Skip to content
Home » இதயத்திருடா-28

இதயத்திருடா-28

இதயத்திருடா-28

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     நற்பவி நெடுநேரம் சிந்தனைவயப்பட்டாள் குறுக்கும் நெடுக்கும் நடந்து பால்கனி வழியே நிலவை ரசித்தாள்.

    “தூங்கலையா பவி” என்று நன்விழி கொட்டாவி விட்டுக் கொண்டு தங்கையை காண வந்தாள்.

    “வரலைக்கா இந்த கேஸ் முடியறதுக்குள்ள மாறன் என்னை விட்டு பிரிஞ்சிடுவாரோனு பயமா இருக்கு.

   ஏன்க்கா… ப்ரனித் மாமா ஆக்டரா இல்லாமா ஒரு… ஒரு கொலைக்காரனா இருந்தா என்ன பண்ணிருப்ப?” என்று கேட்டாள்.

   நன்விழி முகத்தை அழுத்தி துடைத்துவிட்டு, “என்னடி உனக்கு வேண்டும். கேள்வியை ஒழுங்கா கேளு.” என்று சாய்விருக்கையில் அமர்ந்தாள்.

      “மாறன் அவனோட அக்கா மாமா இறந்ததுக்கு பழி வாங்கினா அவர் கொலைக்காரன் தானே? அப்படின்னா… அவரை சட்டத்துக்கு முன்ன நிறுத்தணுமா? இல்லை காதலன் என்று சும்மா விட்டுடணுமா?” என்று கேட்டாள்.

     “மாறன் கொலை பண்ணறாரா?” என்று கேட்க வேகமாய் இல்லையென்று கூறி பிறகு தலையை தொங்கப்போட்டு “அவர் தான் மணியை கொன்றது.” என்று கூறினாள்.

    “இளங்கோ?” என்று கேள்வியாய் அவனும் இறந்துவிட்டானே அவனையுமா? என்று கேட்டாள்.

     “இளங்கோவை தர்ஷன் சாரோட மேற்பார்வையில் விசாரிச்சப்ப வேலாயுதம் தான் விற்கறதை சொன்னான். கூடுதலா எங்கயெங்க பவுடர் கிடைக்கும்னு சொன்னான்.

   அப்ரூவரா ஆகிடறேன்னு கெஞ்சினான். பட் தர்ஷன் அங்கிள் முதல் முறை ரேப் கேஸ்ல உள்ளப்போனப்ப நீ திரும்பி திருந்தினவனா மாறியிருப்பனு விட்டுட்டேன். திரும்ப சான்ஸ் கொடுக்க நான் முன்ன மாதிரி இல்லைனு தண்ணில முக்கி மூச்சு திணற வச்சி சாகடிச்சார். அதுக்கு பிறகு சீக்ரேட் அதிகாரி வச்சி போட்ல கடல்ல ஒதுங்குற மாதிரி பக்கமா போட்டுட்டு வந்தாங்க.” என்று கூறினாள் நற்பவி.
 
        “நற்பவி நீ ரொம்ப குழம்பிட்டு இருக்க. மாறனால ஏதாவது உயிர் போனா நிச்சயம் தண்டனை கிடைக்கணும்.

ஆனா மாறன் இழந்ததை வச்சி யோசித்தா மாறனால இறந்தவங்க உத்தமனுங்க இல்லை. பிகாஸ் இந்த சுமூகத்தை ட்ரக்ஸ் சொசைட்டியா மாறாம பார்த்துக்கறது ஒவ்வொரு குடிமகனோட கடமை. 

    காதலியா நடந்துக்கணுமா போலீஸா நடந்துக்கணுமானு நீ தான் தெளிவா இருக்கணும். நான் சொல்லி நீ கேட்டு எதுவும் செய்து முடிவெடுக்காதே.

   அப்பறம் உன் இடத்துல நான் இருந்தா என்ன பண்ணுவேன்னு திங்க் பண்ணாத. பிகாஸ் ஒவ்வொருத்தருக்கு ஒரு சுபாவம். நான் நீயா மாற முடியாது. நீ நானா மாற முடியாது.

   தர்ஷன் சார் உன்னை வேலையில உயர்த்த இப்படி பேசினா கோபத்துல வேகத்துல முடிவெடுப்பனு உன்னை புஸ் பண்ணறார்.

     மற்றபடி அவர் நற்பவியை நன்விழியா மாத்த ட்ரை பண்ணலை. நற்பவிக்குள்ள என்ன இருக்குனு உணர வைக்கிறார்.” என்று நைட் சூட் அணிந்தாலும் முழுக்கையாக இருக்க அதனை மடித்து விட்டு, “எப்பவும் அவங்க அவங்க மனசுக்கு என்ன தோன்றுதோ அதை தான் செய்யணும். கண்டதையும் குழப்பிக்காம தூங்கு. நல்லா தூங்கினா தான் பிரிஸ்கா வேலை பார்க்க முடியும். மாறன் ஏதாவது செய்தா அப்ப யோசிப்போம்.” என்று கன்னம் தட்டி சென்றாள் நன்விழி.

  நற்பவியோ கழுத்திலிருந்த லாக்கெட்டை பிடித்து யோசனைவயப்பட்டவளாய் மாறனை நினைக்க துவங்கினாள்.

     லாக்கெட் திறந்து விட அதனை எடுத்து அவனின் சிரிப்பில் தன்னை தொலைத்து, மறுபக்கம் அவளின் பாஸ்போர்ட் போட்டோவை கத்தரித்து வைத்தாள்.

    அடுத்த நாள் ஒரு மீட்டிங் நடைப்பெற்றது. சிறு நன்றி நவிலும் பங்கேற்பு. அந்தோனி நரேன் மற்றும் காரோட்டி சகாதேவன் கூடவே டிராபிக் போலீஸ் அபிநந்தன் இருந்தார்.

     வழக்கமாய் உதவி செய்தமைக்கு சிறு பாராட்டை பகிர்ந்து சிற்றுண்டி வரவழைத்து சாப்பிட்டனர். நற்பவி தனிப்பட்ட முறலயில் அபிநந்தனுக்கு நன்றி நவில எழுந்தாள்.

   “ரியலி தேங்க்ஸ் அபிநந்தன். நீங்க வரலைனா ப்யூ மினிட்ஸ்ல வேலாயுதம் போட்ல பறந்து இருப்பான்.

      கஷ்டப்பட்டது எல்லாம் வீணா போயிருக்கும்” என்று கூறவும், அபிநந்தனோ, “இது என் கடமை மேம். டிராபிக் போலீஸா இருந்து, பக்கத்துல இருந்தும் பிடிக்காம, இதுகூட செய்யாம இருந்தா, என் மனசே உறுத்தியிருக்கும். அதுவும் நான் திருட்டு பிக்பேக்கெட் நினைச்சேன். டிரக் என்றதும் கொஞ்சம் அதிர்ச்சி தான். உங்களுக்கு சின்ன உதவியா அமைந்ததுல பெரிய சந்தோஷம்.” என்று பேசினான்.

    அடுத்து பணியிருக்கும் காரணத்தால் கலைந்து சென்றனர்.

    மாறனோ குருவை கடையில் விட்டு விட்டு, எண்ணூர் பக்கம் வந்து சேர்ந்தான்.

    வேலாயுதம் நார்த் சென்னை என்றதுமே, முன்பு ஊரில் முதல் கேஸ்  விஷயத்தில் நற்பவியை கொல்ல வந்து பிடிபட்டு திருப்பி அனுப்பிய நல்லதம்பி மற்றும் சாமுவேலின் உதவியை நாடினான்.

    நற்பவி மன்னித்து ப்ரியாணி வாங்கி சாப்பிட வைத்து ஊருக்கு அனுப்பியதில் மதிமாறன் கடையில் சாப்பிடவும் மாறனுக்கு பழக்கமாயினார்கள்.

     “இன்னா பொண்ணு சார். கொலை பண்ண வந்த எங்களை சாப்பாடு போட்டு திரும்ப ஊருக்கு போக சொல்லுது. போதாதுக்கு ஜிம் பாடியா இருங்கிங்க படத்துல நடிக்கிறியானு கேட்டு ப்ரனித் சார் பிஏ நம்பர் தந்துருக்கு. அவரும் வந்ததும் ஒரு ஆக்ஷன் படத்துக்கு அடியாளா வரச்சொல்லிடாரு. ரொம்ப நல்ல பொண்ணு சார். எங்க தொழிலையே மாத்திடுச்சு” என்றதும் மதிமாறன் சிரித்து அவளை ரசித்து “ஆமா” என்றவன் அதோடு நட்பு பாராட்டி குடும்பம் ஊர் ஏரியா என்று பகிர்ந்து பிரிந்தனர்.

    அதனை தக்க சமயத்தில் மதிமாறன் நினைவுக்கு கொண்டு வந்து இருவரிடம் வேலாயுதம் பற்றி கேட்டு அவனுக்கு மேலாக இதுபோன்ற பவுடர் பாக்கெட் சப்ளைக்கு யாரிடம் சம்மந்தம் இருக்குமென்று கேட்டு விடையறிந்து இதோ எண்ணூரில் கடலும் நதியும் கலக்கும் இடம் தேடி வந்தான்.

    அங்கே சில வருடம் முன்னர் கட்டப்பட்ட பாலம் இருக்கவும் அங்கே வண்டியை நிறுத்தி சாமுவேல் கூறியவனின் கம்பெனி இருக்குமிடம் லோகேஷன் போட்டு தேட அது இடத்தை வட்டம் போட்டு காட்டவும் வண்டியை அங்கே முறுக்கிக்கொண்டு பறந்தான்.

     மற்றோரு இடத்தில் பெரிய ஏசி பேருந்து நற்பவியின் இடம் நோக்கி வந்து நின்றது. அதிலிருந்த இருவர் டீ கடைக்கு சென்று ஆர்டர் கொடுத்து முடித்து இருக்க, சட்டென்று அங்கே இருந்தவர்களில் அனைவரும் ஒரே கும்பலாக மாறி நற்பவியை தூக்கினார்கள். அவளோ திமிரவும் ஒருவன் முகத்தில் ஸ்பிரே செய்து மயக்கமுற செய்தான்.

  ஏசி பஸ்ஸில் அவளை தூக்கி போட்டுவிட்டு, மற்றவர்கள் ஒன்றும் அறியாதது போல கும்பல் கலைந்து சென்றார்கள்.

  பார்ப்பவர்களுக்கு யாரோ மயக்கமடைந்து விழுந்து உதவியதாக தான் காட்சிப்படுத்தப்பட்டது.

   ஏசி பேருந்து ஓட்டுனரும் டீ பருகி சவகாசமாக வண்டி கிளம்பியது.

      ஏசி பஸ்ஸின் உள்ளே நற்பவியை இருவர் கை கால்கள் கட்டி போட்டு வாயை பிளாஸ்திரி போட்டு ஓட்டினார்கள்.

     அந்த தனியார் ஏசி பேருந்து நேராக பட்டினப்பாக்கம் கடற்கரையை நோக்கி விரைந்தது.

     கடற்கரைக்கும் ரோட்டிற்கும் குறைவான இடத்தில் ஒரு போட் இருக்க, ஒரு ப்ரிட்ஜர் அளவு பெட்டியில் நற்பவியை மாற்றி அடைத்து போட் இருக்கும் இடம் நோக்கி அந்த இருவரும் கூடவே ஓட்டுனரும் தூக்கி சென்றனர்.

      போட்டில் அட்டைப்பெட்டிக்குள் இருக்கும் நற்பவியை போட்டுவிட்டு போட்டு ஓட்டுபவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு மூவரும் புறப்பட்டனர்.

     இங்கிருந்து போட் மூலமாக கடலில் பயணித்து சற்று தொலைவிற்கு இருக்கும் ஒரு கப்பலில் நற்பவி கை மாறினாள்.

    அந்த கப்பலில் ஏறியதும் “ரமணா சாருக்கு கால் பண்ணு” என்று ‘பாசில்’ கூறவும் போனை எடுத்தவன் “கால் எதுக்கு இவளை போட்டோ எடுத்து போடுவோம்” என்றவன் பாசிலின் போனை எடுத்தான்.

   அட்டைப்பெட்டியை கிழித்து அதில் மயங்கிருந்த நற்பவியை கட்டிப்போட்டதாகவே போட்டோ எடுத்து ‘ரமணன் சார்’ என்ற எண்ணிற்கு அனுப்பினான்.

    “வாவ்.. ஐ அம் கம்மிங்.” என்று அனுப்பி விட்டு குறுந்தாடியை தேய்த்து கொண்டு இளித்தான் ரமணன்.

      ஹார்பர் தொழிற்சாலையில் கடல் உணவு ஏற்றுமதியில் முன்னனியில் இருக்கும் ‘ரமணா சீ புட் இன்டஸ்ட்ரி’யின் உரிமையாளன் ஏற்றுமதி விவகாரத்தை பார்வையிட வந்தவனாக நுழைந்து தனி ஒரு சிறு மோட்டார் போட்டில் பயணித்தார்கள்.

    குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரவும், அட்டைப்பெட்டியிலிருந்து மீன் வளையில் ஒன்றாக இருந்த இடத்தில் அவளை கிடத்தியிருக்க ரமணன் வந்ததும், “என்னடா இது.? மீனை போட்டிருக்குற இடத்துல இந்த  மெர்மெயிடை வச்சிருக்கிங்க. பார்த்து டா… வெயில் சுள்ளுனு படுது அழகு குறைஞ்சிடப் போகுது. நிழல்ல போட்டுக்குள்ள இருக்குற இடத்துல வசதியா போடுங்க” என்றான்.

     மயக்கமருந்து தெளியவும் கைகளை முகத்தில் தேய்க்க முயன்றாள். ஆனால் கை ஒத்துழைக்காமல் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்தாள்.

     “ஹாய் நற்பவி… ஹௌ ஆர்யூ.?” என்று கேட்டு ஒருவன் முன்னிற்கவும் நற்பவி தலையை தூக்கி பார்த்தாள்.

    சுற்றி கடல் இருப்பதையும் தலைக்கு மேல் வானத்தையும் கண்டு விதிர்த்தாள்.

    “என்ன டியர்… சௌக்கியமா… என்ன வலை வீசி தேடினியாம். அதனால தான் நானா உன்னை பிடிச்சிட்டு வந்து உன் ஆசையை நிறைவேற்ற கடவுளா காட்சி தந்துட்டேன்.
   
    “ஐ அம் ரமணன்.” என்று கை நீட்டி கூறவும் நற்பவியோ ‘சே சீ புட் செக்கிங் பண்ணினப்ப இந்த பெயரை கேள்விப்பட்டிருக்கின்றோமே’ என்று நினைவுப்படுத்தினாள்.

     ‘அன்னிக்கு கிட்ட போய் தவறவிட்டிருக்கேன். இப்ப வகையா மாட்டிருக்கேன் போலயே.’ என்று எண்ணியவள் முகத்தில் துளியும் பயத்தை காட்டாமல் கைகளை விடுபட முயற்சித்தாள்.

      “என்ன பேசாம இருக்க மெர்மெயிட். சாரி அழகான பெயர் நற்பவி. ஆனா மெர்மெயிட் கூப்பிடறேன்னு பார்க்கறியா.

   இங்க வந்ததும் நீ உன்னை பார்த்தப்ப வலைக்கு நடுவுல படுத்திருந்தியா பார்க்க மெர்மெயிட் மாதிரி இருந்த கைகால் கட்டி நீ இருந்த நிலை அப்படியே மனசுல பதிந்துடுச்சு.” என்றான்.

     “நீ தான் சீ புட் ஏற்றுமதி பண்ணிட்டு சைட்ல டிரக் பிஸினஸ் பண்ணறியா?” என்றாள் நற்பவி.

    “முதல்ல சைட் பிஸ்னஸ் என்று சொல்லறதை நிறுத்து. இது தான் மெயின். சீ புட் தான் சைட் பிஸினஸா மாத்திட்டேன்.

   முதல்ல என் சீ புட் பேக்டரியை தான் மெயினா வச்சி பிஸினஸை டெவலப் பண்ணினேன் பட் ஒன்ஸ் எனக்கே தெரியாம கடல்ல ரோந்த் வர்றப்ப ஒரு டிரக் டீலர் உதவி கேட்டு என் கப்பல்ல வந்ததும், என்னை சந்திச்சான்.

    இதை ஒரு இடத்துல கை மாத்தணும். சொன்ன இடத்துல கொண்டு போய் கொடுத்தா போதும்னு சின்னதா நீ பிடிச்சியே இரண்டு கிலோ அளவு தான் கையில வச்சி பேரம் பேசினான். ஓகேனு பண்ணி கொடுத்தேன். பெத்த அமௌவுண்ட் பார்க்கவும் அவனிடம் பேசி இது எப்படி வருது. எங்க இருந்து வருதுனு கேட்டு இதையே மெயினா பண்ணினா என்னனு யோசனை வரவும் வெளிநாட்டுல இருக்கற ஸ்டீபன் இங்கயும் தயாரிக்க இடம் பார்த்தான். அதனால இங்க தனியா எண்ணூர்ல குடோன் வச்சி வட மாநிலத்துல இருந்து வந்தவர்களை வேலைக்கு எடுத்து அமோகமாக பிஸினஸ் பண்ணறேன்.

   இப்ப வெளிநாட்டுக்கு கூட சப்ளை பண்ணற லெவலுக்கு இதோட தயாரிப்புல நம்பர் ஒன் இடம். வெளிநாட்டுக்கு விற்கறோம். நம்ம நாட்டுல கேட்டா கொடுக்காம இருக்க முடியுமா டி செல்லம். அதனால தான் தேசபற்றோட இங்கயும் வினியோகம் செய்யறேன்.

    என்ன இந்த காலேஜ் பசங்க இப்படி மானாவரியா வாங்குவாங்கனு எதிர்பார்க்கலை. என்ன செய்ய போதை அப்படி தேவைப்படுது.

  தன்னை மறந்து பறக்குற சக்தியை தேடி ஓடறாங்க. ஆனா அது அடிமையாக்கும்னு மறந்துடறாங்க. யாருக்கு தான் தன்னிலை மறந்து ஞானியா வாழ விருப்பமில்லை.

   எனக்கு கூட உடல் பொருள் ஆவி மறந்து உன்னோட கலந்து மோட்சம் பெற மனசு துடிக்குது.” என்றதும் நற்பவி அனைத்தும் கேட்டவளாய் கைகட்டுப்போட்டு செயலிழந்தாள்.

    அந்த நேரம் முழுகோழி வறுவலை தட்டில் வைத்து ரமணன் முன் வைக்கவும், “லஞ்ச் டைம் என்றதும் சாப்பாடு எடுத்து வந்து வைக்கிறாங்க. உனக்கும் பசிக்குதா நற்பவி.

    சிக்கன் வேண்டுமா… சூடாயிருக்கு… ஓ… சாரி… நீ வெஜிடேறியன்ல. இரு தயிர்சாதம் மாவடு தர சொல்லறேன்.

    நீயே ஹாட் சிக்கா இருக்க. இவனுங்க எனக்கு இதை தர்றாங்க. எது முதல்ல ருசிக்கனு குழப்பமாகுது.” என்றவன் அவளின் கழுத்தருகே வாசம் பிடித்து “சாப்பிட்டு தெம்பா வர்றேன்.” என்று கிசுகிசுத்து சென்றான்.


  
    நன்விழியோ நற்பவி எண்ணிற்கு கால் போட்டு அது அணைத்து விட்டதாக காட்டவும், தர்ஷன் அங்கிளுக்கு கால் அழைத்தாள்.

   “அங்கிள் எப்பவும் போன் எடுப்பா. இன்னிக்கு இன்னமும் எடுக்கலை. அவ சாப்பிட்டாளானு கேட்க, அவளோட டிரைவர் சகாதேவன் அண்ணாவுக்கு போன் போட்டா, மேடம் இந்தபக்கம் இறங்கி போனாங்க. ஆனா திரும்ப வரலைனு சொல்லறார்.” என்று கூறினாள்.
 
   தர்ஷனோ “அவளோட செயின்ல ஜிபிஆர்எஸ் கனெக்ட் பண்ணி இடத்தை கண்டுபிடி.” என்று கூறினார்.
  
    “சார் அவ போன் எடுக்கலை என்றதும் முதல்ல அதை தான் செக் பண்ணினேன். அவ செயினை கழட்டி வீட்லயே வச்சிட்டு போயிருக்கா. மதிமாறன் அணிவித்த லாக்கெட்டை தான் கழுத்துல போட்டிருக்கா” என்று பதட்டமாய் கூறினாள்.

     “வாட் நன்விழி..‌ பச்.. மாறனிடம் பேசினாயா? அவனோட இருக்காளா” என்று கேட்டார் தர்ஷன்.

     “இல்லை சார். இதோ கேட்கறேன்.” என்றதும் “நான் லைன்ல இருக்கேன் கான்பிரன்ஸ் கால் போடு” என்றார் தர்ஷன்.

      நன்விழியும் மதிமாறனுக்கு கால் செய்ய, அதனை எடுத்தவன், “சொல்லுங்க” என்றான்.

    “நற்பவி உங்ககூட இருக்காளா?” என்று கேட்டாள்.

   “இல்லையே… ஏன்.?” என்றான் மதிமாறன்.

    நன்விழி போனும் எடுக்கவில்லை, ஜிபிஆர்எஸ் அணிந்திருந்த செயினும் கழட்டி வைத்திருப்பதை கூறினாள்.

    இப்ப உங்க கூடவும் இல்லை. எங்க போனானு தெரியலை” என்று படபடப்பாய் கேட்டாள்.

   மதிமாறனோ ஒர் நிமிடம் அதிர்ந்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “இதயத்திருடா-28”

  1. Kalidevi

    Ena pavi last la neeye poi matikittye ippadi ipo ivan ena panuvanu therilaye mathi vera antha pakam poitan crt ah avan company nadathura edathuku athayathu blast panuvana illa una kapathuvana mathi eppadi thapika pora 🥺😨😟

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!