Skip to content
Home » ஆன்மீகம்

ஆன்மீகம்

ஆன்மீகம் என்றால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்று எல்லோருடைய எண்ணமாக இருக்கிறது .உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன?

Thank you for reading this post, don't forget to subscribe!

இறைவனுடைய தொடர்புடையது தான் ஆன்மிகம் என்போம்.அப்படியாக அதற்க்கு நாம் பல நாள் தவம் இருந்து கடவுளை பற்றி எப்பொழுதும் சிந்தித்து கொண்டே இருக்க வேண்டும் என்று இல்லை.

மனிதனாக பிறந்து அவன் முதல் அழுகையில் இருந்து நம்முடைய ஆன்மிகம் தொடங்குகிறது.

அப்படியாக ஒருவர் பிறரிடம் அன்பாய் இருப்பது ஆன்மீகம்

அன்பாக பேசுவது ஆன்மீகம்

அறிவைத் தேடுவது ஆன்மீகம்

அறிவாக செயல்படுவது ஆன்மீகம்

அறிவை பக்குவப்படுத்துவது ஆன்மீகம்

அதிகாரம் செய்யாதிருப்பது ஆன்மீகம்

அழகில் மயங்காதிருப்பது ஆன்மீகம்

அகங்காரம் கொள்ளாதிருப்பது ஆன்மீகம்

அடக்கமாக வாழ்வது ஆன்மீகம்

அறிவாக வாழ்வது ஆன்மீகம்

இப்படியாக நம்முடைய ஒழுக்கமான வாழ்க்கை தான் ஆன்மீகம்.

நம்முடைய அகம் சரியான முறையில் அமைந்தால் இறைவன் மனம் என்னும் கோயிலில் குடி கொள்வான்.ஆக இயலப்பான வாழ்க்கையில் ஒன்றி இருக்கும் இறைவனை மறந்து தனியே வெளியில் சென்று தேடி எந்த பயனும் இல்லை.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *