருபது நிமிடமாக நடந்த சண்டையிறுதியில் பாட்டி வயிற்றிலிருந்த குத்து விளக்கை பிடிங்கி கொண்டிருந்தாள் மகிழ்.
“அப்ப அவதான் என் பாட்டி நிலைமைக்கு காரணம்? அவளுக்கு நீ ஏன்டா மச்சி சப்போர்ட் பண்ற? என வம்சி கேட்டான்.
உன் பாட்டி தான் சொன்னாங்க.” அவங்க அந்த கடைசி நொடியிலையும் மகிழக்கு துணையாக இரு. அவள் எந்த தவறம் செய்யவில்லைனு சொன்னாங்க” என தனக்கு தெரிந்த விஷயத்தை தன் நண்பனிடம் சொல்லி முடித்தான் கௌரி .
கலங்கிய கண்களுடன் “மஞ்சு எங்கிட்ட வந்திடு” என கதறினான் வம்சி. உன் நிலைமைக்கு யாரு தான் காரணம்? என கதறினான். கௌரி கலங்கிய நிலையில் வம்சியை அணைத்து கொண்டான். மகிழுக்கும் அவனது நிலையை கண்டு கண்கள் கலங்கின…மனது மாறிவிட போகிறான் என்று சுமித்ரா மட்டும் வில்லங்க தனமாக யோசித்தாள். பின் போட்டு வைத்த நாடகம் சொல்லிய பொய்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமோ என்ற பயமும் தொற்றி கொண்டது அவளை.
எதற்கு எடுத்தாலும் கத்திவிட்டு பின்னை யோசிக்கும் வம்சி இப்பொழுது அழுது கொண்டிருப்பதை பார்த்து மகிழினியால் தாங்க இயலவில்லை… இருந்தும் தன் மீது தவறு சொல்பவனிடம் தான் என்ன சொல்லி புரிய வைப்பது என்று அமைதி காத்து நின்று கொண்டிருந்தாள்… மேடையில் இருந்து ஓடி வந்த பிரியாவும் அப்போது என்ன நடந்தது என்பது போல கேட்க அனைத்தையும் சொல்லி முடித்தால் மகிழ். “பாட்டியோட நிலைக்கு காரணம் நம்ம இல்லன்னா அவனுக்கு புரிஞ்சா மட்டும் போதும் மகி பார்க்கலாம்… அப்படி இல்ல என் தாத்தா சொன்னது தான் பெருசுன்னு சொன்னானா ஷேர் பண்ணாத வா போகலாம்.” என்று மகிழினை அழைத்துச் சென்று விட்டாள் பிரியா.
எப்படியாவது மகிழன் உண்மைத்துவத்தை புரிய வைத்துவிடலாம் என்று துடித்த கௌரியும் மகிழின் முகத்தை கிழித்தெறிய வேண்டும் என்ற ஆசையோடு சுமித்ராவும் எதிரெதிர் புறமாக ஒருவரை ஒருவரை முறைத்துக் கொண்டு நின்றார்கள்.
மோதல் குறைய காதல் தொடங்கும் தருணம்.
சண்டை மீளும்
கௌசல்யா வேல்முருகன் 💝
அட…அப்ப வம்சி பாட்டியோட நிலைமைக்கு சுமித்ரா தான் காரணமில்லையா…???
❤️❤️❤️❤️🫰