Skip to content
Home » இதயத்திருடா-27

இதயத்திருடா-27

இதயத்திருடா-27

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

நற்பவிக்கு இந்த இருபது நாளிலேயே மாறனை விடுத்து இருக்க முடியவில்லை.

முன்பாவது அக்கா மாமாவோடு இருந்தமையால் அவனின் மனதிற்கு நான் இருக்கின்றேன் என்ற இரண்டு உயிர் துடிப்பதை அறிந்து மகிழ்ந்தவன். இன்றோ தனக்கென யாருமில்லையென்ற மனநிலையில் கவலை கொள்வானோ என்று தினம் தினம் துவண்டாள்.

கடைசியாய் செவ்வந்தி கணேசன் தன்னிடம் அவனை பார்த்துக்கோமா இனி அவன் உன் பொறுப்பு என்பதாக பார்த்த அந்த பார்வையில் இந்த இருபது நாளும் அவனை தன் கூடவே வைத்திருக்க துடித்தாள்.

ஏனோ இங்கிருந்தால் மாறன் நேரத்திற்கு வருவதும் போவதும் இருந்தாலும் எங்கேனும் செல்வானோ என்று தான் இரவில் நேரம் கழித்து வரக்கூடாது எங்கும் செல்லக்கூடாது என்று ஒரு கோட்டைக்குள் தந்தை நிறுத்தியது, நிம்மதியாக இருந்தது.

அப்படி விடுத்தாலும் மாறன் தன்னை அணைத்தப்போதே அவனுக்கு மனமும் உடலும் ஆறுதல் படுத்த நற்பவி அணைத்து நின்றாள்.

அன்றிலிருந்தே மதிமாறனுக்கு மனதளவை விட அருகேயிருந்து ஆறுதல்படுத்தவும் வேண்டுமென புரிந்ததிலிருந்து திருமணம் விரைவாய் வைப்பதில் சிறந்ததென முடிவெடுத்தாள்.

நித்திஷும் ப்ரனிதிடம் பெரிய மருமகன் என்றதில் அபிப்ராயம் கேட்க, “இன்னும் பத்து நாள்ல ரிட்டர்ன் வந்துடுவேன் மாமா. நீங்க டேட் சொன்னா அதை தவிர்த்து சூட்டிங் வச்சிடுவேன்” என்று கூறியிருந்தான்.

ப்ரனித்திற்கும் நற்பவி விரும்புகின்றாளென்றதும் இதில் பிரித்து வைக்க வேண்டாமே காலதாமதம் செய்யாமல் கால் கட்டு போட்டிடலாமென்ற கருத்து நிலவியது.

நன்விழியோ “இந்த கேஸ் முடியவும் தங்கைக்கு மேரேஜ் பண்ணிடலாம் அப்பா. அவளோட கேரியர் லைப் அது பாட்டுக்கு இருக்கட்டும் மாறனும் அப்ஜக்ஷன் பண்ண மாட்டாரென்று” கூறினாள்.

இன்று மாறனே வாய் திறந்து கேட்டதும் நற்பவி முடிவோடு விரைவில் மணந்திடும் நோக்கத்தில் இருந்தாள்.

அதே சிந்தனையில் மதிமாறன் கடைசியாக ‘லவ் யூ டி பொண்டாட்டி’ என்றதில் உதடு விரிய வெட்கம் கொண்டாள்.

தானும் சட்டென ‘டேய் புருஷா’ என்றதில் அவனும் இதனையே எண்ணி கொண்டிருப்பானோ என்று சிந்தனைக்குள் செய்தவள் தனக்கு பின்னால் தொடர்பவர்களை கவனிக்க மறந்தாள்.

காசிமேடு வேலாயுதத்தினின் இருப்பிடம் நோக்கி தனது வாகனத்தை இயக்க கூறியிருந்தாள். சகாதேவனும் அவள் சொன்ன தெருவின் வழியே வண்டியை செலுத்த முக்கு தெருவும் ஒருவழி பாதையுமாக இருக்க மெதுவாய் ஊர்ந்து சென்றாள்.

