💖6
பாதி எரிந்தும் பாதி காப்பற்றப்பட்டும் இருந்த கரும்பு பயிரை கண்டு மனம் ஒடிந்து போனான் கவியரசன். அது ஒரு விவசாயியின் வலி தெரிய இது நாள் வரை உழைத்தது ஒரே நாளில் வீணானது அவனுக்குள் கோவத்தை கூட்டியது.
இயற்கை சேதமோ அல்லது விளைச்சல் மந்தமோ என்றாலே வேதனை அடைந்து விடும் மனம். ஆனால் இதுவோ தன் ஒருவனின் சந்தோஷம் அழிக்க நடந்திருக்கும் சதியாக இருக்கும் என்ற கோணம் உள்ளுக்குள் தீயாய் காய்ந்தது.
இதோ விவாகரத்து வாங்கி விட்டாயிற்று தன்ஷிகா மணந்தாயிற்று ஒரு நொடியில் அவளை ஒன்றும் இல்லாமல் ஆக்க இயலும் ஆனால் தன்ஷி மனதில் ஏற்கனவே வெறுப்பில் இருக்கும் தான் எதனால் மணந்தேன் என்று கூட அறியாது அதீத வெறுப்பை உமிழும் என்பதை அறியாதவனா?
எப்படியும் தான் கவலைப்பட்டு வேதனையை சுமக்க அதனை இரசிக்க செய்வாள் என்று எண்ணி அவளை தேட கண்ணீர் கோடுகளோடு அங்கே அவந்திகா நிற்க கண்டான்.
சேலையில் கண்ணீர் துடைத்தப்படி அவளின் கவலைபடும் முகம் அவனுள் எரிச்சலை தந்தது. அத்தனையும் நடிப்பு.
தன்ஷிகா கண்ணில் துளி நீர் இல்லாது இருப்பினும் அவளின் முகம் இது போன்ற சேதாரம் கண்டதில்லை என்று உணர்த்தியது.
அப்பொழுது அங்கே கரும்பு தோட்டத்தில் ஒரு ஆடு கருகி இறந்து கிடக்க அதை தூக்கி வந்தனர்.
தன்ஷி பக்கத்தில் இருந்த கவியரசனின் சட்டையில் கண்களை இறுக்கி மூட தன்ஷிகாவை பார்த்தவன் “தன்ஷி எல்லாம் டேக் ஓவர் பண்ணிடலாம் டா” என்றான் ஆறுதலாக இவன் வலி மறைத்து பேசினான்.
“எப்படி மாமா அந்த குட்டி உயிர் திரும்ப கொண்டு வருவியா உன்னால முடியுமா?” என்ற கேள்வியில் பதில் சொல்லும் நிலை தவறி நின்றான்.
‘ஆட்டு குட்டி இங்க வர முடியாது எப்படி வந்து இருக்கும் அதுவும் அப்பத்தா எனக்கு கல்யாணம் ஆனா கோவிலில் காணிக்கை செலுத்த வாங்கின ஆடு..’ என்றவனின் பார்வை அவந்திகாவை காண அவளோ தன்ஷிகா கவியரசன் மீது தோளில் சாய்ந்த நிலை கண்டு பொறாமையில் நிற்பதை நன்கு உணர்ந்தான்.
தனக்கு இப்படி நஷ்டம் ஏற்படுத்தி இவள் காணும் நிலைக்கு தன்ஷிகா வைத்தே அவளை மூக்கறுப்பு பட எண்ணி யோசித்தவன் திலகவதியுடன் தன்ஷியை அனுப்பி வைத்தான்.
அடுத்து சில பணியாட்களிடம் செய்ய சொல்லி சில கட்டளை விதித்து வேஷ்டி மடித்து கட்டி அவந்திகா இடம் நோக்கி வந்தான்.
“நைஸ் பிளான்… நான் தன்ஷி அங்க போனதும் என்னை இங்க வர வைக்க நீ செய்த வேலை ஏ-1 ஆனா என்ன ஒரு விஷயம் மறந்துட்ட தன்ஷிகா சம்மதிச்சாலும் சம்மதிக்காவிட்டாலும் அவளை சொந்தமா ஆகிட்டேன். 2 நைட் 1 மார்னிங்… காலையில் கூட ஒன்னா தான் பாத் பண்ணினோம்…. நீ போன் பண்ணும் பொழுது அதான் எடுக்க முடியலை…
இராத்திரி 10 மணிக்கு கரும்பு தோட்டம் பற்ற வைத்திருப்ப அதான் பாதிக்கு மேல எரிச்சு போயிருக்கு… பரவாயில்லை தன்ஷி விட எனக்கு எதுவும் பெரிதல்ல.” என்றான் ஆன்டிஹீரோவின் சாயலில்.
கூடுதலாக “இதுக்கான லாபம் எப்படி மீட்டு எடுக்கனும் என்று எனக்கு தெரியும்” என்றவன்
“என் விஷயம் தலையிட்டு நீயா தன்ஷிகாகிட்ட மாட்ட போற….” என்றவன் எரிந்ததற்கு கவலைப்படாதவன் போல நடந்தான்.
” ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்ததால் வன்முறை செய்வாயா.
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா.. தன்ஷி..” என்று மாதவன்(பார்த்தாலே பரவசம்) பாடலை முனுமுனுக்க அவந்திகா மூக்கறுப்பு அடைந்ததே மிச்சம்.
வீட்டுக்குள் தன்ஷி அழும் சத்தம் கேட்க காதினை கூர்மையாக்க அவளோ ஆட்டிகுட்டி இறந்து போனதற்கு அழுதபடியே இருந்தாள்.
‘அங்க ஆயிரக்கணக்கில் நஷ்டம்.. இவளுக்கு ஒரு ஆட்டு குட்டிக்கு ஒப்பாரி வைக்கிறா…’ என்றவள் அப்பத்தா தூரத்தில் பேசும் பேச்சு எல்லாம் காது கேட்காத வசதி தோன்ற வீட்டில் நுழைந்தவள் எட்டுக்கட்டையில் பேசாது சிறித்து பேசினாள்.
“என்ன பண்ண அப்பத்தா நான் வீட்டுக்கு காலடி வைச்சப்ப தோட்டமா வாங்கி குவித்தார். தன்ஷி வந்த ராசி இருக்கறதும் போகும் எழுதி இருக்கு… அப்பா அம்மாவே அதுக்கு தான் ஐந்து வருஷம் வெளிய படிக்க வைத்தார்கள். எனக்கு குழந்தை வந்திருந்தா இவராசி வந்து சேருமா வாயில்லா ஜீவன் தான் இறந்து இருக்குமா? என்ன கல்யாணம் ஆனா கோவிலுக்கு கொடுக்க நேர்ந்த ஆட்டுக்குட்டி அதான் கவலை… இருந்தாலும் விடுங்க அப்பத்தா.. எல்லாம் அவர் தன்ஷி மேல ஆசைப்பட்டுட்டார். அக்காவை கட்டிக்கிட்டு தங்கை மேல ஆசைப்டறது நடக்காதது இல்லையே” தன்ஷிகா காதில் விழமாறு பேசி செல்ல அழுத தன்ஷிகா எண்ணமெல்லாம் தனது ராசியா இதற்கு காரணம் என்பதிலே சுழன்றது.
அவந்திகா ஏதோ தன்னால் முடிந்தது செய்தாயிற்று என்று நகர்ந்தாள்.
கவியரசன் கார் வர அவந்திகா மறைந்திட்டு பார்க்க தன்ஷிகா வெளியே வந்தவள் ஒரு கையை வேஷ்டி பிடித்து மறுகையில் சிகையினை அழுத்த கோதியவனின் அழுத்ததில் நஷ்டத்தின் அளவு தெரிய கவியரசனோ நேராக தன்ஷிகா அறைக்குள் நுழைந்து நின்றான்.
அவன் வந்து பின்னால் தன்ஷி தயக்கத்துடன் வர திரும்பியவன் கதவை லாக் செய்து சட்டை கழற்றி பாத்ரூம் சென்றவன் கை கால்கள் அலம்பி திரும்பினான். அவன் சட்டையில் இருந்த கரிகள் எல்லாம் தான் வந்த ராசி என்றே எண்ணினாள்.
“உங்களுக்கு இது தேவையா… என் கழுத்தில் தாலி கட்டி உங்களுக்கு இத்தனை நஷ்டம்… என் ராசி செல்வத்தை அழுச்சா பரவாயில்லை. ஒரு உயிரை பலி வாங்கி இருக்கு தெரிதா” என்றவளின் கண்ணீர் பேச்சில் புரியாமல் டவலில் முகத்தை துடைத்தப்படி
“வாட்… தோட்டம் தீப்பற்றி கொண்டதற்கு நீ எப்படி காரணம் ஆவ… லூசு மாதிரி பேசாதே இது கிராமம்… இதை கேட்டுச்சு இதையே கதை கட்டுவாங்க” எதையோ தேடியபடி பேசினான்.
“கோவிலுக்கு நேர்ந்த ஆட்டுக்குட்டி பலியாகி இருக்கு என்ன இருந்தாலும் இது சாமி குத்தம்” என்றவளின் பேச்சை கேட்டு நின்றான்.
“சாமிக்கு நேர்ந்து விட்ட ஆட்டுக்குட்டி அது என்று உன்கிட்ட யார் சொன்னா” என்றான் அவளை தன் பக்கம் திருப்பினான்.
“அக்கா…. அப்பத்தா ஏதோ சொல்ல அதுக்கு பதில் சொல்லிச்சு அப்போ பேச்சு வாக்கில் சொன்னா”
“இரு… இரு…” என்றவன் வேகமாய் சட்டையை மாற்றினான்.
அவளை இழுத்து அப்பத்தா முன் அவளை உட்கார வைத்தான்.
“அப்பத்தா அப்பத்தா…” என்று சில முறை கூப்பிட்டான்.
“என்ன ராசா…. ஏதோ கரும்பு தீப்பற்றி கொண்டதா திலகா சொன்னா” என்று மங்கிய பார்வையும் பேச்சும் கொண்டு கேட்டார்.
“ஆமா அப்பத்தா… இங்க பாரு பேத்தியை அவ வந்து இப்படி ஆகிடுச்சு என்று விசம்பறா… ஆட்டுக்குட்டி இறந்ததுக்கு சாமி குத்தம் அது இது உலருறா” என்றான் அவளை போலியாய் முறைத்தபடி.
“அடக்கூறு கெட்டவளே நடக்கற விஷயமும் உன்னையும் சம்பந்தப்படுத்தி பேசி தொலையாதே… எந்த கிராமத்திலும் இரண்டாதாரம் கூட பெரிசா பேசிகிட மாட்டாங்க குழந்தை இருந்தாலும் கட்டிக்கற ஆளுங்க இருக்காப்பள
இந்த வந்த ராசி அது இது என்று பேசி குறை கொடுக்கறது தான் நிறைய கிடக்கு…” அதிகார தோரணையில் அதட்டினார்.
பின்னர் கலங்கிய குரலில் “ஆத்தா இந்த கிளவி கண்ணை மூடறதுக்குள்ள என் பேரனோட குழந்தையை கண்ணுல காட்டு டி இராசாத்தி… ஊரு உலகத்துக்கு இரண்டு கல்யாணம் கூட பெரிசா பேசாது என் பேரனுக்கு பிரச்சனை பேசிடுமோ மனசு சஞ்சலப்படுது” என்ற படி சோகபாட்டு பாடினார்.
“பாட்டி.. நீங்க தானே கொஞ்ச நேரம் முன்ன…” என்றவள் தயங்கி நிறுத்தினாள்.
“ஏந்தாயி பேசியதை பக்கத்துல வந்து பேசு இந்த கிளவிக்கு காது கேட்காது பார்வையும் மங்கல தான் தெரியும்” என்றதும் தன்ஷிகாவிற்கு மனதில் அப்போ அக்கா எதுக்கு வீட்டுக்குள்ள இருந்து பாட்டிக்கு பதில் சொல்லிச்சு அப்போ அது அக்கா என்னை சொன்ன பேச்சு..” என்று எண்ணவும் கண்ணை கட்டியது.
“ஏய் தன்ஷிகா என்னாச்சு மா….” கவியரசன் தட்ட அவன் தோளில் விழுந்த அவளோ இமையை திறந்தாள்.
“ஒ.. ஒன்னுமில்லை.. கொஞ்சம்… மயக்கம்”
“ஆட்டுக்குட்டி பத்தி நினைச்சியே உன்னை பத்தி யோசிச்சியா போ ரெஸ்ட் எடு… வந்ததிலருந்து உனக்கு அலைச்சல் இதுல அதிர்ச்சி தான் அதிகம். சாரி டி ” கவியரசன் எழுப்பினான்.
“ஏல அரசா… குழந்தை பயந்து இருக்கும் இன்னிக்கு கோவிலுக்கு சேர்ந்தாப்பல போயிட்டு வாங்க” என்றார் அம்முதியவள்.
“சரிங்க அப்பத்தா” என்றான்.
கவியரசன் பயந்தது தன்ஷிகா மயங்க செய்ததாலே அவன் மதிய உணவினை தங்கள் அறைக்கு எடுத்து சென்றான்.
“தன்ஷி சாப்பிட வரலையா” அவந்திகா கேட்டபடி அறையை பார்க்க கவியரசன் இருந்த கோவத்தை சமன் செய்து
“அவ ஊட்டி விடறதா சொன்னா அதனால அங்க போயி சாப்பிட்டுக்கறேன்” என்று நகர்ந்தான்.
அவந்திகா கோவம் கட்டுக்குள் அடங்காது போக சாப்பிடாமல் அறைக்குள் சென்றாள்.
தங்கள் அறையில் சென்றவன் சாதத்தை கரண்டியால் பிசைந்து ஸ்பூனால் அவளுக்கு ஊட்ட வர மறுக்காமல் உண்ண ஆரம்பித்தாள்.
“சாயந்திரம் கோவிலுக்கு போகலாமா?”
” ம்… போலாம்” என்றவன் அவளுக்கு ஊட்டி விடுவதில் குறியாக இருக்க தன்ஷிகா அவனை தான் இமைக்காமல் பார்த்தாள்.
இவனை வேறொருத்திக்கு பங்கு வைக்க யாருக்கு தான் மனம் வரும் அக்கா தன்னை ஊர் அறிய ஏற்று கொண்டாலும் மனதில் தன்னை சக்களத்தி என்று தானே எண்ணுவாள் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையா…. நானா எங்கேயாவது போய் யாருக்கும் தெரியாம வாழ செய்தா என்ன? கவி கட்டின தாலி போதும் நான் எங்க வேண்டுமெண்றாலும் வாழ… என்று தாலியின் சரடை தொட… அவனோ அய்யோ இப்ப இவ என்ன நினைப்பா என்று கணிக்க முடியலை கோவிலுக்கு போய் திரும்பியதும் உண்மை சொல்லிட்டாயென்ன என்று கவியரசன் மனதிலே எண்ணினார்கள்.
மாலை கோவிலுக்கு கிளம்ப காத்திருந்தார்கள்.
இங்கே அவந்திகா அவளும் இவர்களோடு கோவிலுக்கு செல்ல திட்டம் போட ஆயத்தமானள்.
பட்டு சேலை நீட்ட இம்முறை மற்ற எதையும் யோசிக்காமல் வாங்கியவள் சேலை மாற்ற அவன் இருக்கும் பொழுதே கதவை சாற்றினாள்.
“என்ன தான் மனசுல ஒடுது….”
” எதுவுமில்லையே…” என்று சொன்னாள்.
“இல்லையே.. என்னை வச்சிக்கிட்டே சேலை மாத்த கதவை சாத்தற… அப்போ நீ நீயா இல்லைனு புரியாதவனா நான்.
ஷிகா…. ஷிகா… இங்க பாரு… நான் உன்னை அடிமைபடுத்தவோ காமத்திலோ என் சுயநலத்துக்காக உன்னை கல்யாணம் பண்ணலை ஷிகா…
கொஞ்சம் டைம் கொடு…. எல்லாம் தெளிவாக சொல்றேன்… இல்லை உனக்கு இப்பவே தெரியனும் என்றாலும் கோவிலுக்கு போயிட்டு வந்ததும் சொல்றேன் ஆனா நான் சொன்னா நீ நம்புவியா… இல்லை நம்பாம போயிட்டா அதான் பயம்.. சரி கோவிலுக்கு போயிட்டு வா சொல்றேன் மா” என்றான்.
“நீங்க வெளியே போங்க சேலை மாத்தனும்” என்றாள் ஷிகா.
அவன் வெளியேறியதும் நானே அக்காவுக்கு தொல்லை இல்லாமல் எங்கயாவது போகலாம் பார்த்தா லெமன் ரைஸ் ஷிகா ஷிகானு சொல்றான்… என் மேல தனி இன்ட்ரஸ்ட் காட்டறார்… அப்பத்தா சொன்ன மாதிரி குழந்தை மட்டும் பெற்று கொடுத்துட்டு போனா என்ன? ஆனா அது என்னால முடியுமா….? சேலை மாற்றி வர அவந்திகா சேலை கட்டி நிற்க தன் அக்கா தன்னை பார்ப்பதில் முதல் முறையாக அவளின் கண்களில் பொறாமை கண்டறிந்தாள் தன்ஷி.
Spr going…..