Skip to content
Home » தேவதையாக வந்தவளே 23

தேவதையாக வந்தவளே 23

தேவதை 23

அவசர அவசரமாக காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றான் அரவிந்த்.

“நீங்க உங்க அப்பா கூட பேசிட்டு இருங்க. நான் சமையலை முடிச்சிடுறேன்”, என்று கூறியபடியே பரபரப்பாக வேலையை கவனித்தாள்.

“அவர்தான் என்ன பாக்க வரலையே?, அவர் பேத்தியை தான் பார்க்க வந்திருக்காரு அங்க பாரு”, என்று அவளுக்கு சுட்டிக்காட்ட அவளும் எட்டி பார்த்தாள்.

“விளையாட்டு சாமான்களுடன் ஷாலினி அமர்ந்திருக்க. அவளுக்கு எதிரில் அமர்த்தபடி அவர் ஒவ்வொரு பொருட்களையும் வைத்து பேத்திக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தார்.

“உங்க அப்பா, உங்க தங்கச்சியை, பாப்பா கிட்ட தேடுறாங்க”, என்று சிறு குரலில் கூறினாள்.

“அது இயற்கை தானே?. அப்பா முகத்தில் ஒரு தெளிவு தெரியுது, எனக்கும் சந்தோஷமா இருக்கு. சரி விடு என்ன சமைக்கிற? “, என்று சமைத்துக் கொண்டிருந்த பாத்திரங்களை பார்த்தான்.

“சாம்பார் வெச்சிட்டேன் பொங்கல் செய்யலாமா?, மாவு இல்ல, அரைக்கல?“, அவனிடமே கேள்வி எழுப்பினாள்.

“ஓகே நீ அதை செய் நான் கொஞ்சமா கேசரி செய்கிறேன். ஃபர்ஸ்ட் டே நாம இனிப்பா கொடுக்கலாம் அவருக்கு”.

“இல்ல பரவால்ல நானே செஞ்சுடுறேன். அவர் பொங்கல் சாப்பிடுவார் தானே??, நிறைய பேருக்கு பொங்கல் பிடிக்காது. ஆனா கிராசரீஸ்ல பச்சரிசி மட்டும்தான் இருந்துச்சு. நான் சுமாரா செய்வேன்”, என்று கூறினாள் மாலினி.

“அவர் வீட்டு சாப்பாடு எது கொடுத்தாலும் சாப்பிடுவார். நீ சமைச்சுட்டு இரு. கீழ இட்லி மாவும் கிடைக்கும் அதுவும் வாங்கிட்டு வந்துடறேன். ஒரு ஈடு ஊத்தி வெச்சிடலாம். எந்த டப்பாவில் இட்லி சட்டி வெச்சேன்? “, என்று யோசித்தபடி அங்கு ஓரமாக இருந்த டப்பாவை பிரித்து இட்லி சட்டியை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

“சீக்கிரம் வரிங்களா எனக்கு பயமா இருக்கு?”, என்று கூறினாள். அவளை ஊன்றி பார்த்தான்.

“உனக்கு பயமா இருக்கா?? எதுக்கு? “, என்று கேள்வி எழுப்பினான்.

“இல்ல உங்க அப்பாவுக்கு என்ன பிடிக்குமோ பிடிக்காதோ. என்னோட பாஸ்ட் தெரிஞ்சதுனா?, வந்து”, என்று அவள் தயக்கமாக கூற.

அவன் சிரித்தான். அவள், அவனை பொய் கோபத்துடன் முறைத்தாள். “உன்ன பத்தி அவருக்கு நல்லா தெரியும் எல்லாமே தெரியும். அன்ட் மோரோவர் நான் எங்க அப்பாகிட்ட எதையும் மறைக்கிறது இல்ல. அம்மா கிட்ட எதையும் சொல்றதில்லை. உன்ன மேரேஜ் பண்ணிக்க போறேன்னு முதல் முதலில் அவர்கிட்ட தான் சொன்னேன். ஃபர்ஸ்ட் அதுக்கு என்ன கங்கிராட்ஸ் பண்ணாரு. அப்புறம் எனக்கு நிறைய அட்வைஸ் கொடுத்தாரு”.

“அவர் கொடுத்ததை நீங்க கேட்டு இருந்திருக்கலாம்? “, தலையை தாழ்த்திக் கொண்டு கூறினாள் மாலினி.

