அத்தியாயம்-10
அவசர அவசரமாய் வீட்டுக்கு வந்த மலருக்கு வேலைப்பளு கழுத்தை நெறித்தது. தந்தைக்கு உணவை ஊட்டிவிட்டாள். அதன் பின் மூச்சு விட நேரமின்றி வளர்த்த பசு கத்தி கூச்சலிட்டது.
அதற்கு பிரசவ வலி என்பதால் கத்திக்கொண்டேயிருந்தது. மலரிடம் மூன்று பசுக்கள் உண்டு. ஒரு பசு மூன்று மாதம் முன் குட்டி ஈன்றது. அப்பொழுது கால்நடை மருத்துவர் ஊரில் இருந்தார்.
இது மற்றொரு மாடு. இந்நேரம்
கால்நடை மருத்துவரும் ஊரில் இல்லை. அதனால் நேரத்தை கடத்தாமல் 1962 என்ற நம்பருக்கு அழைத்தாள்.
அதுவொரு கால்நடை சேவை மையம். வீடு தேடி கால்நடை மருத்துவர்கள் வந்து வைத்தியம் பார்ப்பார்கள்.
அப்படி தான் உடனடியாக மருத்துவம் பார்த்திட கால்நடை மருத்துவர் வந்து பசுவையும் கன்றையும் காப்பாற்றினார்.
“ஏம்மா.. இந்த நம்பருக்கு போட்டா, வீடு தேடி கால்நடை மருத்துவம் பார்க்க வருவோம்னு யார் சொன்னா?” என்று பேசியபடி கன்றுக்குட்டியை தடவினார்.
“பேப்பர்ல படிச்சேங்க. தனியா அப்பாவை விட்டுட்டு வேலைக்கு போறேன். அந்த நேரம் என் குலத்தை செழிக்க வந்த மகாலட்சுமிக்கு பிரசவ வலி வந்துட்டா யாருங்க சார் பார்க்கறது.
இங்கிருந்த கால்நடை மருத்துவரிடம் கூட ஒருதடவை விசாரித்தேன்.
அவர் போன் போட்டு கண்டிஷனை சொன்னா வருவாங்கம்மானு சொல்லிருந்தார். அதான்… இந்த நம்பருக்கு போட்டு பசுமாடு பிரசவ வலியில் இருக்க நேரம் கடத்தாம போன் போட்டேன். நீங்களும் வந்துட்டிங்க.” என்று டீ போட்டு கொடுத்தாள்.
டீயை பெற்றுக்கொண்டு தேங்க்ஸ்மா.” என்றவரிடம் சீமப்பால் வீட்ல குடிப்பிங்கன்னா கொடுத்து விடவா டாக்டர் சார்?” என்று கேட்க, இதெல்லாம் வேண்டாம்னு எந்த மடையனாவது சொல்வானாம்மா. கொடும்மா கொடும்மா.” என்று வாங்கிக்கொண்டார்.
அதன் பின் இன்று பூப்பறிப்பதை தவிர்த்துவிட்டு மாட்டுக்கு தீவனம் எல்லாம் கவனித்துவிட்டு பாலை ஊற்ற சென்றாள். கூடவே நன்றாக பழகும் சிலருக்கு சீமபாலை தரவும் எடுத்துக்கொண்டாள்.
அதில் அரசனுக்கும் எடுத்து சென்று ஊற்ற காலிங் பெல்லை அழுத்தினாள். கதவு திறந்திருந்தது.
பால் ஊற்றியபடி, “சீமபால் இருக்கு வேண்டுமா?” என்றாள்.
“இந்தப்பாலே போதும்ங்க” என்றான்.
மலருக்கு இவனுக்கு சீமபால்னா என்னனு தெரியுமோ தெரியாதா?’ என்று “சார் மாடு கண்ணு போட்டுயிருக்கு. சீமாபால் கருப்பட்டி போட்டு குடிச்சா டேஸ்டா இருக்கும். பாலாடை கட்டி மாதிரி…” என்றதும் அரசனுக்கு லேசாக புரிந்தது.
