இதயத்திருடா-17
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
வாசலிலே “வாங்க அங்கிள்” என்று நற்பவியும், “வாங்க சார்” என்று மாறனும் அழைத்தான்.
“அக்கா மாமா இவர் தான் கமிஷனர் சார். நற்பவியோட அங்கிள்” என்று அறிமுகப்படுத்தினான்.
“வாங்க சார் உட்காருங்க.” என்று செவ்வந்தி கணேசன் வரவேற்றார்.
“நீங்களும் உட்காருங்க.” என்று தர்ஷன் கூறவும் அமர்ந்தனர். செவ்வந்தி நற்பவி மட்டும் குடிக்க கிரேப் ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தார்கள்.
“தேங்க்யூ” என்று பெற்றுக் கொண்டவர் “என்னம்மா… நித்திஷ் வாசுதேவ் சப்போர்ட் இல்லைனாலும் மேரேஜ் நடக்கும் போல. மதிமாறன் வீட்ல பயங்கர சப்போர்ட் இருக்கு” என்றார் தர்ஷன்.
“வீடோவுக்கு மேரேஜ் பண்ணி வைக்க அக்கா மாமா விருப்பப்படுவாங்க சார். அதனால இங்க சப்போர்ட் நிச்சயம் கிடைக்கும். எனக்கு நற்பவி வீட்லயும் சம்மதம் வேண்டும். எனக்கு தெரியும்… சம்மதிக்காம எப்படியும் இருக்க மாட்டாங்க பவி பிடிவாதம் அப்படி. அவர் சம்மதிக்கறவரை வெயிட் பண்ணுவேன்” என்றான் மதிமாறன்.
“ப்ரிலியண்ட் மூவ். பவி எனக்கு இந்த பையனை பிடிச்சிருக்கு. வெல்… நான் இங்க வந்தது நித்திஷ் கொஞ்சம் அப்சட்.. அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்கனு சொல்லதான். ஆல்ரெடி தெளிவா இருக்கறதால பேச வாய்ப்பேயில்லை.” என்றதும், “சார் சாப்பிட்டுட்டே பேசலாமா, உணவெல்லாம் சூடாயிருக்கு.” என்றாள் நற்பவி.
“யா… கண்டிப்பா” என்று அமர, செவ்வந்தி,மாறன் பரிமாற கணேசன் தர்ஷன் சாப்பிட்டனர்.
“வாவ்… இறால் தொக்கா. ஏ கேடி பொண்ணே… நான் வர்றேன்னு எனக்கு பிடிச்சதை செய்ய சொன்னியா.” என்றார் தர்ஷன்.
“நோ சார்.. மாறாவே உங்களோட பேட்டியை பார்த்து உங்களுக்கு பிடிச்சதை செய்திருக்கான்.” என்றதும், “நீயும் உட்காரு சாப்பிட” என்றதும் “நான் அப்பறம் சாப்பிட்டுக்கறேன்” என்று தவிர்த்தாள்.
“உட்காரு டேப்லட் போடணும்” என்று மாறனே சப்பாத்தி பிய்த்து தக்காளி தொக்கு தொட்டு ஊட்டி விட்டான்.
“அந்த இறால் கொடுடா” என்றதும் “அக்கா அவ ப்யூர் வெஜிடேரியன். அதனால தான் பச்சை தக்காளில தொக்கு செய்தேன். அன்னிக்கு பிடிச்சிருக்குனு சொன்னாளே.” என்று ஊட்டிவிட, தர்ஷனை கண்டு நாணிக்கொண்டு சாப்பிட்டாள்.
“உங்கப்பா இதை பார்க்கலை. இப்ப மட்டும் பார்த்தான் உங்க காதல் அவனுக்கு புரிய வாய்ப்பிருக்கு.” என்று தர்ஷன் சாப்பிட்டார்.
கணேசனோ ” சீக்கிரம் புரிஞ்சுக்க சொல்லுங்க சார். நாங்க இல்லைனாலும் இனி என் மச்சான் மாப்பிள்ளை இரண்டுமானவனுக்கு நீங்கயெல்லாம் தான் துணை.” என்று நெகிழ்வாய் கூறினார்.
“ஆமா சார்… என் பொண்ணு விட்டுட்டு போனதுல இருந்து இவன் வாழ்க்கை இருண்டு போயிடுச்சு. நற்பவி வந்தப்பிறகு அவளோட ஒளிமயமா வாழ்வான்னு ஆசைப்படறோம்.
என்னதான் காதலிச்சவங்க கல்யாணம் பண்ணிட்டாலும் பெத்த அப்பா அம்மா மனதார ஏற்றுக்கொண்டு ஆசிர்வாதம் அளிக்குற மாதிரி வராது.
நற்பவியை சின்னதுல இருந்து எப்படியெல்லாம் வளர்த்து இருப்பார். கல்யாணத்துல மட்டும் பெரியவளா முடிவு பண்ணிட்டா அவர் மனசு தாங்குமா?
என் தம்பிக்கு எல்லாரோட ஆசிர்வாதமும் வேணும். இனி வரப்போற வாழ்க்கை அவனுக்கு நம்பிக்கையும் வாழணுமென்ற வேட்கையும் கொடுக்கணும்” என்று செவ்வந்தி பேசவும், “நிச்சயமா நித்திஷ் புரிஞ்சிப்பான் மா. அவனோட முதல் மாப்பிள்ளை வரட்டும். சேர்ந்து கன்வின்ஸ் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்.” என்றான் தர்ஷன்.
அங்கிருந்த சாலேட் சாப்பிட்டவன் கன் போன்றதொரு அலங்கார காய்கறியை போட்டோ எடுத்து கொண்டு ஸ்மார்ட் என்று மாறனின் தோளைத் தட்டி கொடுத்தார்.
சாப்பிட்டு முடிக்க “அபிஷலா நற்பவியிடம் பேசணும்” என்றதும் மதிமாறன் மேல என் வீடு இருக்கு சார்” என்றான்.
மாறன் கதவை திறந்து அவளையும் தர்ஷனையும் அழைத்து சென்றான்.
“எப்பவும் கிளம்பறப்ப நீட் பண்ணிட்டு போவேன். சோ பேசுங்க சார்” என்று கீழே சென்றான்.
“பரவாயில்லை… ரொம்ப நீட்டா இருக்கு. பையனுக்கு ஓசிடி இருக்குமா?” என்றதும் நற்பவி ஸ்லோமோஷனில் திரும்பினாள்.
“ஜஸ்ட் ஜோக்… ரிலாக்ஸ்…” என்று சிரிக்க மனதிற்குள் ‘ஓசிடி உங்களுக்கு தான். அதனால தான் எவனாயிருந்தாலும் போட்டு தள்ளிட்டு போயிடறிங்க’ என்று கடுகடுத்தாள்.
“பவி… அவனை எங்க அடைச்சி வச்சிருக்க, அவன் வீட்ல எடுத்த டிரக்ஸ்?” என்று கேட்டார்.
“சார் அவனை என் ஸ்டேஷன்ல தான் சேர்ல கட்டிப்போட்டு வாயில பிளாஸ்திரி ஒட்டி வச்சிருக்கேன்.
ரூமை கூட பூட்டி நானே சாவி எடுத்துட்டு வந்தேன். டிரக்ஸ் எங்கன்னா..” என்று இருப்பிடம் கூறினாள் கடமை தவறாதவளாக.
“பெட்டர்… அங்கயே இருக்கட்டும். அதென்ன டன் கனக்குலயா இருக்கு. ஆனா டன் கணக்குல பிடிப்போம் நற்பவி. ரொம்ப நாளா இப்படியொரு விஷயம் இருக்குனு தெரியும் ஆனா ஆதாரம் இல்லை. இப்ப முதல் முறை உன்னிடம் ஆதாரம் கிடைச்சிருக்கு சரத்தை தவிர வேற எந்த துப்பும் கிடையாது.” என்றவன் சிறிது யோசித்தார்.
“நாளைக்கு அவனை நம்ம தனிப்பட்ட கஷ்டடில வச்சிடலாம். அவன் இல்லை என்றதும் கண்டிப்பா யாராவது அவனை தேட ஆரம்பிப்பாங்க. அதுக்குள்ள நம்ம கஸ்டடில வாயை திறந்துடுவான்.
நீ எதுக்கும் ஜாக்கிரதையாயிரு. அந்த பிரகனென்ட் லேடி மஹா அவங்களையும் பத்திரமா இருக்க சொல்லு.
உன்னால யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது அலார்ட் பண்ணு.” என்றார்.
‘என்னை காயப்படுத்தணும்னா அப்பாவை தானே டார்கட் பண்ண வருவாங்க. அப்பா அங்க பாதுகாப்பா இருக்கார். ப்ரனித் மாமா அங்க வருவதால மெயின் கேட்ல இருந்து எப்படியும் பாதுகாப்பு இருக்கு. யாரும் தெரியாதவங்க நுழைய மாட்டாங்க’ என்று யோசித்தவள் இந்த மாறனிடமும் ஜாக்கிரதையா இருக்க சொல்லணும்.’ என்றெண்ணினாள்.
‘”சரி நீ என்னோட வர்றியா… இல்லை மதிமாறன் டிராப் பண்ண போறானா?” என்று கேட்டாள்.
“நான் அவனோட வர்றேன் அங்கிள்..” என்று தவிர்த்தாள்.
“நித்திஷ் குயிக்கா உன் மேரேஜுக்கு அக்சப்ட் பண்ணணும் வேண்டிக்கறேன் மா” என்று கணேசனிடம் கைகுலுக்கி, செவ்வந்தியிடம் வணக்கம் வைத்து, தர்ஷன் கிளம்பினார்.
அவர் சென்றதும் “மதி… பவியை அழைச்சிட்டு போய் வீட்ல விட்டுட்டு வாடா.” என்று செவ்வந்தி கூறவும், “மாப்பிள்ளை பவி கையை பிடிச்சிக் கூட்டிட்டு போ” என்றதும் மதிமாறன் நற்பவி கையை பிடித்து அழைத்து சென்றான்.
கணேசனும் செவ்வந்தியும் கண்குளிர பார்த்து மகிழ்ந்தார்கள்.
நற்பவி வரும் போது அமர்ந்தது போல இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்து “பை அம்மா பை அப்பா” என்று கூறினாள்.
“பவி… அவனை கெட்டியா பிடிச்சிக்கோ. அவனை விடாதே.” என்று கணேசன் கூறினார்.
மதிமாறனோ “மாமா… சும்மாயிருங்க” என்று அக்காவிடம் போயிட்டு வர்றேன் அக்கா” என்று பைக்கை உதைத்து கிளம்பினான்.
“நான் மாமாவும் அக்காவும் சந்தோஷமா பார்த்து ஐந்து வருஷமாச்சு. இப்ப தான் என் கல்யாணம் நம்ம காதல் விஷயம் தெரிந்ததும் துள்ளி குதிக்காத குறை தான்” என்றதும் நற்பவி அவன் தோளில் தலை சாய்ந்தாள்.
“ஏய்… என்னனென்னமோ பண்ணுது எந்திரி.” என்று மாறன் கூறவும், “உன்னோட இப்படி டிராவல் பண்ண தான் அந்த இரும்பு மனுஷனிடம் பை சொல்லி அனுப்பியது. நான் எழுந்திருக்கிற ஐடியால இல்லைப்பா.” என்று கட்டிப்பிடிக்க, பெண்ணவளின் உடல் உரசலில் வேகமெடுத்து வண்டியை செலுத்தினான்.
செவ்வந்தி கிச்சன் வந்து பார்க்க, “அச்சோ… பாலை கொடுக்கணும்னு சூடுப்படுத்திட்டு குடிக்காம போயிட்டாங்க.
வர்றதுக்குள்ள ஆறிடும்.” என்றார் செவ்வந்தி.
“அதையேன்மா இரண்டு தடவை சுட வச்சிக்கிட்டு கிளாஸ்ல ஊத்தி எடுத்துட்டு வா குடிச்சிட்டு நிம்மதியா தூங்கலாம். இனி மாறன் அங்க போயிட்டு மத்ததை பார்த்துப்பான்.” என்றார் கணேசன்.
இரண்டு டம்ளரில் பாலை ஊற்றி எடுத்து வந்து குடித்து விட்டு இருவரும் உறங்க சென்றனர்.
“நற்பவி உன் வீடு எங்கயிருக்கு? எந்தப்பக்கம் போகணும்” என்றான் மதிமாறன்.
“வீட்டுக்கு எல்லாம் போக வேண்டாம். இப்படியே ரோட்டுல ரவுண்ட் அடிச்சிட்டே இருப்போம்.” என்று அவன் மீது சாய்ந்தபடி கூறினாள்.
வண்டியை நிறுத்திவிட்டு, “இங்க பாரு யாராவது ரிப்போர்டர் பார்த்து உன் பெயரை கொட்ட எழுத்துல போட்டு ‘ஒரு வாலிபனோட இரவில் பெண் போலிஸ் சல்லாபம்னு போடுவான்’ எனக்கு இந்த கதையே வேண்டாம். ஒழுங்கா சொல்லு.” என்று கண்டித்தான்.
“இடியட்… ஒரு ரொமான்ஸ் பண்ண விடறியா.
பாரு… சுத்தி பாரு… ஒரு ஈ காக்கா இல்லை. நாம மட்டும் தான். ஜஸ்ட் பைக் ரவுண்ட்ல் போலாம்னா அதுக்கும் ஏதோ செய்தி சொல்லறான்.
ஆமா… சல்லாபம்னா சொன்ன?” என்று பவி புருவமேற்றி கேட்க, “அம்மா தாயே… உட்காரு.. செய்தியெல்லாம் அப்படி தான் போடுறாங்க. தயவு செய்து வீடெங்கனு சொல்லு. இல்லை… தர்ஷன் அங்கிளிடம் போன் பண்ணி கம்பிளைன் பண்ணுவேன்.” என்றான் மதிமாறன்.
“அடப்பாவி மனுஷா. போயும் போயும் உனக்கு அவரிடம் கம்பிளைன் பண்ண போறியா. உன்னையெல்லாம்..” என்று திட்டியவள் அட்ரஸ் கூறவும் அங்கு சென்று நிறுத்தினான்.
நன்விழி மற்றும் ப்ரணிதா பால்கனியில் இருக்க, அறையிலிருந்த ஜன்னல் வழியாக நித்திஷ் எட்டி பார்த்தான்.
நற்பவியோ, “இதான் என்னோட அப்பா வீடு.” என்று கூறவும் “உள்ளவா மாறா.” என்று அழைத்தாள்.
“இன்னிக்கு வேண்டாம். வரவேண்டிய கட்டாயம் வர்றப்ப வருவேன்.” என்று இறக்கி விட்டு சென்றான்.
நற்பவி அவள் பாட்டிற்கு வந்து உடைமாற்றி படுத்துக் கொண்டாள்.
மாறன் அவன் வீட்டுக்கு வந்தப்பொழுது கீழே அக்கா மாமா அறை மூடியிருக்க, தனது வீட்டுக்கு படியேறினான்.
சரத் இருக்கும் ஸ்டேஷனில் அவன் தலையை வேண்டாமென இடம் வலமாக ஆட்டினான்.
ஆனால் எதிர்தரப்போ, கையிலிருந்த சைலன்ஸர் துப்பாக்கியால் சரத்தின் நெஞ்சை துளையிட்டனர்.
பிளாஸ்திரி ஒட்டப்பட்ட வாயால் கத்தவும் இயலாது அமைதியாய் அவன் ஆன்மா உள்ளுக்குள் அலறி துடித்து உயிர் நீத்தது.
“அந்த மஹா பொண்ணு என்னப் பண்ணினிங்க? அந்த போலீஸோட லவ்வர் வீட்டில் பொட்டலம் இல்லையே. அதை கண்டுபிடிச்சியா… லோக்கல்ல வித்தாலும் காசுயா. எங்க எடுத்து வச்சிருப்பா” என்று சுட்டவன் கேட்க, “அவங்க வீடு குடிசை சார். பீடி பத்தவச்சி குடிசையில போட்டாச்சு. இந்நேரம் வீடு கொழுந்துவிட்டு எரிந்திருக்கும். பொட்டலாம் தான் சார் கையில கிடைக்கலை.” என்று மற்றொருவன் கூற, வந்த சுவடேயில்லாமல் அந்த வேகத்தில் காரில் ஏறி பறந்தனர்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Darshan is culprit? Sema twist sis. What happened mara sis and mama? Intresting sis.
Mathi akkavum mamavum peche sari illaye illa yarathu poison kalanthu vachitangla paal la . Kasta patu avana pidicha yar vanthu sarath ah shoot pananga therilaye atha kandu pidikurathukulla shoot panitanga iva vera romance panitu iruka vera
Interesting 👌👌👌👌👌👌👌