Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி-19

ராஜாளியின் ராட்சசி-19

அத்தியாயம்-19
 
  அர்னவ் பைலட் கேப்பை தலையில் அணிந்து, “சந்தோஷ் பறக்க ரெடியாடா” என்று கேட்டு நடந்தான்.‌

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   சந்தோஷோ “டேய்.. அங்கிள் எதுக்கு வந்தார். என்ன பேசி அனுப்பின?” என்று கேட்க, அர்னவ் நிதானமாய், “வா சொல்லறேன்” என்றவன் தனிவிமானம் இருக்கும் திசை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

  வாக்கி டாக்கி போன்றதொரு கருவியில், ஆங்கிலத்தில் பேசிமுடிக்க, உடனடியாக விமானத்தை பழுது பார்க்கும் அஜய் வந்து சேர்ந்தான்.

  “செக் இட்” என்று கூற, தனிவிமானத்தை இயக்கும் நிர்வாகி மெதுவாக வந்து, “அர்னவ்.. புக் பண்ணின பயணி, அவரோட வேலைக்கு லேட்டாகாம இருக்கணும்” என்று கூறினார்.‌

  “லேட்டாகாது சார். அதுக்கு தான் அஜயை வர சொன்னேன். அஜய் ஃப்யூ மினிட்ஸ் விமானத்தோட பார்ட்ஸ் எல்லாம் செக் பண்ணிடுவான். அவனால் எந்த இடத்துல எந்த பாகம் பொறுத்தணும்னு தூக்கத்துல கேட்டா கூட சொல்லிடுவான். சோ.. அதிக நேரம் எடுத்துக்க மாட்டான்.” என்று கைகடிகாரத்தை பார்வையிட்டான்.‌

  அஜய் அர்னவ் சொன்னதற்கிணங்க வேகமாய் ஆராய்ந்ததில் “அர்னவ் யூ ஆர் ரைட்.” என்று ஒரு ஒரு பாகத்தில் இடம்பெற்ற டிரக்ஸை எடுத்து நீட்டினான்.‌

“வாட்… ஹௌவ் இஸ் பாஸிபிள் அர்னவ்.” என்று கேட்க, “சார்… இந்த பிரைவேட் ஜெட்ல யார் எப்ப நெருங்கி வந்தாங்கன்னு சிசிடிவி பாருங்க. உங்களுக்கான விடை தெரியும். அதர்வைஸ்… இந்த வணிக ரீதியாக நம்ம பிரைவேட் ஜெட்ல பயணம் செய்ய வந்தவரையும் கவனியுங்க. பிகாஸ்… இவர் என்னை மாட்டி விட வந்தவர். இவரோட ஐடென்டி செக் பண்ணியதுல, இவர் ஜீவனோட பினாமி. சோ… நான் சொல்ல வர்ற விஷயம் புரியுதா?” என்றதும், பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்ய வந்த நபரோ தலைத்தெறிக்க ஓடப்பார்க்க, அவனை வழிமறித்தனர் விமானத்தில் உள்ள அதிகாரிகள்.

  “தேங்க்ஸ் அர்னவ்… என்ன தான் இந்த இன்சிடெண்ட் உனக்கான வலை என்றாலும், இது நியூஸா வெளிவந்தா, நம்ம பெயரும் கெடும்.
  உங்களை வேலைக்கு நியமிச்சதே, உங்களோட நேர்மைக்கு முதலுரிமை கொடுத்து தான். எனிவே.. உங்க லவ்வரை பார்க்க போங்க. பாவம் அவங்க என்ன நிலையில் இருக்காங்களோ?” என்று கூறினார்.

“தேங்க்யூ சார்” என்றவன் சந்தோஷிடம் கூறி, “பாவனாவை பார்க்க போகலாம்” என்று அழைக்க, இருவரும் வேகமெடுத்தனர்.

  “ஆமா.. இந்த ஆள் ஜீவன் எடுபிடி னு எப்படி கண்டுபிடிச்ச?” என்று கேட்க, சந்தோஷிடம், பாவனா தந்தைக்கு போனில் அழைத்து பேசியதையும், கோவிலில் பாவனாவிடம் ஜீவன் மிரட்டிய விஷயத்தையும் உரைத்தான்.

“நம்ம இருக்கறப்பவே மிரட்டியிருக்கான் பார்றேன்” என்று சந்தோஷ் வாயை பிளந்தான்.‌

   “பச்… ஏற்கனவே சந்தோஷ் பெர்சனலா கன் வச்சதும், என்னை சூட் பண்ணியதையும் பாவனா நேர்ல பார்த்திருக்கா. சோ என்னை கோவில்ல அட்டாக் பண்ணிட வாய்ப்புண்டுனு யோசித்திருப்பா. அவளை சொல்லி குற்றமில்லை. ஜீவன் வெல் பிளானோட தான் ஆரம்பிச்சியிருக்கான்.
   அவனை பொறுத்தவரை பாவனா போனை கண்கானிச்சு மிரட்டுவது  சிம்பிள். அதோட அவளையே கண்கானிக்க ஒருத்தனை நியமிச்சியிருக்கலாம்.
  பாவனாவுக்கு என் போன்‌ நம்பரை தவிர வேறென்ன தெரியும். என் மெயில்? என் சோஷியல் பேஜ்? ஏன் உன்‌ நம்பரே தெரியாது. சோ… அவளை துப்பாக்கியால என்னை கொண்ணுடுவேன்னு நேத்து மிரட்டிட்டு, அந்த விஷயத்தை ஒரு நாளுக்கு மேல பாலோவ் பண்ண முடியாது. பாவனா ஜீவன் மேல இருந்த பயம் குறைந்து, எப்படியாவது என்னை அவ தம்பி மூலமா கூட கான்டெக் பண்ணிடுவான்னு பயத்துல தான் இன்னிக்கு மாட்ட பிளான் போட்டிருக்கான்.
  ஆக்சுவலி ஜீவன் போட்ட பிளான்ல சொதப்பல் என்னனா, என்னை பணியில இருந்து நீக்கி, ஜெயில்ல தள்ளிட்டு அப்பறம் பாவனாவை ஆட்டிப்படைக்க நினைச்சிருப்பான்.
  அன்பார்சினெட்லி பாவனாவை நான் விரும்பவும், காதல் வலியை தர நினைச்சி சடனா நேத்து கன் பாயிண்ட்ல என்னை பிடிக்கலைன்னு சொல்ல வச்சி சொதப்பிட்டான்.

  அவ சாதூர்யமா ரிஷப்ஸனிஸ்ட் வேலை செய்த இடத்துலயிருந்து  போன்ல அப்பாவிடம் தகவல் சொல்லியிருக்கா.
  அப்பா நேர்ல வந்துட்டார்.” என்று கூறினான்.

“பாவனா தனியா மாட்டியிருந்தா? ஜீவனுக்கு பிளான் ப்லாப்னு அவளை ஏதாவது பண்ணிடப்போறான் டா.” என்று சந்தோஷ் பயந்தான்.

  “பச் அப்பா இங்க வர்றப்பவே கரோலின் அங்க போய் பாவனாவை பார்க்க சொல்லிட்டாங்க. இப்ப செக்கியூரிட்டியோட அவ சேஃப்பா அவங்க அழைச்சிட்டு போயிருக்கலாம்.” என்று நிதானமாய் வந்தான்.

  அர்னவ் கூறியது போல கரோலின் லேகாவுடன் பாவனா அவ்வீட்டில் இருந்தாள். ஈ.சி.ஆர் பக்கம் தனி பங்களாவில் ஆடம்பரம் கண்ணை உறுத்த பழக யோசித்தாள்.

  லேகா தான் ஏதாவது கேட்டு இம்சிக்க, கரோலின் காசிநாத்திற்காக காத்திருந்தார்.

  “ஏன் அண்ணி பேச மாட்டேங்கறிங்க. அண்ணா ஆன்-தி-வேல வருவார். டோண்ட் வொர்ரி. நான் வேண்டுமின்னா உங்களுக்கு வீட்டை சுத்தி கட்டாறேன். வாங்க” என்று கூறியதோடு, கைப்பிடித்து அழைத்தாள்.

கரோலினோ “போய் பாரும்மா. அர்னவ் இங்க வருவான்.” என்று அனுப்ப, லேகாவுடன் சென்றாள்.

   “ஆக்சுவலி வீடு அழகாயிருக்கா? உங்களுக்கு பிடிச்சிருக்கா?
  பச்… அண்ணா அப்பவும் இங்க வரமாட்டார். ஹோட்டல்ல தான் வாடகைக்கு இருக்கார். வாடகைக்கு என்றதும் ஜஸ்ட் லைக் தட்னு நினைக்காதிங்க. அதுவுமே வசதியா டபுள் பெட்ரூம்ஸ் இருக்கற லக்சரி ஹோட்டல். அண்ணா வேலை பார்க்கற இடத்துல பக்கமா வேண்டும்னு அங்கயே இருப்பதா சொல்றார்.
   இங்க இயர்ஸ் டூ டைம் வந்து தலைகாட்டிட்டு போவார். அதுவும் என் பெர்த்டே அப்ப. அப்பறம் பெரிம்மா இறந்த நாள் அப்ப. அவ்ளோ தான். இது என்னோட ரூம். இந்தபக்கம் இருக்கற திங்க்ஸ் எல்லாமே அண்ணா எனக்காக வாங்கி தந்தது. இதெல்லாம் பெர்த்டே அப்ப வாங்கி தந்தார். இதெல்லாம் அவர் வெளிநாட்ல போனப்ப அந்தவூர் ஸ்பெஷல்னு வாங்கியது. இதெல்லாம் அண்ணா நேர்ல தரமாட்டார். சந்தோஷ் அண்ணா தான் கொண்டு வந்து கொரியர் வேலை பார்ப்பார்.” என்று கூற, ஒவ்வொரு பொருளையும் பார்வையிட்டாள்.

   “அண்ணி… இன்னொரு ரூமுக்கு கூட்டிட்டு போறேன் வாங்க?” என்று இழுக்க, தண்டவாளத்தை பின் தொடரும் ரயிலை போல இழுப்புக்கு சென்றாள்.

“லேகா.” என்று கூற, அவசர அவசரமாய் படிக்கட்டில் ஏறி எதிரேயிருந்த அறைக்கு இழுத்து சென்றாள்.

   “இந்த ரூம் யாருதுன்னு சொல்லுங்க” என்று கேட்டு நின்றவளை பார்த்து அறையை நோட்டமிட, அறையெங்கும் அர்னவ் புகைப்படம்.

  அதுவும் பைலட் உடையில், பாரசூட்டில் பறப்பது, ஹெலிகாப்டரில் கூட சென்றது போன்ற புகைப்படம் கண்ணை பறித்தது.
  
   “அவர் ரூம்” என்று கூறினாள்.

“அண்ணா இரண்டு நாள் இங்க வரும் போது இந்த ரூம்ல தான் இருப்பார்.” என்று பட் இயர்லி மார்னிங் பறந்துடுவார்” என்றாள்.

கீழே காசிநாத் வரவும், கரோலின் வரவேற்க, பாவனாவை தேடியவரிடம், “லேகா சுத்தி பார்க்க அழைச்சிட்டு போனா. ஒரு மாதிரி மந்திரிச்சு விட்டவளா முழிக்கறா.” என்று கூறினார்.

  “அர்னவ் வந்து பார்த்துப்பான்” என்று கூறிவிட்டு ”லஞ்ச் ரெடிபண்ண அரேஜ் பண்ணிட்டியா?” என்று கேட்டார்.

“யா.” என்றார் கரோலின்.

  லேகா ஏதேதோ பேச, அர்னவின் பணக்கார இடம் கிலியை தந்தது.
 
  பைலட் வேலை, நல்ல சம்பளம் என்று வாழ்பவன், தனியாக தாய் தந்தையரை விடுத்து பக்கத்தில் ஹோட்டலில் வாழ்கின்றான். ஓரளவு வசதியாக தான் இருப்பான் என்று அறிந்தாலும், இந்தளவு இவளை வாயடைக்கும் விதமாக எதிர்பார்க்கவில்லை.
  இப்படி இருப்பவன் எப்படி ஒரு பைலட்டாக, மாத சம்பளம் வாங்குகின்றான் என ஆச்சரியப்பட்டாள். ஏனெனில் எல்லாருக்கும் இருக்கும் ஈகோ மற்றவரிடம் அடிபணியாதே. அர்னவ் போன்றவர் எப்படி?

  “ஐய் அண்ணா வந்துட்டார்.” என்று லேகா குதிக்க, பாவனா திடுக்கிட்டு திரும்ப, “லேகா… எ கப் ஆஃப் டீ  கொண்டு வரச்சோல்லு” என்று கூற, “ஓகே அண்ணா” என்று ஓடினாள்.

  “லேகா.. லேகா..” என்று பாவனா அழைக்க, “அண்ணி அண்ணாவிடம் பேசிட்டு இருங்க இதோ வந்துடறேன்” என்று சிட்டாய் பறந்தாள்.

  “அவளை எதுக்கு கூப்பிட்டு நிறுத்த பார்க்கற. உன்னிடம் பேசணும்னு தான் அவளை விரட்டியது.” என்றான் அர்னவ்.‌

  பாவனா ஏறிட்டு பார்த்து அர்னவின் பார்வையால் தழைத்தாள்.

  “மேடத்திடம் லவ் பிரப்போஸ் பண்ணினா ரிஜெக்ட் பண்ணினிங்க. எந்த அன்புல பாசத்துல என்னை காப்பாற்ற எதிர்ல ஒருத்தன் பூதம் மாதிரி இருக்கான்னு தெரிந்தும், என் அப்பாவை தொடர்பு கொண்டு என்னை காப்பாற்ற சொல்லியிருக்கிங்க?” என்று கேட்கவும், “என் உயிரை மானத்தை காப்பாத்தினிங்க.” என்று பேசியவள் தொடரும் முன், “ஓஹோ.. இப்ப மேடம் என் உயிரை, என் உயிரை விட மேலான வேலைக்கு பங்கம் வராம காப்பாத்த போராடினிங்களோ? 

என்னை விரும்பலைன்னு சொன்னதுலயே நான் வானத்துலயிருந்து தொப்புனு விழுந்துட்டேன் டி. உயிர் போனா என்ன மயிர் போனா என்ன?” என்று கூறவும் பாவனா அவனை கண்டு கோபமாய் பார்த்து விழியை தாழ்த்திக்கொண்டாள்.

    “அசிங்கமா பேசாதிங்க” என்றாள்.

  “அசிங்கமா நான் பேசறேன்னா?. நீ தேவையில்லாம பேசினா அப்படி தான் வாயில வரும்‌.” என்றதும் பாவனா அவனை தாண்டி கீழே செல்ல முயல, அவளது புஜத்தை பிடித்து, “நீ என்னை லவ் பண்ணற தானே?” என்று கேட்டான். இல்லையென்று மறுக்க பார்த்தவளின் புஜத்தை அர்னவ் இறுக்கவும், “நமக்குள்ள செட்டாகாது” என்றாள்.

  “என்ன செட்டாகாது?” என்றான்.‌

    “நீங்க வேற நான் வேற?” என்றாள்.

  “அந்தஸ்தா?” என்றதும் பேசயியலாமல் திணறினாள்.

  “ஜீ..ஜீவனை என்ன செய்திங்க?” என்றாள்.

  இங்கு வந்து பார்த்ததும் ஹீவனை போல பணப்பலத்தை பெற்றவனே அர்னவ் என்றதும், ஜீவனை ஏதாவது செய்திருப்பானென்று கேட்டாள்.

  “வார்னிங் கொடுத்திருக்கேன். திரும்ப என் பாதையில் குறுக்கே வந்தா, அவன் பியான்சியிடம், அவன் செய்த சீப் பிஹேவியருக்கு உண்டான ஆதாரம் போகும்னு.  ஏற்கனவே அவனுக்குண்டான மரியாதை கொஞ்சம் குறையவும் அவங்க அப்பா, அவனுக்கு பணக்கார பொண்ணை பார்த்து பேசி முடித்து இருக்கார். ஏதாவது வாலாட்டினா, அந்த குடும்பத்திடம் மரியாதை இழக்க நேரலாம். அதோட அவனுக்கு சப்போர்ட் குறையும். அவங்க அப்பாவிடம் மத்த விவரம் எல்லாம் அங்கிருந்து இங்க வரும் போதே ஒன் பை ஒன்னா செண்ட் பண்ணி, போன் பேசி முடிச்சிட்டேன்.‌
  அவர் அவரோட பையனை கண்டிப்பதா பிராமிஸ் பண்ணிருக்கார்.” என்று விவரித்தான்

   முனபு வெறும் பைலட் பின்புலம் இல்லாதவன், வேலை பறிப்போனால் பகையை தூக்கிக் கொண்டா அலைய முடியாது என்றெண்ணினான் ஜீவன். இன்றோ தன்னை போலவே பணக்கார வர்க்கம். அவனுக்கு பிடிக்குமென்று வானத்தில் பறக்க ஆசைப்பட்டு அதற்கான பணியில் தன்னை திணித்து கொண்டுள்ளான் என்று அறிந்தப்பின், வாலாட்டுவானேன்?
  அதிலும் அர்னவிடம் பைலட்டாக இருந்த பொழுது வாங்கிய அடி உதை, இன்று, பணக்காரனின் மகன் என்று போலீஸ், வந்து இரண்டாம் முறையாக மிரட்டியுள்ளது.
   ஜீவன் பாவனாவை நோட்டம் விட அனுப்பிய ஆட்களை எல்லாம் சிறையில் சில நாட்கள் உள்ளே தள்ளிவிட்டு, அபராதம் வேறு ஜீவன் வழங்க, கூறியிருந்தனர். இதில் பினாமி வேறு டிரக்ஸ் சப்ளை என்று தனி டிராக் போக, ஜீவன் விழி பிதுங்கிவிட்டான்.

     அர்னவிடம் மன்னிப்பு கேட்டு நின்றான்.
  இனி பழிக்கு பழியென்று வரமாட்டேன் என்று எழுதாது மூலமாக வாய் வார்த்தை மூலமாக ஒப்புதல் அளித்திருந்தான்.

  அதை பாவனாவிடம் கூறினான்.

“தேங்காட்” என்று பாவனா கூறி முடிக்க, “ஐ லவ் யூ பாவனா” என்றவன் அவள் உயரத்திற்கு குனிந்து மலரிதழில் தேன் பருகினான்.

நொடியில் தன் நினைவை மங்க செய்து, பூமியிலிருந்து வானத்திற்கு முத்தமெனும் ஊர்தியில் அழைத்து சென்றவனிடம் விடைப்பெற முடியாது இசைந்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
 

8 thoughts on “ராஜாளியின் ராட்சசி-19”

  1. M. Sarathi Rio

    ராஜாளியின் ராட்சசி…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 19 Pre Final)

    அட்ப்பாவி..! ஒரு சிங்கிள் முத்தத்துலயே, அவளை மிங்கிளாக்கிற அச்சாரத்தை
    விதைச்சிட்டானோ…!
    எப்படியோ அந்த ஜீவனை ஆஃப் பண்ணியாச்சு, ப்ளைட்டை டேக் ஆஃப் பண்றவனுக்கு, அந்த ஜீவனை பண்றதா பெரிய விஷயம்…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Super arnav bayangarama athiradi ah ellam panita antha jeevanuku inum Venum ethum pana Mata mudiyathu nu ninachitan ipo therinji irukum una pathi nalla . Ratchasi ipovum intha veeda pathutu love panlanu solra nee sonna un face kamichi kodukatha ena atha intha athiradi un kittaum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!