“இந்த தி.நகர், தாம்பரம் துணிக்கடைக்கு பக்கத்துல டம்ளரில் இனிப்பு பாலாடை கட்டி மாதிரி விற்பாங்களே அதுவா?” என்றான்.
“ஆங்… அது மாதிரி தான். ஆனா கருப்பட்டி போட்டா டேஸ்ட் அள்ளும். நான் காசுக்கு தரலை. சும்மா தான் தர்றேன், தெரிந்த வீட்ல கொடுக்க கொண்டாந்திருக்கேன்” என்று நீட்டினாள்.
அப்பொழுதும் வாங்க மறுத்து “எனக்கு அதெல்லாம் செய்ய தெரியாதுங்க” என்றதும் “ஓ அப்படியா” என்று விட்டுவிட்டாள்.
போகும் பொழுது விக்கியை கவனித்தாள். சின்ன பையன் மட்டும் இருக்கான் போல, மத்தவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க’ என்று தன் வேலையை கவனித்தாள்.
மற்ற வீட்டுக்கு எல்லாம் பால் ஊற்றி முடித்து, வீட்டுக்கு வந்தாள்.
இரண்டு முறை அரசன் அழைத்து விட்டதாக தவறிய அழைப்பு சுட்டிக்காட்டியது.
“மிஸ்ட் கால் இருக்கு? என்னவாம் இவருக்கு” என்று அழைத்தாள்.
“ஹலோ.” என்று அழைக்க, “சாரிங்க.. தப்பா எடுத்துக்காதிங்க.. உங்கப்பாவிடம் நான் பேசணும்.” என்றான்.
‘அப்பாவிடமா? எதுக்கு பேசணும்? ஒரு வேளை நம்மிடம் பேசறது போதாதுனு நேரா அப்பாவிடம் பொண்ணு கேட்க நினைக்கறாரா?’ என்று, “எதுக்கு? நான் உங்களை பத்தி எந்த அபிப்ராயமும் சொல்லலையே” என்றாள்.
“நீ சொல்லவேண்டாம்… நான் அதுக்காக உங்கப்பாவிடம் பேச விரும்பலை.
உங்கப்பா வீட்டுக்கு வந்தப்ப என் வீட்ல ஆட்கள் நிறைந்து இருந்ததா சொன்னார்ல. உங்க அப்பா கண்ணுக்கு அவங்க எல்லாம் தெரிந்தாங்களா?” என்று கேட்டான்
‘லூசா இவரு அதான் வீடு முழுக்க ஆட்கள் இருந்தாங்களே’ என்று குழம்பினாள்.
“என்ன உலறுர?” என்றாள் மலர்.
“ப்ளீஸ் நான் உலறலை. உன்னிடம் எப்படி சொல்லறது? எங்க வீட்ல தினமும் 4 டூ 5 கல்யாண வீட்ல இருக்கற மாதிரி ஆட்கள் நடமாடறாங்க. ஆறு ஆனதும் எல்லாரும் மறைஞ்சிடறாங்க” என்றான்.
“யோவ்… தமிழே என்னயென்ன பைத்தியம்னு நினைச்சியா? என்னிடம் பேச இஷ்டத்துக்கு கதைவிடற” என்றாள்.
“ஏய் தமிழ்… நிஜமா கதை விடலை. இங்க வந்ததிலருந்து இது நடக்கு. தினமும் கல்யாண வீட்டு கும்பல் மாதிரி நிறைய பேர். பால் ஊத்தற பொண்ணு வந்து போனதும் மறைஞ்சிடறாங்க. யாரிடமும் சொல்ல முடியலை. இன்னிக்கு அந்த கும்பலிடம் யார் நீங்க என்ன ஏதுனு கேட்க அங்க இருந்த பையன் கை பிடிச்சுக்கிட்டேன். சொன்னா நம்ப மாட்ட.. அவன் யார் கண்ணுக்கும் தெரியலை. மதியம் கடைக்கு கூட்டிட்டு போய் பலூன் வாங்கினேன். யாரும் இவனை பார்த்து யார் இவன் என்ன உறவு எதுவும் கேட்கலை.
இப்ப கூட உன்னிடம் சொல்ல காரணம். அன்னைக்கு உங்கப்பா அந்த கல்யாண கும்பலை பார்த்ததா நீ சொன்ன. அதான் அவரிடம் பேசி, உங்க கண்ணுக்கு தெரிந்தாங்களானு கேட்க நினைக்கிறேன். கொஞ்சம் போனை செந்திலிடம் கொடேன்” என்று இறைஞ்சினான்.
மலருக்கு இவன் என்ன சொல்லறான், என்று புரிவதற்கே சற்று நேரம் பிடித்தது.
“அரசன்… நீங்க ஏதோ சொல்லறிங்க. ஆனா எனக்கு சரியா புரியலை. ஏதோ கதை விடற மாதிரி இருக்கு. அதோட அப்பாவிடம் இதை பத்தி என்னால பேச முடியாது. நான் உங்களிடம் பேசறது அப்பாவுக்கு தெரியாது.” என்றாள்.
“தமிழ் ப்ளீஸ்… என்னை விரும்பறதுக்கு தான் பதில் சொல்லாம ஏய்க்கற. இந்த குழப்பத்தையாவது தீர்வு களைய உதவு. ஏன்னா என்னை சுத்தி பேயுங்க இருக்கா அமானுஷ்யமா சம்திங் சொல்ல தெரியலை.” என்றவன் குரலில் உண்மையான பரிதவிப்பு.
தன்னிடம் உண்மை உரைப்பதாக தான் மலர் உணர்ந்தாள்.
போன் பேசிக்கொண்டே சீமபாலில் கருப்பட்டி போட்டு சுடவைத்து வத்தவிட்டவள், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அப்பாவிடம் பேசி பார்க்கறேன்.” என்றாள்.
“ஏய் தமிழ் நிஜமா நான் உன்னிடம் பேசறதுக்கு சாக்கு வச்சி இப்படி உலறலை. உன்னிடம் பேச நான் எதுக்கு தயங்க போறேன். இது வேற அதனால் செந்திலிடம் பேசிட்டு சொல்லு.” என்றதும் “ம்ம்ம” என்று துண்டித்துக் கொண்டாள்.
‘இவரென்ன ஏதோ சொல்லறார். வீடு முழுக்க ஆட்கள் இருப்பதை நான் பார்த்தேன். என் கண்ணு பொய் சொல்லுமா? ஆனா அதே ஆட்கள் சாயந்திரம் போறச்ச இல்லை. அதே போல அந்த பையனை நான் பார்த்தேனே. என்னவா இருக்கும்?’ என்று யோசித்தபடி டிபன் பாக்ஸில் சீமபாலை எடுத்து கொண்டாள்.
நேரில் ஒருமுறை காண்பது சரியாக தோன்றியது.
ஆனால் தனியாக அவர் வீட்டுக்கு விளக்கு வைத்தப்பின் சென்றால் நன்றாக இருக்குமா? டிபன்பாக்ஸ் வரை ரெடிசெய்துவிட்டு சூடாக கொடுப்பது தானே என்று மனம் இடித்துரைத்தது.
‘பச்… யாராவது பார்த்தா ஏதாவது பேசவா?’ என்று யோசித்தாலும் கால்கள் தானாக வாசலுக்கு அவளை அழைத்து வந்துவிட்டது
அடிக்கடி தன்னிடம் உரண்டை இழுக்கும் பெண்மணி வரவும், “பங்கஜம் அக்கா… என் கூட அந்த வீடு வரை வாயேன்.” என்று கூப்பிட்டாள்.
“ஏன்டிம்மா.. அந்த வீட்டுக்கு? அங்க ஒரு வயசு பையன் தானே இருக்கான்” என்றார்.
“அட ஆமா.. நான் பால் ஊத்தற வீடு தான். மாடு கண்ணு போட்டு சீமபாலை எல்லாருக்கும் தந்தேன். சரி இங்கன இருக்கற வீடு தானேனு அந்தாளுக்கும் தந்தேன். அவருக்கு காய்ச்ச தெரியாது வேண்டாம்னு சொல்லிட்டார். இப்ப வீட்ல எனக்கும் அப்பாவுக்கும் காய்ச்சினேன். உனக்கே தெரியும் அப்பா தொண்டையில் கொஞ்சூண்டு தான் இறங்கும். அதான் அட்லீஸ்ட் அந்தாளுக்கு கொடுப்போம்னு. ஆனா இந்த நேரம் அங்க தனியா போக பிடிக்கலை. ஏதாவது வேலை வெட்டி இல்லாததுங்க ஏதாவது பேசும். நீ கூட வந்தா யாரும் பேச மாட்டாங்க” என்று கூறவும் பெரிய மனது செய்து பங்கஜம் கூட வந்தார்.
வழியில் ஏதேதோ பேச எல்லாவற்றையும் சகித்து நடந்தாள். கல்யாணத்தை பத்தி, வேலையை பற்றி என்ன தூண்டி துருவி கேட்க முடியுமோ எல்லாம் கேட்க கடனேயென்று பதில் தந்தாள் மலர்.
கதவு தட்டி நிற்க, தமிழரசன் கதவை திறந்தான்.
“என்ன தம்பி வீட்ல தனியா இருக்கியா? வீடெல்லாம் சௌகரியமா இருக்கா? இந்த மலரு வீட்ல மாடு கண்ணு போட்டது. சீமபாலு உனக்கு சுட வைக்க தெரியாதாமே. அதான் உனக்கு கொடுக்க கொண்டாந்தா. தனியா வர புள்ளைக்கு பயமாம். தெரு நாயுங்க அங்கங்க குலைக்குதுங்க. தெருவிளக்கும் சரியா எரியலையே. அதான் துணைக்கு வந்தேன்.” என்று கூற, மலரோ பாலை அவனிடம் கொடுத்தாள்.
கருப்பட்டி வாசமோ மூக்கை துளைத்தது. “தேங்க்ஸ்ங்க… வீட்டு பிரிப்ரேஷன் செய்த இனிப்பு, மிச்சம் வைக்க மாட்டேன்.” என்று நன்றி கூறி பெற்றுக் கொண்டான். மலரின் பார்வை அங்கிருந்த விக்னேஷ் மீது படிந்து மீண்டது.
ஆனால் அது யார் குட்டி பையன் என்று கேட்கவில்லை.
காரணம், “நீங்க தனியா தான் இருக்கிங்களா தம்பி?” என்று பங்கஜம் கேட்க, அரசனோ விக்கியை கண்டு “ஆமாங்க” என்றான்.
அதில் லேசான சோகம். ஏற்கனவே போனில் அனாதை என்று பேசியது, இதில் சற்று முன் அவன் பேசியது என்றதெல்லாம் மனதில் ஓட, எதையும் பேசி குழப்பாமல் வந்தாள்.
அவளுக்கு இங்கிருந்து சென்றதும் பங்கஜத்திடம் பையன் யாரையாவது பார்த்திங்களா? என்று கேட்டுவிட்டு, நாளை காலை நான்கு டூ ஐந்து வந்து பார்த்துவிட்டு முடிவெடுக்கலாமென்று நினைத்தாள்.
லேசான வாட்டத்துடன் அரசனை திரும்பி திரும்பி பார்த்து நடையிட, அரசனோ, “சீம்பால் சாப்பிடறியா விக்கி” என்று கேட்க மறுத்துவிட்டு சாக்லேட் சுவைப்பதில் தீவிரமானான்.
அரசன் சீமபாலை ருசித்து இமை மூடினான்.
பங்கஜம் வெளியே வந்ததும், “ம்ம்ம் தனியா அந்த தம்பி இந்த வீட்ல இருக்கு. போராடிக்காது வேலைக்கும் போகாம வீட்லயே இருக்கு. வீட்லயே வேலை செய்யுதோ? ஏன்டி உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்க, ”அங்க ஒரு குட்டி பையன் இருந்தான் நீங்க பார்க்கலையா” என்று கேட்க, “எவடி இவ எடக்கு மடக்கா?” என்று பேசியவர் “உங்கப்பாவுக்கு உடம்பு எப்படியிருக்கு? ஏதாவது முன்னேற்றம் தெரியுதா?” என்று கேட்டார்.