நற்பவி வாட்சை வாட்சை பார்க்கையில் சகாதேவனோ “மெயின் ரோட் போயிட்டா வேகமாக போயிடலாம் மேம்” என்றதும் நற்பவி காரில் சாய்ந்தமர்ந்தாள்.

சகாதேவன் கூறியது போல மெயின் ரோட் சென்றதும் வைகமெடுத்தது. ஆனாலும் சோதனையாக ஒரு இறப்பு ஊர்வலம் முன்னே செல்ல மெதுவாக செல்ல வேண்டிய நிர்பந்தமானது.

போலீஸ் சைரன் ஒலி அமிழ்த்தப்பட்டதால் ஓசையின்றி மெதுவாய் வரவும் நற்பவி நொந்துவிட்டாள்.

வேலாயுதம் வீட்டிற்கு முன் இரண்டு தெரு இருக்க நற்பவி காரிலிருந்து இறங்கி விட்டு, நான் நடந்து போறேன் அண்ணா. நீங்க மெதுவா வாங்க” என்று தனக்கு பின்னால் மப்டியில் வந்தவர்களை அலார்ட் செய்துவிட்டு இறங்கி நடந்தாள்.

தற்போது தான் வெட்டு வாங்கிய கைகள் சரியானது என்பதால் “பார்த்து மேடம் பொல்லாத பசங்க” என்று அக்கறையாய் கூறினார்.

கன்னை எடுத்தபடி இறங்கவும், சவ ஊர்வலத்தின் முன் ஆடியவர்கள் நற்பவி முன் வேண்டுமென்றே வழிவிடாது ஆடவும், அவர்களின் சட்டை காலரை பிடித்து பின்னுக்கு தள்ளி விட்டு வேகமாய் அதே கணம் கோபமாய் முன்னேறினாள்.

“வேலு போலீஸ் வருது” என்று ஒருவன் சைரன் ஒலியாக கத்தியபடி குறுக்கு தெருவில் ஓடவும் நற்பவி கண்கள் தனக்கு பின்னால் எவனோ ஓடுவதை கண்டு வேலாயுதம் தப்பிப்பானோ என்று பின் தொடர்ந்தாள்.

நற்பவியை தொடர்ந்து மற்றவர்களும் பதுங்கி ஓடிவரவும், வேலாயுதம் பின் வாசல் வழியாக எகிறி குதித்து ஓடக் கண்டாள்.

“காய்ஸ்… அக்கியூஸ்ட் ஓடறான்” என்று சுட்டிக்காட்டி வேலாயுதத்தை பின் தொடர்ந்து ஓட்டமெடுத்தாள்.

இரண்டு மூன்று குறுக்கு தெருவில் ஓடியவன் பின்னர் மெயின் ரோட் வழியில் ஓடினான்.

அதுவோ பீச் ரோட் என்பதால் ஆட்டோ கன்டெயினர், இருசக்கரவாகனம் மற்றும் கார் என பறந்தது.

வேலாயுதத்தை தொடர்ந்து நற்பவியும் கூடவே அந்தோனி, நரேன் என்பவரும் ஓடி வந்தார்கள்.

அங்கு சென்ற பஸ்ஸும் மக்களும் வேடிக்கையாக நோட்டமிட வேலாயுதமோ கையில் கிடைத்தால் மரணம் நிச்சயமென்று போனில் தனக்கு தெரிந்த இடத்தில் போட்டை எடுத்து வர கூறி கடலில் தப்பித்திடலாமென வரக்கூறினான்.

இரண்டு சிக்னலில் சிக்னல் ஒளிவிளக்கு மட்டும் இருந்தனர். டிராபிக் போலீஸ் இல்லாமல் இருந்திட, அந்த மாலை நேரம் மூச்சிரைக்க நற்பவி அந்தோனி நரேன் என்று வேலாயுதத்தை துரத்தியபடி ஓடிவந்தார்கள்.

ப்ளூடூத்தில் போலீஸ் முன்பக்கம் வந்து பிடிக்க கட்டளையிட்டாள்.

ஆனால் ஆடிஅசைந்து ஓட்டமெடுக்கவும் வேலாயுதம் தப்பிக்க லாவகமாக கண்டெயினரை மீறி நடுவில் இருந்த தடுப்பை தாண்டி ஓட்டமெடுக்க, ஒரு கணம் கண்டெயினர் இரண்டு வரிசையாய் வரவும் துரத்தி செல்ல தடையாய் அமையவும் நின்றனர்.

வேலாயுதமோ, மூவரும் மாட்டிக்கொள்வதால் வேகமாய் மற்றொரு சாலையை கடந்து கற்கள் போட்டிருந்த பகுதியை தாண்டி போட்டில் ஏற ஆவலாய் சென்றான்.

அந்த நேரம் அங்கு ரோந்து வந்த டிராபிக் போலீஸ் அபிநந்தன் வேலாயுதத்தினை பிடித்து கீழே தள்ளி, கைகளை பின்னால் மடக்கி, தான் வந்த ரோந்து வண்டியின் முன் வேலாயுதத்தின் முகத்தை வைத்து, “தனபால் கழுத்துல மாலை போட்டிருந்த உங்க துண்டை தாங்க” என்று கேட்க காரோட்டி தனபால் கொடுக்கவும் மடக்கிய கைகளை கருப்பு துண்டால் கட்டி முடித்தான்.

நற்பவி வேலாயுதம் தப்பியிருப்பான் என்ற கடுப்பில் வந்து காண யாரோ டிராபிக் போலீஸ் பிடித்து வைத்ததை கண்டு நிம்மதியுற்றாள்.

“தேங்க்யூ சார். எங்க எஸ்கேப் ஆகிடுவானோனு பயந்தேன்.” என்றவள் அவசரமாய் கொண்டு வந்த விலங்கை கையில் கட்டி முடித்தாள்.

“நீங்க சிக்னலை தாண்டி ஓடிவர்றதை வாக்கி டாக்கில சொன்னாங்க மேம். அதனால தான் எதுக்கோ இந்தப் பக்கம் இருந்து வந்தேன். சின்ன உதவி தான் மேம். ஆமா பிக்பாக்கெட்டா கொலையா மேம்” என்று கேட்டு நின்றார் அபிநந்தன்.(நில்கவனி காதல் செய்)

“இரண்டுமில்லை சார். டிரக் கேங்கில் ஒன் ஆப்தி டீலர்.” என் மூச்சி வாங்கி நின்றவளை கண்டு, “அப்போ பெரிய உதவி தான்” என்றவன் நற்பவியின் கார் வரவும் இருந்து ஏற்றி விட்டான்.

நேராக ஸ்டேஷன் வந்து சேரும் முன் வேலாயுதத்தின் பினாமி இடங்களை முற்றுகையிட்டு ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாய் டிரக் பவுடர் பேக்கெட்டினை கைப்படுத்தப்பட்டன.

ஒரேயிடத்தில் அல்லாது சின்ன சின்ன கண்டெயினரில் ஓடாமல் நின்ற வேலாயுதத்தின் வண்டியில் போதை வஸ்துவை கண்டறிந்து உடனடியாக போலீஸ் கைப்பற்றியது.

இரவுக்குள் ரிப்போர்டர் சேனலில், டிவியில் நேரலை என்று மின்னலாய் நற்பவியை சூழ்ந்தனர்.

நேரலையில் முக்கிய தலை பிடிப்பட்டாங்களா என்று கேட்க, “இல்லை… எப்பவும் சில விஷயத்துக்கு நதிமூலம் ரிஷிமூலம் கிடைப்பதில்லை. இந்த டிரக் கேங் கூட அப்படி தான். என்ன தான் நம்ம சர்க்கிளில் பிடிப்பட்டாலும் முழுதா பிடிச்சிங்களானு கேட்டா ஒரு பெரிய கேள்வி குறிதான் தாங்கி இருப்போம். ஏன்னா இது எங்க கிடைக்குது எப்படி நம்ம நாட்டுக்குள்ள புகுந்து இளைய தலைமுறையை அழிக்கிறதுனு கண்டுபிடிக்க காலதாமதம் ஆகும். அதுக்குள்ள தலைகள் தப்பிக்க வால்களை துண்டித்து பல்லிகள் எஸ்கேப் ஆகிடுவாங்க.

பெரும்பாலும் இதான் நடக்கும். இந்தமுறையும் இதுல விதிவிலக்கு இல்லை. எங்களால் முடிந்தது பண்ணி கிரிமினல்ஸோட முகமூடியை மக்களுக்கு காட்டி தண்டனை வாங்கி தருவோம்.” என்று கூறியவளிடம் “அப்ப மெயின் ஆளை பிடிக்கலைனு சொல்ல வர்றிங்களா?” என்று கேட்டு வைத்தனர் டிவி தொகுப்பாளி.

“ஒன் பை ஒன்னா பிடிச்சி நிறுத்துவோம்னு சொன்னேன். பிடிக்க மாட்டோம்னு அவநம்பிக்கையில சொல்லலை. ப்ளிஸ் மூவ் ஆன்.” என்று மொழிந்தாள்.

விறுவிறுவென வேலாயுதத்தினை தனிப்பட்ட லாக்கப்பில் தள்ளி விட்டு கூடுதலாய் போலீஸ் படையை நிறுத்தினாள். தர்ஷனின் கவனிப்பில் இருந்த சிறைச்சாலையில் அதீத கவனிப்பில் காவலில் வேலாயுதம் முகமெங்கும் வீக்கத்துடன் தரையில் படுத்து கிடந்தான்.

நற்பவி தனது பணி முடிந்ததாக கிளம்ப, மதிமாறனோ கூடவே வந்து அவளை அழைத்து சென்றான்.

“என்ன மாறா என்னைக்கும் இல்லாம அழைசுசிட்டு போக வந்திருக்கிங்க” என்றாள்.

“ம்ம்… டிவில லைவ்ல பார்த்ததும் அப்படியே பறந்து வர முடியுமானு பார்த்தேன். அந்தளவு சந்தோஷம். எப்படியும் அந்த நேரம் கிட்ட கூட நெருங்கி பேச முடியாதுனு தான் இப்ப வந்தேன். எப்படியும் தனியா தானே டிராவல் பண்ணுவ. அதனால தான் வந்துட்டேன்.” என்றவனை கட்டி அணைத்து கொண்டு அமர்நதாள்.

“நற்பவி… இப்படி அணைச்சா மூடு மாறும். உடம்பெல்லாம் இரத்தவோட்டம் ஏறுது” என்றான். ஆனால் ஒரு கையோ அவளின் கையை வருடி இப்படியே அணைத்து கொள்ளென சொல்லாமல் சொல்லியது.

மெதுவாய் மதிமாறனின் பின்னங்கழுத்தில் இருந்த காலரை இறக்கி பின்னங்கழுத்தில் இதழை பதித்தாள்.

“பவி… என்ன பண்ணற” என்று அவனின் கழுத்தில் அவள் உதடு பட்ட குறுகுறுப்பில் கழுத்தை கூச, “மை பஸ்ட் கிஸ். இங்க தான் கொடுக்க தோன்றியது மாறா” என்று கிறக்கமாய் கூறவும், “நான் அணைச்சதுக்கே உங்கப்பா முறைச்சார்.” என்றவன் வளைவில் இடிக்கும் படியாக வண்டி வரவும் சுதாரித்து ஓட்டினான்.

“என்ன சார் பொண்ணை தூக்கலாமா?” என்று கேட்டான். அந்த பக்கம் இருந்தவன். 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்



2 thoughts on “இதயத்திருடா-27”

  1. Kalidevi

    Athu eppadi crt ah romba sincere ah ava iruka time la ellam mathinnee vanthuta ava mind vera mood ku matuthu paru neeum ava kitta nalla vilunthuta aanalum nee avala follow panranga therinji kapatha tha vanthu iruka yheriuthu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!