Skip to content
Home » என் எழுத்திற்கான பிள்ளையார் சுழி

என் எழுத்திற்கான பிள்ளையார் சுழி

புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கமென்று அன்றைய காலக்கட்டத்தில் பேசப்பட்டதாலும், எல்லார் கைகளிலும் புத்தகம் தவழ்ந்திருக்கலாம்.
  அது போல என் கைகளில் என்‌ வயதிற்கு ஏற்ற சிறுவர் கதைகள் நிறைய வாசிக்க கிடைத்தது.

  பெரும்பாலும் அப்பா வாங்கி தருவது இலவச நூல்களாக இருக்கும். விடுமுறைக்கு பெரிப்பா வீட்டில் தான் இருப்போம். பன்மையில் சொல்லறேன்ல… எஸ் பெரிப்பா வீட்ல ரிலேட்டிவ்ஸ் எல்லாருமே வந்துடுவோம். அந்த மே மாதம் முழுக்க ஜெஜெனு இருக்கும். நிறைய சேர்ந்து விளையாட வாய்ப்புகள் அதிகம்.
  அதுல கேப்ல படிக்க நிறைய இருக்கும். ஏன்னா… எங்கப் பெரிப்பா, ஒரு தினசரி நாளிதழில் நல்ல பதவியில் வகித்தவர். அவரிடம் நிறைய புத்தகம் வந்தவண்ணம் இருக்கும். வாசிப்பதற்காக தந்திருப்பார்கள்.  அதெல்லாம் தொகுத்து சோகேஷில் இருக்கும்.
  எல்லாமே தமிழ் புத்தகம். அங்க நான் அண்ணா மட்டும் தான் தமிழ் மீடியம். மற்றவர்கள் எல்லோருமே ஆங்கில வழி கல்வி.
  அதனால் புத்தகங்கள் வாசிப்பிற்கு ஏங்கி காட்சியளிக்க, எனக்கு தான் புத்தகப் புழுவாக மாற வசதியா இருந்தது.

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தெனாலிராமன் கதை, பீர்பால் கதை, முல்லா கதை, காதையாம் கதையாம் காரணம் என்று ஆயிரம் கதைகள் தொகுத்தவை, நல்வழிப்படுத்தும் கதைகள், அறநெறிகதைகள், சிறுவர்களுக்கான குட்டி கதைகள், இப்படி பலதும் பலவிதமாக இருக்கும். அதோட வெற்றி பெற வழிகள், பென்மொழிகள், பழமொழிகள், திருக்குறள் கதைகள், அறிய வேண்டி அற்புத கதைகள், உலக பொதுஅறிவு புத்தகம், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு,  இப்படி பலவிதமான கலந்தும் இருக்கும். என்னோட ரசிப்புக்கு தகுந்த மாதிரி வாசிப்பேன்.

   என் அத்தை பையன் ஒருத்தர் தமிழ் பத்திரிக்கை படிக்க சொன்னப்ப, அப்ப இருந்த வாஜ்பாய் பேட்டி என்றதை வாஜ்பாய் போட்டினு படிக்க விழுந்து விழுந்து சிரித்தோம்.
   என்னை படிக்க சொன்னப்ப திக்காம நீட்டா வாசித்தேன்.
  நீ தமிழ் மீடியம் ஆங்கிலம் வராது. வா.. ஆங்கில பேப்பரை வாசிப்போம்னு போட்டி வந்துச்சு. ஓகே… வாசிப்போம்னு அதையும் திக்காம வாசித்தேன்.(என்னால ஆங்கிலத்தை வாசிக்க இயலும். புரிந்துக்கொள்ள முடியும். ஆனா பிழையின்றி பேச வராது.) ஆனா திக்கி திணறி சொல்ல வந்ததை சொல்வேன்.(என் இங்கிலிஷ்  அவ்ளோ தான்)
  இதை ஏன் சொல்லறேன்னா.. ஆங்கிலம் வாசிக்கலாம் வரும். புக் படிப்பேன். நியூஸ் பேப்பரும் வாசிப்பேன். அதெல்லாம் பிரச்சனையில்லை.

    காலப்போக்கில் ஒரளவு புத்தகம் வாசிப்பது பத்தாவது வந்ததும் மறைந்துடுச்சு. சொல்லப்போனா படிப்பில் கவனம் திரும்பிடுச்சு. அதோட டீன்ஏஜ் என்றதில் என் கவனம் சினிமா பாட்டில் சிக்கியது.
  அப்பா ஒரு ஸ்டேஜ் சிங்கர். அதனால பாட்டு எப்ப போட்டாலும் பாடுவேன். பாட்டு வரி அத்துபடி‌. எந்த படம், எந்த நடிகர், நடிகை, நடிச்சது எல்லாம் பிங்கர் டிப்ஸ்ல வச்சியிருந்தேன்.‌
  இதை எதுக்கு சொல்லறேன்னா… கதை எழுத காரணமா அமையும் பொழுது, இந்த காட்சி இப்படி மாற்றி எடுத்திருக்கலாம். இந்த கதை இப்படி கொண்டு போயிருக்கலாம். இந்த கதையில் கான்சப்ட் அருமை. ஆனா இது இதனால் ஒடலை, போன்ற நுணுக்கம் அறிந்திட முடிந்தது.
   அப்பா சில நேர பாப்பா இந்த பாட்டு எந்த படம்? இந்த நடிகை பெயர் என்ன என்று கேட்பார். அத்தை பசங்க கூட, ‘Buffy(நான்தான்) கிட்ட கேட்டா கரக்டா மூவி பத்தி சொல்லிடுவா’ என்று கிண்டலா சொல்வாங்க.
   அந்தளவு கதை, படம், காட்சி, பாடல் இதுலயும் நல்லா வரும். இதெல்லாம் ஒரு பெருமையா…? இல்லைங்க… இதையும் என் எழுத்துக்கு கருவியா இப்ப மாத்திக்கிட்டேன். 
  எப்படி கதை எழுதினா வாசகர்களுக்கு பிடிக்கும், என்று நான் ஒரு வாசகியா ரசிகரா யோசித்து இப்ப எழுத இது உபயோகமாக இருக்கு.
  எதுவும் வெறும் பொழுதுபோக்கு என்று இருந்த விஷயத்துல இருந்து தான், என்னோட புரப்பஷனலா ரைட்டரா மாற்றிக்க பண்படுத்திக்கிட்டேன்.

   சின்ன வயசுல நல்லா படிச்சதால, எல்லா சைல்ட்-வுட் கிட்ஸை போல, டாக்டர் ஆகனும்  டீச்சர் ஆகணும், போலீஸ் ஆகணும்(நல்ல உசரம், ப்ளஸ் இந்த போலீஸ் ஆர்மி ஜாப்ல ஒரு க்ரஸ் இப்பவும் இருக்கு), கனவெல்லாம் கண்டேன்.‌

  அப்பாவோட தாட்ஸ் என் படிப்பு முடியவும் என்னை நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி முடிக்கணும் என்ற கடமையா நினைச்சார்.(சில பெர்சனல் அவர் வாழ்வில்…. அதனால் என்‌ திருமணம் முடிக்க விரும்பினார்.
  பட் காலேஜ் படிக்க வச்சார். முதல்லயே பெரிய படிப்பு எல்லாம் படிக்க வைக்க மாட்டாங்கனு எனக்கு தெரிந்ததால் பிளஸ் டூல ஒரு அலட்சியம் வந்துடுச்சு. 70 சதவிதம் தான் எடுத்தேன். பெரியப்பா காமர்ஸ் எடுக்க சஞ்சஸன் சொன்னார். பெரிய மாமா கெமிஸ்ட்ரில தான் நீ நிறைய மார்க் அதுல ட்ரை பண்ணுனு சொன்னார். அப்பா பார்ம் தந்து தமிழ் எடுன்னு சொல்லிட்டார். அவரோட கடமைக்கு தமிழ் படிச்சா நடுவுல கூட கல்யாணம் செய்து வைக்கலாம்னு பிளான்.‌
  அப்ப வேற ஆப்ஷன் இல்லை. அப்பா சொன்னா கேட்கற பிள்ளை.
தமிழ் படிக்க அப்ளிகேஷன் போட்டாச்சு. கிளாஸ்லயும் சேர்ந்துட்டேன். பஸ்ட் குரூப் எடுத்துட்டு தமிழ் கிளாஸ்ல இருந்தது நான் ஒருத்தி தான்.
   கொஞ்சம் சோகம்…. எனக்கு மேத்ஸ் படிக்கணும்னு ஆசையிருந்தது. நான் டென்த்ல 99.
   கனவும் ஆசையும் நிறைவேறும்னு அதை மட்டும் நம்பிட்டு இருக்க கூடாது. நமக்கு எது சரினு நம்ம தலையில் கடவுள் ஏற்கனவே எழுதி வச்சிருப்பார். அதையும் என்னனு ஒரு எட்டு தெரிந்துக்கணும்.
   ஒரு வழியா…‌ காலேஜ்ல பிரெண்ட்ஸ் கூட, இதான் என்‌ படிப்பு என்று அக்சப்ட் பண்ணிட்டேன்.
   அப்பறம் என்ன ஜாலியா புத்தகம், எழுத்து இதெல்லாம் மறந்திருந்தது மீண்டும் என் வாழ்க்கையில் வந்துச்சு.
  என் பிரெண்ட் சரண்யா… ஒரு கவிதை எழுதி  காட்டினா.
உன்னை
பார்க்க
என்
கண்கள்
துடிக்கின்றது.
உனக்கு
இது போல
துடிக்கின்றதா?!
  இந்த டைப்ல தான் இருந்தது.

