ஹலோ மிஸ் எதிர்கட்சி
அத்தியாயம்-1
வீதியெங்கும் வண்ணக் கொடிகள் வரிசையாய் கம்பம் நட்டு கட்டப்பட்டது. கட்டப்பட்ட கம்பத்தில் டியூப்லைட் வேறு பொறுத்தப்பட்டு ஜோராய் மின்னியது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்கவிருக்கும் எதிர்கட்சி தலைவர்களின் பேச்சிற்காக மேடைப் கம்பீரமாய், காட்சிக்கு தயாரானது.
பாதிவரை பந்தலும் மீதி சேர் மட்டும் நேர்த்தியாக இருந்தது.
எப்படியும் இரவு மழை வந்தால் பாதி நனைய நேரும். எப்படியாவது மூன்று மணி நேரம் நடக்கவிருக்கும் இக்கூட்டம்.
அது முடியும் வரை மழை பொழியாமல் இருந்தால், நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் நல்லபடியாக நடக்கும்.
இன்று காற்று வீசுவதை பார்த்தால் மழை இல்லையென்றும் கூறமுடியவில்லை. ஏனெனில் நிச்சயம் மழை பொழியும் என்று செய்தியில் வேறு ஆணித்தரமாக கூறப்பட்டிருந்தது.
ஆனால் இங்கே ‘ஜனநாயக விடியல்’ கட்சியின் கூட்டத்தை ஒத்திவைத்தால் ஆளுங்கட்சி ‘தமிழக எழுச்சி கூட்டணி’ கட்சிக்கு அஞ்சியதாக அல்லவா எண்ணி கேலி செய்வார்கள்.
புயலோ மழையோ இன்று கூட்டம் நடைப்பெற்று, அதில் பேசிடும் ஆர்வத்தில் பணிகள் மளமளவென நடந்தேறியது.
இதோ ‘ஜனநாயக விடியல்’ கட்சி தொண்டர்கள், மக்கள்கள் என்று அந்த கூட்டத்தை காண இருக்கையில் அமர்ந்து காத்திருக்கின்றனர்.
ஒரு பெண், புயல், மழை என்று பொருட்படுத்தாமல் பேசினால் கூட்டம் வீட்டிற்குள் அடைக்காக்குமா என்ன?
அதுவும் ‘ஜனநாயக விடியல்’ இளைஞர் அணிக்கு தலைவியான சுரபி தன் பெயரை போலவே பேச்சாற்றலால் வசியம் செய்வாளே! சாதாரண தமிழ்ப்பேச்சு வீறுக்கொண்டு புரட்சிக்கரமாக பேசினால் உடலில் தேகம் சிலிர்த்து அடங்கும்.
இதில் வயசு பெண் பல மேடையில் வாதத்திறமையால் வென்று நேருக்கு நேராக ஆளுங்கட்சி முதல்வர் இலக்கியனை மூக்குடைக்கும் விதமாக பேசுபவள், இன்று ஆளங்கட்சி தலைவரான இலக்கியனை வெளுத்து வாங்க, பக்கம் பக்கமாக எழுதி வைத்து வந்ததாக கேள்வி.
மழையையும் பொருட்படுத்தாமல் பலரும் வந்திருந்தாலும், இந்த மழை புயல் இல்லாமல் இருந்தால் இந்நேரம் ஊரே கூடியிருக்கும்.
“நிவாஸ் தம்பி… மேடம் கிளம்பிட்டாங்களா?” என்று அந்தவூரின் தலைவர், தொண்டர் எல்லாம் கேட்டறிந்தனர்.
நிவாஸ் சுரபியின் பி.ஏ. இதுவரை எங்கு எதுவென்றாலும் அவனை முன்னே அனுப்பி எல்லா நலத்தையும் கேட்டு அறிந்து, அதன் பின்னே சரியான நேரத்திற்கு வந்து தலைக்காட்டுவாள்.
சிலநேரம் சூழ்நிலை, சில இடத்தை, சில மனிதரை தவிர்க்கலாமென்று இந்த ஏற்பாடு.
இன்றும் நிவாஸ் தான் முன்னே வந்து உலாத்தவும் கேட்டு நின்றனர் தொகுதி தலைவர்.
“அதெல்லாம் மேடம் கிளம்பிட்டாங்க. ஆன்-தி-வே வந்துட்டுயிருக்காங்க” என்று கூறியவன் போனை எடுத்து சுரபிக்கு அழைத்தான்.
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா…
பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா…
நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா…
கேட்கும் ஒலியிலெல்லாம்
நந்தலாலா
நின்றன்
கீதம் இசைக்குதடா
நந்தலாலா…
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னைத்
தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா…” என்ற பாரதியார் பாடல் வரி கொண்ட ரிங் டோன் சுரபியின் அலைப்பேசியில் ஒலித்தது.
“நிவாஸ் நான் ஆன்-தி-வேல இருக்கேன், இன்னும் அரை மணி நேரத்துல அங்க மக்கள் முன்ன வந்துடுவேன்” என்று கம்பீரமாய் மொழிந்தாள்.
லேசாக இடி இடித்து மின்னல் வெட்டியது.
‘இந்த கிளைமேட்டுக்கு வீட்ல இழுத்து போர்த்தி தூங்கலாம். இந்த மேடம் மழை, புயல் காற்று எதுவும் பார்க்காம பேச வர்றாங்க. இந்தளவுக்கு அரசியல்ல ஆர்வமா?’ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.
சுரபி தன் வார்த்தையை கட்டிக்காப்பவள் போல அரைமணி நேரம் நெருங்கும் நேரம் காரில் வந்திறங்கினாள்.
முன்னும் பின்னும் ஒரு கார்கள் வந்தது அவளது பாதுகாப்பிற்கு. பெரும்பாலான காரை தவிர்த்திருந்தாள்.
கூட்டத்தில் கார் வந்ததும் ஆராவாரம், கூடியது.
அதுவும் பெண் தொண்டர்கள் சிலர், சுற்றிசூழு வந்து மலர் கொத்தை நீட்டி வரவேற்க, இன்முகமாய் பெற்றுக்கொண்டு, அவளுக்காக விரித்து வைத்த மலர் கம்பளத்தில் நடந்தாள்.
“நிவாஸ்… செய்தி சேனல்ல யார் யார் இருக்காங்க” என்று கேட்டு வலது இடதென வணக்கத்தை வைத்து உதட்டில் தாராளமான புன்னகையை தழுவ விட்டாள்.
“முன்னனி செய்தி சேனல்ல ஆல்மோஸ்ட் இருக்காங்க மேடம். நம்ம சேனல்ல தனி லைவ் டெலிகாஸ்ட் ஒளிப்பரப்பாகுது.” என்று அவள் அரேஜ் செய்த எல்லாம் சரியாக உள்ளதா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்.
சுரபிக்கென்று தனி சேனல்கள் உண்டு. இங்கே செய்திகளை திரிக்க போட்டி மனப்பான்மை கொண்டவர்கள் தீயாக வேலை செய்வதால், தனி தனி சேனலில் லைவ் டெலிகாஸ்ட் சென்றால் நல்லதென்ற முடிவில் கூறியிருந்தாள்.
அதெல்லாம் நிவாஸ் கனகச்சிதமாக ஏற்பாட்டை முடித்திருந்தான்.
“ப்ரவுட் ஆப் யூ நிவாஸ். எள்ளுனா எண்ணெய்யா இருக்கிங்க” என்று பாராட்டிவிட்டு மேடைக்கு வந்தாள். சுரபி பாராட்ட தயங்க மாட்டாள். அதுவும் அவளது மனதை படித்தது போல காரியம் நடந்துவிட்டால் வாய்விட்டு அடுத்தநிமிடமே சுட்டிக்காட்டி கூறுவதுண்டு.
பேசிக்கொண்டே மேடைக்கு வந்தவள் ஆர்ப்பரித்த மக்கள் கூட்டத்திற்கு பொதுவான வணக்கத்தை வைத்து நிகழ்ச்சியில் அவளுக்கான மேடையில் இருந்தவர்களுக்கு, கரம் குலுக்கி, தனக்கான இடத்தில் அமர்ந்தாள்.
சிறப்புரை பேசப்பட்டுக் கொண்டிருந்தது.
சுரபியின் தந்தை நடராஜனை பற்றி புகழுரையை பேசி கட்சியின் பெருமையை விளக்கி, ஆரம்பமானது.
தந்தை நடராஜனுக்கு மக்கள் மத்தியில் இவ்வூரில் இருக்கும் விசுவாசம் செல்வாக்கு இரண்டால், அவரை பற்றி பேசபேச கரவோசை விண்ணை தொட்டது.
எல்லாம் லைவ் சென்றுக் கொண்டிருக்க, அடக்கமான அமைதியோடு செவிக்குள் பதிய வைத்துக் கொண்டாள்.
நேரங்கள் ஒரு மணிநேரம் நகர்ந்திருக்கும். மாறி மாறி பேசி தள்ளினார்கள் கட்சியின் ஆரம்பக்கால கட்டத்திலிருந்தவர்கள், காற்று ஒருபக்கம் சுழற்றி அடித்து தன் இருப்பை காட்டியது.
நிவாஸோ சுரபியிடம் “மேடம் நீங்க பேசிட்டா நல்லது. எப்ப வேண்டுமென்றாலும் மழை வரலாம். அதுக்கேற்றது போல உரையை முடிச்சிடுவோம்” என்றதும் சுரபிக்கு அதுவும் சரியென்று தோன்றியது.
அதே சமயம் நிவாஸ் பேசிக்கொண்டிருக்கும் கருணாகரனிடம், சமிக்ஜை செய்ய, அவரும் சுரபி பேச வருவதை புரிந்துக் கொண்டு “அடுத்து நம் கட்சியின் செல்லப்பிள்ளை, ஆளுங்கட்சி ஆட்களுக்கு சவாலான சுரபி வார்த்தை போரில் அவர்களை வீழ்த்த வருகின்றார்” என்று சுருக்கமாக அடையாளப்படுத்தி வரவேற்றார்.
மிடுக்கான நடையுடன் தோரணையாக நடந்து வந்தவள் மீண்டும் ஒர்கணம் பொதுவாக மக்களை பார்த்து வணக்கம் வைத்து, ”ஆன்றோருக்கு, இங்கே குழுமிருக்கும் சான்றோருக்கு, மேடையில் மலர்ந்த என் வழிகாட்டிகளுக்கும், என் தந்தை சார்பாக, நம் கட்சி சார்பாக, எனது பணிவான முதற்கண் வணக்கத்தை தெரிவிக்கின்றேன்.” என்று ஆரம்பிக்க, அதை நேரடி ஒலிப்பரப்பில் காண ஆரம்பித்த ஆராவமுதன்.
பெண்ணவளின் பேச்சை ஒரு பக்கம் கேட்டுக்கொண்டே அவளது உச்சி முதல் பாதம் வரை இருக்கும் மாற்றத்தை தரிசித்தான்.
விலை மதிப்புமிக்க காட்டன் புடவை, அதை நேர்த்தியாக அணிந்திருந்தாள்.
ப்ளவுஸ் கழுத்தை ஒட்டி ‘போட் நெக்’ வைத்து தைத்திருந்தாள்.
முத்துமாலை ஒன்றை கழுத்தில் கோர்த்திருக்க, அதற்கேற்றவாறு முத்து கம்மல், முன்பெல்லாம் விபூதி குங்குமம் என்று நெற்றியில் வரிசையாக பிந்தியோடு இடம் பெற்றிருக்கும். அரசியலுக்கு வந்தப்பின் தனிப்பட்ட மதம் சார்ந்து தெரியக்கூடாதென்று அதையெல்லாம் வைப்பதை நிறுத்திக்கொண்டாள்.
ஒரு நேரலை நிகழ்ச்சியில் இலக்கியனின் ஆட்களால் தூண்டிவிடப்பட்டு, நீங்க இந்து மதத்திற்கு அதிகமாக சலுகை தருவதாக கேள்விக்கேட்க, அன்றிலிருந்து தான் விபூதி குங்குமம் வைப்பதை நிறுத்தியிருந்தாள்.
கண்கள் ஆவேசமாக தன் தந்தை இலக்கியனை ஒரு சிறுபெண் வசைமாறி திட்டுவதை ஆக்ரோஷமாக பார்வையிட்டான்.
”பாருங்க தம்பி அப்பா ஆளுங்கட்சில பதவில இருக்கறவர். இந்த பொண்ணு இந்த கிழி கிழிக்கறா. இவளோட அப்பா நடராஜன் கூட நம்ம ஐயாவை இப்படி அவமதிப்பா பேசமாட்டாங்க. இவ என்னடான்னா ரொம்ப பேசறா. ஏதாவது செய்யணும் தம்பி” என்று ஆராவமுதன் அருகாமையில் தொலைக்காட்சியை கவனித்த சிதம்பரம் கொதித்துவிட்டார்.
அவருக்கு இலக்கியன் மீதுயிருந்த விசுவாசத்தால் கோபமானார்.
“அவ பேசுவா அங்கிள். அவ இதுவும் பேசுவா. இன்னமும் பேசுவா. ஏன்னா அவளுக்கு பெயர் வச்சவர் அப்படி. அதனால… வாய் ஜாஸ்தியா தான் இருக்கும்” என்றவனது பேச்சே அவனுக்குள் கிளப்பிய கோபத்தை தணித்து இதமாய் இதயத்தை குளிர்வித்தது. கூடுதலாக உதட்டில் குறுஞ்சிரிப்பு.
தொலைக்காட்சியில் அதீத புயல்காற்றால் சுரபியின் சேலை சற்று விலக, அதை யாரும் அறியாது பேச்சாற்றலையும் கைவிடாமல் சரிசெய்து எழுதி வைத்ததை மனனம் செய்யாமல் காட்டாறு போல பேசினாள்.
ஆராவமுதன் பார்வை சுரபியை விட்டு அகலாமல் இருக்க, சிதம்பரம் “இந்த பேச்சு பேசறவளை கடத்திட்டு போய் சோறு தண்ணி இல்லாம வைக்கணும் தம்பி.” என்றதும் ஆராவமுதன் பார்வை நெற்றி சுருக்கி சிதம்பரத்தை கண்டு மீண்டும் தொலைக்காட்சியை நோட்டமிட்டது.
“சரிங்க தம்பி நாங்க கிளம்பறோம்.” என்று தன்னுடன் இருந்தவர்களோடு புறப்படுவதாக சொல்ல, தொலைக்காட்சியில் கண்ணை எடுக்காமல் தலையாட்டினான்.
சிதம்பரம் மற்றவர்களை அழைத்து புறப்பட்டார். இங்கு ஆராவமுதன் தனிமையை தேடி வந்தானே ஒழிய, தந்தையின் கட்சி ஆட்களோடு கலவரத்தை செய்வதற்கு இல்லையே.
தன் கையில் வைரக்கடிகாரம் மின்ன அதில் நேரத்தை கவனித்தான் ஆராவமுதன்.
இன்னமும் அரை மணி நேரமாவது சுரபி பேச்சு தொடரும் என்றதை யூகித்து ஒலியை கூட்டி, அவன் வழக்கமாக புகைக்கும் சிகரெட்டை எடுத்து லைட்டரால் பற்ற வைத்தான்.
இந்த பழக்கம் அடிக்கடி பழகியது அல்ல. யாருமில்லாது தனித்து இருக்கும் போதும், அல்லது இது போன்ற குளிருக்கும் மழைக்கும் மட்டும் பயன்படுத்துவான்.
*மது புகை உடலுக்கு கேடு*
உடலில் ஆரோக்கியத்தை சமன்படுத்த நுரையீரலை சுத்தப்படுத்தும் உணவுகளையும் மறுபக்கம் எடுத்துக்கொள்ளுபவன்.
சிகரெட்டால் புகைத்து இழுத்து விட்டவனின் பார்வை இம்மியும் சுரபியை விட்டு அகலவில்லை.
நிவாஸ் சுரபியின் காதில் என்னவோ உரைக்க, சுரபி அதற்கு தலையாட்டிக் கொண்டாள்.
இங்கு ஆராவமுதனோ ”புயல் மழை அதிகரிக்க போகுது மேடம். உன் ஆத்து ஆத்துன்னு ஆத்தற பேச்சு போதும்னு சொல்லிருப்பான்.” என்று எண்ணி குறுநகைக்க, அதையே சுரபி, “நிறைய பேசணும்னு நினைச்சது. இங்க புயல் மழை வருவதா, வானிலை அறிக்கை அலார்ட் செய்தும், நம்ம ஒரு விஷயத்துலயும் பின் வாங்க கூடாதுன்னு நினைச்சதை நடத்தி காட்ட வந்துட்டோம். நமக்கு அதுதானே பழக்கம். ஆனாலும் நாம இயற்கைக்கு மரியாதை செய்து பேச்சை முடிச்சிக்கறேன். ஏன்னா நம்ம கட்சி தொண்டர்கள், மக்கள், நமக்காக பந்தோபஸ்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட போலீஸ் என்று யாரும் சிரமப்படக்கூடாது.
எல்லாரும் நேரத்துக்கு வீட்டுக்கு போகணும். என்னுடைய அடுத்த மேடை பேச்சுல நம்ககான அங்கீகாரங்கள் தொடரும்.
இலக்கியன் சார்… இங்க போட்ட ரோடு வேற குண்டும் குழியுமா இருப்பதா கேள்விப்பட்டேன். வாங்கின பணத்துக்கு ரோடாவது ஒழுங்கா போடுங்க. இது உங்க ஊரும் தானே.” என்றவள் நக்கலாய் நேரலையில் சிரித்து, “இத்துடன் இனிய உரையை முடித்துக் கொள்கின்றேன். நன்றி மக்களே.” என்று இருகரம் குவித்து தலைவணங்கினாள்.
“மழை பெய்தா இந்த மாதிரி சரிவு பகுதியில் ரோட்டோட நிலைமை கொஞ்சம் குண்டு குழியுமா தான் இருக்கும். வந்துட்டா… போறப்ப கூட எங்கப்பாவை நக்கல் பண்ணறதுக்கு?’ என்று ஆராவமுதன் பற்களை நறநறவென கடித்தான்.
ஒவ்வொருத்தராக வணக்கம் வைத்து வர அவர்களுக்கு பதில் மரியாதையாக கரம் குவித்து கிளம்ப தயாரானாள்.
கூட்டம் அவள் மீது அலைமோத வரும் முன், நிவாஸ் அதெல்லாம் பாதுகாப்பாய் காரில் ஏற்றினான்.
மறுபக்கம் ப்ரியாணி பொட்டலங்கள் வழங்கவும் அதை வாங்கிக்கொண்டு சென்றனர் மக்களில் சிலர்.
தொண்டர்கள் கட்சிக்கூட்ட ஆட்களுக்கு லாட்ஜில் தனியறைகளை பதிவு செய்ததால் அங்கு செல்ல முடிவெடுத்தனர்.
கூட்டமும் கோஷமும் நொடியில் களையத் துவங்கியது.
சுரபி கார் அந்த ரோட்டில் கடக்கும் பொழுது சடசடவென பெரிய பெரிய மழைத்துளிகள் மண்ணில் வந்து முத்தமிட்டது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
புதுக்கதையோட வந்துட்டேன். உங்க ஆதரவும் அன்பும் வேண்டி.
படிச்சி எப்படியிருக்குனு சொல்லுங்க.
Super👌👌
ஸ்டார்டிங்கே புயல் மழையோட அமர்க்களமா இருக்குது
Startingae romba nalla irukku akka…. Surabi name azhaga irukku enaku pudicha name la idhuvum onnu…. Super super akka❤️…. Waiting for next ud….
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 1)
இந்த ஆராவமுதன் கோபத்துல அப்படி ஒண்ணும் வன்மம் அதிகமா தெரியலையே…? ஏதோவொரு செல்ல கோபம் தான் தெரியுதுது
ஒருவேளை, சுரபியை லவ் பண்றானோ…? அது சரி, சுரபிக்கு பேரு வைச்சது யாரு மாமனாரா ? மருமகனா ?
அட… இலக்கியனா ? ஆராவமுதனா ? ன்னு கேட்டேன்ங்க. ஏன்னா, அப்படியொன்னும் சுரபி பேச்சுல அனலடிக்கலை பாருங்க, நக்கலும் நையாண்டியும் தான் அதிகமா தெரியுது. ஒருவேளை, இது தான் ஊசிமுனை குத்தல் பேச்சோ…? இருக்கும், இருக்கும்.. இன்னும் என்னென்ன வைச்சு செய்யப்போறாளோ…?
பொறுத்திருந்து பார்க்கலாம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Arambamey amarkalam sis puyal minnal ediyoda thodakkam chumma story a adhirapogudhu😍👍👌👏🥰 eagerly waiting to read this story sis👍
சூப்பர் சிஸ் அடுத்த பகுதிக்கு மிக மிக மிக மிக மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் 😊👍
Super sis
Adeiyappa aarambam yae suravali pechu mattum illa nijamaavae kathu mazhai nu varuthu pola yae
Surabhi super name .heroinkku nalla bold character irukanga
சூப்பர் நல்ல ஆரம்பம் மிகுந்த சுவாரஷ்ய மாக உள்ளது
Spr starting…. interesting
Aramabamey anal therikkum pechoda start pannitinga… Name super… Waiting for next ud…
Sema start sis. Excellent narration. Politics journor. Intresting sis.
Superb 😍🎉👍💯 Interesting 💥💯🔥💥🥰
Starting super 👍
Very intersting superrrr 👌
Unga story always different ❤️❤️❤️
Starting a….semma super sis…..அரசியல் ல…குதிச்சிடீங்க….இனி புயல் , மழைன்னு… பாக்க வேண்டியது தான்….😀😀😀…
Superb 😍🎉👍💯 Interesting 💥💯🔥💥🥰
starting superb sisy. Name selection different ah unga stories mariye iruku . intha storium unga style differrent start and vera mari irukumnu nianikiren . vasikiren sikram
Interesting start👍👍
Nice, different story,
Nice and very different story
Impressive start
Good start 👍👍👍