🍁 7
கீர்த்திக்கும் இரண்டாம் வருடம் வந்துவிட. அன்று இடை தேர்தலும் வந்திருக்க கீர்த்தி தேர்தலுக்கு ஓட்டு சாவடியில் வரிசையில் நின்றாள்.
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பதினெட்டு முடிந்து பதினொன்பது ஆக இருந்த நேரம் அப்பொழுது தான் ஓட்டு போட்டுவிட்டு வந்த ராஜேஷ், இவளை பார்க்க அவளோ அவனை பார்க்க, அவன் இவளை தான் தேடி வந்து கொண்டு இருந்தான்.
”என்ன இங்க எல்லாம் வந்திருக்க?”
”ஹலோ நான் நல்ல குடிமகள் அதான் வாக்கு சாவடிக்கு வந்து ஓட்டு போட போறேன்” என்றாள்.
”யாரை தேர்ந்து எடுக்க போறேனு முடிவு எடுத்திட்டியா? இல்லை இங்கி பிங்கி பாங்கினு போடுவியா?” என்றான் நக்கலாக.
”ஹ்ம்ம அது எல்லாம் சரியா தேர்ந்து எடுப்பேன்” என்று சொல்லி ஒழுங்கு காட்டினாள்.
”நாட்டையே யார் சரியா ஆள்வாங்க என்று தேர்ந்து எடுக்கற? உன்னை ஆள யார் சரியானவன் என்று தேர்ந்து எடுக்க இன்னும் எவ்ளோ காலம் ஆகும் கீர்த்தி?” என்றான்.
அவன் எங்கு சுற்றி எங்கு வருகின்றான் என்றே அறிந்து கொண்டவள் அமைதியாக யோசிக்க
”எனக்கு உன்னை உடனடியா கல்யாணம் செய்து கொள்ளனும் என்று பேராசை கீர்த்தி… நானும் என்ன என்னவோ செய்துட்டேன்.. உன் மனசில் இடம் கிடைக்கலை… ஆனா சூழ்நிலை பாரு அப்பா உடனடியா கல்யாணம் செய்து வைக்க எனக்கு பொண்ணு பார்க்கின்றார்… எனக்கு இன்னும் நீ தான் என் மனைவியா வரணும்னு மனசு சொல்லுது… ஆனா நீ என் காதலுக்கு கூட ஓகே சொல்லலை” என்றே சொல்ல அங்கிருந்த ஒரு போலிசோ ஸார் இங்க கூட்டம் நிற்க கூடாது… போங்க” என்று துரத்தினார்கள்.
”பை கீர்த்தி” என நகர்ந்தான்.
ஓட்டு போட்டுவிட்டு வந்த கீர்த்தி மனமோ… அடுத்த ஒரு வாரம் சலசலத்து கொண்டே இருந்தது. ராஜேஷ் மனம் மாறி திருமணம் செய்து கொள்வானா? அப்படி என்றால் என் மனதில் என்ன இருக்கு? என்றே யோசிக்க தேர்தல் முடிவில் காத்திருப்பவர்கள் கூட ரிலாக்ஸ் ஆக இருப்பார்கள் ஆனால் இவள் மனமோ ஓயாது இருந்தது.
ராஜேஷ் வேறு ஒரு வாரம் இங்கு வாராமல் இருந்தான். ஏற்கனவே கார் நன்கு ஒட்ட பழகியதும் வராமல் தான் இருந்தான். ஆனால் அது இரு தினம் ஒரு முறை தலை காட்டிவிட்டு செல்வான் இந்த வாரம் தான் வாராமல் போக கீர்த்தி அவளாக போன் செய்ய ராஜேஷ் எடுத்தான்.
மீட்டிங் இருக்கவும் காத்திருக்க சொல்லி வெளியே வந்து பேசினான்.
”சொல்லு கீர்த்தி?” என ஆரம்பிக்க
”நீங்க.. .நீங்க எப்படி இருக்கீங்க?” என்று தடுமாற…
”நல்லா இருக்கேன் கீர்த்தி… நீ…?” என்றவனின் பேச்சில் அருகே ”சார் மீட்டிங்…” என்ற குரல் ஒலிக்க
”போங்க கிரண் வர்றேன். வெயிட் பண்ண சொல்லிட்டு தானே வந்தேன்” என்று ராஜேஷ் எரிந்து விழ கேட்டதும்
”ஒன்.. ஒன்னுமில்ல.. உங்களுக்கு பொண்ணு பார்த்தது முடிச்சுட்டாங்களா கல்யாணம் எப்ப?” என்று கேட்க பலமாக சிரித்தவன்
”ஹ்ம்ம நேர்ல சொல்றேன்… இப்போ மீட்டிங் இருக்கு” என்று வைத்திட சோர்ந்து போனவள் போனை வைத்து விட்டத்தை பார்த்தபடி அமர்ந்தாள்.
ஃபுல் மிடியில் ஒரு பிங்க் டாப் என்று சோபாவில் இருந்தவள் எதையோ இழந்தது போல டிவியில் சேனல் மாற்றி கொண்டே இருக்க, அங்கு ஒரு கார் வரும் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள்.
ராஜேஷ் கார்… என்ற மனதிடம் ‘சே இதே நினைப்பு இது தான் வயசு கோளாறு போல’ என்று மனதை திட்டி, மீண்டும் டிவியில் பார்வை பதித்தாள்.
”வாங்க வாங்க என்ன இது திடீர்னு நீங்களே… ” என்று சுதாகர் மகாலிங்கத்தை வரவேற்க திரும்பி பார்த்தாள் கீர்த்தனா.
ராஜேஷ் அவரின் அப்பா என்றதும் எழுந்தவள் தடுமாறி அவள் அம்மா அம்பிகை பக்கம் வந்து நிற்க
”என்னடா எதுவும் சொல்லலையா நீ” என்று ராஜேஷை பார்க்க,
”இல்லை அப்பா.. ஆனா சூர் அவள் ஒப்பு கொள்வா” என்று சொல்ல கீர்த்தனாவிற்கு புரிந்தும் புரியமலும் நின்றாள்.
”முறைப்படி வீட்ல பெண்களோட வந்து பேசணும்.. ஆனா என் வீட்டுக்காரி என்னை விட்டு இறைவனடி சேர்ந்து வருஷம் ஆச்சு” என்று சொல்ல ராஜேஷ் கண்கள் கீர்த்தனவை தழுவ கீர்த்தனா ராஜேஷிடம் பார்வை பதித்து தடுமாறினாள்.
”உட்காருங்க சுதாகர்.. ஒன்னும் குழம்ப தேவயில்லை… எல்லாம் நல்ல விஷயம் தான். என் மகனுக்கு கல்யாணம் செய்ய இருந்தேன் அவன் உங்க பொண்ணு தான் வேணும்னு பிடிவாதமா இருக்கான்… தெளிவா கேட்டுட்டேன்.. அதான் உங்களிடம் பேச வந்தேன்” என்றார்.
”அது பொண்ணு படிக்குது.. 2 வது வருஷம் வேற… வயசும் இப்போ தான் 18 முடிஞ்சு 19 ஆகுது..”
”உங்களுக்கு சம்மதமா வயசு கிடக்குது கழுதை” என்று மகாலிங்கம் கேட்டார்.
”அது முன்ன அப்படி எனக்கும் ஒரு ஆசை இருந்தது சார். ஆனா அது தவறு என்று என் மக அப்பவே புரிய வைத்து விட்டாள்.. கல்யாணம்னு நீங்க வருவிங்கனு எண்ணி பார்க்கலை… அவர் டிரைவிங் சொல்லி தரும் பொழுது எங்களுக்குள் இந்த ஜோடி சேர்ந்தா நல்லா இருக்கும் நினைச்சது தான் ஆனா இப்போ எதுனாலும் கீர்த்தி முடிவு தான். அவள் விருப்பம் இல்லாமல் எதுவும் செய்ய தோணலை….” என்றார் சுதாகர்.
”பரவாயில்லை சுதாகர் உங்களிடம் இந்த பதில் வந்ததே சந்தோஷம்.. என்னம்மா கீர்த்தி என் மகனை கல்யாணம் செய்ய உனக்கு சம்மதமா.. இல்லை என்றால் சொல்லுமா காத்திருக்க வைக்காதே… அவனுக்கு திருமணம் இந்த வருடத்தில் பண்ணி வைக்கின்ற முடிவில் தான் நான் இருக்கேன்.. நீ அவனை பிடிக்கலை என்றால் நான் வேற பொண்ணு பார்க்கணும் நிறைய வேலை இருக்கு” என்று சொல்லி அவளை, புது விதமாக மிரட்டும் தொனியில், ஆனால் வித்தியாசமாக சாந்தமாக கேட்டார்.
ராஜேஷ் கண்கள் வேணாம் சொல்ல போறியா என்பது போலவே தவிப்பாக பார்க்க, கீர்த்தியோ அம்பிகை சுதாகரை பார்த்தாள்.
அவர்களோ உன் சம்மதம் தான் முக்கியம் என்பது போல பார்க்க, மகாலிங்கம் தோரணை என் மகனுக்கு நான் வேற பொண்ணு பார்க்க கூட ரெடி என்பது போலவே இருக்க, அந்த வயதின் முதல் காதல் இழக்க மனமில்லாமல் கீர்த்தி
”எனக்கு அவரை பிடிக்கும் அங்கிள் நானும் அவரை விரும்பிட்டேன்.. ஆனா எனக்கு ஒண்ணும் கல்யாண வயசு இல்லையே…” என்றாள்.
”கல்யாணத்துக்கு எல்லாம் வயசு முக்கியமா மா… நானும் என் பொஞ்சாதியும் கல்யாணம் செய்யும் பொழுது அவளுக்கு பதினாறு எனக்கு இருபத்தி இரெண்டு… உங்களுக்கு என்ன வயசு இருக்கும் சுதாகர்” என்று அவரையும் கேட்க
”அவளுக்கும் பதினாறு எனக்கு இருபத்தி ஒன்னு” என்று மகளை பார்த்து யோசனையோடு பதில் சொன்னார்.
கீர்த்தி மனதில் பெரும் குழப்பம் இருந்தாலும் அதை எல்லாம் யோசிக்கும் மனநிலையில் இல்லாமல் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் அவள் எதையும் யோசிக்க விடாமல் சென்றது விதி.
ராஜேஷுக்கு புத்தம் புதிய மலர் கீர்த்தனா கைகளை தாரமாக தீண்டும் நாட்களை எண்ணி பார்க்க கல்யாண கனவில் மிதந்தான்.
அவனுக்கு அவளின் படிப்பு வயது ஒரு பொருட்டாக தோன்றவில்லை… படிப்பு தானே மேரேஜ் முடிஞ்சதும் படி..யாரு தடுக்கறது.. ஏஜ் என்ன அதான் பதினெட்டு கடந்துடுச்சுல என்று சொல்லி அவளின் மனதிலும் அதை பற்றி எதையும் தோன்றவிடவில்லை.
மிக பிரமாண்டமாக திருமண ஹாலில் கீர்த்தி ராஜேஷ் வரவேற்பு நடந்தது.
கீர்த்தி அழகில் ரோஜாவாக நிற்க, ராஜேஷ் கர்வதோடு தான் நின்றான். அவனுள் நினைத்ததை நடத்தி காட்டிய பெருமை வழிந்தது.
நினைத்ததை நடத்தி காட்டும் எல்லோரும் சிறந்தவராக ஆக முடியாது அதனை தக்க வைத்து கொள்ள செய்யும் முறையிலும் இருக்க வேண்டும் என்பதை அறிந்து இருக்கவில்லை அவன்.
அடுத்த நாள் திருமணம் என்று ஐயர் மந்திரம் ஓத சுதாகர் கன்னிகா தானம் செய்திட, பொன் மஞ்சள் தாலி கீர்த்தனா கழுத்தில் ஜொலித்தன.
கீர்த்தனா அந்த கயிற்றில் வாசத்தில் புது விதசந்தோஷம் கொண்டாள். ஒரு நாள் இதே கயிறு கழுத்தை நெருக்கும் என்பதை அறியாது பேதை அன்று இரவே சடங்குக்கும் தயாரானாள்.
ராஜேஷ் கனவு போல தோன்றிய எல்லாம் இன்று அவன் அருகே நிஜமாய் தோன்றும் கீர்த்தனாவை கண்டு அளவில்லா சந்தோசத்தில் அவளை இழுத்து தன் மீதே விழுந்த, அவளின் மிரண்ட பார்வை அச்சம் எல்லாம் அவனுக்கு ரசிக்கும் படியாக தோன்ற அவளிடம் வாழ்வை பற்றியும் திட்டமிடலும் என்று எதையும் பேசி தொடங்காமல் அவளை தனது கட்டுக்குள் இருக்க ஆரம்பித்தான்.
அடுத்த வந்த காலங்களில் கூட அதிகாலையில் ஆரம்பித்து இரவு வரை அவனின் அன்பும் அரவணைப்பும் அவளுள் எந்த வித எதிர்கால திட்டமிடலில் யோசிக்கவிடவில்லை.
காதலர்களை எல்லை மீறவைத்து இருந்தால் எப்படியோ அப்படி தான் இருந்தார்கள்.
அதற்காக ராஜேஷ் கீர்த்தனா மீது காதல் இல்லாமல் இல்லை.. அவள் சிறுவிரல் இடறினாலும் அதற்காக துடிக்க தான் செய்தான். அவளுக்கு எக்ஸாம் எல்லாம் வந்தாலும் அதில் அவள் பாட்டிற்கு எழுதி முடித்து இருந்தாள்.
நடுவில் ஹனிமூன் என சிம்லா சென்று வந்தார்கள். எல்லா புகைப்படத்திலும் ராஜேஷ் கைகுள்ளே தான் கீர்த்தனா இருந்தாள். கீர்த்தனா கூட ராஜேஷ் விலகி நின்று இயற்கையில் மனம் செலுத்தினாலும் ராஜேஷ் அவன் பார்வை மட்டும் என்றும் கீர்த்தனா என நிறைந்து இருந்தாள்.
ஒரு பெண்ணாக அதில் கீர்த்தனா பெருமையாக பூரிப்பாக எண்ணினாள். எந்த கணவனும் தன் மனைவியை நாடி என்றும் அழியா அன்பில் திளைக்க இருக்க மாதங்கள் பத்து கடக்க நான்கு மாதம் மேடிட்ட வயிரின் வித்தியாசம் மட்டுமே கீர்த்தனா தாயக இருப்பதை அம்பிகை கேட்க அதன் பின்னரே உணர்ந்தாள்.
உணர்ந்த நொடி சந்தோஷம் அவர்களை ஆட்கொண்டது. கீர்த்தனா இந்த நான்கு மாதம் தனக்கு இது குழந்தை என்று கூட அறியாத நிலையை மருத்துவர்கள் திட்டிய பின்னரே உணர்ந்தாள்.
தெரிந்த நிமிடம் ராஜேஷ் தங்க தட்டில் தான் தாங்கினான்.
நான்கு மாதம் மருந்து உட்கொள்ளாதது வருத்தம் இருந்தாலும் குழந்தை வளர்ச்சி எல்லாம் சரியாக இருக்க அதன் பின் தொடர்ச்சியாக உணவில் உண்டு இன்னும் கவனிப்பில் மிதந்தாள்.
இருபது வயதில் அடியெடுத்து வைக்கும் கீர்த்தனாவுக்கு மகாலிங்கம் தங்கள் வீட்டின் வாரிசை சுமக்கும் மருமகளுக்கு என்று விளயாட்டாய்
”மருமகளுக்கு என்ன வேணும் பரிசா?” என்று கீர்த்தனாவிடம் மகாலிங்கம் கேட்க
”வீடு வாசல் சொத்து அது இது என்று கேளு கீர்த்து” என ராஜேஷ் விளயாட்டாய் சொல்ல
”அது எல்லாம் வேணாம் மாமா.. நான் இப்பவே சந்தோஷமா தான் இருக்கேன் எனக்கே வாழ்க்கை இன்பமா இருக்கு லைஃப் முழுதும் இதே சந்தோஷம் போதும்” என்றாள்.
”அப்படி சொன்னா போதுமா மா.. நான் ஒரு ப்ரெசெண்ட் பண்ணனுமே….” என யோசித்தவர் ஒரு டாகுமெண்ட்ஸ் எடுத்து நீட்ட.. அதனை வாங்கி ராஜேஷ் பார்க்க அதில் பிரதான சாலையில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒரு பிளாட் கீர்த்தனாவுக்கு சொந்தமாக அவள் பெயருக்கு எழுதி வாங்கியிருந்தார்.
”பார்த்தியா இந்த அப்பாவை… எனக்கு கூட இதுவரை ஒரு பிளாட் வாங்கி ப்ரெசெண்ட் கொடுக்கலை ஆனா மருமகளுக்கு கொடுத்து இருக்கார்” என ராஜேஷ் அதை கீர்த்தனாவிடம் கொடுக்க அந்த பரிசில் நிஜமாகவே பேச முடியாது சிக்கினாள்.
”ரொம்ப தேங்க்ஸ் மாமா.. இப்படி ஒரு ப்ரெசெண்ட் எதிர் பார்க்கலை.. தேங்க் யூ வெரி மச்” என்று சொல்ல உள்ளிருந்து குழந்தை எட்டி உதைத்தது.
”மாமா குழந்தைக்கு வீடு பிடிக்கும் போல எட்டி உதைக்கு” என்று சொன்னதும் ராஜேஷ் உடனே அங்கே கைகளை வைத்து பார்க்க குழந்தை உதைப்பது அவனுக்குள் பெரும் மகிழ்வை கொடுத்தது.
இப்படியாக நாட்கள் கடந்தன…………….
Ivlo santhosama intha alavuku irunthutu yen ipo ippadi mari irukan rajesh nu purilaye verum kolanthai spl child nu mattum irukathu papom
நல்லா போகுது கதை.பாவம் கீர்த்தனா சிறு வயதில் கலையான சுமை