🍁6
கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த கீர்த்தனா அன்று வழக்கம் போல கல்லூரி முடித்து விட்டு வாசலிலே ஸ்கூட்டி விட்டுவிட்டு தங்கள் இல்லத்தில் வெளியே இருக்கும் காரினை ஆச்சரியமாக பார்த்தபடி உள்ளே வர ஹாலில் அம்பிகை யாரோ ஒருத்தனுக்கு விருந்து உபசாரம் கொடுக்க கண்டு தலையை அங்கும் இங்கும் உருட்டி அவன் யார் என்று பார்க்க ராஜேஷ் என்றதும் திடுக்கிட்டு போனாள்.
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அதே நேரம் சுதாகர் தம்பி இதோ கீர்த்தி வந்துட்டா என்றதும் முறுவலித்தவன்
”அவங்க இப்போ தானே வந்தாங்க முதலில் சாப்பிட ஏதாவது கொடுங்க சாப்பிட்டு வரட்டும் நான் காத்திருக்கறேன்” என்றான்.
”இல்லை தம்பி நீங்க ஏற்கனவே காத்திருந்தீங்க அதான்…” என அம்பிகை கூறினார்.
”பரவாயில்லை ஆன்ட்டி.. அவங்களுக்கு ஏதாவது கொடுங்க அப்பறம் வரட்டும்” என கீர்த்தியை ரசித்தான்.
கீர்த்தி தான் ‘என்ன இவன் இங்க இருக்கான்’ என குழம்பினாள்.
”என்ன கீர்த்தி போ தம்பி உனக்காக தான் ரொம்ப நேரமா காத்திருக்கு முகம் கழுவி ஃபிரெஷ் ஆகிட்டு வா” என அம்பிகை கூற அவளும் கிளம்ப போனாள்.
ட்ரெஸ்ஸிங் டேபில் முன் அமர்ந்தவள் இவர் எதுக்கு இங்க வரணும்? எதுக்கு எனக்காக காத்திருக்கணும்? நேற்று பேசி சென்றது எல்லாம் வச்சி பார்த்தா இவர் ஒரு பிளானோட இருக்கார் என்பது நல்லா தெரியுது.. ஆனா நான்…” என யோசித்தவளின் நினைவில் அம்பிகை தடை செய்வது போல வந்தார்.
”டிரஸ் மாற்றிட்டு போ என்று அவளுக்கு பாலை கொடுக்க வாங்கி பருகியவள்
”அம்மா அவர் எதுக்கு வந்திருக்கார்?” என்றாள்.
”அதுவா? உனக்கு கார் ஓட்ட தெரியாது என்று ரொம்ப நாள் சொல்லிட்டு இருந்த தானே?”
”அதுக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்?”
”இரு டி அதானே சொல்ல வர்றேன்…. அவர் உனக்கு கார் ஓட்ட சொல்லி தருகின்றாராம் கிளம்பு” என எழுப்பினார்.
”அம்மா டிரைவிங் கிளாஸ் போனா சொல்லி தந்திட போறாங்க அங்க அனுப்பு இவர் கூட எப்படி? எனக்கு அவரை முன்ன பின்ன தெரியாது.. இதுல அவர் அப்பவோட ஃப்ரெண்ட் பையன் கம்பெனி முதலாளி.. அவர் எதுக்கு எனக்கு?” என மறுத்தாள்.
”நேற்று நீ தானே அப்பா கார் ஓட்ட தெரியாது என்று அவரிடம் சொன்ன.. அவருக்கு இங்க நட்பு வட்டாரம் கொஞ்சம் இல்லை அதனால உனக்கு சொல்லி கொடுத்து உன்னிடம் ப்ரெண்ட்ஸ் ஆஹ் இருக்க ஆசைப்படறார் அவ் ளோ தான்” என மகளை கை பிடித்து அழைத்து வந்தார்.
அங்கே இருந்தால் எங்கே இன்னும் மகள் கேள்வி மேலே கேள்வி எழுப்புவாளோ என அஞ்சி.
”வர்றேன் அங்கிள்.. வர்றேன் ஆன்ட்டி” என அவன் செல்ல அவனின் பின்னால் இவளோ வேறு வழியின்றி போனாள்.
காரில் உட்கார்ந்ததும் அவனே வண்டியை எடுத்து அவன் புதிதாக கட்டும் கம்பெனி இடத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கே பெரிய கிரவுண்ட் இருக்க அங்கே பணி செய்யாமல் கொஞ்சம் அப்படியே போட்டு இருந்தது.
”இங்க கார் ட்ரைவ் பண்ண சௌகரியமா இருக்கும் கீர்த்தி” என பேச்சை துவங்கிட
”உங்களுக்கு எதுக்கு தேவாயில்லாத வேலை?” என்றாள் கீர்த்தி.
”பரவாயில்லையே.. கொஞ்சம் நேற்று போல பயந்து, நெளிஞ்சு, கற்றுப்ப அப்படியே பேசிட செய்வோம் நினைச்சேன்.. இப்ப நேரிடையா கேட்கற… வெல் எனக்கும் இது சட்டுனு புரிய வசதி தான்….” என்றவனின் பேச்சில் புரியாமல் பார்த்தாள்.
”ஏய் நேற்று நான் பேசியது எல்லாம் மறந்துடியா என்ன?” என்றதும் கீர்த்தி யோசனையில் சென்றவள்
”அதுக்கு நேற்றே பதில் சொல்லி இருந்தேனே? எனக்கு இன்னும் கல்யாணம் வயசு இல்லை நேற்றே தெளிவா தானே சொன்னேன்” என பேச காரினை நிறுத்தினான்.
”ஓகே வண்டியை ஓட்ட கற்று கொடுக்கறேனே.. அதுக்கும் தடை இருக்கா என்ன?” என அவன் கேட்க கொஞ்ச நேரம் யோசித்தவள்
”இங்க பாருங்க எனக்கு கார் ஓட்ட பிடிக்கும்.. அதனால உங்களிடம் கற்றுக்க எனக்கு எந்த தடையும் இல்லை.. ஆனா நீங்க எதுக்கு உங்க கம்பெனி ஒர்க்.. என்று உங்க வேலையெல்லாம் விட்டுட்டு எனக்கு கற்று கொடுக்கணும்…?”
”ஐ லவ் யூ கீர்த்தி அதான் பதில்” என்று சொன்னவன் அவளையே விழுங்கினான்.
”நீங்க கேட்டதும் எங்க அப்பா அம்மா என்னை உங்களோட இப்படி கார் ஓட்ட கற்றுக்கோனு அனுப்பி இருக்கலாம் அவர்களுக்கு பொண்ணு பெரிய இடத்து பையனே தேடி வந்து பேசறான்… அவங்களுக்கு யோகம் என்று கூட நினைக்கலாம் ஆனா நான் அப்படி இல்லை” என்று கூறிவிட்டு தலை குனிந்தாள்.
”அவங்க நினைப்பது எனக்கு புரியும்… நீ என்னை அந்த மாதிரி பணக்காரன் என்னை நெருங்கலை என்றும் எனக்கு தெரியும்… உன்னிடம் எனக்கு இன்னும் ஈர்ப்பு அதிகமா போவதற்கு காரணம் அதுவா கூட இருக்கலாம்.. நீ வீட்டுக்கு நுழைந்ததும் என்னை பார்த்து ஒதுங்கி போனியே… இதே பணம் மட்டும் பிரதானமா இருக்கற பொண்ணுங்க என்றால் என்னை தேடி வந்து பேசி இருப்பாங்க…” என்றவன் பார்வை அவளையே பார்க்க
”எங்க அப்பா அம்மா?”
”தெரியுது.. அவங்களுக்கு என்னை விட மனசில்லை…” என புன்னகை உதிர்க்க கீர்த்தி அங்கும் இங்கும் கண்களை சுழல விட்டாள்.
”எனக்கு கார் ஓட்ட மட்டும் சொல்லி தருவதா இருந்தா சொல்லுங்க கற்றுக்க செய்யறேன். இந்த காதல் கல்யாணம் என்று எல்லாம் எனக்கு யோசிக்க முடியலை.” என சொல்லியவள் ”நான் வீட்டுக்கு போறேன்” என்று கதவை திறக்க போனாள்.
அவனோ கீழே இறங்கி அந்த பக்கம் வந்து, அந்த பக்கம் போய் உட்கார். கார் ஓட்ட சொல்லி தர்றேன்’ என்றான். அவளோ நகர்ந்து கார் ஒட்டும் இடம் சென்று அமர்ந்தாள்.
”கீயை ஸ்டார்ட் செய் மெதுவா….. ” என்று சொல்லி தர ஆரம்பித்தான்.
அதில் அவனின் கொஞ்சல் மொழி எல்லாம் பறந்திட கீர்த்தியும் உன்னிப்பாக கற்று கொள்ள ஆரம்பித்தாள்.
வீட்டுக்கு வந்து அவளை கொண்டு வந்து சேர்க்க இறங்கும் பொழுது ”தேங்க்ஸ்… நேரம் இதே தான் வருவிங்களா?” என்று கேட்க ஆம் என்பதாய் தலை அசைத்தான்.
வீட்டுக்கு சென்றதும் அம்பிகை தான் மெல்ல அருகே வந்து அந்த தம்பி என்ன பேசுச்சு..” என்று பிடி போட்டு பார்க்க
”அவருக்கு கார் ஒட்டறது பிடிக்கும் போல ரேஸ் கூட கலந்து இருக்கார் அதனால சொல்லி கொடுக்கறதில் ஆர்வம். இங்க வேற யாரும் இல்லை என்றதும் நீங்க நேற்று நல்லவிதமா நடந்துகொண்டதில் அவருக்கு கொஞ்சம் மரியாதை. அதனால தான் கற்று கொடுக்க முன் வந்து இருக்கார்.. அவர் உங்க மேல வச்சி இருக்கற மரியாதையை நீங்க எப்படி காப்பாற்றி கொள்வீர்களோ அதே போல நானும் மதிப்பா நடந்து கற்றுப்பேன் மா” என்றாள். மறைமுகமாக தேவயற்று அவரிடம் வழியாதீர் என்று சொல்லி குளிக்க சென்றாள்.
அம்பிகைக்கு தான் ஒரு மாதிரி ஆயிற்று அதை கேட்டு கொண்டு இருந்த சுதாகருக்கும் இனி அந்த ராஜேஷ் வந்தால் வழிந்து விடாமல் கொஞ்சம் கண்ணியத்தோடு பழக முடிவு எடுத்தார்கள்.
கீர்த்திக்கு பெற்றோருக்கு இலை மறை காயாக எப்படி அவனிடம் பழகனும் என சொல்லிட்டு வந்தாச்சு இனியும் நம்மளை வைத்து ரொம்ப வழிந்து கொண்டு இருக்க மாட்டார்கள்.
ராஜேஷ் தவறா நினைப்பான் கூட கொஞ்சம் யோசித்து நடப்பாங்க என்று வந்தவள் உறங்கி போனாள்.
ஒரு வாரம் போனது ஏற்கனவே கொஞ்சம் ஓட்ட பழகி இருந்த காரணத்தில் ஓரளவு கற்றுக்கொள்ள செய்வதில் ஆர்வமும் சேர நுணுக்கத்தோடு கற்றுக்க கொண்டாள்.
அடுத்த பத்து நாட்களில் கொஞ்சம் சந்து போந்து இருக்கும் தெருக்களில் ஓட்ட அவளை பழகினான்.
கொஞ்சம் கவனம் சிதறி யார் மீதோ இடிக்க செல்லும் நேரம் எல்லாம் ராஜேஷ் லாவகமாக மாற்றி விடுவான். அதில் சில நேரம் அவனின் தொடுகை இருக்கும். விரல்கள் தீண்டாமல் இருக்க முடியுமா?! அப்பொழுது எல்லாம் பெண்ணவள் தேகம் ஒரு வித உளைச்சலில் சிக்கி தவிக்கும்.
எந்த ஆண்மகன் இதுவரை நெருங்கி பேசாமல் இருந்த கீர்த்திக்கு, ராஜேஷின் இந்த தீண்டல் இரவு எண்ணி எண்ணி பார்க்க செய்யும். அது மனகண்ணில் அவன் வேறு எந்த நோக்கதிலும் தீண்டவில்லை என்று புரிந்திட பெண்ணவளுக்கு ராஜேஷ் மேல் நல்ல அபிப்ராயம் விளைந்தது.
எந்த பெண்ணிற்கும் பருவ வயதின் துவக்கத்தில் யாரையாவது பார்த்து அவர்களின் நல்ல குண அதிசயத்தில் ஈர்க்க செய்வது இயல்பு தானே..? கீர்த்தி மனம் அப்படி தான் முதலில் தோன்றியது.
மாதங்கள் கடக்க அவனின் வருகையில் தனது மனம் மகிழ துவங்கியதை அறியாது இருந்தாள்.
அன்றும் அப்படியே வந்து நிற்ககையில் வெளிநாட்டு சாக்லேட் எடுத்து கீர்த்தி முன் நீட்டி ஹாப்பி பெர்த்டே என்று வாழ்த்தினான், அவளோ முக மலர்ந்து வாங்கினாள்.
”எனக்கு பெர்த்டேனு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் அவள்.
”தெரியும்” என்றான்.
”நான் தான் உங்களுக்கு தரணும் நீங்க தர்றீங்க?” எடுத்து சுவைத்தாள்.
”உனக்கு பதினெட்டு வயது ஆகுதே அது கூட தெரிந்துக்க ஆர்வம் இருக்காதா எனக்கு?” என்றதும் தான் சுவைத்தவள் அவனை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.
அவன் அதற்கு பின்னர் எதுவும் பேசாமல் கார் ஒட்டும் விதத்தில் செல்ல கீர்த்தியும் மாறினாள்.
இப்படியாக நாட்கள் செல்ல செல்ல கீர்த்தி மனதிலே ராஜேஷ், அவள் அறியாமல் நுழைய செய்தான்.
Ippadi nalla thana palagi irukan rajesh apram yen intha mari intha alavuku maritan verum kolanthai vishayam mattum thana ippadi marinathuku
Super super. Intresting