“எங்க… ஒரு முன்னேற்றமும் இல்லை... ஏதோ கஞ்சி கூழ் இட்லி சூப்பு டீனு குடிக்கறார்.” என்று பேசவும், “சரிடிம்மா என் மருமக சோறாக்கி வச்சியிருக்கும். நேரத்துக்கு சாப்பிடலை, அப்பறம் தட்டை கழுவாமலேயே அடுப்படியில் போட்டுடுவா. நான் போறேன்.” என்று செல்லவும், மலரும் சிந்தனையோடு அரசனின் வீட்டை பார்த்து தந்தைக்கு ரசம் சோற்றை மைய கரைத்தாள்.
‘எங்கப் போன’ என்று பார்வையால் செந்தில் கேட்க, “அந்த முக்கு வீட்ல சீம்பால் கொடுத்துட்டு வந்தேன். அவர் தனியாளு சீம்பாலை சுட வைக்க தெரியாதுன்னு சொன்னார். சரி கொஞ்சம் கொடுப்போம்னு போனேன்.” என்றவள் பாத்திரத்தை விளக்க சென்றாள்.
இரவு விக்கியை அணைத்துக் கொண்டு உறங்க, அவனோ அரசன் கால் மீது காலை போட்டு உறங்கினான்.
எங்கே காலையில் எழுந்தால் காணாமல் போய் இருக்கும் இந்த குட்டி பையனும் சென்றிடுவானோயென கைவளைவில் படுக்க வைத்துக் கொண்டான்.
ஆனாலும் வாட்சப்பில் “தமிழ்… என் மாமனார் செந்திலிடம் கேட்டியா?” என்று ஆடியோ வாய்ஸ் மெஸேஜை அனுப்ப, “ஓவர் வாய் உங்களுக்கு.. மாமனாரா?
ஆனாலும் உங்க குழப்பத்தை அதிகரிக்கலை. அப்பா உங்க வீட்டுக்கு வந்தப்ப உங்க குடும்பத்துல நகைகள் பட்டுசேலை போட்டு இருந்த ஆட்களை பார்த்தாராம். கல்யாண வீடு மாதிரி தான் ஆட்கள் இருந்தாங்களாம். ஆனா அவங்களாம் மறைந்ததா நீ சொன்னதை அவர் நம்பலை.” என்று அவளும் கூறினாள்.
“அப்ப உங்கப்பாவோட காலையில் நீ எங்க வீட்டுக்கு வா. வந்து பாரு… அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இந்த துகள் துகளா மின்னி மின்னி மாயமா மறைந்திடுவாங்க.” என்று கூற, “ஏதேது பேய் படத்துல வர்ற சீன் மாதிரி சொல்லற” என்று சிரித்தாள்.
“உண்மையிலேயே பேயா இருப்பாங்களோன்னு டவுட் இருக்கு தமிழ். ஆனா என்னை சின்னதா கூட என்னை காயப்படுத்தலை. சொல்லப்போனா என் கல்யாணம் நடக்க, எல்லாரும் ஆர்வமா தயாராகறாங்க. மத்தபடி என்னை எதுவும் செய்யலை. அதோட என்னை நேத்து பார்த்ததா இன்னிக்கு நினைவில்லை. புதுசா பார்க்கற லுக்கு. கல்யாணத்துக்கு ரெடியாகலையானு என்னிடமே கேட்கறாங்க.” என்றான். அதில் உண்மையான வருத்தம் தோணித்தது.
“ஒரு விஷயத்தை அதீதமா நினைச்சிட்டே இருக்கிங்க அரசன். மேபீ அதோட தாக்கமா கூட உங்களுக்கு தோன்றலாம்.” என்றாள்.
“நான் அப்படி தான் முதல்ல நினைச்சேன் தமிழ். ஆனா உங்கப்பா பார்த்ததா நீயே சொன்னியே. அப்ப அவங்க என் கனவுல வரலையே. நிஜமா நடமாடறாங்க தானே?!” என்றான்.
தமிழ் லேசாக சிந்தித்து, “மேபீ… அவங்களும் உன்னை போல உன் கல்யாணத்தை பார்க்க ஆவலா இருந்து உயிரை விட்டாங்களோ என்னவோ. அந்த மைண்ட் செட்ல இருந்து நகராம அந்த லூப்ல மாட்டிட்டு இருக்கலாம்.” என்றாள்.
இதுக்கு அறிவியல்ல ஏதோ பெயர் சொல்வாங்க. பச்… எனக்கு அதை சரியா சொல்ல தெரியல.” என்றாள்.
“ம்ம்ம். நானும் கேள்விப்பட்டதுண்டு. பெயர் சரியா சொல்ல தெரியலை. நமக்கு நடந்தது ஏற்கனவே நடந்தது மாதிரி இருப்பதும், ஒரு இடத்தை பார்த்தா ஏற்கனவே வந்தது போலவும், சிலரை பார்த்தா ஏதோ ஜென்ம பந்தம் போல, இது மாதிரி ஒரு விஷயம் ரிப்பீட்டட்டா நடப்பதும் உண்டு. ஆனா இவங்க உயிரோட இருக்காங்களா? னக்கும் அவங்களுக்கும் என்ன பந்தம்? இது தான் தெரியலை. அந்த பையன் என்னை மாதிரி சாயல்ல இருப்பானாக்கும்” என்றான்.
செந்தில் வாய் குழைத்து லேசாய் இரும, மலர் பேசலாமென்று வாய்ஸ் மெஸேஜில் பதிவாக கையெடுத்ததில் அவரது இருமல் சந்தமே பதிவாகி சென்று கைப்பட்டு அரசனுக்கு சென்றது.
உடனடியாக, “அப்பா வந்துட்டாரா ஓகே குட் நைட் தமிழ்.” என்று அனுப்பினான்.
“குட் நைட்” என்று அனுப்பியவள் மனமோ அந்த வீட்ல இருப்பதால் அவருக்கு அந்த உருவங்கள் தெரியலாம். ஆனா எனக்கு ஏன் அவங்க உருவம் தெரிந்தது. பங்கஜம் வந்தப்ப அங்கவொரு பையன் இருந்தானேனு கேட்டா அப்படியாரும் இல்லை என்பதா பேசினாங்க.
தமிழரசனுக்கு பேயுங்களோ யாரோ கண்ணுக்கு தெரியற மாதிரி ஏன் என் கண்ணுக்கும் தெரியறாங்க. தமிழரசனுக்கும் எனக்கும் நடுவுல ஏதோவொரு பந்தம் இருக்கு. அதுயென்ன?” என்றவளுக்கு இரவெல்லாம் உறக்கம் வரவில்லை.
-தொடரும்.
Super super😍😍😍😍 interesting😍
Enna da ithu malar kum tamil kum thavira vera yaru kum.anga irukavaga theriya matraga oru vela ithu ethachum time loop mathiri andha particular incident mattum.repeat aagutho
Ethu yenna sangathine puriyala. Science ah amanushyama 🤔🤔
Enna thaan nadakkuthu onnum puriyave maattenguthu
Super sister
Very interesting
waiting for the next………..
Super sis nice epi 👍👌😍 evanga renduper kannuku mattum theriyiranga ennava erukum 🧐 time loop ah Ella epi yedhuvum ah enna nu therinjika romba aarvama eruku sis 😊
அலப்பறை கல்யாணம்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 10)
அடேயப்பா…! வர வர எக்ஸ்ட்ராடினரி ரைட்டிங் & பர்ஃபார்மன்ஸ் கொடுக்கறிங்க.
தமிழை மட்டுமில்லாம எங்களையும் நல்ல குழப்புறிங்க. இப்பவெல்லாம் அதிகமா முடி வேற கட்டுது.
தமிழுக்கு கிடையாது எனக்கு.
😀😀😀
CRVS (or) CRVS 2797
😍👌👌😍😍😍
Wow super super. Sema intresting
super ipo nalla therinji kitta malar ena nadakuthunu nalaiku kalaila poi inum nalla therinjathuku apram than tamil kitta pesuvala yen vera yar kannukum theriyama tamil and malar ku MATTUM YEN THERIYANUM