இதயத்திருடா-23
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
மாறன் வடிவேலுவை பார்த்து ‘இப்படி விசுவாசமா நற்பவிக்கு என்னை பத்தி போட்டு கொடுக்கறாரே. இவரை ஏமாத்திட்டு எப்படி போக?’ என்று சிந்தித்தான்.
அங்கு செக்கியூரிட்டி உள்ளே செல்லும் கார்டை கொடுக்காம இருக்கார். இங்க வந்துட்டா நம்மை நோட் பண்ண வடிவேல் இருக்கார். இந்த நற்பவி இருக்காளே… என்று புலம்பினான்.
போலீஸ்காரி… என்னை கட்டி போட்டு வச்சிருக்காளே… என புலம்பினான்.
அப்பொழுது தான் வண்டி பழுதானால் வெளியே செல்ல நேரலாம். போதாதற்கு மேலே பார்ட்டி ஹால் கட்டினால் அதற்கான பணியை பார்க்க என்று வெளியே போவதற்கும் மற்றவரை பார்க்கவும் தடை இருக்காது என்ற எண்ணம் உதிக்கவும், இந்த நேரம் என் கேரியரை விரிவாக்கம் பண்ணறேன்னா சத்தியமா நம்ப மாட்டா. ஏற்கனவே முதல் கேஸ்லயே என்னை பற்றி தெரிந்து வச்சியிருப்பா என்றவன் வேறு வழியில்லை. அப்படி கூறி பின்னர் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தான்.
மஹாவோ வீட்டில் “என்னம்மா சும்மாவே கவனிக்குற. எனக்கு என்னவோ மாதிரி வசதியா இடம் கிடச்சிதும் துண்ணுட்டு துண்ணுட்டு தூங்கறதா தோணுது. வேலையாவது செய்ய வுடேன்.” என்று மஹா நன்விழியிடம் கேட்டாள்.
“கர்ப்பவதியை எப்படி வேலை வாங்க. வேண்டுமின்னா தினமும் இந்த கார்டனை ரவுண்ட் அடி. நட.” என்று கட்டளையாய் கூறி விழியனை தூக்கினாள்.
“அட வேலை செய்ய கேட்டா வாக்கிங் போக சொல்லறியே.” என்று குறைப்பட்டாள்.
நன்விழியோ ஆப்பிளை மசித்து விழியனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே சிரித்தாள்.
ஒரிரு புகைப்பட்டத்தை பார்த்து “இது இந்த வூட்டு ஐயா அவர் பொஞ்சாதி. அது யாரு?” என்று நன்விழி-வெற்றிவேலை சுட்டி காட்டி கேட்டாள்.
“அவங்க என்னோட அப்பா அம்மா. அப்பா வெற்றிவேல் இராணுவ வீரர். அம்மா நன்விழி. அம்மா பெயரை தான் எனக்கு வச்சிருக்காங்க.” என்றவள் புகைப்படத்தை பார்த்தவண்ணம், மஹாவின் மேடிட்ட வயிற்றை பார்த்து, “எங்கம்மா பிரகனென்டா இருந்தப்ப, ஒரு ஐ ஜாக் நடந்தது. அப்ப எங்கம்மா பிணையகைதியா தீவிரவாதியிடம் இருந்தப்ப, அவங்களை அவங்களே கழுத்தை அறுத்து தீவிரவாதியை தப்பிக்க விடாம போலீஸிடம் சுட்டு தள்ள வச்சாங்க.
எங்கம்மா இறந்தப்ப அவங்க வயிற்றுல நான் உயிரோட இருந்தேன்.” என்றதும் மஹா அதிர்ந்து, கண்ணில் நீர் கசிய, “சீ… அழுவறியா.?” என்று நன்விழி கேட்டாள்.
“பின்ன கண்ணுல தண்ணி வராம.” என்று சேலையால் துடைத்தாள் மஹா.
“எங்கப்பா வெற்றி இறந்தப்ப எங்கம்மா நித்திஷ் அப்பாவிடம் சொன்னது. அவர் உயிரை கொடுத்திருக்கார் அழுது இறந்துட்டாருனு பீல் பண்ணமாட்டேன். எப்பவும் என்னோட தான் இருக்கார்னு சொல்வாங்களாம். என்னை காப்பாத்தின தர்ஷன் அங்கிள் என்னை இராணுவ வீரரோட பொண்ணு. உன் கண்ணுல அழுகை வரவே கூடாதுனு சொல்லி சொல்லி வளர்த்தார்.” என்று பேசினாள்.
“என்னடாது இந்த பொண்ணு இறந்தவங்க வூட்ல போய் எப்படி செத்தாங்க, என்னனு அசால்டா சொல்லுதேனு உன் மேல கோபம் வந்தது ஆத்தா. இப்ப தான் தெரியுது. ஒவ்வொரு மனுஷங்களும் அழுகையை புறம் தள்ள பெரிய வலியை மறைச்சி வச்சிகினு இருக்காங்கனு.” என்று மஹா கண்ணை கசக்கினாள்.
“ஏம்ம… இந்த பொண்ணு அவரை அப்பானுது. அது என்னனு கேளுமே” என்று டவுட் கேட்டான் குரு.
“எங்கப்பா அம்மாவோட பிரெண்ட் தான் நித்திஷ் அப்பா. அப்பா அம்மா இல்லாத குறையே தெரியாம வளர்த்தவர் அதனால அங்கிள் என்று கூப்பிட தோணலை. அப்பா அம்மானு தான் நினைவு தெரிவதுக்கு முன்னவே எண்ணியது.
“அதான் மே அந்த பொண்ணு போலீஸா இருந்தாலும் அழுவுது. இது விரப்பா சுத்துது.” என்று குரு பேசவும் “வாயை மூடுயா… எம்மா… இதுக்கு ஏதாவது வேலை கொடேன். சும்மாவே சுத்தது. இந்நேரம் கடலுக்கு போகும். இல்லைனா மெக்கானிக் ஷாப் போகும்.” என்று கூறினாள் மஹா.
“மஹா… இப்ப உன்னையும் குருவையும் அனுப்ப முடியாது. மேபீ சரத்தை கொன்னுட்டாங்கன்னாலும் ஒரு வேகத்துல உங்களை அழிக்க வந்தா. அதனால ஜாக்கிரதையா இருந்துக்குங்க. கொஞ்ச நாள் போனதும் வேற வேலை பார்த்து சொல்லறேன்.” என்றாள்.
அதற்குள் ப்ரணிதாவை அழைத்து கொண்டு நித்திஷ் வந்திருந்தார்
விழியனாவது தாத்தாவிடம் திட்டு வாங்குவான் ப்ரணிதா எதுவென்றாலும் நித்திஷ் திட்டவே மாட்டார். நன்விழியின் மறுவதராமாக கூறுவார்.
இங்கு நற்பவியின் அதிரடி நடவெடிக்கையால் வண்டிகள் முழு செக்கப்பில் கடந்தது.
டிரக் டீலிங்கில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தாலும் பணம் பார்த்திட இயலும். அதை மீறி சரத் மதிமாறனிடமும் கைலாஷிடம் வேலைக்கு வரும் காரணம் என்ன என்று பெரிதாய் கேள்விக் குடைய, கைலாஷ் படகு ஓட்டும் கடல் சார்ந்து பணியையும், இங்கே மாறனின் ஹோட்டலில் நன்றாக சாப்பிடவும் என்று எண்ணினாள்.
ஆக… கைலாஷிடம் தொடர்பு கொண்டு பணியை செய்து கடலில் கப்பலை நோக்கி தனது போதை வஸ்துவை கொடுக்கல் வாங்கல் மூலமாகவா, அல்லது ஏற்கனவே கைலாஷிற்கு தெரியாமலோ அல்லது தெரிந்தோ டிரக் டீலராக யாரேனும் பணி மேற்கொள்கின்றனனா. என்ற கேள்வியே நற்பவி திரும்ப திரும்ப கேட்டு விடையறிய முற்பட்டாள்.
எப்படியும் கடல் சம்மந்தமாய் ஏதோ ஒரு ஆள் டீலிங் செய்ய வந்திருக்க வேண்டும். இல்லை இன்னமும் அங்கே வேலையை பாரப்பவனா என்று சிந்தித்தாள்.
சரத் எல்லாம் இன்று முளைத்த காளான். அதனால நிச்சயம் டிரக் சப்ளை அதனை சார்ந்த ஆட்கள் ஏற்கனவே வேலை பார்த்திருப்பார்கள் என்று தோன்ற மீன் பிடிக்கும் ஆட்கள் படகில் சென்று வரும் அனைவரையும் துருவினாள்.
அன்று முழுவதும் படகின் லைசன்ஸ் வைத்து ஓட்டும் அனைவரையும் செக் செய்து முடித்தாள். முழுவதுமாகவே கடல் சார்ந்த இடங்களாகவே சுற்றினாள்.
அவளை தூரத்திலிருந்து கண் காணித்த வட்டத்தில் சிலருக்கு வியர்த்தது. இதுவரை வந்துவிட்டாளே என்று.
டிரக் சப்ளை வேறு இருதினம் அதிகமாய் நற்பவியால் தடை செய்வதாக மாறி போனது.
இங்கு இவள் கஷ்டப்பட்டு தேடுதல் வேட்டையில் சிக்கி ஆராய, மதிமாறனோ கையில் காபி சிப்பை வைத்து “சொல்லு டா… சரத்தை எவ்ளோ நாள் தெரியும்? நீ யாரு உன் கூட்டாளி யாரு? நீ என்னன்ன பண்ணற? எங்க அக்கா மாமாவை கொன்ற நாய் எது? ஒன்னுவிடாம கக்கணும்.” என்று சமையலுக்கென்று வாங்கிய புது கத்தியை டேபிளில் வைத்தான்.
“இங்க பாரு டா… இவன் சமையல்காரன் கொலைபண்ண தயங்குவான்னு யோசிக்காதே. காய்கறி கறி வெட்டறாப்ள நினைச்சி வெட்டி தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்.
ஏற்கனவே நான் ஒரு கொலை பண்ணினேன் டா. இந்த நடுக்கம் பயம் பச் எனக்கு வராது. என் அக்கா மாமாவை செய்தவன் யாரு. எனக்கு அது மட்டும் போதும், உங்க டிரக் பிஸினஸ் எப்படியோ போகட்டும்.” என்று சுயநலமாய் கேட்டு நின்றான் மாறன்.
“அண்ணா… எனக்கு ஒன்னும் தெரியாதுண்ணா. நானும் சரத்தும் தொழிலுக்கு புதுசு. சாகடிச்சிறது இல்லாம் எங்களுக்கு வராது.
அவங்க கொடுக்கற பாக்கெட்டை சின்னதா மாத்தி அவங்க சொல்ற ஆட்களிடம் கொண்டு போய் கொடுப்போம். எங்களிடம் வாங்கறவங்க எல்லாம் காலேஜ் புள்ளைங்களும் ஸ்கூல் புள்ளங்களும் தான் அண்ணா.
சரத் தான் எங்க விற்ப எங்க வாங்குவ என்று தொல்லை பண்ணி இளங்கோ அண்ணாவை டார்ச்சர் பண்ணுவாப்ள. மத்தபடி அது யாரிடமும் சொல்லி தொலைக்காது.
அது தான் உங்க அக்கா மாமாவை சாகடிக்க என்னிடம் அட்ரஸ் கேட்டுச்சு. நான் தான் வூட்டை காட்ட கூட்டிட்டு போனான்.
உன் வூட்ல பின்னாடி சுவரு ஆள் மறைந்தா தெரியாதுனு அங்க போய் இருந்தோம்.
ராத்திரி நைட்ல சத்தமேயில்லாம போட்டு தள்ள தான் பார்த்துச்சு. ஆனா நற்பவியும் கமிஷனரும் சாப்பிட்டதை பார்த்ததுட்டு அவங்களை சாகடிக்கணும்னு இளங்கோ அண்ணா துடிச்சான்.
எப்படியும் பாலை நீ உன் ஆளுக்கு கொடுக்கறேன்னு தான் அதுல பாய்ஸன் மாத்திரையை நுணுக்கி போட்டு கலந்தது. ஆனா கமிஷனரும் நற்பவியும் குடிக்காம போனதும் பயங்கரமா டென்ஷனாகிடுச்சு.
நீயும் போயிட்ட உங்க மாமா அக்கா குடிச்சிட்டாங்க. இளங்கோ என்னை கழட்டி விட்டுட்டு அப்பறம் தனியா போயிடுச்சு. நீ எப்ப வந்த ஏதுனு எனக்கு தெரியாது.” என்று சரத்தின் கூட்டாளி கூறி முடித்தான். எனக்கு இதை தவிர வேறயெதுவும் தெரியாது அண்ணா. நான் புதுசு” என்று அழாத குறையாக கூறினான் சரத்தின் நண்பன் மணி .
மதிமாறனோ அவன் வீட்டிலிருந்த சேலையை எடுத்து பேனில் தூக்கு மாட்டி தயாராய் வைத்தான்.
“எனக்கு மனசு கேட்கலை டா. சின்ன பையனா இருக்கியா கத்தில குத்த பிடிக்கலை. மரியாதையா எந்திரிச்சு இதுல தலையை விட்டுட்டு செத்து போ” என்று சாதாரணமாக கூறினான் மாறன்.
“அண்ணா அண்ணா… என்னை வுட்டுறு அண்ணா.” என்று கூற அவனை தள்ளி கொலையை தற்கொலையாய் மாற்றிட முடிவோடு நின்றான்.
“எத்தனை பேரோட வாழ்க்கையை அழிச்சிருப்பிங்க. படிச்சிட்டு இந்த வயசுக்கு உண்டான சந்தோஷத்தோட வாழாம போதை கேட்குது. நீயெல்லாம் வாழ்ந்து என்ன பண்ண போற. ஸ்கூல் பிள்ளைகளுக்கு டிரக் சப்ளை பண்ணுற” என்று கழுத்தை முடிச்சில் போட்டு கீழேயிருந்த ஸ்டூலை தள்ளி விட்டான்.
அடுத்த நொடி தாமதிக்காமல் விறுவிறுவென இறப்பதை கூட காண விருப்பமின்றி வந்த வழியே வேகமெடுத்தான்.
மாறன் மணியின் செல்லில் இருந்து இளங்கோ புகைப்படத்தை மட்டும் தனது போனில் படம் பிடித்து கொண்டாதனால் அடுத்து இளங்கோவை எங்கணம் தேட என்று யோசித்தான்.
இவனை காணோம் என்றதுமே நற்பவி போனை போட்டு விட்டாள்.
“மாறா… எங்கயிருக்கா?” என்று கேட்டதும், “இங்க தான் மா வெளியே. கடையில சின்னதா பார்ட்டி ஹால் ரெடி செய்ய ஆளை தேடிட்டு இருக்கேன்.” என்றான்.
“வெளியே இருந்தா வீட்டுக்கு வா. சாப்பிடுவோம்” என்றதும் “எந்த வீட்டுக்கு?” என்றான்.
“மாறா.. எங்க அப்பா வரச்சொன்னார்” என்றதும் “ஓ ஓகே.” என்று அவர்கள் வீட்டிற்கே பயணித்தான்.
நற்பவி வீட்டுக்கு வந்தப்பொழுது கையில் கிளவுஸூடன் வந்திறங்கியவனை கண்டு அவள் பார்வை அதனை துளைத்தது.
அமைதியாய் அவனை வரவேற்றாள். வந்ததும் தன் கைகளை கண்டவளை, கண்டு அவனும் பார்க்க மாட்டிய உணர்வில் ‘சே எல்லாம் செய்தேன் கிளவுஸை கழட்டாம வந்துட்டேன். பார்த்துட்டாளே இனி பொய் சொல்லறேன்னு நல்லா தெரிந்துடும்’ என்று அவளிடம் வாதம் வந்தால் பதிலுரைக்க தயாரானான்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
Super super. Intresting