“கேட்டுட்டு தான் இருக்கேன். எனக்கு கோபம் நல்லாவே வரும். அவர் பேச்சைக் கேட்டு மண்டையில அப்பவே பதிய வச்சிக்கிட்டேன். அதனால தான் நீ அப்பப்ப என்ன டென்ஷன் ஆக்குற மாதிரி பேசுற பேச்சுக்கள் எல்லாம் என்னால ஸ்வாகா பண்ண முடியுது. சரி பேசிக்கிட்டே இருந்தா வேலைக்கு ஆகாது. நான் கீழே போய் இட்லி மாவு வாங்கிட்டு வந்துடுறேன். தனியா பார்த்துப்பல்ல? “, என்று கேட்டான்.

அவள் தலையாட்டினாள். அவள் சாம்பார் பொங்கல் கேசரி என்று செய்வதற்குள்ளாகவே இட்லி மாவுடன் வந்தான். அவனே ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மாவை கரைக்கவும் ஆரம்பித்துவிட்டான். அவள் உருளைக்கிழங்கை மசிக்க ஆரம்பித்தாள்.

“இது எதுக்கு?”, என்று கேட்டான் அரவிந்த். “இல்ல கொஞ்சமா பூரி செஞ்சிடலாம்னு? “, என்று கூறியவள். ஓரமாக பிசைந்து வைத்திருந்த மாவையும் காட்டினாள்.

“எதுக்கு இவ்வளவு டிஷ்?, அவர் காலையில இவ்வளவு ஐட்டம்ஸ் சாப்பிட மாட்டாரு. அவருக்கு உடம்புக்கு ஆகவும் ஆகாது மாலினி”. “உங்களுக்கு பிடிக்கும்ல?“, என்று கூறினாள்.

அதில் அவன் இதழ்களில் லேசான மென்னகை.”நீ செஞ்சா எனக்கு எல்லாமே பிடிக்கும்“, என்று அவன் கிறக்கமான குரலில் கூற.

நிமிர்ந்து அவனை ஒரு மாதிரி பார்த்தவள். “பொங்கல் செய்றேன்னு சொல்லும்போது உங்க முகத்துல லேசான அசட்டுத்தனம் தெரிஞ்சுது. சோ உங்களுக்கு பொங்கல் பிடிக்காதுன்னு நினைக்கிறேன். அதனாலதான் அதை சொல்லாம இட்லி வாங்க போனீங்க. சப்போஸ் மாவு கிடைக்கலன்னா என்ன பண்றது??, அதான் வெயிட் பண்ணாம செஞ்சிட்டேன்”, என்று பதில் உறைத்து கொண்டே சமையல் வேலையில் அவள் மும்முறமாக இருக்க.

“என் பார்வையை வெச்சே எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டியா?, அப்படியே காலம் முழுக்க என் பார்வையை வச்சு எல்லாத்தையும் தெரிஞ்சுப்பியா? “, என்று கேட்டவனின் குரலில் என்ன இருந்தது என்று அவளுக்கு புரியவில்லை.

மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளையே அவன் ஆழமாக பார்த்துக் கொண்டிருக்க. அவளும் அவன் கண்களை ஊடுருவி பார்த்தாள். அதில் எதையோ உணர்ந்தவள். சற்றென்று பார்வையை தாழ்த்திக் கொண்டாள் . பேச்சு குறைத்துவிட்டு வேலையில் மும்முறமாக இறங்கினாள் . அவள் சுதாரித்துக் கொண்டாள் என்று அவனுக்கு புரிந்தது.

“உஷாரு தான் கொஞ்ச நேரம் பாத்தா மயங்கிடுவோம்னு நைசா பார்வையை மாத்திக்குறாள்”, என்று மனதிற்குள் நினைத்தவனுக்கு மனதில் சொல்ல முடியாத சந்தோஷம் . அவன் பார்வையை வைத்து அவள் அதை புரிந்து கொள்வது, அதுவும் இந்த சொற்ப நாட்களில் அவனுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக தான் தோன்றியது.அவளுக்கு உதவி புரிவதற்காகவே இட்லி சட்டியில் மாவை ஊற்றி அதை அடுப்பில் வைத்தான்.

“மா குழந்தை சமையலறைக்கு வரா பாரு? “, என்று லோகநாதனின் குரலில் அவள் திரும்பி பார்த்தாள். அதற்குள் அரவிந்த் மகளை அள்ளித் தூக்கி இருந்தான். அவனிடமிருந்து சினுங்கியவள் தாயிடம் செல்ல எத்தனித்தாள்.

“சரியான அம்மா பொண்ணு “, என்று திட்டுவது போலவே கொஞ்சியவன். அவளிடம் குழந்தையை கொடுத்துவிட்டு. மீதி வேலையை அவன் செய்ய ஆரம்பித்தான். அவள் அங்கேயே நின்றபடி குழந்தைக்கு பொங்கல் எடுத்து ஊட்ட ஆரம்பிக்க.

“தனியா சமையல் செய்யும்போது பாப்பா உன்ன தொல்லை செய்ய மாட்டாளா ? “, பூரியை எண்ணெய் சட்டியில் இட்டுக் கொண்டே கேட்டான்..

“நாங்க ரெண்டு பேரு தானே?, பெருசா சமைக்க மாட்டேன். பால கொடுத்துட்டா கொஞ்ச நேரம் அமைதியா இருந்துருவா. டிபன் செஞ்ச உடனே அவளுக்கு ஊட்டி விட்டுட்டு அப்படியே ஒரு கைல சமைச்சிடுவேன். மேக்ஸிமம் வெரைட்டி ரைஸ் தான். அதனால வேலையும் சீக்கிரம் முடிஞ்சுரும் டிபன் ஓட்டிட்டு திரும்பவும் ஜூஸ் ஏதாவது போட்டு இருப்பேன். இதுல சில நேரம் ஆயிடும்”. அவள் இலகுவாக பேசுவது அரவிந்திற்கு புரிந்தது.

“தனியா இருந்தியே போரடிக்கலையா? “.

“நான் எங்க தனியா இருந்தேன்?. என் கூடவே தான் என்னோட தேவதை இருந்தாளே!. இவள பாத்துக்கிட்டே இருந்தா போரே அடிக்காது”.

“எனக்கு உங்க ரெண்டு பேர பாத்து கிட்டு இருந்தா போர் அடிக்காது”, என்று மனதிற்குள் கூறிக் கொண்டான். அவளை ரசனையாக பார்த்தான்..

கடந்த ஆறு மாதமாக அவன் அதை தானே செய்து கொண்டிருந்தான்.

“ரொம்ப அதிகமா பேசிட்டோமோ? “, என்று அவள் மனது சுருங்க ஆரம்பித்தது.

“கிரஷுக்கு லேட் ஆகலையா நாளைக்கு தானே லீவு??, இன்னைக்கு போய் ஆகணும் இல்லையா? “.

“ஆமா என்ன பண்றதுன்னு தெரியல?, ஆனா வீட்டுக்கு வந்துருக்கவங்கள கவனிக்கனும் இல்லையா?, அதுவும் முதல் முறையா வந்திருக்காங்க. உங்களுக்கு அப்பானா எனக்கும் அப்பா பொண்ணு தானே? அதுதான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன். ஹாப் டேக்கு மேல போகலாம்னு நினைக்கிறேன். அங்கிள் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா? “.

“ஒன்னும் சொல்ல மாட்டாரு. மத்தியானம் அப்பாவுக்கு நான் கம்பெனி கொடுத்துக்கிறேன். நீ கார் எடுத்துக்கொண்டு போ”, என்றான்.

இம்முறை அவளுக்கு மறுக்க தோன்றவில்லை. அமைதியாக இருந்தால் பிறகு அனைவருமாக சேர்ந்து அமர்ந்து உண்டனர். அவளுக்கும் நீண்ட வருடங்கள் கழித்து ஒரு பிடிப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவர் அல்லாது இன்னும் இருவருடன் அமர்ந்து சாப்பிடுவது பிடித்திருந்தது.

“இது என் மருமகள் சமையல். இது என் மகனுடையது சரியா? “, என்று கேட்டுக் கொண்டே ரசித்து ருசித்து சாப்பிட்டார்.

“காரம் புளிப்பு எல்லாம் சரியா இருக்கா அங்கிள். ஏதாவது மாத்தணும்னு சொன்னா மாத்திக்கிறேன் “, என்றாள் மாலினி பொறுமையாக.

“அட போம்மா?, ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு இருந்தவனுக்கு. காலையில இவ்வளவு சீக்கிரத்துல இவ்வளவு ருசியான இத்தனை பதார்த்தங்களை கொடுத்திருக்க. எனக்கு கசக்குமா என்ன??, தேவாமிர்தம் மாதிரி இனிக்குது. முதல்ல இந்த அங்கிள விட்டுட்டு மாமானு வாய் நிறைய கூப்பிடுமா”, என்று கூறியவர்.

இன்னும் உணவை கட்டிக் கொண்டுதான் இருந்தார். காலையில் அவர் இவ்வளவு சாப்பிட மாட்டார் என்று கூறினானே??. உடம்புக்கு ஏதாவது ஒத்துக்கொள்ளாமல் போக போகிறது என்று பயமும் இருந்தது. ஆனால் ஆசையாக சாப்பிடுபவரை தடுக்க தோன்றவில்லை அவளுக்கு. அவர் ரசித்து ருசித்து உன்பது அவர் உண்பதிலேயே தெரிந்தது.

“ஆன்ட்டி உங்க கூட வரலையா அங்கிள்?,அவங்க இந்த மேரேஜ்ல கோவமா இருக்காங்களா? “, அவள் தயக்கத்துடன் கேட்க. அவருக்கு புறை ஏறியது. அவர் தலையை தட்டிக் கொள்ள. மகன் தண்ணீரை எடுத்து அவரிடம் கொடுத்தான்..

“சாரி தேவையில்லாம ஏதோ கேட்டுட்டேனா? “, மாலினி தான் மன்னிப்பு கேட்டாள்.

“இல்லம்மா நல்லா போயிட்டு இருக்க நேரத்துல, எதுக்கு அவளை ஞாபகப்படுத்துற? “, என்று கூறினார்.

அவள் திரும்பி தன் கணவனை பார்த்தாள். “நான் தான் சொன்னேனே, எங்க அப்பாவுக்கு நான் எல்லாத்தையும் சொல்லுவேன் எங்க அம்மா கிட்ட நான் எதையும் சொல்ல மாட்டேன்னு. எனக்கு திருமணம் ஆனதே எங்க அம்மாவுக்கு தெரியாது. ஐ மீன் நம்ம ரெண்டு பேருக்கும் திருமணம் ஆனது தெரியாது”, என்று கூறினான் அரவிந்த். அவள் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.

“நமக்கு கல்யாணம் ஆகும் போது நான் அப்பாவுக்கு மட்டும் தான் வீடியோ மூலமா லைவ்ல காட்டிட்டு இருந்தேன். எங்க அம்மாவ நீ எங்கேயாவது பாத்தியா?, இல்லைல? “, என்று கேட்டான் .

அவள் இல்லை என்பது போல தலையாட்டினாள். “அவங்களுக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னா அடுத்த நிமிஷம் பறந்தாவது வந்து என் முன்னாடி நிப்பாங்க. இந்த வீடு அதிரும்படி கத்துவாங்க. அதனாலதான் நம்ம திருமணத்துக்கு அப்பா நேர்ல வரல. ஒருவேளை அதை அவங்க மோப்பம் பிடிச்சிட்டாங்கன்னா?, ரெஜிஸ்டர் ஆஃபீஸை ஒரு வழி பண்ணி இருப்பாங்க. அப்பயும் நம்ம திருமணம் நடந்திருக்கும். ஆனா பீஸ்ஃபுல்லா நடந்திருக்காது. நீ வேற அப்ப ரொம்ப குழப்பத்துல இருந்த. அது உனக்கு மேலும் குழப்பம் ஆகிடும்னு நினைத்து அப்பாவ வர வேணாம்னு நான் தான் சொன்னேன். நீ பயப்பட மாட்ட, ஏன்னா இதுக்கு மேல கத்தல எல்லாம் நீ பாத்துட்டு வந்துட்ட. ஆனா என் குட்டி பேபி பயந்துருவா, கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கட்டும். அவங்களுக்கு தெரியும்போது தெரியட்டும்”, என்று கூறினான். தன் மகளை கொஞ்சி கொண்டே.

“தனக்காக இவன் இவ்வளவு பார்த்திருக்கிறானா??, தான் குழம்ப கூடாது என்பதற்காக, அவனுடைய திருமணத்திற்கு அவன் தந்தையை வர வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான். மனது கலங்கியது ஆனால் கண்களில் அவள் வெளிப்படுத்தவில்லை.

“ உனக்காக நான் ஏண்டி பாக்கணும்??, பொண்ணுங்கனா அடங்கி தான் இருக்கணும். எங்களுக்கு வேண்டியது தான் நீங்க பாக்கணும். நான் நில்லுனா நிக்கணும் ஒக்காருனா ஒக்காரனும். படுன்னா படுக்கணும், போன்னா போகணும், ரொம்ப பேசினா செவுள் திரும்பிடும்”, என்று அரைந்தவனின் ஞாபகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் ஒரு பக்கமாக தலையை திருப்பினாள். “ என்ன ஆச்சு மா?? “, தந்தை மகன் என்று இருவரும் ஒரு சேர கேட்டிருந்தனர்.

மிடறு விழுங்கியவள் “ஒன்றும் இல்லை’ என்று கூறி தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள. அவர்கள் இருவரும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டார்கள். உணவை முடித்துக் கொண்டு வந்தனர்.

அனைவரும் சோபாவில் அமர பேத்தியை மடியில் அமர்த்திக் கொண்டு அவர் வாங்கி வந்திருந்த பொருட்களை பிஸ்கெட் சாக்லேட் என்று பேத்தியிடம் கொடுத்தவர். நகை பெட்டியை தன் மருமகளிடமே கொடுத்தார்.

“எதுக்கு அங்கிள் இவ்வளவு செலவு பண்ணி இருக்கீங்க?. ஷாலினிக்கு ஓகே. ஆனால் எனக்கு எனக்கு வேண்டாம்”, என்றால் அவள் தயக்கமாக.

“உன்ன நான் என் மகளா தான் பாக்குறேன். என் மகளுக்கு நான் வாங்கி கொடுக்க கூடாதா? “, அவர் எதிர் கேள்வி கேட்டார். அவள் வாயடைத்து போனான்.

“போறது போற அப்படியே போய்டு. நகைகளை எதையாவது தொட்ட. அவ்வளவுதான்”, என்று அவள் தந்தையின் குரல் அவள் காதில் எதிரொலித்தது. கண்கள் கரித்துக் கொண்டு வர பார்த்தது.“மாலினி”, என்றான் அரவிந்த். அவள் தன்னை மீட்டெடுத்துக் கொண்டாள். ஆகாஷின் ஞாபகங்கள் அவ்வப்போது எழுந்தாலும் அதில் தன்னை சுதாரித்துக் கொள்பவளாள், ஏனோ தாய் தந்தையின் ஞாபகங்களில் மீட்டெடுப்பது சிரமமாகத்தான் இருந்தது.

“நான்,, நான் என்னோட பழைய வாழ்க்கை உங்களுக்கு பிரச்சனை இல்லையா அங்கிள்?, தயக்கத்தொடனே தன் மனதில் இருந்ததை அவரிடம் கேட்டு விட்டாள்.

“என் மகனுக்கே பிரச்சனை இல்லாத போது எனக்கு என்ன பிரச்சனை மா இருக்க போகுது? “. அவள் மீண்டும் தலையை தாழ்த்திக் கொள்ள அவள் தலையை வருடி கொடுத்தவர்.

“இங்க எல்லாருக்கும் வாழ்க்கை நல்லபடியா அமையறது இல்லமா. என்ன போல நிறைய பேரு சகிச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்காங்க. சில பேரு சகிச்சுக்க முடியாமல் வெளியே வந்துடறாங்க. நீ போராடி வெளியே வந்து இருக்க. உன்னால அதெல்லாம் சகிச்சுக்க முடியாது. அதை பொறுத்துக்கிட்டு வாழ வேண்டிய அவசியமும் இல்லை. கண்டிப்பா என்னோட பொண்ணா இருந்திருந்தாலும் நான் இதைத்தான் சொல்லியிருப்பேன். என் மகன் உன்ன திருமணம் செஞ்சுக்கறேன்னு சொல்லும் போது. உண்மையில எனக்கு சந்தோஷமா இருந்தது. நான் நல்ல பையன வளத்துருக்கேன் எனக்கு கர்வமா இருந்தது”.

“ஆனா என் பையன்றதுக்காக நான் சொல்லல, அரவிந்த் ரொம்ப நல்லவன். உன்னோட கசப்புகளை எல்லாம் ஓரம் நிறுத்திட்டு அவனோட சந்தோஷமா வாழுமா”, என்றார் லோகநாதன் அவள் கண்ணீரை துடைத்து விட்டார்.

“இல்ல அங்கிள் நாங்க குழந்தைக்காக தான் திருமணம் செஞ்சுக்கிட்டோம்”, தயக்கத்துடனே கூறினாள்.அவர் புரியாது தன் மகனை ஏறெடுத்து பார்க்க. அவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு இருந்தான். உதட்டை இறுக்கி சிறு குழந்தை அழுவது போல பாவனை செய்தான்.

3 thoughts on “தேவதையாக வந்தவளே 23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *