அத்தியாயம்===10
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். பின்னே அன்று கிரகபிரவேஷம் ஆச்சே.! ஆர்த்தி
பத்துப் பாவாடையும். தங்க ஜிமிக்கியுமாக ஒரு பூந்தேவதை மாதிரி தனித்து நின்றாள்.
திரிந்தாள்.
“சித்தி சித்தாப்பா….இந்தாங்க வெல்லப் பால்…”
“அட…. அம்மாவுக்கு நல்லா உதவி செய்யறியே. சமத்து….”
அய்யர் வந்து ஹோமம் வளர்த்து பூஜை செய்த பின் வீட்டினுள் பசுவும் கந்தரம் வரவழைத்து
திருப்தியாக கிரகபிரவேசம் நடந்தது. வீட்டின் முகப்பில் ‘ஆர்த்தி பவனம்’ என்ற பலகை
மின்னியது.
சுஜா தன் தாயிடம் சென்று “அம்மா எடுத்துக்கங்கம்மா….” பால் தம்பளரை கைபிடித்து
கொடுத்தாள். கண் பார்வை இல்லாவிடினும் தன் மகள் மகிழச்சியாக இருப்பதை புரிந்து
கொண்டாள் அந்தத் தாய்.
“சுஜா….ரொம்ப சந்தோஷம்மா. புது வீட்டிலே எல்லா வளமும் பெற்று நீ நல்லாயிருக்கணும்
மா.” தளர்ந்த கைகளால் உயர்ந்த ஆசிகளை வழங்கிய அம்மாவின் காலிகளில் விழுந்து
வணங்கினாள் சுஜா. தெரிந்தவர்கள்…. சொந்தங்கள் பிரெண்ட்ஸ் என்று அன்று ஆரவாரமான
நாளாக இருந்தது. ஸ்ரீதர் அங்குமிங்கும் ஓடி ஏற்பாடுகள் செய்ததோடு கேட்டரிங்க பகுதியில்
நின்று அனைவரையும் உபசரித்து நன்றாக பரிமாறச் சொல்லிக் கொண்டிருந்தான்.
“யாரிது?….புதுசா இருக்கே.” என்று கிசுகிசுக்க ஆரம்பித்தார்கள்.
“ஆபீஸ் நண்பனா இருக்கும்.”
“நீ வேற…ஆபீஸ் நண்பர்கள் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இப்படியா
ஆடி ஓடி கவனிக்கிறார்கள்? இது ஏதோ ஸ்பெஷல் ஆள்.” என்று சொல்லி சிரித்தார்கள்.
“இப்படி இருக்கும்….சுஜா டிவோர்ஸி தானே.? புதுசா ஆள் பிடிச்சிருப்பா.”
கொச்சையாக சில அபிப்பிராயங்களை உதிர்த்த கூட்டாத்தின் அறியமையையும், சின்ன
புத்தியையும் கண்டு டிஸ்கஸ்டிங் என்று மனதில் உறுமிக் கொண்டான் ஸ்ரீதர். பலரும்
சுஜாவை மனசார வாழ்த்தியதையும் கண்டான்.
சுஜா சற்று கலங்கி ஓரமாக நின்று சுதாரித்துக் கொள்ள முயற்சித்த போது, ஆதரவாக சிரித்து
அவள் தோள் தொட்டாள் பிரபல வக்கீல் வித்யாவதி அம்மாள்.
“சுஜா….இதுக்கெல்லாம் வருத்தப்படாதே. சில ஜென்மங்கள் அப்படித்தான். அடுத்தவர்
வலியும் வேதனையும் புரியாத இங்கிதமற்ற புல்லுருவிகள். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை
அமைச்சுக்க உனக்கு உரிமை இருக்கு. இதில் வெட்கப் பட ஒன்றுமில்லை. அவர்கள் தான்
வெட்கப்பட வேண்டும்.” பேசியவர்கள் காதில் விழும்படி செவிட்டில் அறிவது போல்
கூறினாள்.
அவர்கள் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.!
ஆரத்தியை வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும். அதனால் ரமேஷ்சிடம் கையெழுத்து
கேட்டாள் சுஜா. மகளுக்கு கூட கையெழுத்துப் போட்டுக் கொடுக்க மறுத்துவிட்டான்.
வித்யாவதி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்……அலட்சியமாக சொன்னான்.
“நான் கையெழுத்து போட்டால் ஏதாவது எனக்கு சட்ட சிக்கல் பிநாடி வரலாம்…..ஸாரி.” என்று
வன்மத்தோடு மறுத்து விட்டான்.
வித்தியாவதிக்கு எல்லாம் தெரியும். அதனால் கண்டபடி பேசும் ஒரு சில வாய்களை
அடைக்கத்தான் நெற்றிக் கண் திறந்தாள்.
விதி என்ற பெயரால் பாதையோரம் வீசப்படும் நன்மலர்கள் பொலிவிழக்க வேண்டும் என்ற
கட்டாயம் இல்லே. மலர்ச்சி என்பது முன்பு கனவாக இருந்தது. இன்று நிஜமாக பலமான
அஸ்திவாரம் இடப்பட்டு, அங்கே மலர்கின்றது புதிய அத்தியாயம். சுஜா முடிந்த மட்டும்
திடமாக நின்றாள்.
வந்திருந்த பரிசுகளை ஆராய்ந்து கொண்டிருந்த சமயம் சுதா கூவினாள்.
“இந்தப் பரிசு யாரிடமிருந்து வந்திருக்கு பாருங்க….”
“எங்கே காட்டு காட்டு..” நெருங்கின சுற்றம் சுற்றி நிற்க. ஆனந்த் பிரித்துப் பார்த்தான். “அந்த
ராஸ்கல் அனுப்பினது. கிரகபிரவேசத்துக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்….ரமேஷ் அண்ட்
தர்ஷினி.” என்று சத்தமாக வாசித்தான். ஒரு வெள்ளி பிரேம் போட்ட முகம் பார்க்கும்
கண்ணாடி. தூர வீசி எறிந்தான் ஆனந்த். அது சுக்குநூறாக உடைந்து சிதறியது. எல்லோர்
ரத்தமும் கொதித்தது. கண்ணாடியா கொடுக்கிறான்? அவன் அருவருப்பான மனசு அதில்
தெரிகிறது. சேச்சே..,,..,
எந்த ஸ்டாப் மூலமாகவோ அனுப்பிவிட்டிருக்கிறான். சுஜாவுக்கு முகம் ஜீவு ஜீவு என்றானது.
திமிர் என்பது இதுவாகத் தான் இருக்க வேண்டும்! இவன் பரிசு தரவில்லை என்று யார்
அழுதார்கள்.!
வீட்டை காலி பண்ண வேண்டும் சுஜா. எந்த நிமிடமும் தர்ஷினி துரத்தி விட வருவாள்.
ஏனெனில் வீடு அவள் பேரில் உள்ளது…என்று ஸ்ரீதர் போனில் சொல்லிய போது அதிர்ந்து
ஆடிப் போனாள் சுஜா. தலை சுற்றியது. என்ன தில்லு முல்லு இது?
“சுஜா வீடு உன் பேரில் தான் இருக்கு. நீயே வைத்துக் கொள்..” பிரிந்த போது ரமேஷ்
சொன்னானே! மூன்று வருடம் உண்மையுள்ள கணவன் போல் நடித்து ஏமாற்றிய குற்ற
உணர்வு தாக்க. இப்படி பிராயச்சித்தம் செய்கிறான் என்று நினைத்திருந்தாள். அவன் ஒரு
மிகப் பெரிய அயோக்கியன் என்று நிறுபித்து விட்டான். ஸ்ரீதர் எச்சரிக்கை செய்த மறுநாளே.
யாரோ ரெண்டு பேர் வீட்டுக்கு வந்தார்கள்.
“ஆமாம் நீங்க தானே சுஜாதா எனபது.?”
“ஆமாம். நீங்க யாரு.?”
“நாங்க பத்திர ஆபீசிலிருந்து வரோம். இதயப் பாருங்க.”
ஒரு பத்திரத்தை நீட்டினார்கள். அதில் கண்டிருந்ததை படித்துப் பார்த்தாள். அந்த வீடு தர்ஷினி
பேரில் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. சுஜா உள்ளே சென்று ஒரு பத்திரத்தை எடுத்து
வந்தாள். “இதப் பாருங்க. என் பேரில் தான் இருக்கு. கிளம்புங்க.” என்றாள்.
“அம்மா….இதிலே என்ன எழுதியிருக்குன்னு படிச்சுப் பாருங்க.”
படிக்க படிக்க சுஜா தான் கோமாளி ஆகிவிட்டிருப்பதை உணர்ந்தாள். அன்று ரமேஷ்சுடன்
பத்திர ஆபீஸ் சென்று கையெழுத்து இடது தன் புகைப்படம் கொடுத்து பத்திரத்தோடு
வந்தாள். ஒரு முறை கூட படிகதுப் பார்க்கவில்லை. இந்த வீட்டை அவள் தர்ஷினி பெருக்கு
எழுதி கொடுகத்து விட்டதாக பத்திரம் அறிவித்தது. கணவாணி கண்மூடித்தனமாக நம்பியதன்
விளைவு, இவர்கள் முன் அவமானப்பட வேண்டிய தாகிவிட்டது.
“மேடம்…. நீங்க இந்த வீட்டை பதினைந்து நாட்களில் காலி செய்து கொடுக்கணும். இல்லே
கோர்ட் மூலமா நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று சொல்லி முடித்தான்.
“புரிஞ்சுது இல்லே?” என்று விட்டுப் போனார்கள். உடைந்து போனாள் சுஜா. இதை விட
பெரிய அவமானம் வேறு என்ன இருக்கிறது.? எழுதிய படிக்க தெரியாத பட்டிக்காடு மாதிரி
நினைத்திருப்பார்கள்.
போனை எடுத்தாள். அவனுக்கு ஃபோன் செய்தாள்.
“ஹலோ…. என்ன வீட்டில் இருக்க கூட கொஞ்சம் அவகாசம் வேணுமா பேபி. எடுத்துக்கோ.
ஒன் மன்த் ஓ. கே யா.?’ என்றான் இரக்கமில்லாமல்.
“ரமேஷ் நான் கேட்டேனா உன்னிடம் வீடு வேண்ணும்னு? எதக்கு இந்த நம்பிக்கை
துரோகமும் அவமானமும்.? நீ மனுஷன் தானா.? இவ்வளவு தானா நீ.? வெட்கமா இல்லே
உனக்கு? கடவுள் உனக்கு தக்க தண்டனை கொடுப்பார். கெட் லாஸ்ட். “ என்று காட்டமாக
சொன்னாள்.
“ஸோ சேட் பேபி. இட் இஸ் ஆல் இன் த கேம். கூல் கூல்.” என்றான் ஏளனமாக. சுஜாவுக்கு
ஆத்திரம் தலைக்கேறியது.
“சீ……உன்னோடு பேசி என் மரியாதையை குறச்சுக்க விரும்பலை. நல்லாயிரு.” என்றுவிட்டு
தொடர்பை துண்டித்தாள்.
“சுஜா எனக்கு லேட்டாத் தான் விஷயம் தெரிந்தது. இல்லாவிட்டால் அந்த இரெண்டு பேர்
வருவதுக்கு முன்னமேயே உன்னை காலி பண்ண வச்சிருப்பேன். இந்த அவமானத்திலிருந்து
தப்பித்திருக்கலாம். ஸாரி சுஜா.”
“நீங்க எதுக்கு ஸாரி சொல்லிக்கிட்டு? இதுவும் நல்லதுக்கு தான். அவன் நினைப்பை
அடியோடு களைஞ்சு எறிஞ்சுட்டேன்.”
“வெரி குட். முடிந்து போன துயரங்களை தயவு செய்து மறந்துவிடு சுஜா. நீ நல்ல
சம்பாதிக்கிறே. அவன் நினைதால் கூட உன்னை வேலையிலிருந்து தூக்க முடியாது. உன்
திறமையை வியந்து பதவி உயர்வு கொடுத்தாச்சு. ஸோ…… இப்ப நாம செய்ய வேண்டியது,
வங்கியில் லோன் அப்பளை பண்ணி, உன் பேரில் வீடு வாங்குவது தான். ஒரு மாதத்தில்
கிடைத்து விடும். இப்ப நாளையே நீ வீட்டை காலி பண்ணிக் கொண்டு, நான் கொடுக்கும்
விலாசத்துக்கு போய்விடு. தைரியமா இரு.”
அவன் சொன்னபடி செய்தாள். மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்தது. பதினைந்து நாட்கள்
ஸ்ரீதரின் நண்பன் வீட்டு மாடியில் தயங்கினாள்.
“சாமான்கள் பேக் பண்ண மாதிரியே இருக்கட்டும். அவசியமானதை மட்டும் பிரித்து
பயன்படுத்து. புது வீடு போகும்போது அப்படியே லாரியில் ஏற்ற சௌகரியமா இருக்கும்…. “
ஸ்ரீதர் சொல்லியிருந்தான்.
மண் போன்ற கணவனை நம்பி வாழக்கையை தொலைத்தாள். வீட்டை விட்டு
விரட்டப்பட்டாள். கண் போன்ற நண்பனை நம்பி இதோ புது வீட்டில் கிரகப்பிரவேசம் பண்ண
முடிகிற அளவு மேன்மை பெற்றாள். ஒரு கதவு மூடினால் வேறு ஒரு கதவு திறக்கும் என்பது
உண்மை தானே.?
வீட்டை விட்டு துரத்தினதில்லாமல் பரிசு வேறு அனுப்பறானா.? ராஸ்கல்.”
கொதித்தெழுந்தான் ஆனந்த.
சுதா வெறுப்புடன் சொன்னாள்.
“எல்லாம் வயித்தெரிச்சல்….நடுத்தெருவில் நிப்பான்னு கனவு கண்டான்.”
ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆர்த்தி, அதை அப்படியே குப்பைத் தொட்டியில் வீசி
விட்டு ஓடி வந்தாள். ரமேஷின் பரசு பார்சலை பிடுங்கி எடுத்துக் கொண்டு போய் தெரு குப்பை
தொட்டியில் போட்டுவிட்டு வந்தாள். அவள் முகம் ரத்த சிவப்பாக மாறியிருந்தது.
“ஆர்த்தி நீ இவ்வளவு கோபமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கு. உன் அப்பாவின்……” என்று
சுதா சொல்லும் போதே இடைமறித்த ஆர்த்தி….
“சித்தி அவர் என் அப்பாவே இல்லை. என் இரெண்டு கண்ணாலே பார்த்தேன் சித்தி. நிறைய
தரம் அந்த தர்ஷினி ஆன்டியோட அப்பாவை பார்த்தேன். நான் தான் அம்மாகிட்டே
சொல்லாம மறச்சிட்டேன்.”
ஆறு வயசு குழந்தையின் ஆவேசம் ஏன் என்று புரிந்தது. எவ்வளவு பெரிய வலியை குழந்தை
தாங்கிக் கொண்டிருந்திருக்கிறாள்.
“என் கண்ணே ஆர்த்திம்மா.? என்று மகளை அள்ளி அணைத்துக் கொண்டாள் சுஜா. அம்மா
அங்கு வந்தாள்.
“போதும் சுஜா. இனி நடந்ததை எல்லோரும் மறந்திடனும். ஸ்ரீதர் தம்பி ரொம்ப நன்றி உங்க
உதவிக்கு. நீங்க நல்லாயிருக்கணும்.”
“அம்மா….கண்டிப்பா அவர் நல்லாயிருந்தா சுஜா அக்காவும் நல்லாயிருப்பான்னு தானே
அவரை வழத்தினீங்க.?” என்று சுதா கைதட்டி சிரித்தாள். எல்லோரும் சிரித்தார்கள்.
“இதெல்லாம் என்ன பேச்சு? ஸ்ரீதரோட பெற்றோர் வந்திருக்காங்க. என்ன நினைப்பாங்க.?
காதிலே விழப் போகுது.” என்று சுஜா அதட்டினாள். ஸ்ரீதர் அங்கு வந்தான்.
“இப்ப தான் அப்பா அம்மாவை அனுப்பிச்சிட்டு வரேன். ரொம்ப டீப் டிஸ்கஷன் நடக்குது
போல.? நாங்க போயிட்டு வரோம்ன்னு சொல்லிடு சுஜா கிட்டேன்னு சொன்னாங்க.”
“ஓ. கே. அப்ப எங்க கிட்டே சொல்லச் சொல்லலையா.? என்னயிருந்தாலும் வருங்கால மருமக
இல்லையா.?”
“சுதா, தயவுசெய்து நிறுத்து உன் கற்பனையை. என் மனசு புரியாமல் கண்டபடி பேசாதேங்க.
நல்ல பிரெண்ட்ஸ் நாங்க. அவ்வளவு தான்.” கத்தினாள் சுஜா.
“நீ பொய் சொல்றே அக்கா. ஏன் நீ உன்னையே ஏமாத்திக்கிறே? நீ ஸ்ரீதரை கல்யாணம்
பண்ணிக்க. ஆர்த்தியின் விருப்பமும் அது தான்.”
“ஆர்த்தியின் விருப்பத்துக்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. இன்னொரு கானல்
நீரை நான் சந்திக்க தயாராகயில்லை சுதா.”
“ஏன் நெகட்டிவ்வா யோசிக்கிறே.? ஏற்கனவே அவர் உன்னை விரும்பி இருக்கார். ஒண்ணும்
இப்ப புதுசா வந்து நுழையலை.”
“ஓ….எல்லார் கிட்டயும் டமாரம் அடிச்சிட்டாரா.?”
“எல்லோரும் கொஞ்சம் பேசாம இருங்க. ஸ்ரீதரை பக்கத்திலேயே வச்சுக்கிட்டு என்ன பேச்சு
இது.? விஷயத்தை ஆறப் போடுங்க.” என்று சுஜாவின் அம்மா மெங்குராளில் உறுதியாக
சொன்னதும். எல்லோரும் அமைதியானார்கள்.
“சுதா…. ஆவாலி யாரும் இனிமே தொந்தரவு பண்ணதீங்க. அவளுடைய காயங்களில் இருந்து
அவளே வெளியே வரட்டும்..”
ஸ்ரீதர் சோர்வுடன் வெளியேறினான். எல்லோர் முகத்திலும் விசனம் அப்பியது. சுஜா மனம்
எப்ப திறக்கும்? அதில் எப்ப காதல் பூ மலரும்.?
புது வீட்டில் குடியேறி பதினைந்து நாட்கள் ஓடிவிட்டது. ஸ்ரீதரிடமிருந்து ஒரு ஃபோன் கூட
வரவில்லை. பிறகு ஒரு அதிகாலை நேரம் ஸ்ரீதர் வந்தான். வாங்க என்று சொல்லக் கூடத்
தோன்றாமல் மலங்க விழித்தாள்.
“உட்கார சுஜா. உன் கூட பேசணும்.”
“ஸ்ரீதர் என் முடிவை சொல்லிட்டேன். விடுங்க.”
“இல்லே…. நீ பொய் சொல்றே. சொல்லு என்ன பிரச்சனை உனக்கு.? நான் இருக்கேன்
உனக்கு. யாரை பத்தியும் கவலைப்படாதே. எதுக்கு பயப்படறே.? இந்த பய உணர்வு தான் நீ
என்னை நேசிக்கிறதை, உனக்கே உனக்கு புரிய விடாமல் பண்ணுது. ப்ளீஸ் சுஜா….சரி
சொல்லு.”
அவள் பெருமூச்சு விட்டாள். கண்கள் கலங்க சொன்னாள்.
“எனக்கு பயமா இருக்குங்கறது தான் நிஜம். ஸ்ரீதர் உங்களுக்கு ஏத்தவளா நான் இருப்பேனா
தெரியலை. இன்னோர் ஏமாற்றத்தை நீங்க சந்திக்க..”
“அந்தக் கவலை உனக்கு வேண்டாம். உனக்கு ஏத்தவனா நான் மாறிட்டுப் போறேன். ஓ. கே
தானே.?”
இடதும் வலதுமாக தலையாட்டி, தலைகுணிந்தாள் சுஜா. அதிற்குமேல் வற்புறுத்தாமல்
போய்விட்டான் ஸ்ரீதர்.
அம்மா ஃபோன் பண்ணிச் சொன்னாள்.
“சுஜா. நீ பண்றது நல்லாயில்லேம்மா. அந்த தம்பியை திரும்ப வரச் சொல்லியிருக்கேன்.
உனக்கு என்னென்ன மணக்க குழப்பமோ எல்லாம் கொட்டித் தீர்த்துப் பேசிவிடு. பிறகு அவர்
சொல்வது கேட்டு முடிவு எடு. சரியாம்மா…. தேவதைகள் உனக்கு வாரம் கொடுதிருக்காங்க.
அதை அலட்சியப்படுத்திட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்காதே. ரிஸ்க் எடுப்பதில் தவறு இல்லை
சுஜா.” அம்மாவா இப்படி பேசுவது?
எல்லாம் சரிதான். ஆனால்….சில ஆனால்களுக்கு உடன் பதில் சொல்ல முடிவதில்லை. காலம்
தான் பதில் சொல்ல வேண்டும். மறுகல்யாணம் அவசத்தையா.? நிவாரணமா.? யார் சொல்ல
முடியும்.?
அம்மா சொல்லியபடி ஸ்ரீதர் இன்னொரு நாள் வந்தான். கண்கள் கலங்கி வருத்தமாக
இருந்தான்.
“சுஜா முடிவை மாத்திக்கிட்டியா.?”
“சில பிரிவுகளை தயங்கித் தான் ஆகணும் ஸ்ரீதர். உங்களுக்கேத்த பொண்ணாப் பார்த்து
கல்யாணம் பண்ணிகங்க. அது தான் சரி. என்னை மன்னியுங்க. ப்ளீஸ்.” என்றாள் சுஜா.
கொஞ்ச நேரம் பேசாமல் அமர்ந்திருந்தான். பிறகு அவளை ஏறிட்டான். அவள் அவன் கண்கள்
தவிர்த்து ஜன்னல் வழியாக இரெண்டு குருவிகளின் ட்வீட் சப்தத்தை கவனித்தாள். பேசாமல்
குருவிகளாய் பிறந்தருக்கலாம். இந்த தொல்லை எல்லாம் இல்லை….
“சரி சுஜா….குட் லக் டூ யூ..” என்றபடி எழுந்தான். அவள் பார்த்துக் கொண்டே நின்றாள். அவன்
போகும் வரை கண்களால் தொடர்ந்தாள்.
மீண்டு ஒரு துயர அலைகளால் அலைக்கழிக்கப்பட்டாள் சுஜா. ஏதோ ஒரு உயிரற்ற உடல்
போல் கிடந்தாள். தனக்குத் தானே வெளிச்சம் தருவதாக எண்ணிக் கொண்டு தண்டனையை
கொடுத்திருக்கிறாளா.? இரவில் ஆர்த்திக்குத் தெரியாமல் அடுத்த அறை சென்று கதறிக் கதறி
அழுதாள். திடீர் என்று எதுக்காக அழுகிறோம் என்பது பிடிபடாமல் போச்சு. எப்படியோ
அழுததில் பாரம் குறைந்தாற் போல் இருந்தது.
“சுஜா….ரொம்ப டல்லாயிருக்கே. ஒரு மனநல டாக்டர் கிட்டே கவுன்சலிங்க போயேன்.
உனக்கு ஒரு தெளிவு ஏற்படும்.” என்று ஒரு தோழி சொன்னாள். அது நல்ல யோசனையாக
பட்டது சுஜாவுக்கு. டாக்டரிடம் அப்பான்மெண்ட் வாங்கிக் கொண்டு போனாள். அங்கே
ஸ்ரீதர் கவுன்டரில் பணம் செலுத்திவிட்டு அவளைப் பார்க்காதது போல் போய்விட்டான்.
Omg. Y. What happened to.sridhar? Intresting