தேவதை 28
வாழ்க்கை பல சுவாரசியங்கள் நிறைந்தது தான். பலருக்கு அது இனிமையான அனுபவமாக நிகழ்ந்துவிடும். சிலருக்கு அது மறக்க முடியாத துக்கமாக மாறிவிடும். மாலினிக்கும் அப்படி மாறியது தான் அவள் செய்த துரதிஷ்டம்.
“அப்பா நான் இன்னும் நிறைய சாதிக்கணும் பா. ப்ளீஸ் பா இதுக்குள்ள திருமணம் வேண்டாம்“.
“நீ தேர்டு இயர் படிக்கும்போதே உன்னை இவங்க பொண்ணு கேட்டுட்டாங்க. நான் தான் படிப்பு முடியட்டும்னு வெயிட் பண்ணேன். அதுக்குள்ள அவனுக்கு வெளிநாட்டு வேலை வந்துருச்சுன்னு போயிட்டான். இப்ப திரும்பி வந்து கேட்கும் போது. இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்கன்னு எப்படி சொல்ல முடியும்?. படிப்பு முடிஞ்சுருச்சு வேலையிலும் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்குற, அடுத்து என்ன, திருமணம் தானே??. நான் என் பிரண்டுக்கு வாக்கு கொடுத்துட்டேன். சத்திரம் எல்லாம் பார்த்தாச்சு. பத்திரிக்கை அடிக்கிறதுக்கு கூட எல்லாம் முடிவு பண்ணியாச்சு. உனக்கு எந்த வேலையும் இல்ல அமைதியா உட்கார்ந்து மனவரையுல தாலியை வாங்கி கட்டிக்க அவ்வளவுதான்”, என்ற ரீதியில் பேசி விட்டு சென்று விட்டார் மாலினியின் தந்தை.
அவளுக்கு மாப்பிள்ளையாக பார்த்திருப்பது அவருடைய நீண்ட கால தோழனுடைய மகன்தான். ஒரு வகையில் பிஸ்னஸ் பார்ட்னரும் கூட. வெளிநாட்டுக்கு சென்று மேல் படிப்பை எல்லாம் படித்து விட்டு பிசினஸை பார்த்துக் கொள்வதாக கூறி வரனை பேசி முடித்திருந்தார். சம்மதமா என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. இதுதான் என்று அவள் வாழ்க்கையில் திணிக்கப்பட்டவன் தான் ஆகாஷ்.
“அம்மா நீங்களாவது எடுத்து சொல்லுங்களேன். அந்த ஆளோட பார்வையே சரியில்லை, இப்பவே விழுங்குற மாதிரி பார்த்து வைக்கிறான் “, என்று தாயிடம் கூறினாள். அவர் ஏற்கனவே ஒரு பிள்ளை பூச்சு. அவர் இவளுக்கு உதவி செய்வார் என்று அவள் எப்படித்தான் நினைத்தாளோ தெரியவில்லை. கடைசியாக தம்பியிடம் கூட தனக்காக பேச சொல்லி கேட்டாள். அவனும் முதுகெலும்பு இல்லாதவன் தான் தந்தைக்கு ஜால்ரா அடித்து கொண்டே அமைதியாகிவிட்டான். பிறகு என்ன??, அடுத்த ஒரு மாதத்தில் திருமணம். தந்தை தான் இப்படி என்றால் அவள் சென்ற புகுந்த வீடும் அதற்கு மேல் இருந்தது. ஆணாதிக்க மிக்க இந்த சமுதாயத்தில் ஆண்கள் சொல்வதை தான் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு குடும்பம். யாராவது ஒருவர் தவறு செய்தால் மற்றவர்களிடம் போய் அதை சொல்லலாம். குடும்பமே தவறானவர்களாக இருந்தால், யாரிடம் சொல்வது??. அவள் தந்தையும் அதற்கு மேலே தானே இருந்தார். தாயிடம் புலம்ப மட்டுமே அவளால் முடிந்தது. அவரும் தன் பங்கிற்கு தன்னுடைய அத்தனை வருட அடக்கு முறையை அவளுக்கும் புகுத்த எண்ணினார். ஆம் அவளையும் அடங்கி பொறுத்து போக சொன்னார். பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை நிலை இதுதானே??. அவளும் பொறுத்து போனாள். ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா?? அந்த எல்லை எது என்பதுதான் அங்கு கேள்விக்குறியானது??.
“நான் என்ன சொல்றேனோ அதை நீ கேட்டு தான் ஆகணும் “, என்று அழுத்தமாக கூறினான் ஆகாஷ்.
“அதுக்காக இப்படி எல்லாம் எப்படி பண்றது?, எனக்கு இதெல்லாம் பிடிக்கல அருவருப்பா இருக்கு”, அவன் சொன்னதை செய்ய முடியாமல், தடுமாறியபடி முதல் முறையாக கேள்வி கேட்டாள்.“ஏய் பொண்டாட்டினா என்னடி??, படுக்கை அறையில் வேசியா இருக்க சொல்லி, உங்க அம்மா உனக்கு சொல்லித் தரலையா? “, என்றவன் கேட்ட நொடி.
“ச்சீ”, என்று முகத்தை அசுசையாக சுளித்தாள். அவள் தாடையை பிடித்து இறுக்கியபடி கேட்டான்.“ அவங்களும் மிருகங்கள் கிடையாது மனுஷி தான்”, என்றாள் அழுத்தமாக.
ஆகாஷுக்கு பேசினாலே பிடிக்காது. கோபம் வரும். எதிர்த்து பேசினால்?? எப்படி அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியும்??. காலம் காலமாக ஆண்களின் அடக்கு முறை என்பது பெண்களை அடிப்பது தானே??, அவன் சொல் கேட்கவில்லை என்றால் அவ்வளவு அடிப்பான். ஒரு கட்டத்துக்கு மேல் இவள் போராடுவதற்காக திரும்பி அடிக்க முயல. அவன் கொடுங்கோலனானான். அவன் சொன்னதை அவள் கேட்காத போது, அடித்து அடித்து துன்புறுத்தி அவளை தன் இச்சைக்கு உட்படுத்தினான்.
மொத்தத்தில் தாம்பத்தியம் என்ற பெயரைக் கேட்டாலே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள். அறையிலுள் இரவில் செல்வதற்கே பயந்தாள்.
பெண்களைப் பாடாயப்படுத்தும் அந்த மூன்று நாட்கள் அவளுக்கு சொர்க்கமாக தோன்றிய நாட்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த நேரத்தில் கூட அவளை தொல்லை படுத்த ஆரம்பித்தான் ஆகாஷ். பணக்காரப் பெண் ஏழைப் பெண் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அடக்கி ஆளும் ஆண்களுக்கு பெண் அவ்வளவுதான். அந்த வன்புணர்வுக்கு ஒரு முடிவு வராதா? என்று காத்துக் கொண்டிருந்தவளுக்கு அவள் கர்ப்பமாக இருப்பது சற்றே ஆறுதல் படுத்தியது.
ஆனால் அதையும் அவன் நீடிக்க விடவில்லை. இதற்குள் குழந்தை வேண்டாம் என்றான். அவள் வேண்டும் என்றாள். அடித்தான் உதைத்தான். அவனுக்கு குழந்தையாக இருக்க பிடிக்காமல் அந்த குழந்தை பயந்து விட்டதோ என்னமோ, களைந்து போனது. அவளுக்காக இருந்த ஒரே ஒரு பிடிப்பு அதுவும் இல்லாமல் போனது. அதன் பிறகு நடை பிணமாக நடமாடிக் கொண்டிருந்தவளை விதி மட்டும் விட்டு வைத்திருக்கவே இல்லை. வாழ்க்கையில் இருந்த பிடிப்பு எல்லாம் முடிந்துவிட்ட ஒரு உணர்வு. எதைப் பற்றியும் யோசிக்காமல் பிணமாகவே வாழ ஆரம்பித்திருந்தாள் பாவை அவள்.
ஒவ்வொரு நாளும் தனிமையில் அம்மா என்று ஒரு குரல் கேட்கும் அவள் காதுகளுக்கு மட்டும். அடி வயிற்றை பிடித்துக் கொண்டு அழுவாள். சில நேரங்களில் இந்த குழந்தையும் இவனிடம் வந்து சித்திரவதை படுவதை விட களைந்து போனதே நல்லது என்று கூட தோன்றும். உனக்கு குழந்தை பிறந்து இருந்தால் இவனிடம் இருந்து தப்பித்து இருக்கலாம் என்று ஒரு மனமும் தோன்றும். இப்பொழுது மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது தப்பித்து விடு என்று அவள் மனம் அரற்றி கொண்டே இருந்தது. ஆனால் செய்யத்தான் அவளுக்கு துணிவு வரவில்லை.
தந்தை மீது இருந்த பயம் கலந்த மரியாதை தான் அதற்கு காரணம். தந்தை தன்னை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார். இதையெல்லாம் தந்தையிடம் கூறவும் முடியாது. என்று பல்லை கடித்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தியவளுக்கு பேரிடியாக நிகழ்ந்தது ஒரு சம்பவம்.
ஆம், அந்த நாள் அவள் வாழ்க்கையின் இருட்டு நாளா அல்லது வெளிச்சம் அடைந்த நாளா என்று தெரியாது. ஆனால் வாழ்க்கையில் துணிந்த நாள் என்று சொல்லலாம். அன்று அவர்களுடைய அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அவர்கள் கட்டிலேயே நிறைய குட்டி குட்டி ட்ராவுகள் இருக்கும். அதனுடைய சாவி எப்பொழுதும் அவனிடம் தான் இருக்கும். பெரிய ரேக்கை மட்டும் திறந்தாள். அதில் தலையணை போர்வை என்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அது அவள் உபயோகிக்கும் வண்ணம் தான் இருக்கும். அன்று ஏனோ அந்த சின்ன ரேக்குகளின் சாவிக்கொத்தை அவன் தவறுதலாக அதிலேயே விட்டிருந்தான். அப்படி அவனே வைத்துக் கொள்ளும் அளவிற்கு என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவல் அவளுக்கு ஏற்பட்டது. ஜன்னல் வழியாக சென்று பார்த்தாள். அவனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் தன்னை தொலைத்து கட்டி விடுவான் என்று எண்ணியவள். அவன் வருவதற்குள் பார்த்துவிடலாம் என்று அறை கதவை சாத்திவிட்டு வந்தவள். சாவிக்கொத்து இருந்த அந்த டிராவை முதலில் திறந்தாள். அதில் சீடிக்கள் நிறைய இருந்தது.
“சீடிக்கள் எல்லாம் இந்த காலத்தில் உபயோகிக்கிறார்களா என்ன?? “, என்று சிந்தித்தவள் ஒவ்வொன்றையும் எடுத்து புரட்டி புரட்டி பார்த்தாள். குறி இட்டு எண்ணும், சில கோட் வேர்ட் போல எழுத்துக்களும் இருந்தது. ஆனால் அந்த எழுத்துக்கள் அவளுக்கு புலப்படவில்லை. அதைப் பூட்டிவிட்டு அடுத்த ட்ராவை திறந்தாள். அதில் நிறைய பென் ட்ரைவம் ஒரு பாக்ஸ் நிறைய மெமரி கார்டுகளும் இருந்தது. இவன் ஏதாவது தீவிரவாத இயக்கத்தின் கூட்டாளியோ??, அத்தனை பொருட்களை பார்த்து அவன் மனதில் தோன்றியும் முதல் கேள்வி இதுதான். அந்த ட்ராவை சாத்தியவள் யோசனையுடன் அடுத்த ட்ராவை திறந்தாள். அவள் கேள்விகளுக்கான விடை எல்லாம் அந்த டிராவில் இருந்தது. ஆம் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பங்கள் இருந்தது.
கணவனுடையது என்று ஆசையாக எடுத்து பார்க்கும் எண்ணம் அவளுக்கு இல்லை. இருந்தாலும் பத்திரமாக பூட்டி வைக்கும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க தோன்றியது.மேலே இருந்த ஆல்பத்தை தான் முதலில் எடுத்தாள். அதில் முப்பது என்று எழுதி இருந்தது. ஆல்பத்தை திறந்தவள். அதிர்ச்சியில் கண்கள் விரிய பார்க்க முடியாமல் தூக்கி போட்டு விட்டாள். அது திறந்து கொண்டு விழுந்து, அவளுக்கு பல்லை காட்டிக் கொண்டிருந்தது. அவளுடைய புகைப்படங்கள் அந்தரங்கமான புகைப்படங்கள். குளியலறை புகைப்படங்கள் கணவன் மனைவி உறவு கொள்ளும் புகைப்படங்கள். அவன் வற்புறுத்தி வேறு விதமாக அவளுடன் கலவி கொண்ட புகைப்படங்கள். தன்னை மீட்டுக் கொள்வதற்கே அவளுக்கு சற்று நேரம் பிடித்தது. வேறு வேறு ஆல்பங்களை எடுத்து பிரித்து பார்த்தாள். ஐந்து என்று போடப்பட்டிருக்கும் ஆல்பத்தில் வேறு யாரோ ஒரு பெண்ணின் புகைப்படங்கள் அதே போல ஒவ்வொரு எண்ணிற்கும் வெவ்வேறு பெண்களுடன் கூடிய புகைப்படங்கள். அவளுடையது மட்டும் 30 என்று போட்டு ஏ. பி. சி என்று மூன்று ஆல்பங்கள் இருந்தது.
கண்கள் கூசியது அவளுக்கு. தன்னை மீட்டுக்கொள்ள நேரம் பிடித்தது. எழுந்து நின்றாள் இரண்டடி பின்னால் வந்தாள் அந்தக் கட்டிலை அப்படியே பார்த்தாள். இதே அறையில் தான் ஏதோ ஒரு கோணத்தில் இதெல்லாம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிந்தித்தவள் ஒவ்வொன்றையும் எடுத்து புரட்டிப் போட்டாள். ஒரு செல்ஃபில் அவள் எதிர்பார்த்த கேமரா பிளவர் வாஷிற்குள் இருந்தது. வேலைக்கார பெண்மணிக்கு இண்டர் காமில் அழைப்பு விடுத்து மேட்ச் பாக்ஸை எடுத்து வர சொன்னவள் அங்கிருந்த சரக்கு பாட்டிலை எடுத்து கட்டில் முழுவதும் ஊத்தினாள் .
தன் ஹேண்ட் பேக்கை எடுத்தாள் தான் போட்டுக் கொண்டு வந்த நகைகளை மட்டும் அதில் திணித்தாள். தனக்கு தேவைப்படும் என்று சில மெமரி கார்டுகளையும் பென் டிரைவையும் அதன் உள்ளே போட்டுக் கொண்டிருக்கும்போதே அறை கதவு தட்டப்பட்டது. கதவை மெல்ல திறந்தாள் வேலைக்கார பெண்மணி மேட்ச் பாக்ஸை நீட்ட. பெற்றுக் கொண்டு கதவை ஓங்கி சாத்தியவள். அந்த அறையையே கொளுத்தி பத்த வைத்திருந்தாள். இன்னும் எங்கெங்கு என்ன என்ன மறைந்து இருக்கிறது என்று அவளுக்கு என்ன தெரியும்??. அவளுடைய அலைபேசியில் கேமரா இருந்ததற்கான பதிவையும் அந்த கேமராவையும் கூட தன்னுடைய ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்தினாள். அவளுக்கு விவாகரத்து வேண்டும் அல்லவா அதை காட்டி தானே அவள் அதை பெற முடியும். இல்லையென்றால் அவள் தந்தையே ஒத்துக் கொள்ள மாட்டாரே??. தந்தைக்காக தயங்கி இருந்தாலே தவிர அவள் ஒன்னும் கோழை இல்லையே??. இதற்கு மேலும் ஒரு பெண் கோழையாக இருந்தால் அது பெண் இனத்திற்கே இழுக்கு என்று நினைத்தாள்.
அறை திகுதிகு என்று எரிய ஆரம்பிக்க. ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு கதவை சாத்திவிட்டு அவள் பாட்டிற்கு கீழே இறங்கினாள். அதற்குள் நெருப்பின் வாசனை அந்த வீடு முழுவதும் பரவியது. என்னமோ ஏதோ என்று அவளுடைய மாமனாரும் மாமியாரும் வர. அவர்கள் படிகளில் ஏற அவள் சாவதானமாக படிகளில் இறங்கினாள். ஆட்டோவை பிடித்து தன் வீட்டிற்கு வந்து விட்டாள்.
ஆனால் அதன் பிறகு எவ்வளவு போராட்டங்கள். விவாகரத்து தருகிறோம் கையில் இருக்கும் பொருள்களை கொடுத்து விடு என்று ஆகாஷும் அவன் தந்தையும் வந்து பேசினார்கள் . அது கூட அவளுக்கு அதிர்வு இல்லை. அவளுடைய தந்தை தான் அவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்.
“நீ எல்லாம் மனுசனா??, உன் பையன் செஞ்ச தப்புக்கு நீயும் உடந்தையா இருக்க? “, என்று மரியாதையில்லாமல் மாலினி கேள்வி கேட்க.“ கொடுத்துடு மாலினி நமக்கு தேவையில்லாத பிரச்சனை வேணாம் “, என்று தந்தையும் பேசும்போது முழுதாக உடைந்துவிட்டாள். “அப்பா இவன் ஒரு பொறுக்கி. மனைவி மட்டுமில்லாம நிறைய பெண்களோட தவறான தொடர்பில் இருந்து அவங்களோட போட்டோ வீடியோன்னு அவங்களுக்குத் தெரியாம வச்சிருக்கான். உங்க பொண்ணோட போட்டோப்பா அதை அவன் தப்பா யூஸ் பண்ணி இருக்கான் “, என்று தந்தையிடம் வாதம் புரிந்தால் மாலினி. “ உனக்கு டைவர்ஸ் வேணும்ன்ட்ட அவன் கூட வாழ மாட்டேன்னு சொல்லிட்டேன் அவங்க குடும்பத்த அசிங்க படுத்த வேண்டாம். அவன் எப்படி இருந்தா நமக்கு என்ன??. அங்க இருந்து எடுத்துட்டு வந்தது அவங்க கிட்ட கொடுத்திடு. அது கோர்ட்டுக்கு போனா உனக்கும் தான் அசிங்கம் “, என்று பேசினார். தான் எடுத்து வந்தது அவர்களுக்கு தெரியாது தந்தை தான் கூறி இருக்கிறார் என்ற நிதர்சனம் அவளுக்கு புரிந்தது. தந்தையை பார்க்கும் போது மிகக் கேவலமான மனிதராக தோன்றியது அவளுக்கு. என்ன செய்வதென்றே தெரியவில்லை அவளுக்கு எவ்வளவோ போராடினாள். ஆனால் எல்லாம் சேர்ந்து அவளை கொடுத்துவிடு அழித்துவிடு என்று ரீதியிலே பேச. பத்திரப்படுத்தி வைத்திருந்த பொருட்களில் இருந்து சிலவற்றை மட்டும் எடுத்து வந்து அவர்கள் கண் முன்னால் எரிந்தவள் . அமைதியாக இருந்து விவாகரத்து பெரும்போது கோர்ட்டில் அதை வெளியீட்டும் விட்டாள். அவள் வேண்டுமென்றே செய்யவில்லை என்றாலும் அவளுடைய புகைப்படங்கள் அடங்கிய அனைத்தும் கருகி நாசமாகி போயிருக்க. வெளிநாட்டுப் பெண்களின் புகைப்படங்கள் மட்டும் தான் அவள் கையில் சிக்கியது. ஆனால் அவளை ஆதாரமாக சிலவற்றைக் கூறியவள் சில இந்திய பெண்களின் வீடியோக்களை முகத்தை மறைத்து வீடியோவை வெளியிட்டாள். அதை செய்யும் போது அவள் எவ்வளவு கூனி குறுகினாள் என்று அவள் மட்டுமே அறிவாள். எல்லாவற்றையும் வெளியிட்டு விட்டு வீட்டுக்கு வரும்போது அவளுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை மாறாக திட்டு அடி என்று தந்தையிடமும் கிடைத்தது. ஆனால் ஒரு கயவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்த திருப்தியுடன் அதை அமைதியாக பெற்றுக் கொண்டாள். இப்படி ஒரு தந்தைக்கு மகளாக இருப்பதை விட அவரிடம் அடி வாங்கி சாவதே மேல் என்று நினைத்து விட்டாள். அதன் பிறகு அந்த வீட்டில் யாருமே அவளிடம் சரியாக பேசுவதில்லை தாய் மட்டும் அவ்வப்போது தந்தை இல்லாத நேரத்தில் பேசுவார். நடைபிணமாகத்தான் அந்த வீட்டிலும் அவள் வாழ ஆரம்பித்தாள். அந்த நடைப்பினத்திற்கு உயிர் கொடுத்த தேவதை இதோ அவள் அருகில் உறங்கிக் கொண்டிருந்த இந்த ஷாலினி தான். அவள் தலையை வருடி கொடுத்தாள். திடீரென்று ஒரு சந்தேகம் எழுந்தது. அந்த அறையை சல்லடை போட்டு தேடினாள். அவள் எதை எதிர்பார்த்து தேடினாளோ அது கிடைக்கவில்லை மனதின் உள்ளே ஒரு சிறு சந்தோஷம். இவன் அவன் இல்லை என்று. அவன் கூறிய காரணங்கள் எல்லாம் வரிசை கட்டி நின்றது. மனம் ஏனோ அதையெல்லாம் ஏற்க மறுத்தது. தோய்ந்து மடிந்து சரிந்து அமர்ந்தாள். தூக்கம் அவள் கண்களை விட்டு தூர போயிருந்தது.
Achoooo paavam yepdi erunthu erukkum.. Oru ponnu nambura frst aal husband next appa… Ipdi yella eruntha aangal vargathaiaye avl veruka thaan seival… Atharku apartavanum erukkanu avaluku nirubikka poraduran paavam….
Aravindh malini oda past therintha appuram aval ah kalyanam pannanum nu decide panna piragu andha camera vishyatha solli irukkalam apadi seiyathu evolo periya thappu nu ippo puriyuthu
intha mari maliniku nadanthu iruku atha aravind apadi panathunu na than sonnathum malini odanchi poita irunthalum oru chinna nambikai iruku atha anga mattum iruku inga camera illnathum avan pesinatha yosikura . Purushane intha mari la panna vera yara nambuva oru pondati
Nice
🥺🥺
Achacho paavam maalini, so sadd 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