🍁 12
அடுத்த நாள் பள்ளியில் ஒரு நோட்டீஸ் வந்தது. அங்கு படிக்கும் பள்ளியில் டூர் செல்வதற்கான அறிவிப்பு அது.
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
கீர்த்தி தானும் வரவில்லை அபியும் வரயியலாது என்று கூற, அபிமன்யு அவளை ஒரு வகுப்பிற்கு இன்சார்ஜ் செய்து, அந்த அந்த வகுப்பின் மாணவியர் மாணவர்கள் அந்தந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே அடங்குவார்கள் என்று, அவளை வர சொல்லிட, மல்லிகா மிஸ் பொறுப்பில் அபிநயா இருக்க மற்ற பிள்ளைகளை இவள் வழி நடத்தினாள்.
கிண்டி பூங்காவில் தான் அழைத்து செல்வதாக இருக்க, அதிக செலவும் இன்றி, அதற்காக எந்த கட்டணமும் வாங்காமல் அழைத்து சென்று இருந்தான் அபிமன்யு.
அவன் அழைத்து சென்றதே கீர்த்திக்காக தான். ராஜேஷூடன் விவாகரத்து, தயாளனின் செய்கை, அபிநயாவின் உடல்நிலை, என்று யோசித்தவன் கீர்த்திக்கு கொஞ்சம் நிம்மதி கொடுக்கவே இப்படி யோசித்து செய்தான்.
அதற்கு ஏற்றார் போல கீர்த்தி மற்ற ஆசிரியருடன் பழகி கொஞ்சம் நிலைமை மறந்து இருக்க அபிமன்யுவிற்கு நிம்மதியானது.
அபிநயா அடிக்கடி கீழே விழ ஓடிவந்து தூக்கிட செய்தான். முட்டியில் அடிப்பட பாண்ட்எய்ட் போட்டு விட்டான்.
அவளின் முகமோ இன்னும் குழந்தை மனம் மாறாமல் இருக்க அபிமன்யு இந்த குழந்தையை எப்படி அவனால மறுக்க முடிந்தது. இது போல இருப்பது அவளின் தவறு இல்லையே… என்று யோசித்தவன் இவளின் செய்கை இப்படியே இருக்க கூடாது, கொஞ்சம் மாற்றிட இவளுக்கென இருக்கும் சிறந்த இடம் பார்க்க வேண்டும் என்றெண்ணினான்.
கீர்த்தனா இரவு வீடு வந்து சேர்ந்த பின்னரே, மகளின் முட்டியில் இருக்கும் பாண்ட்எயிட் கண்டு கீர்த்தி விசாரித்தாள், அவளோ கிள்ளை மொழியில் ”அபி சார் போட்டார்” என்று சொன்னாள்.
அபிமன்யுவுக்கு நன்றி தெரிவிக்க போனை எடுத்தாள். பின்னர் அவரும் இப்ப தானே போயிருப்பார் சோர்வா இருப்பார் என்று விடுத்தாள்.
இங்கு அபிமன்யுவோ அபிநயாவுக்கு அவளுக்கு புரியும் வகையில் எளிதாக சொல்லி கொடுக்கும் முறை கொண்ட ஆசிரியரை தேடினான். அபிநயாவின் அதிர்ஷ்டம் அன்று கதை சொல்லியாக வந்த கீர்த்திகா அதே படிப்பை காட்ட நேரம் காலம் எல்லாம் பார்க்காமல் அவளுக்கு போனை சுழற்றினான்.
அங்கே கீர்த்திகா போனில் அபிமன்யுவின் எண்ணை கண்டு துள்ளி குதித்து எழுந்தாள்.
”ஹாய் அபி என்ன அதிசயம்.. இந்த நேரத்தில்…. எப்படி இருக்கீங்க?” என்று கேட்டதும் தான் நேரம் பார்த்தான் தனது தலையில் அடித்தவன் பிறகு
”சாரி கீர்த்திகா… ஒரு அவசரம் அது.. ஒரு குழந்தை… அது.. எப்படி சொல்றது” என்று தடுமாறினான்.
”கூல் கூல் எதுக்கு இப்படி உளறுறீங்க.. அப்பா உங்களை மேரேஜ் அப்ரோச் பண்ணி விட்டதால் இப்படி என்னிடம் பேச திக்கணும் என்ற அவசியம் இல்லை” என்றதும் தான் முன்பு தந்தை பேசியதும் நிழலாடியது. பேச வந்தது மறந்து போக நொடியில கீர்த்தனா அபிநயா கண் முன்னே வர
”சாரி கீர்த்திகா எனக்கு என்ன பேசறது என்றே தெரிலை… அப்பா சொன்னார் ஆனா இப்ப எனக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லை… பை தே வே உங்ககிட்ட ஒரு உதவி கேட்க வந்தேன்.” என்றான்
பேச்சில் திணறாமல் அதற்குள் கீர்த்திகாவும் விளயாட்டை நிறுத்தி
”சொல்லுங்க அபி..? என்ன உதவி?”
”இல்லை அன்னிக்கு அபி திருக்குறள்… சாரி உங்களுக்கு யாருனே தெரியாது.. வெயிட் எப்படி சொல்ல” என்று குழம்பினான்.
”சொல்ல வந்ததை பொறுமையா தெளிவா சொல்லுங்க அபிமன்யு, அதுக்கு முன்ன ஆழமா மூச்சை விடுங்க ரிலாக்ஸ் பண்ணுங்க” என்று கீர்த்திகா சொன்னதும் அதே போல செய்தவன் சில நொடியில் தான் பேசவந்ததை சொன்னான்.
”கீர்த்திகா எங்க பள்ளியில் ஒரு ஸ்பெஷல் சைல்ட் இருக்கா… அவளுக்கு ஆசிரியர் எல்லாம் சொல்லி கொடுக்க புரியுது ஆனா நார்மலா நடக்க மாட்டேங்குறா.. அவளுக்கு எப்டி சொல்லி புரிய வைக்க அவளுக்கு.. அவளுக்கு எப்படி?”
”வைய்ட் வைட்… அன்னிக்கு ஒரு குழந்தை திருகுறள் சொன்னாலே அவளா?” என்று நினைவு வைத்து கேட்க
யெஸ் அவளே தான்”
”ஹ்ம்ம அபி அவளுக்கு இங்க செட் ஆகாது. நாம என்ன தான் பொறுமையா எடுத்து சொன்னாலும் அவளுக்கு மற்றவர்களை விட தான் வேறு என்று தான் புரியும். அதனால நான் ஒரு இடம் சொல்றேன் அங்க போயி அந்த ஸ்கூல் சேருங்க.. அதுவும் இந்த மாதிரி குழந்தைகளுக்கு நடத்தறத ஸ்கூல் தான் அதனால கேரிங்க் லிஸனிங் எல்லாம் சொல்லி தருகின்ற முறை வேறயா இருக்கும்.. உங்க நம்பருக்கு ஒரு மெசேஜ் அனுப்பறேன் அதுல அட்ரஸ் தர்றேன். நாளைகு அவங்க பேரண்ட்ஸ்ஸை கூட்டிட்டு போயி பார்க்க சொல்லுங்க.
அந்த பொண்ணு உலகத்தில் தனிபட்டு தெரிய, அவள் முன்னேற, அது கூட ஒரு வழியா இருக்கும் அதுல பயபட வேண்டியதில்லை… வெல் வேற அபி…?” என்று கீர்த்திகா பேசி முடித்து, வேறு பேச ஏதேனும் நமக்குள் இருக்கா? என்று ஆசையில் கேட்டாள்.
அவனோ ”தேங்க்ஸ் கீர்த்திகா.. அன் டைம்ல உனக்கு கால் பண்ணிட்டேன் சாரி.. காலையில் பேசறேன்.. குட் நைட்” என்று வைத்திட, போனையே பார்த்தவள் தனது தோளை குலுக்கிக் கொண்டாள்.
அபிமன்யு உடனே கீர்த்தனாவிற்கு போன் செய்தான்.
கீர்த்தனா அப்பொழுது தான் அபியை உறங்க வைத்து குளித்து முடித்து வர, உடலில் நீர் துளிகள் வழியா போனை பார்த்தாள்.
அபிமன்யு என்றதும் உடனே போனை எடுத்து ”ஹலோ சார் நானே உங்களுக்கு போன் செய்யனும் என்றிருந்தேன்.. நீங்களே பண்ணிட்டீங்க..” என்றாள் கீர்த்தனா.
”எனக்கா? எதுக்கு? ஏதாவது பிரச்சனையா கீர்த்தி? என்றான்.
”நீங்க இருக்கும் பொழுது பிரச்சனை எங்க பக்கத்தில வருமா சார்.?” என்றதும் அபிமன்யு உதட்டில் முறுவல் வர ”தேங்க்ஸ் சார் அபி சொன்னா அவள் கீழே விழுந்தது நீங்க பாண்ட்எயிட் போட்டு விட்டது.”
”சின்ன விஷயம் தானே இதுக்கு போயி தேங்க்ஸ் ஆஹ்…” என்றான் இலகுவாக.
”இல்லை சார் அதுக்கு மட்டுமில்லை அன்னிக்கு தயாளன் சார் நடந்துகிட்டது கூட, நீங்க நான் சொல்லாமல் அவரை பணி நீக்கம் செய்திங்க.. அதுக்காகவும் தான்..” என்றாள் மெல்ல
”அப்போ இன்னொரு தேங்க்ஸ்ஸூம் சேர்த்து சொல்லு கீர்த்தி.” என்றான்.
”எது… க்கு சார்?” என்று யோசித்தவள் கண்ணாடியில் தனது பிம்பம் பார்க்க அங்கே டவல் கட்டி கொண்டு பேசிய விதம் தெரிய டிரஸ் எடுத்து கொண்டு அறைக்கு சென்று தாழ் போட்டபடி போனை ஸ்பீக்கர் போட்டாள்.
”எதுக்கா நாளைக்கு சொல்றேன்.. நாளைக்கு அபியை அழைச்சிட்டு உங்க வீட்டிலே இருங்க நான் ஒரு இடத்தில அபியை கூட்டிட்டு போகணும்” என்றான் உரிமையோடு அதற்கு அவளோ
”சார்… எதுக்கு என்று தெரிந்து கொள்ளலாமா? என்றாள் கீர்த்தனா
”அது அபியை ஒரு புது ஸ்கூல் போயி காட்டனும்.. எனக்கு எப்படி சொல்றது என்றே தெரிலை.. நேரில் கூட்டிட்டு போயி காட்டறேனே…”என்றான்
கொஞ்ச நேரம் யோசிக்கும் விதம் இருக்க கீர்த்தனா ”ஓக்கே சார்…” என்றே சொன்னாள்.
இரு பக்கமும் அமைதி இருக்க ”சார் அவ்ளோ தானே வைக்கட்டுமா?” என்றே கிர்த்தனா கேட்க
”அது அது வேற.. வேற.. கீர்த்தி ஆர் யூ ஆள் ரைட்..” என்றான்.
”யெஸ் ஸார்” என்றால்
”இல்லை தனியா இருக்கீங்க அபி அவங்க அப்பாவை கேட்கலையா?” என்றான்.
”ராஜேஷ் இருந்தவரை அவளுக்கு அப்பவா நடந்து கொண்டதில்லை அதனால அவ ராஜேஷை தேடலை சார்” என்றே சொல்ல
”நீங்க?” என்றான்.
”ராஜேஷ் ரொம்ப நல்லவன் ஸார்..அவன் சராசரி ஆணா யோசிக்கிறான்.. இதுல அவன் தவறு எதுவும் இல்லை.. அதனால எனக்கு அவன் மேல கொஞ்சம் கூட கோவம் இல்லை.. கொஞ்சம் வருத்தம் தான். அபி மாதிரி ஏதோவொரு ஸந்தர்பம் அவனுக்கு ஏற்பட்டு நான் அவனை விட்டு போகற நிலை ஏற்பட்டா என்று அவன் யோசிக்கலை.. விடுங்க சார்.. அவன் கேத்ரின் கூட நிமதியா இருக்கட்டும்… எனக்கு இனி தனியாவாழனும் என்று பயமே இல்லை பழகிட்டேன்.. இந்த காதல் கல்யாணம் கூட கொஞ்ச காலம் மாறும் என்பது நல்லா புரிந்துடுச்சு.. கல்யான்ம் காதல் எல்லாம் வெறும் மனசில் ஏற்படுகின்ற கெமிக்கல் ரியாக்சன் தான் உண்மையான அன்பு எல்லாம் சுத்த பேத்தல்… ” என்றே சொல்லி கொண்டே இருந்தவள் ”சாரி சார் என்ன என்னவோ பேசி போராடிக்கிறேன் அதுவும் இந்த நேரத்தில்”
”அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை கீர்த்தி” என்றவனின் பேச்சினை அப்பொழுது தான் அவள் உணர்ந்தாள். அபிமன்யு கீர்த்தி என்றே கூப்பிடுவதை…
”ரொம்ப நேரம் ஆகுது சார் நீங்க தூங்குங்க நான் வைக்கின்றேன்” என்றதும் அபியும் மறுக்காமல் குட் நைட் கீர்த்தி” என்றான்.
அபி மனதில் எப்பவும் ராஜேஷ் நல்லா இருக்கட்டும் நிம்மதியா இருக்கட்டும் சொல்லறா அப்போ அவ மனசிலே வருத்தம் இருக்கு முதலில் அதை கலைந்திடனும்.
இந்த காதல் கல்யாணம் எல்லாம் அர்த்தம் தவறா புரிஞ்சுகிட்டாளே…. அவளுக்கு இல்லை உன் மீது எனக்கு காதல் இருக்கு கல்யாணம் செய்து கொள்வோமா என்று எப்படி கேட்பது?
ஐயோ கீர்த்தி மா.. உன்னிடம் நிறைய மாற்றம் கொண்டு வரணும்..
அந்த ராஜேஷ் கூட ஒரு கல்யாணம் குழந்தை என்று இருக்கான். உனக்கு என்ன இந்த அபிமன்யு இருக்கான் உனக்கு நம்ம பொண்ணு அபிநயாவுக்கு நான் குறையாம அன்பை தருவேன் டி.. அவளுக்கு நாளைக்கே ஸ்பெஷல் ஸ்கூல் சேர்த்து அவளை எல்லோர்கும் சிறந்தவள் என்றே புரிய வைப்பேன். அவளுக்கு அப்பாவா உனக்கு நல்ல கணவனா இருக்கணும் கீர்த்தி.. என்றே மனதோடு புலம்பி கொண்டே உறங்கினான்.

nee ninaikirathu ella crt than abi aana enga poi muiya potho intha prachanai