இதயத்திருடா-26
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
மாறன் இரண்டு நொடிக்கு குறைவாக எண்ணங்களில் கற்பனைக்கு சென்று வேகயெட்டு எடுத்து வந்து நற்பவி முன் மீண்டும் நின்றான்.
“எங்க பிடிச்ச? எப்படி பிடிச்ச?” என்று அவளின் கையை பிடித்து அழுத்தமாய் நிறுத்தவும் நித்திஷ் பார்வை கண்டு விடுவித்தான்.
நித்திஷ் விழியனை தூக்கிக்கொண்டு செல்ல, நன்விழியோ ப்ரணிதாவை தூக்கி கொண்டு ப்ரனித்திற்கு அழைக்க தனியறை நோக்கி சென்றாள்.
நற்பவி அதற்குள் போர்டிகா வரவும் அவனும் கூடவே வந்தான்.
“பவி… சொல்ல மாட்டியா.” என்று கேட்டு தன் பின்னால் பூனைப் போல வட்டமிட்டு வருபவனை கண்டு நாயகி சிரித்தாள்.
“நில்லு மா… எட்டு நாளா நாயா பேயா தேடிட்டு இருக்கேன்” என்றவனின் குரலில் அப்பட்டமான அலைச்சல் தெரியவும், திரும்பி அவனை கண்டு கையை கட்டி கவனித்தாள்.
“நீ பாதிக்கப்பட்டவன் மாறா. நான் போலீஸ் டிபார்ட்மெண்ட் சார்ந்தவள்.
உனக்கெல்லாம் போட்டோ பார்த்து ஆளை தேடி ரோடு ரோடா அலையணும். எனக்கு அப்படியில்லை. ஒரு கிரிமினல் பிக் கிடைச்சா உடனே பழைய ரெக்கார்ட்ல மேட்ச் ஆவானானு பார்ப்போம்.
நீ எங்கனு சென்னை முழுக்க தேடின. நாங்க கம்பியூட்டர்ல அப்லோட் பண்ணி ப்யூ மினிட்ஸ்ல அவன் ஜாதகத்தையே கண்டுபிடிச்சிட்டேன்.
மணி இறந்து போஸ்ட்மார்ட்டம் போன அடுத்த செகன்ட் இளங்கோ யாருனு தேடியதுல அவன் ஒரு ரேப் கேஸ்ல ஜெயிலில் உள்ள வந்தவன். பத்து வருடம் தண்டனை கிடைச்சி வெளிவந்தான்.(செந்நீரில் உறையும் மதங்கி வில்லன் நினைவியிருக்கா. நதியாவை கொன்றவன்😜)
அவன் வெளிவந்தப்பிறகு நிறைய இடம் அலைந்து திரிந்து அவனுக்கு எதுவும் செட்டாகலை. அதனால தனக்கு டிரக் கொடுத்த இடத்துக்கு போய் பழைய போதையை தேடினான்.
போதையும் கிடைத்தது அதோடு அதனை விற்கும் வேலையும் கிடைத்தது. பணமும் பத்தாண்டு உள்ளிருந்து வந்ததன் வெறுப்பான வாழ்விலிருந்து பணம், பெண்கள், போதை என்று அவனுக்கு ஏற்றவை கிடைக்கவும் அதிலே உழன்றான்.
எந்த கேடிக்கும் நிலையான அட்ரஸ் போன் நம்பர் என்று வாங்கிட்டு தான் சிறைச்சாலையிலிருந்து அனுப்புவாங்க. அப்படி போய் கையும் களவுமா மணி இறப்பு செய்தியை அவனுக்கு சேருவதற்கு முன்ன போய் இளங்கோவை கேட்ச் பண்ணிட்டோம்.
என்ன இந்தமுறை ஸ்டேஷன்ல வைக்கலை. தனியிடம் ஷிப்ட் பண்ணிட்டோம். அப்பறம் இளங்கோவிடம் கவனிக்க வேண்டிய முறையில் கவனிச்சு, அவனுக்கு அடுத்த ஆளு யாருனும் கண்டுபிடிச்சாச்சு.
நீ மணியை பிடிச்ச, நான் இளங்கோவை பிடிச்சேன். இதுக்கு மேல போதும் மாறா. நீ ஒதுங்கிடு இனி நான் பார்த்துப்பேன்.” என்றவள் நிமிர்ந்த நடையோடு சென்றாள்.
மாறனுக்கு அவளின் ஆளுமை பேச்சு பிடித்திருந்தது. ஆனாலும் இந்த விளையாட்டில் இருந்து விலகிடும் எண்ணம் மட்டும் துளியும் இல்லை.
“நாளைக்கு தலைப்பு செய்தி பாரு.” என்று வண்டியில் செல்ல, இனி நற்பவியை பாதுகாப்பதும் தன் கடமை என்பதும் அவன் உணர்ந்தான்.
அவளுக்கு அவன் உதவி தேவைப்படாது. அப்படியென்றாலும் அவள் எடுத்திருக்கும் டிரக் கேஸ் மிகவும் ஆபத்தானது. அவன் கூடயிருப்பது அவளுக்கு அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால் மதுவந்தியின் இறப்பிற்கு அடுத்து தன்னை நேசித்து, நேசிக்க வைத்தவளின் உயிர் அவனுக்கு முக்கியமானதல்லவா.!
நற்பவி சென்றதும் அவள் பாதையை வெறித்தான்.
குருவோ தோளை தொட்டு “வாங்க ப்ரோ போய் இளங்கோவை தேடுவோம்” என்றதற்கு “உங்க போலீஸ்காரம்மா இளங்கோவை பிடிச்சிட்டா. நமக்கு வேலையில்லை” என்றதும் குருவோ “அப்போ நான் தேவையில்லையா ப்ரோ.” என்றான் குரு சோகத்துடன்.
“தேவையில்லைனு எப்ப சொன்னேன். நீ தான் எனக்கடுத்து கடையை மேற்பார்வையிடப்போற சூப்பர்வைசர். வா… கடையை எப்படி நடத்ததும்னு சொல்லறேன்” என்று அழைத்து சென்றான்.
முதலில் ஹேர்கட் செய்துக்க கூறினான்.
“சார்… இந்த குருவிக்கூடு மஹாக்கு ரொம்ப பிடிக்கும் சார்.” என்றவனிடம் ‘உணவு தயாரிக்குற இடமும், பரிமாற இடம், சாப்பிடற இடம், இந்த இடத்துல இப்படி செம்பட்டை கலர்ல முடியை வச்சிட்டு சுத்தக்கூடாது. முதல்ல உட்காரு.” என்று அதட்டினான்.
நல்ல ஏசியறையில் முடி வெட்ட அமர்ந்ததும் சொகுசாய் அமர்ந்துக் கொண்டான் குரு.
பின்னர் சிலபல நேரங்கள் கடந்திட, தன்முன் இருந்தவனின் கைகர்யத்தில் கண்ணாடி மறைந்து விட, நேரம் கடந்து கண்ணாடியில் தன் பிம்பத்தில் தெரியவும் வாய்பிளந்து நின்றான் குரு.
அவனை ரசிக்க விடாமல் குளித்து, முடித்து வரக்கூறி ஆடையை கையில் திணித்தான் மாறன்.
“ஒரு இடத்துக்கு உடை ரொம்ப முக்கியம் குரு. அதுவும் சமையல் கலையில. உன்னை வெறும் பேரரா இருக்கணும்னா முடி மட்டும் வெட்ட சொல்லி அனுப்பியிருப்பேன். பட் எனக்கு ஒரு அசிஸ்டெண்ட் தேவைப்படறார்.” என்று கூறி கண்ணாடியில் குருவை நிறுத்தினான்.
“சார்… இது நானா.. நானா சார் இது. அய்யோ.. ஹீரோ கணக்கா இருக்கேன். நம்ப முடியலையே.” என்று ஆச்சரியப்பட்டான்.
“நீங்களே தான் வாங்க” என்று அழைத்து சென்றான்.
கடையில் சூப்பர்வைசராக அறிமுகப்படுத்தினான்.
வடிவேல் முதல் கொண்டு மற்றவர்கள் வணக்கம் வைத்து மரியாதை தரவும் கண்கலங்கினான். குருவுக்கு எந்த வேலை செய்தாலும் காசு பார்க்கலாம். இந்த மரியாதை? அதை ஏற்படுத்தி தந்த மாறனிடம் நன்றி தெரிவித்தான் குரு
இனி வரும் பணிகளை எப்படி நிர்வாகிப்பது என்று சொல்லிக் கொடுத்தான் மாறன்.
காய்கறி கணக்கு மூட்டைகளை வரும் அளவும், இந்ததந்த இடம் எப்பொழுதும் க்ளின் பண்ணி நீட்டா இருக்கணும் என்று கூறினான்.
என்ன என்ன நாள், என்ன வகை மெனு செய்ய வேண்டும் என்றும் கூறவும் கவனமாய் கேட்டான்.
இவங்க எல்லாம் இந்த இந்த டேபிளில் பேரராய் பணி புரிவார்கள் என்று அடுக்கினான்.
நேரம் போக மணி எட்டாகவும் மாறனும் குருவும் வீட்டுக்கு வந்தார்கள். கடை பையன் மட்டும் அங்கு தங்கி இருப்பதால் வடிவேல் வீடும் அருகே என்றதால் கடையை அவர்கள் பொருட்டு விட்டு சென்றான் மாறன்.
மாறன் வீட்டுக்கு வந்ததும் குருவை கண்டு மஹா ஆச்சரியப்பட்டு பேச்சிழந்து நின்றாள்.
ஆனந்த கண்ணீர் வடித்து கை குப்பி, “வீடு போச்சு பொழப்பும் பார்க்க முடியலை. இங்க தங்கவும் மனசுக்கு ஒரு மாதிரி நெருடலா இருந்துச்சு. ஆனா குருவுக்கு நிலையான வேலை கிடைக்கும்னு எதிர்பார்க்கலை சார்.” என்று அழுதாள்.
தோளை தட்டி கொண்டு “வாழ்க்கை ஒரே மாதிரி இருந்துடாது மஹா.” என்று நற்பவி தட்டிக் கொடுத்தாள்.
“சரி நான் கிளம்பறேன். குரு நாளையிலருந்து மேற்பார்வை பார்க்க நேரத்துக்கு வந்துடு” என்று மாறன் கிளம்பினான்.
மஹாவும் குருவும் தங்கள் பொருளாதாரநிலை மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவாக மாறவும் குழந்தை பிறக்கும் முன் குரு தந்தையாய் நல்ல நிலையில் மாறுவதில் மஹாவுக்கு அத்தனை சந்தோஷம் பெருகியது.
அவன் சென்ற பத்து நிமிடத்தில் நற்பவி கிளம்பினாள்.
நற்பவி கிளம்பி பாதி வழியில் அவளை பின் தொடர்ந்தது மற்றொரு வண்டி.
நற்பவியை தூரயிருந்து கண்கானித்ததே தவிர நெருங்கவில்லை.
மணி நான்கிற்கு நற்பவி வீட்டுக்கு செல்லவும், மாறனோ நியூஸ் பேப்பரை பார்த்து படிக்க, “கடற்கரையில் மத்திய வயதில் இருப்பவரின் பிணம் ஒதுங்கியது” என்றும் பெயர் இளங்கோ வயது 39 என்றும் அதீத போதையில் படகிலிருந்து விழுந்து கரை ஒதுங்கி உள்ளதாக கூறி துண்டு செய்தி இருந்தது.
கடந்த இரண்டு நாளில் ஆட்டோ தொழிலில் போதை வஸ்து ஏற்றி வந்த கடத்தியதில் சிலர் கைது என்று முகமூடி அணிந்து வரிசையாய் அமர்ந்திருந்தவர்களின் செய்தியும் கீழே கண்டான்.
காலையிலேயே நற்பவிக்கு கால் செய்து, “டிரக் கேஸ்ல மெயின் ஹெட்டை பிடிச்சிட்டியா ?” என்று கேட்டான்.
“இதென்ன சாதாரணமா முடியுற கேஸா மாறா. இளங்கோவோட போன்ல இருந்த நம்பரை டிரேஸ் பண்ணியதில் எதுவும் இப்ப உபயோகத்தில் இல்லை. ஆனா அதோட மற்ற எண்களை ஆராய்ந்து பார்த்தாச்சு. இங்க சென்னைக்கு டீலிங் பண்ணறது காசிமேடு வேலாயுதம். அவனுக்கு சப்போர்ட் பண்ணறது தான் யார்னு தெரியலை.” என்றதும் மாறனோ அமைதியாய் இருந்தான்.
“இப்ப எந்த டீலும் பண்ணறதில்லை. கொஞ்சம் அமைதியா இருக்காங்களோ என்னவோ.” என்று சோர்வாய் கூறினாள்.
“டிரக் டீல்னா கடல்ல தான் நடக்குமா நற்பவி. பிராட்வே *** *** இந்த இடமெல்லாம் போய் பாரு. மோஸ்டா… அடிக்ட் ஆனவங்களுக்கு உபயோகப்படுத்தாம இருக்க முடியாது. உயர்தர ஆட்களுக்கு சப்ளே தடங்கல் இல்லாம போயிருக்கும். எதுக்கோ நான் சொன்ன ஹோட்டல்ல ரெயிட் நடத்தி பாரு.” என்றான் மாறன்.
“டேய்.. ஹோட்டல் தொழில்ல எதிரினு ரெயிட் நடத்தி அவங்க ஹோட்டல்ல மைனஸா மாத்திட ட்ரை பண்ணறியா.” என்று கேட்டாள் நற்பவி.
“ஆமாடி ஒரே கல்லுல இரண்டு மாங்காய். போதுமா… முதல்ல சொன்ன ஹோட்டல்ல போய் பாரு.” என்றான்.
ஏற்கனவே சரத் இந்த ஹோட்டலில் எல்லாம் நல்விதமாய் பேசுவான். மாறனுக்கு சரத் கூறியதில் முகசுளிப்பு தான் வரும். மாறன் கேள்விப்பட்டவரை அந்த ஹோட்டலில் பெண் விவகாரமும் நடக்கும் என்பதே. அதனால் நல்லபிப்ராயம் இல்லை.
நற்பவி மாறன் சொன்னதால் ம்ம் கொட்டியவாறு பேச, “என்ன பண்ணற.. சத்தம் குறைவா இருக்கு.” என்று கேட்டான்.
“செவ்வந்திம்மா தந்த லாக்கெட் பார்த்துட்டு இருக்கேன். அதுல உன் முகம் இருக்கு.” என்று பேசினாள்.
“அக்காவுக்கு அன்னைக்கே தெரிந்துயிருக்கு. அதான் அந்த செயினை என் கையால உன் கழுத்துல போட்டு ஆசைப்பட்ட மாதிரி நிறைவா பார்த்துட்டாங்க. என்றான்.
“ம்ம்ம் அப்படி தான் நானும் நினைச்சேன் மாறா. அவங்க இறப்புக்கு சம்பந்தப்பட்ட ஆட்களை பிடிச்சி அழிப்பேன். இங்க அப்பா கல்யாணம் செய்ய நாள் பார்க்கவும் யோசிக்கறார்.
செவ்வந்திம்மா கணேசனப்பா இறந்ததால… ஆனாலும் உன்னை தனியா இருக்க விட மனசும் இல்லையாம்.” என்று பேசினாள்.
“எனக்கும் உன்னை விட்டு பிரிந்திருக்க முடியலை பவி. பகல் எல்லாம் எண்ணங்கள் எப்படியோ சமாளிக்கறேன். தனியா இருக்கறப்ப ரொம்ப வலிக்குது. நானே கல்யாணம் பண்ணிக்கலாமாடினு கேட்கலாம்னு இருந்தேன். சரி இந்த கேஸ் முடியட்டும்னு காத்திருக்கேன்.” என்றான் மாறன்.
“இந்த மாசம் முடியறதுக்குள்ள பிடிச்சிடுவேன் மாறா. இல்லைனாலும் என்னை பழிவாங்க அவங்க முயற்சிப் பண்ணுவாங்க. ஒரு கை பார்ப்போம்.” என்று கூறினாள்.
கண்டிப்பா..” என்று கூறியவன் “லவ் யூ டி பொண்டாட்டி” என்றான்.
“டேய் புருஷா… இங்க வருவியா?” என்று கேட்டாள்.
“இல்லை டி. ஒரு சின்ன வேலை இருக்கு.” என்று கூறவும் இருவரும் பேச்சை முடித்துக் கொண்டனர்.
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
WhatsApp Community Channel 👇
🔗https://whatsapp.com/channel/0029VaLzctl8qIzyMR16cq0m
Facebook Site Discussion Group👇
🔗https://www.facebook.com/share/g/17G2HQD9Q5/
Amazon Kindle Link👇
🔗https://www.amazon.in/~/e/B08PFYLCNN
Youtube Praveena Thangaraj Novels Channel👇
🔗https://www.youtube.com/@praveenathangaraj-novels
Pratilipi Page Link👇
🔗https://tamil.pratilipi.com/user/praveena-thangaraj-y045937j3k
எங்க வாசித்தாலும் உங்க கருத்தை கூறுங்கள்.
நன்றி.
பிரவீணா தங்கராஜ்.
Wow super super. Intresting
Super pavi intha mari alungaluku intha punishment thevai than adutha aal yarunum therinjikittan but pidika pora una vera follow panranga aro carefull pavi mathi nee tha tha pathukanum