அதை வாசித்துவிட்டு, ‘ஏய் இது போலனா நான் நிறைய எழுதுவேன்’னு விளையாட்டா சொன்னேன்.
   அப்ப அவ தான் ‘அப்ப எழுது பார்க்கலாம்’னு சொல்ல மடமடனு எழுதி தந்தேன்.
  நான் என்னத்த எழுதினேன்னு இப்ப நினைவில்லை.
  ஆனா அதை படித்து அவ, ‘ஏ நெட்டமாடே… சூப்பரா எழுதிட்ட’னு பாராட்டினா. ‘நெட்டமாடு’ அதுவும் செல்ல பெயருங்க. Buffy’ மாதிரி… பிரெண்ட்ஸ் சர்கிள் கூப்பிடறது.
இந்த பெயர் உயரத்தால வந்தது. எங்க செட் எப்பவும் போல நான் தான் உயரம். சரி அதை விடுங்க.

  இந்த கவிதை‌.. ஆமா அப்ப அது தான் கவிதை. ஹாஹா.
  தினமும் வீட்ல இருந்து காலேஜ் போக கிளம்பி பஸ்ல வருவேன். ஒன் ஹவர் டிராவல். வழில பார்க்கற நிறைய விஷயத்தை என் கண்கள் மனதிற்குள் படம் பிடித்துக் கொள்ளும். அதையெல்லாம் அனலைஸ் பண்ணிட்டே வருவேன். சிலது இன்சிடெண்ட் கவிதை மாதிரி கண்ணில் பதிய, அதை எழுத்தில் எனக்கு தெரிந்த விதத்தில் கிறுக்குவேன். ஆரம்ப கால கட்டத்தில் எழுதிய கவிதைகள் பார்க்கணுமா? இந்த லிங்க்ல போங்க. https://praveenathangaraj.blogspot.com/p/blog-page_78.html கவிதையின் பெயரில் தொட்ட வாசிக்கும் விதமாக வைத்திருப்பேன்.
  இப்படி மனசுல பட்டதை எல்லாம் கிறுக்கிட்டு, இருந்தேன்.

அப்ப தான் எங்க அத்தையிடம் கவிதை எழுதியதை காட்டினேன். நான் நிறைய இடத்துல எங்க அத்தையை மென்ஷன் பண்ணிருப்பேன். கேட்ட கதைகளா இருக்கலாம்.
  என் அப்பாவின் அக்கா கவிதை, கட்டுரை, சிறுகதை, எழுதுபவர். மாமா அண்ணா யூனிவெர்சிட்டி புரபஸர். அவர்களிடம் கவிதை காட்டவும், சில பிழை களைந்து மெருக்கேற்றினார்கள்.
  நிறைய எழுதுனு ஊக்கப்படுத்தினாங்க. அதோட மங்கையர் மலர், குமுதம் சிநேகிதிக்கு அனுப்ப கூறினார்கள்.
   நானும் விளையாட்டா அனுப்பினேன்.‌ எந்த விஷயம் இன்னிக்கு நட்ட ரோஜா இன்னிக்கே பூக்காது. காத்திருப்பு ரொம்ப முக்கியம். ஆனா அந்த வயதில் போட்டதும் வரலைன்னு விட்டுட்டேன். நம்மளோடது எல்லாம் வருமா? அதெல்லாம் பொழுது போகாம கிறுக்கிட்டு சுத்தறது. இப்படி தான் நினைச்சேன்.
   அப்படியிப்படி ஒரு வழியா காலேஜ் மேகஸினிலும் அந்த கவிதையை தந்தேன். எப்படியும் இதுலயாவது பிரசுரமாகும்னு, ஆனா காலேஜ் மேகஸினும் உடனே வரலை.
  எக்ஸாம் போச்சு டிசி வாங்க வந்தேன்.‌ அப்ப தான் கையில காலேஜ் மேகசின் தர்றாங்க. புக்கை புரட்டி பார்த்தா என் கவிதை. அடப்போங்கம்மா… காலேஜ்ல இருந்தப்பவாது பெருமையா கெத்தா இது என்‌ கவிதைனு சொல்லிக்கலாம். காலேஜே முடிந்துடுச்சு என்னத்துக்கு இது? சரி இருக்கட்டும்னு வச்சிக்கிட்டேன்.

  சரியா காலேஜ் முடிந்ததும் வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னவர் பொண்ணு பார்த்துட்டு போன அடுத்த வாரத்துல மங்கையர் மலரில் என் கவிதை வெளியானது.
   போன்ல மாமியார் பாராட்டினாங்க. அவங்க ரெகுலரா மங்கையர் மலர் வாங்குவாங்களாம். அதனால் என்னுடையது வந்ததாக, என் அப்பாவின் அக்கா (அத்தை) கூறவும், எடுத்து பார்த்திருக்காங்க. *வெற்றி எளிதல்ல…* தலைப்பில் வந்ததும் ‘நம்ம தங்கராஜ் சட்டுனு சோர்ந்துடுவான். வர்ற பொண்ணு சும்மா கவிதையிலேயே பாஸிடிவ் கொடுக்குதே.’ அப்படினு பேசியதாக பிற்காலத்தில் சொன்னாங்க.
ரியலி இந்த பாஸிடிவ் ஃபீல் எப்பவும் எனக்குண்டு. அது பலவிதமான அனுபவத்தால் கிடைத்த நல்ல விஷயம்.

   -தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *