Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-4

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-4

அத்தியாயம்-4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பாரதி தனக்கு நிகழ்ந்த இந்த கொடுமையிலிருந்து பத்து நாட்கள் கடந்திருந்தாள்.
என்ன தான் கசப்பை விழுங்கி விட்டாலும், அதனால் ஏற்பட்ட காயத்தை மறக்க முடியாமல் தவித்தாள்.
இதில் தன்னை பெற்றவர்கள் ரஞ்சித்தை போலீஸிடம் மாட்டிவிடாமல், கேஸையும் வாங்கிவிட்டு, தனக்கு எந்தவொரு பாதகமும் அமையவில்லை என்ற ரீதியில் டாக்டர் காவலதிகரி என்று சரிக்கட்டி முடித்தனர்.

குடும்ப மானமே பாரதியால் சிதைந்திட கூடாதென்று மெனக்கெடுவது போல பார்த்துக்கொண்டனர்.
பாரதிக்கு ஒரு அவப்பெயரை கூட உருவாக்காமல் காத்திடும் எண்ணமென்று உயர்வாக எண்ணினாள்.

ஆனால் அதையே, பிரஷாந்த் வீட்டு ஆட்களிடம் ஒளித்து மறைத்து பேச முயன்றனர்.

ஆனால் ரஞ்சித் பாரதியை இப்படி நாசமாக்கிய அதே இரவில் போதையுடன், ‘நீ பொண்ணு பார்த்துட்டு ஓகே சொன்ன பொண்ணு பாரதி என் ஆளுடா. அவளோட மேட்டரே முடிச்சிட்டேன். பெத்தவங்களுக்கு பயந்து தான் உன்னை கல்யாணம் கட்டிக்க போறா’ என்று குறுஞ்செய்தியை பிரஷாந்திற்கு அனுப்பிவிட, முதலில் ஏதோ வேண்டுமென்றே எந்த கயவனோ இல்லாத வேலை பார்த்து வைத்து, பாரதி மீது சந்தேக விதையை தூவ பார்ப்பதாக நினைத்தான்.

ஆனாலும் இயல்பாக ரஞ்சித் அனுப்பியதை எடுத்துக்கொள்ள இயலாமல் பாரதிக்கு போனில் அழைத்து, நேரிடையாக பேசிட எண்ணினான்.
அவள் தான் அரை பிணமாக குப்பையில் கிடந்திட, போனும் எங்கேயோ தவறுதலாய் விட்டிருக்க, போன் தொடர்பிற்கு வெளியே உள்ளதாக வாய்ஸ் மெஸேஜ் காட்டியது.

இதற்கு நடுவே பாரதியிடமே பேச இயலாத சூழலாக அமைய அவளது பெற்றவரிடம் அழைத்தான்.
சௌந்தரராஜன் அவரோ மருத்துவர் காலை பிடித்து, போலீஸிடம் பணத்தை கொடுத்து சரிக்கட்டும் நிலையில் பிஸியாக இருக்க, வரப்போகின்ற மாப்பிள்ளையின் போன் காலை உயிர்பித்தார்.
பாரதி பற்றி பிரஷாந்த் கேட்டதற்கு எல்லாம் பதட்டமாய் பதில் தர, சந்தேகம் வலுக்க, வீட்டுக்கு வந்தான்.
அந்த நொடியா, பாரதி ரஞ்சித் தன்னை கெடுத்துவிட்டதால், போலீஸில் பிடித்து கொடுக்க கூறி கெஞ்சி தொலைக்க, பிரஷாந்திற்கு, ரஞ்சித்தை விரும்பி சேர்த்து வைக்க கூறுகின்றாளா? என்று குழம்பினான்.

அப்படியிருந்தும், தான் வந்து நிற்பதை தெரிவிக்கும் பொருட்டு தொண்டையை செருமினான்.

சௌந்தரராஜன் அவசரமாய் பாரதியை அறைக்குள் தள்ள, மகள் காதலிப்பதை மறைப்பதாகவே முடிவுக்கட்டி, “அங்கிள் பாரதி யாரையாவது விரும்பறாளா? அதை மீறி அவளை போர்ஸ் பண்ணி எனக்கு கல்யாணம் செய்து வைக்க ட்ரை பண்ணறிங்களா? காதலிச்சவனையே மேரேஜ் பண்ணி கொடுப்பதில் என்ன தப்பு?” என்று நிலவரம் புரியாமல் மிக நல்லவனாக பேசவும், பாரதி பிரஷாந்த் வந்ததை அறிந்து கதவை தட்டினாள்.
மணிமேகலை ஒரு புறம் கண்ணீரில் பேசயியலாமல் துடிக்க, பிரஷாந்தோ, பாரதி யாரையோ காதலிப்பதாக முடிவே கட்டினான்.

அவர் எப்படி எப்படியோ மறுத்து பேச, “சாரி அங்கிள்.. பாரதியை கூப்பிடுங்க. அவளிடம் நானே கேட்கறேன்.” என்று நெஞ்சு நிமிர்த்த, அவளது அறைக்கதவு திறக்கப்பட்டது.

பிரஷாந்த் நிதானமாக, “பாரதி நீயும் நானும் பேசிட்டு போனதும் அன்னிக்கு நைட் ஒரு மெஸேஜ் வந்தது. நீ ரஞ்சித் என்றவனை விரும்புவதாகவும், அவனோட நெருக்கமா இருந்ததாகவும், இப்ப என்னை, உங்க அப்பா மாப்பிள்ளையாக நிறுத்தி உன்னை கட்டாயப்படுத்தறதா சொன்னான். அது உண்மையா? நீ யாரையாவது காதலிக்கறியா?” என்று தான் கேட்டான்.

ரௌத்திரம் பொங்க, ‘அவன்.. அந்த பொறுக்கி சொன்னானா? என்னை விரும்பியதா? என்று கோபத்தில் கத்தினாள்.

“கூல்.. என்னாச்சு.” என்று பிரஷாந்த் கேட்க, “அவன் என்னை ஒருதலைபட்சமா விரும்பியிருக்கான். அன்னிக்கு உங்களோட பேசிட்டு திரும்பறப்ப அவன் சடன்னா வந்து மயக்கப்படுத்தி தூக்கிட்டு பேனான்.
என்..என்னை…. கற்பழிச்சு குப்பையில் போட்டுட்டான்” என்று கேவினாள்.

“போலீஸிடம் கம்பிளைன் பண்ண அப்பாவை கூப்பிட்டா, அவர் மானம் போகும் அதுயிதுன்னு என்னை அடக்கறார். நீங்களே சொல்லுங்க பிரஷாந்த்” என்று தன் மன ஆதங்கத்தை போட்டு உடைத்தாள்.

ஆனால் அங்கு உடைந்து போனதென்னவோ பிரஷாந்த்.
“அவன் உன்னை ரேப் பண்ணிட்டானா?” என்று கேட்க, பாரதி கட்டிக்க போகின்றவனிடம் இதை பகிர்ந்ததில் திருமணம் தடையாகுமோ என்று அப்பொழுது தான் நிதர்சனமான விஷயத்திற்கு வந்தாள்.

“ஆ…ஆமா. நான் அவனை விரும்பலை பிரஷாந்த். அந்த கோபத்துல, உங்களை சந்திச்சிட்டு வந்ததால்… அவன் என்னை நாசம் பண்ணிட்டான்.” என்று அழவும், பிரஷாந்த் மௌனம் காத்தான்.

“மாப்பிள்ளை… உங்க வீட்ல சொல்ல வேண்டாம். அவங்க தப்பா எடுத்துப்பாங்க. என் மக மேல எந்த தப்பும் இல்லை.” என்று பேச, பிரஷாந்த் சௌந்தரராஜனை நிறுத்த கூறினார்.

“எங்க வீட்ல எதுவும் சொல்ல வேண்டாம் மாமா. சாரி… சார்.
அட்த சேம் டைம் இனி என்னால பாரதியை கல்யாணம் செய்ய முடியாது.
அவ எவனிடமோ கெட்டு போனதை மனசுல வச்சிட்டு, அவளோட வாழ்வது என்னால முடியாது. நான் பிராட் மைண்ட் தான். பொண்ணு வேலைக்கு போகணும் சம்பாதிக்கணும், நல்லா மாடர்ன் டிரஸ் போடணும். கல்யாணமான பொண்டாட்டிக்கு பாத்திரம் விளக்கி, துணி கூட துவைச்சி, சமையல்ல உதவற அளவுக்கு என் பரந்த மனசு இருக்கு. ஆனா… பாரதிக்கு நடந்ததை ஏத்துக்கிட்டு வாழ்க்கை தர்ற அளவுக்கு நான் பிராட் மைண்ட் இல்லை சார்.
எங்க வீட்ல நான் பாரதிக்கு நடந்ததை எதுவும் சொல்ல மாட்டேன். வேற பொண்ணை பாருங்கன்னு மட்டும் சொல்லிக்கறேன். நீங்க பாரதிக்கு வேற பையனை பாருங்க. யார் கேட்டாலும் பாரதிக்கு நடந்ததை சொல்ல மாட்டேன்.” என்று கூறிவிட்டு பாரதியை காண தயங்கினான்.

அங்கே வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதது, மணிமேகலையும், சௌந்தரராஜன் மட்டுமே. பாரதி கல்லை போல அமர்ந்திருந்தாள்.

“தம்பி இப்படி பொண்ணு பார்த்து கை நனைச்சு, நிச்சயம் வரை போயிட்டு இப்படி பேசாதிங்க தம்பி” என்று மணிமேகலை கதற, “ஆமா மாப்பிள்ளை… என் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுங்க. அவ உங்களை பார்த்துட்டு வந்ததால தானே இந்த அபத்தம் நேர்ந்தது.” என்று கூட கேட்டார்.‌

“இல்லை சார்… பாரதியை என்னால இனி கல்யாணம் பண்ணமுடியாது. வெரி சாரி. பாரதி… ட்ரை டூ அன்டர்ஸ்டாண்ட். ஒரு வேளை இந்த விஷயம் எனக்கு தெரியாம இருந்து நான் உன்னை மேரேஜ் பண்ணிருந்தா, நிச்சயம் சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம். இப்ப எனக்கு தெரிந்தப்பின் அது என் மனசுல உறுத்தும். சாரி பாரதி.” என்று விறுவிறுவென கிளம்பினான் பிரஷாந்த்.

சௌந்தரராஜன் இருந்த கோபத்தை எல்லாம், பாரதி முதுகில் அடியாக விழுந்தது. 

“படிச்சி படிச்சி சொன்னேன். வாயை மூடிட்டு அறையில கிடன்னு, என்னிடம் வந்து தேவையில்லாம போலீஸ் கம்பிளைன் பண்ணணும் அதுயிதுனு புரட்சி மண்ணாங்கட்டி, நியாயம் தர்மம் பேசின. பாரு… இருந்த ஒருத்தனும் பெரிய கும்பிடு போட்டு ஓடிட்டான். இப்ப எவன் கட்டிப்பான்.” என்று ஆற்றாமையுடன் கடிய, மணிமேகலை மகளை பொத்தி பாதுகாத்து, அடியிலிருந்து காப்பாற்றி அழுது துவண்டார்.‌

"நீ ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப, பொண்ணு நாசமானது வெளியே தெரியாம பார்த்துக்கணும்னு மெனக்கெட்டேன். 

நீ சரியாகி வீட்டுக்கு வந்ததும், அந்த சண்டாளனை போலீஸ்ல கம்பிளைன் பண்ணணும்னு குதிக்கவும், வாயை மூடிட்டு கல்யாணம் பண்ணி நடந்ததை மறந்து தொலைன்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். இப்ப பொண்ணு பார்த்தவனுக்கும் விஷயம் தெரிந்துக் கட்டிக்க மாட்டேனு போயிட்டான்.
இனி வேறொருத்தனை பார்த்தாலும், ஏன் முதல்ல பார்த்த மாப்பிள்ளை வீட்டாளுங்க, ஏன் வேண்டாம்னு சொன்னாங்கன்னு கேள்வி கேட்பாங்க. எல்லாம் போச்சு… குடும்பத்தோட நாண்டுகிட்டு சாகணும்.” என்று குமறினார்.‌

பாரதியோ பிரஷாந்த் பேசிவிட்டு சென்றதும், தந்தை அடித்து, தாய் அரவணைத்து, இதற்கெல்லாம் காரணமாக இருந்தவன் மீது கோபம் பெருகியது.

“அப்பா..‌ தப்பே செய்யாம நீங்க, நான், அம்மா ஏன்பா சாகணும். தப்பு செய்த ரஞ்சித் தானே தண்டனை அனுபவிக்கணும். நான் அதுக்கு தானே ரஞ்சித் மேல கம்பிளைன் கொடுக்க சொன்னேன். இன்னிக்கு எனக்கு நடந்தது போல எந்த பொண்ணையும் எப்படி வேண்டுமென்றாலும் என்னவேண்ணா செய்யலாம்னு அவனை மாதிரி ஆம்பளைங்களுக்கு தோனக்கூடாதுல. அதுக்கு தானேப்பா அவனை போலீஸ்ல பிடிச்சி கொடுக்க கூப்பிடறேன்.
முன்ன தான் பிரஷாந்த் கூட கல்யாணம் பேசியிருக்கு. கல்யாணம் தடைப்படும்னு புலம்பினிங்க. இப்ப கல்யாணமே வேண்டாம்னு பிரஷாந்த் போயிட்டார். இப்பவாது வாங்கப்பா… அந்த ரஞ்சித் ராஸ்கலுக்கு தண்டனை வாங்கி சட்டத்துல நிறுத்துவோம்” என்று பேசியவளை கண்டு சௌந்தரராஜன் தலையிலடித்து சுவரோடு சாய்ந்தார்.‌

மனைவி மணிமேகலையை பார்த்து “ஏன்டி.. உன் பொண்ணுக்கு புத்திகித்தி இருக்கா இல்லையா? போலீஸுக்கு போனா அசிங்க அசிங்கமா வாயுக்கு வந்தபடி கேட்பானுங்க. நம்ம மானம் தான் போகும். எவன் கண்டான், அந்த போலீஸே உன் பொண்ணை தப்பா பார்ப்பான்.
அக்கம் பக்கம் தெரிந்தா, அதுவேற அசிங்கம். நானே சொந்தக்காரங்களுக்கு என்ன சொல்லி கல்யாணம் தடைப்படுவதை எடுத்து சொல்வதுன்னு அல்லாடுறேன்.
பைத்தியம் மாதிரி ஒளிஞ்சிட்டு இருக்கற பையனுக்கு தண்டனை வேண்டும்னு துடிக்கறா. அவன் இந்நேரம் எங்க இருக்கானோ. தப்பு செய்துட்டு இங்கயா இருப்பான்.” என்று பேச பேச, ”அப்ப நீங்க என்னோட வரமாட்டிங்க” என்று பாரதி கூற, மணிமேகலையோ, “ஏன்டி திரும்ப திரும்ப அப்பாவிடம் இப்படி பேசற. நாங்க உன் நல்லதுக்கு தான் சொல்லறோம். காதும் காதும் வச்ச மாதிரி வீட்டோட இரு. பிரஷாந்த் இல்லைன்னா பரவாயில்லை. எங்கயாவது வெளிநாட்ல இருக்கறவனா பார்த்து கட்டி வச்சி வெளிநாட்டுக்கு போயிடு. நடந்ததை கெட்ட கனவா மறந்து தொலை. முதல்ல உள்ள போ” என்று அறைக்குள் தள்ள முயன்றார்.

பாரதிக்கு ஆங்காரம் தெறிக்க, “நான் ஏன் வீட்டுக்குள்ள போகணும். ஏன் என் ரூமுக்குள்ள இருக்கணும்.
இத்தனை வருஷம், உங்க சொல்படி நல்ல பிள்ளையா படிச்சி வளர்ந்தேன். நீங்க சொன்ன பையனோட தானே கல்யாணம் பேசி முடிவு பண்ணினிங்க. எல்லாத்துக்கும் தலையாட்டினேனே. இப்ப என்னை சிதைச்சவனை தண்டிக்கணும்னு துடிக்கறேன். நீங்க இரண்டு பேரும், சொசைட்டி, சொந்தக்காரங்க, உலகம் என்ன சொல்லும்னு இதையே பேசி, எந்த தப்பும் செய்யாத என்னை ரூம்ல அடைக்கறிங்க. யாரும் வரலைன்னா பரவாயில்லை. நானே போய் கம்பிளைன் பண்ணிக்கறேன்.” என்று திமிறியவளை சௌந்தரராஜன் எவ்வளவோ தடுத்தும் எதிர்த்து எதிர்த்து பேச, ”நான் அப்ப எங்கயாவது போறேன். என்னை விடுங்க. என்னை பெத்து ஆளாக்கி வளர்த்த நீங்களே இந்த மாதிரி இக்கட்டுல துணையா இல்லைன்னா நான் போறேன்.” என்று கையை உதறி வாழ்க்கையை வெறுத்தவளாக பாரதி தன்னந்தனியாக வெளியேறிவிட்டாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்‌.

8 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-4”

  1. M. Sarathi Rio

    மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 4)

    ஒரு பக்கம் பார்த்தால் பாரதி சொல்றது நியாயமா தெரியுது, இன்னொரு பக்கம் பார்த்தால் அவளோட பெத்தவங்க சொல்றதும் நியாயமாத்தான் தெரியுது. ஆனா, கடைசியில அவளோட பெத்தவங்க பார்த்த மாப்பிள்ளையோட சாயம் தான் வெளுத்துப் போயிடுச்சு போல.
    போகட்டும் இந்த பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Dharshinipriya

    Super sis nice epi 👌😍 bharadhi ketkuradhum niayam dhan pa kandippa avan dhandikka padanum aana parents side la erundhu partha avanga soldradgum nalladhukku than 🥺🙄

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!