Skip to content
Home » இதயத்திருடா-8

இதயத்திருடா-8

இதயத்திருடா-8

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

       ஏன் மாறன்… படிக்கணும்னு ஆசைப்பட்ட உங்க அக்கா மகளை படிக்க வச்சி உங்களை விட அதிகமா முன்னேற்றியது நீங்க. என்ன தான் முன்னேற்றினாலும் அவங்க உங்களை பிடிக்குதுனு சொன்னதும் அக்காவுக்காக மதுவந்தி அக்கா மனசு நோகக்கூடாதுனு கல்யாணம் பண்ணின ஆளு நீங்க.

     அப்படியிருக்க ஆண் மாதிரி பிஹேவ் பண்ணற என்னை தூரத்துல இருந்து ரசிச்சேன்னு சொன்னா நம்புவேன். ஆனா பிடிக்கலைனு சொல்லறது நம்பமுடியலையே.

   ஒரு காரணம் சொன்னா பொருத்தமா சொல்லணும்.
சரி விடுங்க… உங்களுக்கு என்னிடம் காரணம் சொல்லி தப்பிக்க தெரியலை.” என்றவள் சாப்பிட்டதற்கு தொகையை வைத்து எழுந்தாள்.

     “டெய்லி வருவேன்  மீண்டும் மீண்டும் வருவேன். பிகாஸ் இங்க தான் எனக்கு வேலையிருக்கு… நான் நிஜமாவே போலீஸ் வேலையை தான் சொல்லறேன்” என்றவள் கிளம்பினாள்.

       மதிமாறனோ அவள் செல்லும் திசைக்கு எதிர்பதமாய் பெருமூச்சை வெளியிட்டு பணியை கவனித்தான்.

   எது நடந்தாலும் நடந்தேறாவிட்டாலும் சில பணியை முடக்க மாட்டான் மதிமாறன்.

     இந்த மதிமாறன் (அ)சைவ உணவகம் சிறந்ததாய் அமைவதிலும் தடையேற்ற மாட்டான்.

     மாலை ஆனதும் மழைத்தூவவும் காபி பருகியபடி சற்று மேல் தளத்தில் வந்து ஏசியறையில் நின்று பார்வையிட்டான்.

     சில பல தூரத்தில் அங்கே ஓவர்கோட் போட்டபடி ஒருவனை அறைந்து யாரோ கையை ஆட்டி பேசவும் தெரிந்த நபராய் தோன்ற உற்று நோக்கினான்.

     அவன் கணிப்பு பிரகாரம் அது நற்பவியாய் இருந்தாள். மழையில் ஒரே பைக்கில் நால்வர் சேர்ந்து வந்து பயணித்ததை கண்டித்து அவன் தலைமுடியை சுட்டிக் காட்டி திட்டி தீர்ப்பது ஆடியோ இல்லையென்றாலும் வீடியோவாக புரிந்தது.

     இதே போல தூரத்திலிருந்து மதுவந்தியை சில இடத்தில் ஐஏஎஸ் பணியில் மிரட்டும் தோணியும் அரட்டும் விதமாக பார்த்தது தோன்றியது.

      சட்டென ஒவ்வொன்றும் மதுவந்தியோட இவளை ஒப்பிட்டு பார்த்து தவிக்கறேன். அவளை தள்ளி போனு விரட்டுற நானே அவளிடம் ஒட்டணும் ஆசைப்படறேன்.

     பேசாம நற்பவியை மணந்துக்கலாமா என்ற எண்ணம் கூட வந்து சென்றது.

     நானே இப்படி மனசுல இரண்டு விதமா நினைச்சா, அவ என்னை சீக்கிரமா கவுத்திடுவா.’ என்றவன் இதயத்திற்கு சிறைபோட்டு மதுவந்தி புகைப்படத்தை கண்டு, நான் அப்படி மாறினா உனக்கு துரோகம் செய்யறதா அர்த்தம் மது,” என்று இறந்தவளுக்காய் யோசித்தான்.

       இரவு கடையடைத்து மெதுவாய் வந்து சேர, “அந்த பச்சைத் தக்காளில செய்த தொக்கு வைங்க மா. மார்வாடி ஸ்டெயில்ல செய்து சாப்பிடறது இதான் முதல் முறை. பச்சை தக்காளில செய்வாங்கனு தெரியாது. ருசி நல்லா வித்தியாசமா இருக்கு” சப்பாத்தியை தொட்டு சாப்பிட்டவளை கண்டு இடையில் கை வைத்து முறைத்தான்.

     செவ்வந்தி மதிமாறனை கண்டு எவ்வித வினையும் கொடுக்காது நற்பவியை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

      “இந்த பட்டர் சப்பாத்தி சூடா சாப்பிட்டு பாரு மா” என்று கேசவன் கொண்டு வந்து பரிமாற, மதிமாறனை கண்டு, “சந்தோஷமா இருக்கு மதிமாறன். என் மக ஆத்மா இப்ப தான் சாந்தியடையும்.” என்றதும் மதிமாறன் கோபம் பன்மடங்கானது.

    அந்த கோபத்தை நற்பவியிடம் காட்டினான். “எந்திரி டி… எந்திரி டினு சொன்னேன்.

   நானும் போனா போகுது சின்ன பொண்ணாச்சே நல்ல விதமா சொன்னா புரிஞ்சிப்பனு நினைச்சேன். ஆனா நீ அடங்க மாட்ட. ஏன் உங்கப்பன் பார்க்கறவனை கட்டிக்கிட்டு வர்றவனிடம் கொஞ்சி குலாவிக்கலாம்ல. ஏன் ஒரு தடவை தானே கண் சிமிட்டினேன். அதுக்கே வீடு தேடி வர்ற. கொஞ்சம் காதல் கீதல்னு பேசினா பெட்ரூம்கே வருவியா?” என்று கையை பிடித்து தரதரவென்று இழுத்து வெளியே தள்ளினான்.

     “மதி… என்ன பேசற.” என்று கேசவனும், “டேய்… அவ என் மகமாதிரி டா” என்று செவ்வந்தியும் இடைப்புகுந்தார்கள்.

     “அவ பிளானே மதுவந்தி மாதிரி உன்னை அம்மானும், மாமாவை அப்பானும் சொல்லி மது இடத்துல நுழையலாம்னு தான். என்ன நுழைஞ்சாலும் என் பொண்டாட்டினு ஒரு இடத்துல வைக்கணும்னா என் மனசு சொல்லணும். என் மனசை பொறுத்தவரை என் மதுவந்தி தான் பொண்டாட்டி.

   வேண்டுமின்னா மற்ற இச்சைக்கு  ஒரு ரூம் போட்டு நிறை வேத்தறேன்.” என்றவனை செவ்வந்தி அடித்து வெளுத்தார்.

     “மதி… நீயா பேசின.. சாக்கடை வார்த்தையை வீசியது நீயாடா. என் தம்பிக்கு பொறுமையை தவிர கோபமே வராதுனு நினைச்சேனேடா.
   
       இந்த பிள்ளையை போய்… அவ என்னடா தப்பு பண்ணினா. நீ வேண்டும்னு ஆசையா இங்கயே சுத்தி வந்தது தப்பா” என்று செவ்வந்தியும், “என் மக செத்துட்டா. நற்பவியை மகளா நினைச்சி இருந்தேன். இப்படி பேசின நீ என் முகத்துல முழிக்காதே” என்று கணேசனும் மாறி மாறி பேசினார்கள்.

    ஆனால் சம்மந்தப்பட்ட நற்பவியோ கையோடு எடுத்து வந்த சப்பாத்தி ரோலை கண் மூடி சுவைத்தாளே தவிர மதிமாறன் பேசியதற்கு துளியும் எதிர்வினை அளிக்காமல் சிறு கோபமும் இன்றி ருசித்தாள்.

     “அம்மா… பச்சைத்தக்காளி தொக்கை ஒரு நாள் செய்து கொடுங்க. எங்கப்பாவுக்கும் இது போல டிபரெண்டானா டிஷ் பிடிக்கும். அப்பறம் அப்பா… நாளைக்கு வரமுடியாது டிரக் கேஸ்ல விஷயமா மீட்டிங் இருக்கு. நாளை மறுநாள் வருவேன். இங்க தான் டின்னர்.

    மாறன் பேசியது எல்லாம் என்னை காயப்படுத்த… அதுல ஒரு வார்த்தை கூட அவர் மனசுல இருந்து பேசியிருக்க மாட்டார். அதனால அதை தூக்கி போட்டுட்டு ப்ரீயா இருங்க. மாறா… பை” என்று கூறி கடைசியாய் விரலில் எஞ்சிய துளி குழம்பையும் சப்புக்கொட்டி சாப்பிட்டு நடந்து சென்றாள்.

     மதிமாறனோ அவள் சென்றதும் மாடிக்கு விரைந்து சென்று கதவை தாழிட்டான்.

   இங்கேயே இருந்தாலோ அல்லது தங்களிடம் ஏதேனும் கேட்டாலோ பேசாமல் கண்டிக்க காத்திருந்த செவ்வந்திக்கும் கணேசனுக்கு மாறனின் நடவடிக்கை வினோதமாய் இருந்தது.

    ஆனால் நற்பவியின் புரிதல், அமைதி, கண்டுக்கொள்ளாத நிலை என்பதை தாண்டி, ஒரு மணி நேரமாய் “மாறனை விரும்பறேன் அவர் மனசுல இடம் பிடிச்சதும் சொல்லறேன். உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? என்னை நற்பவியா பார்க்காதிங்க. உங்க பொண்ணா ஏற்றுக்கோங்க.

    அவர் இப்ப காதலிக்கலைனா கூட பரவாயில்லை. உங்க பொண்ணா கொஞ்ச நாள் இருக்கேன்.” என்று கேட்டு நின்றதில் இருவருமே மதுவந்தி திரும்ப நற்பவி உருவத்தில் வந்ததாகவே எண்ணி அணைத்து கொண்டு மாறனை மணந்திடவே வேண்டினார்கள்.

   தற்போது மாறனின் செய்கையில் இருவருக்குமே கோபமாய் இருந்தது.

      அமைதியாய், அவன் வீட்டு கதவை கண்டு தங்கள் இல்வாயிலை நோக்கி கடந்தனர்.

    நற்பவியோ பைக்கில் உறுமிக்கொண்டு தன் கோபத்தை அடக்கிக் கொண்டு வேகமெடுத்தாள்.

     மாறன் பேசியது வாய் வார்த்தை என்றாலும் கண் சிமிட்டியதும் வந்து விட்டாளே என்றது மட்டும் உறுத்தியது.

    அவளுக்கும் இதே எண்ணம் முதலில் வந்தது. அவன் விளையாட்டாய் செய்தால் அது உன் மனதில் ஆழத்தில் பதியுமா? அதற்காக அவனை தேடி சென்றிடுவாயா? என்ற அவளின் மனசாட்சியே முதலில் ஆயிரதெட்டு கேள்வி எழுப்பி, அதனை அடக்கி பதில் தர தெரியாது, கடந்து சில காலம் மாறன் எண்ணத்தை ஒதுக்கி வைத்து, தினமும் மறக்க இயலாது அவளாக தேடி அவனிருக்கும் இடம் அறியாது ஒருமுறை இங்கே அவனை சந்தித்தது.

 அதன் பின் பல மாதம் அவன் நடைமுறை வாழ்வில் சந்தோஷம் கொண்டானா, அவர்கள் அக்கா மாமாவிடம் மதுவந்தி  இறப்பை தெரிவித்து இருக்கின்றானா? வீடு எங்கே தினசரி பணி என்ன ஆராய்ந்து அவனை வட்டம் போட்டு தந்தையின் இக்கட்டான வரன் பார்க்கும் நிகழ்ச்சிக்காக மாறனை காண வேண்டும் இனி தப்பிக்க இயலாதென சந்தித்தாள்.

    என்றாவது ஒரு நாள் இப்படி பேசிடுவானோ என்ற உள்மனதின் பேச்சாலே தள்ளி ரசித்தவள். இன்று கேட்டே விட்டான். முடிந்தால் ரூம் போடவா எண்ணும் அளவிற்கு.

   கொஞ்சம் கொஞ்சமாய் அக்காவின் காதலிலும் ப்ரனித் மாமா இப்படி பேசியது உருத்தியது.

    அப்படின்னா விலகி போக இதுவொரு ஆயுதமா. ஒரு பொண்ணு என்ன வார்த்தை சொன்னா தன்னை விட்டு ஒதுங்குவானு யோசித்து பேசுவாங்களா? என்று கோபம் வந்தது.

    நேராக வீட்டுக்கு வந்த நேரம் விழியன் நன்விழி அவளுக்காய் காத்திருந்தாள்.

    ப்ரணிதா உறங்கியிருக்க, விழியன் மட்டும் உறங்காமல் சித்தி நற்பவிக்காக முழித்திருந்தான்.

     “ஏய்… இன்னும் தூங்காம முழிச்சிருக்கான். எப்ப வந்த அக்கா” என்று அக்கா மகன் விழியனை தூக்கி கொண்டு நடந்தாள்.

      “ப்ரனித் சூட்டிங்காக அமெரிக்கா போறார். அதனால இங்க வந்துட்டேன்” என்று கூறவும் நற்பவியோ “ஐ ஜாலி.. எவ்ளோ நாள் சூட்டிங். எத்தனை நாள் தங்குவ?” என்று ஆசையாய் கேட்டாள்.

       “இந்த மாசம் முழுக்க அங்க தான். ஐந்து பாட்டு சூட் பண்ணிட்டு வருவாங்க.

     சாப்பிடலை” என்று கேட்டு நின்றாள்.

    ” ஆல்ரெடி சாப்பிட்டாச்சு அக்கா. டிரஸ் மாத்திட்டு தூங்கணும்னு வந்தேன். விழியன் தூங்காததால விளையாடுவோம்” என்றவள் மெத்தையில் குழந்தையை வைத்து போனை கொடுத்து விட்டு, குளியலறை சென்றாள்.

   பின்னாடியே வந்த நன்விழி “அப்பா தூங்கிட்டார். நீ வர லேட்டாகும்னு சொன்னார்.” என்று குழந்தை அருகே  அமர்ந்திட, குளியலறையிலிருந்து “சம்டைம் லேட்டாகுது. எங்க உங்க அங்கிள் தர்ஷன் விட்டாதானே. என்னைக்கு அந்த டிரக் கேஸ்ல ஒருத்தன் சிக்குற மாதிரி இருந்து எஸ் ஆனானோ அப்பயிருந்து அவனை பிடிக்காம விட்டுட்ட, இன்னமும் எப்படி சும்மாவே சுத்துற…

   அய்யோ… அவரை வீட்ல தேடமாட்டாங்களா. என்னை குச்சி வச்சி விரட்டிட்டே இருக்கார்.” என்று உடைமாற்றி வந்தவள் அமரவும் நன்விழி தான் தற்போது இது போன்று காக்கியுடை அணிந்திருந்தாள் இந்த நிலை தனக்கிருந்ந்திருக்குமோ என்று எண்ணினாள்.

    விழியனின் சிரிப்பில் அவனோடு விளையாடியதில் நற்பவி மாறன் பேசியதை முற்றிலும் மறக்க முயன்றாள்.

   ரீசன்டா என் டிரைனிங் பிரெண்ட் திலீபனை சந்திச்சேன். அவனுக்கு வீட்ல மேரேஜ் அலயன்ஸ் பார்க்கறாங்க. அவன் பேசியதும் உன் நினைவு தான் வந்துச்சு..” என்று நன்விழி பேசவும் நற்பவி விழியனோடு விளையாடுவதை நிறுத்தினாள்

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “இதயத்திருடா-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *